பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 19, 2007

கடத்தியது புலிகள்தான் - மீனவர்கள்

நேற்று மர்மமான முறையில் வந்து சேர்ந்த 11 மீனவர்கள், இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தார்கள்.

மீனவர் ஒருவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் "எங்களுடைய படகு அவர்களுக்கு தேவைப்பட்டது. அதற்காகத்தான் எங்களை படகுடன் கடத்திச்சென்றதாக" பேட்டியின்போது, தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.

70 நாட்களுக்கு முன் கடத்தபட்ட போது, முதலமைச்சர் சட்டசபையில் மிகுந்த வருத்ததோடும் அரைமனதுடன் புலிகள் என்று சொன்ன போது, அந்த செயலில் தாங்கள் ஈடுபடவில்லை என்று விடுதலைப் புலிகள் மறுப்பு வெளியிட்டிருந்தனர்.
[ முதலில் கடற்படை தளபதி கூறியபோது, புலிகள் ஒன்றும் மறுப்பு சொல்லவில்லை. பின்னர் டி.ஜி.பி சொன்ன போது புலிகள் மறுப்பு சொல்லவில்லை, சட்டசபையில் முதல்வர் சொன்ன பின் சில நாட்கள் கழித்து தான் புலிகள் மறுப்பு வந்தது ]

தமிழகத்தில் அவர்களது ஆதரவாளர்களும், விடுதலைப்புலிகள் மீனவர்களை கடத்தியிருக்க மாட்டார்கள் என்று கூறினார்கள்.

இந்நிலையில் கடத்தப் பட்ட 12 மீனவர்களும் நேற்று மர்மமான முறையில் விடுவிக்கப் பட்டனர். ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் தமிழ்நாட்டில் தங்களுக்கு கெட்டபெயர் உள்ள நிலையில் தமிழக மீனவர்களை கடத்தி சென்ற விவகாரத்தில் புலிகளின் பெயர் மேலும் ரிப்பேர் ஆகியிருப்பது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்திய அரசு மற்றும் தமிழக அரசு இனிமேலாவது இரும்பு கரம் கொண்டு தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்.

ராமதாஸ், பழ நெடுமாறன், வைகோ எல்லோருக்கும் தொண்டை கட்டி இருக்கலாம், கப்சிப் என்று இருக்கிறார்கள். மக்கள் இந்த தேச விரோதிகளை புரிந்துகொள்ள வேண்டும்.

( கார்டூன் உதவி: ஆனந்த விகடன் )

Update: இன்றைய தினந்தந்தி செய்தி மீனவர்கள் கடத்தப்பட்டது எப்படி என்ற பேட்டி..

இன்றைய தினந்தந்தி செய்தி

கடத்தப்பட்டது எப்படி?

"நாங்கள் ஏர்வாடி கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தபோது திடீரென்று விடுதலைப்புலிகள் 2 பைபர் படகுகளில் வந்து, எங்கள் அனைவரையும் அவர்கள் படகில் ஏறும்படி மிரட்டினார்கள். ஏன் என்று கேட்டதற்கு, அடிக்க வந்தனர். பின்னர் எங்களை இரண்டு இரண்டு பேர்களாக அவர்களின் படகில் ஏற்றிக் கொண்டனர்.

கேரளாவைச் சேர்ந்த சைமனை தனியாக அழைத்துச் சென்றனர். அவரையும் எங்களுடன் கூட்டிச் செல்லுங்கள் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டேன். உடனே என்னை துப்பாக்கியை எடுத்து அடிக்க வந்தனர். பின்னர் அவரையும் எங்கள் படகையும் கொண்டு சென்று விட்டனர். நாங்கள் அனைவரும் அழுதோம்.

ரத்த உறவு தானே?

பின்னர் எங்களை படகுகளில் இருந்து இறக்கி, காட்டுப் பகுதிக்கு (மன்னார்) அழைத்துச் சென்றனர். அங்கு 35 நாட்கள் பாம்பு, பல்லி போன்ற விஷப் பூச்சிகள் இருக்கும் அசுத்தம் நிறைந்த இடத்தில் தங்க வைத்தனர். 11 பேரும் படுப்பதற்கு 5 பாய்கள் மட்டுமே தந்தனர். தார்பாயில் கூடாரம் போட்டு இருந்தனர். என்ன தப்பு செய்தோம்? ஏன் எங்களை பிடித்தீர்கள்? என்று கேட்டோம்.

அதற்கு, ``ஒரு விஷயத்துக்கு உங்களின் படகு தேவைப்படுகிறது, நீங்களும் தமிழர்கள் தானே? ரத்த உறவுதானே? உங்கள் படகு மூலம் உங்களால் சில உதவிகள் தேவைப்படுகிறது. எனவே 5 நாட்கள் பொறுத்து இருங்கள். எங்கள் மனசாட்சிக்கு இது சரி என்று தெரிகிறது. தப்பி ஓட முயன்றால் சுட்டு விடுவோம்'' என்று கூறினார்கள்.

கண்களை கட்டி

பின்னர் எங்களை வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அன்று மாலை ஒரு வண்டியில் எங்களை ஏற்றிச் சென்று, சிறை வைத்தனர். எங்களை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் போதெல்லாம் கண்களைக் கட்டியே கூட்டிச் சென்றனர். சிறையில் இருக்கும் போது அதிகாரி போல் ஒருவர் வந்து எங்களை சந்தித்தார்.

ஒருமுறை இலங்கை ராணுவத்துடன் சண்டை நடக்கும் போது பதுங்கு குழியில் படுக்கக் கூறினார்கள். பின்னர் கண்ணைக் கட்டி வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். கண்ணைக் கட்டும் போதெல்லாம் எங்கள் உயிரே போனது போல் ஆகிவிட்டது. 5 நாட்கள் அங்கு இருந்தோம். பின்னர் ஓலை வேய்ந்த மற்றொரு கூடாரத்தில் 13 நாட்கள் இருந்தோம்.

பிரபாகரன் படம்

பின்னர் சுமார் 35 சென்ட் இடத்தில், அலுமினிய ஷீட் போட்ட வீட்டில் எங்களை அடைத்து வைத்தனர். அங்கு நமது ஊர் சாப்பாடு தந்தனர். எங்களையும் சமைப்பதற்கு அனுமதித்தனர். 10 நாட்கள் நல்ல சாப்பாடு கிடைத்தது. சைமன் பற்றி கேட்ட போது, விரைவில் அவரை பார்க்கலாம் என்றனர்.

ஹெல்மெட் போட்டு முகத்தை மறைத்த நிலையில் அவ்வப்போது ஒருவர் எங்களிடம் வந்து பேசுவார். அனைவரும் தமிழில் பேசினார்கள். நாங்கள் சென்ற இடங்களில் பிரபாகரன் படம் இருந்தது. எனவே எங்களை கடத்தியது விடுதலைப்புலிகள் தான் என்பதை உறுதி செய்திருந்தோம். இதுதவிர அங்கு உள்ளவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் இயக்கப் பாடலை ரேடியோவில் கேட்டபடி இருப்பார்கள்.

பத்திரமாக ஒப்படைத்தனர்

5 நாட்களில் விட்டு விடுவதாகக் கூறினார்கள். ஆனால் 68 நாட்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம். எங்கள் யாரையும் அவர்கள் துன்புறுத்தவில்லை. நேற்று முன்தினம் இரவு 12.30 மணிக்கு ராமேஸ்வரம் அருகே இரணை தீவு அருகே விட்டு விட்டனர். 2 படகுகளில் எங்களை அழைத்து வந்தனர்.

