பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 10, 2007

மதுரை நிகழ்ச்சி பற்றி தலைவர்கள்

என்ன பெரிசா சொல்லிட போறாங்க எப்போதும் போல தான். கீழே இருக்கு நீங்களே படிச்சிக்கோங்க


டி.சுதர்சனம் (காங்.): மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலக தாக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்காக காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் கருத்துக்கணிப்பு என்று சொல்லி தேவையற்ற நேரத்தில் வெளியிட்டதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

யாராக இருந்தாலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைகளும் சிறப்பாக செயல்படும் அரசுக்கு நல்ல வழி காட்ட வேண்டுமேயொழிய அமைதி குலைய காரணமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத் துக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரித்து வழங்க வேண்டும்.

ஜி.கே.மணி (பாமக): மதுரை சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கக் கூடியது. இதற்கு பாமக சார்பில் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டில் ஊடகங்கள் நடத்துகிற கருத்துக்கணிப்புகள் சரியானதல்ல. அவரவர் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு 13 மத்திய அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். இந்த காலம் ஒரு பொற்காலம் ஆகும். மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மிக நன்றாக செயல்படுவதாக பிரதமர், சோனியாகாந்தி ஆகியோர் பாராட்டியுள்ளனர். இந்த நிலையில் தேவையற்ற கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு அதன் விளைவாக இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. இப்போது ஊடகங்கள் வன்முறையை தூண்டும் வகையிலும், ஆபாசத்தை திணிக்கும் வகையிலும், தீவிர வாதத்தை வளர்க்கும் வகையிலும், தமிழை கொலை செய்யும் வகையிலும் செய்திகளை வெளியிடுகின்றன.

பத்திரிகை சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க அவர்கள் தங்களுக்குள் கட்டுப் பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும். எனவே இந்த கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். பத்திரிகைகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், கண்டிக்கவும் வேண்டும்.

கோவிந்தசாமி (சிபிஎம்): முதலமைச்சரின் பொன் விழா நடைபெறும் வேளையில் தேவையில்லாத கருத்துக்கணிப்பை வெளியிட்டதன் மூலம் குழப்பம் ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக தினகரன் பத்திரிகை தாக்கப்பட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டு 3 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதை முதலமைச்சரும் வன்மையாக கண்டித்திருக்கிறார்.

ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிகைகளின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தால் பத்திரிகை யாளர்கள் பெரிதும் புண்பட்டு இருக்கிறார் கள். வன்முறையில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்துக்கு சவால் விடக்கூடிய இதுபோன்ற சம்பவங்கள் எதிர் காலத்தில் நிகழாத வண்ணம் காவல் துறையினர் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

சிவபுண்ணியம் (சிபிஐ): தேவையில்லாத கருத்துக்கணிப்பால் விரும்பத்தகாத சம்பவம் ஏற்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரம் என்ற கருத்து ஏற்புடையது என்றாலும் அதிர்ச்சி தரும் சம்பவத்திற்கு அது காரணமாகிவிட்டது. பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. உயிரிழப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏற்கனவே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

செல்வம் (வி.சிறுத்தைகள்): உயிரிழந்த 3 பேருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். முதலமைச்சரின் வாழ்க்கையில் இன்பத்தைவிட துன்பமும், துயரமும் சூழ்ந்தது தான் அதிகம். பொன் விழா சந்தர்ப்பத்தில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனையானது. தேவை யில்லாத இத்தகைய கருத்துக்கணிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும். எனவே இந்த சம்பவத்தில் அதுபோல நடந்துள்ளதா என்பதை பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் இந்த விஷயத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் உள்துறை பொறுப்பை ஏற்றிருக்கின்ற முதலமைச்சர் சட்டம்ஒழுங்கை காப்பாற்ற தவறிவிட்டார். காவல் துறையையும் அவர் கட்டுப்பாட்டுக் குள் வைத்துக்கொள்ளவில்லை. தன்னுடைய குடும்பத்தையும் அவர் கட்டுப்பாடாக வைக்க முடியவில்லை என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். எனவே சட்டம்ஒழுங்கை காப்பாற்றத் தவறிய திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

விஜயகாந்த்

ஐந்து முறை முதல்வராக வந்துள்ள கருணாநிதி தனது குடும்பபிரச்சனை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை போக்க தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறார். கண்ணகி மதுரையை எரித்ததை நாம் கண்டதில்லை. ஆனால் கருணாநிதி குடும்பதினர் கைவரிசையில் மதுரை தீப்பற்றி எரிவதை இன்று தமிழ் மக்கள் அனைவரும் கண்கூடாக கண்டுள்ளனர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கிருஷ்ணசாமி

