பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 28, 2007

‘சிவாஜி படத்துக்கும், டிக்கெட் விலைக்கும் என்ன சம்பந்தம்?

சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்த சில நாட்கள் டிக்கேட் ராக்கெட் விலையில் இருக்கும். தற்போது, அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் டிக்கெட் விலையை விட கூடுதலான விலையில் விற்க அரசு அனுமதி தராது.

அரசு நிர்ணயிக்கும் விலையில் சிவாஜி படத்தை ரிலீஸ் செய்தால் சூப்பர் ஸ்டார் தாத்தா நடித்தால் கூட படம் பெரும் நஷ்டம் ஏற்படும். (கிராமப்புறங்களில் - நான்கு ரூபாயிலிருந்து இருபத்தைந்து ரூபாய் சினிமா கட்டணம் என்றும், நகர்ப்புறங்களில் ஆறு ரூபாயிலிருந்து முப்பது ரூபாய் என்றும் அறிவித்த தமிழக அரசு, நகர்ப்புறங்களில் இருக்கும் ஏ.சி. தியேட்டர்களில் இந்தக் கட்டணங்கள் ஐம்பது ரூபாய் வரை இருக்கலாம் என்று நிர்ணயித்திருக்கிறது. சென்னை மாநகரில் இருக்கும் ஒன்றிரண்டு தியேட்டர் களில் மட்டும் ரசிகர்களுக்கு கூடுதலான வசதிகளைச் செய்து கொடுத்து நூறு அல்லது நூற்றியிருபது ரூபாய்வரை கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று தனியாக ஒரு அறிவிப்பையும் செய்தது.)

பெரிய அளவில் முதலீடு செய்து படத்தை வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்கள் தாங்கள் முதலீடு செய்திருக்கும் பணத்தை உடனடியாக எடுக்க பெரும் தடையாக இருப்பது தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட இந்த சினிமா டிக்கெட் தொடர்பான கட்டண விவரங்கள்தான். இந்தக் கட்டணங்களை வைத்துப் பார்த்தால் ‘சிவாஜி’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தாங்கள் போட்ட பணத்தை எடுக்க ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலைமை வரும். முன்பு இருந்த 'Pre Pricing' முறையில் முதல் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு சினிமா டிக்கெட்டுகள் நூறு ரூபாயிலிருந்து முந்நூறு ரூபாய் வரை விற்கப்படும். இதனால் ஒரே மாதத்தில் விநியோகஸ்தர்கள் போட்ட பணத்தை எடுத்து விடுவார்கள்.

சிவாஜி படத்தை எவ்வளவு பணம் கொடுத்து கலைஞர் டிவி வாங்கியிருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. ( விடையை நாளை சொல்லுகிறேன், பின்னூட்டத்தில் நீங்க சொல்லலாம்).

தற்போது சிவாஜி படத்தை 'கலைஞர் டிவி' வாங்கியிருப்பதால் சிவாஜி’ படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் கூடுதலாக கட்டணங்கள் வசூலித்தால் அதை கண்டுகொள்ளாமல அரசு விட்டுவிடும் என்று நினைக்கிறேன். இதையும் இந்த படத்தின் விலையுடன் பேசியிருப்பார்கள்.

9 Comments:

வல்லிசிம்ஹன் said...

என்ன ஒரு 200ரூபாயில ஆரம்பிக்குமா....

நாமக்கல் சிபி said...

அரசு நிர்ணயிக்கும் விலை என்பது டிக்கெட்டில் அச்சடிக்கப் படும்(அச்சில் மட்டுமே) விலைதானே?

IdlyVadai said...

நான் கேட்ட கேள்வி சிவாஜி எவ்வளவு கோடி கொடுத்து கலைஞர் டிவி வாங்கியது.

Sridhar V said...

இதற்கு முன் சன் டிவி ஒரு படத்தை 1.5 கோடி குடுத்து வாங்கியது நினைவில் இருக்கிறது. Legal terms தெரியவில்லை.

Satelite rights என்ற வகையில் 3-5 கோடிகள்?

ஆனால் 2 வருடங்கள் கழித்துத்தான் தொலைக்காட்சியில் வெளியிட முடியும் போல இருக்கிறது.

பினாத்தல் சுரேஷ் said...

சிவாஜிக்கும் டிக்கட் ரேட்டுக்கும் உள்ள சம்மந்தத்தை பினாத்தலார் தன் ஞானக்கண்ணால் சற்றுபின் செய்திகளில் எழுதியிருந்ததை மறந்திருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

என்ன ரேட்டு?

ரன்னிங் ரேட் எனக்குத் தெரியாததால், குன்ஸாகச் சொல்லவேண்டும். ஒப்பீட்டு அளவில் சொல்லப்போனால், அன்னியனுக்கு சன் டிவி எவ்வளவு கொடுத்ததோ அதைப்போல 3 மடங்கு :-)

Anonymous said...

With the assurance that:
(1) ALL PROTECTION WOULD BE GIVEN FOR SAFE RUNNING OF THE FILM IN ALL THE RELEASED THEATERS;
(2) all the protection would be given and assured that they will see no DVD would be releaseD;
(3) as already said that the Cinema Ticket PRICE STIPULATION WOULD BE MAINTAINED ONLY IN PRINTING THE SAME IN TICKETS AND THEY CAN CHARGE UNOFFICIALLY AS THE THEATERES LIKE;
4( AND IF THE kALIGNAR tv LIKES, AFTER SEeING THE RESPONSE AFTER RELEASE SOME AMOUNT WOULD BE PAID AS THEY LIKE.

Anonymous said...

shivaji films sold the TV rights of chandramukhi to Sun tv for 3 crores.

we cant expect the same with kalinjar TV. i think it would be around 1 Cr+ underground dealings. and i learned from a trusted source that Shivaji wont be telecast ed on independence day but for diwali.

IdlyVadai said...

Sridhar Venkat - கிட்டதட்ட சரியான விடை.
அனானி நீங்க கூட விடைக்கு அருகில் இருக்கிறீர்கள் :-)

Aani Pidunganum said...

I feel the statement given by avm saravanan is just to keep the people go theatre and watch movie, else people will wait for that period and watch easily in TV. Moreover after release within 3months all distributors can takeout their money invested in this money and to conclude before end of this year this movie will be on Kalaignar TV.
By the way movie would be bought @not less than 6cr.