பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 28, 2007

அழகிரி கேள்வி - முதல்வர் டென்ஷன்

மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக ஜெயா டிவி நிருபர் கேட்ட கேள்வியால் கோபம் அடைந்த முதல்வர் கருணாநிதி, அவரை ஒருமையில் விளித்து கடுமையாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் கருணாநிதி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர். காரில் இருந்தபடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் கருணாநிதி.

அப்போது ஜெயா டிவி நிருபர் மதுரையில் தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு மு.க.அழகிரிதான் காரணம் என்று கூறுப்படுகிறதே என்று கேட்டார்.

இதைக் கேட்டதும் கடும் கோபமடைந்தார் கருணாநிதி. மிகக் கடுமையாக அவரை நோக்கி, எதுடா தெரிந்த உண்மை. நீதாண்டா கொலை செய்தாய், போடா என்று கூறினார். இதையடுத்து முதல்வரின் கார் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

ஜெயா டிவி நிருபரை நோக்கி முதல்வர் கருணாநிதி ஒருமையில் விளித்து கடுமையாக பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

( செய்தி: தட்ஸ் தமிழ் )

28 Comments:

Anonymous said...

'வர்றியா ரெண்டு பேரும் சேந்து அழகிரிய தூக்குல போடுவோம்'னு தான சொல்லியிருக்கணும். அதான அவர் ஸ்டைலு.

Anonymous said...

//எதுடா தெரிந்த உண்மை. நீதாண்டா கொலை செய்தாய், போடா என்று கூறினார். //

இது தாண்டா திராவிட பாரம்பரியம் / நாகரிகம்

Anonymous said...

//எதுடா தெரிந்த உண்மை. நீதாண்டா கொலை செய்தாய், போடா என்று கூறினார். //


குற்றமுள்ள நெஞ்சு!

பங்காளி... said...

பத்திரிக்கையாளர்கள் எளிதில் நெருங்க முடிகிறது என்கிற ஒரே காரணத்திற்காக அரைவேக்காட்டுத்தனமாய் கேள்வி கேட்டால் கிடைக்கிற குறைந்த பட்ச பதிலடியாகத்தான் இதை பார்க்கிறேன்....

ஜெயா டிவி நிருபருக்கு உண்மையிலேயே தனது பத்திரிக்கை தர்மம் மீது அவ்வளவு அக்கறை இருந்தால் ஒரு எட்டு மதுரையில் போய் அழகிரியிடம் கேட்டு பார்க்க வேண்டியதுதானே இந்த கேள்வியை....

ஜெயா டிவியின் மலிவான ஸ்டண்ட் நாடகமிது.

Anonymous said...

அவரே கேள்வி தயாரித்து அதற்கு அவரே(!!!!!??? ரொம்ப கஷ்டமான வேலை தான்) பதிலும் தந்து, பின்னர் அதனை அவரே ஒரு 'கவரில்' போட்டும் தரும் அன்பு மிகு அவர் தம் கோபம் என்ன செய்யும்!! என்பதனினை அவரது பத்திரிக்கையாள நண்பர்கள் (!!!!!???) அறிவார்கள்.

அவர் ஒரு எழுத்தாளர், ஒரு பத்தரிக்கையாளர்,படைப்பாளி,கவிஞர்
மொத்தத்தில் அவர் ஒரு கலைஞர்.

உண்மைத்தமிழன் said...

திராவிடக் கலாச்சாரத்தில் ஊறிப் போனராச்சே.. வேறு எப்படி பேசுவார்?

Anonymous said...

//பத்திரிக்கையாளர்கள் எளிதில் நெருங்க முடிகிறது என்கிற ஒரே காரணத்திற்காக அரைவேக்காட்டுத்தனமாய் கேள்வி கேட்டால் கிடைக்கிற குறைந்த பட்ச பதிலடியாகத்தான் இதை பார்க்கிறேன்....
//
பங்காளி...னி ஒரு அல்லக்கை என்பது தெலிவாக தெரியுது.

கன்னும் அரிவும் இல்லாமல் பகுதரிவு பேசாதெ......

Subramanian said...

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
கேட்ட கேள்விக்குச் சரியான பதில்.

dondu(#11168674346665545885) said...

இதை ஜெயா டிவி செய்தியில் காட்டினார்கள். முதல்வர் முகத்தில் என்ன குரூரம்? என்ன கோபம்?

