பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 11, 2007

மதுரை நிகழ்ச்சி பற்றி பத்திரிக்கைகள்

மதுரை நிகழ்ச்சி பற்றி பல்வேறு பத்திரிக்கைகளில் வந்த தலையங்கம், மற்றும் கட்டுரைகள்.

(தட்ஸ் தமிழ்)
முதல்வர் கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசு யார் என்பது திமுகவினரால், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட நிலையில், அதுபோன்ற ஒரு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது அவசியமா என்ற கேள்வியை பல்வேறு கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் எழுப்பியுள்ளனர்.

முதல்வர் கருணாநிதிக்குப் பின்னர் அவரது அடுத்த வாரிசு யார் என்ற கேள்வியைக் கேட்பதே முதலில் சிறுபிள்ளைத்தனமான ஒரு விஷயமாக திமுகவினரால் கருதப்படுகிறது.

காரணம், ஸ்டாலின்தான் கருணாநிதியின் வாரிசு என்பது திமுகவினரால் ஏற்கனவே ஏற்கப்பட்டு விட்ட நிலையில் (சிலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த வந்தபோதிலும் கூட), மு.க.அழகிரியும் அதை ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், அந்தக் கேள்வியை கேட்டு ஏன் ஒரு கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும் என்ற கேள்விதான் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மாநிலத்தில் கருணாநிதி, மத்தியில் முரசொலி மாறன் என்பது நீண்ட காலமாக திமுகவில் நிலவி வந்த ஒரு வழக்கம். அதேபோல மாநிலத்தில் கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின், மத்தியில், முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் என்பது கருணாநிதி எடுத்த முக்கிய முடிவு.

இந்த முடிவை திமுகவினரில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் தயாநிதி மாறனை தூக்கி விடுவதை மு.க.அழகிரி ஆரம்பத்திலேயே கடுமையாக எதிர்த்தார்.

குறிப்பாக தயாநிதி மாறனுக்கு 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுத்தபோது அதை எதிர்த்து வெளிப்படையாகவே கருணாநிதியிடம் கருத்து தெரிவித்தாராம் அழகிரி. இருப்பினும் அவரை சமாதானப்படுத்தினார் கருணாநிதி.

அதேபோல ஸ்டாலினுக்கும் அவருக்கும் நீண்ட காலமாக புகைச்சல் இருந்து வந்தது. இதன் காரணமாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் (தூத்துக்குடி நீங்கலாக) ஸ்டாலினால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.

மேலும் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கே அதிக ஆதரவு கொடுத்ததாலும், தனது ஆட்களை கட்சி மேலிடம் புறக்கணித்ததாலும் அதிருப்தி அடைந்த அழகிரி, 2001 சட்டசபைத் தேர்தலில் தனது ஆதரவாளர்களை சுயேச்சையாக நிறுத்தி திமுக வேட்பாளர்களுக்குப் பெரும் சிக்கலைக் கொடுத்தார்.

இதையடுத்து அழகிரியுடன், ஸ்டாலின் சமரசத்திற்கு வந்தார். இருவரும் சந்தித்துப் பேசி இணைந்து செயல்படவும் முடிவு செய்தனர். அத்தோடு பிரச்சினை முடிந்ததாகத்தான் திமுகவினரும், கருணாநிதியும் நினைத்தனர்.

ஆனால் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உருவில் புதிய பிரச்சினை வந்தபோது மீண்டும் ஒரு தலைவலியை திமுக சந்தித்தது. அழகிரியை மாறன் சகோதரர்கள் முற்றிலும் ஒதுக்க ஆரம்பித்தனர். இது அழகிரிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

மாறன் சகோதரர்களின் வளர்ச்சி அழகிரியை மட்டும் பாதிக்கவில்லை. ஸ்டாலின், ஏன், கருணாநிதியையும் கூட அது சற்றே உரசிப் பார்த்தது. நான் சொல்வதை சன் டிவி கேட்பதில்லை என்று கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் கருணாநிதியே சொல்லும் அளவுக்கு நிலைமை போனது.

