பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 25, 2007

இரண்டு நகைச்சுவை கதை வசனம்

நகைச்சுவை கதை வசனம் இரண்டு.
ஒன்று கலைஞர் ராமர் பாலத்தை பற்றி எழுதியது. மற்றொன்று ராஜேந்தர் பூரி அவுட்லுக்கில் கலைஞரை குடும்ப அரசியலை பற்றி எழுதியது.

கலைஞர் கடிதம்
(நீண்ட காலமாக எனக்கு ஓர் ஆசை; பிராமணர் ஒருவர் ஆசிரியராக இருக்கும் வகுப்பில், மாணவர்கள் சிலர் அவரைக்கேள்விகள்கேட்டு; அவர் தனது மொழியில் பதில் அளிக்கும் விதமாக: ஒரு கேள்வி பதில் தொகுப்பு எழுத வேண்டும் என்று. அதுதான் இது)

மாணவன்: அய்யா ராமர் பாலம் என்றால் என்ன? சேது கால்வாய்த்திட்டத்துக்கு அது எப்படி இடைஞ்சலாகும்?

ஆசிரியர்: இது தெரியாதோ, மண்டு. சமுத்திரத்திலே திட்டு திட்டா மணல் மேடு உருவாகி அது ரொம்ப நீளத்துக்கு பாலம் போல இருக்குடா, மண்டு: அதைத்தான் ராமர் பாலம்னு பெரியவா சொல்றா. அந்த பாலம் இருந்தா சேதுக்கால்வாயிலே கப்பல் எப்படி போக முடியும்? அதனால்தான் அந்த மணலை எல்லாம் அகற்றி, அப்புறம் கப்பலை விடப்போறாளாம்.

மாணவன்: அப்படின்னா... ராமர் பாலத்தை இடிச்சே ஆகனுமா?

ஆசிரியர்: அப்படித்தான் - மத்திய சர்க்காரும், மாநில சர்க்காரும் பொறியாளர்களும் சொல்றாங்க.

மாணவன்: ஓ! அதாவது மணல் குவிஞ்சு வரிசையா திட்டுத்திட்டா நீளமா இருக்கு- அதைப் பார்க்க பாலம் மாதிரி இருக்கு.

ஆசிரியர்: ஸ்பஷ்டமா சொன்னேடா- அதான் ராமர் பாலம்- சாட்சாத் ராமபிரான் கட்டின பாலம்.


மாணவன்: ஏன் சார்? அந்த பாலத்திலே அடிக்கல் நாட்டுவிழா கல்லு- பாலத் திறப்பு விழா கல்லு எல்லாம் இப்பவும் இருக்குதா?... அதாவது: அனுமார் தலைமையிலே ராமன் திறந்து வச்ச பாலமா?

ஆசிரியர்: ஆமாம்- பதினேழு லட்சம் வருஷத்துக்கு முன்னாடி திறப்பு விழா நடந்த பாலம்! - முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்த விழாவுக்கு வந்து மலர் மாரி பொழிந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மாணவன்: நான் கேள்விப்பட்டேன் சார்; முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்த பாலத்திலே ஏறி நின்னு பூமாரி பொழிஞ்ச போது - அவ்வளவு ஜனக்கூட்டத்து கனம் தாங்காம அந்த பாலம் இடிஞ்சு விழுந்ததாமே? - ஏன் சார்; பால இடிஞ்சா பக்கத்திலே புதுப்பாலம் கட்டுறாங்களே; இப்ப கூட பாருங்க; நம்ம சென்னை அடையாறுல; ஒரு பழைய பாலத்தை; கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சரா இருந்தப்ப இடிச்சுட்டு புதுசா "திரு.வி.க.பாலம்'' என்று ஒரு பாலம் கட்டி இருக்காறே?

