பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 10, 2007

என்ன தலைப்பு வைக்கலாம் ?

என்ன தலைப்பு வைக்கலாம் என்று கீழே படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்

......துக்ளக்கும் மற்ற பத்திரிக்கைகளை போலவே இருந்திருந்தால் இந்த வாசகர் விழாக்களில் பெரிய சுவாரஸ்யம் இருந்திருக்காது. அரசாங்கத்தினால் மிகவும் கோபத்துடன் பார்க்கப்பட்ட பத்திரிக்கை - அரசாங்கத்தினால் மிகவும் ஆத்திரத்துடன் அணுகப் பட்ட ஆசிரியன் என்ற தகுதிகள் துக்ளக்கிற்கும், எனக்கும் முதலாண்டிலேயே கிடைத்துவிட்டதால் தான் இந்த ஆண்டு விழாக்கூட்டங்கள் களை கட்டின. யாருமே விமர்சனம் செய்யாத போது, ஒரு பத்திரிக்கை தங்களை கிண்டல் செய்யவும் முற்பட்ட போது, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் அன்றைய திமுக அரசுக்கு இருக்கவில்லை. அரசின் அன்றைய போபம் தான் துக்ளக்கை இன்று வரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

மற்ற பத்திரிக்கைகளைப் போல் அல்லாமல், துக்ளக் பத்திரிக்கை அதன் ஆசிரியனுடைய ஒரு அங்கமாகவே பார்க்கப்பட்டாதால் அந்த ஆசிரியனுக்குக் கிடைக்கும் விளம்பரம், பத்திரிக்கைக்குப் பெரிதும் உதவியது. ஆசிரியனுக்கு விளம்பரம் தந்து உதவியதும் அன்றைய அரசு தான். அதன் முதல்வர் கருணாநிதிதான். ஆசிரியனின் எழுத்துக்குப் பதில் சொல்ல முடியாத திமுகவினர், அவருடைய ஜாதியைக் குறிப்பிட்டு, 'முரசொலி' யில் விமர்சனங்கள் எழுதினார்கள். மேடைகளில் பேசினார்கள். அவர்கள் எதிர்பார்த்த பலனை இது தரவில்லை. 'வாதமில்லாததால், ஜாதியத்தில் இறங்கிகிறார்கள்' என்பது மக்களுக்கு புரிந்தது. இப்படி தங்களுடைய ஜாதி ரீதியான தக்குதலில் எடுபடாமல் போன ஆத்திரத்தில் தான் ஒரு துக்ளக் இதழின் எல்லாப் பிரதிகளையும் அரசு பறிமுதல் செய்தது. ஏற்கெனவே சொன்னது மாதிரி, அது துக்ளக்கிற்கு பெரும் விளம்பரமாயிற்று.....
( நன்றி : அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள், சோ, அலையன்ஸ் பதிப்பகம் )

....நாளேட்டில் வெளியிடப்பட்ட கருணாநிதியின் வாரிசாக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு தரப்பட்ட பதில்களின் விளைவாக விலை மதிக்க முடியாத மூன்று வாலிபர்களின் உயிர்கள் பிரிந்து சென்றுவிட்டன. நடந்த அந்த வன்முறைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், இவற்றுக்குக் காரணமாக யார் இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படியான நடவடிக்கை இந்த அரசால் எடுக்கப்படும். எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் அதன் மீது தாக்குதல் நடத்துவதை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொண்டவன் இல்லை.....

( நன்றி : கலைஞர் அறிக்கை )

18 Comments:

Boston Bala said...

(நான் செய்த குற்றங்களை) மறப்போம்; மன்னிப்போம்.

சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம்

குமரன் (Kumaran) said...

மனு நீதிச் சோழன் என்று பட்டம் கொடுக்கலாம்.

Boston Bala said...

hypocrisy or irony?

Anonymous said...

குரலோவியம் - 2007

சிறில் அலெக்ஸ் said...

ஆளவந்தான் (கடவுள் பாதி மிருகம் பாதி)

பத்திரிகை சு'தந்திரம்'

Anonymous said...

பச்சோந்தி?..

Anonymous said...

எவனாயிருந்தா எனக்கென்ன?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

எங்கிட்ட மோதாத?
இது(ல) எங்க நீதி

Anonymous said...

//ஜாதியைக் குறிப்பிட்டு, 'முரசொலி' யில் விமர்சனங்கள் எழுதினார்கள். மேடைகளில் பேசினார்கள். அவர்கள் எதிர்பார்த்த பலனை இது தரவில்லை. 'வாதமில்லாததால், ஜாதியத்தில் இறங்கிகிறார்கள்' என்பது மக்களுக்கு புரிந்தது. இப்படி தங்களுடைய ஜாதி ரீதியான தக்குதலில் எடுபடாமல் போன //

எல்லாம் சரி - மக்களுக்கு புரிந்தது வரை :-)
மக்களுக்கு புரிந்திருந்தால் இன்று தமிழகம் குடும்பச்சொத்தாகியிருக்காது. ஏன் எல்லா அரசியல்வாதிகளும் தினகரனையும் சன் டீவியையும் திட்டுகிறார்கள்? ஒரு விஷயத்தைப் படித்துவிட்டு கொலைவரை போவதை மட்டும் கண்டிக்காமல்??

