பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 31, 2007

தி.மு.க-அ.தி.மு.க பொது எதிரி - விஜயகாந்த்

`தி.மு.க-அ.தி.மு.க.வினர் தே.மு.தி.க.வினரை பொது எதிரியாக கருதுகின்றனர்' என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார்.


விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேர்தல் என்றாலே போட்டி என்பது தான் அர்த்தம் ஆகும். போட்டி இல்லாமலே வெற்றி பெறுவது புகழ் சேர்க்காது. மேலும், அது ஊழலுக்கு வழிவகுக்கும் என்பது வரலாறு. அப்படியிருக்க பாராளுமன்றத்தின் மேல் சபையில் காலியாக உள்ள ஆறு இடங்களுக்கான தேர்தல் போட்டியில்லாமலே நடைபெற முதல்-அமைச்சர் கருணாநிதி மேற்கொண்டுள்ள நடவடிக்கை பல புதிர்களை கொண்டதாகும்.

ரகசியம் என்ன?

தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் சேர்ந்து 66 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு இடம் வெற்றி பெற 33.29 வாக்குகள் தேவை. இரண்டு இடங்கள் வெற்றி பெற 67 ஓட்டுக்கள் தேவை. ஆகவே, இன்னும் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு வேண்டும்.

அ.தி.மு.க. கூடுதலாக தேவைப்படுகின்ற ஒரு வாக்கை பெற தே.மு.தி.க. ஆதரவை பெற வேண்டும். இது தவிர அ.தி.மு.க.விற்கு வேறு வழியில்லை. இந்த நிலையில், தே.மு.தி.க. இது குறித்து முடிவு எடுப்பதற்குள்ளாகவே முதல்-அமைச்சர் கருணாநிதி முன்வந்து அ.தி.மு.க.வுக்கு இரண்டு சீட்டுகள் வெற்றி பெற வழி வகுப்பதின் ரகசியம் என்ன?

அ.தி.மு.க.விற்கு தே.மு.தி.க. ஆதரவு கொடுத்து விடக்கூடாது என்ற பயத்தாலா? அல்லது கருணாநிதி தனது ஓட்டை ஜெயலலிதாவிற்கு தந்து தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் பொது எதிரியாக தே.மு.தி.கவை ஆக்க வேண்டும் என்பதற்காகவா?

பொது எதிரி

அ.தி.மு.க. இரண்டு இடங்களில் வெற்றி பெறட்டும் என்று சொல்லி இருப்பதை ஜெயலலிதா இதுதான் நியாயமான தேர்தல், இப்படிதான் நடக்க வேண்டும். முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது என்று பாராட்டியுள்ளார். இதில் இருந்தே தி.மு.க-அ.தி.மு.க. கட்சிகளுக்கு பொது எதிரியாக தே.மு.தி.க.வை கருதுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த அரசியல் வாதிகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டு ஒரு புதிய அரசியலை தமிழ்நாட்டுக்கு தருவதே தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கடமையாகும்.

( நன்றி: தினத்தந்தி )

Read More...

ஜனாதிபதி தேர்தல்:ஜெயிடம் வாஜ்பாய் டெலிபோன் பேச்சு

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பைரோன்சிங் செகாவத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


இதற்கு ஜெயலலிதா பதில் அளிக்கையில், `தற்போது தனி அணி ஒன்றில் தான் அங்கம் வகிப்பதாகவும் அதில், சமாஜ்வாடி கட்சித்தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம் சிங் யாதவ், தெலுங்குதேச கட்சி தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலா, அசாம் கனபரிஷத் தலைவர் பிருந்தாவன் கோசுவாமி மற்றும் இதர கட்சி தலைவர்கள் இடம்பெற்று இருப்பதாகவும், அவர்களுடனும் அ.தி.மு.க. நிர்வாகிகளுடனும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். தனியாக இது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது' என்று தெரிவித்தார்.

அதற்கு வாஜ்பாய் பதில் அளிக்கும்போது, `சில நாட்களில் மீண்டும் தொடர்பு கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.

வாஜ்பாய்க்கு டெலிபோன் செலவு ஒரு ரூபாய் தண்டம்

Read More...

Tuesday, May 29, 2007

மிஸ் யுனிவர்ஸ் - Made in Japan!


ஜப்பானின் ரியோ மோரி மிஸ் யுனிவர்ஸ் ஆனார் !

Read More...

Monday, May 28, 2007

‘சிவாஜி படத்துக்கும், டிக்கெட் விலைக்கும் என்ன சம்பந்தம்?

சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்த சில நாட்கள் டிக்கேட் ராக்கெட் விலையில் இருக்கும். தற்போது, அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் டிக்கெட் விலையை விட கூடுதலான விலையில் விற்க அரசு அனுமதி தராது.

அரசு நிர்ணயிக்கும் விலையில் சிவாஜி படத்தை ரிலீஸ் செய்தால் சூப்பர் ஸ்டார் தாத்தா நடித்தால் கூட படம் பெரும் நஷ்டம் ஏற்படும். (கிராமப்புறங்களில் - நான்கு ரூபாயிலிருந்து இருபத்தைந்து ரூபாய் சினிமா கட்டணம் என்றும், நகர்ப்புறங்களில் ஆறு ரூபாயிலிருந்து முப்பது ரூபாய் என்றும் அறிவித்த தமிழக அரசு, நகர்ப்புறங்களில் இருக்கும் ஏ.சி. தியேட்டர்களில் இந்தக் கட்டணங்கள் ஐம்பது ரூபாய் வரை இருக்கலாம் என்று நிர்ணயித்திருக்கிறது. சென்னை மாநகரில் இருக்கும் ஒன்றிரண்டு தியேட்டர் களில் மட்டும் ரசிகர்களுக்கு கூடுதலான வசதிகளைச் செய்து கொடுத்து நூறு அல்லது நூற்றியிருபது ரூபாய்வரை கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று தனியாக ஒரு அறிவிப்பையும் செய்தது.)

பெரிய அளவில் முதலீடு செய்து படத்தை வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்கள் தாங்கள் முதலீடு செய்திருக்கும் பணத்தை உடனடியாக எடுக்க பெரும் தடையாக இருப்பது தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட இந்த சினிமா டிக்கெட் தொடர்பான கட்டண விவரங்கள்தான். இந்தக் கட்டணங்களை வைத்துப் பார்த்தால் ‘சிவாஜி’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தாங்கள் போட்ட பணத்தை எடுக்க ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலைமை வரும். முன்பு இருந்த 'Pre Pricing' முறையில் முதல் பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு சினிமா டிக்கெட்டுகள் நூறு ரூபாயிலிருந்து முந்நூறு ரூபாய் வரை விற்கப்படும். இதனால் ஒரே மாதத்தில் விநியோகஸ்தர்கள் போட்ட பணத்தை எடுத்து விடுவார்கள்.

சிவாஜி படத்தை எவ்வளவு பணம் கொடுத்து கலைஞர் டிவி வாங்கியிருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. ( விடையை நாளை சொல்லுகிறேன், பின்னூட்டத்தில் நீங்க சொல்லலாம்).

தற்போது சிவாஜி படத்தை 'கலைஞர் டிவி' வாங்கியிருப்பதால் சிவாஜி’ படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் கூடுதலாக கட்டணங்கள் வசூலித்தால் அதை கண்டுகொள்ளாமல அரசு விட்டுவிடும் என்று நினைக்கிறேன். இதையும் இந்த படத்தின் விலையுடன் பேசியிருப்பார்கள்.

Read More...

அழகிரி கேள்வி - முதல்வர் டென்ஷன்

மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக ஜெயா டிவி நிருபர் கேட்ட கேள்வியால் கோபம் அடைந்த முதல்வர் கருணாநிதி, அவரை ஒருமையில் விளித்து கடுமையாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் கருணாநிதி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர். காரில் இருந்தபடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் கருணாநிதி.

அப்போது ஜெயா டிவி நிருபர் மதுரையில் தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு மு.க.அழகிரிதான் காரணம் என்று கூறுப்படுகிறதே என்று கேட்டார்.

இதைக் கேட்டதும் கடும் கோபமடைந்தார் கருணாநிதி. மிகக் கடுமையாக அவரை நோக்கி, எதுடா தெரிந்த உண்மை. நீதாண்டா கொலை செய்தாய், போடா என்று கூறினார். இதையடுத்து முதல்வரின் கார் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

ஜெயா டிவி நிருபரை நோக்கி முதல்வர் கருணாநிதி ஒருமையில் விளித்து கடுமையாக பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

( செய்தி: தட்ஸ் தமிழ் )

Read More...

கலைஞர் டிவியில் சிவாஜி படம்!

இன்று வந்த தினமணி செய்தி.கலைஞர் டிவிக்கு "சிவாஜி' பட உரிமை வழங்கபட்டுள்ளதாக பேச்சு. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. விசாரித்துவிட்டு சொல்கிறேன்.

புதிதாக தொடங்கப்பட உள்ள "கலைஞர் டிவி'க்கு, ரஜினி நடித்து வெளிவர உள்ள "சிவாஜி' படத்தின் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

"கலைஞர் டிவி'யை நோக்கி ரசிகர்களை இழுக்கும் வகையில், "டிவி'யின் தொடக்க நாளிலேயே "சிவாஜி' படத்தை திரையிட முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

ரஜினி நடித்து ஜூன் 15-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள "சிவாஜி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், அந்த படத்தின் பிரம்மாண்டமும், ரஜினியின் விதவிதமான போஸ்டர்களும் தான். "சிவாஜி'யின் இசை வெளியீடு "எப்எம்' ரேடியோக்களில் வெகுவாக தூக்கி பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ரேடியோக்களில் ஓயாமல் "சிவாஜி' ஒலித்து வருகிறார்.

பாடல்களே வித்தியாசம்: ரஜினி இதுவரை நடித்த படங்களின் பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் இடம் பெற்றது கிடையாது.

அதேசமயம், ரஜினி படத்தில் வேகமாக இரண்டு பாடல்கள் மற்றும் 3 காதல் பாடல்கள் இருக்கும். ஆனால், "சிவாஜி'யில் வித்தியாசமான பாடல்களுக்கு மெட்டு அமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

படத்தின் ஸ்டில்களைப் பார்க்கும் பல இடங்களில், ரஜினி இளமையாகத் தோற்றம் அளிக்கிறார்.

ஸ்டில்களில் மாறுபட்டவராகத் தோற்றமளிக்கும் ரஜினியை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் காத்திருக்கின்றனர்.

ஜூன் 15-ம் தேதி சிவாஜி படம் ரிலீஸ் ஆகிறது என்று தயாரிப்புத் தரப்பு கூறி உள்ளது.

600-க்கும் மேற்பட்ட பிரிண்ட்கள்:"சிவாஜி' படத்தை தமிழகம் முழுவதும் திரையிட வசதியாக 600-க்கும் மேற்பட்ட பிரிண்ட்கள் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சென்னை உள்பட முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் "சிவாஜி' திரையிடப்படும் எனக் கூறப்படுகிறது. "சிவாஜி' யின் வருகையால் பல முன்னணி இளம் கதாநாயகர்கள் நடித்துள்ள படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுள்ளனர்.

"கலைஞர் டிவி'க்கு உரிமை: புதுப்படங்களை "டிவி'யில் ஒளிபரப்ப உரிமை வழங்கப்படுவது உண்டு. நட்சத்திரங்களின் மதிப்பைப் பொறுத்து டிவி உரிமைக்கான தொகை பேசப்படும். வழக்கமாக, புதுப்படங்களின் "டிவி' உரிமையைப் பெறுவதில் "சன் டிவி' எப்போதுமே முந்தி நிற்கும்.

தயாநிதி மாறனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திமுக-ராஜ் டிவி கூட்டணி இணைந்து "கலைஞர் டிவி'யை தொடங்க உள்ளனர். ஜூன் 3-ம் தேதி "டிவி'க்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், ஆகஸ்ட் 15-ம் தேதி "டிவி' தொடங்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

"கலைஞர் டிவி' நிகழ்ச்சி தயாரிப்புக்கான வேலைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் புதுப்படங்களின் உரிமைகளை வாங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, "சிவாஜி' படத்தின் உரிமை "கலைஞர் டிவி'க்கு அளிக்கப்பட்டுள்ளது.

"டிவி' தொடக்க நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி, "சிவாஜி' படம் "கலைஞர் டிவி'யில் ஒளிபரப்பாகும் எனக் கூறப்படுகிறது.

Read More...

Sunday, May 27, 2007

தாலி கட்டும் பழக்கம் ஏன்? - கனிமொழி கேள்வி

* தாலி கட்டும் பழக்கம் ஏன்? - கனிமொழி கேள்வி.

பகுத்தறிவாளர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில்கூட தாலி கட்டும் பழக்கம் இதுவரை தொடர்வது ஏன் என்று தெரிய வில்லை கனிமொழி கேள்வி எழுப்பினார். விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய தலித் நாடக விழாவில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக் குமாருக்கும், பொன்னம்மாளுக்கும் சாதி மறுப்பு திருமணத்தை கனிமொழி நடத்தி வைத்த போது இவ்வாறு பேசினார்.

அடுத்த முறை பேசுவதற்கு மேலும் சில கேள்விகள் இங்கே ...

1. பெரியார் சிலைக்கு கூட தலைவர்கள் ஏன் மாலை போட்டு வணங்குகிறார்கள் ?
2. ஏன் இன்னும் மொட்டை அடிக்கும் பழக்கம் இருக்கிறது ? அல்லது ஸ்டாலின் பேரனுக்கு எங்கு மொட்டை அடித்தார்கள் ?

3. கண்டனத்தை தெரிவிக்க ஏன் பெட்ரோல் குண்டுகளை உபயோகிக்கிறார்கள் ?

4. கலைஞர் கனவில் அண்ணாவும் பெரியாரும் தான் வருவார்களா ? என்றாவது மகா விஷ்ணு வந்திருக்கிறாரா ?

உங்களிடம் கேள்விகள் இருந்தால் பின்னூட்டதில்..

Read More...

Saturday, May 26, 2007

FLASH: கனிமொழி, திருச்சி சிவா - திமுக வேட்பாளர்கள்

மாநிலங்களவை வேட்பாளர்கள் - கனிமொழி, திருச்சி சிவா
( முக்கிய செய்தி: ராஜ் டிவியில் வரும் சன் டிவி ஃபிளாஷ் நியூஸ் :-)

கனிமொழி கூடிய சீக்கிரம் மத்திய வர்தக துறை அமைச்சராக பார்க்கலாம்.

* திருச்சி சிவா ஸ்டாலினுடைய நீண்ட நாள் தோஸ்த்.

இடம் இருக்கா ?

கனிமொழிக்கு கேபினட் அமைச்சர் பதவி அளிக்கப்படுமா ?
கலைஞர் பதில்:ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து 13 பேர் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். இன்னும் ஒருவருக்கு அங்கு இடமிருக்கிறதா என்று தெரியவில்லை. ( டெல்லி செல்லுகையில் பேரம் பேசப்படும் என்று படிக்கவும் )
கலைஞர் டிவி:
தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் டிவி க்கென தனி அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவி என போர்டும் மாட்டப்பட்டு விட்டது.

Read More...

கேரள முதல்வர் அச்சுதானந்தன் Suspended

கேரளா முதல் அமைச்சர் அச்சுதானந்தன் சி.பி.எம் பாலிட் பீரோவிலிருந்து சஸ்பெண்ட்
* மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்.) பொது செயலாளர் பிணராயி விஜயன் மற்றும் முதல்வருக்கும் நடந்துகொண்டிருந்த உள்குத்து அரசியல் முடிவுக்கு வந்தது.
* அச்சுதானந்தன் தொடர்ந்து முதல்வராக இருப்பார்
* துணிச்சலான நடவடிக்கை.
IBNLive

Read More...

ஆனியும் கூனியும் ஆகா

பழமொழி : ஆனியும் கூனியும் ஆகா என்றால் என்ன ?

Read More...

Friday, May 25, 2007

இரண்டு நகைச்சுவை கதை வசனம்

நகைச்சுவை கதை வசனம் இரண்டு.
ஒன்று கலைஞர் ராமர் பாலத்தை பற்றி எழுதியது. மற்றொன்று ராஜேந்தர் பூரி அவுட்லுக்கில் கலைஞரை குடும்ப அரசியலை பற்றி எழுதியது.

கலைஞர் கடிதம்
(நீண்ட காலமாக எனக்கு ஓர் ஆசை; பிராமணர் ஒருவர் ஆசிரியராக இருக்கும் வகுப்பில், மாணவர்கள் சிலர் அவரைக்கேள்விகள்கேட்டு; அவர் தனது மொழியில் பதில் அளிக்கும் விதமாக: ஒரு கேள்வி பதில் தொகுப்பு எழுத வேண்டும் என்று. அதுதான் இது)

மாணவன்: அய்யா ராமர் பாலம் என்றால் என்ன? சேது கால்வாய்த்திட்டத்துக்கு அது எப்படி இடைஞ்சலாகும்?

ஆசிரியர்: இது தெரியாதோ, மண்டு. சமுத்திரத்திலே திட்டு திட்டா மணல் மேடு உருவாகி அது ரொம்ப நீளத்துக்கு பாலம் போல இருக்குடா, மண்டு: அதைத்தான் ராமர் பாலம்னு பெரியவா சொல்றா. அந்த பாலம் இருந்தா சேதுக்கால்வாயிலே கப்பல் எப்படி போக முடியும்? அதனால்தான் அந்த மணலை எல்லாம் அகற்றி, அப்புறம் கப்பலை விடப்போறாளாம்.

மாணவன்: அப்படின்னா... ராமர் பாலத்தை இடிச்சே ஆகனுமா?

ஆசிரியர்: அப்படித்தான் - மத்திய சர்க்காரும், மாநில சர்க்காரும் பொறியாளர்களும் சொல்றாங்க.