ஆசிரியர்: டேய்- குறும்பா! குதர்க்கமெல்லாம் பேசாதே- சேதுக்கால்வாய் தோண்டுறேன்- தமிழ்நாட்டை வாணிபத்திலே, பொருளாதாரத்திலே வளமாக்கிறேன்னு; வீண் கதை பேசிக்கிட்டு; ராமனோட சாபத்துக்கு ஆளாக போகுது ஒரு கூட்டம்!

மாணவன்: ஆசிரியர் அய்யா; அப்படின்னா சேது திட்டம் வராதுன்னு சொல்லுங்க!


ஆசிரியர்: வராதுன்னு சொல்லலேப்பா; வரக்கூடாதுன்னு சொல்றேன் சேலம் இரும்பாலைத்திட்டம்னா இவாளே கொண்டு வர்றா- நெய்வேலி 2-வது சுரங்கமும் இவா கோரிக்கையேதான்- தூத்துக்குடி உரத்தொழிற்சாலைக்கும் இவாளே உரிமை கொண்டாடுரா- வெளிநாட்டு முதலீடுகளுக்கும் இவாளே காரணம்கிரா- செம்மொழின்னா இவாதான்- இப்ப சேது கால்வாயும் சேந்துட்டா தலை கீழா நிப்பா! கையில பிடிக்க முடியாது... அதனாலதான் ராமர் பாலமோ- ராவணன் பாலமோ ஏதோ ஒன்னைச் சொல்லி தடுத்து நிறுத்தறது நம்மவா தர்மம்.

மாணவன்: ராமாயணம் என்பது உண்மையில் நடந்ததுதானே சார்?

ஆசிரியர்: ஏண்டா அம்பீ! நம்ப ராஜாஜி எழுதிய புத்தகத்துக்கு அவரே முன்னுரை எழுதும்போது ராமாயணம் என்பது சரித்திரமோ, வாழ்க்கை வரலாறோ அல்ல. அது இந்து இதிகாசத்தின் ஒரு பகுதி என்று சொல்லி இருக்கிறார்னு நான் போன வாரம் சொல்லிக் கொடுத்ததை மறந்துட்டியா?

மாணவன்: அய்யா; திராவிடர் கழகத்தினர் சார்பில் தயாரிக்கப்பட்ட பெரியார் திரைப்படத்துல கூட இதப்பற்றி ஒரு காட்சி வருது அய்யா?

ஆசிரியர்: ஆமாம், ஆமாம்! சரியா கவனிச்சுருக்கே, ராமர் பாலம் கட்ட அணில் உதவி செஞ்சுது, அத ராமர் பாராட்டி தடவிக்கொடுத்ததாலத்தான் அணில் முதுகிலே 3 கோடு இருக்கிறதா ஒரு கதை சொல்லிட்டிருந்தோம். அதை கெடுக்கிற மாதிரி, அந்தப்படத்துல, சீதை முதுகில ராமர் கை படவே இல்லையான்னு ஒரு கேள்வி கேட்டு சிந்திக்க வச்சுட்டா!


மாணவன்: ராமாயணத்தை பத்தி நேருஜி அவர்களே கூட அவருடைய புத்தகத்திலே ஏதோ எழுதினதா சொல்லுவாங்களே அய்யா?

ஆசிரியர்: "ராமாயணம் என்பது ஒரு காவியமல்ல. அது திராவிடர்களுக்கும், ஆரியர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தைப் பற்றி மிகைப்படுத்தி, பல அறிவிற்கு பொருந்தாத கதைகளை புகுத்தி எழுதப்பட்ட ஒரு கற்பனைக்கதை''என்று நேருஜி அவர்கள் தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களிலே குறிப்பிட்டதாக அவருடைய "டிஸ்கவரி ஆப் இண்டியா'' என்ற புத்தகத்திலே இருப்பது உண்மைதான்.

மாணவன்: சார் இன்னைக்கு வந்த ஒரு பத்திரிகையில் கூட ராமர் பாலம் பற்றி கட்டுரையாளர் ஒருவர் எழுதியிருக்கிறாரய்யா?

