பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 27, 2007

தாலி கட்டும் பழக்கம் ஏன்? - கனிமொழி கேள்வி

* தாலி கட்டும் பழக்கம் ஏன்? - கனிமொழி கேள்வி.

பகுத்தறிவாளர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில்கூட தாலி கட்டும் பழக்கம் இதுவரை தொடர்வது ஏன் என்று தெரிய வில்லை கனிமொழி கேள்வி எழுப்பினார். விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய தலித் நாடக விழாவில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக் குமாருக்கும், பொன்னம்மாளுக்கும் சாதி மறுப்பு திருமணத்தை கனிமொழி நடத்தி வைத்த போது இவ்வாறு பேசினார்.

அடுத்த முறை பேசுவதற்கு மேலும் சில கேள்விகள் இங்கே ...

1. பெரியார் சிலைக்கு கூட தலைவர்கள் ஏன் மாலை போட்டு வணங்குகிறார்கள் ?
2. ஏன் இன்னும் மொட்டை அடிக்கும் பழக்கம் இருக்கிறது ? அல்லது ஸ்டாலின் பேரனுக்கு எங்கு மொட்டை அடித்தார்கள் ?

3. கண்டனத்தை தெரிவிக்க ஏன் பெட்ரோல் குண்டுகளை உபயோகிக்கிறார்கள் ?

4. கலைஞர் கனவில் அண்ணாவும் பெரியாரும் தான் வருவார்களா ? என்றாவது மகா விஷ்ணு வந்திருக்கிறாரா ?

உங்களிடம் கேள்விகள் இருந்தால் பின்னூட்டதில்..

19 Comments:

Anonymous said...

இப்படி ஒரு கேள்வியை கேட்டதற்காக ஜெயா மேடம் தான் கனிமொழிக்கு எம்.பி பதவி கொடுத்து அழகு பார்க்க வேண்டும்.

இலவசக்கொத்தனார் said...

இட்லி வடைக்கு மட்டும் எப்படி இவ்வளவு குசும்பு?

இட்லிவடை வீட்டுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு ஆட்டோ வரும்?

இட்லிவடை ஒருத்தரா? குழுமமா? ;-)

Anonymous said...

அருமையான "போட்டுத்தாக்கு". அப்படியே மற்றொரு கேள்வி: தயாளு, ராஜாத்தி, மற்றும் கனிமொழி. இவர்கள் ஏன் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்கிறார்கள்?

Aani Pidunganum said...

//இட்லி வடைக்கு மட்டும் எப்படி இவ்வளவு குசும்பு?

இட்லிவடை வீட்டுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு ஆட்டோ வரும்?

இட்லிவடை ஒருத்தரா? குழுமமா? ;-)
//

Another couple of question missed by koths,

Vara goondaas, ethanai oorukatai, ethanai kathi

Ethanai peru thanni potu vandhaanga, evlo ketavaarthai pesi thittinaanga.....

Good post,

Boston Bala said...

'அலைபாயுதே' மணி ரத்னத்துக்கும் கேள்விகள் உண்டா ;)

1. ஜீவி உங்க சகோதரர்தானே? உங்கள் கதையை 'இருவர்' என்று படம் எடுக்கலாமா?

2. 'அலைபாயுதே' சொந்தக் கதையா?

நாகை சிவா said...

என் தேர்வு சரி தான் என்று நிருபித்து உள்ளார்.... இதுல என்ன வந்துச்சு உங்களுக்கு.....

Anonymous said...

கனிமொழி கேட்டதில் எந்த தவறுமில்லை என்பது ஒருபுறமிருக்க...,
இட்லி வடையாரின் ஒப்பீடுகள் பலவும் அபத்தமானவை-ஒரு சில பரவாயில்லை என்ற போதும்!

நம் இந்தியாவிலேயே ஒரு சமூக மக்கள் தாலி கட்டிக்கொள்ளாமல், ஒப்பந்தம் என்ற அடிப்படையில் திருமணத்தை 'பதிவு' செய்துக்கொள்வதாக அறிகிறேன்.

Anonymous said...