மாணவன்: ஓ! அதாவது மணல் குவிஞ்சு வரிசையா திட்டுத்திட்டா நீளமா இருக்கு- அதைப் பார்க்க பாலம் மாதிரி இருக்கு.

ஆசிரியர்: ஸ்பஷ்டமா சொன்னேடா- அதான் ராமர் பாலம்- சாட்சாத் ராமபிரான் கட்டின பாலம்.


மாணவன்: ஏன் சார்? அந்த பாலத்திலே அடிக்கல் நாட்டுவிழா கல்லு- பாலத் திறப்பு விழா கல்லு எல்லாம் இப்பவும் இருக்குதா?... அதாவது: அனுமார் தலைமையிலே ராமன் திறந்து வச்ச பாலமா?

ஆசிரியர்: ஆமாம்- பதினேழு லட்சம் வருஷத்துக்கு முன்னாடி திறப்பு விழா நடந்த பாலம்! - முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்த விழாவுக்கு வந்து மலர் மாரி பொழிந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மாணவன்: நான் கேள்விப்பட்டேன் சார்; முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்த பாலத்திலே ஏறி நின்னு பூமாரி பொழிஞ்ச போது - அவ்வளவு ஜனக்கூட்டத்து கனம் தாங்காம அந்த பாலம் இடிஞ்சு விழுந்ததாமே? - ஏன் சார்; பால இடிஞ்சா பக்கத்திலே புதுப்பாலம் கட்டுறாங்களே; இப்ப கூட பாருங்க; நம்ம சென்னை அடையாறுல; ஒரு பழைய பாலத்தை; கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சரா இருந்தப்ப இடிச்சுட்டு புதுசா "திரு.வி.க.பாலம்'' என்று ஒரு பாலம் கட்டி இருக்காறே?

ஆசிரியர்: டேய்- குறும்பா! குதர்க்கமெல்லாம் பேசாதே- சேதுக்கால்வாய் தோண்டுறேன்- தமிழ்நாட்டை வாணிபத்திலே, பொருளாதாரத்திலே வளமாக்கிறேன்னு; வீண் கதை பேசிக்கிட்டு; ராமனோட சாபத்துக்கு ஆளாக போகுது ஒரு கூட்டம்!

மாணவன்: ஆசிரியர் அய்யா; அப்படின்னா சேது திட்டம் வராதுன்னு சொல்லுங்க!


ஆசிரியர்: வராதுன்னு சொல்லலேப்பா; வரக்கூடாதுன்னு சொல்றேன் சேலம் இரும்பாலைத்திட்டம்னா இவாளே கொண்டு வர்றா- நெய்வேலி 2-வது சுரங்கமும் இவா கோரிக்கையேதான்- தூத்துக்குடி உரத்தொழிற்சாலைக்கும் இவாளே உரிமை கொண்டாடுரா- வெளிநாட்டு முதலீடுகளுக்கும் இவாளே காரணம்கிரா- செம்மொழின்னா இவாதான்- இப்ப சேது கால்வாயும் சேந்துட்டா தலை கீழா நிப்பா! கையில பிடிக்க முடியாது... அதனாலதான் ராமர் பாலமோ- ராவணன் பாலமோ ஏதோ ஒன்னைச் சொல்லி தடுத்து நிறுத்தறது நம்மவா தர்மம்.

மாணவன்: ராமாயணம் என்பது உண்மையில் நடந்ததுதானே சார்?

ஆசிரியர்: ஏண்டா அம்பீ! நம்ப ராஜாஜி எழுதிய புத்தகத்துக்கு அவரே முன்னுரை எழுதும்போது ராமாயணம் என்பது சரித்திரமோ, வாழ்க்கை வரலாறோ அல்ல. அது இந்து இதிகாசத்தின் ஒரு பகுதி என்று சொல்லி இருக்கிறார்னு நான் போன வாரம் சொல்லிக் கொடுத்ததை மறந்துட்டியா?

மாணவன்: அய்யா; திராவிடர் கழகத்தினர் சார்பில் தயாரிக்கப்பட்ட பெரியார் திரைப்படத்துல கூட இதப்பற்றி ஒரு காட்சி வருது அய்யா?

ஆசிரியர்: ஆமாம், ஆமாம்! சரியா கவனிச்சுருக்கே, ராமர் பாலம் கட்ட அணில் உதவி செஞ்சுது, அத ராமர் பாராட்டி தடவிக்கொடுத்ததாலத்தான் அணில் முதுகிலே 3 கோடு இருக்கிறதா ஒரு கதை சொல்லிட்டிருந்தோம். அதை கெடுக்கிற மாதிரி, அந்தப்படத்துல, சீதை முதுகில ராமர் கை படவே இல்லையான்னு ஒரு கேள்வி கேட்டு சிந்திக்க வச்சுட்டா!


மாணவன்: ராமாயணத்தை பத்தி நேருஜி அவர்களே கூட அவருடைய புத்தகத்திலே ஏதோ எழுதினதா சொல்லுவாங்களே அய்யா?

ஆசிரியர்: "ராமாயணம் என்பது ஒரு காவியமல்ல. அது திராவிடர்களுக்கும், ஆரியர்களுக்கும் இடையே நடந்த போராட்டத்தைப் பற்றி மிகைப்படுத்தி, பல அறிவிற்கு பொருந்தாத கதைகளை புகுத்தி எழுதப்பட்ட ஒரு கற்பனைக்கதை''என்று நேருஜி அவர்கள் தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களிலே குறிப்பிட்டதாக அவருடைய "டிஸ்கவரி ஆப் இண்டியா'' என்ற புத்தகத்திலே இருப்பது உண்மைதான்.

மாணவன்: சார் இன்னைக்கு வந்த ஒரு பத்திரிகையில் கூட ராமர் பாலம் பற்றி கட்டுரையாளர் ஒருவர் எழுதியிருக்கிறாரய்யா?

ஆசிரியர்: சமத்து. அதக்கூட படிச்சிருக்கியே? அந்தக்கட்டுரையாளர் "ராமர் பாலம்'' என்பது மணல் கயிறு என்று வர்ணித்திருக்கிறாரே? சேது சமுத்திரத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் மக்களுக்காகக் கடவுளா? கடவுளுக்காக மக்களா என்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்று கூட எழுதியிருக்கிறாரே! மேலும் அந்தக்கட்டுரையிலே "வேதங்களோ உபநிதஷங்களோ ராமாவதாரத்தைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. மகாவிஷ்ணு ராமனாக பிறந்தது உண்மை என்றால், மகாவீரரும், புத்தரும் தோன்றி நடமாடியிருக்க முடியாது என்றே குறிப்பிட்டிருக்காரு! நம்மவா சொல்றதுக்கு எதிர்ப்படையா வந்ததையெல்லாம் நீ படிச்சிருக்கே''!


மாணவன்: அய்யா! நீங்க சொன்ன மணல் திட்டுக்களைப்பற்றி நேற்று கலைஞர் கருணாநிதி எழுதுன ஒரு கேள்வி பதிலிலே கூட கடலியலாளர் ஒருவர் எழுதியதை சுட்டிக்காட்டி, தெற்கே உள்ள மணல் திட்டுக்களை ராமர் கட்டியிருந்தா, வடக்கே உள்ள மணல் திட்டுக்களை யார் கட்டியது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அய்யா?

ஆசிரியர்: டேய்! நீ வேண்டும்னே இந்தக் கேள்வியையெல்லாம் யாரோ சொல்லி கேக்குறியா? முதல்ல சரித்திர ரீதியா கேட்டே, பிறகு இதிகாச, புராண ரீதியாக கேட்டே, இப்ப என்னடான்னா கடல் விஞ்ஞான ரீதியா கேக்குறியே?

மாணவன்: சார், சார், தப்பா நினைச்சுக்காதிங்க! வகுப்புல உள்ள ஒரு சில பசங்க இது போல கேக்குற கேள்விகளுக்கு என்னால பதில் சொல்ல முடியாமத்தான் உங்களைக்கேட்டு தெரிஞ்சுக்க முயற்சி செய்தேன். ஆனால் நீங்க கூட அவங்களுக்கு ஆதரவாதானே எல்லாத்தையும் சொல்றீங்க!

ஆசிரியர்: ஆமாண்டா சாமி! இன்னும் சொல்லப்போனா, நம்மவா ஆட்சியிலேயே, வாஜ்பேயி பிரதமரா இருந்த போதே சேது கால்வாய்த்திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறோம். அதைத்தான் நாடாளுமன்றத்திலேயே அந்த துறை அமைச்சர் ஆதாரப்பூர்வமா புட்டு புட்டு வச்சிட்டான்.

மாணவன்: சார்! சார்! அப்படின்னா ராமர் பாலம் என்கிறது ஒரு தடைக்கல், அவ்வளவுதானா?


ஆசிரியர்: எத்தனை தடைகள் போட்டா என்ன? அந்த மத்திய அமைச்சர் பாலு கேக்கப்போறானா?- மகா கெட்டிக்காரனாச்சே- மறுப்புக்கு மேல மறுப்பு சொல்லி- இந்த மாதிரி திட்டங்களையெல்லாம் சாதிக்கிறவனாச்சே....

மாணவன்: ஆசிரியரய்யா அப்படின்னா, நான் சொல்றதைக்கேளுங்க....

ஆசிரியர்: என்ன?

மாணவன்: எப்படியும் சேதுக்கால்வாய் வரப்போகுது- கப்பல் அந்த வழியா போகப்போகுது- அதனால் இப்பவே அவங்களோட நாமும் சேர்ந்து கூட்டத்தோடு கோவிந்தா போட்டுட்டு போகலாமே....

ஆசிரியர்: ஆமாண்டா- அதுவும் சரிதான் - சேதுக்கால்வாய்த்திட்டம்; நிறைவேற்றியே தீருவோம்.

(எல்லோரும் "நிறைவேற்றியே தீருவோம்'' என்று முழக்கமிடுதல்.Bull's Eye Rajinder Puri - Outlook
The course of revolution is seldom smooth. Small wonder, then, that Stalin’s rise to power was interrupted by obstacles. There was violence. Revisionist forces tried to thwart Stalin. Counter-revolutionary mobs let loose arson and murder. Even the redoubtable Stalin was worried. "Appa," said Stalin. "Why are they protesting against my rise? I thought you had decided that I would succeed you!"

"Aiyaiyo Stalin! How can you doubt that? After all, I didn’t name your elder brother Lenin, did I?"

"I do hope these temporary setbacks won’t slow down our plans for global revolution, Appa?"

"What makes you ask that, Stalin?"

"Appa, you had said if the OBC quota is not quickly accepted, untold violence would erupt all over the country. obc reservations have still not been accepted by the Supreme Court, Appa! But where is the countrywide violence?"

"Aiyaiyo! Be patient, Stalin. I need more time for instigating countrywide violence. We must deal first with DMK’s own violence!"

"Why did DMK workers resort to violence and burn down our progressive newspaper, Appa?"

"Don’t blame them, Stalin. It was my mistake. I should have spelt out clearly the DMK’s reservation policy—what is reserved for you, what is reserved for Azhagiri and what is reserved for your sister!"

"Will your reservation policy please OBCs all over the country, Appa?"

"Of course it will, Stalin! All three of you are OBCs, aren’t you? One hundred per cent reservation for OBC leaders would be unprecedented. I am sure it will delight all OBCs!"

"Appa, you also threatened to take unilateral action against Sri Lanka if the central government did not respond to its attacks against our fishermen. The central government has still not acted, Appa. What happened to that threat?"

"Aiyaiyo Stalin! How dense you are! How can I take unilateral action without control of the army? How can I control the army without becoming prime minister of India? How can I become PM without the present government being toppled? I was sending a subtle message of hope to our stormtroopers, Stalin!"

"Appa, Appa! How exciting, Appa! Is there really a chance for you to become PM, Appa?"

"You disappoint me, Stalin! You really think I’d ever give up the chief minister’s post for you without myself becoming PM?"

"Sorry Appa! I should have thought of that. But how will the present government ever be toppled?" "Don’t worry, Stalin! Our road to Delhi will pass through Lucknow!"

Read More...

Thursday, May 24, 2007

போட்டுத்தாக்கு

* டாஸ்மாக் பார் இடிந்து விழுந்து 20 பேர் பலி - செய்தி
"தள்ளாடி' விழுந்தது கட்டடம்

* "அல்லா' பெயரில் பதவி பிரமாணம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ஹரே அல்லா

* தயாநிதி மாறனின் சகோதரியின் வளைகாப்பு இம்மாத கடைசியில் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தேதியில் சென்னையில் இருப்பதை தவிர்ப்பதற்காக முதலமைச்சர் டெல்லி பயணம் - செய்தி

அரசியல் குடும்பமாக இருக்கலாம், குடும்பத்தில் அரசியல் இருக்கலாமா ?

* விஜயகாந்தின் 150 படத்தை அவருடைய சொந்த நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் பெயர் எம்.ஜி.ஆர்

சிஜாஜி, எம்.ஜி.ஆர் அடுத்து என்ன ?

* மத்திய அரசை ஆட்டி வைக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி போல, விரைவில்
நானும் "ரிங் மாஸ்டர்' ஆவேன் - உ.பி. முதல்வர் மாயாவதி.

மத்தியில் நடப்பது அரசு இல்லை, சர்க்கஸ்

Read More...

கலைஞர், ராதிகா பேட்டி

நேற்று வந்த கலைஞர் பேட்டி, இன்று வந்த ராதிகா பேட்டி.


கலைஞர் பேட்டி
கேள்வி:- விமான நிலைய விரிவாக்க கூட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதா?

பதில்:- ஏகமனதாக இல்லை. அ.தி.மு.க. மாத்திரம் சில பகுதி மக்கள் இதை ஏற்றுக் கொள்ள மறுப்பதாகக் கூறி, அந்த மக்களின் சார்பில் என்னிடத்திலே மனு கொடுத்தார்கள். அதை பரிசீலிப்பதாக சொல்லி நான் பெற்றுக்கொண்டிருக்கிறேன். எனவே இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயக்குமார் கலந்து கொண்டார் என்ற போதிலும், இந்த தீர்மானத்தை அவர் ஆதரிக்கவில்லை.

கேள்வி:- பா.ம.க. மற்றும் இடதுசாரிகள் ஏற்றுக் கொண்டார்களா?

பதில்:- மற்றவர்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.


கேள்வி:- விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்காக மொத்தம் எவ்வளவு கோடி ரூபாய் செலவாகும்?

பதில்:- நில எடுப்பிற்கான செலவு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். விரிவாக்க செலவு பணிகளை இந்திய வானூர்தி குழுமம் சார்பில் செய்யப்படும். அது சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்.

கேள்வி:- குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் எங்கே அளிக்கப்படவுள்ளது?

பதில்:- தீர்மானத்திலேயே நியாயமான இழப்பீடு அவர்களுக்கு கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறோம். மாற்று இடமும் அவர்களுக்கு, அவர்களுடைய மனதிற்கேற்றபடி கொடுக்கப்படும். மாற்று இடம் ரொம்ப பேருக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது.

இந்த திட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் வீடுகள் 947 வீடுகள் தான். முதலில் நாங்கள் பார்த்த இடம் பொழிச்சலூர் பகுதி. அந்த இடத்தை தேர்வு செய்திருந்தால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். அதை அங்கேயுள்ள மக்கள் விரும்பவில்லை. அப்போதே நாங்கள் அந்த இடத்தை மாற்றிக் கொள்கிறோம் என்று உறுதி கொடுத்தோம். அப்படி உறுதியளித்தவாறு தற்போது இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம்.


கேள்வி:- இன்றைய முடிவின் காரணத்தால் விமான நிலைய விரிவாக்கத்தில் மற்ற மாநிலங்களை விட பின்தங்கிவிடாமல் ஏமாறாமல் இருந்து விட்டோம் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்:- ஆமாம், நாமும் முந்திக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி:- விமான நிலைய விரிவாக்கப்பணிகள் எப்போது தொடங்கப்படும்?

பதில்:- இன்றைக்கே ஆரம்பமாகி விட்டதாக தான் பொருள். இன்றைக்கு ஒரு பெரிய வேலை முடிந்து விட்டது.கேள்வி:- ஒரு பத்திரிகையில் நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் துணை ஜனாதிபதியாக ஆவதைப்போல செய்தி வந்திருக்கிறதே?

பதில்:- துணை ஜனாதிபதியாக வருபவர் வேண்டுமானால் பேராசிரியராக இருக்கலாம். நம்முடைய பேராசிரியர் இல்லை.

கேள்வி:- தி.மு.க.விற்கு துணை ஜனாதிபதி வாய்ப்பு கேட்கப்படுகிறதா?

பதில்:- அப்படி ஒன்றும் பேரம் நடக்கவில்லை.


கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?

பதில்:- இரண்டொரு நாட்களில் டெல்லிக்கு செல்வேன். அங்கே அதைப்பற்றி கலந்து பேசி முடிவெடுப்போம்.

கேள்வி:- மாநிலங்களவை தேர்தலுக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?

பதில்:- கட்சியிலே தி.மு.க. தலைமைக்கழக உயர்மட்ட குழு இருக்கிறது. அவர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.


கேள்வி:- மாநிலங்களவை தேர்தலுக்கு உங்கள் அணி சார்பில் ஐந்தாவது ஒரு உறுப்பினர் நிறுத்தப்படுவாரா?

பதில்:- ஐந்தாவது ஒரு வேட்பாளரா? இதிலே நாங்கள் தேவையில்லாமல் ஒரு போட்டியை உருவாக்க விரும்பவில்லை. அந்தப் போட்டியினால் குதிரைப் பேரங்கள் நடக்கும். அது வேண்டாம் என்று நினைக்கிறோம். மொத்த இடங்கள் ஆறு பேர் என்பதில், எதிர்க்கட்சியும், ஆளுங்கட்சியும் போட்டியில்லாமல் பங்கிட்டு கொள்ளலாம் என்பது என் கருத்து. எதிர்க்கட்சியின் கருத்து என்னவென்று எனக்கு தெரியாது.

