பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 11, 2007

கலைஞர் 50 !

கலைஞரின் ஐம்பதாண்டுகால அரசியல் பயணத்தின் நிறைவு விழாவில் இட்லிவடை அவரை வாழ்த்துகிறது. ஐம்பதாண்டுகால அரசியல் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் கொஞ்சமல்ல. ஆனால் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்திருக்கிறார். இரண்டு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் ஒடுக்குமுறைகளை சந்தித்திருக்கிறார். உலக்த் தமிழர்களிடையே தமிழின் அடையாளமாக கலைஞரின் பெயரே நிலை பெற்றிருக்கிறது. அரசியல்வாதியாக மட்டுமல்ல ஒரு எழுத்தாளராகவும் அவர் தன்னை தொடர்ந்து அடையளப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். அவருடைய திருக்குறள் உரை திருக்குறளுக்கு எழுதப்பட்ட மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மிக நெருக்கடியான சந்தர்பங்களிலும் காலகட்டங்களிலும் தனது வாக்கு சாதுரியத்தை வெகு நேர்த்தியாக பயன்படுத்தி வந்ததிருக்கிறார். ஜெயலலிதா அரசினால் அவர் கைது செய்யப்பட்ட காட்சி தமிழர்களை மனம் அதிரச் செய்தது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால் தொடர்ந்து அரசியலை தனது உயிர் மூச்சாக கொண்டதன் அடையாளமே இந்த ஐம்பதாண்டுகள். அவர் பயணம் தொடர இட்லிவடையின் வாழ்த்துக்கள்!

14 Comments:

Anonymous said...

you too idlyvadai :).You have disarmed the DMK fanatics in tamil
blog world by this blog post.

Anonymous said...

கலைஞரின் ஐம்பதாண்டுகல அரசியல் பயணத்தின் நிறைவு விழாவில் இட்லிவடை அவரை வாழ்த்துகிறது.

No, he has completed fifty years
as a member of legislative assembly.His political career began much earlier when he was in teens.
அரசியல் பயணத்தின் நிறைவு விழாவில்
The journey continues, no நிறைவு
for now.

Anonymous said...

//அரசியல் ஒடுக்குமுறைகளை சந்தித்திருகிறார்//

இணையத்தில் சாம்பார் மாஃபியாவால் நடத்தப்படும் தனிமனித தாக்குதல்களையும் சந்தித்து வருகிறார்

IdlyVadai said...

அருன்மொழி மிக்க நன்றி. By mistake I have posted the draft I had. Now I think it should be ok.
Thanks again!

Anonymous said...

அவன் ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் எதிர்க்கும் பத்திரிகைகள் கொளுத்தப் படுவதும் கொல்லப் படுவதும் சாதாரணமாக நடப்பதுதான். கருணாநிதியின் சொந்தக்காரன் உள்துறை நாகராஜனை வைத்து தராசு பத்திரிகை ஊழியர்களை அன்று கொன்ற அதே கருணாநிதியின் மகன் இன்று தங்கள் சொந்தப் பத்திரிகையையே கொளுத்துகிறான். அப்பா அன்று செய்ய அதையே மகன் இன்று செய்கிறான். நல்ல குடும்பம். துக்ளக் பத்திரிகை பல முறை கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாகியது, தீக்கதிர், நவசக்தி, கல்கி, குமுதம் கல்கண்டு பலமுறை தீக்கிரையாகியது. இது எல்லாம் அப்பன் அன்று செய்தது. மகன்கள் வளர்ந்து விட்டதால் இன்று தினமலரும் தினகரனும் எரிக்கப் படுகிறது. நாசகாரக் குடும்பம், கொலைகார அப்பன், கொலைகார மகன்கள், இவனுக்கு எல்லம் ஒரு பொன்விழா அட மானம் கெட்ட வெட்கம் கெட்ட தமிழா ? நீ எல்லாம் சோறுதான் தின்கிறாயா? நாலு பொணம் மீது பொன் விழா கொண்டாடும் இந்த அரக்கன் விளங்குவானா, அந்த செத்த இளம் உயிர்கள் ஆன்மாக்கள் தான் இந்தக் கொடுங்கோலர்களைக் கேட்க்க வேண்டும். இவனுக்கு ஓட்டுப் போட்ட தமிழர்கள் எல்லோரையும் கொளுத்தினாலும் தமிழனுக்கு புத்தி வராது.

IdlyVadai said...

அனானி தேவையில்லாத பின்னூட்டங்களை இந்த பதிவிற்கு போட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது விவாத பதிவு இல்லை, வாழ்த்து பதிவு.
புரிந்துகொண்டதற்கு நன்றி
அன்புடன்,
இட்லிவடை

Anonymous said...

வாழ்த்தவும் ஒருதகுதி வேண்டும்.....

மதுரை நேற்று பற்றி எரிந்திருக்கிறது. எரித்தவர் கண்ணகி அல்ல. கண்ணகிக்கு சிலை வைத்தவரின் அக்னிக் குஞ்சு. தி மு க ஆட்சிக்கு வந்தால் வழக்கமாக எதிர்க் கட்சியினரரயும் எதிர்க்கும் பத்திரிகைகளையும் எரிப்பார்கள். இன்றைக்கு இவர்கள் குடும்பத்துக்குள் சண்டை, தமிழ் நாட்டையை விலைக்கு வாங்கும் அளவுக்கு பண பலம் ஒரு புறம், தமிழ் நாட்டையே தீ வைத்து எரிக்கும் அளவுக்கு ரவுடிகள் ஆட்சி மறுபுறம். ஐம்பதுகளில் சென்னையில் இருந்து சேலத்துக்கு கள்ள ரயில் ஏறிச் சென்றவருக்கு இன்றைக்கு இவ்வளவு சொத்து, பணபலம், அராஜகம், ஆட்சி அதிகாரம், பேய்கள் ஆட்சி செய்ய பிணம் தின்னும் சாத்திரங்கள்.

