பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 10, 2007

இன்றைய ஜெ அறிக்கை

* கருத்துக் கணிப்பால் இப்படிப்பட்ட சம்பங்கள் நடைபெறும் என்பது எனக்கு முன்பே தெரியும், கருத்துக் கணிப்பை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டபின்பும் வெளியிட்டதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். இதைவிட மோசமாக ஒரு முதல்வர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்க முடியாது. ( தெரியும் என்றால் ஏன் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று கேட்டிருக்கலாம் )

* தமிழ்நாடே பதற்றத்தில் இருக்கையில் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் கருணாநிதி விருந்து கொடுத்திருக்கிறார்.

* மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுப் போனதை தடுக்க முடியாத பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோர் கருணாநிதிக்கு நடக்கும் பொன்விழாவில் கலந்து கொள்வது கண்டனத்துக்குரியது.

* 84 வயதாகும் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்புக்கு என்ன அவசரம் என கேட்ட காங்., சட்டசபை கட்சித் தலைவர் சுதர்சனம், அ.தி.மு.க., வாரிசு பற்றிய கருத்துக் கணிப்பு பைத்தியக்காரத்தனம் என சொல்லவில்லை. கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பதில் காங்கிரசார் சாதனை படைத்து விட்டார்கள்.

* இனிமேலாவது அழகிரியின் ஜாமீனை ரத்து செய்து, அவரை உடனடியாக கைது செய்ய அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வர் சி.பி.ஐ., விசாரணை கோருவது கேலிக்கூத்து. தமிழக போலீசாரைப் போன்றே சி.பி.ஐ., போலீசாரும் நடந்து கொள்வர் என்பதே உண்மை.

* நடந்த சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி உடனடியாக ராஜினமா செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கை காக்க தவறிய தி.மு.க., மைனாரிட்டி அரசை மத்திய அரசு உடனடியாக கலைக்க வேண்டும்.

9 Comments:

G.Ragavan said...

நடந்தது மிகப்பெரிய தவறு. முன்பு பஸ் எரிந்ததே அதே அளவிற்குப் பெரிய தவறு. அன்று அதிமுக பதவி விலகியிருந்தால் இன்று ஜெ பேசலாம். கருணாநிதி குற்றவாளி ஆவதால் மட்டும் ஜெயலலிதா உத்தமி ஆக முடியாது. இன்று கருணாநிதி எவ்வளவு கண்டனங்களைச் சம்பாதிக்கிறாரோ...அவையனைத்தையும் ஏற்கனவே சம்பாதித்தவர் ஜெ. இன்று எகிறுகிறார். அது சரி. அரசியலில் அது சகஜந்தான்.

Anonymous said...

என்ன ராகவரே ஒரேயடியா எகிறிரீரு? அந்த ஜெயா வேண்டாம்னுதானே இந்த உத்தமபுத்திரனுக்கு நீங்க எல்லாம் ஓட்டு போட்டீங்க? ஒரு முதல்வர் அதுவும் போலீஸ் இலாகா மந்திரி பேசும் பேச்சா இது? தர்மபுரி பஸ்ஸை எரித்தவர்களாவது உடனடியாகக் கைது செய்யப் பட்டனர், தூக்கு தண்டனையும் கிடைத்துள்ளது, அதே மாதிரி அழகிரிக்கு தூக்கு கிடைக்குமா அட குறைந்த பட்சம் அவனது ஜாமீனாவது ரத்து ஆகுமா? ஜெயாவின் கேசை பக்கத்து மாநிலத்துக் கொண்டு போனீங்களே அன்றைக்கு அதே போல பக்கத்து கர்நாடாக மாநிலத்தில் அழகிரி கேசையும் ஏன் நடத்தக் கேட்க்கக் கூடாது? ஜெ உத்தமி அல்ல ஊருக்கே தெரியும் அதற்காக உத்தமிகள்தான் கேள்வி கேட்க்க வேண்டும் என்றால் இன்றைக்கு தமிழ் நாட்டில் யாருமே கேட்க்க முடியாது உங்களையும் சேர்த்துதான். முதலில் கருணாநிதி பதவி விலக வேண்டும் கருணாநிதியும், அழகிரியும் தூக்கில் போடப் பட வேண்டும்

dondu(#11168674346665545885) said...

//நடந்தது மிகப்பெரிய தவறு. முன்பு பஸ் எரிந்ததே அதே அளவிற்குப் பெரிய தவறு. அன்று அதிமுக பதவி விலகியிருந்தால் இன்று ஜெ பேசலாம்.//
என்ன ஸ்வாமி, பஸ் எரிப்பின் போது (பிப்ரவரி 2000) ஜெ பதவியிலேயே இல்லையே? இவ்வளவு ஞாபக மறதியா உங்களுக்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஹரன்பிரசன்னா said...