கேள்வி:- எதிர்க்கட்சியின் கருத்து, அந்த தேர்தல் அதிகாரியையே மாற்ற வேண்டும் என்பதாக இருக்கிறதே?

பதில்:- நான் சொல்கின்ற திட்டத்தில் அதற்கு அவசியமே ஏற்படாதே, தேர்தலே நடக்காதே.


கேள்வி:- இந்த முறையாவது கனிமொழிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

பதில்:- கனிவா பேசுகின்ற மொழி எங்கேயிருந்தாலும், வாய்ப்பு கொடுக்கப்படும். மொழி கனியாக இருக்க வேண்டும், காயாக இருக்கக்கூடாது.

கேள்வி:- ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா?

பதில்:- நம்புகிறோம்.


கேள்வி:- கலைஞர் டி.வி.யை தி.மு.க. தான் ஏற்படுத்துகிறதா?

பதில்:- தி.மு.க.விற்கும் கலைஞர் டி.வி.க்கும் சம்பந்தம் இல்லை. தி.மு.க.விற்கும் கலைஞருக்கும் சம்பந்தம் உண்டு. கலைஞர் டி.வி.க்கு சம்பந்தம் இல்லை.

கேள்வி:- கலைஞர் டி.வி. என்ற ஒரு டி.வி.யை இப்போது தொடங்க வேண்டிய அவசியம் என்ன?

பதில்:- இந்த கேள்வியின் அவசியம் என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், இது உங்களுக்கு புரியும்.

ராதிகா பேட்டி
கேள்வி:- `கலைஞர் டி.வி.'க்காக நீங்கள் புதிய தொலைக்காட்சி தொடர் தயாரித்து வழங்கப்போவதாக பேசப்படுகிறதே... அது உண்மையா?

பதில்:- முதல்-அமைச்சர் கலைஞர் கேட்டுக்கொண்டால், கலைஞர் டி.வி.க்காக புதிய தொடர் தயாரித்து வழங்குவேன். அவர் கேட்டு, யாரும் மறுக்க முடியுமா?

கேள்வி:- இதுபற்றி முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தினீர்களா?

பதில்:- புதிய தொலைக்காட்சி தொடங்குவது என்று அவர் முடிவு செய்து இருக்கிறார். அதுபற்றி பேசினோம்.


கேள்வி:- சன் டி.வி.யுடன் உங்களின் ராடன் நிறுவனம் பல ஆண்டுகளாக வியாபார தொடர்பு வைத்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஒரு புதிய தொலைக்காட்சிக்கு நீங்கள் நிகழ்ச்சி தயாரித்து வழங்கினால் பிரச்சினை ஏற்படாதா?

பதில்:- கலாநிதிமாறன், என்னுடன் டெலிபோனில் பேசினார். வருகிற திங்கட்கிழமை அவரை சந்திக்கும்படி கூறியிருக்கிறார். அப்போது அவர் இதுபற்றி பேசினால், ``முதல்-அமைச்சர் கலைஞர் சொன்னால், அதை தவிர்க்க முடியாது'' என்பதை அவரிடம் விளக்குவேன்.

கேள்வி:- ஒருவேளை சன் குழுமத்தில் இருந்து விலகிக்கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டால், என்ன முடிவு எடுப்பீர்கள்?

பதில்:- ராதிகாவையும், ராடன் நிறுவனத்தையும் பிரித்து பார்க்க முடியாது. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், அப்போது பார்த்து கொள்ளலாம்.''

Read More...

Wednesday, May 23, 2007

கேப்டன் பேட்டி

"ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும், ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை - விஜயகாந்த்"

பொன் விழா, மண்டபம் இடிப்பு, சிபிஐ விசாரனை, கூட்டணி, கேப்டன் டிவி பற்றி...


கோயம்பேட்டில் இடிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் திருமண மண்டபத்தை ஒட்டியுள்ள இடத்தில் கீற்றுகொட்டகையுடன் அமைக்கப் பட்டுள்ள தேமுதிகவின் புதிய கட்சி அலுவலகம் இன்றுகாலை திறக்கப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவில், அலுவலகத்தை அக்கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று காலை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். முன்னதாக தேமுதிக கட்சிக் கொடி மற்றும் தொழிற்சங்க கொடியை ஏற்றினர்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

இன்று முதல் தேமுதிக கட்சி அலுவலகம் தொடர்ந்து இங்குதான் இயங்கும். திருமண மண்டபத்தை இடித்ததை பற்றி நான் கவலைப் படவில்லை. இது திட்டமிட்ட சூழ்ச்சி என்று தான் நான் சொல்வேன். இதற்கு காரணம் சட்டமன்ற தேர்தலுக்கு முன் டி.ஆர்.பாலு ஒரு பேட்டியின் போது விஜயகாந்த் எனது நண்பர் என்றும், அவர் பொது சேவைக்காக தன் திருமண மண்டபம் இடிக்கப்படுவதை விட்டுக் கொடுப்பார் என்றும் கூறியதோடு, மாற்று திட்டம் இருந்தால் அவர் கொடுக்கலாம் என்று கூறினார்.

அதையடுத்து தான் நாங்கள் மாற்று திட்டத்தை கொடுத்தோம். அதை சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் வரை கவனிக்காமல் இருந்தவர்கள் அதற்கு பின்பு டெக்னிக்கல் சரியில்லை என்று கூறினார்கள். ஏனென்றால் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மண்டபத்தை இடித்தால் எங்களுக்கு அனுதாப அலை வீசிவிடும் என்று அப்போது தவிர்த்து விட்டு இப்போது இடித்துள்ளனர். டெக்னிக்கல் பிராப்ளம் என்று கூறிய தால் தான் நாங்கள் கோர்ட்டுக்கு சென்று அது குறித்து விவரம் கேட்டோம்.

ஆனால் கோர்ட்டுக்கு போன பின்பு தான் அண்ணா சொன்னது போல் "சட்டம் ஒரு இருட்டறை' என்பதை அப்போது நாங்கள் புரிந்து கொண்டோம். இந்த கல்யாண மண்டபம் என் சொந்த உழைப்பில் கட்டியது. ஊர்ப் பணத்தை கொள்ளையடித்து உலையில் போட்டது அல்ல. மேலும், நிறைய பேர் திருமண மண்டபத்தை இடித்து விட்டு மேம்பாலம் வருகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த இடத்தில் தரைவழிப்பாதை தான் வருகிறது. மேம்பாலப் பணி முடிந்த பின்புதான் தரைவழிப்பாதை ஆரம்பிப்பார்கள். ஆனால் இதுவரை மேம்பாலம் அமைப்பதற்காக "ஃபைலிங்' இன்னும் போடவில்லை. இதுதான் சூழ்ச்சி என்பது...

கேள்வி: இதுகுறித்து தாங்கள் சட்டமன்றத்தில் பேசியிருக்கலாமே?
பதில்: சட்டமன்றத்தில் பேசி பிரயோஜனம் இல்லை. அங்கே கடந்த சட்டசபைக்கும், இந்த சட்டசபைக்கும் இடையில் அவர்கள் கொடுத்த அறிக்கையைதான் சபையில் படித்தவண்ணம் இருந்தார்கள். அதனாலேயே நான் சட்டசபைக்கு வருவதை தவிர்த்தேன். சட்டசபையில் பதிவு என்பது முக்கியமல்ல. மக்களிடம் போய் சேருவதுதான் முக்கியம். என் கருத்தை நான் மக்கள் மன்றத்தில் சொல்வேன். உங்களிடம் (நிருபர்கள்) பேசினாலே மக்கள் மன்றத்திற்கு செய்தி சென்று சேரும்.

எனது தொகுதியான விருதாச்சலத்தில் பள்ளிக்கூடங்கள் அருகே விபத்துக்கள் ஏற்படுகிறது என்று அதை தடுப்பதற்காக சாலை தடுப்பு வேலி (பாரிகாட்) அமைத்து கொடுங்கள் என்று பொதுமக்கள் கேட்டதற்கு இணங்க ரூபாய் 1 லட்சம் செலவில் 20 பாரிகாட் செய்து போலீசாரிடம் கொடுத்த போது அதை எடுத்து சென்றவர்கள் திரும்பவும் கொண்டு வந்து எனது அலுவலகத்தில் வைத்து விட்டனர்.

நான் நடிகனாக இருந்த போது பாண்டி பஜாரிலும், சாலிகிராமத்திலும் இதேபோல் பாரிகாட் கொடுக்கப்பட்டு சாலை தடுப்பாக வைக்கப்பட்டுள்ளது. இப்போது நான் எம்எல்ஏ என்பதால் நான் பெயர் எடுக்க கூடாது என்பதற்காக இதுபோல் வாங்க மறுப்பதோடு எனது தொகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடத்திற்கு நான் கொடுக்கும் குடிநீரை கூட அந்த மாவட்ட அமைச்சர், தொகுதி மக்களிடம் தண்ணீர் கூட வாங்கக் கூடாது என்று கூறி வருகிறார்.

கே: முதல்வருக்கு நடைபெற்ற பொன்விழாவில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?
ப: நான் ஏற்கனவே அவருக்கு கலையுலக பொன் விழா எடுக்கும் போது பலர் வரவில்லை. அது ஏன்? மேலும் சட்டமன்றத்தின் பொன்விழா என்று சட்டமன்றத்தில் இந்த விழா நடத்தியது எந்த விதத்தில் நியாயம்? அதை அவருடைய கட்சி அலுவலகத்தில் அல்லவா நடத்த வேண்டும்? இதேபோல் எனக்கொரு விழா என்று சட்டமன்றத்தில் இடம் கேட்டால் அவர்கள் தருவார்களா? இதேபோன்ற விழா நாடாளுமன்றத்தில் நடந்ததுண்டா?

கே: மதுரை சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
ப:மதுரை சம்பவத்தில் மூன்று உயிர்கள் பலியாகியிருக்கிறது. என்ன விலை கொடுத்தாலும் அந்த உயிர் திரும்ப கிடைக்காது. இந்த சம்பவமே உட்கட்சி பிரச்சனையால் நடந்துள்ளது. ஆனால் அவர்கள் தங்கள் கட்சி பணத்தை கொடுக்காமல் அரசு பணத்தை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? இதில் குற்றவாளி என்று யாரை குறிப்பிட்டார்களோ அவர்கள் தப்பிவிட்டார்கள்.

1980ம் ஆண்டு எம்ஜிஆர், மொராஜி தேசாய் அரசுக்கு ஆதரவாக இருந்தார். அப்போது கருணாநிதி மீது கோதுமை பேரல் ஊழல் வழக்கிலும், பூச்சி கொல்லி மருந்து ஊழல் வழக்கிலும் சிபிஐ விசாரணை நடைபெற்றது. உடனே அவர் (கருணாநிதி) சஞ்சய் காந்திடம் பேசி இந்திரா காந்தியிடம் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என கூறி கூட்டணியில் சேர்ந்தார். சிபிஐயும் கிடப்பில் போனது. அதேபோலத்தான் இதுவும் இருக்கும்.

மனுநீதி சோழனின் மகன் கன்றுக்குட்டி ஒன்றை தேரை ஏற்றி கொன்றதால் பசு அங்குள்ள மணியை அடித்து நியாயம் கேட்ட போது, மனுநீதி சோழன் தன் மகனை தேரில் ஏற்றி கொன்றதாக கதை உள்ளது. நாங்கள் தேர் சக்கரத்தில் ஏற்ற சொல்ல வில்லை. நடவடிக்கை வேண்டும் என்று தான் கேட்கிறோம். சூரியனா? சன்னா என்றும், சன் டிவி முக்கியமா? சன் முக்கியமா? என்ற சூழ்நிலை வந்த போது, எனக்கு சூரியன் (சன் டிவி) முக்கியமல்ல; சன் தான் முக்கியம் என்று முடிவெடுத் துள்ளனர்.

கே: சிபிஐ விசாரணை என்பது கண்துடைப்பு என்கிறீர்களா?
ப: உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் ஒரு நீதி அரசர் வந்து எவ்வாறு தீர்ப்பு கூறினாரோ, அதேபோல் இந்த வழக்கிலும் ஒரு நீதி அரசர் வராமலா இருப்பார்?

கே:வரும் எம்.பி. தேர்தலில் தாங்கள் யாருடன் கூட்டணி?
ப: நான் யாருடனும் கூட்டணி இல்லை. தனியாகத்தான் இருப்பேன். உங்களிடம் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு நாளைய தினம் கூட்டணி வைத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?

கே: அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் டிவி ஆரம்பித்த வண்ணம் உள்ளனர். தங்களுக்கு டிவி ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா?
ப: டிவி ஆரம்பிக்க பணம் வேண்டும். என் சொத்தை அழிக்கவும், என்னை ஒடுக்கவும் திட்டம் போடுகிறார்கள். அதனால் பணம் வரட்டும் அப்போது டிவியை ஆரம்பிப்பது குறித்து பார்க்கலாம் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், ராமர் பாலம் இருக்கிறதா? இல்லையா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. அத்துடன் ராமர் பாலம் குறித்து நாசா வெளியிட்டிருப்பதாக கூறுகிறார்கள். உண்மையிலேயே நாசா தான் வெளியிட்டதா என்ற கேள்வியை நிருபர்களிடம் எழுப்பினார்.

Read More...

சரத்குமார் பெரிய ஆளா ? - ராதிகா செல்வி

நெல்லை வந்த ராதிகா செல்வி பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்

* எனது கணவர் வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டது தொடர்பாக நான் சிபிஐ விசாரணை கோரியுள்ளேன். அது கண்டிப்பாக நடந்தே தீரும். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன்.

* எனக்கு வழங்கப்பட்ட மத்திய அமைச்சர் பதவியின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன். எனது அமைச்சர் பதவியால் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்துவேன்.

* நடிகர் சரத்குமாரை நான் போட்டியாக கருதவில்லை. அவர் ஒரு பெரிய ஆளாக எனக்கு தெரியவில்லை.

Read More...

சில செய்திகள்

* ஜுன்-3ந் தேதி கலைஞர் டிவி தொலைக்காட்சி பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.ஆகஸ்ட் 15 அன்று தான் கலைஞர் டிவி தொடக்கம்

* பேராசிரியர் அன்பழகன் துணை ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்க பிரகாசமான வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக டெல்லியில் பேசப்படுகிறது.

* போலீஸ் சூப்பிரெண்டு பிரேம்குமார் "டிஸ்மிஸ்" அரசு உத்தரவு வீட்டுக் கதவில் ஒட்டப்பட்டது. பிரேம்குமார், அரசின் இந்த `டிஸ்மிஸ்' உத்தரவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது.

* எம்.ஆர்.ராதா நூற்றாண்டு விழாவையொட்டி கருணாநிதியுடன் நடிகை ராதிகா சந்திப்பு

* நான் ஜெயலட்சுமியுடன் உல்லாசமாக இருந்தேன் என்று கூறுவது சுத்தப்பொய். நான் இதுவரை அவருடன் ஒருநிமிடம் கூட செலவழித்தது கிடையாது. ஜெயலட்சுமி வெளியிட் டுள்ள புகைப்படங்கள் கிராபிக்ஸ் முறையை பின் பற்றிபோலியாக தயாரிக்கப்பட்டவை. அவர் என்னுடை இமேஜை கெடுத்து என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்ட துடிக்கிறார்" - பா.ஜனதா எம்.எல்.ஏ.ரேணுகாச்சாரி மறுப்பு

* காகெய்ன் போதைப் பொருளை வைத்திருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் தில்லியில் அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

Read More...

Tuesday, May 22, 2007

ஸ்ரேயா தொப்புளால் மின்சாரம் சேமிப்பு !


மேல் விபரங்களுக்கு சரியாக கிளிக் செய்யவும் :-)

Read More...

ஸ்ரேயா தொப்புள் கட்
ரஜினிகாந்த்-ஸ்ரேயா சம்பந்தப்பட்ட `தொப்புள்' காட்சியில், ஒரு வெட்டு விழுந்தது. அந்த இடம் ஆபாசமாக இருப்பதாக கூறி, அந்த காட்சியை நீக்கும்படி கூறினார்கள்.

அதை பட குழுவினர் முதலில் ஏற்க மறுத்தார்கள். அந்த காட்சி நீண்ட கயிறு மூலம் அந்தரத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சி. இந்த காட்சியில் ரஜினி ஸ்ரேயாவின் தொப்புளை ரஜினி விரலால் வருடுவது போல காட்சி எடுக்கப்பட்டிருந்ததாம்.அதை நீக்கினால், பாடலின் தொடர்பு விட்டுப்போகும் என்று வாதாடினார்கள். ஆனால், தணிக்கை குழுவினர் பிடிவாதமாக இருந்ததால், அந்த `தொப்புள்' காட்சி நீக்கப்பட்டது.

ஆனால் அதே காட்சியை ஷங்கர் வேறு ஒரு கோணத்தில் படமாக்கி இருந்தார். `கேன்ஸ்' பட விழாவுக்கு சென்று இருக்கும் அவர், அங்கிருந்து தனது உதவியாளர்களிடம் பேசி, அந்த காட்சியை எச்சரிக்கையாக கையாளும்படி கேட்டுக்கொண்டார்.

Read More...

Monday, May 21, 2007

சிறுவன் பொய் சொல்ல மாட்டான் !

இதற்கு முன் "கடத்தியது புலிகள்தான் - மீனவர்கள்" என்று ஒரு பதிவு காரமாக எழுதினேன். அதை தொடர்ந்து இந்த பதிவு.


மக்கள் டிவியில் 11 வயது சிறுவன் பேட்டி அளித்துள்ளார். அந்த சிறுவன் தன் பேச்சில் 'ஸ்ரீலங்கா நேவி' என்று சொல்லுகிறான் பக்கத்தில் இருப்பவர் புலிகள் என்று சொல்லு என்று அவனுக்கு உபதேசம் செய்கிறார். யார் பொய் சொன்னாலும், ஒரு சிறுவன் பொய் சொல்லமாட்டான் என்று திடமாக நம்புகிறேன்.

