பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 30, 2007

ஏன் விஜயகாந்த்

பலர் நான் விஜயகாந்தை சப்போர்ட் செய்வது பிடிப்பதில்லை. தேர்தல் முடிவுகள் போது, பலர் விஜயகாந்த் என்ன ஆனார் என்று தான் என்னை கேட்டார்கள். அவர் விருதாசலத்தில் ஜெயித்த போது பலர் சந்தோஷப்பட்டார்கள்.

ஜெயலலிதா, கலைஞருக்கு தற்போது சிம்மசொப்பனமாகா இருக்கிறார். கலைஞர், ஜெயின் கீழ்தரமான அறிக்கை ஃபுள்டாஸ் பந்துகளை சிக்ஸர் அடிக்கிறார். எம்.ஜி.ஆர்க்கு பிறகு அரசியலில் குதித்து இவ்வளவு சீக்கிரம் யாரும் பாப்புலர் ஆகவில்லை. ராமதாஸ் விஜயகாந்த் பற்றி எதுவும் சொல்ல மறுக்கிறார். ( ரஜினி என்றால் மருத்துவர் புகுந்து விளையாடுவார் என்பது வேறு விஷயம் ).

சிவாஜிகணேசன் கட்சி ஆரம்பித்தார். சினிமாவில் சம்பாதித்த புகழையும், செல் வத்தையும் பறிகொடுத்தது தான் மிச்சம்.

சிப்பா, குப்பா, கும்மா என்று அடுக்கு மொழி வசனம் பேசி இன்று வீராச்சாமி, மற்றும் அரட்டை அரங்கம் வரை வந்து நிற்க்கிறார். விஜய டி.ராஜேந்தர்.

குட்டிகதை சொல்லி கட்சி ஆரம்பித்தார் பாக்கியராஜ். அவர் அரசியல் வாழ்வும் ஒரு குட்டி கதையாக ஆகிவிட்டது.

புலி வருகிறது புலி வருகிறது என்று எல்லா தமிழ் மக்களும் இவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர் பார்க்க வைத்தார் ரஜினி. எல்லோருக்கும் அல்வா கொடுத்து பயந்துகொண்டு ஷிரேயாவுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் நம்ம கேப்டன் விஜயகாந்த் துணிந்து கட்சி ஆரம்பித்து திமுகவை மைனாரிட்டி அரசாக்கினார். அதிமுகவை எதிர்கட்சி ஆக்கினார். பாமகாவை ஓரங்கட்டினார். இவர் இன்று எல்லா தமிழக அரசியல் தலைவர்களைவிட ஒரு படி மேலே இருக்கிறார். பல கழகங்கள் இவரை பாத்து கழிந்துகொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை.

Read More...

கேப்டன் அடிக்கும் சிக்ஸர்

அர்ச்சனையைச் சந்திக்காத ஆண்டவனுமில்லை... பிரச்னையைச் சந்திக்காத அரசியல்வாதியும் இல்லை...’ என்றாலும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தற்போது சந்திக்கும் பிரச்னை கொஞ்சம் வித்தியாசமானது. யாரும் எதிர்பாராத நேரத்தில், விஜயகாந்தை ‘குடிகாரர்’ என்று விமர்சித்தார் ஜெயலலிதா. அரசியல்வாதிகள் மீது இதுமாதிரியான தனிப்பட்ட விமர்சனங்கள் தேவைதானா? என்ற விவாதங்கள் முற்றுப்பெறாத நிலையில், ஜெ. பாணியிலேயே கலைஞரும் அவரை விமர்சனம் செய்திருக்கிறார். பொதுவாகவே வார்த்தைகளை நிதானித்து வீசும் கலைஞர், ‘குடி உள்ளே போனது... மயக்கத்தில் இருக்கிறார்...’ என்றெல்லாம் அதிரடியாக விஜயகாந்த் மீது வார்த்தைக் கணைகளை வீசியிருக்கிறார். இந்த நிலையில், விஜயகாந்தை சந்தித்துப் பேசினோம்...
( குமுதம் ரிப்போட்டர் பேட்டி )


தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘பெரிதாகச் சாதித்துவிட்டார்கள்... சாதிக்கப் போகிறார்கள் என்று சொல்லுமளவுக்கு இதில் ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன். 56 சதவிகிதம் பேர் விவசாயத்தை நம்பி இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் மிகப் பெரும்பான்மையானோர் சிறு, குறு விவசாயிகள். இவர்களின் நலனைக் காக்க, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர, கடன் சுமை குறைய உருப்படியான எந்தத் திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. கூட்டுறவுக்கடன் தள்ளுபடிக்காக பல ஆயிரம் கோடி செலவானதாகச் சொல்கிறார்கள். உண்மையில் இதில் பலனடைந்தது பெரும்பாலும் தி.மு.க.வினர்தான். இந்த லட்சணத்தில் தொடர்ந்து கடன் வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். உண்மை விவசாயிகள் இதனால் எந்தளவுக்கு நியாயமாகப் பயனடைவார்கள் என்று தெரியவில்லை. அதற்கான செயல் திட்டத்தையும் சொல்லவில்லை. விவசாயத்திற்கு எந்த வகையிலும் முன்னுரிமை தரவில்லை.

வறுமையை ஒழிப்போம், விலைவாசியைக் குறைப்போம் என்று வெறும் வார்த்தைகளில் சொன்னால் போதுமா? செயல்திட்டம் வேண்டாமா? இந்த விஷயத்தில் இதுவரை இந்த அரசு என்ன சாதித்திருக்கிறது? அறிவிக்கப்பட்டுள்ள மற்ற திட்டங்களும்கூட, ஓட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லப்பட்டவைதான். ஐந்தாண்டுகளுக்கு அதை இழுத்துக்கொண்டே போய், அடுத்து வரும் தேர்தலுக்குப் பயன்படுத்துவார்கள்.

பட்ஜெட்டைப் படித்துப் பார்த்தால் பாதிக்குமேல் பழைய விஷயங்கள்தான் இருக்கின்றன. புதிய திட்டங்கள் ஏதுமில்லை. மொத்தத்தில் மணமில்லாத மலர், மலர்ந்தென்ன பயன்? இது வெறும் காகிதப்பூ என்றுதான் நினைக்கிறேன். சொல்லியிருக்கிற ஒன்றிரண்டு விஷயங்களாவது ஒழுங்காகச் செயல்படுகிறதா என்று பொறுத்துப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்.’’

‘ஏழைகளின் கஷ்டம் அறிந்து, அவர்களின் துயர் துடைக்கும் வகையில் அமைந்த முத்தான பட்ஜெட் இது’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சொல்லியிருக்கின்றனவே?