//* 84 வயதாகும் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்புக்கு என்ன அவசரம் என கேட்ட காங்., சட்டசபை கட்சித் தலைவர் சுதர்சனம், அ.தி.மு.க., வாரிசு பற்றிய கருத்துக் கணிப்பு பைத்தியக்காரத்தனம் என சொல்லவில்லை.//

Good point.

//சட்டம் ஒழுங்கை காக்க தவறிய தி.மு.க., மைனாரிட்டி அரசை மத்திய அரசு உடனடியாக கலைக்க வேண்டும்.//

Good Joke.

Anonymous said...

Sontha selavil Suniyam vaithukondavargal Tamilargal.

Anonymous said...

கருத்துக் கணிப்பால் இப்படிப்பட்ட சம்பங்கள் நடைபெறும் என்பது எனக்கு முன்பே தெரியும்.

Father Karunanidhi overwhelmed
C.M Karunanidhi. Father could
not control Azhagiri. C.M failed
to take preventive action.So both as a father and as a C.M he has failed in his duty.

G.Ragavan said...

// Anonymous zei...
என்ன ராகவரே ஒரேயடியா எகிறிரீரு? அந்த ஜெயா வேண்டாம்னுதானே இந்த உத்தமபுத்திரனுக்கு நீங்க எல்லாம் ஓட்டு போட்டீங்க? ஒரு முதல்வர் அதுவும் போலீஸ் இலாகா மந்திரி பேசும் பேச்சா இது? தர்மபுரி பஸ்ஸை எரித்தவர்களாவது உடனடியாகக் கைது செய்யப் பட்டனர், தூக்கு தண்டனையும் கிடைத்துள்ளது, அதே மாதிரி அழகிரிக்கு தூக்கு கிடைக்குமா அட குறைந்த பட்சம் அவனது ஜாமீனாவது ரத்து ஆகுமா? ஜெயாவின் கேசை பக்கத்து மாநிலத்துக் கொண்டு போனீங்களே அன்றைக்கு அதே போல பக்கத்து கர்நாடாக மாநிலத்தில் அழகிரி கேசையும் ஏன் நடத்தக் கேட்க்கக் கூடாது? ஜெ உத்தமி அல்ல ஊருக்கே தெரியும் அதற்காக உத்தமிகள்தான் கேள்வி கேட்க்க வேண்டும் என்றால் இன்றைக்கு தமிழ் நாட்டில் யாருமே கேட்க்க முடியாது உங்களையும் சேர்த்துதான். முதலில் கருணாநிதி பதவி விலக வேண்டும் கருணாநிதியும், அழகிரியும் தூக்கில் போடப் பட வேண்டும் //

நண்பரே, நான் எகிறவில்லை. இது தொடர்பான பதிவுகளில் கருணாநிதி செய்தது தவறு. சிபிஐ விசாரணை என்பது நாடகம் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவு ஜெயின் அறிக்கையைப் பற்றிப் பேசுவதால் நான் ஜெயைப் பற்றி மட்டும் சொன்னேன்.

// dondu(#11168674346665545885) zei...
//நடந்தது மிகப்பெரிய தவறு. முன்பு பஸ் எரிந்ததே அதே அளவிற்குப் பெரிய தவறு. அன்று அதிமுக பதவி விலகியிருந்தால் இன்று ஜெ பேசலாம்.//
என்ன ஸ்வாமி, பஸ் எரிப்பின் போது (பிப்ரவரி 2000) ஜெ பதவியிலேயே இல்லையே? இவ்வளவு ஞாபக மறதியா உங்களுக்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன் //

டோண்டு சார், நான் அதிமுக பதவி விலகியிருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறேன். நீங்கள் ஜெ என்று படிக்கிறீர்கள். அவ்வளவு அவசரமா உங்களுக்கு?

அன்புடன்,
கோ.இராகவன்

dondu(#11168674346665545885) said...

//டோண்டு சார், நான் அதிமுக பதவி விலகியிருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறேன்.//
என்ன கூற வருகிறீர்கள். அதிமுக அப்போது எதிர்க்கட்சி, அதுவும் மிகக்குறைந்த அளவு உறுப்பினர்களே இருந்தனர். சும்மா சமாளிக்காதீர்கள்.

அப்ப்டியே இருந்தாலும் சாதாரணமாக முதல் மந்திரிதான் இம்மாதிரி விஷயங்களுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று விலக வேண்டும். இதையே நீங்கள் மகாமகக் குளத்து விஷயத்துக்ககக எழுதியிருந்தால் ஒத்துக் கொள்ளலாம். நானே அதைத்தான் அக்கால ஜூவிக்கு எழுதினேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

MK says case should be given to CBI because his family is involved and TN police cant be expected to be impartial! CM, Police Miniser says his Police Forice is corrupt and does his bidding nothing else. What a confession! Nobody including CHo ahs raised this point!