பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 11, 2007

வாக்கிங் ஸ்டிக் இல்லாத பொன் விழா

கலைஞருக்கு இது நாள் வரை வாக்கிங் ஸ்டிக்காக இருந்த பேரன் தயாநிதி மாறன் இன்று நடக்கும் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவது சந்தேகம் என்று தெரிகிறது.

அழகிரி கொடுத்த வக்கீல் நோட்டீசு மற்றும் சன் டிவி அழகிரி பற்றி சிறப்பு பார்வை செய்திகள் கலைஞரை பெரும் கலக்கதில் ஆழ்த்தியிருக்கிறது.

பல முக்கிய தலைவர்கள், தயாநிதி மாறனை டெல்லியிலிருந்து தூக்க வேண்டும் என்று பிரஷர் கொடுக்கிறார்கள் என்று செய்தி. ஒரு மாதமோ அல்லது ஒரு வருஷமோ ஆனால் தயாநிதி மாறன் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்படுவது நிச்சயம் என்று சொல்லுகிறார்கள். கலைஞர் மகள் செல்வி மற்றும் சில காங்கிரஸ் பிரமுகர்கள் சமரச முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் என்றும் சொல்லுகிறார்கள்.

8 Comments:

Gopalan Ramasubbu said...

நாப்பிளக்க பொய் உரைத்து நவநிதியம் தேடி
நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களை பெருவீர்
காப்பதற்க்கும் வகையறியீர்; கைவிடவும் மாட்டீர்
கவர் பிளந்த மரத்துளையில் கால் நுழைத்து கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீரே! கிடந்துழல அகப்பட்டீரே!

The above poem written by Patinathaar is dedicated to MK.

------------------

Half a century as a legislator is a remarkable achievement.Kudos to him :)

Anonymous said...

வாக்கிங் ஸ்டிக் இல்லாமல் இருக்கலாம் ஆனால் உடன்பிறவா சகோதரி இல்லாமல் இருக்க முடியுமா மகா பாவமாச்சே அது

Anonymous said...

A timely reply with a beautiful poem.

Anonymous said...

பாவம். பொன்விழாக் காணும் நேரத்தில் பெரியவருக்கு வந்த சோதனை.

தன் வினை தன்னைச் சுடும்னு சும்மாவா சொன்னாங்க

ஹரன்பிரசன்னா said...

கருணாநிதி செய்த தவறுகளில் ஒன்று தயாநிதி மாறனை இத்தனை தூரம் வளர்த்துவிட்டது. மாறனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதாக நினைத்து ஸ்டாலினுக்கு தீராத தலைவலியை உண்டாக்கிவிட்டார். அடுத்த வாரிசு என்னவோ ஸ்டாலிந்தான். இதை யாராலும் மறுக்கமுடியாது. ஆனாலும் மாறனுக்கும் கருணாநிதிக்கும் இருந்த ஒத்திசைவு ஸ்டாலினுக்கும் தயாநிதி மாறனுக்கும் இருக்கப்போவதில்லை. ஸ்டாலின் காலம் உள்ளவரை இந்த பிரச்சினை இருந்துகொண்டே இருக்கப்போகிறது.

IdlyVadai said...

மாறன் குடும்பம் டெல்லி, கலைஞர் குடும்பம் தமிழ்நாடு என்று தான் இருந்திருக்கிறது. அதனால் தான் இவர்கள் தமிழ் அவர்கள் ஹிந்தி கற்றார்கள்.

Anonymous said...

Idlyvadai, give some peace of mind to Luckylooks and other MK fanatics in Tamil blog world :).Pls
write that all is well in DMK.Pls write that what happened in Madurai was a film shooting which
people had taken it for real.Pls write that none died and those pictures are graphics tricks.

Anonymous said...

சினேகா டான்ஸ் இல்லன்னதும் பேரன் வர முடியாதுன்னு சொல்லிட்டராம்?