பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 09, 2007

திமுக குடும்ப அரசியல்

தினகரன் இன்று கலைஞரின் வாரிசு யார் என்று வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் மறைமுகமான அர்சியல் நோக்கங்கள் இருப்பதாக தோன்றுகிறது. தி.மு.க. வின் குடும்ப அரசியல் இரண்டு அணிகளாக பிரிந்து வருகிறது. மாறன் குடும்பத்தினர் ஒரு அணியாகவும் ஸ்டாலின், கனிமொழி, மு.க.அழகிரி ஒரு அணியாகவும் உருவாகி வருகின்றனர். கருணாநிதிக்குப் பிறகு மாறன் குடும்பம் தனது ஊடக மற்றும் பண பலத்தால் கட்சியை கைபற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதாலேயே அதற்கு எதிராக கருணாநிதின் குடும்பத்தின் பல எதிர் துருவங்கள் இப்போது ஒன்றிணைந்து வருகின்றன. ஸ்டாலினும் கனிமொழியும் முதன் முதலாக ஒரே மேடையில் தோன்றியது இதற்கு ஒரு உதாரணம். சமீபத்தில் கனிமொழி முன்னிருத்தி இந்த புதிய கூட்டணி குடும்ப அரசியலில் மும்முரமாகி வருகிறது. இதனால் மாறனின் குடும்பம் கடுமையாக எரிச்சலடைந்துள்ளது. சென்னை சங்கமத்தை சன் குழும ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. (தேர்தல் சமயத்தில் ஸ்டாலினை இருட்டடிப்பு செய்தது ) இப்போது கலைஞரின் வாரிசாக கனிமொழிக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்ற அபிப்ராயத்தை உருவாக்கவே இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிட்டுள்ளது. இதில் மற்றவர்கள் என குறிப்பிடப்படுவது தயாநிதி மாறன்தான் என்பது என் எண்ணம். ஆனால் அதை வெளியிட்டால் உடனடியாக கருணாநிதி ஸ்டாலின் இரண்டு பேரின் எரிச்சலையும் சந்திக்க வேண்டும் என்பதால் மற்றவர்கள் என்ற நிழலில் மாறன் குடும்பம் பதுங்கியுள்ளது.

15 Comments:

Anonymous said...

ஐயகோ மு.க. முத்துவை விட்டு விட்டார்களே.

சாலமன் பாப்பையா

MeenaArun said...

they all are clear.Always M.K's policy is central for maran & co and state for stalin.he knows the capacity of both stalin and dhayanithi.this matrravargal is just to satisfy people like veerapandi ,anbazhagan etc.,.so idlyvadai u need not to worry about DMK's family politics .

Idlyvadi,why can't u say something about sasikala's (admk) politics or suthish(tmdk) politics

and one more thing ur article is written in a way that remembers me abt dinamalar.Imposing your opinion in a indirect way

MeenaArun

உடன்பிறப்பு said...

தினகரன் கூட மாறனால் தான் நடத்தப்படுகிறது என்று அறிவீர்களா அரை குறை அறிவை வைத்துக் கொண்டு சும்மா ஜல்லி அடிக்க வேண்டாம்

IdlyVadai said...

உடன்பிறப்பு கருத்துக்கு நன்றி. கலைஞர் குடும்பத்துக்கு நெருக்கமானவர் சொன்ன தகவல் இது. இதற்கு மேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.

உண்மைத்தமிழன் said...

ஏதோ தெரியாத நியூஸை சொல்லப் போகிறீர்களோ என்று நினைத்தேன். இதெல்லாம் முன்பே வெளிச்சத்திற்கு வந்துவிட்ட நியூஸ்தான் இட்லி.. டூ லேட்டு..

IdlyVadai said...

உண்மைத் தமிழன் நீங்க சொல்லுவது சரி.

Unknown said...

ம்ம்ம்.. திமுகவின் அடுத்தத் தலைமைக் குறித்த இந்த சர்வே பொதுமக்களிடம் எடுப்பதை விட திமுகவினரிடம் தினகரன் எடுத்து இருக்கலாம்... அது ஒரளவு பரப்ரப்பாக இருந்து இருக்கும்... இட்லி வடை நீங்களோ சர்வேசனோ அந்த சர்வே எடுக்கக் கூடாதா? :))

Anonymous said...

Madurai, May 9 (PTI): A group of persons claiming to be supporters of DMK leader M K Azhagiri today allegedly set fire to the office of Tamil daily 'Dinakaran' and indulged in protests resenting a survey published by the newspaper on the possible "political heir" of Chief Minister M Karunanidhi.

Survey on "Makkal Manasu" (What People Think), published in the daily today had given 70 per cent chances to M K Stalin, the second son of Karunanidhi and just 2 per cent to elder son Azhagiri, who controlled the party cadres in Southern districts.

Fire service personnel rushed to Dinakaran office near the High Court building here to douse the blaze, police said.

