பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 12, 2007

தயாநிதி ராஜினாமா?

முதல்வர் குடும்பத்துடன், மாறன் குடும்பத்திற்கு ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் எந்த நேரத்திலும் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக கூறப்படுகிறது. முதல்வரிடம் அவர் ராஜினாமா கடிதத்தை கொடுக்க முற்பட்ட தாகவும், ஆனால் ஜனாதிபதி அல்லது பிரதமரிடம் ராஜினாமாவை கொடுக்கட்டும் என்று அவர் கோபமாக கூறிவிட்டதாகவும் தெரிகிறது. இதனிடையே சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன் தமது துணைவியாருடன் இன்று அதிகாலை அமெரிக்காவுக்கு திடீரென்று புறப்பட்டு சென்றுள்ளார். தயாநிதி மாறன் ஊட்டிக்கு பயணமாகிவிட்டார்.கருணாநிதியின் வாரிசு யார் என்பது குறித்து கடந்த 7ந் தேதி தினகரன் பத்திரிகை கருத்து கணிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, மதுரை யில் உள்ள தினகரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது. பெட்ரோல் வெடிகுண்டு வீசப் பட்டது. இதில் 3 ஊழியர்கள் உயிரிழந்தார்கள். முதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தூண்டுதலால் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தினகரன் குற்றம் சாட்டியது.

இதனைத் தொடர்ந்து முதல்வரின் குடும்பத்திற்கும் கலாநிதி மாறன் குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று முதல்வரின் சட்டசபை பொன்விழா நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது இதை சன் டிவி நேரடியாக அஞ்சல் செய்யப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால் சன் டிவிக்கு விழா அமைப்பாளர்கள் அனுமதிஅளிக்கவில்லை. சன் டிவிக்கு மாறாக சன்டிவியின் எதிரியாக கருதப்படும் ராஜ் டிவி, முதல்வரின் பொன் விழா நிகழ்ச்சி களை நேரடியாக ஒளிபரப்பியது பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

முதல்வரின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பொன்விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளா விட்டாலும், பிரதமரை வரவேற்பதற் காக விமான நிலையத்திற்கு சென்றார். பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பிரதமர் புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்ற போதும் விமான நிலையத்தில் அவரை வழியனுப்பும் நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். முதல்வர் குடும்பத்துடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியை எந்த நேரத்திலும் ராஜினாமா செய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று மாலையில் தயாநிதி மாறன் சிஐடி நகரில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் அவரை பார்க்க முதல்வர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் அங்கேயே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. முதல்வர் வெளியே வந்த போது அவரை கோபமாக பார்த்து, "அழகிரி யார் தெரியுமா? அவன் என் மகன்' என்று கூறிவிட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது.

இதன்பின் தயாநிதி மாறன் தமது மூத்த சகோதரன் கலாநிதி மாறனுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்வரின் இல்லத்திற்கு கடிதத்தை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த முதல்வருக்கு கோபம் ஏற்பட்டுவிட்டது. "நான் என்ன தபால்காரனா? கடிதத்தை அனுப்பி வைக்க' என்று கூறிவிட்டு, "ஜனாதிபதி யிடமோ, பிரதமரிடமோ ராஜினாமா கடிதத்தை கொடுக்கசொல்' என்று ஆவேசமாக கூறியதாக தெரிகிறது.

கலாநிதி அமெரிக்கா பயணம்

இந்தநிலையில் சன் டிவியின் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன் இன்று அதிகாலை 1.45 மணிக்கு லுக்தான்சா விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி காவேரியும் சென்றார்.

