பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 20, 2007

இட்லி மாவு பொங்கவில்லை - பெண்கள் ஆதங்கம்

இன்றைய தினந்தந்தி செய்தி :-)

சென்னை உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உளுத்தம் பருப்பு மாவாக அரைக்கும் போது பொங்கவில்லை என்று பெண்கள் ஆதங்கப்படுகின்றனர். துவரம் பருப்பு `ஸ்டாக்' இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரேஷன் கடை துவரம் பருப்பு விலை குறைவாகவும், சுவையாகவும் இருக்கிறது என்று கூறும் பெண்கள், ரேஷன் கடையில் வாங்கும் உளுத்தம் பருப்பை மாவாக அரைக்கும் போது பொங்கி வருவதில்லை. மாவும் அளவு குறைவாக இருக்கிறது. விலை குறைவு என்ற ஒரு காரணத்தைவிட உளுத்தம் பருப்பில் வேறு பலன் இருப்பதாக தெரியவில்லை'' என்று பெண்கள் சிலர் கூறினார்கள்.

கலைஞர் பற்றி இட்லிவடையில் வந்த சில கருத்துக்களால் இது நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. :-)

3 Comments:

Ram Ravishankar said...

வலையுலக துக்ளக் நடத்திய கருத்துக்கணிப்பில், சன் டிவி இரண்டாம் இடத்தில் காண்பித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள இட்லி/வடை கடைகளில் கடும் வன்முறை!! பின்னணியில் யார் என்று அறிய CBI ஆராயும்!!!

இலவசக்கொத்தனார் said...

//ஒரு நாளைக்கு 20-25 பின்னூட்டங்கள் ஜாதி பெயரை குறிப்பிட்டு வருகிறது. இனி் ஜாதி பெயரை குறிப்பிட்டு வரும் பின்னூட்டங்கள் அனுமதிக்க போவதில்லை.
அன்புடன்,
இட்லிவடை//

ஜாதி பெயரைக் குறிப்பிடாமல் 'உங்கள்' புத்தியைக் காண்பித்து விட்டீர்களே அல்லது 'இவாளுக்கு அவாளைப்' பற்றி குத்தம் சொல்வதே வேலை என எழுதினால் அனுமதிப்பீர்களா?

IdlyVadai said...

இலவசக்கொத்தனார் நிச்சயம் அனுமதி இல்லை. நீங்களே எல்லோருக்கும் கற்றுதந்துவிடுவீர்கள போல :-)