பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 31, 2007

தி.மு.க-அ.தி.மு.க பொது எதிரி - விஜயகாந்த்

`தி.மு.க-அ.தி.மு.க.வினர் தே.மு.தி.க.வினரை பொது எதிரியாக கருதுகின்றனர்' என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார்.


விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேர்தல் என்றாலே போட்டி என்பது தான் அர்த்தம் ஆகும். போட்டி இல்லாமலே வெற்றி பெறுவது புகழ் சேர்க்காது. மேலும், அது ஊழலுக்கு வழிவகுக்கும் என்பது வரலாறு. அப்படியிருக்க பாராளுமன்றத்தின் மேல் சபையில் காலியாக உள்ள ஆறு இடங்களுக்கான தேர்தல் போட்டியில்லாமலே நடைபெற முதல்-அமைச்சர் கருணாநிதி மேற்கொண்டுள்ள நடவடிக்கை பல புதிர்களை கொண்டதாகும்.

ரகசியம் என்ன?

தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் சேர்ந்து 66 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு இடம் வெற்றி பெற 33.29 வாக்குகள் தேவை. இரண்டு இடங்கள் வெற்றி பெற 67 ஓட்டுக்கள் தேவை. ஆகவே, இன்னும் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு வேண்டும்.

அ.தி.மு.க. கூடுதலாக தேவைப்படுகின்ற ஒரு வாக்கை பெற தே.மு.தி.க. ஆதரவை பெற வேண்டும். இது தவிர அ.தி.மு.க.விற்கு வேறு வழியில்லை. இந்த நிலையில், தே.மு.தி.க. இது குறித்து முடிவு எடுப்பதற்குள்ளாகவே முதல்-அமைச்சர் கருணாநிதி முன்வந்து அ.தி.மு.க.வுக்கு இரண்டு சீட்டுகள் வெற்றி பெற வழி வகுப்பதின் ரகசியம் என்ன?

அ.தி.மு.க.விற்கு தே.மு.தி.க. ஆதரவு கொடுத்து விடக்கூடாது என்ற பயத்தாலா? அல்லது கருணாநிதி தனது ஓட்டை ஜெயலலிதாவிற்கு தந்து தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் பொது எதிரியாக தே.மு.தி.கவை ஆக்க வேண்டும் என்பதற்காகவா?

பொது எதிரி

அ.தி.மு.க. இரண்டு இடங்களில் வெற்றி பெறட்டும் என்று சொல்லி இருப்பதை ஜெயலலிதா இதுதான் நியாயமான தேர்தல், இப்படிதான் நடக்க வேண்டும். முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது என்று பாராட்டியுள்ளார். இதில் இருந்தே தி.மு.க-அ.தி.மு.க. கட்சிகளுக்கு பொது எதிரியாக தே.மு.தி.க.வை கருதுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த அரசியல் வாதிகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டு ஒரு புதிய அரசியலை தமிழ்நாட்டுக்கு தருவதே தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கடமையாகும்.

( நன்றி: தினத்தந்தி )

2 Comments:

முத்துகுமரன் said...

//இதில் இருந்தே தி.மு.க-அ.தி.மு.க. கட்சிகளுக்கு பொது எதிரியாக தே.மு.தி.க.வை கருதுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.//
இப்படியே போனார்னா கோட்டைக்கு போகமாட்டார். கீழ்ப்பாக்கத்திற்குதான் போவார். ஆழ்ந்த அனுதாபங்கள்.

G.Ragavan said...

// முத்துகுமரன் said...
//இதில் இருந்தே தி.மு.க-அ.தி.மு.க. கட்சிகளுக்கு பொது எதிரியாக தே.மு.தி.க.வை கருதுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.//
இப்படியே போனார்னா கோட்டைக்கு போகமாட்டார். கீழ்ப்பாக்கத்திற்குதான் போவார். ஆழ்ந்த அனுதாபங்கள். //

முத்துக்குமரன், விஜயகாந்திற்கு என்னுடைய ஆதரவு இல்லை என்பது தெளிவானாலும்....மற்ற அரசியல்கட்சிகளின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கையில் இன்னமும் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் விஜயகாந்த் ஒரு நெருடலாக இருப்பது போலவே தோன்றுகிறது. விஜயகாந்த் வருகின்ற தேர்தலில் முதல்வராவார் என்று நினைக்கவில்லை. ஆனால் ஒரு போட்டியாக அவரை இரண்டு கட்சிகளும் நினைக்கின்றனவோ என்று எனக்குத் தோன்றுகிறது. விஜயகாந்த் வந்து கிழிக்கப் போவது ஒன்றுமில்லை. இப்போதைய கிழிசல்களில் அவருக்கும் கொஞ்சம் பங்கு. அம்புட்டுத்தான்.

பிரதீப் தெரியும்தானே உங்களுக்கு. அவரிடம் அடிக்கடி சொல்வேன். "ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஐயம். ஒருவேளை கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில எதுவும் ரகசிய ஒப்பந்தம் இருக்குமோன்னு..."...ஏன்னா வரவர எந்த அரசியல்வாதியையும் நம்ப முடியலைங்க.