பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 08, 2007

எதை தொட்டால் ஷாக் அடிக்கும் ?மேலும் செய்தி கிழே..

கலைஞர் பேட்டியிலிருந்து...

கேள்வி:-கருத்து கணிப்பு பெயரால் இன்றைய தினம் ஒரு நாளேட்டில் மத்திய அமைச்சர்களுக்குள் கருத்து வேறுபாடு வருவதை போல முடிவுகள் தெரிவிக்கப்பட்டிருப்பதைப்பற்றி?

கருணாநிதி:-இரண்டு நாட்களாக, மத்தியிலே உள்ள தமிழக அமைச்சர்களை பற்றிய கருத்து கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக, நான் இந்த கருத்து கணிப்புகளில் நம்பிக்கை வைப்பதில்லை. இப்போது ஏதோ அவசியத்துக்காக நான் சொல்கிற கருத்து அல்ல இது. இதற்கு முன்பே பல முறை பத்திரிகை பேட்டிகளில், அறிக்கைகளில் இந்த கருத்தை நான் சொல்லி, கருத்து கணிப்புகளில் நம்பிக்கை வைக்கக் கூடாது என்று கூறி இருக்கிறேன். இன்றைக்கு வந்துள்ள கருத்துக் கணிப்பு தி.மு.கழகத்துக்குள்ளேயே, தோழமை கட்சிகளுக்குள்ளேயே தேவையற்ற மனக்கசப்பை ஏற்படுத்த ஒரு கருவியாக அமைந்துள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சரியான வரிசையில் அமைந்ததில்லை

நம்முடைய கழகத் தோழர்கள் யாரும் இதுபோன்ற கருத்து கணிப்புகளை வைத்துக்கொண்டு கட்சிகளுக்கிடையே உள்ள நட்புறவை பாதிக்கும் வகையில் விமர்சனங்களை செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொள்வதோடு, அந்த கணிப்பு சரியான வரிசையில் அமைந்ததில்லை என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறேன்.ராமதாஸ் பேட்டியிலிருந்து...
தினகரன் நாளிதழில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அவர்களாகவே ஒரு கருத்துக் கணிப்பை நடத்திக் கொண்டு, தயாநிதி மாறன்தான் தமிழகத்திலேயே சிறந்த அமைச்சர் என்று கூறியுள்ளனர்.

அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை செய்து விட்டுப் போகட்டும். ஆனால் தேவையில்லாமல் ஏன் அன்புமணியின் பெயரை இழுக்க வேண்டும். சிறந்த நிர்வாகி என பலராலும், பல அமைப்புகளாலும் பாராட்டப்பட்டுள்ளார் அன்புமணி.

பிரதமரே அன்புமணியைப் பாராட்டியுள்ளார். வெளிநாடுகளில் நடந்த மாநாடுகளிலும் அவர் பாராட்டப்பட்டுள்ளார்.

கருத்துக் கணிப்பு உண்மையானதாக இருந்திருந்தால் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு அவர்கள் 100க்கு 99 மதிப்பெண்கள் கொடுத்திருக்க வேண்டும். பாலுவின் செயல்பாடு பாராட்டும்படி உள்ளதாக பலரும் கூறியுள்ளனர்.

முதல்வர் கருணாநிதி தனது பேரனை முன்னிலைப்படுத்துவதற்காக இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் இதற்கு முன்பு இப்படிப்பட்ட அரசியல் இருந்ததில்லை. புதிய நாகரீகத்தை அவர்கள் புகுத்துகிறார்கள்.

இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள், ஏற்க மாட்டார்கள், வெறுக்கத்தான் செய்வார்கள்.

திமுக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம். அதை பச்சை குத்தியா காண்பிக்க முடியும்.

2 Comments:

Anonymous said...

பேரனை முன்னிலைப்படுத்தலாமா? என்ன கேவலமான கீழ்த்தரமான அரசியல். திருதராஷ்டிரனிலிருந்து ராமதாஸ்வரை மகனைத்தானே முன்னிலைப்படுத்த வேண்டும்... வரவர கலைஞருக்கு இந்தியப் பண்பாடு, பாரம்பரியம் கூடத் தெரியவில்லை.

Anonymous said...

இந்தியப் பண்பாடா? மருத்துவர் எப்பொழுதும் தமிழ் பண்பாட்டையெ பின்பற்றுவார்.