‘‘மனசாட்சி உள்ளவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு வேறு வழியில்லை. தினசரி அவர்கள் சல்யூட் அடித்தாக வேண்டும். அதனால்தான் இப்படிப் பேசுகிறார்கள். விமான நிலைய விரிவாக்கம், துணை நகரம் அமைப்பது போன்ற விஷயங்களில், இன்று ஒன்றைச் சொல்கிறார்கள். மறுநாள், கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்திற்குப் பயந்தும் பணிந்தும் மாற்றிச் சொல்லி மக்களைக் குழப்புகிறார்கள். கேட்டால் கூட்டணி தர்மம் என்கிறார்கள். இதற்குத்தான் நான் முன்பே சொன்னேன்... ‘உங்களை வாழ்த்தப் பலர் இருக்கிறார்கள். ஆனால், குறைகளைச் சொல்ல எங்களைப் போல சிலர்தான் இருக்கிறார்கள். எங்களைக் கேளுங்கள். எங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள்’ என்றேன். இலவசத் திட்டங்களில் நடந்த, நடந்துகொண்டிருக்கிற ஊழல்கள் பற்றி தி.மு.க._அ.தி.மு.க. இரண்டும் மாறி மாறிக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்களே... இதுபற்றி எந்தக் கூட்டணிக் கட்சியும் இதுவரை வாய் திறக்கவில்லையே ஏன்? ஏனெனில், அவர்களால் பேச முடியாது. மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசி, மக்களுக்காகக் குரல் கொடுத்தால், ஆட்சி அதிகாரத்தின் மிச்ச, மீதிகளை இவர்களால் அனுபவிக்க முடியாதே...? அந்த அடிப்படையில்தான் பட்ஜெட் பற்றிய அவர்களின் விமர்சனத்தைப் பார்க்கிறேன்.’’

அண்ணா தொடங்கிய கட்சியில் குடிபுகுந்தவர் என்று கலைஞர் மீது விமர்சனம் வைத்தீர்கள். ஏன் இந்தத் திடீர்த் தாக்குதல்...?

‘‘திட்டமிட்டதும் அல்ல... திடீர்த் தாக்குதலும் அல்ல. இதைச் சொல்லக் காரணமே கலைஞர்தான். என்னை விமர்சிக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே, ‘புதுசா கட்சி ஆரம்பித்தவர்... புது தலைவர்...’ என்று என்னையும் எங்கள் கட்சியையும் தொடர்ந்து கிண்டலடிக்கிறார் கலைஞர். இவர் தனியாக கட்சியைத் தொடங்கியிருந்தால், எங்களைப் போன்றவர்களின் மனப்போராட்டம் தெரியும். கட்சியை நடத்துவதன் கஷ்டம் புரியும். பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்து தி.மு.க.வைத் தொடங்கியபோது, அண்ணா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்? தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து வந்து புதிதாகக் கட்சி தொடங்கியபோது, எவ்வளவு மனப் போராட்டத்தைச் சந்தித்திருப்பார்?

இது மாதிரியான அனுபவங்களே இல்லாமல், தி.மு.க.வின் தலைமைப் பதவிக்கு வந்தவர்தான் கலைஞர். உழைப்பையும், உடைமையையும், ஏன் உயிரையும் பணயம் வைத்து தி.மு.க.வை ஆரம்பிக்க, வளர்க்க அன்று பல தலைவர்கள் பாடுபட்டனர். அவர்கள் எல்லாம் மறக்கடிக்கப்பட்டுவிட்டனர். அவர்களின் வாரிசுகளுக்குக் கூட இன்று தி.மு.க.வில் இடமில்லை. ‘கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்த கதை’தான் இன்றைய தி.மு.க. மற்றும் அதன் தலைவரின் வரலாறு.

இப்படி, ஒருவர் தொடங்கிய கட்சியில், சொகுசாக அமர்ந்துகொண்டு, எங்களைப் போன்ற புதிய அரசியல் கட்சிகளின் கஷ்டங்களை, போராட்டங்களைக் கிண்டலடித்ததால்தான் நான் அப்படி விமர்சனம் செய்தேன்.’’

‘குடி’ உள்ளே புகுந்ததால்தான் நீங்கள் அப்படி விமர்சனம் செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே, கலைஞர்?

‘‘அனுபவ ரீதியாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். அவருக்கு அந்தப் பழக்கம் இருந்திருக்கலாம். அதனால்கூட இப்படிச் சொல்லியிருப்பார். ஆனால், நான் அவரிடம் நாகரிகமான அரசியலை எதிர்பார்த்தேன். அதுதான் நான் செய்த தவறு. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் கஞைரைப் பற்றியும் நிறையச் சொல்லமுடியும். 12 வயதில் இருந்து அரசியலைக் கவனித்து வருகிறேன். அவரைப் பற்றி நிறைய விஷயங்களைக் கோடிட்டுக் காட்ட முடியும். நான் அதை விரும்பவில்லை. நான் விரும்பும் அரசியலும் அதுவல்ல. மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும்போது, இதுமாதிரியான _ அநாகரிகமான _ உள்நோக்கம் கொண்ட விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். சில பேர் அறைக்குள்ளே குடிப்பார்கள். வீட்டிற்குள் சாமி கும்பிடுவார்கள். ஆனால், மக்கள் மத்தியில் உத்தமர், பகுத்தறிவுவாதி என்று கபட நாடகம் ஆடுவார்கள். இத்தகையோரின் தொடர்பு கனவிலும் கொடுமையைத் தரும் என்று வள்ளுவர் சொன்னதை நினைவுபடுத்துகிறேன். தமிழ் நாட்டு மக்களுக்குத் தெரியும். யார், யார்... எப்படி என்று..!’’

‘குடி’ விஷயத்தை மையப்படுத்தியே ஜெயலலிதா, கலைஞர் என இருவருமே உங்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார்களே...?

‘‘அரசியலில் நானும், எனது கட்சியும் வளர்ந்திருக்கிறோம் என்று அர்த்தம். அதனால்தான் பொறாமைத் தீயில் வெந்து, இப்படி தரம் தாழ்ந்த விமர்சனத்தை அள்ளி வீசுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகை செய்ய முயற்சிக்காமல், இதுமாதிரியான விமர்சனங்களைச் செய்வது, பிள்ளை பெற முடியாத வயிற்றெரிச்சலில் உலக்கையை எடுத்து வயிற்றில் குத்திக் கொண்டது போல்தான் இருக்கிறது. என் பின்னால் மக்கள் அணிவகுப்பது பிடிக்காமல், அதைச் சகிக்க முடியாமல் இப்படி வீண் விமர்சனம் செய்கிறார்கள்.

மற்றபடி நான் என்ன இவர்களின் சொத்தைக் கேட்டேனா? இவர்களிடம் பதவி கேட்டேனா? ஏன் இந்தக் கோபம்? என்னை வளராத குழந்தை என்கிறீர்கள்... அப்புறம் ஏன் என்னைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்?

பன்றியைப் பார்த்து யானை ஒதுங்கிய கதையை, ஜெயலலிதாவுக்காக கலைஞர் சொன்னார். அதே கதையை, இந்த இருவருக்காகவும் நான் சொல்லி ஒதுங்குவதைத் தவிர, வேறு வழியில்லை.’’

அரசியலில் பச்சைக் குழந்தையான உங்களுக்கு வரலாறு தெரியாது என்று சொல்லியிருக்கிறாரே கலைஞர்...?

‘‘படித்துப் பார்த்தும் வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம். நெப்போலியனைப் பற்றிப் பேச வேண்டுமானால், அவரது படையில் ஒரு வீரனாக இருந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவரது வரலாற்றைப் படித்தாலே போதும். நானும் கலைஞரின் வரலாற்றைப் படித்தும் இருக்கிறேன். பார்த்தும் இருக்கிறேன்.

17.9.1949 அன்று காலை தி.மு.க. என்ற கட்சியைத் தொடங்குவது பற்றி கே.கே. நீலமேகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலைஞரைக் காணோம். அன்று மாலை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் நடந்த கூட்டத்திலும் கலைஞர் முழங்கக் காணோம். தி.மு.க.வின் ஐம்பெரும் தலைவர்கள் என்ற பெருமைக்கும், தகுதிக்கும் உடைய பட்டியலில் கலைஞரின் பெயர் இல்லை.

பச்சைக் குழந்தைகளுக்கு வரலாறு தெரியாதுதான். ஆனால், வளர்ந்த பிறகு கடந்த கால வரலாற்றில் பங்கு பெற முடியாவிட்டாலும், அதைப் பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் நான் தெரிந்து கொண்டது மேலே சொன்ன விவரங்கள். இன்னும் தொடர்ந்து வரலாற்றைப் படிப்பேன். மக்களுக்கு எடுத்துச் சொல்வேன்.’’

நடிப்பில் களைத்துப் போனவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்றும் கலைஞர் சொல்லியிருக்கிறாரே...?

‘‘நடிப்புக்கு வயது கிடையாது. களைப்பும் கிடையாது. அரசியலுக்கு வயது கிடையாது என்று எப்படி அவர்கள் சொல்கிறார்களோ, அதே மாதிரிதான் நடிப்பும். இங்கே களைப்புக்கு இடமில்லை. சரி... இவர்களெல்லாம் களைத்துப் போய், பிழைக்க வேறு வழியில்லாமல்தான் அரசியலுக்கு வந்தார்களா?

தன்னை ஆதரித்தால் ஒரு மாதிரி, எதிர்த்தால் வேறு மாதிரி விமர்சனம் செய்பவர் கலைஞர். நான் கட்சி தொடங்கும் முன்பு என்னை ‘தம்பி விஜி’ என்றார். இப்போது நான் வில்லனாகிவிட்டேனா? ஒருத்தன் கட்சி ஆரம்பித்து மக்களிடம் வருகிறான் என்றால், அவன் என்ன சொல்கிறான்? அவன் கொள்கை என்ன? நோக்கம் என்ன? என்றுதான் பார்க்க வேண்டும். அவனுடைய தொழிலைப் பார்க்கக் கூடாது.

இது ஒருபுறம் இருக்கட்டும். தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு கட்சியும் மாறி மாறிச் செய்த ஊழலால் சீரழிந்து கிடக்கும் தமிழகத்தைச் சீரமைக்கத்தான் நான் கட்சி ஆரம்பித்தேன். இறுதிவரை என் இலக்கை நோக்கி முன்னேறுவேன். இதுமாதிரியான விமர்சனங்கள் என்னை எந்த வகையிலும் பாதிக்காது.’’

முதலமைச்சர் ஆவது சாதாரண விஷயம் அல்ல... ஆனால், இந்த ஆசையுடன் சில திடீர்த் தலைவர்கள் கிளம்பியிருக்கிறார்கள் என்றும் விமர்ச்சிக்கிறார்களே...?

‘‘இதைச் சொல்லும் கலைஞர் எப்படி முதலமைச்சரானார்? இரண்டு முறை முதல்வர் பதவியை அனுபவித்து விட்டுக் கீழிறங்கிய பின்பு, எம்.ஜி.ஆர். மறையும் வரை மீண்டும் இவரால் முதல்வராக முடியவில்லையே! காரணம், மக்கள் இவரை ஏற்கவில்லை. அதன் பின்பு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அதைப் பயன்படுத்தி மீண்டும் முதல்வரானார். இதற்குப் பிறகு கூட்டணியைப் பயன்படுத்தித்தான் இவரால் முதல்வராக முடிந்தது.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால்... மக்கள் நினைத்தால், மக்கள் முடிவெடுத்துவிட்டால் யார் வேண்டுமானாலும் முதல்வராக ஆகலாம். அதை யாராலும் தடுக்க முடியாது. மற்ற விஷயத்துக்கெல்லாம், ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று சொல்பவருக்கு, இது மட்டும் புரியாமல் போனது எப்படி?’’

அறுபது ஆண்டுக் கால பொதுவாழ்க்கை கொண்டவர், சட்டமன்றத்தில் பொன்விழா கண்டவர், மூத்த அரசியல் தலைவர் எனப் பல தகுதிகள் கொண்ட கலைஞரை நீங்கள் கடுமையாக விமர்சிப்பது ஏன்?

‘‘என்னைப் பற்றி அவர் செய்யும் தேவையற்ற, உள்நோக்கங் கொண்ட விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்கிறேனே தவிர, நானாக, முன்வந்து எதையும் சொல்வதில்லை. எனக்கென்று ஒரு கட்சி இருக்கிறது. எனவே, அதன் மீது விமர்சனம் செய்யும்போது நான் பதில் சொல்ல வேண்டியதும் கட்டாயமாகிறது. இந்த இடத்தில் நான் எந்தப் பதிலும் சொல்லாமல் ஊமையாக இருக்க வேண்டுமா? அப்படிச் செய்தால் அதையும் விமர்சிப்பார்கள். என் விமர்சனங்கள் அரசியல் ரீதியாகத்தான் உள்ளன. தனிப்பட்ட முறையில் கலைஞரை மட்டுமல்ல... யாரையுமே நான் விமர்சிப்பதில்லை. ஆக, ஒவ்வொரு முறையும் என்னை விமர்சனம் செய்யும் சூழலுக்குள் தள்ளுபவர் கலைஞர்தான்.

அது இருக்கட்டும்... அறுபது ஆண்டு பொது வாழ்க்கை கண்டவர்... சட்டமன்றத்தில் பொன்விழா கண்டவர்... எல்லாம் சரிதான். இத்தனை ஆண்டுகளில் இந்த மாநில வளர்ச்சிக்கு இவர் என்ன செய்தார்? இத்தனை ஆண்டுகளில் யார் வளர்ந்தார்கள்? எந்தக் குடும்பம் வளர்ந்தது? என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும். அதை சிலர் மறைத்து மக்களை ஏமாற்ற முனையும்போது, என்னைப் போன்றவர்கள் அதைச் சுட்டிக் காட்டுகிறோம். அதைக்கூட செய்யக்கூடாது. கை, கால்களைக் கட்டிக் கொண்டு சும்மாவே இருக்க வேண்டும்... அல்லது இவர்களைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்... என்ன நியாயம் இது...?

விமர்சனங்களைத் தாங்கமுடியாமல் இப்படி கோபப்படுகிறார் கலைஞர். எதையும் தாங்கும் இதயத்தை அண்ணா தந்திருப்பதாகப் பலமுறை இவரே சொல்லியிருக்கிறாரே.... ஏன் இந்த நியாயமான விமர்சனங்களை மட்டும் இவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை?’’

காவிரிப் பிரச்னையில் இந்த அரசின் செயல்பாடு எப்படி?

‘‘எல்லோருமே தமிழகத்தின் நலனைக் கோட்டை விட்டு விட்டார்கள். தங்கள் சுயநலத்தைத்தான் பார்க்கிறார்களே தவிர, தமிழ்நாட்டு மக்களின் நலத்தை யாரும் பார்க்கவில்லை. கோதுமை பேர ஊழல் மற்றும் பூச்சி மருந்து ஊழல் ஆகியவற்றிலிருந்து தப்பிக்கவே கச்சத்தீவை தாரை வார்த்தார்கள் என்று எம்.ஜி.ஆர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். தங்களுடைய சுயநலத்திற்காகச் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்யாமல் விட்ட சில தலைவர்களின் பின்னணியும் எனக்குத் தெரியும். அதையெல்லாம் செய்துவிட்டு இப்போது, இறுதித் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது என்கிறார்கள். கர்நாடகத்தின் பதினொரு முதல்வரைப் பார்த்துவிட்டதாகச் சொல்கிறார் கலைஞர். அதனால் பயன் என்ன? எதைச் சாதித்திருக்கிறார்? இடைக்காலத் தீர்ப்பையாவது அமல்படுத்த முடிந்ததா? எல்லாம் வாய்ப் பேச்சுத்தான், செயலில் ஒன்றையும் காணோம். இப் பிரச்னை தீரவேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. மாறாக, இதை நீட்டித்துக்கொண்டே போய்... ஓட்டு அரசியல் நடத்தத்தான் விரும்புகிறார்கள். இவர்களுக்கெல்லாம் உண்மையிலேயே அக்கறை இருந்தால், நதிகளை தேசிய மயமாக்கட்டும், பார்க்கலாம்.’’

பொதுவாக இந்த தி.மு.க. ஆட்சி எப்படி இருக்கிறது?

‘‘எல்லாமே அரைகுறைதான். குளறுபடிகள்தான். எந்தத் திட்டமும் முழுமையாக, நியாயமாகச் செயல்படுத்தப்படவில்லை. என்னை மாதிரி ஆட்களை புது தலைவர் என்கிறீர்கள்... ஏன்... நீங்கள் பழைய தலைவர்தானே? அனுபவஸ்தர்தானே? பிறகு ஏன் இத்தனை தடுமாற்றம்... தவறுகள்? காரணம், இவர்கள் மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கூட்டணிக் கட்சிகளைச் சமாளிப்பதற்கும், தாஜா செய்வதற்கும்தான் இவர்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள். இப்படி ஆட்சி நடத்தினால், அது எப்படி இருக்கும்? நீங்கள் மக்களிடமே கேளுங்கள். நிஜத்தை அவர்கள் தோலுரித்துக் காட்டுவார்கள்!’’

மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் என்ன திட்டத்தோடு களமிறங்கப் போகிறீர்கள்?

‘‘மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் கெளரவமான வாக்குகளைப் பெற்றோம். இந்தத் தேர்தலிலும், வழக்கம் போல் மக்களை நம்பி நம்பிக்கையோடு களமிறங்குவோம். நாட்டில் நடப்பதைக் கவனித்து வரும் மக்கள், அதனடிப்படையில் எங்களுக்கு வெற்றியை அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது!’’ என்று உற்சாகமாகச் சொல்லி முடித்தார் விஜயகாந்த

Read More...

பந்த் - யார் முட்டாள்

எங்கடா ரொம்ப நாளா தமிழ்நாட்டில் இது இல்லையே என்று பார்த்தோம். வந்துவிட்டது பந்த்.

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் ஏகோபித்த எதிர்ப்பு உணர்வினை காட்டும் வகையில் நாளை (மார்ச் 31ம் தேதி ) காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரையில் மாநிலம் முழுவதிலும் பொது வேலை நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்று கலைஞர் அறிவித்திருக்கிறார். ( காமெடிக்கு ஒரு அளவே இல்லை )

தேர்வு எழுதும் மாணவர்கள் என்ன செய்வார்கள் ? அவர்களுக்கு தேர்வு இருக்கும் அதற்கு விதிவிலக்கு ஆனால் அவர்கள் எப்படி தேர்வு எழுத போவார்கள் ? நடந்தா ?(பொது வேலைநிறுத்தம் காரணமாக சனிக்கிழமை பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது) அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் கலைஞர் என்ன செய்வார் ? ஏதாவது ஒரு அசம்பாவிதத்தால் ஒரு வருடம் நாசமாக போனால் இவர்களுக்கு என்ன கவலை ? அவர்களுக்கு ஒரு இலவச கலர் டிவி தந்துவிடுவார்.

ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தை நிறுத்துவது குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும் என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார். ஏன் இலக்கா கேட்டு மிரட்டியது போல் இப்போது அவர்கள் மிரட்டவேண்டியது தானே ?

சுப்ரீம் கோர்ட் எதனால் நிராகரித்தது என்று பார்க்க வேண்டும்
"இட ஒதுக்கீடு வழங்க இதர பிற்படுத்த பட்டோர் எண்ணிக்கையை கண்டறிய 1931ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 75 ஆண்டு பழமையான கணக்கெடுப்பை உறுதியானதாகக் கருத முடியாது. இட ஒதுக்கீடு என்பது நிரந்தரமாகவும், பின்தங்கிய நிலைமையை நீண்ட காலத்திற்கு தொடரச் செய்வதாகவும் இருக்கக் கூடாது. சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக யார் யார் பின் தங்கி உள்ளனர் என்பதை மத்திய அரசால் உறுதி செய்ய முடியாதவரை இந்த சட்டத்தை அமல் படுத்த முடியாது. எனவே இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க கோர்ட் தீர்மானிக்கிறது. அதே நேரத்தில் எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை உறுதியாக கண்டறியும் வரை, இவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு தொடரலாம்"


75 ஆண்டு பழமையான கணக்கெடுப்பு அதாவது கலைஞர் 8 வயதாக இருந்த போது எடுத்த கணக்கெடுப்பு !.


சுப்ரீம் கோர்ட் சொல்வதில் என்ன தவறு ? ஆனால் இது சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள திடீர் பின்னடைவு என்று சொல்லுவதில் சிரிப்பு தான் வருகிறது. பந்த் நடத்துபவர்கள் முட்டாளா அல்லது இந்த அறிவு ஜீவிகளை தேர்ந்தெடுத்த நாமா ?

Read More...

Thursday, March 29, 2007

கிரிக்கெட் தோல்வி - துக்ளக் தலையங்கம்

நாட்டை கவ்விய சோகம் !

இந்த மாதிரி சோகம், இந்நாட்டைக் கவ்வியதில்லை; சோகத்திற்குக் காரணமானவர்கள் மீது இந்த மாதிரி கோபம், இந்நாட்டில் தோன்றியது இல்லை. காஷ்மீர் உயிரிழப்புகள் தராத சோகத்தையும், அதற்குக் காரணமான தீவிரவாதிகள் மீது வராத கோபமும்; முன்னாள் பிரதமர் ஒருவர் கொலை செய்யப்பட்ட போது ஏற்படாத சோகமும், அந்தக் கொலைக்குக் காரணமான விடுதலைப் புலிகள் மீது வராத கோபமும்; பாராளுமன்றம் தாக்கப்பட்டு பலர் உயிரிழந்தபோது ஏற்படாத சோகமும், அதற்குக் காரணமான பயங்கரவாதிகள் மீது வராத கோபமும்; பல
பயங்கரச் செயல்கள், மோசடிகள், ஊழல்கள், தேர்தல் தில்லுமுல்லுகள் போன்றவை ஏற்படுத்தாத மனச் சோர்வும், அவற்றிற்குக் காரணமானவர்கள் மீது வராத கோபமும்
– இப்போது நம் நாட்டினருக்கு வந்திருக்கிறது.


உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்திலிருந்து இந்திய அணி, முதல் சுற்றிலேயே வெளியேறுகிற நிலையை அடைந்து விட்டது. இதனால், சோகத்தில் மூழ்கி எழுந்து, கோபத்தில் நாடு நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கிறது. (கூடவே, ஒரு அல்ப ஆசை. பங்களாதேஷை, பெர்முடா தோற்கடித்தால்... ஆஹா! அடுத்த சுற்று!)

பங்களாதேஷிடம் தோற்ற போதே, துன்பக் கடலில் விழுந்து விட்ட நம் நாடு, "இலங்கையிடம் ஜெயித்து, மேல் சுற்றிற்குப் போகலாம் என்ற ஆறுதலைப் பெற்று, அதுவும் பலிக்காது போனபோது, ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்து விட்டது. தோனியின் வீட்டை உடைப்பதில் ஆரம்பித்து, ஆட்டக்காரர்களின் உருவப் பொம்மைகளைக் கொளுத்துவதில் தொடர்ந்த கோபம் – இப்போது "காரி உமிழ்! கொண்டு வா சாப்பலின் தலையை! வீசி கடலில் எறி டெண்டுல்கரை! ட்ராவிடை நாடு கடத்து!...' என்று மக்கள் பேசுகிற அளவிற்குப் போய்விட்டது.

அதுவும் டெலிவிஷன் சானல்கள், மக்களின் வக்ரங்களைக் காட்டுவதையே முதல் பணியாக கொண்டுள்ளன எனும்போது – ரசிகர்களும், ரசிகைகளும் வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாவற்றையும் தியாகம் செய்து, டெலிவிஷன் காமிராக்கள்
முன்பாக பேசுகிற பேச்சும், போடுகிற கூச்சலும், அசல் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஆட்டக்காரர்களின் பெயர்களிட்டு, உருவங்களைச் செய்து, அவற்றை தரையில் கிடத்தி, அவற்றை பிரேதங்களாக நினைத்து, மார்பில் அடித்துக் கொள்வதும்; தலையை மோதிக் கொள்வதும்; கண்ணீர் விட்டு கதறுவதும்... அடடா! ஓ அடடா! அற்புதக் காட்சிகள்!

அப்படி என்ன நடந்து விட்டது? நடப்பது ஆட்டமே தவிர, யுத்தம் அல்ல. (யுத்தத்தில் தோற்றால் கூட நாம் இவ்வளவு பாதிக்கப்பட மாட்டோம் என்பது வேறு விஷயம்). அதுவும் உலகிலேயே நாம்தான் முதல் அணி மாதிரியும், நாம் தோற்றது பெரிய அதிர்ச்சி மாதிரியும் நடந்து கொள்வது அபத்தம் அல்லவா?

டெலிவிஷன் சானல்களும், பத்திரிகைகளும், சில "நிபுணர்'களும், கோப்பையைப் பெறுகிற வாய்ப்பு நமக்குப் பெரிதாகவே இருக்கிறது – என்று அனுதினமும் பறைசாற்றியது உண்மையே. இது போதாதென்று நடிகர், நடிகைகளும், பிரபலங்களும் பேட்டி காணப்பட்டு, "இந்தியா கோப்பையை வெல்லும்' என்று உறுதி அளித்தார்கள். ஏனென்றால், அப்படிச் சொல்வது, தேச பக்தி.

அதுவுமின்றி கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றியும், வெவ்வேறு அணிகளின் திறமைகள் மற்றும் பலவீனங்கள் பற்றியும் ஒன்றும் தெரியாதவர்களுக்குக் கவலையே இல்லையே! அவர்கள் எதுவும் பேசலாம்தானே! அதனால் இந்தியா கோப்பையை நிச்சயம் வெல்லும் – என்ற ஆரூடம், அனுதினமும் ஒளிபரப்பாகியது; பிரசுரமாகியது.

இதோடு விட்டார்களா நம்மை? பங்களாதேஷிற்கு எதிராகத் தோற்றவுடன், தைரியம் சொல்லி, "இன்னமும் இலங்கையை தோற்கடித்து மேல் சுற்றுப் போட்டிக்குச் சென்று, கோப்பையை வெல்வோம்' என்று நமக்கு ஆறுதல் கூறினார்கள் "நிபுணர்கள்'. அவர்கள் மட்டும் சொன்னால், அது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காதே! அதனால் ஆட்டக்காரர்களின் அம்மாமார்கள் டெலிவிஷனில் கருத்து தெரிவித்தார்கள். "கவலையே வேண்டாம். நமது அணி, இந்திய அணி. அது நிச்சயம் கோப்பையை கைப்பற்றும். ஆகையால் எல்லோரும் இதை நம்பி, வேண்டிக் கொண்டு, ஆதரவு அளிக்க வேண்டும்' என்று ட்ராவிடம்மா, ஷேவாக்கம்மா... போன்ற அம்மாக்களின் அப்பீல் வேறு வந்தது. அசல் கோமாளிக் கூத்து!

ஏன் இவ்வளவு கூத்துக்களை டெலிவிஷன் சானல்களும், பத்திரிகைகளும்
அரங்கேற்றுகின்றன? வியாபாரம், பணம். கிரிக்கெட் பைத்தியக்காரர்களின் வெறியைத் தூண்டி விட்டால்தான், அவர்கள் நடுராத்திரிக்குப் பிறகும் விழித்திருந்து, ஆட்டத்தைப் பார்ப்பார்கள். அப்போதுதான் விளம்பரங்கள் வரும். அதில்தான் பணம்.

இது சூதாட்டக்காரர்களுக்கும் வசதியாக இருக்கிறது. பெட்டிங் அமோகமாக நடக்கிறது. அதில் எந்த எந்த பெரிய தலைக்கு பங்கு இருக்கிறதோ, தெரியவில்லை! "எத்தனை ஆட்டக்காரர்கள் பணம் வாங்கி, மோசமாக ஆடுகிறார்களோ?' என்ற
சந்தேகத்திற்கும் இடம் இல்லாமல் போகவில்லை.

இதனால் எல்லாம், ஆட்டக்காரர்கள் போடுகிற ஆட்டம் அநாகரிகமாக இருக்கிறது. ஒரு ஸென்சுரி போட்டாலோ, விக்கெட்டை எடுத்தாலோ இவர்கள் செய்கிற ஆர்ப்பாட்டம் அசிங்கமாக இருக்கிறது. இவர்களுடைய முறைப்புகளும், அம்பயரைப் பார்த்து இவர்கள் எழுப்புகிற கூச்சல்களும், பொதுவாகவே இவர்கள் மைதானத்தில் செய்கிற அநாகரிகங்களும், "அக்ரஷன்' என்று பாராட்டப்படுகிறது. நமது ஆட்டக்காரர்களின் அகங்காரம் தலைக்கேறுகிறது. பணம் வேறு கொட்டுகிறது. கேட்பானேன்? தங்களைத் தவிர, மற்ற எல்லாமே இவர்களுக்கு துச்சமாகி விட்டன.

இது எப்படிப்பட்ட மனப்பான்மையை வளர்க்கும்? சில மாதங்களுக்கு முன், நமது வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு, வேகப்பந்து வீச்சு பற்றிய சில நுணுக்கங்களை விளக்கிச் சொல்ல, ஒரு முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வேகப் பந்து வீச்சாளர்
முயன்றார். நமது ஆட்டக்காரர் அதை அலட்சியமாக உதறித் தள்ளினார்! ஏனென்றால் இவர்களுக்குத் தெரியாதது எதுவுமில்லையே! இந்த மனப்பான்மை நமது ஆட்டக்காரர்களைப் பற்றியிருக்கிறது என்பது இந்திய அணியின் பலவீனங்களில் ஒன்று. ஆனால் தோல்விக்குக் காரணம் இதுவல்ல.

தென் ஆஃப்ரிக்காவில், சில மாதங்களுக்கு முன்பாக இந்திய அணி தோல்விகளை
சந்தித்தபோது, ஒரு வாசகர் அது பற்றி கேள்வி கேட்டிருந்தார். 13.12.2006 தேதியிட்ட "துக்ளக்' இதழில் அவருக்கு அளிக்கப்பட்ட பதிலிலிருந்து சில பகுதிகளை இப்போது பார்ப்பது பொருத்தமாக இருக்கும்:

கிரிக்கெட் நமது நாட்டில் ஒரு போதைப் பொருள். பார்த்தாலே பலருக்கு புத்தி பேதலித்து விடுகிறது. அதனால் நிதானம் தவறி ஏதேதோ பேசுகிறார்கள்.

மிகவும் பலம் வாய்ந்ததாகக் கருதப்படுகிற கட்சிகளும் தோற்பதுண்டு; பலவீனமானது என்று பெயரெடுத்துள்ள கட்சிகளும் வெல்வது உண்டு. இது சகஜம். அதனால் இப்போது தோற்றதால் மட்டும், இந்திய அணி மட்டமான கட்சியாகி விடவில்லை. ஏற்கெனவே உள்ள குறைபாடுகளை, சில வெற்றிகள் மூடி மறைத்திருந்தன; இப்போது அந்தத் திரை விலகி விட்டது. அவ்வளவுதான்.

நமது அணியில், உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்று சொல்லக் கூடிய ஆட்டக்காரர்கள் சுமார் நாலைந்து பேர் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் சுமார் ரகம்தான். வேகப் பந்து வீச்சு நம்மிடம் ஒரு சம்பிரதாயத்துக்காக இருக்கிற விஷயம்.
உலகத்தரம் வாய்ந்தவர்களின் பட்டியலில் இடம் பெறக்கூடிய டெண்டுல்கருக்கு, ஆட்டத்தில் முனை மழுங்கியிருக்கிறது. (அப்படி இருந்தாலும் அவரைத் தவிர்க்கக் கூடிய நிலையில் நமது அணி இல்லை.) கங்குலி, டெண்டுல்கர் இருவருமே
முன்பிருந்த வல்லமை படைத்தவர்களாக இப்போது திகழவில்லை; ஆனால் இவர்களுக்குப் பதிலாக அணியில் இடம் பெறுகிற சிலரை விட, இன்றும் கூட இவர்களே மேல்தான் என்ற என் கருத்தை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

ஒரு வெற்றி பெற்றால், உடனே "நாம்தான் உலக சாம்பியன்கள்' என்று கொண்டாடுவதும், ஒரு தோல்வி என்றால், "நாம் மஹா மட்டம்' என்று நொந்து கொள்வதும், சிறுபிள்ளைத்தனமான அணுகுமுறைதான்.

இன்று கூட, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூஸிலாந்து போன்ற அணிகளை விட, நம்மிடம் உள்ள அணி மேலானதுதான். ஆஸ்திரேலியா, தென்னாஃப்ரிக்கா போன்ற அணிகளை விட நாம் மிகவும் பலம் குறைந்தவர்களே. இதை நினைவில் வைத்துக் கொண்டால், நிதானமிழந்த விமர்சனங்கள் பிறக்காது.

இப்போது நிதானம் எந்த அளவிற்கு இழக்கப்பட்டிருக்கிறது – என்பதைப் பார்க்கும்போதுதான் வேடிக்கையாக இருக்கிறது. கோச்தான் தோல்விக்குக் காரணம் என்று சேப்பலை அனைவரும் தூற்றத் தொடங்கி விட்டார்கள். இது பிதற்றல். உள்ள சரக்கை, சேப்பல் கெடுத்து விட்ட மாதிரி பேசுவது, கோச்சிங் பணியை புரிந்து கொள்ளாமல் பேசுகிற பேச்சு.

...அடிப்படைக் கோளாறு ஒன்றிருக்கிறது. கிரிக்கெட் ஆட்டக்காரர்களை, தெய்வத்திற்கு அடுத்த ஸ்தானத்தில் இந்த நாடு வைத்து விட்டது. அதனால்தான், இந்த ஏமாற்றம், இந்த நிதானமின்மை எல்லாம் ஏற்படுகிறது.

நான் முன்பே சொன்ன மாதிரி, அவர்கள் இந்திய கிரிக்கெட் போர்டின் ஆட்டக்காரர்கள். அதற்கு மேல் ஒரு அந்தஸ்தை அவர்களுக்கு அளித்துவிட்டு, அவர்களுடைய தோல்வியை, நாட்டின் தோல்வியாக ஸ்வீகரித்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.

இதே அணி, சில மாட்ச்களை ஜெயித்து விட்டால், அப்போது நமக்கு போதை மீண்டும் தலைக்கேறிவிடும். அந்த தமாஷையும் பார்க்கத்தான் போகிறோம்.

அப்போது தெரிவிக்கப்பட்ட கருத்து, இப்போதும் பொருத்தமானதே. இப்போது பங்களாதேஷிடமும், இலங்கையிடமும் தோற்று விட்டதால், இந்திய அணி மட்டமான அணியாகி விடவில்லை. இவற்றில் ஒன்றில் வென்று, மேல் ஆட்டத்திற்குப்
போயிருந்தால், இந்திய அணி சிறந்த அணியாகியிருக்கப் போவதுமில்லை. கிரிக்கெட்டில் முன்னணி வகிக்கிற அணிகளிலேயே சற்றேறக்குறைய நமது தரம், நடுத்தரம்.

சில சமயங்களில் எதிர் அணிகளின் தவறுகள் காரணமாகவும், இந்திய ஆட்டக்காரர்கள் சிலருக்கு ஆட்டம் பிடித்ததாலும், நமது அணி வெற்றிகளைக் கண்டது; இனியும் காணும். அதற்கு மேல் எதிர்பார்க்கக் கூடிய அளவில், தரமுள்ள ஆட்டக்காரர்கள் இப்போது இங்கு இல்லை. இனி வரலாம். அல்லது இதையும் விட மோசமாகவும் போகலாம். ஏனென்றால் ஆடுவது ஆட்டம்; அது இயந்திரமல்ல; ஒரே மாதிரி சுழல்வதற்கு. அப்படிப்பட்ட ஒரு ஆட்டத்தில், இந்திய அணி என்ற பெயர் கொண்ட, கிரிக்கெட் சங்கத்தின் அணி தோற்றதற்காக, நாட்டையே எழவு வீடாக்கி, புலம்புவதும், ஒப்பாரி வைப்பதும், மூக்கை சிந்துவதும், கதறி அழுவதும்
– நம்முடைய முதிர்ச்சியின்மையைத்தான் காட்டும்.
நன்றி: துக்ளக்

Read More...

சட்டசபையில் இலங்கை பிரச்சினை

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை பேசப்பட்டது. அதன் விவரம் கீழே...வீர.இளவரசன் (ம.தி.மு.க.): இலங்கையில் தினமும் தமிழர்கள் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். அங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு என தினமும் சம்பவங்கள் நடக்கின்றன. அங்கிருந்து வரும் அகதிகளை பாதுகாக்கும் உணர்வு தமிழ்நாட்டில் உள்ள அனை வருக்கும் உண்டு. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் வன்முறைக்கும் இடம் இல்லை என்பது தான் எங்கள் கட்சியின் கொள்கை.

தொட்டியம் ராஜசேகரன் (காங்கிரஸ்):- இலங்கை பிரச்சினையில் விடுதலைப்புலிகளை ஆதரித்ததன் விளைவாக நமது மண்ணில் ராஜீவ்காந்தியை இழந்து இருக்கிறோம். சமீபத்தில் மிகப்பெரிய பாது காப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

இலங்கை தமிழர்களை ஆதரிப்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் தீவிரவாதத்துக்கு இங்கு இடம் இல்லை. இந்த மாமன்றத்தில் தீவிரவாதத்தை ஆதரித்து பேச அனுமதிக்க கூடாது.

வேல்முருகன் (பா.ம.க.):- ஈழத்தில் இருந்து அகதிகளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொப்புள் கொடி உறவுகள் அகதிகளாக வருகிறார்கள். படகில் வரும்போதே பலர் மாண்டு விடுகிறார்கள். அங்கிருந்து வரும் அகதிகளை தமிழர்கள் என்ற அடிப்படையில் ஆதரிக்க வேண்டும்.

சபாநாயகர்:- இது சம்பந்தமாக இங்கு `டிஸ்கஷன் வேண்டாம், வேறு "சப்ஜெக்ட்' பேசலாம்.

போளூர் வரதன்:- சென்னையில் ம.தி.மு.க. பிரமுகர் சீமா பஷீரை சமீபத்தில் கைது செய்தார்களே எதற்குப வன்முறையை தூண்டுபவர்களுடன் தொடர்பு வைத்து இருந்ததால்தானே, விடுதலைப்புலிகளை வைத்துக்கொண்டு வைகோ மிரட்டுகிறார்.

(இவ்வாறு கூறியதும், ம.தி.மு.க.வினரும், காங்கிரசாரும் காரசாரமாக பேசி மோதிக்கொண்டனர்)

சுதர்சனம் (காங்.):- இலங்கை தமிழர்களை பாதுகாப்பதில் மாற்று கருத்து எதுவும் கிடையாது. ஆனால் இங்கு தீவிரவாதத்தை ஆதிரிக்க கூடாது என்றுதான் சொல்கிறோம். ம.தி.மு.க. உறுப்பினர் கடந்த காலத்தை சிந்தித்து பார்க்க வேண்டும்.

வீர.இளவரசன்:- ம.தி.மு.க. இயக்கம், வைகோ, வன்முறையை தூண்டிவிடுவது போலவும்....

சபாநாயகர் (இடைமறித்து):- வேறு சப்ஜெக்ட் சொல்லுங்கள் என்றார்.

உடனே ம.தி.மு.க.வுக்கு ஆதரவாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், செ.ம.வேலுச்சாமி, செந்தமிழன் திருத்தணி அரி, பலராமன், பரஞ்ஜோதி உள்பட பலர் ஆவேசமாக எழுந்து இளவரசனை பேச அனுமதிக்க வேண்டும் என்றனர்.

வீர.இளவரசன்:- வன்முறையில் எங்களது இயக்கத்துக்கு துளியும் சம்பந்தம் இல்லை. 13 ஆண்டுகளாக நாங்கள் நடத்திய பேரணியிலோ, கூட்டத்திலோ எங்கும் வன்முறை இல்லை. இலங்கை தமிழர்களை பாதுகாக்க குரல் கொடுப்பதை எப்படி தவறு என்று சொல்ல முடியும் என்றார்.

இந்த நேரத்தில் வீர.இளவரசனுக்குபின் இருக்கையில் இருந்த தொட்டியம் ராஜசேகரன் ஆவேசமாக ஏதோ சத்தம் போட்டார். பதிலுக்கு ம.தி.மு.க. உறுப்பினர்கள் விருதுநகர் வரதராஜனும் ராஜ சேகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆவேசத்தில் ஒருவரையொருவர் கையை மடக்கிக் கொண்டு குத்துவது போல் பாய்ந்தனர். இவர்களுக்கு நடுவில் இருந்த எச்.வசந்தகுமார், விஜயகுமார் ஆகியோர் இருபக்கமும் கையை விரித்து தடுத்து இருவரையும் மோதவிடாமல் தடுத்தனர். ஆனாலும் ராஜசேகரனும், வரதராஜனும் ஆவேசமாக வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.

சுமார் 2 நிமிட நேரம் நடந்த இந்த மோதலால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அமைதி ஏற்பட்டது.

இதே போல் இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் சிவபுண்ணியம் உழவர் பாதுகாப்பு திட்டம் பற்றி பேசும் போது அ.தி.மு.க.வுக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

உடனே முதல்-அமைச்சர் கருணாநிதி சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சபையில் எல்லா கட்சி உறுப்பினர்களுக்கும் சொல்கிறேன். ஒருவர் பேசுவதில் தவறு இருந்தால் அதற்காக உடனுக்குடன் குறிக்கிட வேண்டாம். அடுத்த வாய்ப்பு மற்ற உறுப்பினர்களுக்கு வரும்போது அப்போது குறிப்பிட்டு சொல்லலாம். உடனடி குற்றச்சாட்டுக்கு மட்டும் உடனடியாக மறுக்கலாம். அதை விட்டுவிட்டு சச்சரவு ஏற்பட நாம் அனுமதிக்க கூடாது. சச்சரவுக்கு ஒருவர் பேச்சும் குறுக்கீடும் காரணமாக இருக்க கூடாது.

