பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 17, 2007

தமிழ் அறிவு போட்டி..


கீழே உள்ள பாராவை படியுங்கள்...

"வீட்டுக் கதவை கள்ளச் சாவியால் திறந்து பிரோவில் இருந்த துட்டையும், கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும், சப்போட்டாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோரிக்ஷாவில் தப்பி ஓடியபோது, தகவல் அறிந்து போலீஸ் ஏட்டு விரட்டி துப்பாகியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக் கட்டின"


படித்திவிட்டீர்களா ? சரி கேள்வி இது தான்

இதில் எதெல்லாம் தமிழ் வார்த்தைகள் கிடையாது ?

பின்னூட்டதில் தெரிவிக்கவும். விடை வெள்ளிக்கிழமை...
( படத்திற்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை ஹிஹி )

40 Comments:

Anonymous said...

nothing is pure tamil word

Anonymous said...

பீரோ, துட்டு, ஆட்டோரிக்ஷா, போலீஸ் ஏட்டு - இதெல்லாம் தமிழ் வார்த்தைகள் இல்லை

We The People said...

1. சாவி
2. பிரோ
3. துட்டை
4. கில்லாடி
5. ஆட்டோரிக்ஷா
6. போலீஸ்
7. ஏட்டு

என்ங்க சரியா? எப்படி நான் காலையிலேயே வேலையில்லாம் இருக்கேன்னு கண்டுபிடிச்சீங்க???

IdlyVadai said...

nithya, WTP அப்படியே அவை எந்த மொழி என்றும் சொல்லுங்க

IdlyVadai said...

//nothing is pure tamil word// இப்படி எல்லாம் intelligentக பதில் சொல்ல கூடாது

சென்ஷி said...

//We The People said...
1. சாவி
2. பிரோ
3. துட்டை
4. கில்லாடி
5. ஆட்டோரிக்ஷா
6. போலீஸ்
7. ஏட்டு

என்ங்க சரியா? எப்படி நான் காலையிலேயே வேலையில்லாம் இருக்கேன்னு கண்டுபிடிச்சீங்க???//

எனக்கு நிறைய வேல இருக்குது
அதனால நான் அப்படியே ரிப்பிட்டே போட்டுக்கறேன் :)

சென்ஷி

IdlyVadai said...

சென்ஷி இதெல்லாம் நல்லா இல்லை அவ்வளவு தான்.

சுவாமி said...

We The Peaple + கள்ள + கோணிப்பை + பப்பாளி + சப்போட்டா + சுமார் + தகவல் + விரட்டி + துப்பாகி + தோட்டா + தீர்த்து.

காசா பணமா?!!

சுவாமி

Anonymous said...

http://kumaraess.blogspot.com/2005/05/blog-post.html

We The People said...

1. சாவி - ஹிந்தி
2. பிரோ - ஆங்கிலம்
3. துட்டை - தெலுகு
4. கில்லாடி - ஹிந்தி
5. ஆட்டோரிக்ஷா - ஆங்கிலம்
6. போலீஸ் - ஆங்கிலம்
7. ஏட்டு - ஹெட் கான்ஸ்டபிளின் சுருக்கம் - ஆங்கிலம்

We The People said...

சென்ஷி

//எனக்கு நிறைய வேல இருக்குது
அதனால நான் அப்படியே ரிப்பிட்டே போட்டுக்கறேன் :)//

அடப்பாவி மக்கா இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல... இப்படி பண்ணா அப்புறம் தயாநிதி மாறன் மாதிரி கெதி உங்களுக்கு, பா.க.ச டெல்லி பதிவி பறிக்கப்படும் என்று வன்மையா கண்டிக்கிறேன்.

அன்புடன்,

ஜெயசங்கர் நா

IdlyVadai said...

WTP நல்ல முயற்சி, ஏட்டு மட்டும் தான் சரி, மற்றவை எல்லாம் தப்பு

சென்ஷி said...

//We The People said...
சென்ஷி

//எனக்கு நிறைய வேல இருக்குது
அதனால நான் அப்படியே ரிப்பிட்டே போட்டுக்கறேன் :)//

அடப்பாவி மக்கா இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல... இப்படி பண்ணா அப்புறம் தயாநிதி மாறன் மாதிரி கெதி உங்களுக்கு, பா.க.ச டெல்லி பதிவி பறிக்கப்படும் என்று வன்மையா கண்டிக்கிறேன்.

