பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 24, 2007

கலைஞர், ராதிகா பேட்டி

நேற்று வந்த கலைஞர் பேட்டி, இன்று வந்த ராதிகா பேட்டி.


கலைஞர் பேட்டி
கேள்வி:- விமான நிலைய விரிவாக்க கூட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதா?

பதில்:- ஏகமனதாக இல்லை. அ.தி.மு.க. மாத்திரம் சில பகுதி மக்கள் இதை ஏற்றுக் கொள்ள மறுப்பதாகக் கூறி, அந்த மக்களின் சார்பில் என்னிடத்திலே மனு கொடுத்தார்கள். அதை பரிசீலிப்பதாக சொல்லி நான் பெற்றுக்கொண்டிருக்கிறேன். எனவே இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயக்குமார் கலந்து கொண்டார் என்ற போதிலும், இந்த தீர்மானத்தை அவர் ஆதரிக்கவில்லை.

கேள்வி:- பா.ம.க. மற்றும் இடதுசாரிகள் ஏற்றுக் கொண்டார்களா?

பதில்:- மற்றவர்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.


கேள்வி:- விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்காக மொத்தம் எவ்வளவு கோடி ரூபாய் செலவாகும்?

பதில்:- நில எடுப்பிற்கான செலவு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். விரிவாக்க செலவு பணிகளை இந்திய வானூர்தி குழுமம் சார்பில் செய்யப்படும். அது சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்.

கேள்வி:- குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் எங்கே அளிக்கப்படவுள்ளது?

பதில்:- தீர்மானத்திலேயே நியாயமான இழப்பீடு அவர்களுக்கு கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறோம். மாற்று இடமும் அவர்களுக்கு, அவர்களுடைய மனதிற்கேற்றபடி கொடுக்கப்படும். மாற்று இடம் ரொம்ப பேருக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது.

இந்த திட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் வீடுகள் 947 வீடுகள் தான். முதலில் நாங்கள் பார்த்த இடம் பொழிச்சலூர் பகுதி. அந்த இடத்தை தேர்வு செய்திருந்தால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். அதை அங்கேயுள்ள மக்கள் விரும்பவில்லை. அப்போதே நாங்கள் அந்த இடத்தை மாற்றிக் கொள்கிறோம் என்று உறுதி கொடுத்தோம். அப்படி உறுதியளித்தவாறு தற்போது இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம்.


கேள்வி:- இன்றைய முடிவின் காரணத்தால் விமான நிலைய விரிவாக்கத்தில் மற்ற மாநிலங்களை விட பின்தங்கிவிடாமல் ஏமாறாமல் இருந்து விட்டோம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்:- ஆமாம், நாமும் முந்திக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி:- விமான நிலைய விரிவாக்கப்பணிகள் எப்போது தொடங்கப்படும்?

பதில்:- இன்றைக்கே ஆரம்பமாகி விட்டதாக தான் பொருள். இன்றைக்கு ஒரு பெரிய வேலை முடிந்து விட்டது.கேள்வி:- ஒரு பத்திரிகையில் நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் துணை ஜனாதிபதியாக ஆவதைப்போல செய்தி வந்திருக்கிறதே?

பதில்:- துணை ஜனாதிபதியாக வருபவர் வேண்டுமானால் பேராசிரியராக இருக்கலாம். நம்முடைய பேராசிரியர் இல்லை.

கேள்வி:- தி.மு.க.விற்கு துணை ஜனாதிபதி வாய்ப்பு கேட்கப்படுகிறதா?

பதில்:- அப்படி ஒன்றும் பேரம் நடக்கவில்லை.


கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?

பதில்:- இரண்டொரு நாட்களில் டெல்லிக்கு செல்வேன். அங்கே அதைப்பற்றி கலந்து பேசி முடிவெடுப்போம்.

கேள்வி:- மாநிலங்களவை தேர்தலுக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?

பதில்:- கட்சியிலே தி.மு.க. தலைமைக்கழக உயர்மட்ட குழு இருக்கிறது. அவர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.


கேள்வி:- மாநிலங்களவை தேர்தலுக்கு உங்கள் அணி சார்பில் ஐந்தாவது ஒரு உறுப்பினர் நிறுத்தப்படுவாரா?