இதில் சம்பந்தப் படாத அப்பாவி மக்கள் கொளுத்தப் படுகிறார்கள் என்றும் சொல்ல முடியாது, "ஜனநாயக" தர்ம நியாயப் படிப் பார்த்தோமானால் இந்த அராஜகவாதிகளுக்கு ஓட்டுப் போட்டப் பாவத்துக்கு அப்பாவி மக்கள் உயிரோடு கொளுத்தப் படுகிறார்கள். அன்று சிதம்பரத்தில் ஒரு உதய குமாரன், க்ளைவ் ஹாஸ்டல் மாணவர்கள், கீழ வெண்மணி உழவர்கள், தர்மபுரியில் விவசாயக் கல்லூரி மாணவிகள், தரரசு ஊழியர்கள், இன்று அப்பாவி பத்திரிகை ஊழியர்கள். இந்த அரக்கர்கள் இன்னும் எத்தனை வருடங்கள் ஆண்டு இன்னும் எத்தனை பேர்களை உயிரோடு எரிக்கப் போகிறார்கள் ?

இப்படியாகப் பட்ட ஒரு கட்சி, ஒரு தலைவன், ஒரு ஆட்சி, இந்த தலைவனுக்கு பாராட்டு, அதற்கு நீங்கள் ஒரு பதிவு....வெட்கம், வெட்கம்.

Anonymous said...

என்ன கருமம் இது சரவணன்!!!!

அருண்மொழி said...

//மதுரை நேற்று பற்றி எரிந்திருக்கிறது//

இது வழக்கமாக sun tvதரும் பில்டப்பை விட அதிகமாக இருக்கிறது. கொளுத்தப்பட்டது தினகரன் அலுவலகம் மட்டுமே. அப்புறம் எப்படி மதுரையே பற்றி எரிந்தது???

Anonymous said...

அது பில்டப் தான் அருண்மொழி, அதை தொடர்ந்து இருக்கும் கருத்துகளில் உங்களுகு எதிர்ப்பில்லையா?, எல்லாவற்றையும் ஒத்துக்கொள்கிறீர்களா?

Anonymous said...

:((((

வால்டர் said...

மதுசூத்தனன் பதிவில் இட்ட பின்னூட்டம்:-

//பதிவையே படிக்காம அரை எதையாவது எழுதாம, படித்துவிட்டு அது சம்பந்தமாய் எழுதலாமே.///

ஜெயலலிதா தப்பு செய்தபோது எழுதவில்லை.

பாஜக புளு சிடி வெளியிட்டபோது நீ அதைப்பற்றி எழுதவில்லை.

ஜெயராமன் ஒரு பெண்பதிவர் பெயரில் ஆபாசத் தளம் தொடங்கியபோது எழுதவில்லை.

இப்போ கலைஞர் என்றதும் உனக்கு கோவணத்துக்குள் வேர்க்குது!

அருண்மொழி said...

//சிதம்பரத்தில் ஒரு உதய குமாரன், க்ளைவ் ஹாஸ்டல் மாணவர்கள், கீழ வெண்மணி உழவர்கள், தர்மபுரியில் விவசாயக் கல்லூரி மாணவிகள், தரரசு ஊழியர்கள், இன்று அப்பாவி பத்திரிகை ஊழியர்கள்.//

உதயகுமாரன் நிகழ்ச்சி கருணாநிதியோடு தொடர்பு கொண்டது. மற்றது??? முக்கியமாக கீழ் வெண்மணி - அவரா ஆட்களை ஏவி விட்டார். அதை விட தர்மபுரி விவசாய கல்லூரி மாணவிகள் - இதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்???

விட்டால் கும்பகோணம் தீவிபத்து, நாட்டில் நடைபெரும் சாலை விபத்துக்கு எல்லாம் கருணாநிதிதான் காரணம் என்று சொல்வீர்கள் :-)

1950களில் இருந்து நாட்டில் ஊழல் ஆரம்பித்துவிட்டது. அரசியலுக்கு வந்த, வருகின்ற எல்லோரும் இதை ஒரு தொழிலாக நினைத்து பணம் பண்ண வருகின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை.

சரியோ, தவறோ, தமிழ்நாட்டில் கடந்த 50 வருடங்களாக இருக்கும் முக்கிய அரசியல்வாதி அவர். அவருக்கு விழா எடுப்பது ஏன் உங்களுக்கு இவ்வளவு வயிறு எரிகின்றது?

Anonymous said...

The violent happenings in Madurai and in recent by elections are because of the insecure feeling among the DMK and its alies. These are the people who will not stand tall and face the truth. The only way known to them is to react violently. This current leader of DMK has not thought their people about the truth. He and his ministers are commenting about the courts and judges who uphold the truth. We expect violence and anti social activity from DMK leadership and don't get disappointed. Let us not expect them to act better than this because they know only this way.

Mahatma Gandhi values are remembered only once in a year.