தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள் - டி.ஜி.பி. முகர்ஜி
விடுதலைப்புலிகள் செயல் அதிர்ச்சி அளிக்கிறது- சட்டசபையில் கருணாநிதி பேச்சு
கன்னியாகுமரி மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக்கொன்றது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் `கடல் புலிகள்' என்று தெரிய வந்து இருப்பதாக டி.ஜி.பி. முகர்ஜி நேற்று பரபரப்பான அறிக்கை வெளியிட்டார்.
இன்று சட்டசபையில் முதல்- அமைச்சர் கருணாநிதி:கடந்த 4-3-2007 அன்று கன்னியாகுமரியில் இருந்து 10 மீனவர்களும், தூத்துக்குடியில் இருந்து 1 மீனவரும், கேரளாவில் இருந்து 1 மீனவரும் ஆக 12 மீனவர்கள் மீன் பிடிக்க சென்று இன்றுவரை திரும்பவில்லை. அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கேட்டுக் கொண்டனர்.
அதற்குகிணங்க 12 மீனவர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.1500 அரசு வழங்கி வருகிறது. காணாமல் போன 12 மீனவர்களையும் இலங்கையில் விடுதலைப்புலிகளின் கடல் புலிகள் ஒரு பிரிவினர் பிடித்து காவலில் வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்பு ஒரு தடவை சட்டசபையில் பேசிய காங்கிரசார், "தீவிரவாதிகளை விடுதலைப்புலிகள்'' என்று சொன்னபோது உடனே நான் மறுத்து பேசினேன். அன்று கிடைத்த தகவலை வைத்து அவ்வாறு மறுத்தேன்.
ஆனால் இப்போது வந்துள்ள தகவல்களால் அது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. கடல் புலிகளின் சிறப்பு முகாமில் 12 மீனவர்களும் வைக்கப்பட்டுள்ளனர்.
29-3-2007 அன்று குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும் கடல் புலிகள்தான் பொறுப்பு என்றும் தெரிய வந்துள்ளது. இந்திய கடல் பகுதியில் 11-4-07 அன்று மரியா என்ற படகும், அதில் இலங்கை மீனவர்கள் 6 பேரும் பிடிபட்டனர்.
அவர்களை பிடித்து விசாரித்தபோது இந்த தகவல்கள் முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது.
முன்பு இலங்கை ராணுவம்தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று கருதிக் கொண்டிருந்தோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, காணாமல் போன மீனவர்களை தேடிக்கண்டுபிடிக்க மத்திய அரசு மூலம் முயற்சி எடுக்கப்பட்டது.
மேலும் கடலோர பாதுகாப்பு படை வான்வெளி பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் தூத்துக்குடியில் கடலோர காவல் படை வசதிக்காக அங்குள்ள விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குமரி கடலோரத்தில் கடலோர காவல்படை அமைக்க ரூ.55 கோடி ஒதுக்கி, அதற்காக மத்திய அரசு ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் படையால்தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக நாம் கருதிக்கொண்டிருக்கும் நிலையில் விடுதலைப்புலிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது நம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்குள்ள புலிகளின் ஆதரவாளர்கள் இதனையும் ஒரு துன்பியல் நிகழ்ச்சி என்று சொல்வார்களோ?
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Saturday, April 28, 2007
தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள் - டி.ஜி.பி. முகர்ஜி
Posted by IdlyVadai at 4/28/2007 07:22:00 PM 23 comments
Labels: செய்திகள்
Thursday, April 26, 2007
போட்டுத்தாக்கு
இந்தியாவின் வேர் தெற்கில்தான் இருக்கிறது - எழுத்தாளர் ஜெயகாந்தன்.
பழங்கள் பூக்கள் வடக்கில் இருக்கிறது
கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்களில் நடிப்பதில் தப்பில்லை - ஸ்ரீகாந்த்
வீரர்கள் கிரிக்கெட் ஆடாமல் விளம்பர படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால் தப்பில்லை
ஷில்பாவுக்கு முத்தம் கொடுத்த ரிச்சர்டுக்கு மற்றும் ஷில்பாவுக்கு கைது வாரன்ட் - செய்தி
சேர்த்து கைது செய்யாமல் பார்த்துக்கோங்க
சத்யசாய்பாபா இன்று மதுரை, கொடைக்கானலில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்- செய்தி
திமுக செயல்வீரர்கள் மோதிரம் வாங்க வந்தார்களா ?
இடஒதுக்கீடு விவகாரம் போலி பாஸ்போர்ட். லோக்சபாவில் கூச்சல் குழப்பம். ஒத்திவைப்பு - செய்தி
எல்லோரையும் அனுப்பிவிட்டால் கூச்சலாவது குறையும்.
திருப்பதியில் ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் ஏன். ஆந்திர நிதியமைச்சர் எதிர்ப்பு
முன்பு சோனியாவுக்கு எதற்கு கொடுத்தார்கள் ?
தி.நகரில் தீ பிடித்து கார் எரிந்தது - செய்தி
'தி'.நகர் என்ற பெயர் காரணம் இன்னிக்கு தான் தெரிந்தது!
இட ஒதுக்கீடு விவகாரம்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது - செய்தி
தமிழ் நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் இட ஒதுக்கீடு உண்டா என்று ஒரு காங்கிரஸ் தொண்டர் கேட்கிறார்.
10 ஆயிரம் புதிய காவலர் நியமனம் - செய்தி
மாமுல் பெருகும் என்று மக்கள் அச்சம்
மதுரை மேற்கு சட்ட மன்ற தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் - கிருஷ்ணசாமி
யாரை நிறுத்துவது என்று காங்கிரஸ் கோஷ்டிக்குள் தான் போட்டியே
106 எம்.பி.க்கள் குற்றப் பின்னணி கொண்ட வர்கள் என ஆய்வு - செய்தி
106 எம்.பிக்களா ? கட்சிகளா ?
ஐதராபாத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சக மாணவரால் சுடப்பட்டார் - செய்தி
இந்தியா அமெரிக்கா வழியில் போகிறது.
பாகிஸ்தானை இரண்டாக பிரித்தது நேரு குடும்பத்தின் சாதனை - ராகுல்
காங்கிரஸ் கட்சிக்கும் இது பொருந்தும்.
Posted by IdlyVadai at 4/26/2007 06:49:00 PM 8 comments
Labels: போட்டுத்தாக்கு
ஐஸ்வர்யா பச்சன
ஐஸ்வர்யாராயின் பெயர் இப்போது மாறி விட்டது. அமிதாப்பச்சன் குடும்ப மருமகளாக மாறி விட்டதால் இனி அவர் ஐஸ்வர்யா பச்சன் என்றே அழைக்கப்படுவார். திருப்பதியில் முதல் ஆட்டோ கிராப்பில் கையெழுத்து போட்ட அவர் ஐஸ்வர்யா பச்சன் என்றே கையெழுத்து போட்டுள்ளார். ஐஸ்வர்யாராய் தொடர்ந்து நடிப்பார் என்று அமிதாப்பச்சன கூறினார்.
Posted by IdlyVadai at 4/26/2007 11:17:00 AM 10 comments
Labels: சினிமா
Wednesday, April 25, 2007
'ஆப்பு' ரைசல்லப்பா
வ.வா.சங்கம் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது, 'ஆப்பு'ரைசல் எழுதனும் என்று இலவசமாக கேட்டாரகள்.
இந்த கவிதை(?) 'ஆப்பு' ரைசல்லப்பா என்ற இலக்கண விதி படி எழுதியது. அதனால் நீங்க இதை
இரண்டு முறை படித்தால் கவிதை
படிக்காமல் விட்டால் மேதை
------- + ------ + ----------
மூவேந்தர் வளர்த்த சங்கத்திற்கு ஆனது இரண்டு மில்லியன் ஆண்டு
இன்று இரண்டு டஜன் சிங்கத்திற்கு ஆனது ஒரு முழு ஆண்டு
வந்தாரை வாழ்த்தி வாழ வைக்கும் தமிழகம்
படித்தாரை சிரித்து வாழ வைக்கும் வவாச(ங்)கம்
மனசுக்குள் சம்மணமிட்ட கைப்பிள்ளை இவர்
ரவுசுக்குள் சஞ்சலப்பட்ட பெண்பிள்ளை பலர்
கிட்டாருடன் சிங்கம் இவர்களின் லோகோ
சிங்கங்கள் பார்ப்பதோ போகோ
மொக்கை என்றாலும் வெக்கையைத் தணிக்கும்
சிக்கெனத் தென்றலாய் கிக் பல கொடுக்கும்
அ(ச்)சிங்கங்கள் உறுமுகின்றன வாருங்கள்
இ(ம்)சைகள் பிளிறுகின்றன கேளுங்கள்
கணினி முன்னே சிரிக்க வைப்பது இவர்களின் ஹாபி,
பின்னூட்டம் போட்டுக் கொல்லுவது (கொள்வது) இவர்களின் ஜோலி
உயிரை எடுக்கும் பதிவு
செந்திலும் கவுண்டரும் சென்சஸ் எடுக்கும் பதிவு
'வருத்த முற்றும்' கொடுத்தது தெரசாவின் சாதல்
'சந்தோஷ முற்றும்' கொடுத்தது மாமாவின் காதல்
ஒரு கூடை சன் நெட்வர்க்
ஒரு கூடை மூன் நெட்வர்க்
ஒன்றாகச் சேர்ந்தால்
சிவாஜிபடத்தின் FlashWork
கலாய்ப்பதோ இவர்களுக்கு காக்டெயில்
பின்னால் இருப்பதோ நீளமான டெயில்
ஃபிகரு இவர்களின் கரு
வடிவேலு இவர்களின் குரு
சிரியஸ் பதிவுகள் சிரிப்பாய் சிரிக்கும்
ஆனால் சங்கம் பதிவுகள் சிரிக்கவைக்கும்
இவர்கள் பதிவுகளைப்
படித்தால்
எண்ணத் தோன்றும்-
ஏண்டா பிறந்தோம்
யோசித்தால்
சொல்லத் தோன்றும்-
கலக்கிப்புட்டாங்கய்யா, கலக்கிப்புட்டாய்ங்க!
(இரண்டு வரி 'ஆப்பு' ரைசல்லப்பா)
அடுத்ததாக நண்பர் பினாத்தல் இந்த வெட்டி வேலையை செய்வார் :-)
Posted by IdlyVadai at 4/25/2007 11:34:00 AM 16 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Tuesday, April 24, 2007
நோ கமெண்டஸ்!
Posted by IdlyVadai at 4/24/2007 06:50:00 AM 3 comments
Labels: அரசியல்
Monday, April 23, 2007
27% இந்த வருடம் இல்லை - சுப்ரீம் கோர்ட்
27% இட ஒதுக்கீடுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து உத்தரவிட்டது. இதன் மூலம் இந்தாண்டு 27% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாது என தெளிவாகியது.