அதேபோலத்தான் ஸ்டாலினையும் ஒரு தூரத்தில் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தது சன் குழுமம். இப்படி கருணாநிதி குடும்பத்திற்கும், சன் டிவிக்கும் இடையிலான தூரம் அதிகரித்து வந்த நிலையில் இப்போது மதுரையில் அது பெரும் குண்டாக வெடித்து கட்சிக்கும், கருணாநிதிக்கும் பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது.

குடும்பமா, கட்சியா என்ற பெரும் குழப்பத்தில் கருணாநிதியை தள்ளி விட்டிருக்கிறது மதுரை வன்முறை. உண்மையில், சன் குழுமத்தால் கருணாநிதிக்கு பெரும் தர்மசங்கடம்தான்.

கர்நாடகத்தில் உதயா, கேரளாவில் சூர்யா, ஆந்திராவில் ஜெமினி என சன் குழுமத்தின் சானல்கள் வியாபித்து பெரும் சாம்ராஜ்யமாக மாறி நங்கூரமிட்டு நிற்கின்றன. இங்கெல்லாம் சானல்களை நிர்வகிப்பது கருணாநிதி குடும்பத்தினர்தான்.

எனவேதான் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என எதிலுமே உறுதியான, சம்பந்தப்பட்ட மாநிலங்ளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையில் ஈடுபட முடியாமல், கருணாநிதி தயங்குகிறார், தடுமாறுகிறார், தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளார். இதே புகாரைத்தான் ஜெயலலிதாவும் சமீப காலமாக மிகக் கடுமையாக கூறி வருகிறார். இதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.

கருணாநிதி சில முக்கிய முடிவுகளை, உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டம் வந்துள்ளது. அவர் இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாளப் போகிறார், என்ன முடிவு எடுக்கப் போகிறார், எப்படி இதை அணுகப் போகிறார் என்பதை திமுகவினர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளது.


தினமணி

முரசொலி மாறனின் மகன்களுடனும் தனது குடும்பத்தினருடனும் மு.க. அழகிரிக்கு இருந்துவந்த மறைமுக மோதல், மதுரையில் வன்முறையாக புதன்கிழமை வெளிப்பட்டது.

முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க. அழகிரி மதுரையில் வசிக்கிறார். அவர் தனது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடனும் முரசொலி மாறனின் மகன்களுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.

தினகரனில் வெளியான ஒரு கருத்துக்கணிப்பைத் தொடர்ந்து, இந்த மோதல் மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலில் வெடித்துள்ளது.

தனது இளைய சகோதரர் மு.க. ஸ்டாலினுக்குக் கட்சியில் உள்ள செல்வாக்கை ஏற்றுக்கொண்டவர் மு.க. அழகிரி என்பது அரசியல் வட்டாரங்களில் தெரிந்த விஷயம். எனினும், தயாநிதி மாறனை 2004 மக்களவைத் தேர்தலில் நிறுத்தி வெற்றிபெறச் செய்து அவரை மத்திய அமைச்சராக்கியதில் அவருக்கு உடன்பாடில்லை.

ஒருகட்டத்தில் தயாநிதி மாறனுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதற்கு மு.க. ஸ்டாலின்கூட எதிர்ப்பு தெரிவித்தார். தந்தையுடனும் இதனால் அவர் கருத்து மாறுபாடு கொண்டார். தி.மு.க.வில் தயாநிதி மாறன் மற்றொரு அதிகார சக்தியாக வளர்ந்து வருவதாகவும் பேச்சு எழுந்தது. எனினும் குடும்பத்தில் மூத்தவர்கள் தலையிட்டு சுமுக சூழ்நிலையை ஏற்படுத்தினர்.

திமுகவில் கருணாநிதியின் இடத்துக்கு ஸ்டாலின் வரவும், தில்லியில் ஆட்சி அதிகாரத்தில் தயாநிதி மாறன் இருக்கவும் குடும்பத்தில் முடிவு செய்யப்பட்டுவிட்டது. எனினும் அழகிரிக்கும் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனுக்கும் இடையிலான பிரச்சினை தீரவில்லை.

தனது தகுதிக்கும் மேலாக மு.க. அழகிரி, தென் மாவட்டங்களில் திமுகவில் தனது ஆதிக்கத்தை வளர்க்கிறார் என்ற எண்ணமும் இப்பிரச்சினைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த பிரச்சினை வெளிப்பட்டது. அவரது முரண்பட்ட நடவடிக்கைகளால், அதிருப்தி அடைந்த கட்சித் தலைமை, 2001 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, அழகிரியுடன் திமுகவினர் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று அறிவித்தது.

