பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 15, 2007

நான் என்ன செய்யனும் ? - பிரதமர்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி ராஜினாமா செய்ததால் இந்த பதவிக்கு ஏ.ராஜா இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் பதவிக்கு ரகுபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமரின் பரிந்துரையை ஏற்று இதற்கான உத்தரவுகளை இன்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது.

கலைஞரின் பரிந்துரையை பிரதமர் ஏற்றார், அவரின் பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றார். இங்கு பரிந்துரையை உத்திரவு என்று படிக்கவும்.

தன்னுடைய மந்திரி சபையை முடிவு செய்யும் உரிமை கூட பிரதமருக்கு இல்லை. பாவம் அவர் என்ன செய்வார், கூட்டணி தர்மம். இந்திய கிரிக்கெட் டிமுக்கும் இதற்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை ? யார் தகுதியானவர் என்று பார்க்காமல், அந்த இலாகா தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்ற பிடிவாதம் ஒரு தப்பான முன்னுதாரனமாக இருக்க போகிறது. நாளை இதே போல் வேறு ஒரு அரசியல் கட்சி டிமாண்டு செய்யும். இந்தியாவிற்கு இது நல்லதல்ல.

இதே போல் தான் வாஜ்பாய் முன்பு கஷ்டபட்டார். இன்று மன்மோகன் சிங் அதைவிட மோசமாக கஷ்டப்படுகிறார்.

தயாநிதி மாறன் தன்னுடைய ராஜினாமாவை தாத்தாவிடம் கொடுத்த போது, "நான் போஸ்ட் ஆபிஸ் இல்லை, ராஜினாமாவை பிரதமரிடம் கொடுக்கவும்" என்று சொன்னாராம். நேராக ஜனாதிபதிக்கே கொடுத்திருக்கலாம், பிரதமர் என்ன சொல்ல போகிறார்

உள்துறை செயலாளரை மிரட்டினார் என்று செய்தி். (வரியா ஒத்தைக்கு ஒத்தை? என்று சொல்லியிருக்க மாட்டார் என்று நம்புவோம்? ). தயாநிதி மாறனுக்கு டாட்டவுக்கும், தாத்தாவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

பிகு: பிரதமருக்கு என்னுடைய பிரிஸ்கிரிப்ஷன்: பலம் கூட டப்பா டப்பாவா விட்டமின் மாத்திரைகள்.

( இட்லிவடையில் செய்தி விமர்சனம் இல்லை என்றார் விக்கி அதற்காக இந்த பதிவு )

2 Comments:

Indian Voter said...

வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது, தன் கட்சி மந்திரிகளின் இலாகாக்களை முடிவு செய்யும் அதிகாரமாவது அவருக்கு (பல சமயங்களில்) இருந்தது. மன்மோகன் பாவம். சோனியாவின் செயலாளருக்கு இருக்கும் அதிகாரம் கூட அவருக்கு கிடையாது.

Anonymous said...

// இட்லிவடையில் செய்தி விமர்சனம் இல்லை என்றார் விக்கி அதற்காக இந்த பதிவு

நன்றிங்கணோவ் :)

// தன்னுடைய மந்திரி சபையை முடிவு செய்யும் உரிமை கூட பிரதமருக்கு இல்லை

// யார் தகுதியானவர் என்று பார்க்காமல், அந்த இலாகா தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்ற பிடிவாதம் ஒரு தப்பான முன்னுதாரனமாக இருக்க போகிறது.

கூட்டணி யுகத்தில் பேரமே என்னென்ன பவர்புல் அமைச்சகம், எத்தனை அமைச்சகம் என்றுதான் துவங்குகிறது. இந்த நிலையில் தகுதியை பார்த்து இலாகாவை கொடுக்கும் அதிகாரம் பிரதமரின் கையைவிட்டு போய் 10 வருடத்திற்கு மேலாகி விட்டது