பெரியார் படம் பற்றி என் குறிப்புக்கள்.
திரையரங்கு: உட்லேண்ட்ஸ்.
காட்சி : இரவு காட்சி ( அட இது கூட கருப்பு )
கூட்டம்: 15%
பக்கத்து சீட்டில் இருந்தவர்கள்: சில திமுக பிரமுகர்கள்.
சத்தியராஜ் நடிப்பை பாராட்ட வேண்டும். மனிதர் அனுபவித்து நடித்திருக்கிறார். சூப்பர்.
பெரியாரின் இளமை காட்சிகளுக்கு கொஞ்சம் கத்திரியை வைத்துக்கொண்டு வேலை செய்திருக்கலாம். நமக்கு பரிட்சயமான பெரியார் இடைவெளிக்கு பின் தான் தாடியோடு வருகிறார்.
பெரியார் வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் இருக்கு அதை மூன்று மணி நேரத்தில் சுருக்குவது முடியாத காரியம் என்று சொல்லுபவர்களுக்கு, காந்தி படத்தை பார்க்க சிபாரிசு செய்கிறேன். திரைகதையை இன்னும் செம்மையாக செய்திருக்கலாம்.
இந்த மாதரி படங்களுக்கு பாடல் காட்சிகள் அவசியமற்றது. படத்தின் ஓட்டம் தடைப்பட்டு, சினிமாத்தனமாக இருக்கிறது. அதுவும் பெரியார் பாடல் பாடுவது எல்லாம் டூமச். நல்ல வேளை பெரியார் இதை பார்க்கவில்லை.
இசை நன்றாக இருக்கு, எம்.ஜி.ஆர் வரும் ஒருரே ஒரு காட்சியை தவிர்த்து. (பப்பர பப்பர பப்பர பாஆஆம் என்று அந்த பின்னனி இசை தேவையா ?)
ஒளிப்பதிவு மிகவும் அழகாக செய்திருக்கிறார் தங்கர்பச்சன். பாராட்டுக்கள்.
தாடிவைத்து சத்தியராஜ் பெரியாராகவே வாழ்த்திருக்கிறார். ஒப்பனை யார் என்று தெரியவில்லை ஆனால் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். படத்தில் பெரியாருக்கு ஒவ்வொரு காட்சியிலும் 10 வயது கூடுகிறது. ஆனால் ராஜாஜி படம் முழுக்க இளமையாகவே இருக்கிறார்.
கடைசியில் கலைஞர் வரும் அந்த காட்சி பற்றி நோ கமெண்டஸ்!
பெரியார் பற்றி இந்த படம் முழுமையாக சொல்லாவிட்டாலும், அவரை பற்றி படிக்க தூண்டும் என்பதே இந்த படத்தின் வெற்றி.
இந்த படம் எனக்கு ஒரு பெரிய impactடை தரவில்லை. பெரியாரின் போட்டோ ஆல்பம் பார்க்கும் அனுபவமே எனக்கு கிடைத்தது.
பிகு: படம் பார்த்த அன்று சில திமுக பிரமுகர்கள் வந்திருந்தார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே இருக்கும் அற்புத தீவு பட ஸ்டில்களை பார்த்து "அண்ணே அது தானே மாளவிகா ?"
பிகு: கைதட்டல்/சிரிப்பு காட்சிகள்: காமராஜ் வரும் சீன், எம்.ஜி.ஆர் வரும் காட்சி, பெரியார் தண்ணீரை ஈரோட்டுக்கு அனுப்பும் காட்சி, இரண்டு ரூபாய்க்கு குழந்தைக்கு பெயர் வைக்கும் போது, "சீதை முதுகில் எத்தனை கோடு.." என்ற பாடல், வீரமணியாக விஜய் ஆதிராஜ். TOLDED என்று தந்தியில் சிக்கனம்.
இவ்வளவு தூரம் வந்துட்டீங்க சைடுல ஓட்டு போடுங்க வழக்கம் போல :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, May 16, 2007
பெரியார் படம் - என் குறிப்புக்கள்
Posted by IdlyVadai at 5/16/2007 03:17:00 PM
Labels: சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
//பெரியார் பாடல் பாடுவது எல்லாம் டூமச்//
Udan pirappukkale, pongi yezhungal... :P :P
SS Music-யும் சேத்துக்குங்க. குறிப்பா, DJ-Lekha.
:))))
//கூட்டம்: 15%//
அதுக்குத்தான் 27% கேக்குறோம்.சேரிப்பா
கூட்டமேயில்லைனு வைச்சுக்க,ரஜினி பணத்த திருப்பிக்குடுத்தமாதிரி நீ ஏதாவது பண்ணப்போறியா? உனக்கு எங்க எரியுதுன்னு எல்லாத்துக்கும் தெரியும்.
///அதுக்குத்தான் 27% கேக்குறோம்////
எதுக்கு "பெரியார்" சினிமாவுக்கு கூட்டம் சேர்க்கவா ? இப்படியெல்லாம் எழுதுவது சொல்லும் கருத்தின் மதிப்பைக் குறைக்குமே தவிர வலு சேர்க்காது
///உனக்கு எங்க எரியுதுன்னு எல்லாத்துக்கும் தெரியும்////
இதை கண்ணாடியை பாத்துக்கிட்டே சொன்னீங்களா அனானி ?
ஏற்கனவே இதை பற்றி வாய்க்குடுத்து மாட்டியாச்சு. மறுபடியுமா? வேணாம்....
ஒட்டு போட்டாச்சு.....
1. I am yet to watch Periyar.
2. Ghandhi is an excellent film, like Lion of desert, etc...
But how much you know about Ghandhi? Do you believe that all the facets of Ghandi was potrayed in the film? Have ever heard about Thillaiyadi Valliammai? Ghandhi's initial racist approach, etc...
Since you started comparision....
Post a Comment