அன்புடன்,

ஜெயசங்கர் நா//

:))

அப்புறம் டெல்லில பாகச புகழ் பரப்ப ஆளில்லாம கஷ்டப்படுவீங்க..

சென்ஷி

Anonymous said...

வீடு - தமிழ்
கதவு - தமிழ் (?)
சாவி - அரபு
பீரோ - ஆங்கிலம்
துட்டு - போர்த்துகீஸ்?
கோணி - அரபு?
பப்பாளி - ஆங்கிலம் / பார்ஸி
சப்போட்டா - அரபு?
கில்லாடி - ஹிந்தி
ஆட்டோ - ஆங்கிலம்
ரிக்ஷா - ஆங்கிலம் / உருது
போலீச் ஏட்டு - ஆங்கிலம்
துப்பாக்கி - அரபு
தோட்டா - அரபு

IdlyVadai said...

பீரோ - ஆங்கிலம்
துட்டு - போர்த்துகீஸ்?
கோணி - அரபு?
பப்பாளி - ஆங்கிலம் / பார்ஸி
சப்போட்டா - அரபு?
கில்லாடி - ஹிந்தி
ஆட்டோ - ஆங்கிலம்
ரிக்ஷா - ஆங்கிலம் / உருது
துப்பாக்கி - அரபு
தோட்டா - அரபு

இவை எல்லாம் தப்பு :-)

Arun said...

சாவி
பிரோ
துட்டையும்
கோணிப்பை
சப்போட்டா
சுமார்
கில்லாடி
ஆட்டோரிக்ஷாவில்
போலீஸ்
ஏட்டு

By the way, we are never going to change ourselves and speak in pure Thamiz language. Apram edhaRkku IV idhellam??

IdlyVadai said...

Arun //By the way, we are never going to change ourselves and speak in pure Thamiz language. Apram edhaRkku IV idhellam?? //

இது மாதிரி கேள்வி கேட்க கூடாது அப்புறம் அழுதுறுவேன் :-).

Anonymous said...

பீரோ- ஆங்கிலம்
துட்டு- தெலுங்கு
ஆட்டோரிக்ஷா - ஆங்கிலம்
போலீஸ் - ஆங்கிலம்
ஏட்டு - ஆங்கிலம்

IdlyVadai said...

நித்தியா
பீரோ- ஆங்கிலம் X
துட்டு- தெலுங்கு X
ஆட்டோரிக்ஷா - ஆங்கிலம் X
போலீஸ் - ஆங்கிலம் X
ஏட்டு - ஆங்கிலம் √

அபி அப்பா said...

A2= eettu so english

A1,A2,A3 thease are all revenyu deparment grades.

ஹரன்பிரசன்னா said...

01. கள்ளச் சாவி
02. பிரோ
03. துட்டு
04. பப்பாளி
05. சப்போட்டா
06. சுமார்
07. கில்லாடி
08. ஆட்டோ ரிக்ஷா
09. தகவல்
10. போலீஸ்
11. ஏட்டு
12. துப்பாக்கி
13. தோட்டா

ulagam sutrum valibi said...

சாவி,,பிரோ,,கோணிப்பை,,சுமார்,,கில்லாடி,,ஆட்டோ,,ரிக் ஷ,,தகவல்,,போலீஸ்,,ஏட்டு,,இவைகள் அணைத்தும் தமிழ் வார்தைகளில்லை.
பிரோ-பிரஞ்சு-அலுவலகம் என்று போருள்..ஆட்டோ-பிரஞ்சு-ஊர்திஎன்று பொருள்,,போலீஸ்-ஜெர்மெனி என்று நினைக்கிறேன்

Anonymous said...

கள்ளச் - malayalam
சாவி - arabic்
பிரோ - french
துட்ட - kannada
பப்பாளி - hindi (?)
சப்போட்டா - spanish (?)
கில்லாடி - persian (?)
ஆட்டோ - greek
ரிக்ஷா - bengali (?)
போலீஸ் - latin/italian (?)
ஏட்டு - english

ஆமாம், நீங்க போட்டூள்ள படத்தில் இருப்பவர் யார்? திருமாவளவனா?

IdlyVadai said...

ulagam sutrum... பிரோ சரி. மற்றவை தவறு.
மேல் சொன்ன லிஸ்ட் சரி. இன்னும் இருக்கு என்பது தான் வேடிக்கை

IdlyVadai said...

ஹரன் பிரசன்னா எங்கடா நீங்க காணோம் என்று பார்த்தேன். இன்னும் கொஞ்சம் இருக்கு

IdlyVadai said...

கள்ளச் - malayalam X
சாவி - arabic் X
பிரோ - french _/
துட்ட - kannada X
பப்பாளி - hindi (?) X
சப்போட்டா - spanish (?) _/
கில்லாடி - persian (?) X
ஆட்டோ - greek _/
ரிக்ஷா - bengali (?) X
போலீஸ் - latin/italian (?) _/
ஏட்டு - english _?

பாலா உங்களுக்கு ஒரு சபாஷ்.

ஆமாம் அது திருமாவளவன் தான் 'அன்பு தோழி' படத்தில். யாரை குறி பார்க்கிறார் என்று படம் வந்த பின் தான் தெரியும்

Geetha Sambasivam said...

ஹிந்தியில் பப்பாளிக்கு "பபியா" இல்லாட்டி "பபிதா"னு சொல்லித் தான் பார்த்திருக்கேன். பப்பாளின்னு சொல்ல மாட்டாங்க. இது சென்னைத் தமிழ்.

Anonymous said...

ரிக்ஷா - ஜப்பானிய சொல்.. ??

IdlyVadai said...

கீதா சாம்பசிவம் - ஓ அப்படியா
ரிச்ஷா அனானி - சரி.

Floraipuyal said...

பப்பாளி - arawakan (papaya)
சாவி - தமிழ் (கல்)?? - greek (ki) - latin (clavis) - portuguese (chave)
பீரோ - தமிழ் (புகர்)?? - latin (burra) - french (bureau)
துட்டு - தமிழ் எட்டு?? - greek (okto) - french (huit) - old norse (thveite) - dutch (duit)
கோணி - தமிழ்?
சப்போட்டா - aztec (tzapotl)
சுமார் - தமிழ் (சமர்)?
ஆட்டோ - greek
ரிக்ஷா - தமிழ் (ந)ரன் (வ)லு ச(கடு) ?? - chinese (ren li che) - japanese (riki sha)
தகவல் - arabi (dakkal)
போலீஸ் - தமிழ் (புரம்) - sanskrit (புர்) - greek (politeia) - latin (politia) - french ( policie )
ஏட்டு - தமிழ் (கம்)?? - german (haupt) - english (head)
துப்பாக்கி - தமிழ் பக, உறு ?? - french (arme a feu) - romanian (arma de foc) - turk ( tufek )
தோட்டா - urdu ( tota)
கில்லாடி - marati (khela du) ?

கேள்விக்குறி இட்டிருப்பவை என் கணிப்புகள்.
இரட்டைக் கேள்விக்குறிகள் PIE என்று குறிக்கப்படும் மொழியை மூலமாகக் கொண்டவை. தமிழாக இருக்கலாம் என்பது என் கருத்து.

IdlyVadai said...

பப்பாளி - arawakan (papaya) X
சாவி - தமிழ் (கல்)?? - greek (ki) - latin (clavis) - portuguese (chave) _/
பீரோ - தமிழ் (புகர்)?? - latin (burra) - french (bureau) _/
துட்டு - தமிழ் எட்டு?? - greek (okto) - french (huit) - old norse (thveite) - dutch (duit) _/
கோணி - தமிழ்? X
சப்போட்டா - aztec (tzapotl) X
சுமார் - தமிழ் (சமர்)? X
ஆட்டோ - greek _/
ரிக்ஷா - தமிழ் (ந)ரன் (வ)லு ச(கடு) ?? - chinese (ren li che) - japanese (riki sha) _/
தகவல் - arabi (dakkal) _/
போலீஸ் - தமிழ் (புரம்) - sanskrit (புர்) - greek (politeia) - latin (politia) - french ( policie ) _/
ஏட்டு - தமிழ் (கம்)?? - german (haupt) - english (head) _/
துப்பாக்கி - தமிழ் பக, உறு ?? - french (arme a feu) - romanian (arma de foc) - turk ( tufek ) _/
தோட்டா - urdu ( tota) _/
கில்லாடி - marati (khela du) ? _/

சிலவற்றுக்கு இரண்டு மூன்று விடை கொடுத்திருக்கிறீர்கள். அதில் ஒன்று சரி என்றாலும் _/ போட்டிருக்கிறேன். பாராட்டுக்கள்.

Sridhar V said...

//சிலவற்றுக்கு இரண்டு மூன்று விடை கொடுத்திருக்கிறீர்கள். //

அது இரண்டு மூன்று அல்ல... etymology என சொல்லப்படும் சொற்களின் மூலத்தை சொல்லியிருக்கிறார். அதில் சிறப்பு அவர் 'PIE' என்ற ஆதி மொழியை தமிழாக இருக்கலாம் என்று சொல்லியிருப்பது. அது உண்மையென்றால் இவைகளில் பலச் சொற்கள் தமிழே. மரூஉ என்று வேண்டுமானால் கூறலாம்.

FloraiPuyal-க்கு மிக்க நன்றி.

Anonymous said...

வீட்டுக் கதவை கள்ளச் சாவியால் திறந்து பிரோவில் இருந்த துட்டையும், கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும், சப்போட்டாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோரிக்ஷாவில் தப்பி ஓடியபோது, தகவல் அறிந்து போலீஸ் ஏட்டு விரட்டி துப்பாகியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக் கட்டின"

நைனா அப்பாலிக்கா என் கையான்ட தெரிஞ்சு இந்தான்ட எங்கேயும் டமிலே வேர்ட்ஸே் இல்ல
:)))

Floraipuyal said...

ஒரு சிறு விளக்கம்..

பபாயா என்பது மேற்கிந்திய மொழியான அரவகான் மொழிச்சொல். அதிலிருந்து ஸ்பானிய மொழிக்கும் பிற மொழிகளுக்கும் பரவியது.

பிளத்தல் என்ற பொருளுடைய PIE சொல் கி என்பதிலிருந்து இலத்தீனத்தின் clavis என்ற சொல்லும் பின் அதிலிருந்து போர்த்துகீசியத்தில் chave என்றும் பின் தமிழில் சாவி என்றும் ஆகியது. இந்த கி என்ற சொல்லைப் பார்க்கும் பொழுது தமிழின் கல், கில் ஆகிய வேர்ச்சொற்களுடன் பொருந்துவதால் தமிழ் மூலமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

தமிழில் புகர் என்னும் சொல் brown என்னும் பொருள்படும். மீண்டும் ஆய்வாளர்கள் PIE என்பதோடு நிறுத்தி விடுகின்றனர். பெரோஸ் என்னும் PIE சொல்லிலிருந்து கிளைத்த burra என்ற இலத்தீனச்சொல் ஃப்ரெஞ்சு மொழியில் bureau என்று வழங்குகிறது. dark brown cloth covering for a desk என்று வழங்கப்பட்டது பின் மேசைகளையும் மேசைகள் நிறைந்த அலுவகங்களையும் குறிக்க பொருள் நீட்சி பெற்றுள்ளது.

duit என்ற டட்சு மொழிச்சொல் பழைய நோர்ஸ் மொழியிலிருந்து வந்தது. எட்டில் ஒரு பங்கு பணம் என்ற பொருளிலிருந்து நீட்சி பெற்று coin என்ற பொருளில் இன்று டட்சு மொழியில் வழங்கப் படுகிறது. இதன் தொடக்கமும் ஆக்டோ என்ற கிரேக்க மொழிச் சொல்லும் அதிலிருந்து கிளைத்த huit என்ற ஃப்ரெஞ்சு சொல்லுமேயாகும். மீண்டும் PIE.

கோணி என்ற அளவைக்குறிக்கும் தமிழ்ச்சொல் goni என்று செங்கதத்திற்கும் பின் gunny என்று ஆங்கிலத்திற்கும் சென்று கடைசியில் gunny sac - கோணிப்பை என்று தமிழிற்கு திரும்புகிறது.

பண்டைய aztec மொழியில் tzapotl என்பது இனிய பழங்களைக் குறிக்கும் சொல். இதிலிருந்து வந்தது சபோட்டா என்ற சொல்.

சமர் என்ற பாரசீக சொல்லும் தமிழ் மூலமாக இருக்கலாம். ஏறக்குறைய ஒரே பொருளில் தான் வருகிறது. தெளிவாகத் தெரியவில்லை.

ஆட்டோ - இக்கிரேக்கச் சொல்லின் மூலம் தெரியவில்லை.