தயாநிதி ஊட்டி பயணம்

இன்று காலை 11.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், கோயம்புத்தூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவர் வழக்கமாக விமான நிலையத் திற்கு வரும் போது, போலீஸ் பட்டாளத்தோடு வருவது வழக்கம். உயர் காவல் துறை அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்து அவரை வழியனுப்பி வைப்பார்கள். மாநில அரசின் பொதுத்துறையை சேர்ந்த "புரோட்டக்கல்' ஊழியர்களும் வழியனுப்ப வருவார்கள். ஆனால் இன்று தயாநிதி மாறன் விமான நிலையத்திற்கு வந்த போது மாநில அரசின் "புரோட்டக்கல்' ஊழியர்கள் வரவில்லை. உயர் காவல்துறை அதிகாரிகளும் வரவில்லை. அவரு டைய பாதுகாப்பு அதிகாரி மட்டுமே வந்தார்.

தயாநிதி மாறன் துறையைச் சேர்ந்த தபால்துறை அதிகாரி விமான நிலையத்திற்கு வந்து விமானத்திற் கான போர்டிங் கார்டை வாங்கி கொடுத்தார். விமான நிலையத்தில் அவரிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்க முயன்றனர். மதுரை சம்பவம் குறித்து இதுவரை நீங்கள் எதுவும் கருத்து தெரிவிக்க வில்லையே என்று அவரிடம் கேட்கப்பட்டது. அவர் பதில் ஏதும் கூறவில்லை.


நீங்கள் மத்திய அமைச்சராக இருப்பதால் சிபிஐ விசாரணையில் தலையிட கூடும் என்று கூறப்படுகிறதே? என்று தொலைக்காட்சி நிருபர்கள் தங்கள் மைக்குகளை நீட்டி கேட்ட போது, மைக்குகளை தட்டிவிட்டு அவர் பதில் ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று விட்டார். கோவையில் இருந்து தயாநிதி மாறன் ஊட்டி செல்லவிருப்பதாக கூறப்படு கிறது. அங்கு ஓய்வெடுத்து விட்டு அவர் திங்கட்கிழமை புதுடெல்லி சென்று ராஜினாமா கடிதத்தை கொடுக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.8 Comments:

gulf-tamilan said...

news copied fr where?? online??

Anonymous said...

this is the correct time for thaianithi to come out of DMk.
thaianithiya murga saranam.kuraikal kalaya ithuva tharunam

Anonymous said...

ஏன் இந்த ஜல்லி

எதுவும் உண்மையிலேயே நடக்கல நடந்ததா கூறப்படுகிறது அவ்வளவுதனா

Anonymous said...

"அழகிரி என் மகன் என்றார்" ஹி ஹி அப்ப இது வரைக்கும் தயாநிதிமாறன் வேற மாதிரீ நினைச்சாரா?

வெங்கட்ராமன் said...

தயாநிதி மாறன் ராஜினாமா செய்யற நல்ல காலம் இன்னும் நம்ம நாட்டுக்கு வரல.

Anonymous said...

SUN vs SON

selventhiran said...

சன்குழுமத்தின் ஊடகவளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பது அதன் திமுக சார்பு தன்மைதான். தினகரனும், குங்குமமும் விற்பனையில் தொடர்ந்து சரிவை சந்திப்பதும், அதன் விற்பனைவளர்ச்சிக்கு எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வீணாவதற்கு காரணம் இந்த ஒருபக்க சார்பே. அந்த இமேஜை களைவதற்கான சரியான தருணம் இதுதான். அந்த வாய்ப்பை மாறன் பிரதர்ஸ் தவர விடமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. தவிரவும் ஆளுங்கட்சியாக இருந்தாலும், சன்குழுமத்தை திமுகவால் எதிர்க்க முடியாத அளவுக்கு உலகெங்கும் தன் அகலக்கால்களை ஊன்றியுள்ள ஊடகமாய் இருக்கிறது சன்குழுமம். தயாநிதிமாறனின் ராஜினாமா சகலவிதத்திலும் அவர்களுக்கு லாபம் ஏற்படுத்துமே தவிர நட்டமொன்றுமில்லை..

Anonymous said...

கூறப்படுகிறது,சொல்லப்படுகிறது நல்லாயிருக்குய்யா இப்படித்தான்யா கிளப்பி பரம்பரை பெருமையை காப்பாத்திகிறீங்க.