According to police, the supporters burnt copies of the daily at several places here and in Cumbum, Theni, Kamuthi, Bodinayakanur, Gudalur, Dindigul, Tirunelveli, Virudhunagar and Tuticorin in south Tamil Nadu.

Police said volunteers started gathering since early in the morning to burn bundles of the newspaper.

The supporters of Azhagiri also broke the glass panels of the newspaper office here and also damaged the machineries.

Police said they had received a complaint about the extensive damages caused to the office.

The survey was jointly conducted by Dinakaran and AC Nielsen.

http://www.hindu.com/thehindu/holnus/000200705091301.htm

Are you happy now :)

IdlyVadai said...

காலை இந்த செய்தியை ஜல்லி என்றார்கள். மத்தியானம் ஜல்லியை வைத்து அடிக்கிறார்கள்.

Anonymous said...

http://holyox.blogspot.com/2007/05/285.html


அன்றைக்கு கருணாநிதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தான் கேட்டுப் பெற்ற டாக்டர் பட்டத்தை ஒரு மாணவனின் பிணத்தின் மீது நின்று வாங்கினார். அன்று தகுதியில்லாத ஒரு கபோதிக்கு டாக்டர் பட்டமா என்று எதிர்த்த மாணவர்கள் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளாயினர். அதில் ஒருவன் கொல்லப் பட்டான், அந்த உதயகுமாரனின் பெற்றோர்களிடம் அது தன் மகனே இல்லையென்று எழுதி வாங்கினர் ஈவு இரக்கமில்லாத மிருகங்கள். கொஞ்சம் கூட வெட்கம் மானம் இன்றி பிணத்தின் மீது அன்று பட்டம் வாங்கிய கருணாநிதி, இன்று மீண்டும் வரலாற்றை அரங்கேற்றுகிறார்.

ஆம் இன்றும் இவருக்கு 50 ஆண்டு கொண்டாட்டங்கள் பிணத்தின் மீது நடக்கின்றன, ஒன்றல்ல இரண்டல்ல 4 பிணங்கள், பிணங்கள் ஏற்பாடு இவரது உத்தம புத்திரன். இந்த அயோக்கியர்கள் கோர வெறியாட்டம் என்று அடங்கும், இனியும் எத்தனை பிணங்கள் பலி கேட்க்கப் போகிறது இந்த அரக்கர் கூட்டம்?

தி மு க அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்யப் பட வேண்டும்

ரவுடிக் கும்பலுக்கும் கூட்டமாக மரண தண்டனை வழங்கப் பட வேண்டும்

சன் டி வி யை தடை செய்து அதன் சொத்து பொது மக்களுக்குப் பிரித்து வழங்கப் பட வேண்டும்

Anonymous said...

உடன்பிறப்பே உங்க முழு அறிவை வெச்சிக்கிட்டு என்ன செய்யறீங்க ? வந்து பதில் சொல்லுங்க.

இட்லிவடையாரே நீங்க நடத்துங்க நடத்துங்க..

Syam said...

//தினகரன் இன்று கலைஞரின் வாரிசு யார் என்று வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் மறைமுகமான அர்சியல் நோக்கங்கள் இருப்பதாக தோன்றுகிறது//

என்னங்க இது மறைமுகம்...இலைமறை காய் போலனு...கலைஞர் மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க...அது குடும்ப பிரச்சனை இல்லனா கட்சி பிரச்சனை...அதுக்காக அந்த அப்பாவிகள் உயிர்தான் கிடைச்சுதா...50 ஆண்டுகள் சாதனை இதுதானா....

Anonymous said...

I have never seen DMK's rowdism until when I happened to see last chennai municipal election.

My mother used to tell me, DMK
always run show with Gunda's support.

Last Municipal election depicted Chennai as "Mini Bihar".

When the verdict came about Chennai Municipal Election, MR. Veerasamy made very sarcastic comments about HC Judges......


Kalachakkaram

Anonymous said...

தினகரன் கொளுத்தப் பட வேண்டிய ஒரு பத்திரிகைதான், ஆனால் அப்பாவி ஊழியர்களை உயிரோடக் கொளுத்துவதைப் போலீஸ் கண்டு கொள்ளாமல் அனுமதித்த குற்றத்திற்காக கருணாநிதி உடனடியாக டிஸ்மிஸ் செய்யப் பட வேண்டும்,. இந்த குற்றதிற்காகவும் அவர் மேற்பார்வையில் இதற்கு முன் நடந்த கொலைகளுக்கும் சேர்த்து கரூணாநிதியும் தூக்கிலிடப் பட வேண்டும்

Anonymous said...

//அழகரே அழகிரியிடமிருந்தும் திராவிட குஞ்சுகளிடமிருந்தும் காப்பாற்றுங்கள் - இப்படிக்கு தமிழ் மக்கள் //

Super, Super, Super

Dravida Kunju (thadi thandavarayans) oruthanaiyum kanum paarunga.