பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 12, 2007

டாப் 5 பெண் பதிவாளர்கள் - முடிவுகள் !

மகளிர் தினம் ஸ்பெஷலாக பெண் பதிவாளர்கள் டாப் 5 யார் என்று ஒரு வாக்குபதிவு வைத்திருந்தேன்.

* ஆண்களை காட்டிலும் பெண் பதிவாளர்களே தைரியமாக தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தார்கள். ( இப்போது தான் தெரிகிறது, ஏன் அரசியல் கட்சிகள் தாய்குலத்தை டார்கெட் செய்கிறார்கள் என்று ).

* நிறைய ஆண் சிங்கங்கள், ஏதுக்கு இந்த மாதிரி ஒரு வீண் விளையாட்டு, ஆண் பெண் வித்தியாசம் இருக்க கூடாது, பெண் பதிவாளர்களுக்குள் கோஷ்டி பூசல் உண்டு பண்ணுகிறீர்கள்(இவர்கள் என்ன காங்கிரஸ் காட்சியை விடவா மோசம்), உங்கள் மேல் நம்பிக்கை இல்லை ... என்று சொல்லி ஜகா வாங்கினார்கள். சிலர் என்னை கேவலமாக திட்டினார்கள். எனக்கு அது பழக்கம் ஆகிவிட்டதால் பாதிப்பு இல்லை :-)

* ஓட்டு போட்ட எல்லா பெண் பதிவாளர்களும் தங்களுக்கு ஓட்டு போட்டுக்கொள்ளவில்லை. தனக்கு தானே ஓட்டு போட்டுக்கொள்ளுவதை அவர்கள் கேவலமாக நினைத்தார்கள் என்று நினைக்கிறேன்.

* இந்த முடிவை தெரிந்து கொள்ளுவதில் நிறைய பேர் ஆர்வம் காட்டினார்கள். கடந்த இரண்டு நாட்களாக என்னிடம் கூகிள் டாக்கில், ஈ-மெயில் மூலம் தொடர்பு கொண்டவர்கள் எல்லோரும் முடிவையே கேட்டார்கள். இதில் ஒரு பிரபல எழுத்தாளரும், ஒரு பிரபல வலைப்பதிவாளரும் அடங்கும்.

* இட்லிவடையை ஆண்களை விட பெண்களே அதிகம் விரும்படிக்கிறார்கள் :-)

* சிலர் குசும்பாக இட்லிவடைக்கு ஓட்டு போட்டிருந்தார்கள். ( அந்த ஓட்டு வழக்கம் போல் செல்லாத ஓட்டு :-).

முடிவு ... கிழே..
1. துளசி கோபால் 20% வாக்குகள் வாங்கி முதல் இடத்தில் இருக்கிறார். ஓட்டு போட்ட பெரும்பாலோர் துளசிக்கு ஓட்டு போட்டிருந்தார்கள். மிகவும் பாப்புலர் பெண் பதிவாளர்.

2. அடுத்த இடத்தில் இருப்பவர் பொன்ஸ் 14% வாக்குகள் வாங்கியுள்ளார்.

3. மூன்றாம் இடத்தில் மூன்று பெண் பதிவாளர்கள் செல்வநாயகி, மதி, உஷா 11% வாக்குகள் வாங்கியுள்ளார்கள்.

4. 9% ஓட்டுகள் வாங்கி நான்காம் இடத்தில் கவிதா இருக்கிறார்.

ஐந்தாம் இடத்தில் நான்கு பேர் இருக்கிறார்கள் கீதா சாம்பசிவம், வல்லி சிம்ஹன், முத்துலெட்சுமி, பத்மா அரவிந்த். 6 % ஓட்டுகள் வாங்கியுள்ளார்கள்.

வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் இட்லிவடையின் வாழ்த்துக்கள்.

28 Comments:

Anonymous said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

நாகை சிவா said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நம் மக்கள் அனைவரும் இதில் இருக்கின்றார்கள். மிக்க மகிழ்ச்சி.