இவ்வளவு நாட்கள் ஆகியும் அழகிரிக்கு எதிராக ஒரு விசாரணை கூடக் கிடையாது. மூவர் இறந்தனர், இந்தப் பெரிய மனிதருக்கு தனது பொன்விழா முக்கியமாகப் போயிற்று.

என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அது வேறு ஒன்றுமில்லை. தன்னை ஒரு பத்திரிக்கைக்காரன் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் ஒரு சகோதரனின் அன்னியோன்யத்துடன் பேசியிருக்கிறார் அவ்வளவுதான்.

Boston Bala said...

:(

பந்தம்... பாச பந்தம்
கருவறை தொடங்கி காலங்கள்தோறும் கடவுள் மாட்டிய கைவிலங்கு :)

Anonymous said...

ஐய்யா வலையுலகவாசிகளே, யாராவது ஜெயா டிவி நியூஸ் கிளிப்பிங் இருந்த காட்டுங்கப்பா!!!

Anonymous said...

//எதுடா தெரிந்த உண்மை. நீதாண்டா கொலை செய்தாய், போடா என்று கூறினார். //

He is now confused becaz of his family problems...His mind is disturbed....Its clearly visible...Lets see what all PEARLS he is going to drop from his mouth....

Anonymous said...

Yen intha seithi entha pathirikai mattrum tholaikatchi ivatril oliparapa villai(Jaya TV thavira)...even Dinamalar???

Will it be the same if Jayalalitha answered like this???

-Vivek

Anonymous said...

This shows how uncivilized this self-proclaimed, yellow-towel-wearing, rational "thinker"; even at the age of 85!! This man never stopped me from getting amazed. His PDA (public display of anger/arrogance) is well known.

Anonymous said...

idlyvadai ,it is not surprise that mk would react in this manner given his track record.but i would also remember that he is an old man and probably realises he cannot turn the clock back anymore. sad old man if one just looks at these issues.
as for the reporter i think he was gutsy,may be too young,that is why, to prop the question when all the media are writing about azhagiri endlesly without asking mk openly.i would say the media is spineless in a way.

Anonymous said...

இந்த லட்சணத்தில் "எப்படியிருந்த அரசியல் தரம் இப்படி ஆகிவிட்டது" என்று சட்டசபையில் ஒரு உணர்ச்சி ததும்ப ஒரு அழுகை வேறு...

ரவுசு தாஆஆஆஆஆங்ங்கலப்பா!!!

என்னே தமிழகத்துக்கு வந்த சோதனை!

Anonymous said...

நண்பர் ஒருவர் சொன்னது போல டி.வி. செய்தியில் இதை பார்த்தேன். நிருபர் கேட்ட கேள்வி வேண்டுமென்றே வம்பிக்கிழுப்பது போல இருந்தாலும், இன்றைய பத்திரிகை நிருபர்கள் பெரும்பாலும் சங்கட மான கேள்விகளையே வீசுகிறார்கள். பிரணாய் ராய், கரன் தாப்பர் போன்றோர் கேட்காத sensitive கேள்விகளா. இந்தக் கேள்வியை அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட, 50 ஆண்டுகளாக சட்டசபையில் பணிபுரிந்து மரபுகளை அறிந்த, காமராஜர், ராஜாஜி போன்றோருடன் தரமான அரசியல் நடத்தியதாக கூறிக்கொள்ளும் முதல்வர் எப்படி எதிர் கொண்டிருக்க வேண்டும் ? 'வழக்கு சி.பி.ஐ விசாரணையில் இருக்கிறது என்றோ இல்லை 'சட்டம் தன் கடமையைச் செய்யும்' என்றோ சொல்லியிருக்கலாம். குறைந்த பட்சம் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று சொல்லியிருக்கலாம். அதை விட்டு நீ தாண்டா கொலை செய்தாய் என்று கோபம் கொப்பளிக்க உதடு துடிதுடிக்க அவர் கூறியதைப் பார்க்கும்போது தோன்றியது பரிதாப உணர்ச்சியே.

டி வி காமிரா முன் நின்று பேசுகிறோமே என்ற உணர்வே இல்லாமல் அவர் பேசியதன் காரணம் தமிழக மக்கள் முட்டாள்கள், நாம் என்ன செய்தாலும் தேர்தல் வரும்போது இலவச பிச்சை போட்டால் ஓட்டுப் போடுவார்கள் என்ற திமிரா இல்லை குடும்ப பாசம் அவர் கண்ணை மறைத்ததால் வந்த விளைவா ?

