பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 23, 2007

சில செய்திகள்

* ஜுன்-3ந் தேதி கலைஞர் டிவி தொலைக்காட்சி பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.ஆகஸ்ட் 15 அன்று தான் கலைஞர் டிவி தொடக்கம்

* பேராசிரியர் அன்பழகன் துணை ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்க பிரகாசமான வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக டெல்லியில் பேசப்படுகிறது.

* போலீஸ் சூப்பிரெண்டு பிரேம்குமார் "டிஸ்மிஸ்" அரசு உத்தரவு வீட்டுக் கதவில் ஒட்டப்பட்டது. பிரேம்குமார், அரசின் இந்த `டிஸ்மிஸ்' உத்தரவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது.

* எம்.ஆர்.ராதா நூற்றாண்டு விழாவையொட்டி கருணாநிதியுடன் நடிகை ராதிகா சந்திப்பு

* நான் ஜெயலட்சுமியுடன் உல்லாசமாக இருந்தேன் என்று கூறுவது சுத்தப்பொய். நான் இதுவரை அவருடன் ஒருநிமிடம் கூட செலவழித்தது கிடையாது. ஜெயலட்சுமி வெளியிட் டுள்ள புகைப்படங்கள் கிராபிக்ஸ் முறையை பின் பற்றிபோலியாக தயாரிக்கப்பட்டவை. அவர் என்னுடை இமேஜை கெடுத்து என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்ட துடிக்கிறார்" - பா.ஜனதா எம்.எல்.ஏ.ரேணுகாச்சாரி மறுப்பு

* காகெய்ன் போதைப் பொருளை வைத்திருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் தில்லியில் அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

4 Comments:

RBGR said...

இந்த செய்தியையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்..


இன்றைய தினமலர் கேள்வி:
ராஜ்யசபாவில் கனிமொழிக்கு எம்.பி. பதவிக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படுமா?

கலைஞர் பதில்:
'மொழி காயாய் இருப்பதை விட 'கனி'யாய் இருப்பதல் இனிமை.


நீதி:

"கனியிருப்ப காய் கவர்ந்தற்று"

Anonymous said...

இது இந்த பதிவு சம்பந்தப்பட்டது அல்ல.

சைடுல பருத்திவீரனுக்கு 7, பெரியார் க்கு 7.5 ன்னு போட்டுக்கோங்க. ஆனா 300 6 ன்னா என்ன அர்த்தம்?. முதல இந்தபடத்த இதோட கம்பேர்பண்ணலாமா?..

IdlyVadai said...

அனானி யார் கம்பேர் செய்தார்கள் என்று சொன்னார்கள் ? நான் நல்லா இருக்கு என்று சொன்ன படங்கள் சிலருக்கு குப்பையாக இருக்கும், நான் குப்பை என்று சொல்லும் படங்கள் மற்ற்வர்களுக்கு சூப்பராக இருக்கும்.

Anonymous said...

இச்செய்திகளுக்கு நன்றி.

ஒரு செய்தி மட்டும் எதிர்திசையில் பார்த்து எழுதப்பட்டுள்ளது யதேச்சையானதா? பா.ஜ.க. தொடர்பு என்பதாலா?