இந்திய/தமிழக அரசு இந்த கதையை பில்டப் செய்திருந்தால் இதைவிட கேவலமான ஒரு செயல் இருக்க முடியாது.

இதை தொடர்ந்து எனக்கு சில கேள்விகள்

1. கடத்தபட்ட மீனவர்களுக்கு ரூ10,000 எதற்கு கொடுத்தார்கள் ? தாங்கள் சொல்லிகொடுத்ததை சொல்லுவதற்காகவா ?

2. எல்லா பத்திரிக்கைகளும் ( மக்கள் , தமிழ் ஓசை தவிர்த்து ) ஏன் உண்மையை வெளிகொண்டு வரவில்லை ?

3. மீனவர்களில் ஒருவர் மட்டும் ஏன் பத்திரிகையாளர்களிடம் பேச அனுமதிக்கப்பட்டார் ?

4. இந்த மீனவர்கள் நாளை ஜூவி, ரிப்போட்டர் போன்ற பத்திரிக்கைகளுக்கு உண்மையை சொன்னால் இவர்களின் கதி என்ன ஆகும் ?

மக்கள் டிவி சுட்டி இங்கே

Read More...

அன்புடன் விடைபெறுகிறேன்

அன்புடன் விடைபெறுகிறேன் மேலும் செய்தி கீழே...

"சன்' டி.வி.யில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகி வந்த "அன்புடன்' (சினிமா நட்சத்திரங்களுடன் சந்திப்பு) நிகழ்ச்சி, இந்த வாரம் ஒளிபரப்பாகவில்லை.

விஜய் டி.வி.யில் "காபி வித் அனு' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சினிமா நட்சத்திரங்கள் பேட்டி, நட்சத்திரங்களைப் பற்றி அவர்களுக்கு நெருக்கமானவர்களின் பேட்டி போன்றவை நிகழ்ச்சியின் சாராம்சம்.

இந் நிகழ்ச்சியின் பிரதியாக, "சன்' டிவியில் "அன்புடன்' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, இந் நிகழ்ச்சியை நடிகை கெüதமி தொகுத்து வழங்கி வந்தார். முதல் நிகழ்ச்சியில் நடிகர் கமல் பங்கேற்றார்.

தொடர்ந்து நடிகர்கள் சிம்பு, ஸ்ரீகாந்த், பிருத்விராஜ் நடிகை சினேகா உள்ளிட்ட பலர் அடுத்தடுத்த வாரங்களில் பங்கேற்றனர்.

இந்நிலையில், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாக வேண்டிய இந்நிகழ்ச்சி இந்த வாரம் ஒளிபரப்பாகவில்லை.

இதற்குப் பதிலாக, நடிகர் விஜய், நடிகை அசின் பங்கேற்ற பேட்டி, "நட்சத்திர அட்டகாசம்' என்ற பெயரில் மறு ஒளிபரப்பானது. இப் பேட்டி "போக்கிரி' படம் ரீலீஸ் ஆன போது "சன்' டிவியில் ஒளிபரப்பானது. கூடுதலாக, போக்கிரி, கில்லி உள்ளிட்ட விஜய் படங்களின் காட்சிகள் மட்டும் இடையே ஒளிபரப்பானது.

"அன்புடன்' நிகழ்ச்சியின் விளம்பரதாரர் ஆதரவு குறைந்ததால் இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டிருக்கலாம் என சன் டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேசமயம் மறு ஒளிபரப்பான விஜய்-அசின் பேட்டியின் இடையே அவர்கள் குழும சுட்டி டி.வி. மற்றும் தினகரன் விளம்பரங்கள் மட்டுமே இடம்பெற்றன.

நான் விடைபெறுகிறேன் என்று நினைத்து சந்தோஷம் அடைந்தவர்கள் மன்னிக்கவும் :-)

Read More...

Sunday, May 20, 2007

கலைஞர் டிவி உதயம்

மதுரை சம்பவத்தை தொடர்ந்து சன் டி.வி குழுமத்துக்கும் தி.மு.க.வுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பொன் விழா காட்சிகளை நேரடி ஒளிபரப்புக்கு திமுக மறுத்தது. தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் இருந்து சன் டி.வி. அலுவலகம் வேறு இடத்துக்கு சீக்கிரம் மாற்றபட உள்ளது.

திமுகவிற்கு தனியாக ஒரு டெலிவிஷன் சேனல் வேண்டும் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து ராஜ் டி.வி.யுடன் இணைந்து தி.மு.க.வுக்கு புதிய சேனல் உருவழ்ாகிறது. அந்த புதிய டி.வி.க்கு கலைஞர் டி.வி/உதயா டி.வி என பெயரிடப்படும் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

முதல்-அமைச்சர் கருணா நிதியின் பிறந்த நாளான ஜுன் 3-ந்தேதி கலைஞர் டி.வி. உதயமாகிறது. புதிய டி.வி.யில் செய்திகள், பொழுது போக்கு நிகழ்ச்சிகளும், விறு விறுப்பான நிகழ்ச்சிகளும் இடம் பெறும். தமிழக நேயர்கள் அனைவரையும் கவரும் வகையில் இந்த டி.வி. இருக்கும் என்று ராஜ் டி.வி. யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த செய்தி சன் டிவியில் வருமா ?

இந்த செய்தியை படித்தால் முன்பு ராஜ் டிவிக்கு சன் டிவி எவ்வலவு தொல்லை கொடுத்தார்கள் என்பது புரியும். அதைவிட அரசியல் செல்வாக்கு டிவி விஷயத்தில் எப்படி விளையாடுகிறது என்று தெரியும். யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் அவ்வளவு தான். அதிகார துஷ்பிரயோகம் பற்றி யாராவது கேட்பார்களா ?

இனிமேல் BSNL விளம்பரம் எல்லாம் எந்த டிவிக்கு போகும் ?

Read More...

குண்டர்கள் ராஜ்ஜியம்! - கல்கி தலையங்கம்

மதுரை நிகழ்ச்சிகள் பற்றி கல்கி தலையங்கம்

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள்தான் மதுரை தினகரன் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி, தீ வைத்து, மூன்று பேர் மரணத்துக்குக் காரணமாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்களில் ஒருவருமே தங்கள் தலைவரின் ஆசியும் ஆமோதிப்பும் இன்றி இவ்வளவு பயங்கரமாகச் செயல்பட்டிருக்க முடியாது.

காவல்துறையினர் நின்று வேடிக்கை பார்க்க, பகிரங்கமாக இந்தக் கொடுமை அரங்கேறியிருக்கிறது என்கிறபோது, கட்சிக்காரர்களின் ரௌடித்தனத்துக்கு ஆட்சி அமைப்பும் துணை நின்றதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. பத்திரிகைச் செய்திகள் அல்லது விமர்சனங்களை எதிர்க்க உரிய முறைகள் இருக்கின்றன. முறையிட அமைப்புகள் உள்ளன. ஆனால் அவற்றை நாடும் பொறுமையும் பண்பாடும் மாறி, வன்முறை வழிகள் கையாளப்படுவது அபாயகரமான போக்கு.

சம்பவத்தைக் கண்டனம் செய்த முதல்வர், தமது ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய மகனைக் கண்டிக்கவில்லை; சி.பி.ஐ. விசாரணைக்கு மட்டும் வழி வகுத்திருக்கிறார். இறந்தவர்களின் நெஞ்சு வேகும் முன் சென்னையில் முதல்வருக்குப் பொன்விழாக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன! அதிலே கூட்டணிக் கட்சித் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பிரதமரும் கூடப் பங்கேற்று, முந்தைய தினம் நடந்த கோரக் கிருத்யத்தைக் குறித்து எதுவும் குறிப்பிடாமல் வாழ்த்திச் சென்றிருக்கின்றனர்! மு.க.அழகிரியோ, காவல்துறை அரவணைத்துக் காக்க,
பொன்விழாவில் பங்கேற்க சென்னை வந்து போயிருக்கிறார்!

கட்சி மட்டத்திலோ, தி.மு.க. தலைமை, மு.க. அழகிரியைத் தட்டிக் கேட்பதற்குப் பதிலாக, தயாநிதிமாறனுக்குக் கல்தா கொடுத்திருக்கிறது! அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒரு நொண்டிக் காரணம் அதற்குச்
சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, என்ன குற்றம் இழைத்தார் என்பது
விண்டு சொல்லப்படவில்லை. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட
பிறகு, சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து ‘அட்டாக் பாண்டியன்’ கைது செய்யப்பட்டிருப்பது பல சந்தேகங்களுக்கு இடங்கொடுத்திருக்கிறது. இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தது போலீஸ் என்பது மில்லியன் டாலர் கேள்வி!

இவ்வளவு கூத்துக்கிடையில் "தினகரனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை; சன் டீ.வி.க்கும் எனக்கும் சம்பந்தமில்லை" என்று தயாநிதிமாறன் சன் டீ.வி.யில் பேட்டி அளிப்பது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது.

தினகரன் நடத்திய கருத்துக் கணிப்புகள், தயாநிதிமாறன், ஸ்டாலின் ஆகியோரின் இமேஜை வளர்ப்பதற்காக மட்டுமல்ல, அழகிரியின் செல்வாக்கைக் குறைத்துக் காட்டவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டவை என்பது கொஞ்ச - நஞ்சம் சிந்திக்கக் கூடிய யாருக்குமே புரியும்.

பத்திரிகைகள் கருத்துக் கணிப்புகளை நடத்துவதைத் தடைசெய்ய முடியாது. அவ்வுரிமை ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், எது குறித்து, எதற்காகக் கருத்துக் கணிப்பு நடத்துவது என்கிற பொறுப்புணர்ச்சி
பத்திரிகைகளுக்குத்தான் இருக்க வேண்டும். அதைச் சட்டம்போட்டு வரவழைக்க முடியாது. பத்திரிகை தர்மத்தைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பத்திரிகைச் சுதந்திரத்தை மட்டும் பிரயோகித்தால், விபரீதங்கள்தான் விளையும். பரபரப்புக்காக எதையும் செய்யலாம் என்ற வியாபார நோக்கும் இதற்குக் காரணம்.

மொத்தத்தில், வாரிசு அரசியல் தொடர்பான குடும்பச் சண்டையில், சம்பந்தமேயில்லாத மூன்று உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுவிட்டன.

சி.பி.ஐ. விசாரணையின் முடிவு, கிடைக்கும் சாட்சிகளின் அடிப்படையில்தான் அமையுமே தவிர, குற்றத்தைத் தூண்டியவர்களையும், அதனை ஆதரித்தவர்களையும் குற்றவாளிக்குப் பாதுகாப்பு அளித்தவர்களையும் குண்டர்படை வைத்திருப்பவர்களை வெளிப்படுத்தாது. இவற்றை ஒரு நீதிபதியின் தலைமையிலான நீதி விசாரணை மட்டுமே அம்பலப்படுத்த முடியும். தனி நீதிபதி நியமிக்கப்பட்டால், பொது மக்கள் அவரிடம் நேரில் சாட்சி சொல்ல முன்வருவார்கள்.

ஒரு பொன் விழாக் காலம் சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் விளங்கியதற்கு ஏதேனும் அர்த்தம் இருக்க வேண்டுமானால், அத்தகைய விசாரணையை நடத்த தகுதியான ஒரு நீதிபதியை நியமிக்குமாறு அவர் உடனே மத்திய அரசைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
( நன்றி: கல்கி )

Read More...

இட்லி மாவு பொங்கவில்லை - பெண்கள் ஆதங்கம்

இன்றைய தினந்தந்தி செய்தி :-)

சென்னை உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உளுத்தம் பருப்பு மாவாக அரைக்கும் போது பொங்கவில்லை என்று பெண்கள் ஆதங்கப்படுகின்றனர். துவரம் பருப்பு `ஸ்டாக்' இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரேஷன் கடை துவரம் பருப்பு விலை குறைவாகவும், சுவையாகவும் இருக்கிறது என்று கூறும் பெண்கள், ரேஷன் கடையில் வாங்கும் உளுத்தம் பருப்பை மாவாக அரைக்கும் போது பொங்கி வருவதில்லை. மாவும் அளவு குறைவாக இருக்கிறது. விலை குறைவு என்ற ஒரு காரணத்தைவிட உளுத்தம் பருப்பில் வேறு பலன் இருப்பதாக தெரியவில்லை'' என்று பெண்கள் சிலர் கூறினார்கள்.

கலைஞர் பற்றி இட்லிவடையில் வந்த சில கருத்துக்களால் இது நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. :-)

Read More...

Saturday, May 19, 2007

கடத்தியது புலிகள்தான் - மீனவர்கள்

நேற்று மர்மமான முறையில் வந்து சேர்ந்த 11 மீனவர்கள், இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தார்கள்.

மீனவர் ஒருவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் "எங்களுடைய படகு அவர்களுக்கு தேவைப்பட்டது. அதற்காகத்தான் எங்களை படகுடன் கடத்திச்சென்றதாக" பேட்டியின்போது, தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.

70 நாட்களுக்கு முன் கடத்தபட்ட போது, முதலமைச்சர் சட்டசபையில் மிகுந்த வருத்ததோடும் அரைமனதுடன் புலிகள் என்று சொன்ன போது, அந்த செயலில் தாங்கள் ஈடுபடவில்லை என்று விடுதலைப் புலிகள் மறுப்பு வெளியிட்டிருந்தனர்.
[ முதலில் கடற்படை தளபதி கூறியபோது, புலிகள் ஒன்றும் மறுப்பு சொல்லவில்லை. பின்னர் டி.ஜி.பி சொன்ன போது புலிகள் மறுப்பு சொல்லவில்லை, சட்டசபையில் முதல்வர் சொன்ன பின் சில நாட்கள் கழித்து தான் புலிகள் மறுப்பு வந்தது ]

தமிழகத்தில் அவர்களது ஆதரவாளர்களும், விடுதலைப்புலிகள் மீனவர்களை கடத்தியிருக்க மாட்டார்கள் என்று கூறினார்கள்.

இந்நிலையில் கடத்தப் பட்ட 12 மீனவர்களும் நேற்று மர்மமான முறையில் விடுவிக்கப் பட்டனர். ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் தமிழ்நாட்டில் தங்களுக்கு கெட்டபெயர் உள்ள நிலையில் தமிழக மீனவர்களை கடத்தி சென்ற விவகாரத்தில் புலிகளின் பெயர் மேலும் ரிப்பேர் ஆகியிருப்பது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்திய அரசு மற்றும் தமிழக அரசு இனிமேலாவது இரும்பு கரம் கொண்டு தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்.

ராமதாஸ், பழ நெடுமாறன், வைகோ எல்லோருக்கும் தொண்டை கட்டி இருக்கலாம், கப்சிப் என்று இருக்கிறார்கள். மக்கள் இந்த தேச விரோதிகளை புரிந்துகொள்ள வேண்டும்.

( கார்டூன் உதவி: ஆனந்த விகடன் )

Update: இன்றைய தினந்தந்தி செய்தி மீனவர்கள் கடத்தப்பட்டது எப்படி என்ற பேட்டி..

இன்றைய தினந்தந்தி செய்தி

கடத்தப்பட்டது எப்படி?

"நாங்கள் ஏர்வாடி கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தபோது திடீரென்று விடுதலைப்புலிகள் 2 பைபர் படகுகளில் வந்து, எங்கள் அனைவரையும் அவர்கள் படகில் ஏறும்படி மிரட்டினார்கள். ஏன் என்று கேட்டதற்கு, அடிக்க வந்தனர். பின்னர் எங்களை இரண்டு இரண்டு பேர்களாக அவர்களின் படகில் ஏற்றிக் கொண்டனர்.

கேரளாவைச் சேர்ந்த சைமனை தனியாக அழைத்துச் சென்றனர். அவரையும் எங்களுடன் கூட்டிச் செல்லுங்கள் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டேன். உடனே என்னை துப்பாக்கியை எடுத்து அடிக்க வந்தனர். பின்னர் அவரையும் எங்கள் படகையும் கொண்டு சென்று விட்டனர். நாங்கள் அனைவரும் அழுதோம்.

ரத்த உறவு தானே?

பின்னர் எங்களை படகுகளில் இருந்து இறக்கி, காட்டுப் பகுதிக்கு (மன்னார்) அழைத்துச் சென்றனர். அங்கு 35 நாட்கள் பாம்பு, பல்லி போன்ற விஷப் பூச்சிகள் இருக்கும் அசுத்தம் நிறைந்த இடத்தில் தங்க வைத்தனர். 11 பேரும் படுப்பதற்கு 5 பாய்கள் மட்டுமே தந்தனர். தார்பாயில் கூடாரம் போட்டு இருந்தனர். என்ன தப்பு செய்தோம்? ஏன் எங்களை பிடித்தீர்கள்? என்று கேட்டோம்.

அதற்கு, ``ஒரு விஷயத்துக்கு உங்களின் படகு தேவைப்படுகிறது, நீங்களும் தமிழர்கள் தானே? ரத்த உறவுதானே? உங்கள் படகு மூலம் உங்களால் சில உதவிகள் தேவைப்படுகிறது. எனவே 5 நாட்கள் பொறுத்து இருங்கள். எங்கள் மனசாட்சிக்கு இது சரி என்று தெரிகிறது. தப்பி ஓட முயன்றால் சுட்டு விடுவோம்'' என்று கூறினார்கள்.

கண்களை கட்டி

பின்னர் எங்களை வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அன்று மாலை ஒரு வண்டியில் எங்களை ஏற்றிச் சென்று, சிறை வைத்தனர். எங்களை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் போதெல்லாம் கண்களைக் கட்டியே கூட்டிச் சென்றனர். சிறையில் இருக்கும் போது அதிகாரி போல் ஒருவர் வந்து எங்களை சந்தித்தார்.

