பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 03, 2007

மண்டபத்தை தானே இடிக்கிறார் விஜயகாந்த்

கோயம்பேடு மேம்பால பணிக்காக தனது திருமண மண்டபத்தை சொந்த செலவில் இடித்து தர முன் வந்திருக்கிறார் விஜயகாந்த்.


கோயம்பேட்டில் மேம்பால பணிக்காக கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன. இதில் விஜயகாந்தின் திருமண மண்டபமும் அடங்கும்.

மண்டபத்திற்கான இழப்பீட்டு தொகையை பெற்றுக்கொண்டு நெடுஞ்சாலைத் துறையிடம் இந்த மாதம் 15ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனால் மண்டபத்திலுள்ள பொருட்களை மாற்று இடத்திற்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், விஜயகாந்த் திருமண மண்டத்தை 15ஆம் தேதிக்கு முன்னதாக தனது சொந்த செலவில் இடிக்க முடிவு செய்துள்ளார். எனவே மண்டபத்தை இடிப்பதற்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்படி, வரும் 7ஆம் தேதி இடிப்பு பணிகள் ஆரம்பமாகின்றன.

11 Comments:

அருண்மொழி said...

ஆஹா. என்ன தாராள குணம்.

இட்லி வடையாரே, சரத்குமார் கட்சி ஆரம்பித்த பிறகு விஜய்காந்திற்கு ஆதரவு தொடருமா?

IdlyVadai said...

அருண் மொழி நான் என்றும் கேப்டன் பக்கம் தான் :-)

நந்தா said...

கேப்டன் கலக்கிறாரு போல.....

Anonymous said...

I thought he himself is going to demolish it physically :).Who knows he might use the demolition as a scence in a film or in future elections.Will Idlyvadai give a live coverage of the demolition :).
He could have contacted Kuzhali who would have happily demolished it at his own cost:).

Anonymous said...

சரத் கார்த்திக்கைப் போல சாதியை நம்பி அரசியல் களத்தில் குதித்துள்ளாரே தவிர விஜயகாந்தைப்போல மக்களை நம்பியல்ல. எனவே நீண்ட நாள் தாங்க மாட்டார்.

IdlyVadai said...

பா.ம.க.,வின் கோட்டையாக கருதப்பட்ட விருத்தாசலத்தில் வெற்றி வாகை சூடிய விஜயகாந்த், அடுத்ததாக கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையென கூறப்படும் திருப்பூரை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். இதற்காகவே, மே தின கூட்டத்தை அங்கு நடத்தியுள்ளார். கம்யூனிஸ்ட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த திருப்பூரில், பிரமாண்ட கூட்டத்தை கூட்டி பிற கட்சியினரை கலங்கடித்தார். விஜயகாந்த் கூட்டம் நடத்திய அதே நாளில் தான், கம்யூனிஸ்ட் கட்சிகளும் திருப்பூரில் மே தின ஊர்வலம் நடத்தின. வழக்கமாக 10 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்வர். ஆனால், விஜயகாந்த் கூட்டம் நடத்தியதால், மூவாயிரம் பேர் மட்டுமே ஊர்வலத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இது கம்யூனிஸ்ட்டுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தே.மு.தி.க., நடத்திய கூட்டத்தில் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை பங்கேற்றதாக போலீசார், "தோராய' மதிப்பீடு செய்துள்ளனர். திருப்பூரை பொறுத்தவரை இக்கூட்டம் ஒரு சாதனை என்பதும் உளவு போலீசாரின் மதிப்பீடாக உள்ளது.

Anonymous said...

☺ஆமா அவரே இடிச்சுட்டா இடிபாடுகளையும் வித்து காசு பாக்கலாம்.
☻விருத்தாலத்துலே ஜெயிச்சு தொகுதிக்கு நன்மை செய்யிறதுக்கு தினமும் சட்டசபைக்கு சென்று எவ்வளவு கஷ்டபடறார்னு பாத்துக்கிட்டிருக்றோம்லே.

Nakkiran said...

//Anonymous said...
☺ஆமா அவரே இடிச்சுட்டா இடிபாடுகளையும் வித்து காசு பாக்கலாம்.☻//

இதுல என்ன தப்பு.. அவர் கட்டடம் தானே...ஒன்னும் மக்கள் பணத்தை எடுக்கலையில்ல..

