பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 20, 2007

கலைஞர் டிவி உதயம்

மதுரை சம்பவத்தை தொடர்ந்து சன் டி.வி குழுமத்துக்கும் தி.மு.க.வுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பொன் விழா காட்சிகளை நேரடி ஒளிபரப்புக்கு திமுக மறுத்தது. தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் இருந்து சன் டி.வி. அலுவலகம் வேறு இடத்துக்கு சீக்கிரம் மாற்றபட உள்ளது.

திமுகவிற்கு தனியாக ஒரு டெலிவிஷன் சேனல் வேண்டும் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து ராஜ் டி.வி.யுடன் இணைந்து தி.மு.க.வுக்கு புதிய சேனல் உருவழ்ாகிறது. அந்த புதிய டி.வி.க்கு கலைஞர் டி.வி/உதயா டி.வி என பெயரிடப்படும் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

முதல்-அமைச்சர் கருணா நிதியின் பிறந்த நாளான ஜுன் 3-ந்தேதி கலைஞர் டி.வி. உதயமாகிறது. புதிய டி.வி.யில் செய்திகள், பொழுது போக்கு நிகழ்ச்சிகளும், விறு விறுப்பான நிகழ்ச்சிகளும் இடம் பெறும். தமிழக நேயர்கள் அனைவரையும் கவரும் வகையில் இந்த டி.வி. இருக்கும் என்று ராஜ் டி.வி. யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த செய்தி சன் டிவியில் வருமா ?

இந்த செய்தியை படித்தால் முன்பு ராஜ் டிவிக்கு சன் டிவி எவ்வலவு தொல்லை கொடுத்தார்கள் என்பது புரியும். அதைவிட அரசியல் செல்வாக்கு டிவி விஷயத்தில் எப்படி விளையாடுகிறது என்று தெரியும். யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் அவ்வளவு தான். அதிகார துஷ்பிரயோகம் பற்றி யாராவது கேட்பார்களா ?

இனிமேல் BSNL விளம்பரம் எல்லாம் எந்த டிவிக்கு போகும் ?

7 Comments:

Anonymous said...

எதிர்பார்த்தேன் :)

http://sirippu.wordpress.com/2007/05/14/suntv/

IdlyVadai said...

உதயா டிவி என்று பெயர் இருக்கலாம் என்று தெரிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.

தகடூர் கோபி(Gopi) said...

உதயா என்று பெயர் வைத்தால் சன் குழுமத்தின் கன்னட சேனல் சண்டைக்கு வராதா? அதை விட நல்ல தமிழ் 'சூரியன்'. இல்லைன்னா தனித்தமிழ் பெயரா 'கதிர்'ன்னு வைக்கலாம்.

என்னாது எல்லாம் அவங்களுக்கு தெரியுமா? ஏதோ தோனுச்சு சொன்னேன்.

Anonymous said...

marans abuse of power ..the fatal consequences. have only led to sensational journalism.read this week's outlook.we can see how both the families have used power and terror to promote each other .
http://www.outlookindia.com/full.asp?fodname=20070528&fname=Cover+Story+%28F%29&sid=1&pn=3

IdlyVadai said...

அனானி நேற்றே படித்துவிட்டேன். அதில் Bull's Eye நன்றாக இருந்தது. முடிந்தால் இங்கே போடுகிறேன்.

Anonymous said...

அதில் Bull's Eye நன்றாக இருந்தது. /
idlyvadai you and the puri guy are lucky . mk and maran cannot locate you. puri is in north india. otherwise imagine your fate?
chutney vadai and masal puri?

IdlyVadai said...

ஜூன் 3 - கலைஞர் டிவி
ஜூலை 15 - அண்ணா டிவி