ஒருமுறை இலங்கை ராணுவத்துடன் சண்டை நடக்கும் போது பதுங்கு குழியில் படுக்கக் கூறினார்கள். பின்னர் கண்ணைக் கட்டி வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். கண்ணைக் கட்டும் போதெல்லாம் எங்கள் உயிரே போனது போல் ஆகிவிட்டது. 5 நாட்கள் அங்கு இருந்தோம். பின்னர் ஓலை வேய்ந்த மற்றொரு கூடாரத்தில் 13 நாட்கள் இருந்தோம்.

பிரபாகரன் படம்

பின்னர் சுமார் 35 சென்ட் இடத்தில், அலுமினிய ஷீட் போட்ட வீட்டில் எங்களை அடைத்து வைத்தனர். அங்கு நமது ஊர் சாப்பாடு தந்தனர். எங்களையும் சமைப்பதற்கு அனுமதித்தனர். 10 நாட்கள் நல்ல சாப்பாடு கிடைத்தது. சைமன் பற்றி கேட்ட போது, விரைவில் அவரை பார்க்கலாம் என்றனர்.

ஹெல்மெட் போட்டு முகத்தை மறைத்த நிலையில் அவ்வப்போது ஒருவர் எங்களிடம் வந்து பேசுவார். அனைவரும் தமிழில் பேசினார்கள். நாங்கள் சென்ற இடங்களில் பிரபாகரன் படம் இருந்தது. எனவே எங்களை கடத்தியது விடுதலைப்புலிகள் தான் என்பதை உறுதி செய்திருந்தோம். இதுதவிர அங்கு உள்ளவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் இயக்கப் பாடலை ரேடியோவில் கேட்டபடி இருப்பார்கள்.

பத்திரமாக ஒப்படைத்தனர்

5 நாட்களில் விட்டு விடுவதாகக் கூறினார்கள். ஆனால் 68 நாட்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம். எங்கள் யாரையும் அவர்கள் துன்புறுத்தவில்லை. நேற்று முன்தினம் இரவு 12.30 மணிக்கு ராமேஸ்வரம் அருகே இரணை தீவு அருகே விட்டு விட்டனர். 2 படகுகளில் எங்களை அழைத்து வந்தனர்.

அங்கு மீன் பிடித்து கொண்டு இருந்த மீனவர்களிடம் எங்களை ஒப்படைத்தனர். பத்திரமாக எங்களை கரை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தொழில் செய்ய முடியாது என்றும் அவர்களை மிரட்டினார்கள். விடுவிக்கும் போது எங்கள் படகை தந்து விடுவதாக கூறி இருந்தனர். ஆனால் அதை திருப்பிக் கொடுக்கவில்லை.

இவ்வாறு கிளமண்ட்ஸ் கூறினார். அவருக்கு உதவியாக ஜோசப்பும் பேசினார்.

கடத்தியது ஏன்?

"எங்களுடைய படகு அவர்களுக்கு தேவைப்பட்டது. அதற்காகத்தான் எங்களை படகுடன் கடத்திச்சென்றதாக'' பேட்டியின்போது, தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். "போலீசார் சொல்லிக்கொடுத்து எதையும் சொல்லவில்லை'' என்று கிளமண்ட்ஸ் தெரிவித்தார்.

Read More...

சிக்கல் சிவாஜி"சிவாஜி" படம் உலகம் முழுவதும் ஏப்.14-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏவி.எம். நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது "சிவாஜி" படம் ஜூன் 15-ம் தேதிதான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More...

சேது சமுத்திரம், கலைஞர், கணேசன், எஸ்.குருமூர்த்தி

சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுருத்தி வீதி சமைப்போம் - மகாகவி பாரதியார்

சேது சமுத்திர திட்டம் போன்ற நாட்டு திட்டம், இவை நிறைவேற வேண்டுமானால், குறுக்கே வரும் பெருச்சாளிகளுக்கும், குருட்டுத்தனங்களுக்கும் இடம் தராதீர்கள். இவர்களது புலம்பல்களுக்கும், இதிகாசத்தினë பெயரால், இலக்கியத்தின் பெயரால், வரலாற்றின் பெயரால் நம் நாட்டு வளத்தை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நாட்டின் விரோதிகள், தேச துரோகிகள். அவர்களுக்கு வழிவிடாமல் இதுபோனëற திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்
- கலைஞர்

சென்னைக்கு அருகே துணை நகரம் அமைக்கப்படுவதை பாமக எதிர்த்தவுடன் முதல்வர் அத்திட்டத்தை கைவிட்டார். அதுபோல் ராமர் பாலத்தை இடிப்பதை தவறு என எதிர்கட்சிகள் கூறினால் அதை திருத்தி கொள்வதுதான் சிறந்தது.
முதல்வர் கருணாநிதி ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடிகள் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதும்போது ஆதாம் பாலம் என்றழைக்கப்படும் ராமர் பாலம் இருப்பதை குறிப்பிட்டிருந்தார்.
நேற்றைய கூட்டத்தில் முதல்வர், சேது சமுத்திர திட்டத்தை இதிகாச பெயரால் தடுப்பவர்கள் துரோகிகள் என கூறியுள்ளார். பாஜகவின் தேச பக்தியை பற்றி போசவோ, சந்தேகப்படவோ நேற்றைய கூட்டத்தில் பேசியவர்களுக்கு எந்த அருகதையும், யோக்யதையும் இல்லை
- பிஜேபி தமிழக தலைவர் இல.கணேசன்


சங்கராச்சாரியர்கள் தேசத் துரோகிகளா?: கருணாநிதி பதில் சொல்லட்டும்!
எஸ்.குருமூர்த்தியின் கட்டுரை கீழே.."கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், இதிகாசத்தின் பெயரால் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகிகள்'. இவ்வாறு சொல்லி இருப்பது முதல்வர் கருணாநிதி.

சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதை மே 17-ம் தேதி பத்திரிகைகள் வெளியிட்டன.

அதே தேதியில் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து ஹிந்து மத உயர் தலைவர்கள் போராடப் போவதாகவும் செய்தி இடம் பெற்றுள்ளது.

இந்த ஹிந்து தலைவர்கள் யார்? அசோக் சிங்கலோ அல்லது பிரவீண் தொகாடியாவோ அல்ல அவர்கள். புரி, துவாரகை, பத்ரிநாத், சிருங்கேரியில் உள்ள உயரிய ஆன்மிக பீடங்களாகத் திகழும் மடங்களின் தலைவர்கள். அவர்கள் சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிராக தேசிய அளவில் போராட முடிவு செய்துள்ளனர் என்ற செய்தியை பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

இந்த சங்கராச்சாரியர்கள் எப்போதுமே போராட்டம் நடத்தத் தெருவுக்கு வந்ததில்லை. தமது சகிப்புத் தன்மையையும் மீறி அவர்களைப் போராடத் தூண்டுவது எது?

அதுதான் முதல்வர் கருணாநிதி மே 16ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் ஆதரவு தெரிவித்துப் பேசிய "சேது சமுத்திரத் திட்டம்'. அந்தத் திட்டம்தான் சங்கராச்சாரியர்களின் மனங்களைக் கொதித்தெழச் செய்துள்ளது.

சம்ஸ்கிருதத்தில் "சேது' என்பதன் பொருள் பாலம். இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கடலைத் தாண்டிச் செல்ல ராமரால் கட்டப்பட்டது சேது என்று மதத் தலைவர்கள் கருதுகிறார்கள். இப்போதும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நில இணைப்பாகத் திகழ்வது ராமர் பாலமாகும்.

பல லட்சம் ஆண்டு பழமை வாய்ந்த இந்தப் பாலத்தை தனது கேமிரா மூலம் படம் பிடித்துள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த நாஸô அமைப்பின் செயற்கைக்கோள். இந்த ராமர் பாலத்தை நடந்து செல்வதற்காகப் பல நூற்றாண்டுகளுக்கு முன் பயன்படுத்தியுள்ளனர் என்பதை நிரூபிக்க வரலாற்றுப்பூர்வ ஆதாரங்கள் நிறையவே உள்ளன.

சேது சமுத்திரத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்தப் புராதன கால பாலம் அழிந்துபோகும் அபாயம் உள்ளது.

இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்லாமல் இந்திய கடற்கரையோரமாக வங்கக் கடலிலிருந்து அரபிக் கடலுக்குச் செல்வதற்கான கடல்வழி அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்தத் திட்டம் நிறைவேறினால் வர்த்தக ரீதியில் ஆதாயம் அடைய முடியும் என இந்தத் திட்டத்தின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்தத் திட்டத்தை ஜெயலலிதாவும் அவரது அதிமுகவும், அத்வானி மற்றும் பாஜகவும் எதிர்க்கின்றன. விஎச்பியும் ஆர்.எஸ்.எஸ்.ஸýம்கூட தீவிரமாக எதிர்க்கின்றன. இந்த எதிர்ப்பை அமைப்பு ரீதியில் மக்களைத் திரட்ட என்று கருத வாய்ப்பு உள்ளது. ஆனால், மடாதிபதிகளின் எதிர்ப்பு மதநம்பிக்கை ரீதியிலானது. அவர்களது உணர்வுக்கு மதச்சார்பற்ற ஓர் அரசு மதிப்பு தருவது அவசியம்.

இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், சேது சமுத்திரத் திட்டம் என்று பெயரிட்டிருந்தாலும் சுவாமி தயானந்த சரஸ்வதி சொல்லி இருப்பதுபோல், சேது இருக்காது சமுத்திரம் தான் இருக்கும் என இந்த ஆன்மிகத் தலைவர்கள் வேதனையில் உள்ளனர்.

சேது சமுத்திரத் திட்டத்துக்கு அரசியல் ரீதியில் எழும் எதிர்ப்பை, உள்நோக்கம் கொண்டது என அர்த்தம் கற்பித்து நிராகரிக்கலாம். ஆனால் ஆன்மிகத் தலைவர்களின் எதிர்ப்புக் குரலை எப்படி நிராகரிக்க முடியும்? அவர்களுக்கு அரசியல் உள்நோக்கம் இல்லையே. அவர்களது வேதனை உணர்வுகளை அரசு புறந்தள்ளிவிட முடியுமா?

கடவுள், மதம், இதிகாசம், புராணத்தின் பெயரில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறார் கருணாநிதி. இந்த தர்க்கம் ஆபத்தானது.

இந்தத் திட்டத்துக்கு மத நம்பிக்கை ஒன்றால் மட்டுமே எதிர்ப்பு எழவில்லை. இந்திய புவியியல் ஆய்வு அமைப்பின் ஓய்வுபெற்ற தலைமை இயக்குநர் எஸ்.பத்ரிநாராயணன், புவியியல் துறை நிபுணர் வி.சீனிவாசன் போன்றோர், இந்தப் பாலம் இயற்கையாக உருவானதல்ல என்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

மதத்துக்கு அப்பாற்பட்டும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளது. மதச்சார்பின்மைக் கொள்கையில் ஊறியவர்களும் அறிவுஜீவிகளுமான நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ் போன்றோரும் பூகோள-அரசியல் மற்றும் பாதுகாப்பு கோணத்தில் இந்தத் திட்டம் மீது கவலை வெளியிட்டுள்ளனர்.

சுனாமி தொடர்பாக உலக அளவில் சிறந்த நிபுணர்களாகத் திகழ்பவர்களில் ஒருவரான டாக்டர் தாட் மூர்த்தி (கனடா) "2004ல் சுனாமியின் பேரழிவிலிருந்து ராமர் பாலத்தால் காப்பாற்றப்பட்ட கேரளம் இனி சுனாமி பாதிப்புக்கு இலக்காகும்' என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அலுவலகத்திலிருந்துகூட இந்தத் திட்டம் தொடர்பாக 16 கேள்விகள் அனுப்பப்பட்டன. திட்டம் தொடங்கிய 2 நாள்களுக்கு பிறகு தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகம் பதில்களை அனுப்பியது.

சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிர்ப்பாக உள்ள இந்த வல்லுநர்களும் அறிவுஜீவிகளும் தேசத் துரோகிகளா? முதல்வர் கருணாநிதி பதில் கூற வேண்டும்.

புரி, துவாரகை, பத்ரிநாத், சிருங்கேரி மடங்களின் சங்கராச்சாரியர்களும் தேசத் துரோகிகளா?

ராமர் பாலம் இடிக்கப்படுவது பற்றி வேதனைப்படும் இவர்கள், உண்மையில் சொல்லப்போனால் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கவில்லை. புராதன ராமர் பாலத்துக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சேது கால்வாய் அமைக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். இது சாத்தியமானது என்றே வல்லுநர்களும் கூறுகின்றனர். அதை அரசு ஆராய வேண்டும். ஆனால் அதைச் செய்ய விருப்பம் இல்லாமல் உள்ளது அரசு.

சட்டப் பேரவை சேவையில் பொன்விழா கொண்டாடிய உன்னத தலைவரான முதல்வர் கருணாநிதி, அறிவியலறிஞர்கள் மீதும் மதத்தலைவர்கள் மீதும் வெறுக்கத் தக்க வார்த்தைகள் வீசியதைத் தவிர்த்திருக்கலாம். அதற்கு மாறாக நன்கு பகுத்தறிந்து வெளியிடப்பட்ட எதிர்ப்பை அடுத்து, இந்தத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கலாம்.

அறிவுபூர்வமான ஆலோசனையைச் செவிகொடுத்து கேட்காத ஓர் அரசு, ஆங்காங்கே மக்களின் போராட்டத்தையே எதிர்கொள்ள வேண்டிவரும்.


Read More...

11 மீனவர்கள் வீடு திரும்பினர் - யார் கொண்டு வந்து விட்டார்கள் ?

மார்ச் மாதம் விடுதலை புலிகள் கடத்தி சென்றதாக சொல்லப்பட்ட மீனவர்கள் 12 பேரில் 11 இரண்டு பேட்ச் ஆக இன்று திரும்பினர்.

ஐந்து மீனவர்கள் இன்று மாலை நான்கு மணி அளவில் ராமேஸ்வரம் அருகில் உள்ள நரிகுழி அருகிலும், ஆறு மினவர்கள் எட்டு மணிக்கு தங்கச்சிமடத்திலும் விடுதலை புலிகள் என்று சந்தேகிக்க படுபவர்கள் கொண்டுவந்து விட்டுவிட்டு போனதாக தகவல். கொண்டுவந்து விட்டுவிட்டு போனவர்கள் வேகமாக திரும்பி சென்றனர் என்று தெரிகிறது.

சைமன் என்ற படகு மெக்கானிக் இன்னும் வரவில்லை, மாலத்தீவு அதிகாரிகளிடம் இவர் சிக்கியிருப்பார் என்று தெரிகிறது. ( மாலத்தீவு அதிகாரிகள் விடுதலை புலிகளின் படகை மூழ்கடித்து அதிலிருந்து ஐந்து பேரை காவலில் வைத்துள்ளார்கள் என்பது குறிபிடத்தக்கது)

மீன்வர்களிடம் காவல் துறை 'Q' பிரிவு விசாரனை நடத்தி வருகிறார்கள். மேல் விவரம் நாளை காலை தெரியும் என்று நினைக்கிறேன்.

ராமதாஸ், வைகோ, பழ.நெடுமாறன் போன்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

( தொடர்புடைய பதிவு: எது உண்மை )

Read More...

Friday, May 18, 2007

மதுரை சம்பவம் பற்றி - துக்ளக் தலையங்கம்

மதுரை சம்பவம் பற்றி துக்ளக் தலையங்கம். 'இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் அல்ல !' என்ற தலைப்பில் + ஒரு எச்சரிக்கை பகுதி..


இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் அல்ல !
ஒரு பத்திரிகை அலுவலகத்தின் மீது இவ்வளவு பெரிய தாக்குதல், இதுவரை தமிழகத்தில் நடந்ததில்லை – என்று கூறுகிற அளவிற்கு ஒரு பயங்கரமான தாக்குதல், "தினகரன்' பத்திரிகையின் மதுரை அலுவலகத்தின் மீது நடந்திருக்கிறது.

"கலைஞரின் வாரிசு யார்?' என்ற கேள்வியை கேட்டு, ஒரு கருத்து கணிப்பை நடத்தி, "ஸ்டாலினுக்கு 70 சதவிகித ஆதரவு; மற்றவர்களுக்கு 20 சதவிகித ஆதரவு; அழகிரிக்கு 2 சதவிகித ஆதரவு' என்பதே தமிழக மக்களின் கருத்து – என்று ஒரு செய்தியை "தினகரன்' பத்திரிகை வெளியிட்டது. இதையடுத்து, மதுரையில் "தினகரன்' அலுவலகத்தின் மீது தாக்குதல்; பெட்ரோல் குண்டு வீச்சு; அலுவலகம் எரிப்பு; உடைப்பு... என்றெல்லாம் நடந்து; அதன் விளைவாக மூன்று அப்பாவிகள்
உயிரிழந்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலை, முதல்வர் மகன் அழகிரிதான் தூண்டிவிட்டு நடத்தியிருக்கிறார்
– என்று சன் டி.வி. மற்றும் தினகரன் அதிபர் கலாநிதி மாறன் குற்றம் சாட்டியிருக்கிறார். சன் டி.வி.யின் குற்றச்சாட்டு எடுத்த எடுப்பில் அலட்சியப்படுத்தி விடக் கூடியது அல்ல; தாக்குதலில் ஈடுபட்டவர்களின் அடையாளம் தெரியும் என்றும் சன் டி.வி. பலமுறை செய்திகளில் அடித்துக் கூறியுள்ளது. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று அநேகமாக எல்லா செய்திகளும் கூறுகின்ற நிலையில் – இவை எல்லாமே, விசாரணைக்கும் நிரூபணத்திற்கும் உரியவை.

