பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 23, 2007

சரத்குமார் பெரிய ஆளா ? - ராதிகா செல்வி

நெல்லை வந்த ராதிகா செல்வி பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்

* எனது கணவர் வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டது தொடர்பாக நான் சிபிஐ விசாரணை கோரியுள்ளேன். அது கண்டிப்பாக நடந்தே தீரும். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன்.

* எனக்கு வழங்கப்பட்ட மத்திய அமைச்சர் பதவியின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன். எனது அமைச்சர் பதவியால் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்துவேன்.

* நடிகர் சரத்குமாரை நான் போட்டியாக கருதவில்லை. அவர் ஒரு பெரிய ஆளாக எனக்கு தெரியவில்லை.

11 Comments:

நாகை சிவா said...

ஏனுங்க இது நேத்து ஜுவி ல படிச்ச மாதிரி இருக்கு எனக்கு!

Anonymous said...

சந்தர்ப்பவாத அரசியலில் விளைந்த இந்த காளான்களுக்கு யாருமே பெரிய மனிதர்கள் அல்லவே?

கட்டப்பஞ்சாயத்து ரௌடியிஸத்தை மட்டுமே அறிந்த இந்த அமெச்சூர் அல்லக்கைகளுக்கு அரசியல் அரிச்சுவடி தெரியுமா?

நேற்று வீசிய புயல்காற்றில் திடீரென கோபுரத்தில் மேலேறிய குப்பைச்சருகுகள் பிறரை பார்த்து பல்லிலிப்பது கேலிக்கூத்து

கோவி.கண்ணன் said...

'செல்வி' ராதிகா கேட்காமல் இருந்தால் சரி !

:)

Anonymous said...

சற்று முன்: சன் டீவீ தாளாளர் வீடுகளிலும், இதர இடங்களிலும் வருமான வரி ரெய்டு!!
மஞ்சள் துண்டாரை இன்று நம்புவோரின் நாளைய கதி இதுதான்.

Anonymous said...

// மஞ்சள் துண்டாரை இன்று நம்புவோரின் நாளைய கதி இதுதான் //

That wont apply to his sons..

Anonymous said...

//சற்று முன்: சன் டீவீ தாளாளர் வீடுகளிலும், இதர இடங்களிலும் வருமான வரி ரெய்டு!!//

எப்பவோ நடந்திருக்க வேண்டியது, இப்போ நடக்குது, ரெய்டு ஆரம்பிக்கும் போது 'ஆய்யோ கொல்றாங்க! ஆய்யோ கொல்றாங்க!'னு யாராவது பில்டப் கொடுத்தாங்களாமா?

Anonymous said...

இட்லிவடை, நீ வேற அழகிரிய தாக்கி ந்யூஸா போடுற இட்லிவடை மெஸ்ல ரெய்டு வர போறாங்க, ஆமா! அங்க ரெய்டு வந்தா என்ன கிடைக்கும்?

பங்காளி... said...

//சரத்குமார் பெரிய ஆளா ? - ராதிகா செல்வி //

இதற்கான பதிலை திருமதி. ராதிகாதான் சொல்லவேண்டும்...

ஹி..ஹி...

Anonymous said...

எனது கணவர் வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டது தொடர்பாக நான் சிபிஐ விசாரணை கோரியுள்ளேன். அது கண்டிப்பாக நடந்தே தீரும். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன்.

At this rate Manmohan Singh will
have to create a DMK CBI to cater
to needs and demands of DMK :).

Anonymous said...

Hello.,
ரா.செ மறுத்து அறிக்கை விட்டதா 'சற்றுமுன்' நியூஸ் வாசிச்சேனே!

(இந்தப் பின்னூட்டத்த வெளியிடறதுக்கு முன்னாடி 'வாய்ப்பை' தவறவிடாம
சந்தர்ப்பவாத அரசியல், காளான், மஞ்சள்துண்டு, அழகிரி என்று வருகிற பின்னூட்டங்களை வெளியிட்டு மகிழ்ந்துக்கொள்ளவும்)

IdlyVadai said...

இன்று வெளியான காலை பத்திரிகை ஒன்றில் அண்ணன் நடிகர் சரத்குமாரை பற்றி நான் மதிக்காதது போல (சரத்குமார் ஒன்றும் பெரிய ஆளில்லை) தவறுதலாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அண்ணன் சரத்குமார் மிகப்பெரிய நடிகர் அவர் மீது மிகவும் மரியாதை வைத் துள்ளேன். அந்த காலை பத்திரிகை செய்திபற்றி மிகவும் நான் வருத்தப்படுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ( மாலைமலர்)