மேலும் செய்திகளுக்கு : CNN-IBN
கூகிள் நியூஸ்
Posted by IdlyVadai at 4/23/2007 04:41:00 PM 3 comments
Labels: செய்திகள்
Sunday, April 22, 2007
நடேசன் பூங்கா சந்திப்பு - FIR
சென்னை, ஏப்ரல் 22, நடந்து முடிந்த வலைப்பதிவு சந்திப்பு பற்றிய முதல் செய்தி அறிக்கை
பார்க்க
முதல் பக்கம்
இரண்டாம் பக்கம்
Posted by IdlyVadai at 4/22/2007 09:08:00 PM 31 comments
Labels: அறிவிப்பு
நடேசன் பார்க் சந்திப்பு
சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்புக்கு இட்லிவடை கிளம்ப இருக்கிறார். சென்னையை விட்டு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் வீடு அமைந்திருப்பதால். நடேசன் பூங்காவுக்குச் சென்று சேர இன்னும் 3 மணி நேரம் ஆகும். என்ன சந்திக்க விரும்புகிறவர்கள் மரத்தின் மேலே, அல்லது பெஞ்சுக்கு அடியில் இருப்பேன், ஜெயா டிவி மாயக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் மட்டுமே தெரிவேன் :-)
நடேசன் பார்க் இருக்கும் இடம் : 13.04°N , 80.24°E
முழு விவரம் விரைவில்...
Posted by IdlyVadai at 4/22/2007 01:24:00 PM 1 comments
Labels: அறிவிப்பு
Saturday, April 21, 2007
அர்ச்சகர் பூணூல் அறுப்பு ...
ம.தி.மு.க பொதுச்செயலாளர் திறந்து வைத்த பெரியார் சிலை முத்துப்பேட்டையில் உள்ளது. வெள்ளி நள்ளிரவு சில மர்ம நபர்களால் அச்சிலை சேதம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு ம.தி.மு.க வினர்களும் தி.க வினர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தி.க.வை சார்ந்த சிலர் தஞ்சை பெரிய கோயில் வாசலில், அர்ச்சகரின் உதவியாளரின் பூணூலை அறுத்தெரிந்தனர். இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்துள்ளனர். அங்கு அசம்பாவிதம் ஏற்படாதவாறு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
( செய்தி: தினமலர் )
Posted by IdlyVadai at 4/21/2007 04:48:00 PM 2 comments
Labels: செய்திகள்
Friday, April 20, 2007
Wednesday, April 18, 2007
கருணாநிதி 'பொன்விழா'-கலாம் வர மறுப்பு
சட்டசபையில் கலைஞர் பொன்விழாவின் ஒரு பகுதியாக சட்டசபையில் உரையாற்ற வருமாறு தமிழக சட்டசபை சபாநாயகர் விடுத்த வேண்டுேகாளை ஏற்க முடியாத நிலை இருப்பதாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்த கலாம் மறுப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியல் கலாமை உரை நிகழ்த்த வருமாறு அப்போதைய சபாநாயகர் காளிமுத்து அழைப்பு விடுத்தார்.
( செய்தி: தட்ஸ் தமிழ் )
Posted by IdlyVadai at 4/18/2007 04:46:00 PM 5 comments
Labels: அரசியல்
Friday, April 13, 2007
சட்டம் ஏவ ஜெயதே
கமலஹாசன் அறிக்கை
யாகவாராயினும், `சத்திய மேவ ஜெயதே' எனும் கூற்றுக்கு குந்தகம் விளையும் நிலை வரும்போது `சட்டம் ஏவ ஜெயதே' எனும் புது மொழியை நம்ப வேண்டி வருகிறது. அவ்வாறே நம்பி உண்மை அடிபடாமலிருக்க சட்டத்திடம் உதவி கேட்டேன். சட்டம் என்னையும், தன்னையும் காத்து நின்றது.
மனசாட்சிக்கு பணிந்து வாழும் கலைஞர்களை வாழ்த்த உள்ள கூட்டத்திற்கு மத்தியில் வீழ்த்தவும் நினைக்கும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் இருப்பது என் மனதை உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது. அதுவும் திரை உலகத்தை சார்ந்த சில பழைய நண்பர்களே இந்த அவதூறு வழக்கிற்குப் பின்னால் இருந்திருக்கக் கூடும் என்ற என் சந்தேகம் வலுத்தது. சந்தேகம் மெய்ப்படும் சில ஆதாரங்களும் கிடைத்துள்ளது.
முக்கியமாக தசாவதாரம் தயாரிப்பாளர்களிடம் சில மாதங்களுக்கு முன் ஒரு திரை எழுத்தாளர் வந்து `உங்களுக்கு எதிரா கேஸ் குடுத்தானே பையன், அவன் நம்ம ஆளுதான் கேசை வாபஸ் வாங்கச் சொல்லி சமரசம் செஞ்சி வைக்கனும்னா நம்ம கிட்ட சொல்லுங்க நம்ம சாதிக்காரப்பையன்தான்' என்று சொன்னதாய் ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்னிடமும், கே.எஸ்.ரவிக்குமாரிடமும் சொன்னதும் நான் அதிர்ந்து போனேன்.
நல்ல வேளையாக அத்தகைய கட்டப்பஞ்சாயத்தில் எல்லாம் சம்மந்தப்படாமல் சட்டப்படி எங்கள் தரப்பு உண்மையை நாங்கள் காத்துக் கொள்ள முடிவெடுத்தது எங்கள் புத்திசாலித்தனம் மட்டும் அல்ல நேர்மையும் கூட.
சட்டத்தின் உதவியுடன் உண்மைவென்றே தீரும் என் பதற்கு இன்னும் ஓர் உதாரணம் காட்டிய நீதிமன்றத்திற்கும், நீதிபதிக்கும் எங்கள் வணக்கங்கள். சட்டம் தன் வேலையைச் செய்யும் நல்ல தீர்ப்பளிக்கும்.
நன்றி : மாலைமலர்
Posted by IdlyVadai at 4/13/2007 06:34:00 PM 5 comments
Labels: சினிமா
அமுகவிற்கு ஓரு வேண்டுகோள்
பாலபாரதி தலைமையிலான அமுகவிற்கு முதலில் என் பாராட்டுக்கள். ஒரு களையை பிடுங்கிவிட்டீர்கள், சூப்பர். இதே போல் இணையத்தில் பெண்கள் ( மற்றும் ஆண்கள் ) பாதிக்கப்படுவது இது முதல் தடவை இல்லை. இதே போல் பல பெண்கள் முன்பு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த நபர் ( அல்லது அந்த கூட்டம் ) இன்று மரம் போல வளர்ந்துவிட்டது. அவர்களையும், இதே போல் பிடுங்கி எறிய வேண்டும் என்று அமுகவிடம் கேட்டுக்கொள்கிறேன். இதனால் எழுதாமல், நிறுத்திவிட்ட சகோதிரிகள், மற்றும் இன்னமும் கருத்துக்களை வெளியே சொல்லத் தயங்கும் தோழிகளுக்கு இது ஒரு சந்தோஷமான செய்தியாக இருக்கும்.
இருந்தாலும் அவர்கள் வசதிக்காக... எல்லோருக்கும் ஒரு கையெழுத்து இருக்கும், அதே போல இந்தப் போலிக்கும் சில கையெழுத்துகள் இருக்கின்றன. அதில் கொஞ்சம் டீசண்டான கையெழுத்து "குச்சிக்காரி". இதை கூகிளில் தேடினால் கிடைக்கும் பதிவுகளை பார்த்தால் விபரம் புரியும். ( சாம்பிளுக்கு சில கீழே )
சாம்பிள் 1
சாம்பிள் 2
ஒரே ஒரு வலைப்பதிவை வைத்தே குற்றவாளியைக் கண்டுபிடித்த அமுக சிங்கங்களுக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்காது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அவர்கள் மனது வைத்தால் இது சாத்தியமாகும்.
மீண்டும் அமுகவிற்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்+நம்பிக்கையுடன்,
இட்லிவடை
முடிந்தால் சென்னை வலைப்பதிவு சந்திப்புக்கு வருகிறேன். ( காமிரா எல்லாம் கொண்டுவர மாட்டேன் பயப்படாதீங்க :-)
Posted by IdlyVadai at 4/13/2007 09:18:00 AM 9 comments
Labels: அறிவிப்பு
Thursday, April 12, 2007
Big Man, Big Mistake
இன்போசிஸ் நிறுவனத் தலைவர் திரு நாராயண மூர்த்தி அவர்களுக்கு,
கும்புட்றேன் சாமி!.
இப்பெல்லாம் பதிவு எழுதினால பலருக்கு வயத்தகலக்குதுங் சாமி. சரி விஷயத்துக்கு வாரேன். உங்களுக்கு வெஜ்ஜர்ன் மீஜிக் புடிக்குமுன்னு முன்னால ஒரு தபா சொல்லியிருக்கீங்க. அதற்கு அர்த்தம் இப்போ தான் நமக்கு விளங்கிச்சு சாமி. வெஜ்ஜர்ன் மீஜிக் மட்டும் இல்ல வெஜ்ஜர்ன் சம்பந்த பட்ட அல்லாமே உங்களுக்கு பிடிக்குமுனு.
மூனு நாள் முன்னால நம்ப இந்தியாவோட மொத குடிமகன், அதான் அப்துல் கலாமு வந்திருந்தாரு.. குடியரசு தலைவரு கலந்துக்கற விழா ஆரம்பத்துலயும் முடிக்க சொல்லயும் நம்ம தேசிய கீதம் இசைக்குமாமில்ல. நான் இஸ்கூல்ல படிக்க சொல்ல கடைசீயா தேசிய கீதமுனு சொல்லுவாங்க. அல்லோரும் பேசாம எழுந்து நிப்போம். அத்த விடுங்க எங்க நைனா ஜனாதிபதி ஒரை ரேடியோவ்ல வந்தாலே கடேசியா தேசிய கீதம் வரும். அதுக்கும் எழுந்து நிக்க சொல்லுவாரு. இப்போ எல்லாம் "தேசிய கீதம், எழுந்து நில்லுங்க" என்னு மைக்கில கூவ வேண்டி ஆகிப்போச்சு. பழைய கதை எதுக்கு? குடியரசு தலைவர் விழால நீங்களுந்தேன் அந்த மரபை ஃபாலோ செஞ்சீங்க அதற்கு ரொம்ப டாங்க்ஸ். ஆனா நம்ம பத்திரிக்கைகாரங்க குசும்புதான் தெரியுமே, ஏன் பாடலைன்னு கேட்டத்துக்கு நீங்க இங்கிலிபீச்சுல இந்த மாதிரி சொல்லியிருக்கீங்களாம்.
"The original idea was to have five youngsters sing the National Anthem. Then I felt we had several foreigners and we did not want to put them in an embarassing position of them being silent and others singing it, so we decided on the instrumental version. This was fine because the National Anthem need not be sung always. The important thing was to show solidarity and our respect"
"அட, வாய்விட்டு பாடினாத்தான் என்ன தப்பூ?"ன்னு கோடிவீட்டு குப்பம்மா கழுதை கேக்கிறா.
"தே, அவரு படிச்சவரு, அவர் சொன்னா கரீட்டா தான் இருக்கு!"முன்னு நானும் சொல்லிப் பாத்தேன்.
