பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 12, 2007

பொன் விழா சிப்ஸ்

* சிறுத்தைகள் புலியானது
தனது சட்டப் பேரவை பொன்விழா விழாவில் ஏற்புரை ஆற்றினார் முதல்வர் கருணாநிதி. அப்போது, விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு கட்சியினரையும், அவர்களது கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். அவரைக் குறிப்பிடும் போது, விடுதலைச் சிறுத்தைகள் எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக விடுதலைப் புலிகள் என்று தவறுதலாகக் குறிப்பிட்டார்.

* ஹாய் சொன்ன ஸ்டாலின்
"பேரவையில் கருணாநிதியின் பொன் விழாவுக்கு' வந்த மு.க. அழகிரிக்கு, அவரது இளைய சகோதரர் மு.க. ஸ்டாலின் "ஹாய்' சொல்லி கையசைத்து வரவேற்றார்.

* ராஜ் டிவி, பொதிகை நேரடி ஒளிபரப்பு. சன் டிவியில் வெறும் கிளிப்பிங்ஸ் மாட்டும் தான் காண்பித்தர்கள். சன் டிவிக்கு அனுமதி மறுப்பு.

* சென்னை எங்கும் வாழைமர தோரனங்கள். பார்க்கும் இடமெல்லாம் சீரியல் லைட்.

* பிரதமரை வரவேற்க முக்கியப் பிரமுகர்கள் பகுதிக்கு தயாநிதி மாறன் வந்தார். அப்போது அங்கு ஓரமாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். அதே பகுதியில் காத்திருந்த மத்திய அமைச்சர்கள் டி.ஆர். பாலு, அன்புமணி, ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சட்டப் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உள்பட யாரும் தயாநிதியிடம் பேசவில்லை

* அழகிரி வந்து சேர்ந்தவுடன் செய்தியாளர்கள் உள்பட அனைவரும் பரபரப்பு அடைந்தனர்.
முக்கிய பிரமுகர்களுக்கான பகுதியில் அமர்ந்திருந்த அழகிரியை, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர். விழா மேடைக்கு கருணாநிதி வந்தபின்னரும் அழகிரியைக் காண பார்வையாளர்கள் ஆர்வம் காட்டினர்.

3 Comments:

Anonymous said...

poda thuyudia paiya. parpana naikalukku DMK endru pidithathu.

அப்பா டக்கர் அமீர்பர் said...

என் பதிவு ஓரளவு உங்கள் கட்டுரைக்கு பொருந்தும் விமர்சனமாக இருக்கும் என நினனைக்கிறேன்.

குஸ்தி கண்ணா குஸ்தி - மு.க. வாரிசுக்களின் தெரு சண்டை


வரலாறு பல வாரிசு சண்டைகளை பற்றி சொல்லியிருக்கு. அதை மாதிரி ஓன்றை காணூம் பாக்கியம் மடதமிழனுக்கு கிடைத்துள்ளது. வாழ்க மு.க. வும் அவர்களின் வாரிசுகளூம்.
இதில் உள்ள விநோதம் என்னவென்றால் இவர்களின் தெரூ சண்டையில் அப்பாவிகள் இறப்பது தான்.
இதில் பாண்டவர்கள் யார்,துரியோதனர்கள் யார் என்று தெரியவில்லை.(நைனாக்களா உங்களுக்கு தெரியுமா???) ஆனால் அவர்களால் மாண்டவர்கள் குடும்பம் அழுவது தெரிகிறது.
வாரிசு போரில் வாரிசுகள் ஓன்று மற்றோன்றை அழிக்கும் ஆனால் இங்கோ பொது மக்கள் அன்றோ அல்லால் படுகின்றனர்.
சன்டிவி-யில் சொல்லுகின்றனர், மு.க. அழகிரி மற்றும் அவர் ஏவின ரவுடி கூட்டம் தான் அனைத்துக்கும் காரணம் என்று, ஆனால் மு.க மற்றும் ஸ்டாலினோ இன்னும் பாசத்தால் கட்டுண்டு கிடக்கிறார்கள்...........சாய்பாபா கிஸ்னா, நி போய் புதிய கிதை சொல்லு அவர்களிடம்........

Anonymous said...

sadapadi nadavadikai adukappadum. sonathai saium thalivar. maran methu nadavadikai