Anonymous said...
அருமையான "போட்டுத்தாக்கு". அப்படியே மற்றொரு கேள்வி: தயாளு, ராஜாத்தி, மற்றும் கனிமொழி. இவர்கள் ஏன் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்கிறார்கள்?

பொட்டு வைப்பது தமிழர் பண்பாடு, இது பார்ப்பனம் பின்னர் தனது என சுவிகரீத்து கொண்டது, தாலி கூட ஆதீகாலத்தில் இருந்து இருக்கிறது ஆனால் பெண்ணால் ஆனுக்கு கட்டப்படது, பின்னர் அது பெண்ணுக்கு மாறிவிட்டது.

முத்துகுமரன் said...

கலைஞர் என்றால் போட்டுத்தாக்க துடிக்கும் இட்லிவடை விஜயகாந்த் என்றால் மவுனமாக இருப்பது ஏன். ஆட்டோ அனுப்பும் திமுகவிற்கே அஞ்சாத இட்லிவடை உத்தமர் விஜயகாந்தை விமர்சிக்க அஞ்சுவது செலக்டிவ் அம்னீசியாவா?

Anonymous said...

Kanimozhi can ask her beloved father the following;
Manjal thundin mahimai yennappa?
Marukkamal yennidam mattum sollappa.

Anonymous said...

//ஆட்டோ அனுப்பும் திமுகவிற்கே அஞ்சாத இட்லிவடை உத்தமர் விஜயகாந்தை விமர்சிக்க அஞ்சுவது செலக்டிவ் அம்னீசியாவா?//

கேப்டன் துப்பாக்கியால் போட்டு தள்ளிவிடுவார் என்ற பயமா இருக்குமோ?

Madhu Ramanujam said...

என்னோட முந்தைய பின்னூட்டம் ஏன் வெளிவரலைனு தெரிஞ்சுக்கலாமா இட்லி வடை?

IdlyVadai said...

மதுசூதனன் என்ன பின்னூட்டம் என்று நினைவில்லை.

IdlyVadai said...

மதுசூதனன் இதற்கு முன் மற்றும் இப்போது வந்துள்ள அனானி பின்னூட்டம் உங்களுடையது என்றால் அதை என்னால் பிரசுரிக்க முடியாது. மன்னிக்கவும்.

Anonymous said...

ada, ellamae nyamana kelvi thaanungalae :)?

Hariharan # 03985177737685368452 said...

//கலைஞர் கனவில் என்றாவது மகா விஷ்ணு வந்திருக்கிறாரா ?//

கனிமொழி பணியாற்றிய பார்ப்பன மற்றும் ஆங்கில ஏடான ஹிந்து நாளிதழ் தலைவர் மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணுவாகிய என்.ராம் அவர்களைக் குறிப்பிடுகிறீர்களா இட்லிவடை?

Hariharan # 03985177737685368452 said...

இட்லிவடை,

பாயிண்ட் நம்பர் 2 மொட்டை அடிப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிவர் மாசிலா போட்ட
இப்பதிவில்
நானிட்ட பின்னூட்டம் இங்கேயும்

//சிசுவா தாய் வயித்துல இருக்கறப்பவே மொளச்ச கருமுடிய எடுக்கறதுதான் இந்த மொட்ட போடறதோட ஆழக்கருவே. தொப்புள் கொடி அருத்ததை போலவே இதுவும் சிறு பிள்ளைய தாய்கிட்ட இருந்து பிரிச்சி எடுக்கிற விஷயந்தான். //

தொப்புள் கொடிஅறுப்பு என்பது குழந்தையை தாயிடம் இருந்து பிரிப்பது என்பதை விட பனிக்குடம் என்றழைக்கப்படும் தற்காலிக உறுப்பான குழந்தை கருவாக பிறக்கும் வரையில் தாயின் கருப்பையில் இருந்த "ப்ளாசண்டா" எனப்படும் பை போன்ற அமைப்புடன் தொப்புள் கொடி இணைந்திருப்பதால் வெளி உலகம் வந்து பிறந்துவிட்ட குழந்தையை ப்ளாசண்ட்டாவிலிருந்து விடுவித்தல் அவசியமாகிறது.