ஆனா அந்த வாயாடி "சரி, இதே போல இவரு துரைநாட்டுக்கு போனா அவுங்க இந்த மாதிரி செய்யுவாங்களா ?"ன்னு குதர்க்கமா கேக்கிறா.
"நீ ரொம்ப படிக்கல புள்ள, இந்த மாதிரியெல்லாம் பேசகூடாது!"ன்னு சொன்னேன்.
குப்பமாவுக்கு கோபம் ரொம்ப வந்து "இந்தியாவோட மொத குடிமகனைக் காட்டிலும், அவருக்கு வந்திருந்த சில வெளிநாட்டு துரைகள் தான் முக்கியமா?"ன்னு ஒரே படபடப்பு.
"புள்ள நிதானமா இரு!"ன்னு நாந்தேன் உப்பு போட்டு மோர் கொடுத்தேன். மோர் குடிச்ச தெம்புல கழுதை இன்னொரு கேள்வி கேட்டா..
"சரி துரைமாரு இக்கிளையண்ட்ஸ் எல்லாம் நம்ம பசங்க பேரை கூப்பிடச் சொல்ல ரொம்ப சங்கடபட்றாங்கன்னு அவங்க பேரையெல்லாமும் tom, steveன்னு மாத்திட சொல்லப் போறாரு பெரியவரு, எல்லாம் சாமியை நேந்துகிட்டு வெச்ச குலசாமிப் பேரு.." ன்னு ஏளனம் செய்யறா.
"சரி புள்ள, செஞ்சாத்தான் என்ன? இது என்ன பெரிய குற்றமான்னு ?" கேட்டேன். அவ்ளோதான். உடனே அவளுக்கு ரொம்ப ரோஷம் வந்திட்டுது.
அவ புள்ளை ஒரு வக்கீலு, அதனால செல்புல இருந்த ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து இத்தைக் காண்பிக்கிறா..
"The Prevention of Insult to National Honour Act, 1971 - In the case of insult to the national Tricolour, the Act provides: "Whoever in any public place or in any other place within public view burns, mutilates, defaces, disfigures, destroys, tramples upon or otherwise shows disrespect to or brings into contempt (whether by words, either spoken or written, or by acts) the Indian National Flag or the Constitution of India or any part thereof, shall be punished with imprisonment for a term which may extend to three years, or with fine, or with both."
நானும், "சரி புள்ள, அதான் அவர் மாப்பு கேட்டாச்சே!"ன்னு சென்னேன்.
அதுக்கு அவ "மாப்பு, அது எந்த மொளிலயும் எனக்கும் புடிக்காத வார்த்தை"ன்னு பொங்கறா சாமி. ( போன தேர்தல்ல இந்த மூதேவி தேமுதிகவுக்கு தான் ஓட்டுப் போட்டுச்சு. அத்த ஊர் முழுக்க சொல்லிகிட்டும் திரிஞ்சுச்சு.)
நான் சிரிச்சேன்.
"என்ன சிரிக்கிற? எனக்கு அவ்வளவு இங்கிலிபீசி தெரியாது, அவரு சொல்லியிருக்கறதை பாரு!"ன்னு இன்னிக்கு வந்த நிவிஸ் பேப்பரை என் முன்னால நீட்டினா..
"We are a proud Indian company, with strong universal ethos of transparency, accountability and honesty. If the media statement has hurt anybody's sentiments, I deeply apologise,"
"பார்த்தியாய்யா, இப்ப கூட இவர் செஞ்சது தப்புன்னு இவருக்கு தெரியலையே. தப்பா நீங்க நினைச்சா மன்னிச்சுடுங்க!"ன்னில்ல சொல்றாரு.
"சரி, விடு புள்ள, விசயம் என்னன்னா, இவரை அடுத்த ஜனாதிபதிக்கு பதிவிக்கு சிபாரிசு செய்யப் போறாங்களாம்."
.
"அட போய்யா, இவரு ஜனாதிபதியானா, குடியரசு தினத்துல வர துரைமாருங்களுக்கு கஷ்டமா இருக்குமுன்னு தேசிய கீதத்தையே இவர் பாடாமல் இருந்துட போறாரு. அப்றம் வெளிநாட்டு காரவுங்களுக்கு அனுகுண்டு பிடிக்காதுன்னு என்று அதையும் செய்ய மாட்டாரு.. துரைமாருங்களுக்குப் பிடிக்காதுன்னு......".
"சரிங் சாமி, உங்களுக்கு நெறைய வேலையிருக்கும். ஆனால் கடைசியா குப்பம்மா "mentor" ன்னா குரு மாதிரியாம், இப்ப சொல்லு, அவரு நிச்சயம் நல்ல இந்திய குடிமகனுக்கு நல்ல குருவா?ன்னு கேட்கிறா ?"
பதிலை எதிர்பார்க்கும்,
இட்லிவடை
( ஒரு சராசரி இந்திய ஃஸாப்ட்வேர் குடிமகன் )
Posted by IdlyVadai at 4/12/2007 04:25:00 PM 19 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Wednesday, April 11, 2007
ஒரு நாள் போட்டியில் இருந்து லாரா ஒய்வு
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் லாரா ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதை உறுதிப்படுத்தி உள்ளார்.
37 வயதான லாரா 1990ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார்.
அவர் 297 ஒருநாள் போட்டியில் விளையாடி 10,354 ரன் எடுத்துள்ளார். சராசரி 40.60 ஆகும். 19 சதமும், 63 அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 169 ரன் எடுத்திருந்தார்.
மேலிம் தகவலுக்கு: http://en.wikipedia.org/wiki/Brian_Lara
"எனது ஒருநாள் கிரிக் கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக நினைக்கிறேன். இது உறுதியானது. இளம் வீரர்களுக்கு வாய்ப்புஅளிக்கும் வகையில் எனது ஆட்டம் முடிவு பெறுகிறது. உலக கோப்பை முடிந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து செல்கிறது. இதில் நான் இடம் பெறமாட்டேன். சிறந்த அணி செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்"
Posted by IdlyVadai at 4/11/2007 12:10:00 PM 0 comments
Labels: விளையாட்டு
Tuesday, April 10, 2007
27%, பந்த் பற்றி - ஞாநி
27%, பந்த் பற்றி ஞாநியின் அருமையான கட்டுரை. நன்றி ஆனந்த விகடன், ஓ-பக்கங்கள்
யாரை எதிர்க்க இந்த பந்த்?
‘முழு அடைப்பு முழு வெற்றி!’, ‘தமிழகம் ஒரே குரலில் எதிர்ப்பைக் காட்டியது!’, ‘வரலாறு காணாத வெற்றி!’ என்றெல்லாம் அரசியல் தலைவர்கள் அறிக்கைவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
வரலாறு என்பது உண்மைகள் மட்டுமல்ல; பல பொய்களும் அசட்டுத்தனங்களும் நிரம்பியது என்பதற்கு இவையெல்லாம் இன்னொரு சாட்சியம். தாமிரபரணி, யாழ்ப்பாணம், நந்திகிராமம் போன்றவை எப்படி அரசு பயங்கரவாதங்களோ, அது போல அரசு அராஜகங்கள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியது இந்த பந்த்!
இது மக்கள் மீது நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு விடுமுறை தினம்... அவ்வளவுதான்! அன்றைய தினம் தமிழக மக்கள் எல்லாரும் தத்தம் வீடுகளில் உட்கார்ந்து குடும்பம் குடும்பமாக இட ஒதுக்கீடு பிரச்னையின் நுட்பமான சிக்கல்கள் பற்றித் தீவிரமாக விவாதித்து, இதற்கான தீர்வுகள் பற்றி ஆலோசனைகள் நடத்தினார்களா என்றால், அதற்கான சூழலே இங்கு கிடையாது. அழுக்குத் துணிகளைத் துவைக்கவும், வீட்டை ஒட்டடை அடிக்கவும், பெரும் பாலான நேரம் டி.வி. ஒளிபரப்பிய மசாலா சினிமா குப்பைகளைக் கண்டுகளிக்கவும் மட்டுமே இந்த பந்த் பயன்படுத்தப்பட்டது. மறுபக்கம், இன்னொரு பெருங்கூட்டம் ரயிலடியிலும், பஸ் நிலையத்திலும் அகால நேரத்தில் தத்தளித்தது. மார்ச் 31 வருடக் கணக்கு முடிக்கும் நாள் என்பதால், பொருளாதாரத் துறையினர் பெரும் பாதிப்புக்கு ஆளாயினர்.
இட ஒதுக்கீடு பிரச்னை மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் சரி... ஆட்சியில் இருந்தால் பந்த்களை அறிவித்து தங்கள் கருத்துத் தீவிரத்தைக் காட்டிக் கொள்வது நமது தமிழக ஆட்சி யாளர்களின் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், பெருவாரியான மக்களுக்கு பந்த் என்பது விடுமுறை மட்டுமே!
எந்தப் பிரச்னைக்காக பந்த் அறிவிக்கப்படுகிறதோ, அது தொடர்பாகப் பெருவாரியான மக்களின் பங்கேற்பை உருவாக்கும் முயற்சியைச் செய்வது தான் நியாயமானது. ஆனால், நமது அரசியல்வாதிகளால் அது முடியாது.
பந்த் என்ற எதிர்ப்பு வடிவமே, ஆட்சியில் இருக்கும் அதிகார சக்தியால் செய்யப்படும்போது அர்த்த மற்றதாகிவிடுகிறது. ஏனென்றால், பந்த் என்பது காந்தி உருவாக்கிய ‘சிவில் டிஸ் ஒபீடியன்ஸ்’ எனப்படும் ஒத்துழையாமைக் கோட்பாட்டில் உருவானது. யாரை எதிர்க்கிறோமோ அவருடன் ஒத்துழைக்க மறுப்பதுதான் இந்தக் கோட்பாடு. அந்த அதிகார சக்தி விதிக்கும் வரிகள் முதல், அதன் உத்தரவுகள் எதற்கும் உடன்பட மறுப்பதன் ஓர் அம்சம்தான் முழு அடைப்பும்!
இப்போது பந்த் அறிவிக்கும் கருணாநிதியும் ராமதாஸும் யாரை எதிர்த்து ஒத்துழையாமைப் போராட்டம் செய்கிறார்கள்?
இப்போதைய பிரச்னை உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பானது. அப்படியானால் எதிர்க்கப்பட வேண்டிய சக்தி உச்ச நீதிமன்றம்தானே? அத்துடன் ஒத்துழைக்க மாட்டோம் என்றுதானே போராட முடியும்? இட ஒதுக்கீடு தொடர்பாக நிறைவேற்றும் எந்தச் சட்டத்தையும் விசாரிக்கும் அதிகாரமே நீதிமன்றங்களுக்கு இருக்கக் கூடாது என்று கருதினால், அப்படி ஒரு சூப்பர் சட்டத்தை உருவாக்க வேண்டியது யார்? கருணா நிதியும் ராமதாஸும் அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளும் செல்வாக் குடன் திகழும் தற்போதைய நாடாளுமன்றமும் அரசாங்கமும் தானே? இப்போது ஆட்சியில் இருப்பதே அவர்கள்தானே? அப்படி யானால், தங்களைத் தாங்களே எதிர்க்கிறார்களா?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் கர்நாடக, கேரள அரசுகள் மதிப்பதில்லை என்று விமர்சிக்கும் தமிழக அரசு மட்டும் எப்படி இப்போது அதே மன்றத்தின் இன்னொரு தீர்ப்பை மதிக்காமல் பேச முடியும்?