Anonymous said...

கருணாநிதிக்கு குடும்பம் மட்டுமல்ல, அவர் நாக்கும் பலசமயம் காலை வாரிவிடுகிறது.

தேர்தல் சமயத்தில் பல தடவை உளறிவிட்டி முழித்தார். கேபிள் கனெக்ஷனையும் கொடுத்துத் "தொலைக்கிறேன்" என்றார். "மிருக சாதிகள் அடித்துக்கொள்கிறார்கள்" என்றார். பல அல்லக்கைகள் வந்து மூடிக்கொண்டுபோக வேண்டியிருந்தது. இதற்கு முன்னரும் இந்துக்களை "திருடர்கள்" என்று சொல்லி பின்னர் ஏதோ மழுப்பினார்.

வயசான காலத்தில் அவரை நிம்மதியாக இருக்க விடாமல் நாற்காலியோடு தூக்கிக்கொண்டுவந்து இவர்கள் தமிழ்நாட்டுக்காரர்களை ரொம்பதான் வதைக்கிறார்கள்.

IdlyVadai said...

மகேந்திரன்.பெ அவரகள் தன்னுடைய பின்னூட்டம் வரவில்லை என்று எழுதியிருக்கிறார். அந்த மாதிரி பின்னூட்டம் எனக்கு வரவில்லை.
அதன் தொடர்பான பதிவு இங்கே: http://kilumathur.blogspot.com/2007/05/blog-post_29.html

Unknown said...

ஆகா அப்போ ப்ளாகர் என்க்கெதிரா சதி செய்யுதோ? இருந்தாலும் இருக்கும் :)

Madhu Ramanujam said...

முன்பு துரைமுருகனின் சபை நாகரீகத்தைக் கண்டித்து நான் "மரியாதை என்பது என்ன?" என்ற ஓர் பதிவை இட்டேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது, துரைமுருகனுக்கு மட்டுமில்லை அவரின் தலைவருக்கும் சபை நாகரீகம் என்றால் என்னவென்று தெரியாது என்று.

Anonymous said...

செய்தி: தட்ஸ் தமிழ்
Did Mahendran see this.Why blame
IdlyVadai when the source of news
is a website.

Anonymous said...

தெரு நாய்களுக்கு அவர்கள் மொழியில் சொன்னால் தானே புரியும்

Anonymous said...

He would answer TN people the same way. But people would still vote for him. He will rule us and it's our fate.

Anonymous said...

/*****மகேந்திரன்.பெ அவரகள் தன்னுடைய பின்னூட்டம் வரவில்லை என்று எழுதியிருக்கிறார். அந்த மாதிரி பின்னூட்டம் எனக்கு வரவில்லை.
அதன் தொடர்பான பதிவு இங்கே: http://kilumathur.blogspot.com/2007/05/blog-post_29.html ****/

Idlyvadai, why did you provide link to a "kuppai" blog and I do not understand why do you want respect him ("janmam" in Azhagiri style) by humbly providing his link? Really I hate myself I have taken sometime to read that nasty blog.

வெங்கட்ராமன் said...

////////////////////////
'வர்றியா ரெண்டு பேரும் சேந்து அழகிரிய தூக்குல போடுவோம்'னு தான சொல்லியிருக்கணும். அதான அவர் ஸ்டைலு.
////////////////////////

Super Appu . . . . .

Anonymous said...

Idly vadai avargale...nan NALLA MUGAMUDI enbavarku eluthiya following comments avar publish seiavillai...I want u to publish...

//aiyya nalla mugamudi...enga enga posting??? nan ethuvum abasama elutha villaye...entha caste yum thitti eluthali...

yen etharku eduthalum Brahimns endru Caste puranam padukirergal endru dhane ketten....

IDLY Vadai - thatstamil mattrum Dinamalar (Kavanika: Online Tamil news paper udanuku udan varuvathu ithil dhan) eduthu podukirar...seithiyai create seivathu illai endru dhane sonnen...

Aanal nan sonna comment ai post seia velli...
neengal IDLY VADAI patri ini pesakoodathu...nadu nilai thavari vitergal....//