//எங்க குலத்தில பாட்டிங்களாம் இந்த முடிய தொடகூட அருவருப்பு படுவாங்க. ஏன்னா கருமுடி அசிங்கமாம்.//

என்னங்க பாட்டிங்க பாசம் மீதுஇப்படி குண்டை வீசிட்டீங்க!

//தாய்க்கும் மகனுக்கும் இனி பிறப்பு சம்பந்தமா எந்த உறவும் இல்லை. சமுதாயத்துல அவன் ஒருவன்.//

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு??

//இந்த சமயத்திலிருந்து அவன் ஆண்கள் கூட இருந்து போர் செய்ய, வேட்டை ஆட கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை குறிக்கும் மைல்கல்.//

ஒரு வயசுக் குழந்தை மொட்டை அடிச்சவுடனே கையில ஆயுதம் ஏந்திப் போரிடணுமாமா?

சரி நம்மூர்ல இன்னும் பெண் குழந்தைகளுக்கும் மொட்டை அடிக்கும் பழக்கம் இருக்கு என்பதை அறிவீர்கள் தானே?

//இன்னிக்கும் ஒரு சில ஆப்பிரிக்க ஆஸ்த்ரேலிய பழங்குடி இனத்தவர்கள் இடையேயும் இதே போன்ற பழக்கங்கள் இருக்குது. அவங்க இந்த முடிய கையாலேயே பிய்ச்சி புடுங்கி எடுக்கிற வழக்கமும் உண்டு. இது ஏன்னா, அப்பதான் சிறுவன் மனசை, வலிய அடக்கி அழுவாம பொறுத்துக்கனும். இதன் பிறகுதான் இவன் மற்ற பெரியவனுங்க சமுதாயத்தில சேர தகுதி பெற உரியவன் ஆகிறான். //

சார் நம்மூர் பழக்கத்துக்கு விளக்கம்னா அவுஸ்திரேலியா ஆப்ரிக்கான்னு தொலைதூரம் போயிட்டீங்க.

சீக்கிரமா ப்ளைட் பிடிச்சு திரும்பி நம்மூர் மேட்டர்க்கு வாங்க சார்!

//இதையே வேறு விதத்தில சொன்னால், தாயின் அடைக்கலத்தில் இருந்து குழந்தை பையனை பிரித்தெடுத்து அவனை ஒரு தனி ஆள் ஆக்குவதற்கு செய்யப்படும் முதல் காரியமே இது.//

அதுசரி! மொட்டை அடிச்சு காதுகுத்திய குழந்தை தாயிடம் முற்றிலும் சரணடைஞ்சு அடைக்கலம் தேடுவதைக் காணவில்லையா நீங்கள்?

// இப்ப புரிஞ்சுதா அறிவாலிங்களா? இல்ல இன்னும் வேணுமா.//

மாசிலா என்ன இப்படி பயமுறுத்துறீங்க!! இதுவே கண்ணைக் கட்டிருச்சு! நீங்க வேற!!

Anonymous said...

i am not sure what was wrong about kanimozhi's statement.your questions are totally 'sambanda sambandamilada' category.yes she may have to ask these question but not during that function i would imagine.
as for someone's claim that pottu is tamizh kalacharam ,and paarpans appropriated it.....is this person sane?even if the paarpans started wearing pottu wont you be proud that another culture is adopting your way of life.. and can this person give any referrence to his statement in any case.i am sorry to say idlyvadai ,that right now in tamizhnadu everything seems to be coloured with hatred .hatred doesnt need excuse. remember gujarath?

Tulsi said...

என்னங்க இட்லிவடை, தலைப்பை விட்டுட்டு வழிமாறிப்போகுது பின்னூட்டங்கள்.

இப்ப அந்த 'தாலி' மேட்டருக்கு வருவோம். ஏதோ இப்படித் தாலின்னு ஒரு வழக்கம்
இருக்கறதாலேதான் ஒரு காப்பவுன் தங்கமாவது சிலர் வீட்டுலே இருக்கு. அதுக்கும்
வேட்டு வைக்கணுமா?
என்னவோ போங்க(-: