பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 16, 2007

சென்னை வெயில்

இன்று தினத்தந்தியில் வந்த செய்தி:

அக்னி நட்சத்திர வெயில் சென்னை நகர் மக்களை வறுத்து எடுக்கிறது. 108 டிகிரி, 109 டிகிரி என்று ஒவ்வொரு நாளும் வெயில் அளவு உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு நாளைக்கு சென்னையில் ஒரு நாளைக்கு 1 லட்சம் இளநீர்கள் விற்று தீர்ந்துவிடுகிறது.


சென்னையின் மக்கள் தொகை 4,352,932 அதாவது 2.2% ஆட்கள் இளநீர் சாப்பிடுகிறார்கள். இதை தவிர மக்கள் லஸ்சி, பெப்சி, கோக் என்று சாப்பிடுகிறார்கள். எல்லா கடைகளிலும் 2 லிட்டர் பெட் பாட்டில்கள் நல்ல விற்பனை ஆகிறது. ஒரு இளநீர் விலை பல இடங்களில் மாறுபடுகிறது, குறைந்த விலை 12-15 அதிகபட்ச விலை 20.

தி.நகர் நல்லி பக்கத்தில் இருக்கும் ஆவின் பூத் பக்கத்தில் பத்து நிமிஷத்தில் எவ்வளவு மோர், லஸ்சி, ஐஸ்கிரிம் விற்பனை என்று ஒரு கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.

ஆழ்வார்பேட்டை Carnival ஹோட்டல் பக்கத்தில் இருக்கும் ஜூஸ் கடையில் ஏதோ கலவரம் போல மக்கள் கூட்டம்.

வீட்டினுள் ஃபேன் இல்லாமல் ஒரு நாள் வீட்டில் இருந்தீர்கள் என்றால் கின்னஸுக்கு செல்லலாம். சிலருக்கு குளிக்கும் போது கூட ஃபேன் தேவைப்படுகிறது. நிறைய இடங்களில் அதிமுக, திமுக தண்ணீர் பந்தல் இருக்கிறது. மிடில் கிளாஸ் எல்லோரும் ஏசி இல்லாமல் இருப்பதில்லை.

கடைகாரர்கள், ஆட்டோ ஓட்டுனர், பஸ் கண்டெக்டர் என்று எல்லோரும் வெயிலினால் எரிஞ்சி விழுகிறார்கள். சென்னை வலைப்பதிவர்கள் எழுதும் பதிவுகளை படித்தால் அன்றைய வெயிலின் தாக்கம் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளலாம். இந்த வெயிலினால் சன் டிவி கூட சமீபத்தில் பாதிப்பு அடைந்தது என்பது குறிப்பிடதக்கது.

நமக்கே இப்படி என்றால் குடிசையில் வாழும் ஏழைகள் ?

7 Comments:

Ram Ravishankar said...

//இந்த வெயிலினால் சன் டிவி கூட சமீபத்தில் பாதிப்பு அடைந்தது என்பது குறிப்பிடதக்கது//

சென்னையா அல்லது மதுரையா? :-)

IdlyVadai said...

நீங்க சென்னையா ?

வடுவூர் குமார் said...

ஒரு அறைக்கு ஒரு மின்விசிறி பத்தவில்லை.மூன்று இருந்தாலும் வீட்டிற்குள் நிற்பது கஷ்டமாக இருந்தது.
இதற்கு காரணம் வெய்யில் என்றாலும் அருகருகே கட்டப்பட்டுள்ள வீடுகளால் காற்றோட்டம் தடைப்பட்டு இயற்கையான காற்று உள்ளே வரமுடியாமல்,நான் அவதிப்படுகிறோம்.

Ram Ravishankar said...

//நீங்க சென்னையா ?//

yes I grew up there .. but long forgotten the wrath of 106+ (and local ராஜதந்த்ரிs)

Anonymous said...

mansuppaya maratha vetturan, ippa vaili vail pulampuran,oru maratha nadukampa.unga kulanthayavathu nilalil valladum

ஸ்ரீ சரவணகுமார் said...

//நமக்கே இப்படி என்றால் குடிசையில் வாழும் ஏழைகள் ?//

இவ்வளவு வசதிகள் இருந்தும் நாம் பெரிதாக அலட்டிக்கொள்கிறோமே..மின்சார வசதி கூட இல்லாமல் அவர்கள் என்ன செய்வார்கள்.

Anonymous said...

//நமக்கே இப்படி என்றால் குடிசையில் வாழும் ஏழைகள் ?//

குடிசை கூட இல்லாத ஏழைகள், பிளாட்ஃபாரட்தில் இருப்பவர்களின் நிலை??