உச்ச நீதிமன்றம் செய்திருப்பது என்ன? ஒரேயடியாக இடஒதுக்கீட்டைத் தூக்கி எறிந்துவிட்டதா? இல்லை. ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப் பட்டதற்கு மட்டும் இடைக் காலத் தடை விதித்திருக்கிறது. அதுவும் என்ன அடிப்படையில்?
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு 27 சதவிகிதம் என்று கணக்கிடுவதற்கு அடிப்படை என்ன? மக்கள் தொகையில் அவர்களுடைய அளவு என்ன? அரசு சொல்வதுபோல 60 சதவிகிதத்துக்கும் மேல் என்றால், அதற்கான கணக்கு என்ன?
இந்தக் கேள்விகளுக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் இதுவரை உச்சநீதிமன்றத்துக்குச் சரியாகப் பதில் சொல்லவில்லை என்பதுதான் சிக்கலுக்கு அடிப்படைக் காரணம். விவரம் கேட்டும் பல மாநில அரசுகள் பதிலே தரவில்லை என்று மத்திய அரசே நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது.
மிக மிக அடிப்படையான காரணம், இந்திய மக்கள் தொகையில் எந்தெந்தச் சாதியில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கே சுதந்திர இந்தியாவில் எடுக்கப்படவில்லை என்பதுதான்! மண்டல் கமிஷன் உட்பட பலரும் கேட்டும் மூன்று முறை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்ய மறுத்திருக்கிறது. வல்லபபாய் பட்டேல் உள்துறை அமைச்சராக இருந்தபோதே சென்சஸ் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கு எடுக்க மறுத்துவிட்டார். அதுவே மத்திய அரசின் கொள்கையாக இதுவரை இருந்து வருகிறது.
அப்படியானால் இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் அடிப்படைக் கணக்கு எது? 1931-ம் வருட சென்சஸ் கணக்குதான்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பதே விரிவாகச் செய்யப்பட்டது. அதற்கு முன்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்த குப்த சாம்ராஜ்யம் முதல் மொகலாய சாம்ராஜ்யங்கள் வரை எந்த ஆட்சிக் காலத்திலும் விரிவான சென்சஸ் செய்யப் பட்டதே இல்லை.
இங்கிலாந்தில் 1801-ல்தான் முதல் சென்சஸ் எடுக்கப்பட்டது. அதன் பிறகு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. இந்தியாவில் முதல் சென்சஸ் எடுத்த தேதி 17-2-1881. எதற்காக ஆங்கிலேயர்கள் இந்தியாவில் சென்சஸ் எடுத்தார்கள் என்று ஆராய்ந்தால், சென்சஸ் என்பதே ஒரு அரசியல்தான் என்பது புரியும். ஆட்சி செலுத்தும் நாட்டின் வளங்கள் என்னென்ன என்று தெரிந்துகொண்டு கொள்ளையடிக்க சர்வே; அடிமை மக்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்டு, அவர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தொடர்ந்து அடிமைகளாகவே வைத்திருக்கலாம் என்று திட்டம் வகுக்க சென்சஸ்!
இந்தியாவின் சாதி அமைப்பு முறையைப் புரிந்துகொள்வதில் ஆங்கிலேயர்களுக்குப் பெரும் குழப்பம் இருந்தது. அவர்கள் சாதியை இனத்துடன் (race) அடிக்கடி குழப்பிக் கொண்டார்கள். இங்கிலாந்தில் பின்பற்றிய இரு கோட்பாடுகளை அவர்கள் இங்கேயும் பின்பற்றினார்கள். ஒன்று, இனத் தூய்மை போன்றதே சாதித் தூய்மையும்! இரண்டாவது, உடற்கூறுதான் இனத்துக்கும் சாதிக்கும் அடிப்படை.
உடற்கூறு ரீதியில் தங்கள் வெள்ளை இனம்தான் உயர்வானது என்று கருதிய அவர்கள், இந்தியா போன்ற நாடுகளில் இருந்த எல்லா சாதி/இன மக்களும் தங்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று காட்ட, இவர்களின் உடற்கூறையே ஆதாரமாகக் கொண்டார்கள். வெள்ளையர்களின் நிறவெறிக் கொள்கைதான் அவர்களுடைய phrenology, anthropology ஆகிய இரு சமூக விஞ்ஞானங்களையுமே வழிநடத்தியது. மண்டை ஓட்டை வைத்துக்கொண்டு உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்று phrenology தீர்மானித்தது. மூக்கு, தலை அளவுகள், உயரம் மூன்றையும் கொண்டு இந்தியாவில் 51 இனக் குழுக்கள் இனத் தூய்மையைக் காப்பாற்றி வந்திருப்பதாக 1937--ல் ஹாட்சன் என்ற ஆங்கிலேயர் கணக்கிட்டிருக்கிறார்.
ஆங்கிலேயர்கள் பின்பற்றிய இந்தக் குழப்பமும் சூழ்ச்சியும் மிகுந்த முறையின் உச்சகட்ட அராஜகம், 1871-ல் மனுதர்மத்தையும் மிஞ்சிச் சென்றது. இந்த வருடம்தான் முதல் விரிவான முழுமையான இந்திய அளவிலான சென்சஸ் நடத்தப் பட்டது. அதையொட்டி குற்றப் பரம் பரைச் சட்டம் என்ற பெயரில் ஒரு சாதி முழுமையுமே பரம்பரையாகக் கிரிமினல்கள் என்ற கொடும் சட்டத்தை ஆங்கிலேயர்கள் போட் டார்கள். ‘நினைவு தெரிந்த காலம் முதல் இந்தச் சாதியின் மூதாதையர்களே கிரிமினல்கள்! அவர்களின் வழித்தோன்றல்களும் கிரிமினல் களாகத்தான் இருக்கமுடியும். ஆகவே, முழுச் சாதியையே அழித்தொழிக்க வேன்டும்; அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் கண்காணிப்புக்குக் கொண்டு வர வேண்டும்’ என்று சட்டத்தின் அறிமுக உரையில் சொல்லப்பட்டது.
ஆங்கிலேயர்கள் சென்சஸ் கணக்கெடுப்பையே உள்நோக்கத்துடன் செய்கிறார்கள் என்ற எதிர்ப்புக் குரல்கள் அப்போதே வந்தன. 1931 சென்சஸின்போது மக்கள் எப்படிப் பதில் தர வேண்டும் என்று ஆரிய சமாஜம் அப்போது ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது. (அன்றைய ஆர்ய சமாஜம் மத வரம்புக்குட்பட்ட சமூக சீர்திருத்த இயக்கம். இன்றைய ஆர்ய சமாஜம் போல மதவாத, சாதிய அமைப்பு அல்ல!) அதில் எந்தக் கேள்விக்கு என்ன பதில் தர வேண்டும் என்று மக்களிடம் பிரசாரம் செய்திருக்கிறது. ‘மதம்: வேத தர்மம். பிரிவு: ஆர்ய சமாஜி. இனம்: ஆரியர். மொழி: ஆரிய பாஷை. சாதி: இல்லை என்று பதில் சொல்லுங்கள்’ என்கிறது பிரசுரம்.
இன்னொரு பக்கம் முஸ்லிம்களும் சென்சஸ் எடுத்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கடுமையாக விமர்சித்தார்கள். வங்கத்தில் 1871-72-ல் சென்சஸ் அதிகரியாக இருந்த பீவர்லீ, வங்க முஸ்லிம்கள் எல்லாரும் கீழ் சாதி ஹிந்துக்களாக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்கள் என்று சென்சஸ் அறிக்கையில் குறிப்பிட்டதை முஸ்லிம் அறிஞர் ஃபைசல்-இ-ராப் புத்தகம் எழுதிக் கண்டித்திருக்கிறார்.
கீழ் சாதியாகக் கருதப்பட்ட துப்புரவுத் தொழில் செய்துவந்த மஹ்தோன் சாதியினர் தங்களை உயர் இன ராஜபுதனர்களாகவே கருத வேண்டும் என்று 1900-த்திலேயே கோரியுள்ளனர். இதை ஆங்கிலேயர்கள் ஏற்கவில்லை. ராணுவத்தில் சேர்ந்தாலும் தாங்கள் ராஜ்புட் படைப் பிரிவில்தான் சேர்க்கப்பட வேண்டும் என்பது மஹ்தோன்களின் கோரிக்கை.
1891 முதல் 1931 வரை பல சென்சஸ் கனக்கு களைப்பார்த்தால், அவற்றில் வரும் சாதிப் பிரிவுகளின், உட்பிரிவுகளின் எண்ணிக்கை பிரமிப்பூட்டுகிறது. பஞ்சாபில் ஒரு லட்சம் உட்பிரிவுச் சாதிகள். பிராமணர்களில் மட்டுமே 2,173 உட்பிரிவுகள். சென்னை ராஜதானியில் மட்டும் 30 ஆயிரம் உட்பிரிவுகள். பறையர் சாதிக்குள் மட்டும் 350 உட்பிரிவுகள். பள்ளர் சாதிக்குள் 365 உட்பிரிவுகள் என்கிறது அன்றைய ஆங்கில ஆட்சியின் சென்சஸ் கணக்கு.
இப்படிப்பட்ட சென்சஸ் கணக்கை அடிப்படையாகக் கொண்டு இன்று பிற்படுத்தப்பட்டவர்கள் தொகையைக் கணக்கிடு வதென்றால் எவ்வளவு அபத்தம்?
இன்றைய சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மொத்தத் தொகை நிச்சயம் 60 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை தான். எனவே, அதில் இட ஒதுக்கீடு 27 சதவிகிதம் மட்டும்தான் என்பது ஒன்றும் தவறானதல்ல!
ஆனால், ஏன் இன்றைய மக்கள் தொகையில் ஒவ்வொரு சாதியின் அசல் எண்ணிக்கை என்ன என்பதை கணக்கெடுப்பதைத் தவிர்க்கிறோம்? அப்படி எடுப்பது சாதியத்தை ஊக்கு விக்கும் என்ற வாதம் சொத்தையானது. அப்படியானால், எல்லாப் பத்திரிகைகளிலும் மேட்ரிமோனியல் விளம் பரங்களைத்தான் முதலில் தடை செய்யவேண்டும்.
இட ஒதுக்கீட்டு பிரச் னையை ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி... அதை வெறும் உணர்ச்சிப் பிரச்னையாக்கிக் கொண்டே போவது தவறானது. அறிவு பூர்வமாக அதை அணுக வேண்டும். அப்படி அணுக விரும்பாதவர்கள்தான் இரு தரப்பிலும் ‘பந்த்’ என் பார்கள்; இல்லாவிட்டால் ஐ.ஐ.டி மாணவர்கள் ஷூ பாலீஷ் போடும் போராட்டம் என்பார்கள்.
