பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 21, 2007

அன்புடன் விடைபெறுகிறேன்

அன்புடன் விடைபெறுகிறேன் மேலும் செய்தி கீழே...

"சன்' டி.வி.யில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகி வந்த "அன்புடன்' (சினிமா நட்சத்திரங்களுடன் சந்திப்பு) நிகழ்ச்சி, இந்த வாரம் ஒளிபரப்பாகவில்லை.

விஜய் டி.வி.யில் "காபி வித் அனு' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சினிமா நட்சத்திரங்கள் பேட்டி, நட்சத்திரங்களைப் பற்றி அவர்களுக்கு நெருக்கமானவர்களின் பேட்டி போன்றவை நிகழ்ச்சியின் சாராம்சம்.

இந் நிகழ்ச்சியின் பிரதியாக, "சன்' டிவியில் "அன்புடன்' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, இந் நிகழ்ச்சியை நடிகை கெüதமி தொகுத்து வழங்கி வந்தார். முதல் நிகழ்ச்சியில் நடிகர் கமல் பங்கேற்றார்.

தொடர்ந்து நடிகர்கள் சிம்பு, ஸ்ரீகாந்த், பிருத்விராஜ் நடிகை சினேகா உள்ளிட்ட பலர் அடுத்தடுத்த வாரங்களில் பங்கேற்றனர்.

இந்நிலையில், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாக வேண்டிய இந்நிகழ்ச்சி இந்த வாரம் ஒளிபரப்பாகவில்லை.

இதற்குப் பதிலாக, நடிகர் விஜய், நடிகை அசின் பங்கேற்ற பேட்டி, "நட்சத்திர அட்டகாசம்' என்ற பெயரில் மறு ஒளிபரப்பானது. இப் பேட்டி "போக்கிரி' படம் ரீலீஸ் ஆன போது "சன்' டிவியில் ஒளிபரப்பானது. கூடுதலாக, போக்கிரி, கில்லி உள்ளிட்ட விஜய் படங்களின் காட்சிகள் மட்டும் இடையே ஒளிபரப்பானது.

"அன்புடன்' நிகழ்ச்சியின் விளம்பரதாரர் ஆதரவு குறைந்ததால் இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டிருக்கலாம் என சன் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேசமயம் மறு ஒளிபரப்பான விஜய்-அசின் பேட்டியின் இடையே அவர்கள் குழும சுட்டி டி.வி. மற்றும் தினகரன் விளம்பரங்கள் மட்டுமே இடம்பெற்றன.

நான் விடைபெறுகிறேன் என்று நினைத்து சந்தோஷம் அடைந்தவர்கள் மன்னிக்கவும் :-)

11 Comments:

Anonymous said...

நான் விடைபெறுகிறேன் என்று நினைத்து சந்தோஷம் அடைந்தவர்கள் மன்னிக்கவும் :-)
In your case it cant be "Anbudan
Vidaiperukiren" :).

Anonymous said...

I have noticed a marked drop in the number of ads on Sun TV in the past 1 week. Does anyone agree or am I just imagining?

நாமக்கல் சிபி said...

//நான் விடைபெறுகிறேன் என்று நினைத்து சந்தோஷம் அடைந்தவர்கள் மன்னிக்கவும் //


அட! நீங்க விடை பெறவில்லையா!
அடக் கடவுளே!

:(

Anonymous said...

IdlyVadai are you joining Kalaignar TV as rowing
correspondent to cover PMK,MDMK and ADMK offices and leaders including Dayanidhi Maran.
I saw you in Raj TV office,ready for an interview in a white shirt with tie in red and black, that is why this question :). The rumor is some tamil bloggers are willing to freelance for Kalaignar TV :)
is it so :).

கவிதா | Kavitha said...

//அட! நீங்க விடை பெறவில்லையா!
அடக் கடவுளே!

:(//

ரீப்பீட்டு... :(

Arun said...

Incase IV retires, the what would be the message??
Sambar-chutney theendhuduchi!!
Idly maavu theendhuduchi!!

IV better open a poll for this.. :P ;-)

Anonymous said...

my heart stopped idlyvadai. i think i would be very sad ..if u bid adieu.sounding very senti.?truth is you are likeable.

IdlyVadai said...

Arun நானே நடத்தினால் நல்லா இருக்காது. வேறு யாராவது நடத்தினால் நல்லாயிருக்கும். :-)

Anonymous said...

Annoy, relax as they have not declared IV to be aryan food
it will continue to be available :). When last
heard Dr.Ramadoss was urging
MK to declare IV as national
food of Tamilnadu :).

Sundar Padmanaban said...

ஏன்யா தலைப்பை இப்படி வச்சிக் கொல்றீஹ?

நாங்கள் தொடர்ந்து அன்புடன் வடைபெறுவோம் என்பதில் மகிழ்ச்சி!

நல்லாருங்க!

Geetha Sambasivam said...

வடை கொடுக்க சீச்சீ, விடை கொடுக்க வந்தால் இப்படியா ஏமாத்தறது? :P