ஆசிரியர்: சமத்து. அதக்கூட படிச்சிருக்கியே? அந்தக்கட்டுரையாளர் "ராமர் பாலம்'' என்பது மணல் கயிறு என்று வர்ணித்திருக்கிறாரே? சேது சமுத்திரத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் மக்களுக்காகக் கடவுளா? கடவுளுக்காக மக்களா என்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்று கூட எழுதியிருக்கிறாரே! மேலும் அந்தக்கட்டுரையிலே "வேதங்களோ உபநிதஷங்களோ ராமாவதாரத்தைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. மகாவிஷ்ணு ராமனாக பிறந்தது உண்மை என்றால், மகாவீரரும், புத்தரும் தோன்றி நடமாடியிருக்க முடியாது என்றே குறிப்பிட்டிருக்காரு! நம்மவா சொல்றதுக்கு எதிர்ப்படையா வந்ததையெல்லாம் நீ படிச்சிருக்கே''!


மாணவன்: அய்யா! நீங்க சொன்ன மணல் திட்டுக்களைப்பற்றி நேற்று கலைஞர் கருணாநிதி எழுதுன ஒரு கேள்வி பதிலிலே கூட கடலியலாளர் ஒருவர் எழுதியதை சுட்டிக்காட்டி, தெற்கே உள்ள மணல் திட்டுக்களை ராமர் கட்டியிருந்தா, வடக்கே உள்ள மணல் திட்டுக்களை யார் கட்டியது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அய்யா?

ஆசிரியர்: டேய்! நீ வேண்டும்னே இந்தக் கேள்வியையெல்லாம் யாரோ சொல்லி கேக்குறியா? முதல்ல சரித்திர ரீதியா கேட்டே, பிறகு இதிகாச, புராண ரீதியாக கேட்டே, இப்ப என்னடான்னா கடல் விஞ்ஞான ரீதியா கேக்குறியே?

மாணவன்: சார், சார், தப்பா நினைச்சுக்காதிங்க! வகுப்புல உள்ள ஒரு சில பசங்க இது போல கேக்குற கேள்விகளுக்கு என்னால பதில் சொல்ல முடியாமத்தான் உங்களைக்கேட்டு தெரிஞ்சுக்க முயற்சி செய்தேன். ஆனால் நீங்க கூட அவங்களுக்கு ஆதரவாதானே எல்லாத்தையும் சொல்றீங்க!

ஆசிரியர்: ஆமாண்டா சாமி! இன்னும் சொல்லப்போனா, நம்மவா ஆட்சியிலேயே, வாஜ்பேயி பிரதமரா இருந்த போதே சேது கால்வாய்த்திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறோம். அதைத்தான் நாடாளுமன்றத்திலேயே அந்த துறை அமைச்சர் ஆதாரப்பூர்வமா புட்டு புட்டு வச்சிட்டான்.

மாணவன்: சார்! சார்! அப்படின்னா ராமர் பாலம் என்கிறது ஒரு தடைக்கல், அவ்வளவுதானா?


ஆசிரியர்: எத்தனை தடைகள் போட்டா என்ன? அந்த மத்திய அமைச்சர் பாலு கேக்கப்போறானா?- மகா கெட்டிக்காரனாச்சே- மறுப்புக்கு மேல மறுப்பு சொல்லி- இந்த மாதிரி திட்டங்களையெல்லாம் சாதிக்கிறவனாச்சே....

மாணவன்: ஆசிரியரய்யா அப்படின்னா, நான் சொல்றதைக்கேளுங்க....

ஆசிரியர்: என்ன?

மாணவன்: எப்படியும் சேதுக்கால்வாய் வரப்போகுது- கப்பல் அந்த வழியா போகப்போகுது- அதனால் இப்பவே அவங்களோட நாமும் சேர்ந்து கூட்டத்தோடு கோவிந்தா போட்டுட்டு போகலாமே....

