பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 06, 2007

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என்பார்கள். அப்படி என்றால் என்ன ?

10 Comments:

G.Ragavan said...

அது குதிரை அல்ல. குதிர். மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பதே சரி. ஆற்றில் ஆங்காங்கே மண் குதிர் குதிராக இருக்கும். அந்தக் குதிரில் கால் வைத்து ஆற்றைக் கடக்கலாம் என்று நினைத்து காலை வைத்தால் மண் உள்ளே போகும். ஆற்றில் விழ வேண்டியதுதான். அதைத்தான் மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பார்கள். யையைச் சேர்த்தது யாரென்று தெரியவில்லையே!

ILA (a) இளா said...

கிரிக்கெட் விளையாடுறவங்களை நம்பி, 5000 கோடி ரூபாய விளம்பரத்துக்காக போட்டவங்களை சொல்லலாம்.

Anonymous said...

Many examples..

1)Having Ramadoss in coalition

2)Calling rajnikanth to protest against karnataka in cauvery issue

RBGR said...

இது ஒரு உரு மாறிய மொழி..

அதாவது
"மண் குதிர் நம்பி ஆற்றில் இறங்காதே!" என்பதே சரியான மொழி.


அதாவது,குதிர் என்பது ஆற்றின் மத்தியினில் தெரியும் மேடானபகுதியாகும்.

கரையினின்றும் பார்க்கும் போது தண்ணீருக்கு மேல் சற்று
பகுதி கண்ணுக்குத் தென்படுவதைக் கருத்தில் கொண்டு, ஆழம் அதிகம் இல்லை என்று ஆற்றில் இறங்கக்கூடாது.


ஆகவே, பார்க்க பெரிதாய் தெரிவது எதுவும் உண்மையில் பெரிதல்ல..

இது சிறுபான்மான்மையினரின் ஓட்டு வங்கி பற்றிய உள்குத்து அல்ல என்று நினைக்கிறேன்.

:)

Anonymous said...

அய்யன்மீர்.

அது மண் குதிரை அல்ல. மண் குதிர்.


அதாவது வெள்ளக் காலங்களில் ஆற்றில் மண் குதிர்கள் மண்மேடுகள் போல காட்சி அளிக்க்கும். ஆனால் அவை வலுவற்று கால் வைத்தவுடன் கலைந்து போகும். அதனால் தான் மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்றார்கள்.


" எனக்கு மார்க் எம்புட்டு ? "

-- பழமொழி பழனியாண்டி --

IdlyVadai said...

ஜி.ராகவன், தமிழி, பழமொழி பழனியாண்டி - சூப்பர்.
இளா - உங்க பதிலும் நல்லா இருக்கு.

அனானி - இதற்கு நான் பதில் சொல்ல போவதில்லை :-)

முதலில் சொன்ன ஜி.ராகவனுக்கு ஸ்பெஷல் வாழ்த்து.

Anonymous said...

ஆற்றை கடக்க மண்குதிரையில் ஏறினால், கடந்து முடிக்கும் முன் அது கரைந்து போய்விடும்....

IdlyVadai said...

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என்பார்கள்
குதிர் - என்றால் மணல் திட்டு. ஆற்றில் பெருவெள்ளம் வரும்போது மணல் திட்டுகள் ஏற்படும். தண்ணீர் வற்றியதும் இவை வெளியே தெரியும். இவற்றில் கால் வைத்தால், கால் புதைய நேரிடும்.

அதனால்தான், இந்த மணல் திட்டை நம்பி ஆற்றில் இறங்ககூடாது என்ற அர்த்தத்தில் "மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்ற பழமொழி ஏற்ப்பட்டது.

அதுவே இன்று "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே" என்று பொருத்தமாக மாறிவிட்டது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இட்டிலி வடையார்!
நான் ஒரு பதிவு 02-12- 2006 ல் என் பார்வை எனும் எனது ;தளத்தில் போட்டுள்ளேன். நேரமிருப்பின் பார்க்கவும்.

http://paris-johan.blogspot.com/2006/12/blog-post_02.html

Unknown said...

பஜார்ல உஷாரக இல்லாங்காட்டி, நிஜார கழட்டிடுவாங்க...இதுதான் அதற்கு அர்த்தம் ;-)