மதுரையில் நடைபெற்ற சம்பவத் துக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டத்தின்படி கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார். தினகரன் அலுவலகத்தை வன் முறையாளர்கள் தாக்கியது கண்டனத் துக்குரியது என்றும் அவர் தமது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

வைகோ

கருணாநிதி நினைத்திருந்தால், இந்த கருத்துக்கணிப்பு வெளிவராமல் தடுத்திருக்கலாம். எல்லாம் அவர் விருப்பப்படிதான் நடந்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருக்கிறார். வன்முறை சம்பவத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு துணை போகும் காவல்துறை செயலிழந்து விட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வீரமணி

கருணாநிதியின் சட்டப்பேரவை பொன்விழாவுக்கு முன் இப்படி ஒரு விரும்பத்தகாத நிகழ்ச்சி ஏற்பட்டது மிகவும் வெட்கத்துக்கும், வேதனைக் கும் உரியது என்று திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணி குறிப்பிட்டிருக்கிறார்.

இத்தகைய தாக்குதல்கள் ஜனநாயகத்துக்கு விடப்பட்ட அச்சுறுத்தலா கும் என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட வர்கள் அதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் தடுக்கத் தவறிய காவல்துறையினர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.மோகன் ஒரு அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

5 Comments:

Anonymous said...

'ஐயோ கொல்றாங்களே'ன்னு டப்பிங் வாய்ஸ் கொடுத்த காலம் போய், டப்பிங்கே கொடுக்காம அந்த சவுண்டு விடுற நெலமை சன் டி.வி.க்கு வந்தது வருத்ததுக்குரிய விஷயம் தான்.

தினகரன் & சன் டி.வி.யை இன்னைக்கு பாருங்க.

அழகிரி மாபியா தலைவன் போல செயல்படுபவன் அப்படீன்னு சொல்லிருக்காங்க. அட, இப்போதானாடா தெரிஞ்சிச்சு உங்களுக்கு? நாய்களா (தி.குஞ்சுகள தான் சொல்றேன்) அடுத்தவன் செத்தப்ப வாயையும், _____-ஐயும் பொத்திகிட்டு இருந்தீங்க. இன்னைக்கு உங்க மேல பாஞ்ச உடனே ஓடி வரீங்களே? பாவம்டா அந்த 3 பேரு (செத்துப்போனவங்க),

அரவிந்தன் நீலகண்டன் said...

குடமுருட்டி குண்டு முதல் ஆகிவந்த திராவிடம்
ஐயையோ கொல்லுறாங்க அதுவும் கூட திராவிடம்
குடும்பத்தகராறுக்காக கொல்லும் வீர திராவிடம்
காவல் துறையும் கைகட்டி செய்யுமடா சேவகம்
குண்டுக்கட்டை திராவிடம் குடும்ப சொத்து திராவிடம்
பிடிக்காத செய்தி வந்தால் அடித்து கொல்லும் திராவிடம்
கொன்னதுக்கும் எரிச்சதுக்கும் கருத்து கணிப்பு காரணம்
என்று சொல்லி கொன்னவனின் அடிவருடும் திராவிடம்
முற்பகலில் தேசக்கொடியை எரிச்ச வீர திராவிடம்
பிற்பகலில் தினகரனை எரிச்சு கொல்லும் இன்ப திராவிடம்
...
பூரா மேட்டரையும் இஞ்ச வந்து படியுங்க சாமி
http://arvindneela.blogspot.com/2007/05/blog-post_10.html

ஜடாயு said...

இட்லிவடை, மதுரை வன்முறை மற்றும் பின்னணி பற்றிய அனைத்து செய்திகளையும் சுடச் சுட தந்து கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி.

தமிழ் இணையத்தில உள்ள திராவிட தம்பிகள் எல்லாம் எங்கே காணோம்? அப்படியே கரும்பாறை நிலைக்கு போயிட்டாங்க போல.

இதையும் பாருங்க -
தமிழ் நாட்டில் பற்றி எரியும் குடும்பச் சண்டை: http://jataayu.blogspot.com/2007/05/blog-post.html

ஹரன்பிரசன்னா said...

இல கணேசனின் அறிக்கையைக் காணோமே.. பா.ஜ.க. தமிழ்நாட்டில் இல்லாமலேயே போய்விட்டது என்பதை மறைமுகமாகச் சொல்கிறீர்களா? :)

IdlyVadai said...

ஹரன்பிரசன்ன இல.கணேஷன் ராமர் பாலத்தில் பிசியாக இருக்கிறார் :-)