ஒரு பத்திரிகை மீது தாக்குதல் நடந்திருப்பதால், அதுவும் ஒரு கருத்து கணிப்பின் விளைவாக அந்தத் தாக்குதல் நடந்திருப்பதால், "இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்' என்று கூறி பத்திரிகையாளர்களின் சங்கங்கள், இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

நடந்த வன்முறை, முழுமையான கண்டனத்திற்குரியது. மூன்று பேர் கொலை செய்யப்படுகிற அளவுக்கு ஒரு பயங்கரத் தாக்குலை நடத்தியவர்கள் சட்டத்தின்
முன் நிறுத்தப்பட்டு, தாங்கள் செய்த கொடுமைக்கான தண்டனையைப் பெற வேண்டியவர்கள். இவர்களை யார் தூண்டினார்களோ, அவர்களும் தண்டனைக்குரியவர்களே. வன்முறை நடந்தபோது, போலீஸார் வேடிக்கை பார்த்திருக்கின்றனர். அவர்களும் கண்டனத்திற்குரியவர்களே! இதிலெல்லாம்
சந்தேகத்திற்கோ, மாற்றுக் கருத்திற்கோ இடமில்லை.

ஆனால், நடந்ததை "பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்' என்று சொல்ல முடியுமா? நடந்த நிகழ்ச்சிகளின் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போம்:

ஸ்டாலின்தான், கலைஞரின் "அரசியல் வாரிசு' என்பது நடைமுறையில் பிரகடனமாகி விட்ட விஷயம்; தி.மு.க.வும் ஏற்றுக் கொண்டு விட்ட நிலை; மக்களும் புரிந்து கொண்டு விட்ட அரசியல். இதில் யார் கருத்தையும் கேட்டறிய ஒரு கருத்து கணிப்பு நடத்தத் தேவையே இல்லை. அதுவும், இப்போது "அடுத்தது யார்?' என்ற கேள்வி அவசரமாக எழுந்து விடவும் இல்லை.

இது தவிர, ஏற்கெனவே, "தமிழகத்தைச் சார்ந்த மத்திய அமைச்சர்களில் யார் திறமைசாலிகள்?' என்ற கேள்வியைக் கேட்டு, "தினகரன்' வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவு, முதல்வருக்குப் பிரச்சனையைத் தோற்றுவித்தது. தயாநிதி மாறனுக்கு 64 சதவிகிதம்; சிதம்பரத்திற்கு 27 சதவிகிதம்; ராமதாஸின் மகன் அன்புமணிக்கு 1 சதவிகிதம் என்று கூறிய அந்த கருத்து கணிப்பு முடிவை, ராமதாஸ் வன்மையாகக் கண்டித்தார். இது வேண்டுமென்றே பரப்பப்படுகிற பொய்க் கருத்து என்று கூறிய அவருடைய கண்டனத்தில், இதற்கு முதல்வரையும் பொறுப்பாக்குகிற வகையிலான போக்கும் இருந்தது.

இதனால் கலைஞருக்கு பிரச்சனை ஏற்பட, அவர் இந்த மாதிரி கருத்து கணிப்பிற்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்; இது நம்பகத்திற்குரியது அல்ல என்றும் அவர் கூறினார். இது தவிர, "இந்த மாதிரி கருத்து கணிப்புகளை வெளியிட வேண்டாம்' என்றும் அவர் "தினகரன்' அதிபரைக் கேட்டுக் கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், வாரிசு விஷயம் பற்றி "தினகரன்' கருத்து கணிப்பு முடிவு வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்ட பிறகு, முதல்வர் அவர்களிடம் "இது வேண்டாம்' என்று கூறியிருக்கிறார். அதாவது
தேவையில்லாத ஒரு கருத்து கணிப்பை, அவசியமில்லாத ஒரு நேரத்தில், முதல்வரே கேட்டுக் கொண்ட பிறகும், பிரசுரம் செய்திருக்கிறார்கள்.

இதையே வேறு ஒரு பத்திரிகை செய்திருந்தால், அது பத்திரிகையின் பொறுப்பு; அந்த மாதிரி ஒரு பத்திரிகையிடம், கருத்து கணிப்பு வெளியிட வேண்டாம் என்று முதல்வர் கேட்டிருக்க மாட்டார்; அப்படியே அவர் கேட்டாலும், முதல்வரின் வேண்டுகோளுக்கு இசைவதும், இசையாததும் சம்பந்தப்பட்ட பத்திரிகையின் இஷ்டம்; அந்தப் பத்திரிகை தனது கணிப்பை வெளியிடுவது – பத்திரிகை சுதந்திரம்; அதற்காக அப்பத்திரிகை தாக்கப்பட்டால், அது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்.

ஆனால், இப்போது நடந்துள்ள நிகழ்ச்சிகளிலோ, குடும்பப் பொறுப்பும் வருகிறது.
தங்களுடைய மீடியா பலத்திற்கும், மத்திய அரசு பதவிக்கும், இவற்றின் மூலமாக கிட்டுகிற மற்ற பல "நன்மை'களுக்கும் கலைஞரே மூல காரணம் என்பதை, அவர்கள் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் – என்ற எதிர்பார்ப்பு, குடும்பத் தொடர்புடையது. அதை மீறி பிரசுரம் நடந்தது என்பது, அந்த குடும்பப் பொறுப்பை மீறிய விஷயம்; குடும்பப் பிரச்சனை.

இந்த இரு தரப்புகளுக்கிடையே உள்ள மனக்கசப்பு பல வகைகளில் வெளிப்பட்டு வருகிறது என்பதற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்: சென்ற மார்ச் மாதத்தில் ஸ்டாலின் பிறந்த தின விழா நடந்தபோது, தினகரன் "இன்று குரங்கின் பிறந்த நாள்' என்று முதல் பக்கத்தில் ஹைலைட் செய்து, உள் பக்கத்தில் "தனது பேரன் பேத்திகளுடன் ஒரு குரங்கு பிறந்த நாள் விழா கொண்டாடியது' – என்ற ஒரு செய்தியை வெளியிட்டது.

இது தவிர, ஏற்கெனவே அழகிரி செய்திகள் சன் டி.வி.யிலும், தினகரனிலும் புறக்கணிப்பு; தயாநிதி மாறனின் நிகழ்ச்சிகள், தென் மாவட்டங்களில் அழகிரி ஆதரவாளர்களால் புறக்கணிப்பு – போன்ற போக்குகளின் மூலம், இந்த இருவருக்குமிடையே ஒரு மௌன மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அந்த மோதலின் ஒரு கட்டமாக கருத்து கணிப்பு வெளியாகியது; அடுத்த கட்டமாக வன்முறை வெறியாட்டம் நடந்திருக்கிறது.

சட்டசபையில் முதல்வர் "மற்றவர்கள் 20 சதவிகிதம் ஆதரவு பெறுகிறார்கள்' என்ற தினகரனின் கருத்து கணிப்பு, தயாநிதி மாறனுக்கு அந்த அளவு ஆதரவு உள்ளதாகக் குறிப்பிடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிற வகையில் பேசினார். இது ஒருபுறமிருக்க, முதல்வரின் "50 ஆண்டு சட்டசபைப் பணி' பாராட்டு விழாவை ஒளிபரப்புகிற உரிமையை சன் டி.வி. பெறவில்லை. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காத, ஒரே தமிழக மத்திய அமைச்சர் – தயாநிதி மாறன். இவை எல்லாம், எந்த உரசலையும் காட்டவில்லை என்று யாரும் நம்ப மாட்டார்கள்.

ஆக, இது முதல்வர் குடும்பத்தினுள் இருக்கிற பிரச்சனையின் வெளிப்பாடே. அப்படி இருக்க, இதை "பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்' என்று சொல்வது, இதில் உள்ள குடும்பச் சூழல்களையும், உறவின் முறை சிக்கல்களையும், புறக்கணித்து விட்டு பேசுகிற பேச்சாகத்தான் இருக்கும்.

மதுரையில் நடந்தது அராஜகம். வன்முறை. கொலை. அது சட்டப்படியான நடவடிக்கைக்கு உரியது. ஸி.பி.ஐ. விசாரிக்கும் என்று முதல்வர் சொல்லி விட்டதால், இப்போதைக்கு மாநில போலீஸ் இதில் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமற், பார்த்துக் கொண்டாகி விட்டது. ஸி.பி.ஐ. மத்திய அரசின் சொல்லைத் தட்டுவதில்லை என்பதை வேறு வழக்குகளிலும் பார்த்திருக்கிறோம். மத்திய அரசோ, கலைஞர் பேச்சைத் தட்டாது. ஆக, ஸி.பி.ஐ. விசாரணை என்ற அறிவிப்பின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தாகி விட்டது. ஒன்று – மாநில போலீஸ் ஒதுங்கி நிற்கும்; இரண்டு – முதல்வரை மீறி எதுவும் நடந்து விடாது. இது தவிர, ஸி.பி.ஐ. விசாரணை என்று கோரிய பத்திரிகைகளும், எதிர்க்கட்சிகளும் இது பற்றி, முதல்வரைக் குறை கூற இடமில்லாமலும் போய் விட்டது.

கருத்து கணிப்பு வெளியிட்டு, முதல்வரின் கோரிக்கையை நிராகரித்து, அவருக்கே சவால் விட "தினகரன்' ஏன் முனைந்தது என்பது தெரியவில்லை. "எங்களால் எதுவும் செய்ய முடியும்; என்ன மாதிரி சிக்கலையும் உருவாக்க முடியும்' – என்று காட்டி, முதல்வரை எச்சரிக்க யாரோ விரும்பியிருப்பது போலத்தான் தோன்றுகிறது. மத்திய அரசு, இப்போதைக்கு, தமிழக முதல்வரின் பக்கமே நிற்கும் என்கிற நிலையில், இம்மாதிரி சவால்கள், அதில் ஈடுபடுபவர்களுக்கு என்ன பலன் அளிக்கும் என்று, அதில் ஈடுபட்டவர்கள் எதிர்பார்த்தார்கள் – என்பது புரியவில்லை.

மக்களைப் பொறுத்தவரையில், நடப்பது குடும்பச் சண்டை. ஆனால் விளைந்தது கொடூரமான வன்முறை. அதை நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். வன்முறையை வேடிக்கை பார்த்த போலீஸாரும் விசாரணைக்குரியவர்கள். குடும்பச் சண்டையில், ஒரு பத்திரிகை, ஒரு தரப்பின் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதால், விளைந்துள்ள தண்டனைக்குரிய வன்முறையை – பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று கூற முடியாது. குடும்பத்தினரின் போட்டா போட்டி – பத்திரிகை சுதந்திரமாகி விடாது.


எச்சரிக்கை

இந்த இதழ் அச்சாகிற தருவாயில், தயாநிதி மாறனை, மத்திய அமைச்சர்
பதவியிலிருந்து நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, முதல்வரை, தி.மு.க. நிர்வாகக் குழு கேட்டுக் கொள்ள – அதை ஒட்டி,
தயாநிதி மாறன் ராஜினாமா செய்திருக்கிறார். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்றும் தி.மு.க. நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

தி.மு.க.வினரால் – முக்கியமாக கலைஞரால் – உருவாக்கப்பட்டவர்கள், (கலைஞர் உதவியால் உதயமாகி, வளம் பெற்ற) சன் டி.வி.யின் "சக்தி'யும், பண பலமும், தி.மு.க.வையே நிலைகுலையச் செய்யக் கூடிய திறன் படைத்தவை என்று எண்ணி விட்டார்கள். அதன் விளைவுதான் இப்போது நடந்திருப்பது.

தோல்வியைக் கூடத் தாங்கி விடலாம்; ஆனால் வெற்றியைத் தாங்கிக் கொள்ள, நிதானமும், மனோபலமும் தேவை. அது இல்லையென்றால், சிலர் பெறுகிற வெற்றிகளே, அவர்களுக்கு வினையாகி விடும். இதை அரசியலில் முன்பும் பார்த்திருக்கிறோம்; பின்பும் பார்ப்போம்; இப்போதும் பார்க்கிறோம்.
( நன்றி: துக்ளக் )

Read More...

உயிரின் விலை ? - குமுதம் தலையங்கம்

குமுதம் ' உயிரின் விலை ? 'என்று மதுரை சம்பவம் குறித்து தலையங்கம் எழுதியுள்ளது. அரசு பதில்களிலும் ஒரு பதில் வந்துள்ளது. இரண்டும் கீழே

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்? என்ற கருத்துக்கணிப்பு வெளிவந்ததும் ஏற்பட்ட விளைவு, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களை அதிர வைத்திருக்கிறது.

சம்பந்தப்பட்ட நாளிதழின் அலுவலகம் தாக்கப்பட்டு, தீயிடப்பட்டது. அதில் பரிதாபமாக மூன்று உயிர்கள் கருகி பலியாகியிருக்கின்றன.

தாக்குதலில் தொடர்புடையதாகச் சொல்லப்பட்ட பிரமுகரைக் கைது செய்யச் சொல்லி பாதிக்கப்பட்ட நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பத்திரிகையாளர் சங்கங்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தன. நாடு முழுக்க இந்தப் பிரச்னை எதிரொலித்தது. சிலர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளி வந்திருக்கின்றனர்.

பத்திரிகையாளராகத் தன்னை அடிக்கடி சொல்லிக் கொள்ளும் தமிழக முதல்வர், முதிர்ந்த அனுபவத்தின் விளைவாக உடனடி நடவடிக்கை எடுப்பார் என்று பலரும் காத்திருந்தபோது, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுகிறார். காவல் துறையைத் தன் கைவசம் வைத்திருக்கும் முதல்வர்.

கட்சியின் நிர்வாகக் குழு கூடி, கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதாக மத்திய அமைச்சர் தயாநிதிமாறனை பதவி விலக்கக் கோருகிறது. அவரும் ராஜினாமா செய்கிறார்.

அதெல்லாம் கட்சிக்குள் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள். ஆனால், தாக்கப்பட்டு மூன்று உயிர்கள் பலியானதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? அதிகாரம் பொருந்திய காவல்துறை சம்பவத்தன்று ஏன் ஸ்தம்பித்துப் போனது?

வழக்கம் போல் சென்ற ஆட்சியில் தர்மபுரியில் மூன்று மாணவிகளின் உயிர் பறிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் முதல்வர். அந்த வழக்குடன் தொடர்புடைய மூன்று பேர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் காதிருக்கிறார்கள்.

அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட போது எரிக்கப்பட்ட மாணவியின் தந்தை வலியுடன் சொன்ன வாக்கியம் இதுதான்...

‘’இப்போதாவது அவர்களுக்கு உயிரின் விலை தெரிந்திருக்கும்.’’

தற்போதைய தாக்குதலில் மூன்று உயிர்களை பலி வாங்கயவர்களுக்கு உயிரின் விலை எப்போது தெரியும்?மதுரை தினகரன் அலுவலகத்தில் நடந்த கொடூர தாக்குதல் பற்றி?

ஏராளமான கேள்விகளை மனதில் ஏற்படுத்திய சம்பவம். உண்மையில் மதுரையில் யாருடைய ஆட்சி நடக்கிறது? எந்தப் பதவியிலும் இல்லாத அழகிரிக்கு அவ்வளவு செல்வாக்கு எப்படி வந்தது? அந்த மாவட்டத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பதவியில் உள்ள அரசியல்வாதிகள் அத்தனை பேரும் அழகிரியின் உத்தரவின்படி நியமிக்கப்பட்டவர்களா? மேயரின் தலைமையில் ஒரு வெறி பிடித்த ரவுடிக் கூட்டம் பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்து வன்முறை ஆட்டம் போட்டு படுகொலைகளில் ஈடுபடும் போது, காவல் துறை கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்ததை புகைப்படங்களும் வீடீயோக்களும் உறுதி செய்கின்றன. அப்படியென்றால் தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா? ரவுடிகளின் ஆட்சியா? சம்பவம் நடந்த அன்று அப்பாவிகள் படுகொலை, அநியாயம், அக்கிரமம், பத்திரிகை சுதந்திரம் போச்சு, அழகிரி ஏவிவிட்ட ரவுடிகளின் கொடுஞ்செயல், இதைச் சும்மா விடப்போவதில்லை, ஆய், ஊய் என்றெல்லாம் கூப்பாடு போட்ட சன் டிவி அடுத்த நாளே வாயை மூடிக் கொண்டு மெளனமாகி விட்ட மாயம் என்ன? பட்டப்பகலில் பொதுச்சொத்தை சேதம் செய்து கொலை வெறியாட்டம் போட்ட கும்பலின் பின்புலம் அழகிரிதான் என்று அந்த டிவி செய்தி கூவிக் கூவி சுட்டிக்காட்டிய பிறகும் அவரை போலீஸ் விசாரித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? பத்திரிகை சுதந்திரத்துக்கும், ஜனநாயக அமைப்புக்கும் இவ்வளவு பயங்கரமான ஆபத்து தன்னுடைய மகனால் ஏற்பட்ட அடுத்த இரண்டாவது நாளே தன்னுடைய சட்டமன்ற பொன்விழா நிகழ்ச்சியை ஆடம்பரமாக நடத்த முதல்வருக்கு எப்படி மனம் வந்தது?
( நன்றி குமுதம் 23-5-2007 )

Read More...

கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்! - ஞாநி

இந்த வாரம் ஆனந்த விகடனில் மதுரை சம்பவம் பற்றி தலையங்கம் கிடையாது. இரண்டு கார்டூன் மட்டும் தான். ஓ பக்கங்களில் ஞாநி கலைஞருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அது கிழே... ( நன்றி: ஆனந்த விகடன் )

கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்!
அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் அளவற்ற அன்புக்குரிய மகன்களும், பேரன்களும் இன்று உங்கள் குடும்ப விஷயங்களைப் பொது விவாதத்துக்குரிய விஷயமாக மாற்றிவிட்டதால் உங்களுக்கு உண்டான தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, எனக்கு ஒரே நேரத்தில் இரண்டு உணர்ச்சிகள் தோன்றுகின்றன.

ஒன்று, பரிதாப உணர்ச்சி!