அங்கு மீன் பிடித்து கொண்டு இருந்த மீனவர்களிடம் எங்களை ஒப்படைத்தனர். பத்திரமாக எங்களை கரை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தொழில் செய்ய முடியாது என்றும் அவர்களை மிரட்டினார்கள். விடுவிக்கும் போது எங்கள் படகை தந்து விடுவதாக கூறி இருந்தனர். ஆனால் அதை திருப்பிக் கொடுக்கவில்லை.

இவ்வாறு கிளமண்ட்ஸ் கூறினார். அவருக்கு உதவியாக ஜோசப்பும் பேசினார்.

கடத்தியது ஏன்?

"எங்களுடைய படகு அவர்களுக்கு தேவைப்பட்டது. அதற்காகத்தான் எங்களை படகுடன் கடத்திச்சென்றதாக'' பேட்டியின்போது, தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். "போலீசார் சொல்லிக்கொடுத்து எதையும் சொல்லவில்லை'' என்று கிளமண்ட்ஸ் தெரிவித்தார்.

36 Comments:

Anonymous said...

//ராமதாஸ், பழ நெடுமாறன், வைகோ எல்லோருக்கும் தொண்டை கட்டி இருக்கலாம், கப்சிப் என்று இருக்கிறார்கள்//

இட்லிவடை அய்யா,

நம்ம மானமிகு, சூரமணி அய்யா என்ன சொல்றாரு?

Anonymous said...

// "படகிற்காக விடுதலை புலிகள் எங்களை கடத்தினார்கள்" //

படகிற்காக.. இந்த வரிதான் சற்று இடறலாக உள்ளது.

IdlyVadai said...

தீவு, மீண்டும் செய்திகளை பார்த்துவிட்டு சரி செய்கிறேன். நன்றி

Ravi said...

LTTE avanga panna endha thappa oppukondargal? idhai oppukoLvadhukku??

Well said Idlyvadai! Neenga sonna maadhiri makkaL ippozhudhavadhu purindhu koLLattum.

Anonymous said...

ஐயா இட்டிலிவடை
நான் கொழும்புவிலிருந்து கருத்துச் சொல்றேனுங்க...
தமிழகத்துத் தமிழ்ப் பெருமக்களுக்கு அரசியலும் விளங்காம புலிகளையும் தெரியாமப் பதிவு போடுறீங்க...
புலிகளுக்கான பெருமளவு சப்ளை தமிழக மீனவரூடாக வருவது. தமிழக மீனவர்களை பகைக்க வேண்டிய தேவை புலிகளுக்கு இல்லை.
மேலிடத் தேவைகளுக்காக புலிகள் மேல் பழி போடுகினம் உங்கட காவல்துறையும் கலைஞரும்.
அதையெல்லாம் ஒரு பக்கம் விடுங்க. கடத்தினது புலியள் தான் எண்டா மீனவர் திரும்பி வந்திருக்க மாட்டினம். அதுதான் புலி ஸ்டயில். வெளிய கதை போகக் கூடாதுன்னா போட்டுத் தள்ளிட்டு இருந்துடுவானுகள்.
//ராமதாஸ், பழ நெடுமாறன், வைகோ எல்லோருக்கும் தொண்டை கட்டி இருக்கலாம், கப்சிப் என்று இருக்கிறார்கள்//
எண்டு சொல்லுறியள். உந்த மீனவர் எங்க இருந்து வந்தவை எண்டு ஏன் கேட்கிறியள் இல்லை?
புலி கறுப்பா சிவப்பா எண்டு கேட்டா வரிவரித் தோல் எண்டு சொன்னாலும் சொல்லுவினம்.
நாங்க இங்கை செத்துக் கொண்டிருக்கிறம்.
உங்கட அரசியல்வாதிகள் நாடகமாடிக் கொண்டிருக்கினம்.
நீங்க பதிவு போடுங்கோ. வாழ்க தமிழகம்

Anonymous said...

விமானம் விடத் தெரியும் புலிகளுக்கு படகு வாங்க இயலாதா? :) நாங்க நம்பிட்டோம் :)

Anonymous said...

//முதலில் கடற்படை தளபதி கூறியபோது, புலிகள் ஒன்றும் மறுப்பு சொல்லவில்லை. பின்னர் டி.ஜி.பி சொன்ன போது புலிகள் மறுப்பு சொல்லவில்லை, சட்டசபையில் முதல்வர் சொன்ன பின் சில நாட்கள் கழித்து தான் புலிகள் மறுப்பு வந்தது//

இட்டிலி வடை அய்யா உங்கட நாட்டில அம்பத்து எட்டாயிரம் அரசியில்வாதிகளும் அதிகாரிகளும் இருக்கினம். அவ சொல்லுரத்துக்கெல்லாம் புலிகள் பதில்சொன்னால் அவே இதுக்கே முழு நேரமும் ஒதுக்கவேனும். முதல்வர்கிட்டி இருந்து இப்படி ஒரு கற்றச்சாட்டு வந்த பின்னால அவே சோர்ட் அன் ஸ்விட்டா பதில் சொன்னாங்கள். எங்கட தலைவர் அதிகம் கதைக்கமாட்டேர். பட் லேட்டா அறிக்கைவிட்டாலும் பெஸ்டா அது இருக்கும். :-)) நீ பேசாம உம்மட பதிவில வேற ஏதாவது எழுதி சனத்தை பார்க்க செய்யும். அப்பிடியே றோவுக்கும் சொல்லும் பெட்டர் லக் நெக்ஸ் டை மேன்டு.

Anonymous said...

புலிகள் தீவரவாதிகள் ????

எனக்கு தெரிந்து BBC மட்டும் தான் இவர்களை தமிழ் புரட்சிகாரர்கள் (Tamil Rebels) என்று சொல்கின்றனர். அதுதான் உண்மையும் கூட.

தன் குடும்பசண்டைக்காக பொதுமக்களை கொலை செய்பவர்களை என்னவென்று சொல்லுவது ???

மு. மயூரன் said...

இப்போதைக்கு இது தொடர்பாய் வந்திருக்கும் ஆய்வுக்கட்டுரை ஒன்றின் பகுதி: (புதினம் தளம்)


- கியூ பிரிவுக்கு மாற்றப்பட்ட நாள்: ஏப்ரல் 23

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம், இந்து நாளேடு போன்ற தமிழின எதிரிகளும் சம்பவம் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டி வந்தனர்.

இந்தியக் கடற்படைத் தளபதியோ சம்பவம் நடந்த மறுநாளே பகிரங்கமாக தமிழ்நாடு அரசு மீது கண்மூடித்தனமாக குற்றம் சாட்டுகிறார்.

தமிழக அரசும் வாய்மூடி மௌனமாகக் கிடக்கிறது.

சிறிலங்கா கடற்படையும் அதே போன்ற அறிக்கை விடுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டனர். அவர்கள் விசாரிக்கப்பட்ட சூழலும் பதற்றமான ஒரு காலட்டத்தில்தான். விசாரித்ததும் தமிழகக் காவல்துறையின் பொறுப்புள்ள அதிகாரிதான்.

பிறகு ஏன் தமிழகக் காவல்துறை மீண்டும் விசாரிக்க வேண்டும்?