//விருத்தாலத்துலே ஜெயிச்சு தொகுதிக்கு நன்மை செய்யிறதுக்கு தினமும் சட்டசபைக்கு சென்று எவ்வளவு கஷ்டபடறார்னு பாத்துக்கிட்டிருக்றோம்லே.
///

அனானி சார்,
இப்போ டெய்லி சட்டமன்றத்துக்கு போறவங்க எல்லாம் தொகுதிக்கு நன்மை செய்யதான் போறாங்கோன்னு நம்புறீங்களா???

இல்ல சட்டமன்றத்துக்கு போனாதான் தொகுதிக்கு நன்மை செய்ய முடியும்னு நினைக்கிறீங்களா?

சரி அப்படியே விஜயகாந்து சட்டமன்றத்துக்கு போய் என் தொகுதிக்கு இது வேணும் அது வேணும்னு சொன்ன உடனே மு.க அத முடிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பார் நினைக்கிறீங்களா???

சரி, உங்க பாயிண்ட் படி பார்த்தாலும், 91-96 மு.க வும், 96-01 ஜெ அம்மாவும், 01-06 மீண்டும் மு.க வும், 06 முதல் மீண்டும் ஜெ அம்மாவும் சட்டமன்றத்துக்கு ஒரு தடவை கூட வராம, மக்கள் பணியை ஆத்து ஆத்துன்னு ஆத்தல.. நாம தான் முதல்வர் பதவியை மாத்தி மாத்தி அவங்க கிட்டதான தரோம்...
அதுக்கு இது எவ்வளவோ மேல்..

அவர் சட்டமன்றத்தில என்ன நடக்குதுன்னு தெளிவா சொல்லி இருக்கார்... தன் தலைவன்/வி புகழுரதும், அடுத்தவனை ஏசுறதும்.. ஆளை தூக்கி வெளியே போடுறதும், வெளிநடப்பு செய்யறதும், செறுப்பு அடிக்கிறது, குண்டூசி டப்பா தூக்கி அடிக்கிறது.. இதுக்கு அங்க போகாமலே இருக்கலாம்..

ஆனா எந்த விஷயத்துல சண்டை போட்டாலும் தனக்குன்னு வந்துட்டா ஒன்னு சேர்ந்துக்கிறாங்கோ, அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத உறுப்பினர்கள், தங்களுக்கு காலனி கட்ட அரசு செலவில், ஒவ்வொருத்தருக்கும் 2 கிரண்டு இடமும், 25 இலட்சம் கடனும் தரனுமாம்... இதுக்கு தெருவிலே போய் பிச்சை எடுக்கலாம்..

Santhosh said...

//அனானி சார்,
இப்போ டெய்லி சட்டமன்றத்துக்கு போறவங்க எல்லாம் தொகுதிக்கு நன்மை செய்யதான் போறாங்கோன்னு நம்புறீங்களா???

இல்ல சட்டமன்றத்துக்கு போனாதான் தொகுதிக்கு நன்மை செய்ய முடியும்னு நினைக்கிறீங்களா?

சரி அப்படியே விஜயகாந்து சட்டமன்றத்துக்கு போய் என் தொகுதிக்கு இது வேணும் அது வேணும்னு சொன்ன உடனே மு.க அத முடிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பார் நினைக்கிறீங்களா???//

நக்கீரன் இது என்ன பேத்தலா இருக்கு ஜெயித்து தொகுதிக்கு என்ன பண்ண அப்படின்னு கேட்டா அவன் செய்யலை இவன் செய்யலை அப்படின்னு சொல்றீங்க. அவன் செய்யலை அப்படிங்கிறதுநால தானே உங்களை தேர்ந்து எடுத்தாங்க. ஜெயிச்சி வந்து அவனை கேளு இவனை கேளு அப்படின்னு சொன்ன.

Anonymous said...

என்னைக்கி வருமான வரி சோதனையின் போது தொண்டர்கள் செய்த அரஜகத்தை ஆதரிச்சாரோ அப்பவே நானும அதேக் குட்டைதான்னு காமிச்சிட்டாரே?

அந்த வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கமுடையதாவே இருந்தாலும் அவர் அதை சட்டபூர்வமா எதிர்கொள்வேன்னு தொண்டர்களை அமைதிபடுத்தாம கொம்பு சீவி விட்டாரோ அப்பவே அவர் ஒன்னும் புது அரசியல் பண்ண வரலன்ன தெரிந்து விட்டது.

இதுக்கு மேல இப்ப புது சீன் போடுராரு

Anonymous said...

கோர்ட்ல் வாய்தா மேல் வாய்தாவா பிச்சை எடுத்த சனியன் இன்னைக்கு நல்லவன் வேசம் போடுது.இது கூட புரியாம எழுதறீங்களே இட்லி வடை.