அந்தத் தேர்தலில் திமுக அறிவித்த வேட்பாளர்களுக்குப் போட்டியாக, தனது ஆதரவாளர்களைப் போட்டியிடச் செய்தார் அழகிரி. இதனால் பல இடங்களில் தி.மு.க. தோற்றது.

கலாநிதி மாறனுக்குச் சொந்தமான தினகரன் பத்திரிகை அலுவலகத்தை மதுரையில் தீவைத்துக் கொளுத்தியதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது.

ஸ்டாலின்தான் தி.மு.க.வின் அடுத்த தலைவர் என்று கட்சியினரால் ஏற்கப்பட்ட பிறகு, தற்போது அடுத்த வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அழகிரியை மட்டம் தட்டுவதற்காகவே இந்த கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

மதுரையில் தனது மகன் அழகிரிக்கு எதிராகக் கருணாநிதி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

The Hindu

Murderous attack on media freedom

The arson, looting, and murder by hooligans owing allegiance to M.K. Azhagiri, son of Chief Minister M. Karunanidhi, at the Madurai office of Kalanithi Maran's Sun TV and Tamil daily Dinakaran raises serious questions about law and order — and freedom of the press in Tamil Nadu. The police watched in silence as the thugs ransacked the offices, threw petrol bombs, and beat up the hapless employees. The provocation for the attack was the publication of the findings of a survey in Dinakaran that asked the question, `Who should be Kalaignar [Karunanidhi's] political heir?' Mr. Azhagiri, the survey found, scored six per cent in Madurai, the city he regards as his bastion; two per cent Statewide; and a humiliating zero per cent in Chennai. M.K. Stalin, younger brother and political rival of Mr. Azhagiri, notched up 70 per cent across the State; 68 per cent in Chennai; and a whopping 67 per cent in Madurai. An unnamed category, "Others," was shown as scoring 20 per cent Statewide and 31 per cent in Chennai.

With Mr. Azhagiri operating as an extra-constitutional authority in Madurai district ever since the Dravida Munnetra Kazhagam government came to power last year, the police were reluctant to act against the goons — who were led by known members of the Azhagiri faction. Shockingly, top police officers chose to wait for "political clearance" from the Chief Minister's Office before deciding to stop the attackers. By the time a shocked Mr. Karunanidhi gave the go-ahead to the police, the situation had spiralled out of control, leaving two employees and a security guard of the media group dead. In its news bulletins, Sun TV directly accused Mr. Azhagiri of unleashing his goons against the group's office in Madurai. Chief Minister Karunanidhi, who has a well-deserved reputation for being a decisive administrator, must not vacillate on what needs to be done at this critical juncture. Setting aside personal considerations and subjective feelings, he must ensure that the law takes its course. This means investigating the role of Mr. Azhagiri and his closest henchmen in the violence that resulted in arson and murder. It might be tempting for the party to blame the incidents on lower-level party workers or anti-social elements, but that will weaken the people's confidence in both the police and the government. Mr. Azhagiri, who is involved in one murder case, has a truly unsavoury track record: in 2000, when Mr. Karunanidhi disowned him politically, he instigated violence and forced a compromise within the family.

The attacks on Sun TV-Dinakaran expose the vulnerability of the media in Tamil Nadu. Political leaders in power are intolerant, sometimes viciously so, of criticism and opposition. Quite apart from governments using defamation cases and breach of privilege motions in the Assembly as a weapon against the press and the withholding of government advertisements as a way of expressing displeasure, elements within ruling parties regard resort to intimidation, threats, and even muscle power against the media as a perquisite of office. In Wednesday's tragic drama, Dinakaran was murderously attacked for publishing the findings of an opinion poll. Irrespective of the credibility and merits of the poll, which did appear bizarre and politically inspired in the questions it asked, nothing can remotely justify the manner in which Mr. Azhagiri and his supporters reacted — and what appears prima facie to be criminal negligence, if not worse, by the police. Everyone interested in democracy and the rule of law must take up the attack on Sun TV-Dinakaran as an issue of media freedom — and not regard it as a family feud, as some media commentators and partisan political voices have suggested. If the goons and their political masters in Madurai are allowed to get away with arson and murder, it might embolden others to target the media in future.