300-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கம், விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று கூறிவிட்டதே என்பதற்காகவா?

அல்லது

இந்தியத் தளபதி கூறிவிட்டாரே என்பதற்காகவா?(May 31 Hindu)

அல்லது

விடுதலைப் புலிகளை எப்படியும் தமிழகத்தின் உறவிலிருந்து பிரித்தே ஆக வேண்டும் என்ற சிறிலங்கா அரசாங்கம - இந்திய உளவுத்துறையினர் கூட்டுச்சதியினை நிறைவேற்றவா?

அல்லது

சிறிலங்காவில் இந்தியாவும் கடலில் கூட்டு சுற்றுக்காவல் மேற்கொள்ள வேண்டும் என்று கனவு காணும் இந்த சகுனிகளின் சதித்திட்டத்தை நிறைவேற்றவா?

சரி

வாக்குமூலம் கொடுத்தவர் கடல் புலிகள் எனில்

ஏன் நாங்கள் கடல்புலிகள்தான் என்பதற்கான ஆதாரங்களைச் சொல்லவில்லை. அவர்களுக்கென அடையாள அட்டை இருக்குமே? அதனைத்தான் கடலில் தூக்கி எறிந்திருந்தாலும் தங்களுக்கான இயக்கப் பெயர், எண்கள் இருக்குமே? அதனையும் "கஸ்டடியில்" மறந்து விட்டார்களா? சொல்லிக் கொடுத்த வாத்திமார் மறந்துவிட்டாரா?

சரி

ஏப்ரல் 12 ஆம் நாள் வாக்குமூலம் கொடுத்தோர் கைது செய்யப்பட்ட செய்தி தமிழக ஏடுகளில் வெளிவருகிறது

ஏப்ரல் 13 ஆம் நாள் அவர்கள் தமிழர்கள் என்றும் மீனவர்கள் என்றும் புகைப்படங்களுடன் வெளிவருகிறது.

இவர்கள் விடுதலைப் புலிகள் எனில் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு இது தெரியாமல் இருக்குமா?

அல்லது

இவர்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டதனைத் தெரிந்து கொண்டும்

ஆமாம், கடத்தப்பட்ட மீனவர்கள் எங்களது கஸ்டடியில்தான் இருக்கிறார்கள் என்று "போன் மூலம்" தமிழக காவல்துறை கஸ்டடியில் இருந்தவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்களா? கஸ்டடியில் இருந்தவர் போன்மூலம்தான் முகாமில் இருந்தோரைத் தொடர்பு கொண்டதாக தமிழகக் காவல்துறை தலைவர் முகர்ஜியின் அறிக்கைதான் கூறுகிறது.

தற்போது திரும்பி வந்துள்ள மீனவர்கள் கூறுகிறார்கள், தாங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில்- சாப்பாடு கூட எடுத்து வர முடியாத ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தோம் என்றும் சிறை போன்ற முகாம் என்றும் வீடு போன்ற பகுதி என்றும் கூறுகின்றனர்.

தமிழகக் காவல்துறை வலுவான நெட்வேர்க்கில்தான் உள்ளது போல்....

இப்படியான இடங்களுக்கு சிறிலங்கா அரசாங்கமும் தொலைபேசி வசதி செய்தி கொடுக்கிறது போல்-

தற்போது மீனவர்கள் திரும்பிவிட்டனர்.

பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திரும்பிய மீனவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக கரை சேர்ந்த உடனேயே ஊடகத்தாரைக் கூட்டி அங்கேயே புலிகளை அம்பலப்படுத்தாமல் சென்னைக்கு வரவழைத்து சென்னையிலும் கரையிலும் யாரிடமும் பேசவிடாமல் கடைசியாக மீண்டும் ஒரு வாக்குமூலத்தை சொல்ல வைத்திருக்கிறார்கள்.

சிங்களக் கைதிகள் சொல்லாத ஒரு அபாண்டத்தை தமிழக மீனவர்கள் மூலம் காவல்துறை சொல்ல வைத்திருக்கிறது.

புலிகளின் பிடியில் சிக்கிக் கொண்ட கைதிகள் எவரேனும் ஒருவராவது புலிகள் மீது குற்றம் சுமத்தியது உண்டா?

தங்களை நடத்திய விதம் குறித்து குறை கூறியது உண்டா?

பிரிந்து செல்லும்போது கொடுத்த பேட்டிகள் எத்தனை எத்தனையோ வெளியாகி உள்ளன. ஒன்றிலாவது ஒரு குறையாவது சொல்லப்பட்டது உண்டா?

திரும்பிய தமிழக மீனவர்கள் சொல்லியிருப்பதாக இன்று வெளியான செய்தியில் சிரிக்காமல் சிந்திப்பதற்காக நீங்கள் படிக்க வேண்டிய வரிகள்:

"ஹெல்மட் அணிந்து முகத்தை முற்றும் மறைத்துக் கொண்டு ஒருவர் எங்களை சந்தித்து உங்களை விரைவில் கேரள கடற்பகுதியில் கொண்டு போய் விடுகிறோம் என்று கூறினார். வானூர்தியில் சென்று பார்வையிட்டு வருவதாக கூறி சென்றார்."

என்னது கேரள கடற்பகுதியை விடுதலைப் புலிகள் வானூர்தியில் சென்று பார்வையிட்டனர்.

கேரள கடற்கரை பகுதி இருப்பது அரபிக் கடல் என அறிந்திருக்கிறோம்.

விடுதலைப் புலிகள் இருப்பது வங்கக் கடல் என அறிந்திருக்கிறோம்.

வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே மன்னார் கடலில் "பாரிய" படைபலம் பொருந்திய இந்தியப் பேரரசின் கடற்படை உள்ளது.

அன்னியக் கொள்வனவுகளால் கொழுத்துக் கிடக்கும் சிங்களக் கடற்படை உள்ளது.

இரு நாட்டு கடற்படைகளின் கண்ணில் மட்டுமல்ல- வான்படையின் கண்ணிலும் மண்ணைத் தூவி அரபிக் கடலில் உள்ள கேரள கடற்கரைப் பகுதியை புலிகள் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் நிற்கவில்லை விடுதலைப் புலிகள்

வங்கக் கடல் தாண்டி

அரபிக் கடலை தொட்ட விடுதலைப் புலிகள்

இந்துமா சமுத்திரத்தையும் விட்டுவைக்கவில்லை.

ஆம்.

"மீண்டும் வந்த போது தமிழக கடல் பகுதியிலேயே உங்களை விட்டுவிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். எங்களுடைய டிரைவர் (மலையாளி சைமன்) எங்கே என்று கேட்டோம். அவரை ஏற்கனவே படகில் அனுப்பி வைத்து விட்டோம். நீங்கள் கரைக்கு சென்ற பிறகு உங்களை அவர் சந்திப்பார் என்று கூறினார்கள். ஆனால் அவர் மாலைதீவு கடற்படையினரிடம் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு இராமேஸ்வரம் நடுக்கடலில் எங்களை மீனவர்களிடம் ஒப்படைத்தார்கள்"

இதில் எங்கே மாலைதீவு வந்தது?

புலிகள் எப்படி மாலைதீவில் இயங்குகிறார்கள்?

மாலைதீவானது

வங்கக் கடலிலும் இல்லை

அரபிக் கடலிலும் இல்லை

இந்துமா சமுத்திரத்தில்

அமெரிக்கா- இந்தியா- பிரித்தானியா- சிறிலங்காவின் கூட்டுக் கண்காணிப்பு வலயத்தில் உள்ள பிரதேசம்.

அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்காதீர்கள்

தெற்காசியாவில் காலூன்றுவதற்காக பிரித்தானியாவிடமிருந்து பெற்ற டிகாகோ கார்சிகோ தீவு மாலைதீவுக்கு கீழேதான் உள்ளது.

புளொட் அமைப்பைக் கொண்டு 1989-களில் அங்கு சதி நடத்திய இந்தியாவின் றோவுக்கு எப்போதும் மாலைதீவு மீது "காதல்" உண்டு.

அதற்கும் அப்பால்

மாலைதீவு அருகே மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்தோர் பேசியது தமிழ் அல்ல- மலையாளம் என்று அந்நாட்டு அரசாங்கமே அறிவித்துவிட்ட நிலையில்

மாலைதீவு பகுதியில் எமது இயக்கத்தின் செயற்பாடு இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்ட நிலையில்

தமிழக முகர்ஜிவாலாக்களுக்குத்தான் என்னே அறிவு! அடம்பிடிக்கிறார்களே!

தெளிவாகச் சொல்கிறோம்

இந்தக் கடத்தலின் பிதாமகனே இந்திய றோதான்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனைத்துலகத்தின் அனுசரணையைப் பெறுவதற்கான ஒருநிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க விடாமல் தமிழகத்தின் புலிகள் ஆதரவு நீடித்து நிற்கிறது. தமிழக அரசும் அதற்கேற்ப ஈழத் தமிழர் ஆதரவு நிலையிலேயே உள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தமாக மத்திய ஆளும் அரசை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருணாநிதிக்கு வேட்டு வைக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல்- காவல்துறை நாடகம்தான் இது.

தமிழக காவல்துறை கருணாநிதியின் கையில் இருந்தாலும்

தமிழகத்தில் பால்ரசு குண்டு கைதுகள் முதல் கஸ்பாரின் சங்கமம் வரையான அனைத்து புலிகள் தொடர்பான பிரச்சனையில் எம்.கே.நாராயணன் தலையிட்டுக் கொண்டிருப்பதையும் அதனை தடுக்க முடியாமல் தமிழகக் காவல்துறை பணிந்தாக வேண்டிய "இந்திய அரசியல் கட்டமைப்பு" இருக்கிறது. இது இந்திய அரசியல் அவதானிகளுக்கும் ஊடகத்தாருக்கும் அறிந்த விடயம்தான்.

அந்த எம்கே.நாராயணன் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகத்துக்குத் துரோகம் இழைப்பவர்தான் என்பதை தமிழகம் நன்கறியும். இப்போது நடந்துள்ள கடத்தல் நாடகத்தில் "கப்டன்" பாத்திரம் வகித்தவர் கேரளத்தைச் சேர்ந்த சைமன் என்பதை நினைவில் கொள்வோம்.

தமிழக மீனவர்களை புலிகள் கடத்திச் சென்றதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு

அரசியல் ரீதியாக

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரனைக் கொண்டு கடத்தியது புலிகள்தான்- சுட்டது புலிகள் என்று தொடர்ச்சியாக கேட்க வைத்துவிட்டு

அதன் மூலம் கருணாநிதிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது இந்திய உளவுத்துறை.

(ஞானசேகரனுக்கு நெருங்கிய நண்பர் யார் தெரியுமா? இராமநாதபுரம் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஹசன் அலி. ஹசன் அலியைப் பற்றி நக்கீரன் வாரமிருமுறை இதழ் வெளியிட்ட விவரம் என்னவெனில் "மகிந்தவுக்கு நெருக்கமானவர்- ஈழத் தமிழ் அகதிகளை மிகக் கேவலமாக நடத்தியவர் என்பதுதான்)

இந்திய உளவுத்துறைக்கு பணிந்தாக வேண்டிய தமிழகக் காவல்துறையும் வாக்குமூல வசனங்களை விட்டுக் கொண்டிருக்கிறது.

எத்தனை பொய்யை அவிழ்த்து

எத்தனை அவதூறுகளை அள்ளி வீசினாலும்

"தானாடாவிட்டாலும் தசையாடும்" எங்களின் தொப்புள் கொடி உறவைத் துண்டிக்க எந்த வல்லூறாலும் முடியவே முடியாது.

மு. மயூரன் said...

இட்லிவடை,

இந்த விஷயத்தை இவ்வளவு எளிமையாக தமிழக மக்கள் எடுத்துக்கொள்வார்கள், ஏற்றுக்கொள்வார்கள் எனில் அது மிகவும் மன வருத்தத்தைத் தருகிறது.

செய்திகளை மேலோட்டமாகப் பார்க்கும்போதே தெரிகிறதல்லவா இதற்குப்பின்னல் மிகப்பெரிய சதிவலை ஒன்று இருப்பது?

தமிழக மக்களின் மனங்களை வெல்லும் பெருமெடுப்பான முயற்சிகளில் இருக்கும் நேரத்தில் புலிகள் படகுக்காக எதற்கைய்யா மீவர்களைக்கடத்தி சேறு பூச வேண்டும்?

அடிப்படைஅரசியல் அறிவு போதும் இதன் சூட்சுமத்தை அறிய.

தமிழக மகக்ளை ஈஅழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து முற்றாக துண்டிக்க எடுக்கப்படும் தீவிர முயற்சிகளின் ஒரு அங்கம் இது.
தயவு செய்து இதனைப் புரிந்துகொள்ளுங்கள்

IdlyVadai said...

கருத்துக்களம் ஆசிரியன் எனக்கு அனுப்பிய சுட்டி.
முடிவுக்கு வந்தது இந்திய உளவுத்துறையின் "மீனவர்" கடத்தல் நாடகம் ( கருத்துக்களம் )
http://www.yarl.com/forum3/index.php?showtopic=23856

IdlyVadai said...

மீனவர்கள் "கடத்தப்பட்டது எப்படி?" என்று தினந்தந்தியில் வந்த செய்தி பதிவில் அப்டேட் செய்யபட்டிருக்கிறது.

IdlyVadai said...

அறிவாளி // விமானம் விடத் தெரியும் புலிகளுக்கு படகு வாங்க இயலாதா? :) நாங்க நம்பிட்டோம் :) //

தமிழக மீனவர்களின் படகு என்றால் கடத்தலுக்கு ஏதுவாக இருக்கலாம் அல்லவா ?

Anonymous said...

//"போலீசார் சொல்லிக்கொடுத்து எதையும் சொல்லவில்லை'' என்று கிளமண்ட்ஸ் தெரிவித்தார்.//

இதை யார் கேட்டார்கள் ஏன் சொன்னார்கள். எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்கிறது போலவா?

IdlyVadai said...

//இதை யார் கேட்டார்கள் ஏன் சொன்னார்கள். எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்கிறது போலவா?//

நானும் அப்படி தான் நினைத்தேன். ஆனால் பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள் மீனவர்கள் பதில் சொன்னார்கள். தினந்தந்தியில் தொகுத்து போட்டிருக்கிறார்கள். மீனவர்கள் கண்களில் தெரிந்த பயம் பல உண்மைகளை சொல்லியது.

Anonymous said...

//
ஹசன் அலியைப் பற்றி நக்கீரன் வாரமிருமுறை இதழ் வெளியிட்ட விவரம் என்னவெனில்..//

a nakkeeran based reference?? LTTE will never admit immediately. They admitted Rajiv's killing after many years..just wait!!!