//மகளிர் தினம் ஸ்பெஷலாக பெண் பதிவாளர்கள் டாப் 5 யார் என்று ஒரு வாக்குபதிவு வைத்திருந்தேன்.//

நல்லா வைத்தீர் ஐயா, புது பட்டங்களை நாங்கள் வாங்கும் அளவுக்கு. நல்லா இரும்.

மணியன் said...

டாப் 5 பெண்பதிவாளர்களாக வந்த பத்துபேருக்கும் வாழ்த்துக்கள் !!

Geetha Sambasivam said...

ம்ம்ம், இப்போத் தான் நீங்க வைச்ச போட்டி பற்றியும், முடிவு பற்றியும் சிவா(நாகை) மூலமாய்த் தெரிந்து கொண்டேன். என்னையும் தேர்ந்து எடுத்துக் கெளரவித்ததற்கு நன்றி. மற்றபடி மற்ற போட்டியாளரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படித் தகுதி எல்லாம் எனக்கு இல்லை என்பது எனக்கே நல்லாத் தெரியும். இது என்னோட எழுத்துக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரம். ரொம்பவே ஊக்கம் அளிக்கிற அங்கீகாரம். மீண்டும் நன்றிகள். உங்களோட அரசியல் பதிவுகளை விரும்பிப் படிப்பேன். பதிவுலகிற்கு வரும் முன்னேயே.

Anonymous said...

பரிசு என்னாங்க ? நெய் இட்லியா ? மினி இட்லியா ? காஞ்சிபுரம் இட்லியா ?

IdlyVadai said...

எல்லோருக்கும் இலவச வீடு, அடுப்பு, அரிசி, நிலம்... எல்லாம் தரலாம் என்று தான் ஆசை ஆனால் நான் திமுகவில் இல்லையே !

Anonymous said...

அதெல்லாம் கச்சியில இருக்குறவுங்களுக்குத்தான். பொதுச் சொத்த சும்மா குடுக்க முடுயுமா. கச்சி பணி செஞ்சா ப்ரீ கௌஸ், அடுப்பு, நெலம் எல்லா உண்டு.

நீங்க மேட்டருக்கு வாங்கப்பூ. கெலிச்சவுங்களுக்கு ஒண்ணும் கெடயாதா. ஹும்...

சீனு said...

//ஆனால் நான் திமுகவில் இல்லையே !//

குத்தலு? (அதுதானே இட்லிவடை ஸ்பெஷலிட்டியே...)

Anonymous said...

கவிதை மிகவும் தட்டையாக வந்திருக்கிறது. பாலா என் பதிவில் வந்துமட்டும்தான் என்னைத் திட்டுவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் எந்தப் பதிவுக்குப் போனாலும் என்னுடைய நினைவாகவே இருக்கிறார்.

நாகு (Nagu) said...

வெற்றி பெற்ற அனைவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எனது டாப் சாய்ஸ் ஜெயித்ததில் ஒரு அற்ப சந்தோஷம். இட்லிவடை ஓட்டு செல்லாது என்றாலும், எவ்வளவு ஓட்டு விழுந்தது என்று தெரிவிக்கவும்.

Hariharan # 03985177737685368452 said...

//எல்லோருக்கும் இலவச வீடு, அடுப்பு, அரிசி, நிலம்... எல்லாம் தரலாம் என்று தான் ஆசை ஆனால் நான் திமுகவில் இல்லையே !//

இலவச வீடு அடுப்பு அரிசி நிலம் எல்லாம் பெற வேண்டும் என்றால் அவர்கள் திமுக வில் இருக்கவேண்டியது மிக முக்கியம் ஐயா!

இட்லிவடை கண்ணை சாம்பார் சட்னி மறைத்துவிட்டதோ?

ramachandranusha(உஷா) said...

