பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 21, 2007

சிறுவன் பொய் சொல்ல மாட்டான் !

இதற்கு முன் "கடத்தியது புலிகள்தான் - மீனவர்கள்" என்று ஒரு பதிவு காரமாக எழுதினேன். அதை தொடர்ந்து இந்த பதிவு.


மக்கள் டிவியில் 11 வயது சிறுவன் பேட்டி அளித்துள்ளார். அந்த சிறுவன் தன் பேச்சில் 'ஸ்ரீலங்கா நேவி' என்று சொல்லுகிறான் பக்கத்தில் இருப்பவர் புலிகள் என்று சொல்லு என்று அவனுக்கு உபதேசம் செய்கிறார். யார் பொய் சொன்னாலும், ஒரு சிறுவன் பொய் சொல்லமாட்டான் என்று திடமாக நம்புகிறேன்.

இந்திய/தமிழக அரசு இந்த கதையை பில்டப் செய்திருந்தால் இதைவிட கேவலமான ஒரு செயல் இருக்க முடியாது.

இதை தொடர்ந்து எனக்கு சில கேள்விகள்

1. கடத்தபட்ட மீனவர்களுக்கு ரூ10,000 எதற்கு கொடுத்தார்கள் ? தாங்கள் சொல்லிகொடுத்ததை சொல்லுவதற்காகவா ?

2. எல்லா பத்திரிக்கைகளும் ( மக்கள் , தமிழ் ஓசை தவிர்த்து ) ஏன் உண்மையை வெளிகொண்டு வரவில்லை ?

3. மீனவர்களில் ஒருவர் மட்டும் ஏன் பத்திரிகையாளர்களிடம் பேச அனுமதிக்கப்பட்டார் ?

4. இந்த மீனவர்கள் நாளை ஜூவி, ரிப்போட்டர் போன்ற பத்திரிக்கைகளுக்கு உண்மையை சொன்னால் இவர்களின் கதி என்ன ஆகும் ?

மக்கள் டிவி சுட்டி இங்கே

14 Comments:

கொழுவி said...

பக்கத்தில் நிற்பவரின் முகத்தைப் பாருங்களேன். என்னமா துடிக்கிறார்..? அவர் பயத்திலும் நியாயம் இருக்குத் தான்.

இங்கே மீனவர்களோடு உரையாடியதாய் முகர்ஜி சொன்னதெல்லாம் உண்மையாய்த் தானிருக்கும். அதாவது இலங்கை கடற்படையின் சிறையில் இருந்த வேளையில் அவர்களோடு பேசியிருக்கலாம். கடற்படையோடு பேச்சு வார்த்தையும் நடத்தப் பட்டிருக்கலாம். இலங்கை கடற்படையும் அவர்களை விடுதலை செய்ய சம்மதித்திருக்கலாம்.

சரி இதை வைச்சு புலிகளுக்கெதிரா ஒரு நாடகத்த நடாத்தித் தான் பார்ப்போமே என யாராவது நினைத்திருக்கலாம். (இதில் இந்திய உளவுத்துறையென என்னால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் நிறைய ஓட்டைகள் நிரம்பிய இந் நாடகத்தை உளவுத் துறை கையாண்டிருக்குமா.. அந்த அளவிற்கு இந்திய உளவுத் துறை மோசமில்லை என்று நம்புகிறேன். )

ஒரு வேளை இது தனியே தமிழக காவல்துறை மட்டத்தில் சம்பந்தப் பட்டதாக இருக்கலாம்.

விடுதலைப் புலிகளுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்டகள் தமிழக மீனவர்களின் துணையுடனேயே கொண்டு செல்லப் படுகின்றன. ஒருவேளை அதனைத் தடுப்பதற்காகவும் இது மேற் கொள்ளப் பட்டிருக்கலாம்.

ஆனால் நாளை பாகிஸ்தானிய ஆதரவு குழுக்கள் இந்தியாவில் எங்காவது குண்டு வைத்தாலும் அதனை புலிகள் தலையில் போடக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
அல்லது யார் என்ன செய்தாலும் அது புலிகள் தலையில் போடப்படும் என்ற தைரியத்தில் அவ்வாறான குழுக்களும் மோசமான நடவடிக்கைகளில் இறங்க கூடும்.

Anonymous said...

இது உண்மை என்றால் கொல்லப்பட்ட மீணவர்களின் மரணத்துக்கு யார் காரணம், கொலைகாரர்களுக்கு மக்களை காப்பாற்ற வேண்டிய அரசே ஆதரவாக இருதமை தர்மமா? அவர்களை காப்பாற்றும் பொறுப்பு யாருடையது?

