பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 04, 2007

சிரிப்பு மொழிகள்

1. சட்டசபையில் நாம் எது பேசினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். கூட்டணி கட்சியினர் பேசினால், "அவர் கேட்டுக் கொண்டபடி' என்று கருணாநிதி எதையாவது அறிவிப்பார். நானும் தொடர்ந்து கொஞ்ச நாட்கள், "என்ன தான் பேசறாங்க'ன்னு பார்த்தேன். அவர்கள் இவர்களைக் குறை சொல் றதும், பதிலுக்கு இவர்கள் சொல் றதும் இதே தொழிலா போச்சு. இரண்டு கழகங்களும் மக்கள் பிரச்னையையே பேசுவதில்லை. அதனால நான் அங்கே போகறதை குறைத்துவிட்டேன்.

2. நமீதாவுக்கு பாராட்டு என்றால் நாலாயிரம் தமிழர்கள் ஓடி வருகின்றனர். ஒரு தமிழன் சாதனை படைக்கிறான் என்றால் 10 பேர் கூட வர மாட்டார்கள். இங்கு தமிழ் கலைஞனுக்கு மதிப்பில்லை. கர்நாடகாவில் இருந்து வந்தவர் களைத் தான் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர்.

3. அரசியல் கட்சிகளில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களை என்றும் மனதில் நினைப்பவன் நான். இப்போது நான் கூடு இல்லாத பறவை. ஆனால், இந்த பறவை கட்ட இருக்கும் கூடு மக்கள் மனம் என்னும் பசு மரத்தில் தான்...

4. தி.மு.க.,வுடனான எங்கள் உறவு வெறும் தேர்தல் நேரக் கூட்டணி மட்டும் தான். தேர்தல் அறிக்கைகளும் கூட தனித் தனியாகத் தான் வெளியிட்டோம். பா.ம.க.,வுக்கு என்று வித்தியாசமான நோக்கங் களும், லட்சியங்களும் உள்ளன. பாலாற்றில் ஆந்திரா தடுப்பணைக் கட்டப் போவதை எதிர்த்து என் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது. இதைச் செய்யக் கூடாதா? மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டமே நடத்தக் கூடாதென்றால் ஜால்ரா போட வேண்டுமா? வாய் மூடிக் கிடப்பதற்கு பா.ம.க., என்று எதற்கு தனிக் கட்சி...?

5. வீட்டுக்கு ஒரு கலர் டிவி கொடுப்பதாக அறிவித்துள்ள ஆட்சியாளர்கள், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவோம் என்று அறிவிக்கத் தயாரா?

இந்த சிரிப்பு மொழிகளை யார் சொன்னார்கள் ? பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

10 Comments:

Anonymous said...

ராம‌தாஸ் அய்யா???

Unknown said...

Tamil Kudithangi Maruthuvar Aiyya

IdlyVadai said...

1. -
2. -
3. -
4. -
5. -

என்று விடை சொல்லவும் :-)

Anonymous said...

1. - விஜயகாந்த்
2. -நடிகர் சந்திரன்
3. -சரத்குமார்
4. -மருத்துவர் அய்யா
5. - வைகோ

Anonymous said...

1 விஜயகாந்த்

2 கருணா

3 சரத்குமார்

4 இராமதாஸ்

5 கோபால்சாமி நாயுடு


1

இரமேஷ் இராமலிங்கம் said...

1.Mr.Vijaya Kandh
2.Mr.Thangar Bachan
3.Mr.Sarath Kumar
4.Dr.Ramadass
5.Mr.VaiKo

How many of these are correct?

IdlyVadai said...

அனானி-1 - இரண்டு தப்பு
அனானி-2 - இரண்டு தப்பு
இரமேஷ் - இரண்டு தப்பு

உண்மைத்தமிழன் said...

1.திரு.விஜயகாந்த்
2.திரு.டி.ராஜேந்தர்
3.திரு.சரத்குமார்
4.திரு.ராமதாஸ்
5.திரு.விஜயகாந்த்

IdlyVadai said...

உண்மை தமிழன் - நிஜமாகவே நீங்கள் உண்மை தமிழன் (5/5). சூப்பர்

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்

மற்றும் அன்பு......
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)