ஆசிரியர்: ஆமாண்டா- அதுவும் சரிதான் - சேதுக்கால்வாய்த்திட்டம்; நிறைவேற்றியே தீருவோம்.

(எல்லோரும் "நிறைவேற்றியே தீருவோம்'' என்று முழக்கமிடுதல்.Bull's Eye Rajinder Puri - Outlook
The course of revolution is seldom smooth. Small wonder, then, that Stalin’s rise to power was interrupted by obstacles. There was violence. Revisionist forces tried to thwart Stalin. Counter-revolutionary mobs let loose arson and murder. Even the redoubtable Stalin was worried. "Appa," said Stalin. "Why are they protesting against my rise? I thought you had decided that I would succeed you!"

"Aiyaiyo Stalin! How can you doubt that? After all, I didn’t name your elder brother Lenin, did I?"

"I do hope these temporary setbacks won’t slow down our plans for global revolution, Appa?"

"What makes you ask that, Stalin?"

"Appa, you had said if the OBC quota is not quickly accepted, untold violence would erupt all over the country. obc reservations have still not been accepted by the Supreme Court, Appa! But where is the countrywide violence?"

"Aiyaiyo! Be patient, Stalin. I need more time for instigating countrywide violence. We must deal first with DMK’s own violence!"

"Why did DMK workers resort to violence and burn down our progressive newspaper, Appa?"

"Don’t blame them, Stalin. It was my mistake. I should have spelt out clearly the DMK’s reservation policy—what is reserved for you, what is reserved for Azhagiri and what is reserved for your sister!"

"Will your reservation policy please OBCs all over the country, Appa?"

"Of course it will, Stalin! All three of you are OBCs, aren’t you? One hundred per cent reservation for OBC leaders would be unprecedented. I am sure it will delight all OBCs!"

"Appa, you also threatened to take unilateral action against Sri Lanka if the central government did not respond to its attacks against our fishermen. The central government has still not acted, Appa. What happened to that threat?"

"Aiyaiyo Stalin! How dense you are! How can I take unilateral action without control of the army? How can I control the army without becoming prime minister of India? How can I become PM without the present government being toppled? I was sending a subtle message of hope to our stormtroopers, Stalin!"

"Appa, Appa! How exciting, Appa! Is there really a chance for you to become PM, Appa?"

"You disappoint me, Stalin! You really think I’d ever give up the chief minister’s post for you without myself becoming PM?"

"Sorry Appa! I should have thought of that. But how will the present government ever be toppled?" "Don’t worry, Stalin! Our road to Delhi will pass through Lucknow!"

3 Comments:

Anonymous said...

ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழிபெயர்த்து போட்டிருக்கலாமே.

அதில், விடை கிடைக்காத சில கேள்விகள் இருக்கின்றன.

இதற்கு சில தி.குஞ்சுகள் பதிலளித்தால் பரம சௌக்யமாக இருக்குமோல்யோ!!

Anonymous said...

ஏம்ப்பா அனானி ஆ.குஞ்சு,

மேல தமிழ்ல போட்டிருக்கறதை பத்தி சொல்லறதுக்கு உங்கிட்ட ஒன்னுமே இல்லையா? இதற்கு பதிலலித்தால் பரம சௌக்யமாக இருக்குமோல்யோ!!

அதை விட்டுட்டு இங்கிலீசுல போட்டிருக்கறதை பத்தி ரொம்ப வருத்தப்படற?

ஏன் ஓய் இப்படி அடுத்தவா மூக்கை நோண்டறதுக்குன்னே அலையறேள்? :))

Anonymous said...

//மேல தமிழ்ல போட்டிருக்கறதை பத்தி சொல்லறதுக்கு உங்கிட்ட ஒன்னுமே இல்லையா? //

//ஏன் ஓய் இப்படி அடுத்தவா மூக்கை நோண்டறதுக்குன்னே அலையறேள்? :))
//

கேள்வியும் பதிலும் சேர்ந்தாப்புல... இது நல்லா இருக்கே...