அறிவுபூர்வமான தீர்வு தான் என்ன?
1. சாதிவாரியான சென்சஸ் எடுக்கப்பட வேண்டும். கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் உள்ள 2007-ல் இதை ஓராண்டுக்குள் செய்து முடிக்க முடியும்.
2. கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரப்பதவிகள் (அமைச்சர், ஐ.ஏ.எஸ் முதல் அர்ச்சகர் வரை), வணிகம், தொழில் முதலியவற்றில் பங்கு ஒவ்வொருசாதிக்கும் எவ்வளவு உள்ளது என்று கணக்கிட வேண்டும்.
3. எந்தெந்தத் துறைகளில் எந்தெந்தச் சாதி பின்தங்கியுள்ளது என்று மதிப் பிட்டு அந்தந்த துறையில் அந்தச் சாதிக்கான பங்கை அதிகரிக்கத் தேவையான அளவு இட ஒதுக்கீட்டை உருவாக்க வேண்டும்.
4. ஒவ்வொரு சாதியிலும் (ஓப்பன் கோட்டா உட்பட) கிரீமிலேயர் எனப்படும் வசதியானவர்களின் பங்கு இப்போது கல்வியிலும் வேலைகளிலும் எவ்வளவு என்று கணக்கிடப்பட வேண்டும். சாதிவாரியான இட ஒதுக்கீட்டுக்குள் அந்தந்தச் சாதியில் வசதி யற்றோருக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.
5. அரசாங்க வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டு வரும் சூழலில், தனியார் துறையிலேயே வேலை வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சாதிகளின் பங்கு எல்லாத் துறைகளிலும் கணக் கிடப்பட வேண்டும்.
5. பொது ஒதுக்கீட்டுக்கான சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள், தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடியினர் என்ற ஐந்து பிரிவுக்குள் எல்லாச் சாதிகளும் வந்துவிடும் என்பதால், சாதி பெயரிட்ட கம்யூனிட்டி சான்றிதழ்களை ரத்து செய்து, அவற்றுக்குப் பதிலாக மேற்படி ஐந்து பிரிவுகளை மட்டுமே சான்றிதழில் குறிப்பிடும் முறையைக் கொண்டுவரவேண்டும். தொலைநோக்கில் சாதியை ஒழிக்கத் தேவையான நடவடிக்கை களில் இதுவும் ஒன்று. கலப்பு மணம் செய்து குடும்பத்துக்குள் சாதியை ஒழிப்போரை ஆறாவது பிரிவாக ஆக்கலாம். அவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யலாம்.
6. பள்ளி இறுதி வரை எல்லா சாதியினருக்கும் (மதத்தினருக்கும்) தரமான சமமான கட்டாயக் கல்வி ஏற்படுத்தப்பட வேண்டும். குறைந்த பட்சம் 12 ஆண்டுகள் இதை நிறை வேற்றிய பிறகு, எல்லா இட ஒதுக்கீட்டு அளவுகளையும் மறு பரிசீலனை செய்யலாம்.
மேற்படி யோசனைகளில் சாதக பாதகங்களை விவாதித்து திட்டத்தைச் சீர் செய்யலாம். இதற்கு எல்லா அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் முன்வர வேண்டும்.
அதுவரை குறைந்தபட்சம், அரசாங்க பந்த் போன்ற அசட்டுத் தனங்களை ஓரங்கட்டி வைக்கலாம்!
Posted by IdlyVadai at 4/10/2007 07:47:00 AM 14 comments
Labels: கட்டுரை
Monday, April 09, 2007
தமிழக பந்த் பற்றி சுயநலவாதிகள்
டிஸ்கி: இந்த பதிவிற்கும் சில தமிழ்மணம் பதிவுகளுக்கும் சம்பந்தம் உண்டு. நெஞ்சு வலி, வயத்தெரிச்சல், கோழைகள், சுயநலவாதிகள் வேறு பதிவுகளை நாடலாம். பொதுநலவாதிகள், பகுத்தறிவு சிங்கங்கள் மேற்கொண்டு படிக்கலாம்.
இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் கடந்த வாரம் நடைபெற்ற முழு அடைப்பு பெரும் வெற்றி பெற்றதாக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளார். டாக்டர் கலைஞர் ஏன் எல்லா கட்சிகளையும் கூட்ட வேண்டும் ? என்று சில சுயநலவாதிகள் சிந்தித்தார்கள். அரசே ஒரு வேலை நிறுத்தத்தை அறிவிக்ககூடாது என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதை சமாளிக்க, பொன் விழா காணும் நம் தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிகள் நடத்தும் பந்த் அறிவித்தார். ஆனால் அரசு நிறுவனங்கள், போக்குவரத்துக்கு எல்லாம் விடுமுறை அறிவித்தார்.
கர்நாடகம் காவிரி விஷயத்திலும், கேரளம் முல்லைப் பெரியாறு விஷயத்திலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன ? நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை ஏற்க மறுத்தது ஓர் அவமதிப்பு ; அரசே முன்னின்று பந்த் நடத்தியது மற்றோர் அவமதிப்பு. ஆக டபுள் அவமதிப்பு. இதை பாராட்டாமல் கேலி சித்திரம் போட்டு வலைப்பதிவில் மறுபதிப்பு செய்யும் அறியாமையை என்ன என்று சொல்லுவது ?
இட ஒதுக்கீடு பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடனேயே பிரச்சினையின் முக்கியத்துவம் காரணமாக முழு அடைப்பு பற்றிய அறிவிப்பும் உடனேயே வந்தது. ராமதாஸோ அல்லது ஜெயலலிதாவோ முந்திக்கொண்டார்கள் என்றால் என்ன செய்வது ? என்று சில சுயநலவாதிகள் சிந்திக்கிறார்கள்.
பல பேர் பஸ் ஸ்டாண்டிலும், ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ரெஸ்ட் எடுத்தார்கள், பரிட்சைக்கு செல்லும் மாணவர்கள், வாக்கிங் போனார்கள், ஆட்டோகள், பஸ்கள் ஓடாததால் எறிபொருளை சேமிக்க முடிந்தது, நகரம் அமைதியாக இருந்தது. பொருளாதார ரீதியிலோ, தமிழகத்துக்குக் கோடிக் கணக்கில் நஷ்டம். ஆனால் அவர்கள் வெளியில் போய் உழைத்திருந்தால் வெயிலில் அவதிப்பட்டிருப்பார்கள் இது யாருக்கும் புரியவில்லை. பந்த அமைதியாக நடந்ததால் எல்லோரும், சன் டிவியில் 'காசேதான் கடவுளடா' படம் பார்த்து சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளித்தார்கள். கோழி கறி சாப்பிட்டார்கள். இதனால் இந்த பந்த் வெற்றி பெறவில்லை. கடைசியாக ‘சமூக நீதிக்கு மக்களிடமிருந்து கிடைத்த அமோக ஆதரவு’ என்று சன் டீ.வி.யில் அறிவித்த்ததால் பந்த் வெற்றி பெற்றது. இதை புரிந்துக்கொள்ளாமல் சில சுயநலவாதிகள் பிதற்றுகிறார்கள்.
சில பிரிவினரை இட ஒதுக்கீடு தந்து அவர்களை கைக்குள் போட்டுக்கொள்வது, தமிழக அரசு பணிகள் மற்றும் கல்விநிலையங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியான முடிவுகளை அரசு மேற்கொள்ளும் என்று அறிவித்து, ஜாதி அரசியலை ஊக்கிவித்து பிரித்து ஆளும் தந்திரத்தை சிலர் நக்கலடிக்கிறார்கள். இவர்கள் தான் சுயநலவாதிகள். ஏன் என்று சிந்தித்தால் காரணம் உங்களுக்கு புரிந்துவிடும்.
கலைஞர் எல்லோரையும் மரியாதையாக போற்றிவார். போற்றிய லிஸ்ட் இதோ மூதறிஞர் ராஜாஜியை "குல்லுகபட்டர்' (சதிகாரர்) என்றார்; கர்மவீரர் காமராஜரை "அண்டங் காக்கா' என்று அர்ச்சித்தார்; கக்கன்ஜியை "கக்கன் என்ன கொக்கா' என்று நஞ்சைக் கக்கினார்... ஜாம்பவான் பக்தவச்சலனாரை குரங்கு போல் கார்ட்டூன் போட்டார்; வாழப்பாடியாரை "வழிப்போக்கன்' என்றார்; மூப்பனாரை "காவேரி, தென்பெண்ணைப் பாலாறு... மூப்பனார் மூளையில் கோளாறு' என்றார்; எம்.ஜி.ஆரை "மலையாளி, கூத்தாடி, கோமாளி' என்றார்; நாவலரை "நெடுமரம்' என்றார்; நாஞ்சிலாரை "மந்திரக் கோல் மைனர்' என்றார்; ஆர்.வி.,யை "கைபர் கணவாய் வழி வந்தவரே' என்றார்; ஹிந்து பத்திரிகையை "மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு' என்றார்...
துக்ளக் சோவை "சொட்டைத் தலையர், பபூன்' என்றார்; குமுதம் எஸ்.ஏ.பி.,யை "குள்ள நரி' என்றார்; ப.சிதம்பரத்தை "செட்டி நாட்டு சின்னப் பையன், சீமான் வீட்டு கன்றுக் குட்டி' மற்றும் சமீபத்தில் "ஈ, எறும்பு, கொசு' என்றார்; பேராசிரியரை "வெறும் உதவி விரிவுரையாளர் தான்' என்றார்; அரசியல் சட்ட அறிஞர் இரா.செழியனை "ஈனப்பிறவி' என்றார்; வைகோவை "கள்ளத் தோணி, கலிங்கப்பட்டி களிமண்' என்றார்; பா.ஜ.,வை "தீண்டத்தகாத கட்சி' என்றார்...
வாஜ்பாய், அத்வானியை "விஷ ஜந்துக்கள்' என்றார்; பா.ஜ., தலைவர்களை "பண்டாரம், பரதேசி, காவி உடை, கமண்டலம், ஆக்டோபஸ்' என்றார்; பா.ஜ., பொதுச் செயலாளர் எச்.ராஜாவை "கூஜா' என்றார்; முதல்வர் ஜெ.,யை "பாப்பாத்தி, பத்ரகாளி, காந்தாரி' என்றார்; ஒட்டு மொத்த இந்துக்களை "திருடன்' என்று திட்டினார்; இரண்டு கோடி தமிழக வாக்காளர்களை "பருத்தி விதை, தவிடு, புண்ணாக்கு தின்னும் மாக்கள், வாழை மட்டைகள், மடச் சாம்பிராணிகள், புத்திகெட்ட ஜென்மங்கள், சோற்றால் அடித்த பிண்டங்கள்' என்றார்.
