பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 18, 2007

உயிரின் விலை ? - குமுதம் தலையங்கம்

குமுதம் ' உயிரின் விலை ? 'என்று மதுரை சம்பவம் குறித்து தலையங்கம் எழுதியுள்ளது. அரசு பதில்களிலும் ஒரு பதில் வந்துள்ளது. இரண்டும் கீழே

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்? என்ற கருத்துக்கணிப்பு வெளிவந்ததும் ஏற்பட்ட விளைவு, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களை அதிர வைத்திருக்கிறது.

சம்பந்தப்பட்ட நாளிதழின் அலுவலகம் தாக்கப்பட்டு, தீயிடப்பட்டது. அதில் பரிதாபமாக மூன்று உயிர்கள் கருகி பலியாகியிருக்கின்றன.

தாக்குதலில் தொடர்புடையதாகச் சொல்லப்பட்ட பிரமுகரைக் கைது செய்யச் சொல்லி பாதிக்கப்பட்ட நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பத்திரிகையாளர் சங்கங்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தன. நாடு முழுக்க இந்தப் பிரச்னை எதிரொலித்தது. சிலர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளி வந்திருக்கின்றனர்.

பத்திரிகையாளராகத் தன்னை அடிக்கடி சொல்லிக் கொள்ளும் தமிழக முதல்வர், முதிர்ந்த அனுபவத்தின் விளைவாக உடனடி நடவடிக்கை எடுப்பார் என்று பலரும் காத்திருந்தபோது, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுகிறார். காவல் துறையைத் தன் கைவசம் வைத்திருக்கும் முதல்வர்.

கட்சியின் நிர்வாகக் குழு கூடி, கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதாக மத்திய அமைச்சர் தயாநிதிமாறனை பதவி விலக்கக் கோருகிறது. அவரும் ராஜினாமா செய்கிறார்.

அதெல்லாம் கட்சிக்குள் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள். ஆனால், தாக்கப்பட்டு மூன்று உயிர்கள் பலியானதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? அதிகாரம் பொருந்திய காவல்துறை சம்பவத்தன்று ஏன் ஸ்தம்பித்துப் போனது?

வழக்கம் போல் சென்ற ஆட்சியில் தர்மபுரியில் மூன்று மாணவிகளின் உயிர் பறிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் முதல்வர். அந்த வழக்குடன் தொடர்புடைய மூன்று பேர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் காதிருக்கிறார்கள்.

அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட போது எரிக்கப்பட்ட மாணவியின் தந்தை வலியுடன் சொன்ன வாக்கியம் இதுதான்...

‘’இப்போதாவது அவர்களுக்கு உயிரின் விலை தெரிந்திருக்கும்.’’

தற்போதைய தாக்குதலில் மூன்று உயிர்களை பலி வாங்கயவர்களுக்கு உயிரின் விலை எப்போது தெரியும்?மதுரை தினகரன் அலுவலகத்தில் நடந்த கொடூர தாக்குதல் பற்றி?

ஏராளமான கேள்விகளை மனதில் ஏற்படுத்திய சம்பவம். உண்மையில் மதுரையில் யாருடைய ஆட்சி நடக்கிறது? எந்தப் பதவியிலும் இல்லாத அழகிரிக்கு அவ்வளவு செல்வாக்கு எப்படி வந்தது? அந்த மாவட்டத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பதவியில் உள்ள அரசியல்வாதிகள் அத்தனை பேரும் அழகிரியின் உத்தரவின்படி நியமிக்கப்பட்டவர்களா? மேயரின் தலைமையில் ஒரு வெறி பிடித்த ரவுடிக் கூட்டம் பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்து வன்முறை ஆட்டம் போட்டு படுகொலைகளில் ஈடுபடும் போது, காவல் துறை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்ததை புகைப்படங்களும் வீடீயோக்களும் உறுதி செய்கின்றன. அப்படியென்றால் தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? ரவுடிகளின் ஆட்சியா? சம்பவம் நடந்த அன்று அப்பாவிகள் படுகொலை, அநியாயம், அக்கிரமம், பத்திரிகை சுதந்திரம் போச்சு, அழகிரி ஏவிவிட்ட ரவுடிகளின் கொடுஞ்செயல், இதைச் சும்மா விடப்போவதில்லை, ஆய், ஊய் என்றெல்லாம் கூப்பாடு போட்ட சன் டிவி அடுத்த நாளே வாயை மூடிக் கொண்டு மெளனமாகி விட்ட மாயம் என்ன? பட்டப்பகலில் பொதுச்சொத்தை சேதம் செய்து கொலை வெறியாட்டம் போட்ட கும்பலின் பின்புலம் அழகிரிதான் என்று அந்த டிவி செய்தி கூவிக் கூவி சுட்டிக்காட்டிய பிறகும் அவரை போலீஸ் விசாரித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? பத்திரிகை சுதந்திரத்துக்கும், ஜனநாயக அமைப்புக்கும் இவ்வளவு பயங்கரமான ஆபத்து தன்னுடைய மகனால் ஏற்பட்ட அடுத்த இரண்டாவது நாளே தன்னுடைய சட்டமன்ற பொன்விழா நிகழ்ச்சியை ஆடம்பரமாக நடத்த முதல்வருக்கு எப்படி மனம் வந்தது?
( நன்றி குமுதம் 23-5-2007 )

