பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 07, 2007

யார் சொன்னார் ?

"ஆதிசங்கரருக்கு சவரம் செய்வதற்குப் பயன்படும் கத்தியைப்போன்ற கூர்ந்த அறிவு இருந்தது. அவர் ஒரு மிகச்சிறந்த தருக்கவாதி என்பதிலோ கல்விமான் என்பதிலோ சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால் அவருக்கு பெருந்தன்மை இருக்கவில்லை. அவருடைய இதயமும் அப்படிப்பட்டதாகத்தான் இருந்திருக்கும் போல தோன்றுகிறது. அத்தோடு அவர் தான் பிராமணன் என்பதைப் பற்றி மிகவும் பெருமை பீற்றிக்கொண்டு இருந்திருக்கிறார் - தென் இந்தியாவின் புரோகிதவர்க்கத்தவர்களான பிராமணர்களைப் போன்று மிக்க கர்வம் கொண்டவராக இருந்தார் என்று சொல்லலாம்"


இதை சொன்னவர் யார் ?

7 Comments:

மிதக்கும்வெளி said...

விவேகானந்தர்.

IdlyVadai said...

மிதக்கும் வெளி - சரியான விடை!

முத்துகுமரன் said...

அந்த புத்தகத்தின் பின் அட்டை வரிகள்தானே இது :-)

IdlyVadai said...

பகவானே இது என்ன சோதனை :-)

Anonymous said...

Thank god, Divakar(mithakumveli) did not 'read' that as Shankara was another barber with a sharp knife :).

ஜடாயு said...

இட்லிவடை,

சுவாமிஜி ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் கூறிய மேற்கோளை வைத்து சங்கரர் என்ற உலக குரு மீது சேறு பூசும் சின்னத் தனம் இது.

சங்கரரை அத்வைதத்தின் முழு முதல் ஆச்சாரியாராகவே சுவாமிஜி கண்டார். இன்றளவும் ராமகிருஷ்ண மடத் துறவிகள் அனைவரும் சங்கரர் வழிகாட்டிய தசநாமி என்ற மரபின் மூலம் தான் சன்னியாசம் ஏற்றுக் கொள்கின்றனர்.

சுவாமிஜி கூறி, இங்கே விடப்பட்ட பகுதி :

"சங்கரர் ஏன் ஒரு தனிப்பட்ட தரப்பினராக (அதாவது அரவணைக்கும் தன்மை இல்லாதவராக) முன் நிறுத்தப்படுகிறார் என்பது தான் புரியவில்லை. அவரது உபதேசங்களில் இப்படித் தனிப்படுத்தப்படுதல் எங்கும் இல்லை.
புத்தரது அறைகூவல்களுக்கு நிகழ்ந்தது போலவே, சங்கரரது உபதேசங்களில் இருப்பதாகக் கூறும் இத்தகைய தன்மை அவரது உபதேசங்களினால் அல்ல, அவரது சீடர்களின் சக்தியின்மை காரணமாகவே ஏற்பட்டிருக்க வேண்டும்"

From the speech "The sages of India", Lectures from Colombo to Almora

I do not know why Shankara should be represented as rather exclusive;
I do not find anything in his writings which is exclusive. As in the case of the
declarations of the Lord Buddha, this exclusiveness that has been attributed to
Shankara's teachings is most possibly not due to his teachings, but to the
incapacity of his disciples.

IdlyVadai said...

ஜடாயு
நீங்க வருவீங்கன்னு தெரியும். விளக்கத்திற்கு நன்றி.