இந்திராகாந்தியை, "கிராப் வெட்டிய காஷ்மீர் பாப்பாத்தி' என்றும், பெருந்தலைவர் காமராஜரை, "கோமாளி ராஜா' என்றார். ரஜினி பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்து "வாய்ஸ்' கொடுத்துள்ளதால், "மராட்டியரே, கர்நாடக வழி வந்தவரே, கண்டக்டரே, பரட்டையரே, கோமாளியே, கூத்தாடியே...' என்றார். தினமும் பஜனை செய்து, கடைசி வரை 'ராம் ராம்' என்று சொன்ன காந்தியை கலைஞர் பின்பற்றுகிறார், என்று சொன்னால் மிகையாகாது. இது தெரியாமல் சில சுயநலவாதிகள் தூற்றுகிறார்கள்.
இன்று உச்சநீதிமன்றத்தில் வந்த இந்த வழக்கு, முதலில் விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்கைத் தொடர்ந்த இளைஞர் இயக்கம், ஸ்ட்ரைக் செய்து கொண்டிருந்தது. அப்போது வந்த இடைக்கால உத்திரவு, அரசு தரப்புக்குச் சாதகமாக அமைந்தது. அந்த நிலையில் ஸ்ட்ரைக் நிறுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறிய அறிவுரையை ஏற்று, அந்த இளைஞர் இயக்கம் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற்றது. "இப்போது, சுப்ரீம் கோர்ட்டை சற்றும் மதிக்காமல், இடைக்கால தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசே முன்வந்து பந்த் நடத்துகிறது. இளைஞர்களுக்கு இருக்கிற பொறுப்புணர்வு, அரசுக்கு மட்டும் வேண்டாமா?' விஜயன் அவர்கள் எழுப்புகிற கேள்வி பகுத்தறிவு இல்லாமல் கேட்கப்படும் கேள்வி. இவர்களை சுயநலவாதிகள் என்று சொல்லுவதை தவிற வேறு என்ன சொல்லமுடியும்.
1931 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்டவர்களைப் பற்றிய ஒரு முடிவு எடுப்பது சரியல்ல; இந்த பழைய கணக்கெடுப்பின் அடிப்படையில் 27 சதவிகித இடஒதுக்கீடு என்று நிர்ணயம் செய்யப்படுவது ஏற்க முடியாதது என்று உச்சநீதிமன்றம் பிதற்றுகிறது. குழந்தையை கேட்டால் கூட சொல்லும், கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் யாரையும் முன்னேற்றவில்லை என்று. குழந்தைக்கு தெரிந்தது, உச்சநீதி மன்றத்துக்கு தெரியவில்லை. இவர்களுடைய பென்சிலால் எந்த சமயத்தில் சித்திரம் வரையும் என்று தெரிந்திருக்கும். ஆம் இவர்கள் தாம் சுயநலவாதிகள்.
Posted by IdlyVadai at 4/09/2007 12:29:00 PM 33 comments
Labels: அரசியல்
27% பற்றி விஜயன், சோ
( நன்றி: indiaintracts.com, Special thanks for Prasanna for providing me the links )
Posted by IdlyVadai at 4/09/2007 09:21:00 AM 0 comments
Labels: படம்
Saturday, April 07, 2007
BCCI updates
* Robin Singh - Fielding coach
* Ravi Shastri - Team Manager for Bangaladesh tour
* Contract system to be abolished
- Grade A ( like Dravid, Sachin got 50lakhs,
- Grade B ( like Dhoni, Sreeshant got 35lakhs
- Grade C ( like zaheer got 20 lakhs
* Each player gets 1 Lakh per match ( Earlier it was 1.6 Lakhs )
* Rs 3 Lakh as bonus Series winning
* not more than 2-3 product endorsements per player per year
* BCCI has refused to recognise ZEE's Indian Cricket League.
* Zonal selection to he scrapped in a year.
* Chappel presentation to BCCI was terrific - Shastri
* Chappel has a lot to offer to the team - Shastri
* No ad shooting 15 days before the match
* Young team tour B'desh
* Greg Chappel may be a consultant for Indian Cricket Team
* Dravid to continue as Captain for B'desh tour
* fitness test for all players before a series
* All exclusive contracts with the media canceled for all players.
* Sachin and Yuvaraj to get notices for talking to media.
ஓட்டு பெட்டி வழக்கம் போல் சைடில்...
....updates follow. keep checking here.
Posted by IdlyVadai at 4/07/2007 03:09:00 PM 1 comments
Labels: விளையாட்டு
Friday, April 06, 2007
ஒரே கேள்வி ஒரே பதில் - ( நன்றி துக்ளக் )
கே : "ராமதாஸ் ஒரு மோசடித் தலைவர்' – என்றும்; "இவரை அரசியல் தலைவராக, யாரும் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' – என்றும் தி.மு.க.வின் வெற்றிகொண்டான் விமர்சித்துள்ளது பற்றி?
ப : இது உண்மையில் கலைஞரின் விமர்சனம் என்று, ராமதாஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். அதற்கு அன்பழகன், "தி.மு.க. தலைவர் என்றுமே தரம் தாழ்ந்த விமர்சனம் செய்ததில்லை' என்று பதில் அளித்திருக்கிறார். இந்த பதில் சிரிப்புக்குரியது. கலைஞர் சமீப காலத்தில், வைகோ பற்றியும், ஜெயலலிதா பற்றியும் செய்துள்ள விமர்சனங்கள் பல, தரம் தாழ்ந்தவையே எனும்போது, அன்பழகனின் சர்ட்டிஃபிகேட், போலி சர்ட்டிஃபிகேட் ஆகிறது.
உதாரணத்துக்கு, சன் டி.வி.யின் வருமான கணக்கு பற்றி ஜெயலலிதா கேட்டதற்கு, முதலமைச்சர் கருணாநிதி அளித்த "பண்பான' பதில் இது :
""...கருணாநிதி தன் குடும்பத்துக்காக கட்சி நடத்துகிறார் என்று கூறுகிறார்கள். குடும்பம் இருக்கிறது. கட்சி நடத்துகிறேன்.... ஆண்மை இருக்கிறது. மக்கள் இருக்கிறார்கள். இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?
""...கருணாநிதி கணக்கைக் காட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டின் கஜானாவை கொள்ளையடித்தவர் இன்று கேட்கிறார்... எந்த கணக்கைக் காட்டுவது? வயது கணக்கை காட்டுவதா? பிள்ளைகள் கணக்கை காட்டுவதா....? நீ உன் கணக்கைக் காட்டு பார்க்கலாம்.
""...என் கணக்கு வருமானவரி அலுவலகத்தில் இருக்கிறது. போய் பார்த்துக் கொள். பெட்ரோல் செலவுக்கு வேண்டுமானால் நான் பணம் தருகிறேன். வீட்டுக்கு வந்து கணக்குக் காட்ட வேண்டுமா? வந்தால் என்ன ஆவது? நான் என்னென்ன கணக்கு கேட்பேன் தெரியுமா?''
– (தினகரன் : 28.3.2007)
( நன்றி : துக்ளக் )
Posted by IdlyVadai at 4/06/2007 02:27:00 PM 12 comments
Labels: அரசியல், பத்திரிக்கை
ஜாதி அரசியல்
1. தமிழக அரசு பணிகள் மற்றும் கல்விநிலையங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியான முடிவுகளை அரசு மேற்கொள்ளும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் நேற்று கருணாநிதி அறிவித்தார்.
( இப்போது தான் புரிகிறது ஏன் ஜெயலலிதா இந்த அரசை 'மைனாரிட்டி அரசு' என்று கூறுகிறார் என்று )
2. பாரதீய ஜனதா கட்சி, தேர்தல் பிரசாரத்தின் போது சி.டி. ஒன்றை வெளியிட்டது. இதை மூத்த தலைவர் லால்ஜி தாண்டன் வெளியிட்டார். அந்த சி.டி.யில் கோத்ரா ரெயில் எரிப்பு, பாபர் மசூதி இடிப்பு போன்ற காட்சிகளும், முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளும், இந்துத்துவா கருத்துகளும் இடம் பெற்று இருந்தன.
( சீடியை வாபஸ் பெறப்பட்டு விட்டதக தகவல். சீடி வாங்கியவர்கள் எல்லோரும் பிளேயரையும் கேட்டார்களோ என்னொவோ )
3. உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்களை சிறுபான்மையினராக கருத முடியாது என்று அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு.
( சட்டத்தின் முன் எல்லோரும் சமம் தானே ? )
Posted by IdlyVadai at 4/06/2007 01:58:00 PM 6 comments
Labels: அரசியல்
சாப்பல் வெளிநடப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாக புதிய பயிற்சியாளர் நியமனம், மூத்த வீரர்கள் நீக்கம் குறித்த விவாதங்களை விவாதிக்க இந்திய கிரிக்கெட் போர்டு அவசர கூட்டம் மும்பையில் தொடங்கியது. கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே பயிற்சியாளர் சாப்பல் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Posted by IdlyVadai at 4/06/2007 12:21:00 PM 0 comments
Labels: விளையாட்டு
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே என்பார்கள். அப்படி என்றால் என்ன ?
Posted by IdlyVadai at 4/06/2007 10:05:00 AM 10 comments
Labels: புதிர்
Thursday, April 05, 2007
தமிழக சட்டசபை - செருப்பு, சஸ்பெண்ட்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்களால் ஆத்திரமடைந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களை நோக்கி ஆவேசமாக பாய்ந்தனர். ஆபாசமாக கூச்சலிட்டபடியும், செருப்பைக் காட்டியும் அவர்கள் கோபமாக பேசியதால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. 4 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மற்றவர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
தமிழக சட்டசபையில், இன்று பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தனது துறை மானியக் கோரிக்கையைத் தாக்கல் செய்து பேசினார். அப்போது, ஜெயலலிதா குறித்து சில கருத்துக்களைக் கூறினார். இதற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பன்னீர் செல்வத்தை நோக்கி கோபமாக பேசிய அவர்கள் பன்னீர் செல்வம் தனது பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோஷமிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பன்னீர் செல்வத்தின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி விடலாம் என சபாநாயகரை கேட்டுக் கொண்டார். இதையடுத்து பன்னீர் செல்வத்தின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
பின்னர் சபையில் சுமூக நிலை திரும்பியது. ஆனால் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அவை மீண்டும் கொந்தளிக்க ஆரம்பித்தது.
வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில், திமுகவுக்கு துரோகம் செய்தவர் எம்.ஜி.ஆர். என்று கூறினார். இதைக் கேட்டதும் அதிமுகவினர் கொதிப்படைந்தனர். அமைச்சர்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகளை நோக்கி பாய்ந்தோடி வந்தனர்.
இதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்களும் அங்கு விரைந்து வந்தனர். இதனால் பெரும் ரசாபாசம் ஏற்படும் நிலை உருவாகியது. அதிமுகவினரை இருக்கைகளுக்கு திரும்புமாறு சபாநாயகர் கோரினார். ஆனால் அவர்கள் கேட்பதாக தெரியவில்லை.
வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் பன்னீர் செல்வத்தை நோக்கி கடுமையாகப் பேசினர். சில எம்.எல்.ஏக்கள் ஆபாச சைகைளைச் செய்தபடி கோபமாக ஏதோ கூறினர்.