Ravi said...

LTTE is definitely not a group to be trusted. First, in their own country their destroyed all other Tamil groups. And moreover for the kind of support and aid they enjoyed from India, they never retaliated in a grateful manner. Bank lootings, murders, bomb culture, smuggling proves it all! இப்படி பட்டவங்களுக்கு வரிந்துகட்டி கொண்டு ஏன் வக்காளத்து வாங்ராங்க?-னு புரியல.

The Srilankan Tamils definitely need our support, help and aid but definitely not a ruthless, merciless, self-centered, power-hungry group like LTTE.

Vetri Thirumalai said...

இட்லி வடை
இதைப்படிக்கும் போது ஒன்று தெளிவாக தெரிகிறது.
உங்களை போன்றவர்களுக்கு இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சியை குடுக்கிறது என்று.
இதற்கு மேல் இதைப்பற்றி எழுத விருப்பமில்லை.

இவன்
வெற்றி திருமலை

Anonymous said...

அய்யா இரவி,
புலியள் ruthless, merciless, self-centered, power-hungry group தானுங்கோ.
ஆனா இலங்கைத் தமிழ் மக்கள் எல்லோரும் புலியள் எண்டுறது உங்களுக்குத் தெரியாதா?
உந்தக் கோதாரி நிதரசனம், புதின, பதிவுகள் சொல்லுற அர்த்தத்தில இங்க நான் சொல்லலீங்க.
ஆனா தினந்தினம் சுட்டும் வெட்டியும் கொல்லப்படும் எல்லோரும் புலிகள் தான் என்டு நீங்களும் நம்புறியளா?

இரவி, இட்டலி வடை போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய சமாச்சாரம் ஒன்று உள்ளது.

இங்கே தமிழனாக உயிர்வாழ்வதன் பயங்கரம் உங்களுக்குப் புரியாது. எந்தத் தமிழரைச் சுட்டாலும் சுடப்படுவது புலிதான். அப்பிடித்தான் இலங்கை அரசு சொல்லுது நீங்களும் சொல்லுறியள்.

ஜடாயு மாதிரி ஆட்கள் உங்களை விடப் பரவாயில்லை. இந்திய நலன்களை முன்னிறுத்தி ஏன் சிறிலங்காவுக்கு உதவ வேணும் எண்டு சொல்லுவாங்கள்.

//The Srilankan Tamils definitely need our support, help and aid but definitely not a ruthless, merciless, self-centered, power-hungry group like LTTE.//
என்று சொல்லும் உங்கள் போன்றவர்கள் தான் ஆபத்தானவர்கள்.

இல்லை கேட்குறன். புலி சம்பந்தப்படாம இலங்கைத் தமிழனுக்கு என்ன விடிவு? புலி சம்பந்தப்பாடாத விடிவு என்று ஒன்டு உள்ளதென்றால் அது இலங்கைத் தமிழினம் மொத்தமாக அழிக்கப்படுவதுதான்.

புலியை முட்டாள்த்தனமாக ஆதரிக்க யாரும் கேட்கவில்லை. அவர்கள் மீதான பல குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை. ஆனால் புலிகளின் அழிவும் இலங்கைத் தமிழினம் இலங்கையிலிருந்து துடைத்தழிக்கப்படுவதும் ஒன்றுதான்.

//The Srilankan Tamils definitely need our support, help//

காறித் துப்ப வேண்டும் போலிருக்கு.

Anonymous said...

மீனவர்கள் கடத்தப்பட்டது வருத்தமில்லை. ஆனால் புலிகள் கடத்தியதென்பது மகிழ்ச்சி..

Anonymous said...

மீனவர்கள் கடத்தப்பட்டது வருத்தமில்லை. ஆனால் புலிகள் கடத்தியதென்பது மகிழ்ச்சி..

Haran said...

//The Srilankan Tamils definitely need our support, help and aid but definitely not a ruthless, merciless, self-centered, power-hungry group like LTTE//

நண்பரே, உங்களைப் பார்த்துச் சிரிப்பதா இல்லை அநுதாபப் படுவதா என்று தெரியவில்லை. உங்களுக்கு ஈழத்தில் நடப்பவற்றைப் பற்றித் தெரிந்தது அவ்வளவு தான் என்பது உங்களது பின்னூட்டத்தில் இருந்து தெரிகின்றது. இலங்கை இராணுவத்தினரும் இந்திய அரசியல் வாதிகள்/ றோ போன்றோரின் குள்ள நரி வேலைகள் இப்பொழுது வெளுத்துவிட்டது... அந்தச் சிறுவனின் பேட்டி மூலம்... இதற்கு நீங்கள் என்ன சொல்லப் போகின்றீர்கள் என்று தெரியவில்லை... அந்தச் செய்தி பார்த்த பொழுது... அந்தச் சிறுவன் பக்கத்தில் நின்ற ஒருவர், சிறுவன் இலங்கை நேவி தான் தம்மை பிடித்து சென்றது என்று கூறியதும்.. பக்கத்தில் நின்றவரின் றியக்சனை (body language too) பார்க்க வேண்டுமே...

தமிழர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றே ஒன்று... இந்தியா எவ்வளவிற்கு எவ்வளவு தமிழர்கள் புலிகளுக்கு வழங்கும் ஆதரவை குறைக்க முடியுமோ அவ்வளவிற்கவ்வளவு கடுமையாக முயன்று வருகின்றது... ஆனாலும் இதுவரை அவர்கள் முயற்சி தோல்வியிலேயே முடிந்துள்ளன.

இட்லி வடை... தயவுசெய்து... ஈழத்தில் என்ன உண்மையில் நடக்கின்றது என்பதனை அறிய முயற்சி செய்யுங்கள். என்னைப் பொறுத்தவரையில் புலிகள் ஆரம்ப காலங்களில் தவறுகள் செய்திருந்தாலும்... இன்று அவர்கள் நிலை அவ்வாறு இல்லை... இது எந்த ஒரு விடுதலை இயக்கத்திற்கும் பொருந்தும்... ஒவ்வொரு இயக்கமும் படிப்படியாகவே வளர்ச்சி அடையும்... இன்றெல்லாம், புலிகளில் உள்ளோருக்கு அறிவியல் ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீடியாக, அரசியல் ரீதியாக... அனைத்து முறையிலும் கல்விகள் பயில்விக்கப் படுகின்றன. இன்று புலிகள் ஈழத்தில் இல்லை என்றால் தமிழர் இல்லை என்ற நிலை வந்து விட்டது.

இதன் பின்பும் நீங்கள் கேவலமாகவே எழுதப் போகிறேன் என்று அடம் பிடித்தால் நான் ஒன்றும் செய்ய இயலாது நண்பரே...

"திறந்த மனத்துடனும் புத்தியுடனும் அனைத்தினையும்" உள் வாங்கிப் பின்பு உங்கள் தீர்வினை எடுங்கள் நண்பர்களே...

Anonymous said...

The Tamils think no end of themselves.They don't deserve any support.They will always bite the hand that feeds them.The Dravidian Tamils are an ungrateful lot;all of them are plain thugs.Sri Lankan Tamils are also basically like Dravidian Tamils of Tamil Nadu;deceiful,cunning and third rate,cannot be trusted.

Anonymous said...