ரிக்ஷா என்ற சொல்லின் மூலம் சீனச் சொற்களான ரென் - மனிதன், லு - வலு, ச - வண்டி. சப்பானிய மொழியில் இச்சொற்கள் திரிந்து ரி கி ஷா என்று வழங்குகிறது. இச்சீனச் சொற்களின் பண்டைய பலுக்கல் நான் குறித்த தமிழ்ச்சொற்களைப் போன்றே இருக்கிறது.

தக்கல் என்ற அரபிச் சொல்லிலிருந்து வந்தது தகவல். இதற்கும் மூலம் தெரியவில்லை.

தமிழ், சங்கத புரம் கிரேக்கத்தில் politeia என்று குமுகத்தை வழங்க பயன்படுத்தப்பட்டது. பின்பு இலத்தீனத்திற்கும் ஃப்ரெஞ்சுக்கும் சென்றது. city என்றும் civil administration என்றும் பின் காவல்துறை என்றும் பொருள் நீள்கிறது.

head என்ற சொல்லின் மூலமும் PIE என்று கூறுகின்றனர். கபுத் என்னும் இச்சொல்லின் மூலம் தமிழின் கம் என்பதாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

பக மற்றும் உறு என்ற தமிழ்ச்சொற்கள் வழமை போல் பயணித்து கடைசியில் fire, arms என்று மாறும். இதிலிருந்து கிளைத்தவை arme de feu, arma de foc மற்றும் tufek. இது துப்பாக்கி, துவாக்கி என்று நாவலந்தீவில் இன்று வழங்கப்படுகிறது.

தோட்டா மற்றும் கில்லாடி ஆகியவற்றுக்கும் மூலம் தெரியவில்லை.

IdlyVadai said...

Sridhar Venkat ஆமாம். நன்றி.
FloraiPuyal மிக அழகான விளக்கங்கள். எனக்கு வந்த மிக சில நல்ல பின்னூட்டங்களில் இதுவும் ஒன்று. மிக்க நன்றி.

IdlyVadai said...

FloraiPuyal விடை இன்னும் கொஞ்சம் நேரத்தில் போடுகிறேன், பிறகு அந்த சொல் எப்படி வந்தது என்று முடிந்தால் போடுங்கள், பயனுள்ளதாக இருக்கும்.

Arun said...

IV, its 12:21........ ;-)

IdlyVadai said...

அருண் விடை போட்டுவிட்டேன் :-)

Sridhar V said...

அருமையான புதிருக்கு நன்றி. அங்கே 'கடை'யை மூடி விட்டதால் இங்கு பின்னூட்டமிடுகிறேன்.

பதிலோடு - FloraiPuyal-ன் இரண்டு பின்னூட்டங்களையும் சேர்த்து அந்த பதிவில் பதிப்பித்தால் பிற்பாடு தேடுகிறவர்களுக்கு வசதியாக இருக்கும்.

Haran said...

பப்பாளி - from Carib via Spanish
சாவி - greek (ki) - latin (clavis) - portuguese (chave)
பீரோ - latin (burra) - french (bureau)
துட்டு - greek (okto) - french (huit) - old norse (thveite) - dutch (duit)
கோணி - gunny-sack, which ultimately comes from the Sanskrit word gonī, meaning "jute or hemp fiber
சப்போட்டா - greek??
சுமார் - portugese
ஆட்டோ - greek
ரிக்ஷா - chinese (ren li che) - japanese (riki sha)
தகவல் - arabi
போலீஸ் - greek (politeia) - latin (politia) - french ( policie ) (இதில் பொலி/பொழி என்பது தமிழில் இருந்து வந்ததாகக் கருதுவோரும் உள்ளனர், அதுவே பொலிரிசன், பொலிஸ், பொலிசி, பொலிடிக்ஸ் போன்ற சொற்கள் வரக் காரணம் என கேள்விப் பட்டிருக்கிறேன்... பொழி என்பதன் பொருள்... ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதன் பொழிவுக்காக (அதாவது அதன் முன்னேற்றத்திற்காக) உருவாக்கப்படும் நோக்கம் என்பதாகும்.

ஏட்டு - german (haupt) - english (head)
துப்பாக்கி - french (arme a feu) - romanian (arma de foc) - turk ( tufek )
தோட்டா - urdu
கில்லாடி - marati