பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 13, 2007

திமுக கூட்டம், தயாநிதி பற்றி முடிவு

தி.மு.க., தலைமை நிர்வாகக் குழு கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது. தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம், நாளை (இன்று) மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இதில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இதில் முக்கியமாக தயாநிதி மாறன் பற்றி முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
சன் டிவி கட்சி என்ன செய்யபோகிறது என்று இன்னும் சில நாட்களில் தெரியும். அரசியலில் எதுவும் நடக்கலாம். தகவல் சேகரித்து சொல்லுகிறேன்.

தயாநிதியை சந்திக்க கலைஞர் மறுப்பு ....


கருணாநிதியைச் சந்திக்க தயாநிதி மாறன் கடந்த 2 நாள்களாக முயற்சித்தார். ஆனால், அவரைச் சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

கருணாநிதியைச் சந்திக்க வந்த தயாநிதி மாறனிடம், "மத்திய அமைச்சர் என்கிற முறையில் அனுமதி பெற்றுக் கோட்டையில் சந்திக்கலாம். திமுகவைச் சேர்ந்தவர் என்ற முறையில் அனுமதிபெற்று அறிவாலயத்தில் சந்திக்கலாம். உறவினர் என்ற முறையில் சந்திக்க முடியாது' என்று கருணாநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், கருணாநிதி வீட்டில் இருந்து வெளியில் வரும்வரை காத்திருந்த தயாநிதி அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

ராஜிநாமாவா? அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், அது தயாநிதி மாறனின் ராஜிநாமா கடிதமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தயாநிதி மாறன் புறக்கணிப்பு: சென்னைக்கு வெள்ளிக்கிழமை கருணாநிதியின் பேரவைப் பொன் விழா நிகழ்ச்சிக்காக வந்த மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரை வரவேற்க விமான நிலையத்துக்கு வந்திருந்த தயாநிதி மாறனிடம் பேசுவதை மற்ற திமுக அமைச்சர்கள் தவிர்த்தனர்.

மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும்கூட அவரிடம் முகம் கொடுத்துப் பேசுவதைத் தவிர்த்தனர்.

தயாநிதி, கலாநிதி உள்ளிட்டோர் தீவுத் திடலில் நடைபெற்ற கருணாநிதியின் சட்டப்பேரவை பணிகளைப் பாராட்டி நடைபெற்ற பிரமாண்டமான விழாவைப் புறக்கணித்தனர்.

மேலும், இந்நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப சன் டி.வி.க்கு அனுமதி மறுக்கப்பட்டது.

உதகைக்குப் பயணம்: இந்நிலையில், சனிக்கிழமை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார் தயாநிதி மாறன்.

6 Comments:

Anonymous said...

SUN vs SON

Anonymous said...

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. தயாநிதி மாறன் யோக்கியன் கிடையாது ஒத்துக் கொள்கிறேன், ஆனால் இந்த விஷயத்தில் சோனியாவும், மன்மோகனும், கம்னியுஸ்டுகளும், காங்கிரசும் நியாயமாகப் பார்த்தால் கருணாநிதியை அல்லவா புறக்கணித்திருக்க வேண்டும்.

ஒரு முதல்வர் தன் கடமையைச் செய்ய்யாததற்காக பிரதமரும், லோக்சபா சபாநாயகரும் நியாயப் படி கருணாநிதிக்கு அல்லவா கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும், கருணாநிதி வெளீப்படையாக தன் மகனின் ரவுடித்தனத்தை ஆதரித்து வருகிறார், அவரது போலீஸ் மூன்று பேர் கொலையை தீ வைப்பை அவரது உத்தரவின் பேரில் கை கட்டி வேடிக்கை பார்த்திருக்கிறது, இப்படிப் பட்ட அயோக்கியனை தவிர்ப்பதை விட்டு விட்டு தயாநிதி மாறனை ஏன் புறக்கணிக்கிறார்கள் ? மன்மோகன் சிங் தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கை காக்காத கருணாநிதியிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும், பொன்விழாவுக்கு வருவதை தவிர்த்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தயாநிதியிடம் முறைப்பானேன்?

அது சரி, அப்படி சூடு சொரனை இருந்திருந்தால் தன் கணவனைக் கொலை செய்த கொலைகாரணுடன் கூட்டு வைப்பார்களா? அவன் பொன்விழாவுக்கு வருகை தருவார்களா?

தங்கள் கவுன்சிலர் லீலாவதியைக் கொன்ற கும்பலின் தலைவன் விருந்து கொடுக்கிறான் அதை வெட்க்மில்லாம கொட்டிக் கொள்கிறார்கள் கம்னியுஸ்டு பிச்சைக்காரர்கள்

இங்கு யாருக்கு வெட்கம் இல்லை, நாளைக்கே தாத்தாவும் பெரனும் கூடிக் குலாவி கொஞ்சிக் கொள்வார்கள் செத்தவனைப் பற்றி யாருக்குக் கவலை?

ஊருக்கு வெட்கமில்லை
இந்த உலகுக்கு வெட்கமில்லை
இங்கே யாருக்கும் வெட்கம் இல்லை

Anonymous said...

எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை What happened?
மதுரை பக்கம் வா விருந்து கொடுக்கிறன் - மு.க.அஷ்கிரி

Vino said...

DMK has decided to withdraw Maran from the union government

Anonymous said...

yappa ninaca mathiri nikidankappa

Anonymous said...

கொடுத்தவணே எடுத்துக்கொன்டாண்டி......

முதல்வர் கருணாநிதி‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍
மே 10, 2007

நடைபெற்ற அந்த வன்முறை சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இவற்றுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படியான நடவடிக்கை இந்த அரசினால் எடுக்கப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்....

நடைபெற்ற செயலுக்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேனசென்னை, மே 14:


சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக தயாநிதி மாறனை மத்திய அமைச்சர்

பதவியிலிருந்து நீக்கும் முடிவு இரவு 8 மணிக்கு எடுக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்தார். உதகமண்டலத்தில் குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்கும் அவர் ராஜிநாமா

கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பினார்.

இதையடுத்து இரவு 10.30 மணி அளவில் ராஜிநாமா முடிவை அறிவித்தார் தயாநிதி மாறன்.

கட்சியிலிருந்தும் நீக்க நோட்டீஸ்: கட்சிக் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் தயாநிதி மாறன் செயல்படுவதால் அதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்புவதென்றும்,