பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 10, 2007

மதுரை கலவரம் - சி.பி.ஐ விசாரனை

சட்டசபையில் இன்று மதுரையில் திமுகவினர் நடத்திய வன்முறை சம்பவம் எதிரொலித்தது. அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான் கொண்டு வந்தனர்.

அதிமுக சார்பில் பேசிய ஜெயக்குமார், சம்பவம் நடந்தபோது காவல்துறை கை கட்டி நின்று வேடிக்கை பார்த்துள்ளது. காவல்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது என்றார். பின்னர் அதிமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.


சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

"இந்த தாக்குதலில் எனது குடும்பத்தார் சம்மந்தப்பட்டிருப்பதால், தமிழக போலீஸôரின் நடவடிக்கை போதுமானதாக இருக்காது என்ற குற்றச்சாட்டு எழுந்த காரணத்தால் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும்"
( சன் டிவி நேற்று நடந்த கலவரதில் கலந்து கொண்டவர்களின் வீடியோ எங்களிடம் இருக்கு என்றார்கள். அவைகளை சி.பி.ஐக்கு எடிட் செய்யாமல் தருவார்களா ?, அதே போல் தா.கிருட்டிணன், தினமலர் போன்ற வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பர்களா . )

3 Comments:

Anonymous said...

அதே போல் தா.கிருட்டிணன், தினமலர் போன்ற வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பர்களா.

CBI should take these cases also.
Azhagiri is out in bail only.
The old case is still there.An accused in bail can be arrested again if he indulges in or plots
to create violence. So the bail should be cancelled and he should be put in prison in some other city so that he does not tamper with evidence or put hurdles in CBI enquiry.Will DMK govt do this.

Anonymous said...

I thought that V was for two vadais :).

Anonymous said...

எனக்கு எதுவுமே தெரியாது.
பெட்ரோல் குண்டா ? அப்படின்னா ? குண்டாண்ல பெட்ரோல் இருக்கா ? நான் ரொம்ப நல்லவன். வர்ட்டா. அஞ்சா நெஞ்சன் கூப்புடுறாரு...