ஆனால் ஒன்றுமட்டும் தெளிவு. மாறன்களின் பணபலம் கண்டு bipartisan பயம்!

Anonymous said...

Karunanidhi was at the peak of his arrogance between 1971-1976.His party unleashed violence against
media and ADMK.Many ADMK activists
were killed.V.P.Chinthan of CPI(M) survived a murderous attack.Media was not spared. Cho has written facts. So MK has no moral right to speak about press freedom.

அரவிந்தன் நீலகண்டன் said...

குடமுருட்டி குண்டு முதல் ஆகிவந்த திராவிடம்
ஐயையோ கொல்லுறாங்க அதுவும் கூட திராவிடம்
குடும்பத்தகராறுக்காக கொல்லும் வீர திராவிடம்
காவல் துறையும் கைகட்டி செய்யுமடா சேவகம்
குண்டுக்கட்டை திராவிடம் குடும்ப சொத்து திராவிடம்
பிடிக்காத செய்தி வந்தால் அடித்து கொல்லும் திராவிடம்
கொன்னதுக்கும் எரிச்சதுக்கும் கருத்து கணிப்பு காரணம்
என்று சொல்லி கொன்னவனின் அடிவருடும் திராவிடம்
முற்பகலில் தேசக்கொடியை எரிச்ச வீர திராவிடம்
பிற்பகலில் தினகரனை எரிச்சு கொல்லும் இன்ப திராவிடம்
...
பூரா மேட்டரையும் இஞ்ச வந்து படியுங்க சாமி
http://arvindneela.blogspot.com/2007/05/blog-post_10.html

Anonymous said...

லக்கி இதை லுக் என்று வைக்கலாம்

Anonymous said...

கருணாநிதிக்கு என்றைக்குமே சகிப்புத் தன்மை இருந்தது கிடையாது அவன் ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் எதிர்க்கும் பத்திரிகைகள் கொளுத்தப் படுவதும் கொல்லப் படுவதும் சாதாரணமாக நடப்பதுதான். கருணாநிதியின் சொந்தக்காரன் உள்துறை நாகராஜனை வைத்து தராசு பத்திரிகை ஊழியர்களை அன்று கொன்ற அதே கருணாநிதியின் மகன் இன்று தங்கள் சொந்தப் பத்திரிகையையே கொளுத்துகிறான். அப்பா அன்று செய்ய அதையே மகன் இன்று செய்கிறான். நல்ல குடும்பம். துக்ளக் பத்திரிகை பல முறை கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாகியது, தீக்கதிர், நவசக்தி, கல்கி, குமுதம் கல்கண்டு பலமுறை தீக்கிரையாகியது. இது எல்லாம் அப்பன் அன்று செய்தது. மகன்கள் வளர்ந்து விட்டதால் இன்று தினமலரும் தினகரனும் எரிக்கப் படுகிறது. நாசகாரக் குடும்பம், கொலைகார அப்பன், கொலைகார மகன்கள், இவனுக்கு எல்லம் ஒரு பொன்விழா அட மானம் கெட்ட வெட்கம் கெட்ட தமிழா ? நீ எல்லாம் சோறுதான் தின்கிறாயா? நாலு பொணம் மீது பொன் விழா கொண்டாடும் இந்த அரக்கன் விளங்குவானா, அந்த செத்த இளம் உயிர்கள் ஆன்மாக்கள் தான் இந்தக் கொடுங்கோலர்களைக் கேட்க்க வேண்டும். இவனுக்கு ஓட்டுப் போட்ட தமிழர்கள் எல்லோரையும் கொளுத்தினாலும் தமிழனுக்கு புத்தி வராது. கொளுத்துங்க்டா தமிழ் நாடு பூராத்தியும் கொளுத்துங்க்டா, நல்லா கொளுத்துங்கடா

Anonymous said...

Kollrango, Kollrango

Anonymous said...

நீங்க நல்லவரா? கெட்டவரா?

உண்மைத்தமிழன் said...

சொன்னதை மாற்றிச் சொல்வது, சொல்வதை மாற்றிச் சொன்னது, பேசியதை பேசவில்லை என்று மறுப்பது, பேசாமல் விட்டதை பேசியதாகச் சொல்வது, தான் நம்புவதை மட்டும் பகுத்தறிவு என்பது, அந்தப் பகுத்தறிவை மடத்தனம் என்று சொன்னது.. இப்படி அனைத்து அசிங்கங்களுக்கும் ஒட்டு மொத்த குத்தகைதாரர் நம்ம மு.க.தான். அவர் என்னைக்கு தான் செய்ததை ஒத்துக் கொண்டுள்ளார். இதெல்லாம் அவர் அகராதில.. ச்சும்மா..

Ravi said...

Anonymous (posted at 12:39 AM), Unga aakrosham puriyudhu and ellaam nyaayamaana kovam dhaan. Neenga sonna maadhiri indha politicians-a solli enna payan. Namba makkala sollanum.

Unmai Thamizhan, nalla nachchu-nu sonneenga. Sooper!