இரண்டாம் குழந்தைப் பருவம் என்றுசொல்லக் கூடிய 84 வயது முதிர்ந்த பிராயத்தில் இருக்கிறீர்கள். சராசரி மனிதர்கள் ஓய்வெடுக்கும் வயதில், அசாதாரணமான மனிதரான நீங்கள் கடுமையாக உழைத்துக்கொண்டு இருப்பது காலத்தின் கட்டாயமாக இருக்கலாம். ஆனால், உங்கள் வயதில் இருக்கும் யாருக்குமே தேவை யானது, உற்றாரும் உறவினரும் ஒரு குழந்தையை எப்படிக் கொஞ்சி சீராட்டுவார்களோ... அதே போன்ற ஒரு சீராட்டுதல்தான்.

உங்கள் உற்றாரும் உறவினரும் உங்களைச் சீராட்டுகிறார்களோ இல்லையோ... சிலர் உங்கள் மனதையும் வயதையும் துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுதான் என் பரிதாப உணர்ச்சியைத் தூண்டுகிறது. ‘நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’ என்று கணியன் பூங்குன்றன் சொன்னது தானே, எந்த முதியவருக்கும் சுற்றியிருப் போரிடம் பிரார்த்தனையாக இருக்க முடியும்!

சினிமாக்காரர்களோ, கவிஞர்களோ... புகழுரைகளைக் கொட்டிக் குவிக்கும் விழாக்களுக்குப் போய் நீங்கள் இளைப்பாறுவதுகூட, குடும் பத்தில் சிலரால் ஏற்படும் மன உளைச்சல்களுக்குத் தற்காலிக மருந்து தேடத் தானோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. மதுரையில் உங்கள் குடும்பத்தின் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் வன் முறையில் மூன்று அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட சமயத்தில், சென்னை நகரத் தெருவெல்லாம் வாழை மரம் கட்டி வண்ண ஜாலங்கள் செய்துகொண் டாடப்பட்ட சட்டமன்றப் பொன்விழாவில் நீங்கள் கலந்துகொண்டீர்கள். ஒன்றல்ல, வரிசையாக மூன்று பாராட்டு நிகழ்ச் சிகள் உங்கள் மன வலி யைக் குறைக்க உதவி யிருக்குமோ என்னவோ!

உங்கள் இன்றைய நிலையைக் கண்டு எனக்குக் கூடவே எழுகிற இன்னொரு உணர்ச்சி, கோபம்! மிகுந்த அறிவுக் கூர்மையும் கடுமையான உழைப்பும் உடைய உங்களுக்கு இந்த நிலை ஏற்படு வதற்குக் காரணம் வேறு யாருமே அல்ல... நீங்களே தான் என்பதால் ஏற்படும் உணர்ச்சி அது.

மதுரையில் உங்கள் பேரனுக்குச் சொந்தமான பத்திரிகை, டி.வி. அலுவலகத்தை எரிக்கத் தூண்டி யவர் என்று அவர்களால் குற்றம் சாட்டப்படும் உங்கள் மகன் அழகிரி சொல்கிறார் - அவருக்கும் தி.மு.க-வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று! அவர் அடிப்படை உறுப்பினரா இல்லையா என்பதேகூட மர்மமாக இருக்கிறது.

உங்களால் வானுயரத் துக்குத் தூக்கிவைக்கப்பட்ட பேரன் தயாநிதி மாறன் சொல்கிறார் - அவருக்கும் தினகரன் இதழ், சன் டி.வி. எதற்கும் சம்பந்தம் இல்லை என்று! தங்களுக்குச் சம்பந்தம் இல்லாத விஷயத்துக்காக அவர்கள் மோதநேர் வதும், அதனால் அப்பாவி உயிர்கள் பலியாவதும் எதனால்?

திராவிட இயக்க வரலாற் றிலேயே, எந்தத் தலைவருக்குப் பின் யார் என்பது இப்படிப்பட்ட வன்முறைப் போராட்டமாக இதற்கு முன்பு வெடித்தது இல்லை. ‘பெரியாருக்குப் பின் யார்? நானா, மணியம்மையா?’ என்ற கேள்வியை அண்ணா எழுப்பவில்லை. தனிக் கட்சி கண்டார். அண்ணாவுக்குப் பின் நீங்களா, நாவலர் நெடுஞ்செழியனா என்று சர்ச்சைகள் ஏற்பட்டாலும், அது வன் முறையாக மாறவில்லை.

பெரியார் தனக்குப் பின் தன் தமையன் ஈ.வெ.கிருஷ்ணசாமி, அல்லது அவர் மகன் ஈ.வி.கே.சம்பத் என்றெல்லாம் குடும்பத்திலிருந்து யாரையும் அடையாளம் காட்டவில்லை. அண்ணா தனக்குப் பின் ராணி அம்மையாரையோ, பரிமளத்தையோ அரசியல் வாரிசாக வளர்க்கவில்லை.

குடும்பத்திலிருந்து ஒருவரைக் கொண்டு வருவதை நீங்கள்தான் எழுபதுகளின் தொடக்கத்தில் தொடங்கி வைத்தீர்கள். அன்று தொடங்கி, இன்று வரை உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை அதிகார மையமாக ஆக்கியதும் நீங்கள்தான். அதன் விளைவுதான் இன்றைய விரும்பத்தகாத நிகழ்வுகள்!

கட்சி உறுப்பினராகக்கூட இருக்கிறாரா, இல்லையா என்று தெரியாத அழகிரி, மதுரையில் அதிகார சாம்ராஜ்யம் நடத்து கிறார் என்று பத்திரிகைகள் பல செய்திகள் வெளியிட்டு வந்திருக்கின்றன. அ.தி.மு.க ஆட்சியில் உங்கள் கட்சி அமைச்சர்கள் மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகளை யெல்லாம் விலக்கியபோதும், அப்போது உங்கள் கட்சிப் பிரமுகர் தா.கிருட்டிணன் கொலையில் அழகிரி மீது போடப்பட்ட வழக்கு மட்டும் உங்களால் இன்னும் விலக்க முடியாத அளவுக்கு வலுவாக உள்ளது.

பத்திரிகை, டி.வி என்று தன் தொழிலைப் பார்த்துக்கொண்டு இருந்த தயாநிதியை நீங்கள் தானே திடீரென்று எம்.பி. ஆக்கி, அடுத்த நாளே மத்திய அமைச்சரும் ஆக்கினீர்கள்? கழகத்தில் வேறு தகுதி உள்ள இளைஞர்கள் இல்லையா என்று கேட்டபோது, ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும். குழந்தையாக இருந்தபோதே தயாநிதியின் திறமையைக் கண்டிருக்கிறேன்’ என்றீர்கள். ‘கட்சி விரோத’ வேலைகளில் ஈடுபடக்கூடிய குழந்தை அது என்பது முளையிலேயே உங்களுக்குத் தெரியவில்லையா?

அழகிரியாகட்டும், தயாநிதியாகட்டும்... உங்கள் கண்ணசைப்பு இல்லாமல் கட்சியிலும் ஆட்சியி லும் எந்தச் செல் வாக்கையும் யாரும் பெற்றிருக்க முடியாது என்பது தமிழ்நாட்டின் சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும். அப்படி வளர்ந்த அவர்களுடைய மோதல் ரத்தக் களறியாகும்போது வேதனைக்குள்ளாவது நீங்கள் மட்டும் அல்ல; சம்பந்தமே இல்லாத நாங்களும்தான்!

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் வீடு, நிலம், கார், நகை இவற்றுக்காகச் சண்டை போட்டுக்கொண்டால், அது உங்கள் தனிப் பிரச்னை. ஆனால், அவர்கள் இடையே நடக்கும் சண்டை எதற்காக?

‘கருத்துக் கணிப்பினால்’ என்று பதில் சொல்லி, அசல் பிரச்னையை மூடி மறைத்து விட முடியாது. ‘கருத்துக் கணிப்பு களில் எனக்கு நம்பிக்கை இல்லை’ என்று நீங்கள் அறிக்கைகள் விடுவதே வேடிக்கை தான். தேர்தலில் தி.மு.க-தான் அமோக வெற்றி பெறும் என்று கணிப்புகள் வெளியானபோதெல்லாம், அதைப் பெரிய எழுத்தில் போட்டு ‘முரசொலி’ அங்கீகரித்திருத்திருக்கிறது.

உங்கள் அரசியல் வாரிசு யார் என்பது பற்றித்தான் கருத்துக் கணிப்பு. உங்கள் அரசியல் வாரிசு யார் என்பதில்தான் இப்போது மோதல்.

எந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் தங்கள் கைக்கு வரவேண்டு மென்று உங்கள் குடும்ப வாரிசுகள் துடிக்கிறார்களோ, அந்தத் தி.மு.க. யாருடைய குடும்பச் சொத்தும் அல்ல; அது தமிழக மக்களின் பொதுச் சொத்து.

தி.மு.க-வும் திராவிடர் இயக்கமும் கடுமையாக எதிர்த்த, ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தின் மறுபதிப்பு தான் வாரிசு அரசியல்! அப்பாவின் தொழிலை மகன் பள்ளிக்கூடத்தில் செய்து பழகட்டும் என்றார் ராஜாஜி. கட்சியில் அதைச் செய்து பழகட்டும் என்று ஆக்கியது நீங்கள்!

ஐம்பதாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரலாற்றுச் சாதனை படைத்த உங்களு டைய பெரும் பிழை- வாரிசு அரசியல். அதன் விளைவே, இப்போது உங்களுக்கும் பொதுமக்களாகிய எங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் வேதனைகள்.

இந்தப் பிழையை நீங்களே சரிசெய்ய முடியும். தன் தவற் றைத் தானே திருத்திய சாதனை யும் வரலாற்றில் உங்களுடைய தாகவே இருக்கட்டும்.

மூன்றாண்டு காலமாக நீங்கள் பாசத்தைப் பொழிந்து அரசியலில் வளர்த்துவிட்ட தயாநிதியை ஒரே நாளில் இப்போது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது போல, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரையும் பதவிகளிலிருந்தும் கட்சிப் பணிகளிலிருந்தும் விலகச் செய்யுங்கள். உங்கள் காலத்துக்குப் பிறகு தங்கள் சொந்த முயற்சியில் அவர்கள் அரசியலிலோ பொது வாழ்விலோ ஈடுபட்டுக்கொள்ளட்டும்.

நீங்கள் இதைச் செய்தால், உங்களைப் பின்பற்றித் தங்கள் குடும்பத்தினரையும் தி.மு.கழகத்தில் செல்வாக்கான இடங்களில் அமரவைத்திருக்கும் இதர அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் இதே போல அவர்களையும் விலகச் செய்யவேண்டி வரும். திராவிட முன்னேற்றக் கழகம் மறுபடியும் அண்ணா காலத்தில் இருந்தது போல, கொள்கைப் பிடிப்புள்ள மனிதர்கள் குடும்பத்துக்கப்பால் இணைந்து இயங்கிய லட்சிய வேட்கை நிரம்பிய கட்சியாக மீண்டும் மலரும்.

ஜனநாயகம் தழைக்க தி.மு.க. காப்பாற்றப்பட வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி... அது தன் பணியை சரியாகச் செய்ய உண்மையான ஜன நாயக அமைப்பாகத் திகழ வேண்டும். உடையாமல் வலிமையுடன் விளங்க வேண்டும்.

குடும்பத்தைக் காப்பாற்ற அவர்களுக்குப் போதுமான ‘நிதி’ இருக்கிறது. நீங்கள், தி.மு.க-வையும் தமிழகத்தையும் காப்பாற்றக் ‘கருணை’ காட்டுங்கள். அதுவே நீங்கள் எங்களுக்குத் தரும் பிறந்த நாள் பரிசாக அமையும்.

உங்கள் வேதனையில் பங்கேற்கும்,

ஒரு முன்னாள் சகா.

Read More...

தமிழ் அறிவு போட்டி - விடை

"வீட்டுக் கதவை கள்ளச் சாவியால் திறந்து பிரோவில் இருந்த துட்டையும், கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும், சப்போட்டாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோரிக்ஷாவில் தப்பி ஓடியபோது, தகவல் அறிந்து போலீஸ் ஏட்டு விரட்டி துப்பாகியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக் கட்டின"


சாவி - போர்த்துகீசியம்
பிரோ - பிரெஞ்சு
துட்டு - டச்சு
கோணி - இந்தி
பாப்பாளி - மலாய்
சப்போட்டா - இசுப்பானியம்
கொய்யா - பிரேசிலியன்
சுமார் - பெர்சியன்
வயது - சமற்கிருதம்
கில்லாடி - மராத்தி
ஆட்டோ - கிரேக்கம்
ரிக்ஷா - சப்பானியம்
தகவல் - அரபி
போலீஸ் - இலத்தீன்
ஏட்டு - ஆங்கிலம்
துப்பாக்கி - துருக்கி
தோட்டா - உருது

ஆர்வமாக பங்கு கொண்ட எல்லோருக்கும் நன்றி. FloraiPuyalக்கு ஸ்பெஷல் நன்றி.
( கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய தமிழனா தமிங்கிலனா' என்ற நூலில் மேற்கண்ட மொழிக்கலப்பு சுட்டிக்காட்டப்படுள்ளது )


FloraiPuyal பின்னூட்ட தகவல் கீழே..


ஒரு சிறு விளக்கம்..

பபாயா என்பது மேற்கிந்திய மொழியான அரவகான் மொழிச்சொல். அதிலிருந்து ஸ்பானிய மொழிக்கும் பிற மொழிகளுக்கும் பரவியது.

பிளத்தல் என்ற பொருளுடைய PIE சொல் கி என்பதிலிருந்து இலத்தீனத்தின் clavis என்ற சொல்லும் பின் அதிலிருந்து போர்த்துகீசியத்தில் chave என்றும் பின் தமிழில் சாவி என்றும் ஆகியது. இந்த கி என்ற சொல்லைப் பார்க்கும் பொழுது தமிழின் கல், கில் ஆகிய வேர்ச்சொற்களுடன் பொருந்துவதால் தமிழ் மூலமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

தமிழில் புகர் என்னும் சொல் brown என்னும் பொருள்படும். மீண்டும் ஆய்வாளர்கள் PIE என்பதோடு நிறுத்தி விடுகின்றனர். பெரோஸ் என்னும் PIE சொல்லிலிருந்து கிளைத்த burra என்ற இலத்தீனச்சொல் ஃப்ரெஞ்சு மொழியில் bureau என்று வழங்குகிறது. dark brown cloth covering for a desk என்று வழங்கப்பட்டது பின் மேசைகளையும் மேசைகள் நிறைந்த அலுவகங்களையும் குறிக்க பொருள் நீட்சி பெற்றுள்ளது.

duit என்ற டட்சு மொழிச்சொல் பழைய நோர்ஸ் மொழியிலிருந்து வந்தது. எட்டில் ஒரு பங்கு பணம் என்ற பொருளிலிருந்து நீட்சி பெற்று coin என்ற பொருளில் இன்று டட்சு மொழியில் வழங்கப் படுகிறது. இதன் தொடக்கமும் ஆக்டோ என்ற கிரேக்க மொழிச் சொல்லும் அதிலிருந்து கிளைத்த huit என்ற ஃப்ரெஞ்சு சொல்லுமேயாகும். மீண்டும் PIE.

கோணி என்ற அளவைக்குறிக்கும் தமிழ்ச்சொல் goni என்று செங்கதத்திற்கும் பின் gunny என்று ஆங்கிலத்திற்கும் சென்று கடைசியில் gunny sac - கோணிப்பை என்று தமிழிற்கு திரும்புகிறது.

பண்டைய aztec மொழியில் tzapotl என்பது இனிய பழங்களைக் குறிக்கும் சொல். இதிலிருந்து வந்தது சபோட்டா என்ற சொல்.

சமர் என்ற பாரசீக சொல்லும் தமிழ் மூலமாக இருக்கலாம். ஏறக்குறைய ஒரே பொருளில் தான் வருகிறது. தெளிவாகத் தெரியவில்லை.

ஆட்டோ - இக்கிரேக்கச் சொல்லின் மூலம் தெரியவில்லை.

ரிக்ஷா என்ற சொல்லின் மூலம் சீனச் சொற்களான ரென் - மனிதன், லு - வலு, ச - வண்டி. சப்பானிய மொழியில் இச்சொற்கள் திரிந்து ரி கி ஷா என்று வழங்குகிறது. இச்சீனச் சொற்களின் பண்டைய பலுக்கல் நான் குறித்த தமிழ்ச்சொற்களைப் போன்றே இருக்கிறது.

தக்கல் என்ற அரபிச் சொல்லிலிருந்து வந்தது தகவல். இதற்கும் மூலம் தெரியவில்லை.

தமிழ், சங்கத புரம் கிரேக்கத்தில் politeia என்று குமுகத்தை வழங்க பயன்படுத்தப்பட்டது. பின்பு இலத்தீனத்திற்கும் ஃப்ரெஞ்சுக்கும் சென்றது. city என்றும் civil administration என்றும் பின் காவல்துறை என்றும் பொருள் நீள்கிறது.

head என்ற சொல்லின் மூலமும் PIE என்று கூறுகின்றனர். கபுத் என்னும் இச்சொல்லின் மூலம் தமிழின் கம் என்பதாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

பக மற்றும் உறு என்ற தமிழ்ச்சொற்கள் வழமை போல் பயணித்து கடைசியில் fire, arms என்று மாறும். இதிலிருந்து கிளைத்தவை arme de feu, arma de foc மற்றும் tufek. இது துப்பாக்கி, துவாக்கி என்று நாவலந்தீவில் இன்று வழங்கப்படுகிறது.

தோட்டா மற்றும் கில்லாடி ஆகியவற்றுக்கும் மூலம் தெரியவில்லை.

Read More...

Thursday, May 17, 2007

தமிழ் அறிவு போட்டி..


கீழே உள்ள பாராவை படியுங்கள்...

"வீட்டுக் கதவை கள்ளச் சாவியால் திறந்து பிரோவில் இருந்த துட்டையும், கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும், சப்போட்டாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோரிக்ஷாவில் தப்பி ஓடியபோது, தகவல் அறிந்து போலீஸ் ஏட்டு விரட்டி துப்பாகியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக் கட்டின"


படித்திவிட்டீர்களா ? சரி கேள்வி இது தான்

இதில் எதெல்லாம் தமிழ் வார்த்தைகள் கிடையாது ?