If you really want to know the truth see the below video.

http://www.yarl.com/videoclips/view_video.php?viewkey=295f8076b1c5722a46aa

...Kannan

குட்டிபிசாசு said...

ஐயா இட்லி-வடை,

எல்லாவற்றையும் புத்திசாலித்தனமாக எழுதும் தாங்கள், ஒரு இன அழிப்பு சார்ந்த பிரச்சனையில் உப்புமா கிண்டுவது வேண்டாம். தாங்களும் நானும் இந்தியாவில் பிறந்தவர்கள் நமக்கு செய்திகளில் வருவதுதான் தெரியும். அடுத்தவர் ஜீவமரண போராட்டத்தை கேளிக்கூத்து ஆக்காதீர்கள். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

IdlyVadai said...

குட்டிபிசாசு உங்கள் கருத்துக்கு நன்றி. நான் யார் மனதையும் புன்படுத்தும் நோக்கத்துடன் இதை எழுதவில்லை.

Anonymous said...

ஐயா இட்லி வடை ,

உங்கள் சொந்த உறவுகள் கடத்தப்பட்டு, 68 நாட்களாய் எங்கள் வீடுகளில் ஒலித்தது மரண ஓலம், ஆறுதல் சொல்ல யாராவது ஒரு இடுகையாவது இட்டீர்களா?

கடத்தபட்ட நாளில் இருந்து யாரவது ஒரு அரசியல்வாதியாவது எமக்காய் அழுதானா?
வயிற்றுப்பிழைபுக்காக தினம் எங்கித்தவித்திருக்கும் எங்கள் குடும்பத்தவர் உணர்வுகள் புரியுமா உனக்கு. எல்லோரும் ஏன் எங்கள் முதுகில் சவாரிவிடுகிறீர்கள்?

எங்களுக்குத் தெரியும் புலிகள் யாரென்பதும் , எலிகள் யாரென்பதும் .

ஐயா இட்லி வடை எங்களுக்கும் புலிகளுக்கும் உள்ள உறவு ,சொந்தசகோதரானான உனைவிடவும் உயர்ந்தது. கடலிலே சிங்களப் பூதங்கள் எங்களை கடிக்கும் போதெல்லாம் எமைக்காக்கும் புனிதர்கள் அவர்கள்.

நாங்கள் எழைகள்தான் ஆனால் உன்னைப்போல் கண்டதே காட்சி கொண்டதே கோலமென நம்பும் எமாளிகள் அல்ல.

ஈழத்து உறவுகளே, உங்களில் ஒருவராய் நாமும் உங்களோடு பாரம் சுமப்போம்.
இட்லி வடை எல்லாம் நடைமுறை தெரியாத கிணற்றுத் தவளைகள்.

Ravi said...

Anon/Haran-avargalae, ungal kovam purigiradhu. Yes, definitely I cannot understand what the Tamil people in SL are going through. Whatever said and heard cannot explain the trauma and pain which you people would have undergone but I definitely know what LTTE did in India and how they betrayed us. Else, why should they lose their patronage not just in India but in most countries in the world?

And its not that I do not know completely about the sufferings either. I had friends from Eelam during my school days and have friends even today too.

So I reiterate again, may be they do fight for a cause but that does not justify all their actions. I still stick to what I say!

Anonymous said...

//ராமதாஸ், பழ நெடுமாறன், வைகோ எல்லோருக்கும் தொண்டை கட்டி இருக்கலாம், கப்சிப் என்று இருக்கிறார்கள். மக்கள் இந்த தேச விரோதிகளை புரிந்துகொள்ள வேண்டும்.//

பொடியனின் வாக்குமூலமும் பக்கத்தில் நின்றவாகளது பதைபதைப்பையும் பதட்டத்தையும் பார்த்தீர்களல்லவா..

இப்போ இட்லி வடையாருக்கு தொண்டை கட்டியிருக்காம். மக்கள் இந்த -----புரிந்து கொள்ள வேண்டும் :)))

Anonymous said...

அறிக்கைவிட்ட அத்தனை பெரிய மனிதருக்கும் ஆப்படிச்சிருகிறான் கடத்தபட்ட 14 வயது சிறுவன்

http://www.yarl.com/videoclips/view_video.php?viewkey=295f8076b1c5722a46aa


இக்கூற்றின் மூலம் தமிழக காவல்துறை மேலாளர் பொய் சொல்லியது அம்பலத்துக்கு வந்துள்ளது.றோ ஆடும் நாடகம் எப்பொழுதும் வெற்றி பெற்றதில்லை என்பதை இந்த காணொளி உறுதிபடுகின்றதுஒரு நாளும் புலிகள் தாய்தமிழகத்தவருக்கு துன்புறுத்தமாட்டார்கள் என்பதற்கு இதுவெ முக்கிய சான்று.புலிகாள் மீது எமக்கிருந்த நம்பிக்கையை இந்த சிறுவன் மீண்டும் உறுதிப்படுத்தி இருகின்றான்.முகர்ஜீயின் மிரட்டலால் பொய் வாக்குமூலம் அளித்த பெரியவர்களுக்கு இந்த சிறுவன் சாட்டைய்யால் அடித்திருகின்றான்

அப்போ மாலைதீவில் பிடிபட்டதன் காரணம் றோவா நல்ல நாடகமாடி இருகின்றது நான் மேலே சொன்ன எதிர்வுகூறல் அத்தனையும் உண்மை றோவின் சுயநல போக்கை ட்தற்போது அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே

உண்மைகள் என்றும் இறக்காது நண்பர்களே அத்துடன் புலிகளும் எப்போதும் தாய்தமிழகத்தவரின் எதிரி அல்ல என்பதை புரிந்தூ கொள்ளுங்கள்

Anonymous said...

மதிப்பிற்குரிய சிறிலங்கா கடற்படைக்கு

அடுத்த முறை நமது மீனவர்களை கடத்தும் போது சிறுவர்கள் இடம் பெறாது பார்த்துக் கொள்ளுங்கள். அதனால் நமக்குச் சிக்கல்களாக உள்ளது. அப்படியும் சிறுவர்களை கடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்.. உங்களுக்கு சொல்லியா தரவேண்டும். சுட்டுத் தள்ளி விடுங்கள். புலிகள் அவர்களை தமது இயக்கத்தில் சேர்த்து விட்டதாகவும் பிறகு ஏதாவது ஒரு சண்டையில் அவர்கள் கொல்லப் பட்டு விட்டனர் எனவும ஏதாவது ஒரு சண்டையில் அவர்கள் கொல்லப் பட்டு விட்டனர் எனவும் நாம் எழுதிக் கொள்கிறோம். வேண்டுமானால் இறப்பதற்கு இருநாட்களுக்கு முன்னர் நாம் அவர்களோடு சட்டர்லைட் போனில் பேசியதாகவும் சொல்ல முடியும். அடுத்த முறை அதிகம் பேரைப் பிடித்துச் சென்று நாம் சொல்லும் திகதிகளில் விடுதலை செய்யவும்.உங்களால் முடியாவிட்டால் நமது கடற்படையே அதை செய்வதை விட வேறு வழியில்லை.

முகர்ஜி
தமிழக காவல்துறை தலைவ்வர்

Anonymous said...

//குட்டிபிசாசு உங்கள் கருத்துக்கு நன்றி. நான் யார் மனதையும் புன்படுத்தும் நோக்கத்துடன் இதை எழுதவில்லை.//

ahaha....Nambittome....

