பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 14, 2007

தயாநிதி முன்னேற்ற கழகம்

மதுரை சம்பவம் ஏதோ திடீர் என்று நடந்தது போல் இருந்தாலும் முன்பே இதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது.

சில குறிப்புக்கள்....* மார்ச் 1, ஸ்டாலின் பிறந்த நாள் அன்று தினகரன் முதல் பக்கத்தில் ஒரு குரங்கின் படத்தை போட்டுவிட்டு "குரங்கின் பிறந்த நாள்" என்று உள்ளே அமெரிக்காவில் எப்படி ஒரு குரங்கு தன் பிறந்த நாளை கொண்டாடியது என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

( பக்த்தவச்சலத்தை குரங்கு போல முன்பு கலைஞர் கார்டூன் போட்டார், இன்று தயாநிதி மாறன் சொன்னது "நான் பிறந்தது திமுககாரனாத்தான்.". தினமலர் "நாய்கள் ஜாக்கிரதை" என்று தலைப்பை குசும்பு என்றார்கள் சிலர் )

* சென்னை சங்கமம் நிகழ்ச்சியை சன் டிவி புறக்கணித்தார்கள். கலைஞர் என் அடுத்த கலை வாரிசு என்று கனிமொழியை அறிவித்தார். (கூடிய சீக்கிரம் ராஜிய சபா எம்பியாகி, மந்திரியாவதற்கு வாய்ப்பு நிறைய இருக்கிறது ). ( தற்போது ஒரு நாடார் சமுகத்துக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள், இதை வைத்து சரத்குமாரின் புதிய கட்சிக்கு செக் வைப்பார்கள் )

* ஸ்டாலின் பதவி ஏற்று திரும்பிய போது, எல்லோரிடமும் கை கொடுப்பார், தயாநிதி மாறன் கை நீட்டுவார், கண்டுகொள்ளாமல் போய்விடுவார், பிறகு திரும்பி வந்து, முகம் பார்க்காமல் கை கொடுப்பார்.

* தேர்தல் சமயத்தில் பாக்கியராஜ், டி.ராஜேந்திர் போன்றவர்களின் லைவ் பிரச்சாரம், ஆனால் ஸ்டாலினை புறக்கனித்தார்கள். கலைஞர் சன் டிவியில் தயாநிதி மாறன் இருந்தால் தான் கண்பிக்க படுவார் என்ற நிலமை.

* சன் டிவி பங்குகளின் ஒரு பகுதியை கலைஞர் விற்றது. இன்னும் மூன்று மாதத்தில் அண்ணா அறிவாலயத்திலிருந்து சன் டிவி மாற்றப்படும் என்று தெரிகிறது.

* முன்பு விஜய் டிவி ஒரு அரசியல் அலசல் நிகழ்ச்சி நடத்தியது, அதை உடனே திமுக நிறுத்த செய்தது. ஆனால் இன்று கலைஞர் தன் குடும்ப பத்திரிக்கை/டிவியை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. ( இது தான் கட்சிவிரோத நடவடிக்கை )

* கட்சி செயற்குழு கூட்டம் என்பதே ஒரு சல்ஜாப்பு. நேற்று கலைஞர் வரும் போதே அச்சடிச்ச தன் உரையை எடுத்துவந்தார்.

* ஜூன் இரண்டு அல்லது பொன் விழாவின் போது தனது அரசியல் வாரிசு ஸ்டாலின் என்று கலைஞர் அறிவிக்க இருந்ததாக ஒரு வதந்ததி. அதற்காக கூட மாறன் இந்த கருத்து கணிப்பை வெளியிட்டிருக்கலாம். ( தலைவர் மூன்று முறை வேண்டாம் என்று சொல்லியும் ). ( பொன்விழா போஸ்டர்களின் ஸ்டாலின் நிறைய காணப்பட்டார் )

* தயாநிதி தேசிய அளவில் மிகவும் பிரபலமான மந்திரியாக இருப்பதை நாம் மறுக்க முடியது. டெல்லியில் தயாநிதிக்கு வளர்ந்து வரும் செல்வாக்கும் மிகவும் முக்கியமான காரணம். தயாநிதி ராக்கேட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. கலைஞருக்கு பின் இவரிடம் இருக்கும் பணத்தையும், மீடியாவையும் வைத்து எல்லோரையும் வாங்கியிருக்கலாம், அல்லது வளைத்துபோட்டிருக்கலாம். இதுவே மற்றவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்திருக்கும். கலைஞரிடம் வேறு யாரும் அண்டவிடாதபடி ஒரு பாதுகாப்பு வளையம் வைத்திருந்தார். அது வேற சீனியர்களுக்கு எரிச்சலை கொடுத்தது. ( நேற்று ஒருவர் கூட மாறனுக்கு சப்போர்டாக போசவில்லை )

* இதுவரை போலிஸ் எந்த நடவடிக்கையும் மதுரையில் எடுக்கவில்லை. சி.பி.ஐ ? அது சும்மா என்று எல்லோருக்கும் தெரியும். மதுரை போலிஸ் எல்லாம் அழகிரி ஆட்கள் என்று வேற ஒரு செய்தி.