அப்போது தி.நகர் அதிமுக எம்.எல்.ஏ கே.பி.கலைராஜன், தான் அணிந்திருந்த செருப்பைத் தூக்கி திமுகவினரை நோக்கி காட்டி வேகமாக வீசுவது போல செய்தார். அவரை அருகில் இருந்த எம்.எல்.ஏக்கள் அமைதிப்படுத்தினர். ஆனால் ஆவேசம் தணியாத கலைராஜன், திமுகவினரை நோக்கி ஆபாசமாக கூச்சலிட்டபடி, ஆபாச சைகையையும் காட்டினார்.
இதைக் கேட்டதும் திமுகவினர் அனைவரும் எழுந்து நின்று ஆவேசமாக பேசினர். இதனால் சபையில் பெரும் அமளியும், கூச்சல், குழப்பமும் நிலவியது. அப்போது சபையில் முதல்வர் கருணாநிதி இல்லை.
அதிமுகவினரை அமைதிப்படுத்த சபாநாயகர் பலமுறை முயன்றும் முடியவில்லை. நிலைமை மோசமாவதை உணர்ந்த சபாநாயகர் அதிமுகவினரை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதிமுகவினர் அனைவரும் வெளியேற்றப்பட்ட பின்னர் அமைச்சர் துரைமுருகன் எழுந்து, உறுப்பினர் கலைராஜனின் செய்கை மிகவும் அநாகரீகமானது. அவையின் மாண்பைக் குலைக்கும் வகையில் அவர் நடந்து கொண்டார். அவரது செய்கையும், பேச்சும் மன்னிக்கப்படக் கூடியது அல்ல.
ஆளுங்கட்சியனரை நோக்கி செருப்பைக் காட்டியுள்ளார். ஆபாசமாக பேசியுள்ளார். இந்த அவையில் உறுப்பினராக இருக்கக் கூட அவருக்குத் தகுதி இல்லை என்பதையே அவரது நடவடிக்கை காட்டியுள்ளது.
அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பின்னர் சபை முன்னவரும், நிதியமைச்சருமான அன்பழகன் எழுந்து இதுதொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அன்பழகன் பேசுகையில், அவையின் மாண்பைக் குறைக்கும் வகையில் நடந்து கொண்ட (முன்னாள் அமைச்சர்கள்) நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் வி.பி. கலைராஜன் ஆகியோரை இந்த அவையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார்.
பின்னர் இதை வழிமொழிந்த சபாநாயகர் ஆவுடையப்பன் அவையின் முடிவுக்கு அதை விட்டார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு அதிமுக எம்.எல்.ஏக்களும் மே 11ம் தேதி வரைக்கும் (அதாவது இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் முடியும் வரைக்கும்) சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.
அதிமுகவினர் மீதான இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்வதாக அறிவித்து விட்டு வெளியேறினர்.
வைகோ கண்டனம்
சட்டசபையில் கருத்து மோதல் எழுந்த போது, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர், எதிர்க்கட்சித் தலைவரை குறித்தும், எம்.ஜி.ஆரை குறித்தும் தகாத வார்த்தைகளைக் கூறியுள்ளனர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை நோக்கி செருப்புகளையும் காட்டியுள்ளனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அ.தி.மு.க., வெளிநடப்பு செய்த பின்னர், நான்கு எம்.எல்.ஏ.,க்களை கூட்டத் தொடர் முடியும் வரையில் நீக்கி இருப்பது ஜனநாயக நெறிகளை நாசப்படுத்துகிற அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. கடந்த ஆண்டு அ.தி.மு.க.,வின் 60 எம்.எல்.ஏ.,க்களையும் சபையில் இருந்து நீக்கியது கொடுமை நிறைந்த அக்கிரமம். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
Posted by IdlyVadai at 4/05/2007 09:22:00 PM 5 comments
Labels: அரசியல்
இந்த வார ஆசிரியர் - பாஸ்டன் பாலா
இந்த வார தமிழ்ரோபோ ஆசிரியர் பாஸ்டன் பாலா. சினிமா, அரசியல் சம்பந்தமாக எழுத கூடாது என்று சொன்னேன். ஆனால் ஆரம்பமே சினிமா..
அவர் எப்படி எழுதுகிறார் என்று நீங்கள் மார்க் போடலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லவும்.
Posted by IdlyVadai at 4/05/2007 10:49:00 AM 1 comments
Labels: அறிவிப்பு
Wednesday, April 04, 2007
இதுக்கு COMMENTS தான்!
அண்மையில் என் நண்பன் வீட்டுக்கு சென்றிருந்தேன். மோசமான காப்பியை குடித்துவிட்டு நல்லா இருக்கு என்று பொய் சொல்லிவிட்டு போகும் போது இந்த போர்டை பார்த்து ரொம்ப டென்ஷனாகிவிட்டேன். திராவிட நாட்டில் இப்படியா என்று என் மனம் வேதனை பட்டது. அவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா ?. நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோம் ? என்று சந்தேகம் வந்துவிட்டது.
எதற்கு இந்த மாதிரி போர்டு வெச்சிருக்கே என்றால், தினமும் பேப்பரில் தெரு நாய்கள் கடித்து நிறைய பாதிப்பு வருகிறது அதனால் என்றான்.
இந்த போர்டை எவர் வேண்டுமானாலும் வீட்டிலும், தேவைபட்டால் வலைப்பதிவிலும் பயன் படுத்திக்கொள்ள முழு அனுமதி உண்டு!
இன்னொரு போர்டு பார்த்தேன், என் ரத்தம் கொதித்தது. அவர்களை லக்கியை கொண்டு அடிக்க வைக்கனும் போல கோபம் வந்தது. அந்த எந்த போர்டு ?
( விடையை பின்னூட்டதில் சொல்லலாம். பின்னூட்டப்பெட்டி திறந்துதான் இருக்கு. )
Posted by IdlyVadai at 4/04/2007 09:55:00 PM 10 comments
Labels: நகைச்சுவை
சாப்பல் ராஜினாமா
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் சாப்பல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை இமெயில் மூலம் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சரத்பவாருக்கு அனுப்பினார். அவர் அந்தக்கடிதத்தில் தனது குடும்பச் சூழ்நிலை மற்றும் சொந்தக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். சாப்பல் கடந்த 22 மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
அடுத்து யார் விலகபோகிறார் ?
Posted by IdlyVadai at 4/04/2007 06:57:00 PM 6 comments
Labels: விளையாட்டு
கலைஞர் பொன்விழா குழு - Jaya Says 'NO'
வழக்கம் போல் ஜெயின் அறிக்கை:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வருகின்ற 10.5.2007 மற்றும் 11.5.2007 ஆகிய தேதிகளில் "சட்டமன்றத்தில் கலைஞர் - பொன் விழா'' என்று கூட்டத் தொடர் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு நடக்க உள்ளது. இதற்காக விழாக் குழு அமைக்கவும் ஏற்பாடாகி, "அ.தி.மு.க. சார்பில் யாரை குழுவில் நியமிக்கிறீர்கள்'' என்று கேட்கக் கூடிய அளவிற்கு துணிச்சல் வந்து இருக்கிறது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரும், தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் ஆகிய என்னை இழிவான வார்த்தைகளில் அசிங்கப்படுத்திய கருணாநிதிக்கு பொன் விழா என்றும், அதற்கான குழுவில் அ.தி.மு.க. இடம் பெற வேண்டும் என்றும் கேட்டால், எப்படி இசைவு அளிப்பார்கள்
இன்று நாடு இருக்கின்ற இருப்பில், இது தேவைதானா? என்பதை மக்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.
முதலாவதாக பொன் விழா என்பது 50 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு கொண்டாடப்படுவது ஆகும். ஆனால், கருணாநிதி சட்டமன்றத்தில் 50 ஆண்டுகள் பணியாற்றவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
2001 முதல் 2006 வரை கருணாநிதி சட்டமன்றத்திற்கே வரவில்லை. பதவி நீக்கத்தை தடுக்க சட்டமன்ற வராண்டாவிலும், எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்கு வருகை பதிவேட்டினை வரவழைத்து கையொப்பம் இட்டும், பதவியை தக்க வைத்துக் கொண்டார்.
இந்த பொன்விழாவில் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொள்ளப் போவதாக பொன்விழா குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
இந்த விழாவில் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொள்ளக்கூடாது என்று அ.தி.மு.க. கேட்டுக் கொள்கிறது.
அப்பாடா இந்த அறிக்கையில் மைனாரிட்டி திமுக என்று சொல்லவில்லை.
Posted by IdlyVadai at 4/04/2007 02:32:00 PM 11 comments
Labels: அரசியல்
சச்சின் மனவருத்தம்
உலக கோப்பை தோல்விக்கு பின்னர் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் முதல்முறையாக பவுண்டரி அடித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், பயிற்சியாளர் கிரேக் சாப்பல் சீனியர் பிளேயர்களை குறைகூறியிருப்பது தனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும், உலக கோப்பை வெல்வதே தங்களது லட்சியமாக இருந்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள தோல்வி தனது 17 வருட அனுபவத்தில் மிகவும் சோகமான தருணமாக அமைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.தான் இந்திய அணிக்காக 17 வருடங்களாக ஆத்மார்த்தமாக விளையாடியுள்ளதாகவும் தனது கிரிக்கெட் பற்றை முதல் முறையாக பயிற்சியாளர் கேள்வி எழுப்பியிருப்பதாகவும் கூறினார். மேலும் மற்றொரு சீனியர் பிளேயர் குறிப்பிடுகையில் . பயிற்சியாளர் சாப்பல் உலக கோப்பையின் போது 3 - 4 நாடகள் யாரிடமும் பேசவில்லை எனவும், எந்த கருத்தையும் ஏற்க மறுத்ததாகவும், இப்படி ஒரு பயிற்சியாளர் இருந்தால் எப்படி சிறப்பாக விளையாட முடியும் என கூறியுள்ளார்.
Posted by IdlyVadai at 4/04/2007 11:34:00 AM 5 comments
Labels: விளையாட்டு
Tuesday, April 03, 2007
சார்லி சாப்பிளின் ஆனார் சேப்பல்
இளம் வீரர்களின் வளர்ச்சியை தடுப்பதுடன், இந்திய சீனியர் வீரர்கள் மாபியா கும்பல் போல் செயல்படுகிறார்கள் என்று பயிற்சியாளர் சேப்பல் கூறியதாக, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் மோசமான தோல்வி குறித்து வருகிற 6-ந்தேதி மற்றும் 7-ந்தேதி மும்பையில் நடைபெறும் இந்திய கிரிக்கெட் போர்டு செயற்குழு கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பலின் அறிக்கை மிக முக்கியமாக கருதப்படுகிறது. அவர் 6-ந்தேதி அன்று தனது அறிக்கையை தாக்கல் செய்கிறார். சேப்பல் தனது அறிக்கையில் பல விஷயங்களை குறிப்பிட திட்டமிட்டு இருக்கிறார். அவரது அறிக்கை எவ்வாறு இருக்கும் நாள்தோறும் பல்வேறு விதமான யூகங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில் சேப்பலின் நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாக இப்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில்
* இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதற்கு சீனியர் வீரர்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.