Anonymous said...

சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தளம் பகுதியில்தான் தமிழக மீனவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று சென்னையில் வெளியாகும் "டெக்கான் குரோனிக்கல்" நாளிதழ் அம்லப்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து மீனவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பியது தொடர்பாக செய்தியைப் பதிவு செய்துள்ள டெக்கான் ஏடு, தமிழக மீனவர்களைக் கடத்தியது விடுதலைப் புலிகள்தான் என்பது இன்னமும் நம்பக்கூடியதாக இல்லை. உண்மையில் கடத்தியது யார் என்பது குறித்து குழப்பமாக உள்ளது என்று கூறியுள்ளது.

மேலும் மீனவர் கூட்டமைப்பின் தலைவரான ஆண்டன் கோமஸ், டெக்கான் நாளிதழ் ஊடகத்துக்கு அளித்த கருத்தில்,

சிறிலங்காவின் புத்தளம் பகுதியில்தான் மீனவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது. புத்தளம் பகுதியானது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி அல்ல. இந்திய மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள்தான் மீனவர்களை வைத்துக் கொண்டு விளையாடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Anonymous said...

நாங்க இங்கை செத்துக் கொண்டிருக்கிறம்.
உங்கட அரசியல்வாதிகள் நாடகமாடிக் கொண்டிருக்கினம்.

றோவுக்கு சொல்லும் பெட்டர் லக் நெக்ஸ் டை மேன்டு.

புலியை முட்டாள்த்தனமாக ஆதரிக்க யாரும் கேட்கவில்லை.
ஆனால் புலிகளின் அழிவும் இலங்கைத் தமிழினம் இலங்கையிலிருந்து துடைத்தழிக்கப்படுவதும் ஒன்றுதான்

Story,Screenplay, Direction
By: றோ
Production:றோ & Sl Navy(Mr Idly If u support them then u also..)
Don't b Silly..bye brother..

From
John

Anonymous said...

Story, Screenplay, Direction
By: றோ
Producers:றோ & Sl.Navy
Don't b Silly Bro..
Bye Bro..
From
John

சிவா சின்னப்பொடி said...

தமிழக மீனவர்கள் கடத்தலும் விடுதலையும்-சில கேள்விகள்…..தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றதாகவும் 12 பேரை அவர்கள் கடத்திச் சென்றுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி ஊடகர் மகாநாடு ஒன்றைக் கூட்டி பகிரங்கமாக அறிவித்த போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்திய தமிழக பர்ப்பணிய ஊடகங்களும் பௌத்த சிங்களப் பேரினவாத ஊடகங்களும் அதை ஊதிப் பெருக்கி பரபரப்புச் செய்தியாக்கி வெளியிட்டன.
தமிழக முதல்வரின் குடும்பத் தொலைக்காட்சி என்று அப்போது சொல்லப்பட்ட சண் தொலைக்காட்சி தமிழக கியூ பிராஞ் காவல்துறையினரால் அவர்களது வழக்கமான பாணியில் அடித்து உதைத்து பெறப்பட்ட சில அப்பாவி ஈழத் தமிழர்களின் வாக்கு மூலங்களை ஒளிபரப்பியது.

இந்த வாக்குமூலங்கள் ஒரு நீதிபதியின் முன்பாகவோ அல்லது ஒரு நீதிமன்றத்திலோ பெறப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. காவல்துறையினர் தாங்கள் பெற்ற வாக்குமூலத்தை ஒரு நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு பதிலாக ஊடகங்களில் பகிரங்கமாக வெளியிட்டது ஏன்? ஏன்ற சந்தேகம் பலமாக எழுந்தது.

இன்று நேற்றல்ல கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக சிறீலங்கா கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதும் அவர்களது படகுகள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்வதும் அவர்களது வலைகள் மற்றும் மீன்பிடி கருவிகளை சேதப்படுத்துவதும் மீன்களை பறித்துச் செல்வதும் ஒரு தொடர் கதையாகவே நடந்துவந்திருக்கிறது-வருகிறது.
அண்மைக் காலங்களில் சிங்கள கடற்கொள்ளையர்கள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறீலங்கா அரசபடைகளுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுதக்குழுக்கள் என்பனவும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய செய்திகள் ஊடகங்களிலே வெளிவந்திருக்கின்றன.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் தான் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள் கடத்திச்சென்றார்கள் என்ற செய்தியை தமிழக அரசும் காவல்துறையும் அவசர அவசரமாக வெளிடும் போது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கும் தமிழகத்திலுள்ள அவர்களது ஆதரவுத் தளத்தை சிதைப்பதற்கும் முயன்றுவரும் சிறீலங்கா கடற்படையும் சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுதக் குழுக்களும் எதிர்காலத்தில் தமிழக மீனவர்களை வகை தொகையின்றி சுட்டுக் கொன்றுவிட்டு விடுதலைப்புலிகள் மீது பழி போடுவதற்கான ஆபத்து இருக்கிறது என்பது ஏன் தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜிக்கும் தெரியவில்லை? இந்த அறிவிப்பு சிறீலங்கா அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக பின்னிப் பிணைந்து செயற்படும் பாகிஸ்த்தான் உளவுத்துறை சிறீலங்கா அரச ஆதரவு தமிழ் குழுக்கள் மற்றும் ஜிகாத் போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களை வைத்து தமிழகத்தில் பாரிய அழிவுகளை எற்படுத்திவிட்டு விடுதலைப்புலிகள் மீது பழியைப் போட்டு தப்பித்துக்கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் என்ற எண்ணம் ஏன் தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜிக்கும் வரவில்லை? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தாலும் பறவாயில்லை தமிழக மக்கள் (மீனவர்கள் உட்பட) வகைதொயின்றி கொல்லப்பட்டாலும் பறவாயில்லை விடுதலைப்புலிகளை; தமிழக மக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டவேண்டும் என்ற குறுகிய சிந்தனையும் தமிழர் விரோதப் போக்கும் தான் இந்த அறிவிப்பில் வெளிப்பட்டது.

இப்போது கடத்தப்பட்ட 12 மீனவர்களில் 11 பேர் மீண்டு வந்து விட்டார்கள்கள். அவர்களை சுயமாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க விடாமல் அவசர அவசரமாக சென்னைக்கு அழைத்துச் சென்று கியூபிராஞ் அலுவலகத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் தாங்கள் சொல்வதைத் தான் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மிரட்டப்பட்டது அந்த மீனவர்கள் வெளியிட்ட தகவல்களில் இருந்தே தெரிய வருகிறது.

இந்த மீனவர்கள் தங்களை கடத்திய விடுதலைப்புலிகள் முதலில் காட்டில் வைத்திருந்ததாகவும் பின்னர் வீடொன்றில் தங்க வைத்ததாகவும் கூறுகிறார்கள்.தங்களது படகுக்காகவே விடுதலைப்புலிகள் தங்களை கடத்தியதாகவும் கூறுகிறார்கள்.