Anonymous said...

எல்லோரும் எல்லாம் தெரிந்துதான் செய்கிறார்கள்.எல்லோரிடமும் ஒரு திட்டம் இருக்கத்தான் செய்கிறது.ஒரு முன்னால் பிரதமரை கொன்றால் கண்டே பிடிக்க முடியாதென்றா அதை செய்தார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம்.. மக்கள் தொலைகாட்சி ராமதாஸ் சம்பந்தப்பட்டது.ராமதாஸ் கட்சியான PMK மத்திய அரசில் ஒரு அங்கம்.இது ஒரு நாடகம் என ராமதாஸ் நினைத்து இருந்தால் உள்துறை அமைச்சகத்தில் சொல்லி சம்பந்தபட்டவர்களை ஒரு தட்டு தட்டி இருக்கலாம்.ஆனால் அதை விட்டுவிட்டு தொலைகாட்சியில் இப்படியான செய்தியை விட்டதன் நோக்கம் என்ன?

ஏதோ ஒரு திட்டத்துடன்தான் இவர்கள் செயல் படுகிறார்கள்.இந்த மாதிரி விசயங்களில் வரிகளுக்கு இடையில் படித்து விளங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

Unknown said...

"இந்தி"யா "தமிழ"னுக்கு உதவுதுப்பா...

_______
CAPitalZ

Anonymous said...

ஜூனியர் விகடனும் ரிப்போர்ட்டரும் வீடுகளில் சென்று இவர்களை பேட்டிஎடுக்க முடியாதா என்ன?

மக்கள்டிவியின் வேலை, சந்தேகத்தை விதைப்பது. 11 வயது பையனுக்கு லன்கா நேவிக்கும், புலிகளின் நேவிக்கும் வித்தியாசம் தெரியுமா?

இந்தியாவில் ஒரு விஷயத்தை மூடி ம்றைப்பது சாத்தியமில்லை .. அதுவும்பொதுமக்கள் சிறைப்பட்ட இந்த விஷயத்தில்.. என்று "ரோ"வுக்கு தெரியாதா?

ராமதாஸ் நடத்தும் டிவியில் என்றாவது புலிகளின் தவறான செயல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றனவா?

மக்கள் டிவி என்ற பெயரில் யார் பணம் இங்கே விளையாடுகிறது என்பது தெரிந்ததுதான்.

Anonymous said...

உங்களது முன்னைய பதிவில் இரு பின்னூட்டங்களிட்ட அதே கொழும்புவாசியிடமிருந்து,

புலிகள் கடத்தல், சுடுதல் போன்ற வேலைகளைச் செய்ய மாட்டர்கள் என்று சொல்லி அவர்களுக்கு வக்காலத்து வாஙவில்லை. அவர்கள் அப்படியான வேலைகள் செய்யக் கூடியவர்க்ள். ஆனால் தமிழக மீனவரை அதுவும் படகுக்காகக் கடத்தினர் மற்றும் சுட்டதாகச் சொன்ன காரணங்கள் எல்லாம் சிறிதும் நம்ப முடியாதவை.

நேரில் போருடன் சம்பந்தப்படாததால் போரியற் தகவல்கள் ஒருவேளை தமிழகப் பதிவர்களுக்குத் தெரியாதிருக்கலாம்.

மீன்பிடிப் பாடகுகளை வைத்துப் புலிகள் என்னதான் செய்வார்கள்? மேலும் மன்னார்ப்பக்கமாக ஆயுதம் வரவும் வாய்ப்பில்லை. மேலும் ஆயுதம் போன்றவற்றுக்கு புலிகள் தூர நாடுகளிலிருந்து வரும் கப்பல்களை எதிர்பார்ப்பது போல மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தமிழக மீனவரின் உதவியைப் பெருமளவு பெறுகிறார்கள். அவ்வாறிருக்க தமிழக மீனவரைப் பகைக்க புலிகள் முட்டாள்களில்லை.

சிறீலங்கா அரசையும் இராணுவத்தையும் பொறுத்த வரையில் தமிழர் எல்லாரும் புலியள் தான். அதனால் தமிழ்ப் பகுதியிற் காணப்படும் எந்தப் படகு மீனவரைச் சுடவும் சிறீலங்கா நேவி தயங்காது.

புலிகள் ஒன்றும் அப்பழுக்கற்றவர்கள் அல்ல. அவர்கள் விட்ட, விடும் பிழைகள் பல.