* அவர்களது வளர்ச்சிக்கு தடையாக உள்ளனர். சீனியர் வீரர்கள் ஒரு `மாபியா' கும்பல் போல் செயல்படுகிறார்கள்.
* கேப்டன் டிராவிட்டுக்கும் அவர்கள் நெருக்கடி அளிக்கிறார்கள்
நீங்க என்ன நினைக்கிறீங்க சைடில ஓட்டு
Posted by IdlyVadai at 4/03/2007 09:51:00 AM 3 comments
Labels: விளையாட்டு
Monday, April 02, 2007
ஒரே மேடையில் ராமதாஸ், வைகோ
ஒரு நாள் பழைய நியூஸ். நேற்று மதுரையில் நடைபெற்ற பெரியாறு அணை மீட்பு குழுவின் கூட்டத்தில் ஒரே மேடையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வுடன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டது,திமுக தலைமையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது குறித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் திமுக தலைவரிடம் வலியுறுத்தி யிருப்பதாக கூறப்படுகிறது.
பிரச்சனையில் ஒன்று சேர்ந்த தலைவர்களை இட்லிவடை பாராட்டுகிறது. தமிழக அரசியலில் இது ஒரு நல்ல முன் உதாரணமாக இருக்கும் இன்று நம்பலாம்.
மதுரையில் பெரியாறு அணை மீட்பு குழுவினர் நடத்திய கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் ஒரே மேடையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலில் இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொள்வதாக இல்லை என்றும், திடீரென்று அந்த முடிவை மாற்றி கொண்டு அவரே இதில் கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. உள்ளூர் கூட்டணி கட்சிகளுக்கு கூட அவர் இது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருபவரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான வைகோ பங்கேற்கும் மேடையில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டது திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மூத்த தலைவர்கள் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த பிறகு இது பற்றி விவாதித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று முதல்வர், அவர்களை சமாதானப் படுத்தியதாக கூறப்படுகிறது.
ராமதாஸ் பேச்சுஎன்னமோ நடக்குது, என்னமோ நடக்கப்போகிறது(வைகோவும், ராமதாசும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டி) என்று நீங்கள் நினைக்கலாம். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பழ.நெடுமாறன் என்னை அழைத்த போது நான் கட்டாயம் வருகிறேன் என்று கூறினேன். அப்போது நான் யார், யார்? மாநாட்டுக்கு வருகிறார்கள் என்று கேட்கவில்லை. அவரும் அதுபற்றி என்னிடம் எதுவும் கூறவில்லை. ராமதாஸ் யார்? என்று கேட்டால் முதலில் ஒரு விவசாயி.
அடுத்து ஒரு மருத்துவர். தற்போது நான் அந்த தொழிலை செய்யவில்லை. 3-வதாக பார்த்தால் ஒரு சமுதாய தொண்டன். 4-வது தான் அரசியல்வாதி. தற்போது இந்த மாநாட்டுக்கு விவசாயிகளின் உற்ற தோழனாக வந்துள்ளேன். அரசியலை தூரத்தில் வைத்து விட்டு இங்கு வந்துள்ளேன். பழ.நெடுமாறன் நம்மையெல்லாம் அணி சேர்த்து வருகிறார். வேறு அணிக்கு அல்ல. அப்படிப்பட்ட விஷயத்தை எல்லாம் அவர் செய்யமாட்டார். அவர் அப்படிப்பட்டவர் அல்ல.
பழ.நெடுமாறன் நம்மையெல்லாம் போராட்ட அணிக்கு ஒன்று சேர்த்து வருகிறார். அவர் தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக குரல் கொடுத்து வருகிற மாவீரன். எனவே இந்த நிகழ்ச்சிக்கு (வைகோவும், ராமதாசும் ஒன்றாக கலந்து கொண்டதை சுட்டிக்காட்டி) எந்த வண்ணமும் பூச வேண்டாம்.
முல்லை-பெரியாறு அணையில் கடந்த 26 ஆண்டுகளாக 136 அடி தண்ணீரே தேக்கப்படுகிறது. இதன் மூலம் தற்போது வரை நமக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு முல்லை, பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்தலாம் என்று உத்தரவிட்ட போது, கேரள அரசு அதை ஏற்க மறுத்து 3 சட்டங்களை இயற்றியது. கேரள அரசு 3 முறை அந்த உத்தரவு தொடர்பாக மனுக்கள் தாக்கல் செய்து சுப்ரீம் கோர்ட்டை அணுகிய போதும், தமிழ்நாடு தூங்கி கொண்டு இருந்தது என்பது தான் வேதனைக்குரிய விஷயம். முல்லை-பெரியாறு அணை பிரச்சினையை பொறுத்தமட்டும் கேரளாவில் ஒரே குரலில் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பல குரல்களில் பேசுகிறார்கள்.
போனது, போனதாக இருக்கட்டும். இனிமேல் இந்த பிரச்சினையில் கட்சிக்கு அப்பாற்பட்டு எல்லா தலைவர்களும் ஒன்றாக சேருவோம்.
நாளையே நல்ல ஒரு முடிவை எடுப்போம். முதல்-அமைச்சர் கருணாநிதியும் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். காவிரி, பாலாறு போன்றவற்றை இழக்காமல் இருக்க போராடுவோம். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்புகள். கடந்த 60 ஆண்டுகளாக விவசாயிகளின் முதுகெலும்புகள் முறிக்கப்பட்டது. அது தான் வரலாறு. விவசாயிகள் வாழ்வதா? சாவதா? என்று கேட்கிற நிலை மாற வேண்டும். இதற்காக உங்கள் பின்னால் (பழ.நெடுமாறனை பார்த்து) நாங்கள் வருவோம் என்று உறுதி அளிக்கிறேன்.
வைகோ பேச்சுஎத்தனையோ பிரச்சினைகளில் மத்திய அரசை மிரட்டிப் பணிய வைத்துள்ள முதல்வர் கருணாநிதி, ஏன் விவசாயிகளுக்காக மத்திய அரசை மிரட்டக் கூடாது. எதற்காக அவர் தயங்குகிறார்.
தமிழகத்தின் எதிர்காலம் இருண்டு போய் விடுமோ என்ற நிலையில் இந்த மாநாடு நடக்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்தால் அதை இல்லாமல் செய்ய ஒரு சட்டத்தைக் ெகாண்டு வருகிறது ேகரள அரசு.
நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கூறி பிரதமரை நான்கு முைற சந்தித்துப் பேசுகிறார் கேரள முதல்வர் அச்சுதானந்தன். இது போதாதென்று புதிய அணை கட்டவும் அனுமதி கேட்டுள்ளார். புதிய அணை கட்ட அனுமதித்தால், நாட்டின் ஒருமைப்பாடு உடைவதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழர்கள் நாட்டின் விடுதலைக்காக ரத்தம் சிந்தியவர்கள். ஆனால் கேரள மக்களுக்கு இதுவரை ஒரு பிரச்சினயையும் கொடுத்ததில்லை. ஆனால் புதிய அணை கட்ட ேகரள அரசு முயற்சித்தால், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு பால், காய்கறி, செங்கல் என ஒன்றும் போக முடியாது. அத்தனையும் நிறுத்தப்படும். அதை அனுமதிக்க மாட்ேடாம்.
இடுக்கி அணை உடையப் போகிறது என்று கூறி மக்களைப் பயமுறுத்த 5 லட்சம் சிடிக்களைத தயாரித்து புழக்கத்தில் விட்டார்கள். இதை விட தேச விரோத காரியம் என்ன இருக்க முடியும்
பிகு
சற்று தாமதமாக வந்த மேடைக்கு வந்த வைகோ, வி.ஐ.பி.,க்களை பார்த்து கும்பிட்டார். பதிலுக்கு அனைவரும் எழுந்து நின்று கும்பிட்டனர். ராமதாஸை பார்த்தும் கும்பிடு போட்டார் வைகோ. ஆனால், ராமதாஸ் எழுந்திருக்கவில்லை. அவர் அருகில் உட்காரும்படி வைகோவை பார்த்து பழ. நெடுமாறன் "சைகை' செய்தார். ஆனால், ராமதாஸ் அருகில் உட்காராமல் இரண்டு இருக்கைக்கு அடுத்து காலியாக இருந்த இருக்கையில் உட்கார்ந்தார்.
Posted by IdlyVadai at 4/02/2007 06:06:00 PM 2 comments
Labels: அரசியல்
அபிஷேக் - ஐஸ்க்காக சூடான பாலில் குளித்தார்
அபிஷேக் - ஐஸ்வர்யா ஜோடியின் திருமண வாழ்க்கை சந்தோசமாக அமைவதற்காக உ.பி.,யில் ஒருவர் சூடான பாலில் குளியல் போட்டு கடவுளிடம் வேண்டினார்.
வாரணாசி சிவ்பூர் பகுதியை சேர்ந்தவர் பானி பகத் (50). இவரது முன்னோர்கள் சப்தசாகர் என்ற இடத்தில் உள்ள துர்கா கோவிலில் சாமியாடி வந்தனர். சாமியாடுபவர் உடலில் துர்கா தேவி தங்கி இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, ஆண்டுதோறும் நடக்கும் பூஜையின்போது சாமியாடுபவர் மீது கொதிக்கும் பாலை அபிஷேகம் செய்தால் துர்கா தேவிக்கே அபிஷேகம் செய்வதாகவும் அதன் மூலமாக நினைத்த காரியம் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை. அதன்படி துர்கா கோவிலில் தற்போது சாமியாடி வரும் பகத் மீது சூடான பாலை ஊற்றி மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோவில் விழாவில் அபிஷேக் - ஐஸ் தம்பதி வளமுடன் வாழ்வதற்காக நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது, துர்கா தேவியின் அருளை பெற்று சாமியாடிக் கொண்டிருந்த பகத் மீது சூடான பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். சிறப்பு பூஜையுடன் மேள தாளங்கள் முழங்க நெய் மற்றும் பாலாடை போன்றவையும் பகத் மீது ஊற்றி துர்கா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இது குறித்து பகத் கூறுகையில், ""துர்கா தேவியின் அருளை பெறுவதற்காக எனது முன்னோர்கள் காலம் முதலே கடந்த அறுநூறு ஆண்டுகளாக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இதற்கு "குவால்-பால் பூஜை' என்று பெயர். இந்த பூஜை மூலமாக சொத்து, குழந்தைகள் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான வசதிகள் மட்டுமன்றி கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையும் கிடைக்கும்,'' என்றார்.
பாலிவுட் நடிகர் என்பதால் பால் அபிஷேகமா அல்லது அபிஷேக் என்பதால் அபிஷேகமா ?
Posted by IdlyVadai at 4/02/2007 08:32:00 AM 1 comments
Labels: சினிமா
Sunday, April 01, 2007
யாரும் அறியாத ராமதாஸின் மறுபக்கம்
மிகுந்த யோசனைக்கு பிறகே இந்த பதிவை போடுகிறேன். இது பதிவினால் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்,
இட்லிவடை
மேலும் செய்தி, படம் பார்க்க இங்கே செல்லவும்.
Posted by IdlyVadai at 4/01/2007 08:26:00 PM 14 comments
Labels: அரசியல்