பதில்:- ஐந்தாவது ஒரு வேட்பாளரா? இதிலே நாங்கள் தேவையில்லாமல் ஒரு போட்டியை உருவாக்க விரும்பவில்லை. அந்தப் போட்டியினால் குதிரைப் பேரங்கள் நடக்கும். அது வேண்டாம் என்று நினைக்கிறோம். மொத்த இடங்கள் ஆறு பேர் என்பதில், எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும் போட்டியில்லாமல் பங்கிட்டு கொள்ளலாம் என்பது என் கருத்து. எதிர்க்கட்சியின் கருத்து என்னவென்று எனக்கு தெரியாது.

கேள்வி:- எதிர்க்கட்சியின் கருத்து, அந்த தேர்தல் அதிகாரியையே மாற்ற வேண்டும் என்பதாக இருக்கிறதே?

பதில்:- நான் சொல்கின்ற திட்டத்தில் அதற்கு அவசியமே ஏற்படாதே, தேர்தலே நடக்காதே.


கேள்வி:- இந்த முறையாவது கனிமொழிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

பதில்:- கனிவா பேசுகின்ற மொழி எங்கேயிருந்தாலும், வாய்ப்பு கொடுக்கப்படும். மொழி கனியாக இருக்க வேண்டும், காயாக இருக்கக்கூடாது.

கேள்வி:- ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா?

பதில்:- நம்புகிறோம்.


கேள்வி:- கலைஞர் டி.வி.யை தி.மு.க. தான் ஏற்படுத்துகிறதா?

பதில்:- தி.மு.க.விற்கும் கலைஞர் டி.வி.க்கும் சம்பந்தம் இல்லை. தி.மு.க.விற்கும் கலைஞருக்கும் சம்பந்தம் உண்டு. கலைஞர் டி.வி.க்கு சம்பந்தம் இல்லை.

கேள்வி:- கலைஞர் டி.வி. என்ற ஒரு டி.வி.யை இப்போது தொடங்க வேண்டிய அவசியம் என்ன?

பதில்:- இந்த கேள்வியின் அவசியம் என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், இது உங்களுக்கு புரியும்.

ராதிகா பேட்டி
கேள்வி:- `கலைஞர் டி.வி.'க்காக நீங்கள் புதிய தொலைக்காட்சி தொடர் தயாரித்து வழங்கப்போவதாக பேசப்படுகிறதே... அது உண்மையா?

பதில்:- முதல்-அமைச்சர் கலைஞர் கேட்டுக்கொண்டால், கலைஞர் டி.வி.க்காக புதிய தொடர் தயாரித்து வழங்குவேன். அவர் கேட்டு, யாரும் மறுக்க முடியுமா?

கேள்வி:- இதுபற்றி முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தினீர்களா?

பதில்:- புதிய தொலைக்காட்சி தொடங்குவது என்று அவர் முடிவு செய்து இருக்கிறார். அதுபற்றி பேசினோம்.


கேள்வி:- சன் டி.வி.யுடன் உங்களின் ராடன் நிறுவனம் பல ஆண்டுகளாக வியாபார தொடர்பு வைத்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஒரு புதிய தொலைக்காட்சிக்கு நீங்கள் நிகழ்ச்சி தயாரித்து வழங்கினால் பிரச்சினை ஏற்படாதா?

பதில்:- கலாநிதிமாறன், என்னுடன் டெலிபோனில் பேசினார். வருகிற திங்கட்கிழமை அவரை சந்திக்கும்படி கூறியிருக்கிறார். அப்போது அவர் இதுபற்றி பேசினால், ``முதல்-அமைச்சர் கலைஞர் சொன்னால், அதை தவிர்க்க முடியாது'' என்பதை அவரிடம் விளக்குவேன்.

கேள்வி:- ஒருவேளை சன் குழுமத்தில் இருந்து விலகிக்கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டால், என்ன முடிவு எடுப்பீர்கள்?

பதில்:- ராதிகாவையும், ராடன் நிறுவனத்தையும் பிரித்து பார்க்க முடியாது. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், அப்போது பார்த்து கொள்ளலாம்.''

10 Comments:

இலவசக்கொத்தனார் said...