Chief Minister Karunanidhi — who has made no secret of the fact that he has been shaken by this ugly episode — has condemned the attack as well as the publication of the opinion poll, barred all talk of his political heir, and asserted that his party is a democratic organisation that has no place for such talk. Now he urgently needs to make an example of his delinquent son if his government's stock is not to weaken. Tamil Nadu, a State which has a reputation for efficient administration and a development orientation virtually independent of who is in power, needs urgently to be rid of all extra-constitutional sources of authority and all improper interventions in the administration and the rule of law. Once again the State police have betrayed their inability to act in accordance with the law against the politically influential and domineering. Chief Minister Karunanidhi will do well to opt for a CBI investigation into the Madurai episode in the interest of the credibility of his administration. He must not allow this tragedy to mar or affect the marking of a significant democratic milestone — half a century as a legislator.

Deccan Chronicle
FIrst family, second choice - R. Bhagwan Singh


Chennai: In the long drawn feuding in the ruling DMK’s first family, Wednesday’s hooliganism in Madurai that killed three newspaper employees and set the media house ablaze has come as an ugly climax. Armed mobs owing allegiance to chief minister M. Karunanidhi’s elder son M.K. Azhagiri running a fiefdom in the southern districts, ransacked the office of the Tamil daily Dinakaran owned by the family of Kalanidhi Maran, the grandnephew of the DMK patriarch. Two computer engineers and a security guard perished in the smoke after the mob ignited the building with petrol bombs, as the police stood watching.

What provoked Azhagiri’s fury was an opinion poll printed in the morning’s edition of Dinakaran giving him a mere two per cent votes — the same as poet sister Kanimozhi’s — in the choice for Karunanidhi’s political mantle. The poll gave younger brother Stalin the big lead with 70 per cent but kept 20 per cent locked in a mysterious “others” slot without explaining who constituted it. It did not take much effort for anyone to conclude that it meant Dayanidhi Maran, younger brother of Kalanidhi Maran and Union IT and communications minister.

Until a few months ago, there was a bitter battle between Azhagiri and Stalin, until the former conceded the successor’s crown to the younger brother and settled down in Madurai to run his fiefdom in the southern districts. The brothers’ feud had even cost the party dearly in the 2001 state elections, when rebels put up by Azhagiri derailed a few “official” candidates down south.

But after they buried the hatchet and drew their lines of control in the party and the government — Stalin is the powerful local administration minister and is well settled as papa’s successor to leadership, while Azhagiri is the extra-constitutional authority calling the shots and even allegedly interfering in administration in the south — the two brothers discovered a new problem in the family.

After the death of his nephew and “conscience-keeper” Murasoli Maran, Karunanidhi accepted the services of grandnephew Dayanidhi to represent him in Delhi politics and gave him the prestigious Central Chennai constituency represented by senior Maran, in the 2004 Parliament poll. Not just that, he had him appointed as the communications and IT minister ignoring some criticism that there was a clear conflict of interest since the Marans ran a huge television channel network in the south. Those were the days that the media, almost every day, had pictures of Dayanidhi lending supporting hand to help grandpa Karunanidhi manage most of his public engagements. And more important, he emerged as the DMK’s sole representative in the court of Ms Sonia Gandhi.

Party insiders say that it did not take long for Stalin to realise that his nephew’s political ambitions could create problems for himself. It is said that he was unhappy with some statements attributed to Dayanidhi that gave the impression that the young man considered himself as brighter than all in the DMK. There were huge international deals taking place and MNCs were being brought to Tamil Nadu, thanks to Dayanidhi’s initiative and he was rubbing shoulders with the likes of Bill Gates, smiling big into media cameras.

The murmur began in the Anna Arivalayam, the DMK headquarters in Chennai, whether Daya was eyeing Stalin’s post, post-Karunanidhi. Soon, say party insiders, relations began to strain between the uncle and nephew and it appeared that they were not even on normal talking terms. At this stage, Stalin and Azhagiri agreed to allow step-sister Kanimozhi, till then engaged merely in art and culture activities, to enter politics, so that she could be sent to the Rajya Sabha when the biennial polls are held in a couple of months, and be prepared as a check against Dayanidhi’s huge clout in the UPA government and the Sonia Gandhi establishment.

“In the months after the 2004 Lok Sabha elections, when we (DMK) delivered the entire kitty of 40 seats (including one in Puducherry) and Sonia Gandhi was very grateful to Kalaignar for that, Dayanidhi got pretty close to the Congress leadership by claiming to be his grandfather’s eyes and ears in Delhi. Initially, we thought he had pushed aside the senior DMK ministers in UPA, T.R. Balu and A. Raja, to occupy the centrestage in Delhi, but now we are shocked that the Marans are aiming at controlling the DMK itself, post Kalaignar,” said a DMK senior, reflecting the present party mood.

Sources close to Dayanidhi, however, denied he was nursing chief ministerial ambitions.
“Just as his late father Murasoli Maran had represented Karunanidhi and the DMK in Delhi, Dayanidhi wished to be the party’s man in the capital, nothing more and certainly not challenge Stalin’s succession,” said an aide. However, the Karunanidhi family is unwilling to believe that after the Dinakaran poll and the aftermath.

“The whole family is very much grieved by this entire episode. We condemn the violence in Madurai but then who inspired it all, really? Where was the need for this opinion poll and that too after father spoke clearly against these inspired surveys?” fumed Ms Kanimozhi. “Besides, why drag me and annan (elder brother) Azhagiri into this so-called survey when we are not even directly involved in politics? And why talk about father’s successor when he is hale and healthy, has conducted the Assembly proceedings so efficiently and has still several years to go? Father had warned them (Marans) not to print these poll surveys and yet, they went ahead knowing fully well it would cause hurt and anger,” she told this newspaper.

M. Karunanidhi himself said much the same thing in the Assembly on Thursday, when he even sought a CBI probe into the Madurai violence even as the Marans and their Sun TV stepped up the demand for the arrest of his son Azhagiri, accusing him of inspiring the murderous attack on their Dinakaran office. Blaming the paper poll squarely for the unsavoury incidents, he said he had warned the Marans against bringing out the survey findings, which seemed inspired and even dubious, but they went ahead to print them.

The question that is now troubling several senior DMK heads is why the Marans chose to ruffle so many feathers within the party and among the allies — remember the May 7 survey that said Dayanidhi was voted the best (64 per cent) among the Union ministers from Tamil Nadu, with ally PMK’s Dr Anbumani Ramadoss doing pretty bad as health minister scoring a mere one per cent votes? — particularly when they must have known that it would infuriate Azhagiri, who is notorious for his foul temper.

“The publication of this very provocative opinion poll, to me, is clearly directed as much against Karunanidhi as it is against Azhagiri. This seems as a direct challenge to Karunanidhi that we can go this far and even further because we have the money, the media and of course, the clout with the Congress high command,” said Cho S. Ramaswamy, political analyst and editor of Tughlak.

And that’s what Azhagiri said on Wednesday morning in Madurai, before his men went on the rampage. People with money seemed to feel they could get away saying anything, he said, reacting to the Dinakaran poll. “How could they (Maran) do this from within the family and after gaining so much from their grandfather (Karunanidhi)? It was Kalaignar who had helped with the initial investment when they launched Sun TV, when he raised a loan on his house,” said a DMK senior.

On day two after the Madurai mayhem, tempers have hardly cooled down in the DMK’s first family. Sun TV in its news bulletins continued to scream for the arrest of Azhagiri and his “rowdies,” while Karunanidhi speaking in the Assembly revealed that the Marans printed the provocative poll despite his request to dump it.

With the two camps thus openly belligerent against each other, it remains to be seen how Dayanidhi’s future shapes up in the UPA Cabinet. “The Congress is being nice to him only to please Karunanidhi and the moment Sonia realises he has become persona non grata with his grandfather, he could be dumped in Delhi,” said Cho.

Already some party members have begun chanting “Sack Dayanidhi” slogans and unless the Dravidian stalwart draws from his famous reservoir of shrewd strategies to come up with some healing potion, the fracture in the family could end up as permanent and hurting. The DMK then might have to face one more hostile TV channel in Sun, apart from Jayalalithaa’s Jaya TV.