நன்றி நன்றி. .
ஆமா அது யாரூ- // இதில் ஒரு பிரபல எழுத்தாளரும், ஒரு பிரபல வலைப்பதிவாளரும் அடங்கும் //
இன்னும் கொஞ்சம் க்ளூ பிளீஸ்

நாமக்கல் சிபி said...

//நன்றி நன்றி. .
ஆமா அது யாரூ- // இதில் ஒரு பிரபல எழுத்தாளரும், ஒரு பிரபல வலைப்பதிவாளரும் அடங்கும் //
இன்னும் கொஞ்சம் க்ளூ பிளீஸ்//

பிரபல வலைப்பதிவர் - ராமச்சந்திரன்உஷா!

:))

நாமக்கல் சிபி said...

பிரபல எழுத்தாளர் - ரமணி சந்திரன்

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அது யார்??
நன்றி இட்லிவடை.
நான் எனக்கு ஓட்டு போடவில்லைன்னால்
அது நேர்மையா இருக்காதுன்னு தான்.
வலைப் பதிவுக்குவந்து ஒரு வ்அருடம் ஆச்சு. இப்போது என் பெயெர் இட்லிவடையில் வருவது பற்றி ரொம்ப சந்தோஷம்.

வல்லிசிம்ஹன் said...

who is this famous writer and blogger. curiouser and curiouser.
excuse me for writing in English.
as usual fonts thakaraaru.

ஜி said...

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்...

துளசி கோபால் said...

தனி மடலில் வாழ்த்துச் சொன்ன தோழிகள் எதுக்காக வாழ்த்தறாங்கன்னு
முதலில் புரியலைங்க. அப்புறம் அவுங்க கோடி காட்டுனப்பிறகு இங்கே வந்து
பார்த்தா...கதை இப்படிப்போகுது.

ஒவ்வொரு பதிவரும்( ஆண் பதிவர்கள் பெண் பதிவர்கள் அனைவரும்) ஒவ்வொரு
ஸ்டைலில் எழுதுறாங்க. அதனால் அவுங்கவுங்க ஸ்டைலில் அவுங்கவுங்கதான் டாப்.

எதோ ஒரு அன்பாலே எனக்கு 20% ஓட்டு விழுந்துருச்சுன்னு நினைக்கிறேன்.
பாக்கி 80% என்ன ஆச்சு? :-))))

வெற்றி பெற்ற அனைவருக்கும், இனி வெற்றியடையப்போகும் அனைவருக்கும் மனமார்ந்த
வாழ்த்து(க்)கள்.

வெற்றிக்குக் காரணமா இருந்த ஓட்டுப்போட்ட மகா ஜனங்கள்(பதிவர்கள்) அனைவருக்கும்
மனமார்ந்த நன்றி.

களம் அமைத்த இட்லி வடையாருக்கு நன்றிகள்.

எப்படியோ எனக்கு வடை கிடை(பிடி)ச்சிருக்கு:-)

IdlyVadai said...

//அது நேர்மையா இருக்காதுன்னு தான்.
வலைப் பதிவுக்குவந்து ஒரு வ்அருடம் ஆச்சு. இப்போது என் பெயெர் இட்லிவடையில் வருவது பற்றி ரொம்ப சந்தோஷம்.//

இட்லிவடையில் பெயர் வருவதில் சந்தோஷப்பட்ட முதல் ஆசாமி நீங்கதான். கலி காலம்.

நாமக்கல் - சைகிள் கேப்பில ... நடத்துங்க

//இன்னும் கொஞ்சம் க்ளூ பிளீஸ// நோ அது தெரிந்தால் இட்லிவடையின் இமேஜ் மேலும் அதிகமாகும். அதனால் நான் சொல்ல போவதில்லை :-)

//உங்களோட அரசியல் பதிவுகளை விரும்பிப் படிப்பேன். பதிவுலகிற்கு வரும் முன்னேயே.//
ரொம்ப நன்றி மேடம். இனிமேல் அரசியல் பதிவுகளை குறைத்துக்கொள்கிறேன் :-)

Anonymous said...