ஆனால் புலி அழிந்தால் இங்கே தமிழினம் இல்லை. இங்கே சிறீலங்கா அரசு நடத்துவது புலிக்கெதிரான போரல்ல.

ஒரு இனச்சுத்திகரிப்பு.

தமிழகத்தவர் புலியளை ஆதரிக்க வேண்டுமென்றில்லை. சிறிலங்கா அரசசிற்கு உதவுவதை எதிர்த்தாலே போதும்.

ஏனெண்டால் சிறிலங்காவுக்குக் கிடைக்கும் உதவிகள் எல்லாம் தமிழருக்கு எதிராகப் பயன்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் கடந்த ஆறு மாதத்தில் 4000 பேர் காணாமற் போய்விட்டனர். இது வெளியான தகவல். தீயாமல் இன்னும் எவ்வளவோ தெரியாது,.

அத்தனை பேரும் 18-35 வயதினர்.

இங்கே இதுதான் நடக்க்றது.

தமிழர் செறிவைக் குறைக்க மேல்கொத்மலைத்திட்டம் போன்ற திட்டங்களை முன்னெடுத்தல். கட்டாயக் கருத்தடைச் சிகிச்சை.

மக்கள் பிரதேசங்களில் மிகப் பெரிய உயர்பாதுகாப்பு வலயங்களை நிறி மக்கள வெளியேற்றி மீளக் குடியமர்த்தி ஒவ்வொரு தமிழரையும் தம் வேரிலிருந்து புடுங்குகிறார்கள்.

கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பலாத்காரம் என்று தொடர்கிறது.

அதனால் இங்கே தமிழர் என்றால் புலிகள் தான். எந்தத் தமிழன் செத்தாலும் அவன் புலிதான்.

இன்று எமக்கு ஏதாவது விடிவு கிடைக்க வேண்டுமென்றால் அது புலிகளூடாகத்தான் முடியும்.

புலிகளை விட்டு/ புலிகளை விலத்தி, புலிகளை வென்று தமிழருக்கு உரிமை கொடுப்பது என்பது சிறீலங்கா அரசு எப்பொழுதும் சொல்லும் சமாதனத்துக்கான யுத்தம் போன்ற ஒரு கோசம்தான்.

அதனால் தான் ஈழத் தமிழர் கேட்கிறோம். தமிழகத்தவர் புலிகளை ஆதரிக்காவிடினும் ஈழத்தமிழினத்தின் அழிவுக்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள்.

நன்றி

தமிழ்பித்தன் said...

கொழுவியின் வாதம் நியாமமானதுதான் தமிழ்மக்கள் கயவர்களை இனங்காண வேண்டும் காசுக்கா இந்த நாடகம் நடந்ததா என்று (வேறு யாராவது முகர்ஜிக்கு பணம் வழங்கி செய்ய தூண்டியிருக்கலாம்) சந்தேகம் கொள்ள செய்கிறது

Anonymous said...

//இந்திய/தமிழக அரசு இந்த கதையை பில்டப் செய்திருந்தால் இதைவிட கேவலமான ஒரு செயல் இருக்க முடியாது.//

சும்மா தமாஷ் பண்ணாதீங்க சார்... இந்திய உளவுத்துறை மட்டுமல்ல எல்லா நாட்டு உளவுத்துறைகளும் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டு உள்ளன. இது ஓன்றும் அவர்களின் சொந்த லாபம் கருதி அல்ல. நாட்டிற்கு எது நன்மையே அதை செய்கிறார்கள்..(நீங்கள் இந்தியர் தானே??)

Anonymous said...

//சும்மா தமாஷ் பண்ணாதீங்க சார்... இந்திய உளவுத்துறை மட்டுமல்ல எல்லா நாட்டு உளவுத்துறைகளும் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டு உள்ளன. இது ஓன்றும் அவர்களின் சொந்த லாபம் கருதி அல்ல. நாட்டிற்கு எது நன்மையே அதை செய்கிறார்கள்..(நீங்கள் இந்தியர் தானே??)//

உமது அறியாமையை நினைக்க என்ன செய்வது என்று தெரியவில்லை நண்பரே...

நாட்டுக்கு எது நன்மையோ அதையே செய்வதாக கூறுகின்றீர்... எது நாட்டுக்கு நன்மை?? அப்பாவி மீனவர்களை தமது அரசியல் இலாபத்திற்காகக் கொன்று... உண்மையாகக் கொன்ற சிறிலங்கா இராணுவத்தினரை விட்டு புலிகள் மேல் சாடுவதா?

