பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 24, 2007

போட்டுத்தாக்கு

* டாஸ்மாக் பார் இடிந்து விழுந்து 20 பேர் பலி - செய்தி
"தள்ளாடி' விழுந்தது கட்டடம்

* "அல்லா' பெயரில் பதவி பிரமாணம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ஹரே அல்லா

* தயாநிதி மாறனின் சகோதரியின் வளைகாப்பு இம்மாத கடைசியில் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தேதியில் சென்னையில் இருப்பதை தவிர்ப்பதற்காக முதலமைச்சர் டெல்லி பயணம் - செய்தி

அரசியல் குடும்பமாக இருக்கலாம், குடும்பத்தில் அரசியல் இருக்கலாமா ?

* விஜயகாந்தின் 150 படத்தை அவருடைய சொந்த நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் பெயர் எம்.ஜி.ஆர்

சிஜாஜி, எம்.ஜி.ஆர் அடுத்து என்ன ?

* மத்திய அரசை ஆட்டி வைக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி போல, விரைவில்
நானும் "ரிங் மாஸ்டர்' ஆவேன் - உ.பி. முதல்வர் மாயாவதி.

மத்தியில் நடப்பது அரசு இல்லை, சர்க்கஸ்

3 Comments:

Anonymous said...

ஜெமினி மின்னாடியே ரிலீசு

RBGR said...

ராதிகா செல்வி, சரத்குமாரை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
"சரத்குமாரை நான் போட்டியாக நினைக்கவில்லை. அவரை ஒரு ஆளாகக் கூட நினைக்கவில்லை "
என்று அவர் பேசியிருந்தார்.

ராதிகா செல்வி இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அண்ணன் நடிகர் சரத்குமாரைப் பற்றி நான் மதிக்காதது போல பேசியதாக தவறுதலாக செய்தி வெளியாகியுள்ளது.

அறியப்படும் நீதி:
உறவுக்கு 'கை' கொடுப்போம்.

கால்கரி சிவா said...

//சிஜாஜி, எம்.ஜி.ஆர் அடுத்து என்ன ?//

ஜெமினி வந்தாகிவிட்டது. அடுத்து முத்துராமன், ஜெய்சங்கர், ரவிசந்திரன், எஸ்.எஸ்.ஆர். ஏவிஎம் ராஜன், தியாகராஜ பாகவதர், சின்னப்பா, கிட்டப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ், பாலையா, ....கருணாநிதி :)