கலைஞர் ராதிகா - பொய் சொல்வது யார் அப்படின்னு தலைப்பு வெச்சிருக்கலாம்!!

Anonymous said...

//தி.மு.க.விற்கும் கலைஞர் டி.வி.க்கும் சம்பந்தம் இல்லை. தி.மு.க.விற்கும் கலைஞருக்கும் சம்பந்தம் உண்டு. கலைஞர் டி.வி.க்கு சம்பந்தம் இல்லை//

திமுகவிற்கும் கலைஞர் டிவிக்கும் சம்பந்தம் இல்லை. கலைஞருக்கும் திமுகவுக்கும் சம்பந்தம் உள்ளது. ==>கலைஞருக்கும் கலைஞர் டிவிக்கும் சம்பந்தம் உள்ளது. கலைஞருக்கும், திமுகவுக்கும் சம்பந்தம் உள்ளதால் கலைஞர் டிவிக்கும் திமுகவுக்கும் சம்பந்தம் உள்ளது. புரிகிறதா?

//எனக்கும் சன் டிவிக்கும் சம்பந்தம் இல்லை - தயாநிதி மாறன்.//
குடும்பமே இப்படி பொய்யும், பித்தலாட்டமும் தான் போல.

குஞ்சுகளுக்கு தெளிவு படுத்தவே இந்த விளக்கம்.

அப்போ தமிழர்களுக்கு? - உங்களுக்கு விளக்கம் ஒரு கேடா? சோற்றாலடித்த பிண்டங்களே! மிருக ஜாதியினரே! சுரணை கெட்டவர்களே!
-அய்யா இதெல்லாம் நான் சொல்லவில்லை. மானமிகு மஞ்சத்துண்டார் கூறியது. அவர் சொன்னதில் தவறில்லை என்றுதான் நாம் அரிசிக்கு ஓட்டு போட்டு நிரூபித்து விட்டோமே!

Anonymous said...

அப்பா, அப்பான்னு கூப்பிடறதாலே, ராதிகாவும் கலைஞர் மாதிரியே பதில் சொல்லியிருக்கார். ஒருவேளை இதுதான் திராவிட மாயை என்பதோ?.

வல்லிசிம்ஹன் said...

A usual to the point. am talking abt IDLYVADAI.

Anonymous said...

//தி.மு.க.விற்கும் கலைஞர் டி.வி.க்கும் சம்பந்தம் இல்லை. தி.மு.க.விற்கும் கலைஞருக்கும் சம்பந்தம் உண்டு. கலைஞர் டி.வி.க்கு சம்பந்தம் இல்லை//
//கேள்வி:- இதுபற்றி முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தினீர்களா?

பதில்:- புதிய தொலைக்காட்சி தொடங்குவது என்று அவர் முடிவு செய்து இருக்கிறார். அதுபற்றி பேசினோம்.//

onnum piriyalayae!

மணிகண்டன் said...

//onnum piriyalayae!
//

புரிஞ்சா அது அரசியலே இல்லை :)

வெங்கட்ராமன் said...

கேள்வி:- தி.மு.க.விற்கு துணை ஜனாதிபதி வாய்ப்பு கேட்கப்படுகிறதா?

பதில்:- அப்படி ஒன்றும் பேரம் நடக்கவில்லை.

சரி இது என்ன கததிரிக்காய் சமாச்சாரமா, பேரம் கீரம்னு பேசீருகாரே முதலமைச்சர்.என்ன கொடும இது.
இல்ல இல்ல
என்ன கண்றாவி இது.

IdlyVadai said...

வெங்கட்ராமன் அன்று படிக்கும் போதே நினைத்தேன். நீங்களும் பார்த்திவிட்டீர்கள் :-)

Anonymous said...

Devolopment of airport is really a good project. If it becomes an international airport more tourists will come to TN. Moreover, only 10 in every 100 tourists to india come to south.

Anonymous said...

அவரே கேள்வி தயாரித்து அதற்கு அவரே பதிலும் தந்து, பின்னர் அதனை அவரே ஒரு 'கவரில்' போட்டு அதை இன்று இட்லிவடை "கலைஞர் பேட்டி" என... OK OK நம்புகிறோம்.