நாட்டுக்கு நன்மை: "இந்தி"ய அரசு "இந்தி"ய நாட்டு நன்மையைப் பார்ப்பதால் தான் அப்பாவித் தமிழ் மீனவர்கள் கொல்லப் படுகின்றனர்.

நண்பரே உமது கண்ணை நன்றாகத் திறந்து வெளி உலகைப் பாரும்...

ஈழத்தில் என்ன "உண்மையில்" என்ன நடக்கின்றது என அறிய இனியாவது முயற்சி செய்யும்... அதை விட்டு... நீரும் இந்தக் கேடு கெட்ட அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா போடாதீர்.

Anonymous said...

//இந்திய/தமிழக அரசு இந்த கதையை பில்டப் செய்திருந்தால் இதைவிட கேவலமான ஒரு செயல் இருக்க முடியாது.//

என்னங்க சும்மா 'கேவலமான' என்று சொல்லிவிட்டீர்கள்? இந்தியா 'கேவலமான' என்றுசொல்லி இலகுவாக தப்பித்துவிடும் ஆனால் இதை வைத்தே ஈழத்தமிழரின் வாழ்வில் 'பாறாங்கல்' விழுந்துவிட்டது.
இப்படித்தான் அமைதிப்படை (ஐ.பி.கே.எஃப்) காலத்தை 'diplomatic mistake' (ராஜீக தவறு) என்று சொனார் ஜே.என்.டிக்சிற். ஆனால் அது ஈழத்தமிழருக்கு 'dissaster' (அழிவு) ஆகப்போய் விட்டது.

Anonymous said...

சும்மா ஒரு சந்தேகம்...

புலிகளின் இலை பச்சை உடை தைப்பதற்கும்,கடற்புலிகளின் படகு வர்ணம் அடிப்பதற்கும்,பிரபாகரன் படம் மற்றும் பாடல் காஸட் போன்றவற்றிக்கும் மொத்தமாக எவ்வளவு செலவாகும்?

சிறிலங்கா கடற்படையினர் போல் உடை தைப்பதற்கு,படகுக்கு வர்ணம் பூசுவதற்கும் என்ன செலவாகும்?

தமிழ் தெரிந்த சிங்களர்களையும், சிங்களம் தெரிந்த தமிழர்களையும் அந்தந்த அணிகளிடமிருந்தே செலவில்லாமல் தேர்தெடுத்துக் கொள்ளலாம். முகாம் செலவு,சாப்பாடு செலவு போன்றவை வழக்கமாக நடை பெறுகின்ற ஒன்றுதானே..!

சின்னப் பைய்யா... இன்னுமொரு முறை தெளிவா பேட்டி கொடு!

Anonymous said...

Listen the video carefully.
At once, a person, likely an abducted fisherman who is right to the kid, trying to say "athu vidutha....." and not saying it fully. It also happens with another man left to the kid. He was trying to say the same thing, but not finishing, probably due to media presence. By doing that we understand it's a not well performed drama. It finally exposes who are the five sea tigers arrested by Police and therefore the real killers of the fisherman who died. Not Sri Lankan Navy. If's it's Sri Lankan Navy, those who were abducted will be killed for sure. But, after contemplations the Tamil Nadu Police.........

Anonymous said...

Tharisanam is a pro LTTE, srilankan tamils run channel. Do you think they are going to show anything against LTTE? if is a intelligence bureau run show, they need not allow even a press conference.

Also its very interesting to run parallel against kanchi jeyendrar's case. It was obvious that police orchestrated the case and most of the drama fell flat, yet most of the people still go by premkumar version rather than truth. None of the so called abuses were even in the charge sheet. Now many blogger say police at fault but 12year kid's statement is the ultimate truth..

Anonymous said...

சில சந்தேகங்கள்... விடை எல்லாருக்கும் தெரிந்தது தான். ...

1. மீனவர்கள் காணாமல் போன ஐந்தாம் நாலே, இலங்கை அரசு அதிகாரி ஒருவர் புலிகள் கடத்தியதாக ஒரு "புலியே" வாக்குமூலம் கொடுத்தது என்கிறார் .... எப்படி....

2. மரியா என்ற படகு பிடிபடுகிறது. உடன் தூத்துக்குடி S.P. மரியா படகு (மீனவர்களை சுட்ட படகு) பிடிபட்டதாக கூறுகிறார்.

3. ஆனால் மீனவர் ஒருவர் சுட்டது இவர்கள் அல்ல என்கிறார் (இது சன் செய்தியில் தமிழகமே பார்த்தது)