பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 26, 2007

ஆனியும் கூனியும் ஆகா

பழமொழி : ஆனியும் கூனியும் ஆகா என்றால் என்ன ?

6 Comments:

✪சிந்தாநதி said...

ஆனி மாதம் கூனி எனப்படும் இறால் குஞ்சு வகை மீன்களின் சீசன். மணல் குவியல் போல குவிக்கப் படும் இந்த மீன்குஞ்சு பொரியல் மிகவும் சுவையானது. இது ஆனி மாதம் மட்டுமே கிடைப்பதால்.... "ஆனியும் கூனியும் ஆகா"

இலவசக்கொத்தனார் said...

இது ஈஸிங்க. பதில்: எனக்குத் தெரியாது.

ஆனா கொஞ்சம் யோசிச்சா, ஆணி நேரா இருக்கும். கூனி வந்து வளைந்த முதுகுக்கு சொல்லுவாங்க. அதனால நேரா இருந்தாலும் ஓக்கே, வளைந்து இருந்தாலும் ஓக்கே அப்படின்னு பொருள் வருது. அதாவது என்ன குடுத்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் அப்படின்னு அர்த்தமுன்னு நினைக்கிறேன். சரிதானா?

வல்லிசிம்ஹன் said...

நல்ல பழமொழி.
ஏன் என்றுதான் புரியவில்லை.

✪சிந்தாநதி said...

குறிப்பு: இந்த 'ஆகா'வுக்கு ஆகாது என்ற பொருள் வராது.

ஆகா! (ஆச்சரியக்குறி)

Anonymous said...

அது ஆனியும் கூனியும் ஆகா இல்லீங்க.

ஆனி மாசத்துல கூனி கூட குடி போக மாட்டா என்று சொல்வார்கள்.

ஆனி மாசத்தில் புது வீடு குடி போவது நல்லது இல்லையாம்.

ஏன் என்பதை யாராவது பெரியவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
ரங்கமன்னார்.

IdlyVadai said...

ஆனி மாதமும் கூனி என்ற கிழவியோ உதவாது என்று எண்ணத் தோன்றும். ஆனால், உண்மை ஆனி மாதமும், கூனி என்ற பங்குனி மாதமும் ஆகாது என்று பொருள்.

ரங்கமன்னார் காரணம் கேட்டிருக்கிறார்: நவ கோள்களுகுள்ளே இட மாற்றங்கள் ( பஞ்சாங்கம் படி ) ஏற்படும். அந்தக் காலகட்டங்களில் பூமிக்கு இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும் என்பதால் ஆனி மாதமும், பங்குனி மாதமும் ஆகாது :-)