பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 28, 2007

கலைஞர் டிவியில் சிவாஜி படம்!

இன்று வந்த தினமணி செய்தி.கலைஞர் டிவிக்கு "சிவாஜி' பட உரிமை வழங்கபட்டுள்ளதாக பேச்சு. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. விசாரித்துவிட்டு சொல்கிறேன்.

புதிதாக தொடங்கப்பட உள்ள "கலைஞர் டிவி'க்கு, ரஜினி நடித்து வெளிவர உள்ள "சிவாஜி' படத்தின் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

"கலைஞர் டிவி'யை நோக்கி ரசிகர்களை இழுக்கும் வகையில், "டிவி'யின் தொடக்க நாளிலேயே "சிவாஜி' படத்தை திரையிட முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

ரஜினி நடித்து ஜூன் 15-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள "சிவாஜி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், அந்த படத்தின் பிரம்மாண்டமும், ரஜினியின் விதவிதமான போஸ்டர்களும் தான். "சிவாஜி'யின் இசை வெளியீடு "எப்எம்' ரேடியோக்களில் வெகுவாக தூக்கி பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ரேடியோக்களில் ஓயாமல் "சிவாஜி' ஒலித்து வருகிறார்.

பாடல்களே வித்தியாசம்: ரஜினி இதுவரை நடித்த படங்களின் பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் இடம் பெற்றது கிடையாது.

அதேசமயம், ரஜினி படத்தில் வேகமாக இரண்டு பாடல்கள் மற்றும் 3 காதல் பாடல்கள் இருக்கும். ஆனால், "சிவாஜி'யில் வித்தியாசமான பாடல்களுக்கு மெட்டு அமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும் பல இடங்களில், ரஜினி இளமையாகத் தோற்றம் அளிக்கிறார்.

ஸ்டில்களில் மாறுபட்டவராகத் தோற்றமளிக்கும் ரஜினியை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் காத்திருக்கின்றனர்.

ஜூன் 15-ம் தேதி சிவாஜி படம் ரிலீஸ் ஆகிறது என்று தயாரிப்புத் தரப்பு கூறி உள்ளது.

600-க்கும் மேற்பட்ட பிரிண்ட்கள்:"சிவாஜி' படத்தை தமிழகம் முழுவதும் திரையிட வசதியாக 600-க்கும் மேற்பட்ட பிரிண்ட்கள் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சென்னை உள்பட முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் "சிவாஜி' திரையிடப்படும் எனக் கூறப்படுகிறது. "சிவாஜி' யின் வருகையால் பல முன்னணி இளம் கதாநாயகர்கள் நடித்துள்ள படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுள்ளனர்.

"கலைஞர் டிவி'க்கு உரிமை: புதுப்படங்களை "டிவி'யில் ஒளிபரப்ப உரிமை வழங்கப்படுவது உண்டு. நட்சத்திரங்களின் மதிப்பைப் பொறுத்து டிவி உரிமைக்கான தொகை பேசப்படும். வழக்கமாக, புதுப்படங்களின் "டிவி' உரிமையைப் பெறுவதில் "சன் டிவி' எப்போதுமே முந்தி நிற்கும்.

தயாநிதி மாறனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திமுக-ராஜ் டிவி கூட்டணி இணைந்து "கலைஞர் டிவி'யை தொடங்க உள்ளனர். ஜூன் 3-ம் தேதி "டிவி'க்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், ஆகஸ்ட் 15-ம் தேதி "டிவி' தொடங்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

"கலைஞர் டிவி' நிகழ்ச்சி தயாரிப்புக்கான வேலைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் புதுப்படங்களின் உரிமைகளை வாங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, "சிவாஜி' படத்தின் உரிமை "கலைஞர் டிவி'க்கு அளிக்கப்பட்டுள்ளது.

"டிவி' தொடக்க நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி, "சிவாஜி' படம் "கலைஞர் டிவி'யில் ஒளிபரப்பாகும் எனக் கூறப்படுகிறது.

10 Comments:

Anonymous said...

முதலில் தினமணி இந்த செய்தியை வெளியிட்டதெ ஆச்சர்யம்தான். பரபரப்புக்க்காக தினமணி எதுவும் செய்யாது என்பதனால் பேரம் நடப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்த நிகழ்வு நடக்க வாய்ப்புகள் குறைவே என்று கருதுகிறேன்.

Anonymous said...

AVM Saravanan denied the statement even though the rights have been given to Kalaignar Tv, it is not decided to telecast on Aug 15th...

http://www.indiaglitz.com/channels/tamil/article/31396.html

IdlyVadai said...

vivek தவறுதலாக அந்த பின்னூட்டதை பிரசுரம் செய்துவிட்டேன். பிறகு அதை delete செய்துவிட்டேன். அதனால் உங்கள் பதிலையும் போடவில்லை.

Asalamsmt said...

//முதலில் தினமணி இந்த செய்தியை வெளியிட்டதெ ஆச்சர்யம்தான். பரபரப்புக்க்காக தினமணி எதுவும் செய்யாது என்பதனால் பேரம் நடப்பது உண்மையாக இருக்கலாம். //

தினமணி மாத்திரம் அல்ல. மாலைமலரிலும் இந்த செய்தி வந்து இருக்கிறது அறியவும்.

ASALAM

Anonymous said...

இட்லியாரே,

இது சம்பந்தமாக தினமணியில் இன்று (செவ்வாய் 29 மே) வந்துள்ள கார்ட்டூன் சூபர்.

மிஸ் பண்ணிடாதீங்க.

http://dinamani.com/NewsItems.asp?ID=DNR20070528152649&Title=Cartoon+Page&lTitle=L%F4oh%E5u&Topic=0

சட்னிவடை said...

இன்னும் மூன்று வருடம் கழித்துதான் கலைஞர் டிவியில் வரும் என்று சரவணன் பேட்டி கொடுத்தது தெரியாதா உனக்கு?

Anonymous said...

சிவாஜி படம் மூன்றாண்டு கழித்தே கலைஞர் டிவியில் ஒளிபரப்பு.

"சிவாஜி ஆகஸ்ட் 15ல் கலைஞர் டிவி யில் ஒளிபரப்பாகும் என்ற செய்தி தவறானது.
மூன்றாண்டுகள் கழித்தே ஒளிபரப்பும் வகையிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது" - என ஏ.வி.எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

நன்றி : தினமலர்

Anonymous said...

Can some one tell me what is written in the Cartoon. I am not able to read it.

Anonymous said...

////Can some one tell me what is written in the Cartoon. I am not able to read it. ///

நியாயம்தானே, இட்லியாரே. கொஞ்சம் ஜூம் பண்ணி போட்டிருக்கலாம்.

படத்தில் முதல்வர் தன் மகன்களுடன் டான்ஸ் ஆடுகிறார். வரிகளில் சிவாஜி பாடல் மாற்றி எழுதப்பட்டுள்ளது.

****
ஏய் பலேலக்கா பலேலக்கா
சேலத்துக்கா மதுரைக்கா
மதராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா
ஏய் பலேலக்கா பலேலக்கா
ஓட்டு போக்க மக்களுக்கா...
தலைவர் ஆட்சியில் தமிழ்நாடு
இப்ப அமெரிக்கா..
காவிரி ஆறும் பாலாறு அணையும்
மறந்து போச்சுதே...
வாரிசு பதவியும் கலைஞர் டிவியும்
நினைவில் வருகுதே...
***

மேலும், படத்தில் மாறன்கள் பரிதாபமாய் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Anonymous said...

இட்லியாரே,

இன்றைய தினமணியில் (31 மே வியாழன்), கலைஞர் டிவிக்கு எல்லா புதுப்படங்களையும் வாங்க மிரட்டப்படுவதாகவும் ஒரு "இராம' "நாராயணன்" என்ற பேரை கேட்டாலே புதுப்பட தயாரிப்பாளர்கள் மிரண்டு போயுள்ளதாகவும் கிசுகிசு பாணியில் செய்தி வெளியாகியுள்ளது.

அம்மா ஆட்சியிலாவது பேரம் பேசினார்கள், ஆனால் இப்போ அரசாணை போடாத குறைதான் என்று எழுதியுள்ளார்கள்.

ஆட்சியின் இன்னொரு பரிமாணம்!!!