தாங்கள் தங்க வைக்கப்பட்ட இடத்தில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது படம் இருந்ததாகவும் அங்குள்ளவர்கள் புலிகளின் குரல் வானொலியை கேட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதிலே இரண்டு விடயங்கள் முரண்படகின்றன.இவர்கள் தங்க வைக்கப்பட்ட இடம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தால் அங்கே சிருடை அணிந்த போராளிகளின் நடமாட்டம் இருந்திருக்கும்.போராளிகளின் நினைவு வணக்க நிகழ்வுகள் உட்பட ஈழப்போராட்டம் சம்மந்தப்பட்ட பல நிகழ்வுகள் அங்கே நடந்திருக்கும் அதற்கான அறிவிப்புக்கள் மற்றும் ஏற்பாடுகள் பற்றி இவர்கள் சிறிதளவாவது அறிந்திருக்காமல் இருக்க முடியாது. தங்களை விடுதலைப்புலிகள் வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்ததாக இவர்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை.
அடுத்தது முழுமையான சிங்களப்புதியான காலி துறைமுகத்துக்கே சென்று தாக்குதல் நடத்தும் கடற்புலிகளுக்கு படகு தேவையென்றால் சிங்கள மீனவர்களின் படகுகளை அவர்களால் சுலபமாக கடத்தியிருக்க முடியுமே! தங்களது வழியில் குறுக்கிட்ட மீpனவர்களை கடற்புலிகள் தான் சுட்டார்கள் என்றால் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்கள மீனவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் இருந்திருக்க வேண்டுமே!
உண்மையில் சிறீலங்கா அரசுக்கும் இந்திய உளவத்துறைக்கும் நெருக்கமான தமிழ் ஆயுதக் குழு ஒன்றினால் தான் இந்த மீனவர்கள் கடத்தப்பட்டிருக்க வேண்டும்.
கடத்தப்பட்ட மீனவச் சிறுவன் அனிதன் மக்கள் தொலைக்காட்சிக்கு தெரிவித்தபடி கடத்தப்பட்ட மீனவர்கள் சிறீலங்கா கடற்படை படகுகளில் ஏற்றப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள யாழ்ப்பாணக் குடா நாட்டுத் தீவொன்றிலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
கடத்தப்பட்ட ஒரு மீனவர் தாங்கள் தங்கியிருந்த பகுதியில் விமானக் குண்டுத் தாக்குதல் நடந்ததாகவும் தங்களை பங்கருக்குள் படுக்கும்படி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் பலாலி விமானத் தளத்தின் மீது வான் தாக்குதல் நடத்திய பின்னர் சிறிலங்கா வான் படையினர் அரசகட்டுப்பாட்டிலுள்ள தீவகப் பகுதிகளின் கரையோரப்பகுதிகள் மீது வான் தாக்குதல்கள் நடத்தியிருந்தது இங்கே குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.

விடுதலைப்புலிகள் கட்டுநாயக்கா விமானப்படை தளத்தின் மீது விமானத் தாக்குதல் நடத்தியதை அடுத்து தங்களுக்கு ஐஸ்கீறிம் மற்றும் இனிப்புப்பண்டங்கள் வழங்கப்பட்டதாக ஒரு மீனவர் கூறியுள்ளார்.சிறீலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த இவ்வாறு செய்தார்கள் என்பது கவனிக்கத் தக்க ஒன்றாகும்.

அடுத்து இந்த மீனவர்களுடன் கடத்தப்பட்டதாக கூறப்படும் கேரள மீனவர் அவரது படகுடன் திருப்பியபோது அவரது படகில் ஆயுதங்கள் இருந்ததால் மாலைதீவுக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது படகும் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விடயம் மிகப் பெரிய சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது.தமிழக மீனவர்கள் அவர்களது படகுடன் கடத்தப்பட்டது.மன்னார் வளை குடாவில்.அந்த மீனவர்களுடன் கடத்தப்பட்ட ஜோசப் என்ற கேரள மினவர் எதற்காக இந்து சமுத்திரத்திலுள்ள மாலை தீவுக்குச் செல்ல வேண்டும். அவர் மன்னார் வளை குடாவில் இருந்து தூத்துக்குடி கன்னியா குமரி கடற்பகுதி வழியாக கேரளத்துக்கு சென்றிருக்கலாமே?விடுதலைப்புலிகளுக்கு அவரது படகு தேவைப்பட்டிருந்தால்பாக்கு நீரணை வழியாகத் தானே அவர்கள் அதை எடுத்துச் சென்றிக்க வேண்டும்.அப்படி அந்தப்படகை அவர்கள் தங்கள் தேவைக்கப் பாவித்த பின்னர் விடுவித்தருந்தால் அந்தப் பாதையினுடாகத் தானே அவர்கள் விடுவித்திருப்பார்கள்.வங்கள விரி குடாவுக்கப் போய் இந்து சமுத்திரத்த்தில் இலங்கையை சுற்றிப் பயணித்து மாலை தீவைகடந்து கேரளாவுக்கு செல்வது என்பது புதிரானதாக இருக்கிறதே?

இந்தப்படகு மூழ்கடிக்கப்பட்டவுடன் விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா அரசு அவசர அசரமாக அறிவித்ததும் முதலில் அது விடுதலைப்புலிகள் தான் என்ற கூறிய மாலைதீவு அரசாங்கம் அதை மறுத்து கைது செய்யப்பட்டவர் மலையாளம் பேசுபவர் என்று கூறியதும் கவனிக்கத் தக்கது.

1989ம் அண்டு மாலைதிவு அரசை கவிழ்ப்பதற்கு இந்திய உளவத்துறையான ரோவால் அனுப்பப்பட்ட புளட் குழு மன்னார் முள்ளிக்குளத்திலிருந்தும் தூத்துக்குடி குறைமுகத்திலிருந்தும் சென்றதைப் போல் மாலைதீவில் ஏதோ ஒரு சதிநாச வேலையில் ஈடுபடுவதற்காக இந்தப் படகு குடா நாட்டு தீவுப் பகுதியல் இருந்து தூத்துக்குடி கன்னாகுமரி கடற்பரப்பினூடாக ஏன் மாலை தீவக்குச் சென்றிக்கக் கூடாது? அதற்கான தயாரிப்புக்காக இந்தப் படகும் அதிலிருந்த மீனவர்களும் ஏன் கடத்தப்பட்டிருக்க கூடாது? என்ற கேள்வி களுக்கு விடை காணப்பட்டால் இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டம் அப்பலத்துக்கு வரும்.

உண்மையில் தமிழகத்தையும் தமிழக மீனவர்களையும் பேரழிவில் இருந்த காப்பாற்ற வேண்டும் என்ற உண்மையான அக்கறையுள்ள ஊடகங்கள் கட்சிகள் பொது அமைப்புக்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழக மக்கள் அனைவரும் தமிழர் விரோத போக்குடைய இந்திய உளவுத் துறை அதிகாரிகளுடைய கீழ்த்தரமான சதித் திட்டங்களை அம்பலப் படுத்துவதுடன் அதற்கெதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும். விடுதலைப்புலிகளை தமிழக மக்களதும் இந்தியாவினதும் எதிரியாக சித்தரிக்க முனையும் இந்த தமிழர் விரோத சக்திகள் பௌத்த சிங்கள பேரினவானத்தை வளர்த்து விடுவதற்கு துணைபோகின்றன. இராணுவ மயமாகிவரும் பௌத்த சிங்கள பேரினவாதம் எப்போதும் இந்திய நலனுக்கு எதிரானது என்பதையும் இது தமிழகத்தற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் இருப்புக்கே அச்சுறத்தலாக அமையும் என்பதையும் தமிழக அரசும் இந்திய அரசும் இப்போது உணரத் தவறினால் வரலாறு அவர்களுக்கு கசப்பான பாடத்தை படிப்பிக்கும