பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 14, 2007

தயாநிதி மாறன் பேட்டி

நான் திமுகவுக்கு என்ன துரோகம் செய்தேன்; கட்சிக்கு என்னால் என்ன களங்கம் ஏற்பட்டது என்று கட்சித் தலைவர் கருணாநிதியை கேட்பேன் என்று மத்திய அமைச்சர் பதவியி லிருந்து விலகும் தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக்கியதைவிட கட்சிக்கு துரோகம் செய்ததாக கூறிய குற்றச்சாட்டுதான் தன்னை மிகவும் வேதனைப்படுத்து வதாக அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தன்னை விலக்கினாலும், இறுதிவரை திமுக அனுதாபியாகவே இருப்பேன் என்றும் அவர் கூறினார்.
முழு பேட்டி மற்றும் செய்திகள் கீழே....

"நான் மற்ற அரசியல்வாதிகளைப் போல இல்லை. என் கட்சிக்கு எதிராகவோ, கட்சித் தலைமைக்கு எதிராகவோ எந்த கருத்தையும் நான் தெரிவிக்க மாட்டேன். இது தொடர்பான சிக்கலான கேள்விகளை யாரும் என்னிடம் கேட்க வேண்டாம்'


கேள்வி:- உங்கள் மீது யாரோ தவறாக பழி சுமத்தி உள்ளதாக கூறி உள்ளீர்களே? யார் அவர்?

பதில்:- அதை நான் சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கே அது தெரியும்.

கேள்வி:- தினகரனில் கருணாநிதியின் வாரிசு யார் என்ற கருத்து கணிப்பை வெளியிட வேண்டாம் என்று நான் கேட் டுக் கொண்டேன். ஆனால் எனது பேச்சை கேட்கா மல் கருத்துக்கணிப்பை வெளியிட்டு விட்டார்கள் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார். தினகரன் பத்திரி கையை நடத்துவது உங்கள் சகோதரர்தான். எனவே தி.மு.க.வை சேர்ந்தவர் என்ற முறையில் நீங்கள் கருத்துக் கணிப்பை நிறுத்த முயற்சி செய்தீர்களாப

ப:- எனக்கும், தினகரனுக்கும், சன் டி.வி.க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கேள்வி:- உங்களை மத்திய மந்திரி பதவியில் இருந்து நீக்கியதால் தி.மு.க.வினர் யாரேனும் உங்களை தொடர்பு கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்களா?

ப:- என்னிடம் யாரும் பேசவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.

கேள்வி:- மு.க.ஸ்டாலினுக்கும், உங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறதே?

ப:- எங்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு நன்றாக இருக்கிறது.

கேள்வி:- கட்சிக்குள் சமாதானம் ஏற்பட்டு, முதல்-அமைச்சர் கருணாநிதி உங்களை அழைத்து மீண்டும் மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

ப:- ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

கேள்வி:- பிரதமரை வரவேற்பதற்காக விமானநிலையம் வரை வந்த நீங்கள் கலைஞ ரின் பொன்விழா நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை?

ப:- ஆரம்பத்திலேயே இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டாம் என்று கூறினேனே.

கேள்வி:- நீங்கள் காங்கிரசில் சேரப் போவதாக கூறப்படுகிறதே?

ப:- (சிரித்துக் கொண்டே) யார் சொன்னது.

* தயாநிதி மாறன் இன்று காலை 10.30 மணிக்கு பேட்டி அளிப்பதாக நிருபர்களுக்கு தகவல் அளிக் கப்பட்டது. ஆனால் 8.30 மணிக்கு எல்லாம் அவரது வீட்டு முன்பு பத்திரிகை நிருபர்களும், போட்டோ கிராபர்களும், தனியார் டெலிவிஷன் கேமிராமேன்களும் குவிய தொடங்கினார்கள்.

* முதலில் அவரது வீட்டினுள் வைத்து பேட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் திரண்டதால் அங்கு இட நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து வீட்டு வரண்டாவில் வைத்து பேட்டி நடந்தது. 11.15 மணிக்கு வந்து அவர் 45 நிமிடம் பேட்டிக் கொடுத்தார்.

* தயாநிதிமாறன் பேட்டி அளிக்கும் பொழுது அவருக்கு பின்னால் அவரது தந்தை முரசொலிமாறன் படத்தை உதவியாளர்கள் வைத்தனர். அதை உடனே தயாநிதிமாறன் எடுக்க சொன்னதும் அந்த படத்தை வீட்டின் பின்னால் அவர்கள் வைத்தனர்.'தமிழ் முரசு' மீது உரிமை மீறல் நடவடிக்கை
சன் டிவி-தினகரன் குழுமத்தின் மாலை தினசரியான தமிழ் முரசு மீது சட்டசபையில் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி-மாறன் குடும்ப மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

சன் டிவி-தினகரன் குழுமம் நடத்தி வரும் மாலை நாளிதழ் தமிழ் முரசு. மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என சில தினங்களுக்கு முன் சட்டசபையில் கருணாநிதி அறிவித்தார்.

அந்தச் செய்தியை தமிழ் முரசு திரித்து வெளியிட்டதாக இன்று சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானம் ெகாண்டு வந்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரன். அவர் பேசுகையில்,

முதல்வர் சொன்னதை தமிழ் முரசு பத்திரிக்கை திரித்து வெளியிட்டது. அதில் அழகிரியையும் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டது. இதனால் அதன் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், ஞானசேகரன் ெசால்லும் குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. எனவே அதை உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப உத்தரவிடுகிறேன் என்றார்.


6 Comments:

Anonymous said...

//முதல்வர் சொன்னதை தமிழ் முரசு பத்திரிக்கை திரித்து வெளியிட்டது//

இட்லிவடை... அந்த நியூஸ் ப்ளீஸ்.....

We The People said...

//அந்தச் செய்தியை தமிழ் முரசு திரித்து வெளியிட்டதாக இன்று சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானம் ெகாண்டு வந்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரன். அவர் பேசுகையில்,

முதல்வர் சொன்னதை தமிழ் முரசு பத்திரிக்கை திரித்து வெளியிட்டது.//

அட முதல்வருக்கு திரித்து சொன்னா தப்புன்னு முன்னாடியே தெரியுமா? என்றாவது ஒரு நாள் திரிக்காமல் செய்தி வெளியிட்டுள்ளதா தமிழ்முரசு??

ஹோ! கருணாநிதி சொல்வதை மட்டும் திரித்துச் சொல்லக்கூடாதுன்னு சொல்லவறாங்களா??

என்ன கொடுமை சார் இது!!!

IdlyVadai said...

பிரகாஷ் 10ஆம் தேதி தமிழ் முரசின் தலைப்பு "சி.பி.ஐ. விசாரிக்கும் அழகிரி நடத்திய படுகொலைகள்- சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு " என்று வந்திருந்தது. அன்று சட்டசபையில் முதல்வர் அறிக்கையில் அழகிரி என்று எங்கும் குறிப்பிடவில்லை.

Anonymous said...

நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

//IdlyVadai said...
பிரகாஷ் 10ஆம் தேதி தமிழ் முரசின் தலைப்பு "சி.பி.ஐ. விசாரிக்கும் அழகிரி நடத்திய படுகொலைகள்- சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு " என்று வந்திருந்தது. அன்று சட்டசபையில் முதல்வர் அறிக்கையில் அழகிரி என்று எங்கும் குறிப்பிடவில்லை.
//

இது இட்லிவடை ஸ்பெஷல். வாழ்த்துக்கள்.

News from Prasanna said...

Saibaba modirathoda effectnu sollalaye