இந்த வாக்கெடுப்பு தரத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதெனில் இதன் நேர்மை பற்றி எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பதிவுகளைப் படித்துப்பார்த்தேன். ம்... பெருமூச்சு விடவே முடிகிறது.

IdlyVadai said...

//முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பதிவுகளைப் படித்துப்பார்த்தேன். ம்... பெருமூச்சு விடவே முடிகிறது.//

உங்களுக்கு காரம் பிடிக்கும் நிறைய பேருக்கு இனிப்பு பிடிக்கும். நீங்க உங்க தொகுதி MLAவை எப்படி தேர்ந்தெடுப்பீர்கள் ?

ramachandranusha(உஷா) said...

நாமக்கல்லாரே, நீங்களும் சொல்றீங்க, சிறகடித்துப் பறந்து, பெரிய இடத்து மேட்டரில் என் கைவண்ணம் அதிகம்னு எனக்கு பெரிய போஸ்ட் எல்லாம் கொடுத்ததைப் பார்த்தால் ஒரு நொடி சந்தோஷமாத்தான் இருக்கு, ஆனா இதுக்கெல்லாம் எனக்கு தகுதியில்லைன்னு உண்மை சொல்லுதே

மிதக்கும்வெளி said...

/கவிதை மிகவும் தட்டையாக வந்திருக்கிறது. பாலா என் பதிவில் வந்துமட்டும்தான் என்னைத் திட்டுவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் எந்தப் பதிவுக்குப் போனாலும் என்னுடைய நினைவாகவே இருக்கிறார்.கவிதை மிகவும் தட்டையாக வந்திருக்கிறது. பாலா என் பதிவில் வந்துமட்டும்தான் என்னைத் திட்டுவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் எந்தப் பதிவுக்குப் போனாலும் என்னுடைய நினைவாகவே இருக்கிறார்./

இந்தப்பின்னூட்டம் கோவிகண்ணனின் பதிவில் நான் போட்டது. ஏதோ மயக்கத்தில் (?) உங்கள் பதிவிலும் போட்டுவிட்டேன் போல. ஆமாம், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்பதிவாளர்களில் பாதிபேர் பார்ப்பன பெண்களாக இருப்பதன் ரகசியத்தைத் தெரிந்துகொள்ளலாமா?

ஆவி அண்ணாச்சி said...

//டாப் 5 பெண் பதிவாளர்கள் - முடிவுகள் ! //

ஐ! 5 பேரு புதுசா எங்க ஊருக்கு வந்திருக்காங்களா?

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள் 1: வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் 2: டாப் 5 எனச் சொல்லி 10 பேர் பேரை போட்டு உங்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட உங்களுக்கு.

பிரார்த்தனை 1: இதன் மூலம் பெண் வலைப்பதிவர்கள் இடையே ஒற்றும் குலையாதிருக்க

பிரார்த்தனை 2: அடுத்த முறை நீங்கள் நடத்தும் தேர்விலாவது எனக்கு புத்திசாலிப் பட்டம் கிடைக்காமலிருப்பதாக.

வேண்டுகோள் 1: வெற்றி பெற்றவர்கள் விபரம் வந்தாச்சு. வேறு சில சுவாரசியங்கள் இருந்திருக்கும். அதையும் ஒரு பதிவாப் போடுங்க சார்.

வேண்டுகோள் 2: இந்த மாதிரி ஆண்களுக்கு ஒரு தேர்தல் வெச்சு நம்ம மாதிரி ஆளுங்க மானத்தை வாங்காதீங்க சாமி. ;-)

சந்தேகம் 1: இந்த % விவகாரம் புரியலையே. வந்தவர்கள் அனைவரும் 5 வாக்குகள் போட்டு இருக்காங்க. போட்ட மொத்த வாக்குகளின் % அல்லது வாக்காளர்களில் இவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட %?