Indian Express
DRAVIDIAN DYNASTY

Contenders for Muthuvel Karunanidhi's political legacy

M K Stalin, 55

Who: Karunanidhi's second son. Groomed to take over from father. Ex-Chennai mayor, now Minister. Strongest contender for leadership.

Clout: Top party posts and key Cabinet portfolios packed with Stalin's men. After father, has majority support of party cadres.

M K Azhagiri, 57

Who: Karunanidhi's eldest son. Has never held a party post.

Clout: Rules Madurai and southern districts like his fiefdom. Karunanidhi has been very clear that his elder son would take care of party affairs in the south, but would not hold any post. This is only to ensure a smooth succession for Stalin.

Dayanidhi Maran, 39

Who: Karunanidhi's grand nephew, and Union Telecom Minister. Son of former Union Minister Murasoli Maran

Clout: Karunanidhi hoped Dayanidhi would lobby for DMK in Delhi. Has little by way of party base.

Kanimozhi, 39

Who: Karunanidhi's daughter by his 'second wife' Rajathi Ammal, the poet. Anointed by her father as his 'cultural heir'.

Clout: While the MK brothers, Stalin and Azhagiri, are keen to see Kanimozhi take on a more substantial role in Delhi, she has kept away from political limelight so far.

5 Comments:

Anonymous said...

தினமலர் செய்தியையும் போடு இட்லிவடை.. "தமிழகத்தில் நாய் தொல்லை" :-p

Anonymous said...

In future, put cho Thuglak articles regarding this.

PKS said...

I read somewhere that Cho has said that its not an attack on Press Freedom. He added that Sun TV group used to get to Azhagiri using Dinakaran and he got to them using his supporters. But, I see The Hindu calling it as an attack on Media Freedom. Did not surprise me. You know why!!!!

Thanks and regards, PK Sivakumar

Anonymous said...

Dinakaran Sales is up after the incident. They hope the incident has given enough publicity and the losses due the incident will be compensated soon.

Sun news is now watched by even opposition supporters also and has gained mileage due to the sensational killings in Dinamalar office.

News media is getting the most attention this summer. What are other news papers doing? Hope they have not moved out of CM's house to get some begger news oops... bigger news.

Anonymous said...

இந்து பத்திரிகை தன் மாப்பிள்ளைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது, இருந்தாலும் அதன் தலையங்கத்தில் உண்மை இருக்கிறது, சும்ம சும்மா ஏன் கருத்துக் கணிப்பு போட்டார்கள் என்பதில் அர்த்தமேயில்லை அதை விட பயங்கர அயோக்கியத்தங்களை சன் டி வி குழுமம் செய்திருக்கிறது, இங்கே கடுமையாகக் கண்டிக்கப் பட வேண்டியது போலீசின் ஆதரவில் முதல்வரின் ஆசியில் அவர் மகன் நடத்திய அராஜகம் ரவுடித்தனம் அதுதான் முக்கியமாக இங்கே கண்டிக்கப் பட வேண்டிய விஷயம் அதை மறைத்து விட்டு கொலை நடந்தததைப் பற்றி எல்லோரும் மறந்து விட்டு ஏன் கருத்துக் கணிப்பு நடத்தினார்கள் அதனால் பதிலுக்கு கொன்றது எரித்தது நியாயம் தான் என்று பேசுவது க்டைந்தெடுத்த அயோக்கியத்தனம் தின மணி போன்ற பத்திரிகைகளுக்குக் கூட இதைக் கண்டிக்க துப்பில்லை. தினகரன் பத்திரிகை தவறு செய்தால் கேஸ் போடு, அதை விட்டு விட்டு அப்பாவிகளைக் கொல்வது அதுவும் ஒரு முதல்வரின் மகனே அவருடைய ஆசியுடன் போலீஸ் பாதுகாப்புடன் கொல்வது பயங்கரமான காலித்தனம் அதை அனைவரும் சேர்ந்து கண்டிக்க வேண்டியதுடன் இந்த அராஜகத்தைச் சேர்ந்த கருனாநிதியையும் அவனது ரவுடி மகன்களையும் தூக்கில் போட வேண்டும்