பின்னூட்டதில் தெரிவிக்கவும். விடை வெள்ளிக்கிழமை...
( படத்திற்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை ஹிஹி )

Read More...

Wednesday, May 16, 2007

நவீன திருவிளையாடல்


நன்றி: தினமணி

Read More...

பெரியார் படம் - என் குறிப்புக்கள்

பெரியார் படம் பற்றி என் குறிப்புக்கள்.
திரையரங்கு: உட்லேண்ட்ஸ்.
காட்சி : இரவு காட்சி ( அட இது கூட கருப்பு )
கூட்டம்: 15%
பக்கத்து சீட்டில் இருந்தவர்கள்: சில திமுக பிரமுகர்கள்.

சத்தியராஜ் நடிப்பை பாராட்ட வேண்டும். மனிதர் அனுபவித்து நடித்திருக்கிறார். சூப்பர்.

பெரியாரின் இளமை காட்சிகளுக்கு கொஞ்சம் கத்திரியை வைத்துக்கொண்டு வேலை செய்திருக்கலாம். நமக்கு பரிட்சயமான பெரியார் இடைவெளிக்கு பின் தான் தாடியோடு வருகிறார்.

பெரியார் வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் இருக்கு அதை மூன்று மணி நேரத்தில் சுருக்குவது முடியாத காரியம் என்று சொல்லுபவர்களுக்கு, காந்தி படத்தை பார்க்க சிபாரிசு செய்கிறேன். திரைகதையை இன்னும் செம்மையாக செய்திருக்கலாம்.

இந்த மாதரி படங்களுக்கு பாடல் காட்சிகள் அவசியமற்றது. படத்தின் ஓட்டம் தடைப்பட்டு, சினிமாத்தனமாக இருக்கிறது. அதுவும் பெரியார் பாடல் பாடுவது எல்லாம் டூமச். நல்ல வேளை பெரியார் இதை பார்க்கவில்லை.

இசை நன்றாக இருக்கு, எம்.ஜி.ஆர் வரும் ஒருரே ஒரு காட்சியை தவிர்த்து. (பப்பர பப்பர பப்பர பாஆஆம் என்று அந்த பின்னனி இசை தேவையா ?)

ஒளிப்பதிவு மிகவும் அழகாக செய்திருக்கிறார் தங்கர்பச்சன். பாராட்டுக்கள்.

தாடிவைத்து சத்தியராஜ் பெரியாராகவே வாழ்த்திருக்கிறார். ஒப்பனை யார் என்று தெரியவில்லை ஆனால் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். படத்தில் பெரியாருக்கு ஒவ்வொரு காட்சியிலும் 10 வயது கூடுகிறது. ஆனால் ராஜாஜி படம் முழுக்க இளமையாகவே இருக்கிறார்.

கடைசியில் கலைஞர் வரும் அந்த காட்சி பற்றி நோ கமெண்டஸ்!

பெரியார் பற்றி இந்த படம் முழுமையாக சொல்லாவிட்டாலும், அவரை பற்றி படிக்க தூண்டும் என்பதே இந்த படத்தின் வெற்றி.

இந்த படம் எனக்கு ஒரு பெரிய impactடை தரவில்லை. பெரியாரின் போட்டோ ஆல்பம் பார்க்கும் அனுபவமே எனக்கு கிடைத்தது.

பிகு: படம் பார்த்த அன்று சில திமுக பிரமுகர்கள் வந்திருந்தார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே இருக்கும் அற்புத தீவு பட ஸ்டில்களை பார்த்து "அண்ணே அது தானே மாளவிகா ?"

பிகு: கைதட்டல்/சிரிப்பு காட்சிகள்: காமராஜ் வரும் சீன், எம்.ஜி.ஆர் வரும் காட்சி, பெரியார் தண்ணீரை ஈரோட்டுக்கு அனுப்பும் காட்சி, இரண்டு ரூபாய்க்கு குழந்தைக்கு பெயர் வைக்கும் போது, "சீதை முதுகில் எத்தனை கோடு.." என்ற பாடல், வீரமணியாக விஜய் ஆதிராஜ். TOLDED என்று தந்தியில் சிக்கனம்.

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க சைடுல ஓட்டு போடுங்க வழக்கம் போல :-)

Read More...

Pain in the...

ரொம்ப வெறுப்பாக இருந்தால் தான் இந்த சொற்றொடரை உபயோகிப்போம். சில நாட்களாக எனக்கு ஒரு அனானி பின்னூட்டம் வருகிறது. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு 50-100 வரை வருகிறது.

அதில் வரும் பின்னூட்டம் கீழே ...தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)


திட்டிக்கொண்டு டெலிட் செய்வதைவிட வேறு என்ன செய்ய முடியும். சென்னை வெயிலில் இதற்கு காரணமாக இருக்கலாமோ ?

Read More...

சென்னை வெயில்

இன்று தினத்தந்தியில் வந்த செய்தி:

அக்னி நட்சத்திர வெயில் சென்னை நகர் மக்களை வறுத்து எடுக்கிறது. 108 டிகிரி, 109 டிகிரி என்று ஒவ்வொரு நாளும் வெயில் அளவு உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு நாளைக்கு சென்னையில் ஒரு நாளைக்கு 1 லட்சம் இளநீர்கள் விற்று தீர்ந்துவிடுகிறது.


சென்னையின் மக்கள் தொகை 4,352,932 அதாவது 2.2% ஆட்கள் இளநீர் சாப்பிடுகிறார்கள். இதை தவிர மக்கள் லஸ்சி, பெப்சி, கோக் என்று சாப்பிடுகிறார்கள். எல்லா கடைகளிலும் 2 லிட்டர் பெட் பாட்டில்கள் நல்ல விற்பனை ஆகிறது. ஒரு இளநீர் விலை பல இடங்களில் மாறுபடுகிறது, குறைந்த விலை 12-15 அதிகபட்ச விலை 20.

தி.நகர் நல்லி பக்கத்தில் இருக்கும் ஆவின் பூத் பக்கத்தில் பத்து நிமிஷத்தில் எவ்வளவு மோர், லஸ்சி, ஐஸ்கிரிம் விற்பனை என்று ஒரு கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.

ஆழ்வார்பேட்டை Carnival ஹோட்டல் பக்கத்தில் இருக்கும் ஜூஸ் கடையில் ஏதோ கலவரம் போல மக்கள் கூட்டம்.

வீட்டினுள் ஃபேன் இல்லாமல் ஒரு நாள் வீட்டில் இருந்தீர்கள் என்றால் கின்னஸுக்கு செல்லலாம். சிலருக்கு குளிக்கும் போது கூட ஃபேன் தேவைப்படுகிறது. நிறைய இடங்களில் அதிமுக, திமுக தண்ணீர் பந்தல் இருக்கிறது. மிடில் கிளாஸ் எல்லோரும் ஏசி இல்லாமல் இருப்பதில்லை.

கடைகாரர்கள், ஆட்டோ ஓட்டுனர், பஸ் கண்டெக்டர் என்று எல்லோரும் வெயிலினால் எரிஞ்சி விழுகிறார்கள். சென்னை வலைப்பதிவர்கள் எழுதும் பதிவுகளை படித்தால் அன்றைய வெயிலின் தாக்கம் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளலாம். இந்த வெயிலினால் சன் டிவி கூட சமீபத்தில் பாதிப்பு அடைந்தது என்பது குறிப்பிடதக்கது.

நமக்கே இப்படி என்றால் குடிசையில் வாழும் ஏழைகள் ?

Read More...

Tuesday, May 15, 2007

நோ கமெண்டஸ்!

ஜெயா டிவியில் இப்போது நடந்து கொண்டிருக்கும் "Stars உங்களுடன்' நிகழ்ச்சியில் கீர்த்தி சாவ்லா(நான் அவன் இல்லை புகழ் )

கேள்வி: உங்களுக்கு தமிழ் தெரியுமா ?
பதில்: கொஞ்சம் கொஞ்சம் தெரியும்
கேள்வி: எப்படி ?
பதில்: அடிக்கடி சன் டிவி, கே.டிவி பார்ப்பேன்

இன்னும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது... வேறு எதாவது ஜோக்ஸ் வரலாம். போய் பாருங்கள்.

Read More...

நான் என்ன செய்யனும் ? - பிரதமர்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி ராஜினாமா செய்ததால் இந்த பதவிக்கு ஏ.ராஜா இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் பதவிக்கு ரகுபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமரின் பரிந்துரையை ஏற்று இதற்கான உத்தரவுகளை இன்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது.

கலைஞரின் பரிந்துரையை பிரதமர் ஏற்றார், அவரின் பரிந்துரையை ஜனாதிபதி ஏற்றார். இங்கு பரிந்துரையை உத்திரவு என்று படிக்கவும்.

தன்னுடைய மந்திரி சபையை முடிவு செய்யும் உரிமை கூட பிரதமருக்கு இல்லை. பாவம் அவர் என்ன செய்வார், கூட்டணி தர்மம். இந்திய கிரிக்கெட் டிமுக்கும் இதற்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை ? யார் தகுதியானவர் என்று பார்க்காமல், அந்த இலாகா தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்ற பிடிவாதம் ஒரு தப்பான முன்னுதாரனமாக இருக்க போகிறது. நாளை இதே போல் வேறு ஒரு அரசியல் கட்சி டிமாண்டு செய்யும். இந்தியாவிற்கு இது நல்லதல்ல.

இதே போல் தான் வாஜ்பாய் முன்பு கஷ்டபட்டார். இன்று மன்மோகன் சிங் அதைவிட மோசமாக கஷ்டப்படுகிறார்.

தயாநிதி மாறன் தன்னுடைய ராஜினாமாவை தாத்தாவிடம் கொடுத்த போது, "நான் போஸ்ட் ஆபிஸ் இல்லை, ராஜினாமாவை பிரதமரிடம் கொடுக்கவும்" என்று சொன்னாராம். நேராக ஜனாதிபதிக்கே கொடுத்திருக்கலாம், பிரதமர் என்ன சொல்ல போகிறார்

உள்துறை செயலாளரை மிரட்டினார் என்று செய்தி். (வரியா ஒத்தைக்கு ஒத்தை? என்று சொல்லியிருக்க மாட்டார் என்று நம்புவோம்? ). தயாநிதி மாறனுக்கு டாட்டவுக்கும், தாத்தாவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

பிகு: பிரதமருக்கு என்னுடைய பிரிஸ்கிரிப்ஷன்: பலம் கூட டப்பா டப்பாவா விட்டமின் மாத்திரைகள்.

( இட்லிவடையில் செய்தி விமர்சனம் இல்லை என்றார் விக்கி அதற்காக இந்த பதிவு )

Read More...

Monday, May 14, 2007

பாதியில் விடாமல்

நேற்று அன்னையர் தினம், அரசியல் பரபரப்புக்கிடையில் மறந்தோம். சரி ஒரு கவிதை ( சத்தியமாக நான் எழுதவில்லை )

என் கணவன் நீ
என் துணைவன் நீ
எனக்குக் காய்ச்சல் கண்ட
ஒரு நாள் காலையில்

காய்கரி நறுக்கித்
தரும்படி கேட்டேன்
கத்தி கேட்டாய்
எடுத்துத் தந்தேன்
காய்களைக் கேட்டாய்
பொறுக்கித் தந்தேன்

நறுக்கிப் போட்டதும்
கண்ணாடியோடு
போப்பர் படிக்கப்
போய் விட்டாய் நீ

தோலை அள்ளித்
தூசியை அள்ளிக்
கூட்டிப் பெருக்கி
முடித்து வைத்தேன்

இன்னொரு நாள்
இந்த வீடு முழுவதும்
அப்பிக் கிடந்த
குப்பை முழுவதையும்
கூட்டிப் பெருக்க
உன்னைக் கேட்டேன்

துடைப்பம் கேட்டாய்
எடுத்துத் தந்தேன்
நாற்காலிகளை நீ
மடக்க சொன்னாய்
பேப்பர்களை நீ
மடிக்கச் சொன்னாய்
கூட்டிப் பொருக்கிக்
குப்பையைக் குவித்துப்
போட்டபடியே

குளிக்க போனாய்
முறத்தை எடுத்துக்
குப்பையை வாரி
வெளியிலெறிந்து
முடித்து வைத்தேன்

காதலில் வந்தாய்
கலவியில் இருந்தாய்
அப்புறம் உனக்கு
ஆயிரம் வேலை

பத்து மாதமும்
நித்த்மும் வளர்த்துப்
பாதியில் விடாமல்
பையனைப் பெற்று
நாந்தான் அதையும்
முடித்தேன் கண்ணா

Read More...

தயாநிதி முன்னேற்ற கழகம்

மதுரை சம்பவம் ஏதோ திடீர் என்று நடந்தது போல் இருந்தாலும் முன்பே இதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது.

சில குறிப்புக்கள்....* மார்ச் 1, ஸ்டாலின் பிறந்த நாள் அன்று தினகரன் முதல் பக்கத்தில் ஒரு குரங்கின் படத்தை போட்டுவிட்டு "குரங்கின் பிறந்த நாள்" என்று உள்ளே அமெரிக்காவில் எப்படி ஒரு குரங்கு தன் பிறந்த நாளை கொண்டாடியது என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

( பக்த்தவச்சலத்தை குரங்கு போல முன்பு கலைஞர் கார்டூன் போட்டார், இன்று தயாநிதி மாறன் சொன்னது "நான் பிறந்தது திமுககாரனாத்தான்.". தினமலர் "நாய்கள் ஜாக்கிரதை" என்று தலைப்பை குசும்பு என்றார்கள் சிலர் )

* சென்னை சங்கமம் நிகழ்ச்சியை சன் டிவி புறக்கணித்தார்கள். கலைஞர் என் அடுத்த கலை வாரிசு என்று கனிமொழியை அறிவித்தார். (கூடிய சீக்கிரம் ராஜிய சபா எம்பியாகி, மந்திரியாவதற்கு வாய்ப்பு நிறைய இருக்கிறது ). ( தற்போது ஒரு நாடார் சமுகத்துக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள், இதை வைத்து சரத்குமாரின் புதிய கட்சிக்கு செக் வைப்பார்கள் )

* ஸ்டாலின் பதவி ஏற்று திரும்பிய போது, எல்லோரிடமும் கை கொடுப்பார், தயாநிதி மாறன் கை நீட்டுவார், கண்டுகொள்ளாமல் போய்விடுவார், பிறகு திரும்பி வந்து, முகம் பார்க்காமல் கை கொடுப்பார்.

* தேர்தல் சமயத்தில் பாக்கியராஜ், டி.ராஜேந்திர் போன்றவர்களின் லைவ் பிரச்சாரம், ஆனால் ஸ்டாலினை புறக்கனித்தார்கள். கலைஞர் சன் டிவியில் தயாநிதி மாறன் இருந்தால் தான் கண்பிக்க படுவார் என்ற நிலமை.

* சன் டிவி பங்குகளின் ஒரு பகுதியை கலைஞர் விற்றது. இன்னும் மூன்று மாதத்தில் அண்ணா அறிவாலயத்திலிருந்து சன் டிவி மாற்றப்படும் என்று தெரிகிறது.

* முன்பு விஜய் டிவி ஒரு அரசியல் அலசல் நிகழ்ச்சி நடத்தியது, அதை உடனே திமுக நிறுத்த செய்தது. ஆனால் இன்று கலைஞர் தன் குடும்ப பத்திரிக்கை/டிவியை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. ( இது தான் கட்சிவிரோத நடவடிக்கை )

* கட்சி செயற்குழு கூட்டம் என்பதே ஒரு சல்ஜாப்பு. நேற்று கலைஞர் வரும் போதே அச்சடிச்ச தன் உரையை எடுத்துவந்தார்.

* ஜூன் இரண்டு அல்லது பொன் விழாவின் போது தனது அரசியல் வாரிசு ஸ்டாலின் என்று கலைஞர் அறிவிக்க இருந்ததாக ஒரு வதந்ததி. அதற்காக கூட மாறன் இந்த கருத்து கணிப்பை வெளியிட்டிருக்கலாம். ( தலைவர் மூன்று முறை வேண்டாம் என்று சொல்லியும் ). ( பொன்விழா போஸ்டர்களின் ஸ்டாலின் நிறைய காணப்பட்டார் )

* தயாநிதி தேசிய அளவில் மிகவும் பிரபலமான மந்திரியாக இருப்பதை நாம் மறுக்க முடியது. டெல்லியில் தயாநிதிக்கு வளர்ந்து வரும் செல்வாக்கும் மிகவும் முக்கியமான காரணம். தயாநிதி ராக்கேட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. கலைஞருக்கு பின் இவரிடம் இருக்கும் பணத்தையும், மீடியாவையும் வைத்து எல்லோரையும் வாங்கியிருக்கலாம், அல்லது வளைத்துபோட்டிருக்கலாம். இதுவே மற்றவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்திருக்கும். கலைஞரிடம் வேறு யாரும் அண்டவிடாதபடி ஒரு பாதுகாப்பு வளையம் வைத்திருந்தார். அது வேற சீனியர்களுக்கு எரிச்சலை கொடுத்தது. ( நேற்று ஒருவர் கூட மாறனுக்கு சப்போர்டாக போசவில்லை )

* இதுவரை போலிஸ் எந்த நடவடிக்கையும் மதுரையில் எடுக்கவில்லை. சி.பி.ஐ ? அது சும்மா என்று எல்லோருக்கும் தெரியும். மதுரை போலிஸ் எல்லாம் அழகிரி ஆட்கள் என்று வேற ஒரு செய்தி.

விட்டுக்கு உள் புகைந்துகொண்டிருந்த புகை சிம்னி வழியாக இப்போது வந்திருக்கிறது அவ்வளவு தான்.

Read More...