11 Comments:

இலவசக்கொத்தனார் said...

நான் வேணா வழக்கமா வர பின்னூட்டத்தைப் போடவா? :))

இலவசக்கொத்தனார் said...

தேர்தல் நேர வாக்குறுதி போல் இல்லாமல், தொண்டர்கள் வேண்டுகோளுக்கிணங்க பின்னூட்டப் பக்கத்தை பாப் அப் இல்லாமல் செய்த தலைவர் இட்லி வடையாருக்கு எடிஸன் வட்ட சார்ப்பாக இந்த நன்றி நவில்தல் விழா நடைபெறுகிறது.

Anonymous said...

hello kumuthama,,
enna summa irukka mudiyatha?? enna peiriya thalaiyangama podera?/ onakku thlai venuma elle venama, annanapatta annatha vikatan thalaiyangam entha varam podama kuthikunu irukumpothu enna thullure?/
onakkau enna venum ,, nethi venum , odane kpn busla poraputtu, kpn lasta nikumbule , anka va.
anka vanthu, anne ( anne enral aana )kadai enka irukku, nanka kumutham la iruthu varom sollu.

appurum onakku raja mariyathai thanti, va va seekaram va , kumutha me . onneye kumma kumma kathirokom.

Anonymous said...

பாப் அப் எடுத்ததுக்கு நானும் கொத்ஸுடன் நன்றி கூறிக்கொள்கிறேன்.

Anonymous said...

குமுதம் ஒரு பார்பன பத்திரிகை....அல்லது பார்பன அடிவருடி....இப்படியெல்லாம் பின்னூட்டம் வரும்....வேற என்ன பெரிசா சொல்லப்போகிறார்கள் உடன் பிறப்புக்களும், பின்நவின மேதாவிகளும், நடுக்கண் நாயகர்களும்.

கரட்டாண்டி said...

அண்ணே.. வருங்கால முதல்வர பத்தி யாருப்பா தப்பு தப்பா..Blog போடுரது? கலைஞர் ஆட்சியில் over nightல எதுவும் நடக்கும்! That's Kalangar.

Anonymous said...

at any point karunanithi won't take any action.
yappa Th.Ki. murder(oru nanbar than kalaka kanmani.)athuga onnum ponnala?
ithu yaro 3 person.

but people take action soon

Anonymous said...

fihers returned yaruppa kadadhunadhu?

Anonymous said...

see now no media goes into that news...Kalaingar is gr8...he turned media attention to dayanidhi...Its our fate...to hav such politicians and the stupid medias...which run only for hot news...
both are not for people...

Geetha Sambasivam said...

padichchen. ennaththais solRathu?

Anonymous said...

கேள்வி : எப்படி 3 பேர் இறந்தார்கள்?
பதில் : தீ பிடித்தப்போது வெளியே வராமல் திமி்ரில் புகைபிடித்து நின்று கொண்டு, மூச்சு திணறி பரிதாபமாய் செத்துப் போனார்கள்.

கேள்வி : தீ பிடிக்கக் காரணம்?
பதில் : வேறென்ன கட்டிடமும், அதில் இருந்த பொருட்களும் தான் சின்னத் தீயை பெரிதாக்கி விட்டது. கட்டிடம் கட்டியவரும் புகை வெளியே போகுமாறு அமைப்புடன் கட்டவில்லை. இதுதான் காரணம். கட்டிட மேஸ்திரியை சிபிஐ கைது செய்யும் என்று நம்புகிறேன்.

கேள்வி : இந்த சம்பவத்துக்கு நீங்கள் பொறுப்பேற்று கொள்வீர்களா?
பதில் : வா.. நீயும் நானும் போய் புகையில் போய் நிற்கலாம்.. வர்றியா???

ஜூட்.....