சந்தேகம் 2: வாக்கு எண்ணிக்கையை போட்டாத்தான் என்னவாம்?

IdlyVadai said...

//வாழ்த்துக்கள் 2: டாப் 5 எனச் சொல்லி 10 பேர் பேரை போட்டு உங்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட உங்களுக்கு.//

பல அரசியல் கட்சிகள் இதை பண்ணும் போது, அரசியல் வலைப்பதிவு செய்தால் என்ன ?


//பிரார்த்தனை 1: இதன் மூலம் பெண் வலைப்பதிவர்கள் இடையே ஒற்றும் குலையாதிருக்க//

ஒன்றும் ஆகாது, பயப்படாதீர்கள். இப்போது எல்லாம் ஆண்களைவிட பெண்களே நன்றாக எழுதுகிறார்கள்.

//பிரார்த்தனை 2: அடுத்த முறை நீங்கள் நடத்தும் தேர்விலாவது எனக்கு புத்திசாலிப் பட்டம் கிடைக்காமலிருப்பதாக.//

நீர் பேசாமல் இருந்தால் நல்லது.

//வேண்டுகோள் 1: வெற்றி பெற்றவர்கள் விபரம் வந்தாச்சு. வேறு சில சுவாரசியங்கள் இருந்திருக்கும். அதையும் ஒரு பதிவாப் போடுங்க சார்.//

சுவாரசியங்கள் பல ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

//வேண்டுகோள் 2: இந்த மாதிரி ஆண்களுக்கு ஒரு தேர்தல் வெச்சு நம்ம மாதிரி ஆளுங்க மானத்தை வாங்காதீங்க சாமி. ;-)//

சரி பாஸ்

//சந்தேகம் 1: இந்த % விவகாரம் புரியலையே. வந்தவர்கள் அனைவரும் 5 வாக்குகள் போட்டு இருக்காங்க. போட்ட மொத்த வாக்குகளின் % அல்லது வாக்காளர்களில் இவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட %?//

இதை கார்பரேஷன் தேர்தலில் கேட்கவேண்டிய கேள்வி

//சந்தேகம் 2: வாக்கு எண்ணிக்கையை போட்டாத்தான் என்னவாம்?//

வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

உண்மைத்தமிழன் said...

போட்டியாளர்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள். ஆனால் இட்லிவடை அவர்களே.. வெற்றி பெற்றவர்களின் வலைத்தள முகவரிகளையும் அப்படியே உடன் அளித்திருந்தால் என்னைப் போன்ற புதிய பதிவாளர்களுக்கு பெரும் உதவியாக இருந்திருக்கும் அல்லவா? உடனே தாமதிக்காமல் அதைச் செய்யுங்கள். அப்புறம்.. அது யாருண்ணே குட்டையைக் குளப்புற மாதிரி.. கற்பூரம் விக்கிற இடத்துல கருவாடு விக்கிற மாதிரி வலைத்தளத்துக்கு சாதிபேதம் பார்த்து பேசுறது? "மிதக்கும்வெளி"யாமே.. முதல்ல இந்த மாதிரி வரும் செய்திகளை பின்னூட்டத்தில் இட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் முதலில் மனிதர்கள். பின்பு நாட்டால் இந்தியர்கள். கடைசியாக மொழியால் தமிழர்கள். அவ்வளவே.. நமக்குள் சாதி, மத, இன மோதல்கள் வேண்டாம். அது நமக்குத் தேவவையும் இல்லை. முதலில் அந்த "மிதக்கும்வெளி"யை நம் களத்தை விட்டு தள்ளி வையுங்கள்.
நன்றி
தமிழ்சரண்

Anonymous said...

Dear Friend,
Just need you help regarding the blogspot. I hope you could help me to fix my problem. Recently i created ggk.blogspot.com but due to for some reason, i could not find my blog site in any of search engines excecpt google. Pls advice me. Thank a lot. Vazhga Tamilagam Vazhrga Tamil Mohzi