விட்டுக்கு உள் புகைந்துகொண்டிருந்த புகை சிம்னி வழியாக இப்போது வந்திருக்கிறது அவ்வளவு தான்.

10 Comments:

Anonymous said...

>>>> சன் டிவி பங்குகளின் ஒரு பகுதியை கலைஞர் விற்றது. இன்னும் மூன்று மாதத்தில் அண்ணா அறிவாலயத்திலிருந்து சன் டிவி மாற்றப்படும் என்று தெரிகிறது.


கருணாநிதி அவர்கள் தன்னுடைய பங்குகளை முழுவதையும் (ஒரு பகுதியையல்ல) விற்றுவிட்டார் என்றே நினைக்கிறேன். அவர் அதை விற்ற போதே, அதை தன் உபயோகத்திற்கோ கட்சிக்கோ பயன்படுத்தாமல் வீசியெறிந்தபோதே அவர்களுக்குள் பிரச்சனை இருந்திருக்கலாம். தயாநிதியைக் காட்டிலும் கலாநிதி தடாலடி பேர்வழி என்றே நினைக்கிறேன். கருணாநிதி அவர்கள் தயாநிதியை நீக்கும் முடிவை மாற்றவில்லை என்றால் புதிய கட்சி தொடங்குவதற்கு அவர் முயலலாம். இது ஸ்டாலினால் எதிர்கொள்ள முடியாமல் திமுக (மீண்டும்) உடைவதற்கு சாத்தியங்கள் அதிகம்.

யு.எஸ்.தமிழன்

IdlyVadai said...

சுந்தர் கொஞ்சம் அவசரம்+தூக்க கலக்கம். சிலவற்றை திருத்தியிருக்கிறேன். வேறு எதாவது இருந்தால் பின்னூட்டதில் தெரிவிக்கவும். நன்றி.

Geetha Sambasivam said...

சுட சுடத் தகவல்கள் கிடைக்கிறது. அதுவும் இப்போ யு.எஸ்ஸிலெ வேறே இருப்பதால் முதலில் உங்க செய்தி தான் படிக்கிறோம். நன்றி.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வால்டர் said...

விஎஸ்கே பதிவில் நான் இட்ட பின்னூட்டம்:

பிராமின் தாத்தா,

இத்தனை நாள் தயாநிதி மாறனை இகழ்ந்தீர்கள். அவர் கொண்டு வந்த ஒரு ரூபாய் தொலைபேசித் திட்டத்தையும் காறி உமிழ்ந்தீர்கள்.

இன்றைக்கு திமுகவின் உட்கட்சிக்குள் சண்டை என்றதும் கருணாநிதிக்கு எதிரி என்றதும் தயாநிதியை புகழ்கிறீர்கள்.

பாப்பானை நடிப்பில் மிஞ்ச இந்த உலகத்தில் ஆட்களே இல்லை!

SurveySan said...

இட்லிவடை, நல்ல தொகுப்பு.

வால்டர், செம கடுப்பு.

Arun said...

Ultimate analysis... I hope most of the predictions that are posted have happened in real a day or two later, isnt it IV..

Peranai kushi paduththa thaaththaa amaichar padhavi thandhaar..
ippodhu, thaaththaavai kushi paduththa, amaichar padhaviyai raajinaamaa seidhirukkiraar.. avvalavu dhan..

IV, any update on comments from Ramadas and co-buggers??

RBGR said...

நாளையக் கருத்துக் கணிப்பில்:

வெறிநாய்களை அடிக்காமல், தெரு நாய்களை அடிப்பது சரியா!

முடிவுகள் ..நாளைச் சுடச்சுட..

(அடிவாங்கியவர் தெருநாயென்றால், அடி வாங்காதவர் வெறிநாயா!!)

வாழ்க சன்நாய்கம்.

Sundar Padmanaban said...
This comment has been removed by a blog administrator.
IdlyVadai said...

வற்றாயிருப்பு" சுந்தர் சுட்டிக்காடியதற்கு நன்றி. பின்னூட்டங்களை எடுத்துவிட்டேன்.