இதற்கு பிறகு இலங்கை பிரச்சனைக்கு தீர்வு ஏற்ப்பட்டதுவைகோ அறிக்கை :
"இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே ஊதுகுழலாக தமிழக முதல்வர் கருணாநிதி செயல்படுகிறார்,'' என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்தல் வழக்கில் பண உதவி செய்ததாக அண்மையில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ம.தி.மு.க., அமைப்புச் செயலாளர் சீமாபஷிரை சிறையில் சந்தித்து பேசிய வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமாபஷீர் சட்ட விரோத நடவடிக்கை எதிலும் ஈடுபடாதவர். இவர் மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு. இதில் ஒரு சதம் கூட உண்மையில்லை. அரசியல் வஞ்சம் தீர்ப்பதற்காக மைனாரிட்டி பாசிச தி.மு.க., அரசு பொய் வழக்கு போட்டுள்ளது. ம.தி.மு.க.,வினரை முடக்க முதல்வர் அஸ்திரம் ஏவி விட்டுள்ளார்.
இருவரை வைத்து ம.தி.மு.க.,வை உடைக்க முதல்வர் போட்ட திட்டம் தூள் தூளானது. தற்போது பொய் வழக்கு மூலம் அடக்குமுறை ஏவப்பட்டிருப்பதை உறுதியாக எதிர்கொண்டு வெல்வோம். இலங்கை, இந்திய கடற்படை கூட்டு ரோந்து யோசனையை மகிந்தா ராஜபக்சே கூறினார். இந்த யோசனை தமிழக முதல்வரும் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு வந்ததும் முதல்வர் கருணாநிதி எலி தவளை கதை சொல்லி விளக்கம் கூறுகிறார். ராஜபக்சேயின் ஊதுகுழலாக தமிழக முதல்வர் கருணாநிதி செயல்படுகிறார்.இலங்கை கடற்படை ஊடுருவலை இந்திய கடற்படை தடுக்க வேண்டும். தமிழர்களின் விரோதியான இலங்கை அரசுக்கு இந்திய அரசு மறைமுகமாக உதவுகிறது.விடுதலைப்புலிகள் முதன்முறையாக வான்வெளி தாக்குதல் நடத்தியது தமிழ் இனத்துக்கு பெருமை தேடித்தந்த விஷயம். யுத்தம் வரும். விடுதலைப்புலிகள் வெல்வர். தமிழ் ஈழம் வரும்.இவ்வாறு வைகோ கூறினார்.

Read More...

அர்ச்சகர் ஆவதற்கு 1,267 பேர் ஆர்வம்

போன வருடம் மே மாதம் "எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம்!" என்ற பதிவை தொடர்ந்து வரும் செய்தி இது. நோ கமெண்டஸ்!

அர்ச்சகர் ஆவதற்கு 1,267 பேர் ஆர்வமாக விண்ணப்பித்துள்ளனர் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு தொடங்கவிருக்கும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கு, எதிர்பார்த்ததை விட அதிகமாகவே மனுக்கள் வந்துள்ளன. தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களில் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன.

இதில் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவெனில் 56 பிராமணர்கள், ஆதிதிராவிடர் 436 பேர், பிற்படுத்தப்பட்டோர் 424 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 296 பேர், பழங்குடியினர் 7 பேரும் விண்ணப்பித்துள்ளவர்களில் அடங்குவர்.

இவர்களில் சைவ முறையில் அர்ச்சகர் பயிற்சி பெறுவோருக்கு மதுரை, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை கோயிலில் பயிற்சி தரப்படும். வைஷ்ணவ முறையில் பயிற்சி பெற விரும்புவோருக்கு சென்னை, திருச்சியில் பயிற்சி தரப்படும்.

Read More...

கிரிக்கேட் தோல்வி - நாராயண மூர்த்தி கருத்து

இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி/தகவல்.

The tragedy of India is that instead of seeing what’s wrong with us and taking steps to correct it, we indulge in hysterics and look for scapegoats. India has a long record of playing badly abroad, which precedes both Rahul Dravid and Greg Chappell. So why single them out?

The real problem lies with the system. Not just in cricket, but in virtually any walk of life, we are unwilling to put in hard work and live with discipline. Other countries are so neat, clean and well-organised but Indian cities are a mess, because we’re simply not willing to respect the rules. We can succeed, not just in cricket, but in everything else if we only follow four basic principles: strictly adhere to meritocracy, work hard, train well and follow strict discipline.

We need to pick the best guys available. And the same applies to the coach. People keep asking whether we need a foreign coach. I don’t think that’s an issue at all. We should ask, who’s the best guy for the job? Whoever it is should get it.

Once you’ve given someone a mandate, let him implement it without interference. At Infosys, we have all our debates, arguments and discussions before it’s decided who’ll be responsible for something. Once it’s decided that X is the boss, all arguments stop and everyone rallies behind him.

I know ‘process’ has become a much-mocked term. But at Infosys, we firmly believe in following processes and it’s always worked for us. If Chappell’s process didn’t work, maybe it wasn’t followed properly or he wasn’t allowed to implement it in full.
( நன்றி: Times of India )

Read More...

Wednesday, March 28, 2007

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

அப்படி என்றால் என்ன ? தெரிந்தவர்கள் பின்னூட்டதில் தெரிவிக்கவும்.

Read More...

பா.ம.க ஏன் இப்படி நடந்து கொள்கிறது

கூட்டணியில் இருப்பதால் ஜால்ரா போட வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால் பாமக மக்கள் நலன் என்று சொல்லு அதை செய்வதை தான் தாங்கமுடியவில்லை.

ஆரம்பம் முதலே நிழல் அரசாங்கம் என்று ஜல்லி அடித்தார். கூட்டணி அமைக்கும் போதே திருமாவளவனை அண்டவிடாமல் செய்தார். பாமக பற்றி தமிழக மக்கள் மத்தியில் ஒரு பெரிய மரியாதை கிடையாது. பாமக பற்றி நான் சொல்லி மக்களுக்கு தெரியவேண்டும் என்று இல்லை.

இன்று திமுகவை ஜெயலலிதாவை விட அதிகமாக எதிர்பதற்கு காரணம் வேறு. முக்கியமாக மூன்று பிரச்சனை இருந்திருக்கிறது. அவைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா

Read More...

சாப்பல் அடிக்கும் SMS பவுண்டரிகள்

நேற்று இரவு எல்லா சேனல்களிலும் இந்த செய்தி வந்துகொண்டிருந்தது. சாப்பல் நிச்சயம் வீட்டுக்கு அனுப்பபடுவார் என்று தெரிகிறது. அவர் அடிக்கும் பவுண்டரிகள்...

* அதில் தேர்வு குழுவினர் இளம் வீரர்களை தேர்வு செய்யாமல் சீனியர் வீரர்களை தேர்வு செய்தனர்

* உலக கோப்பை போட்டிக்காக நான் கேட்ட அணி கிடைக்கவில்லை. கடைசியாக நடந்த தேர்வு குழு கூட்டத்தில், இளம் வீரர்களை சேர்க்க போராடினேன். ஆனால் டிராவிட், வென்சாகரும் அவர்கள் சரியாக விளையாடா விட்டால் என்ன செய்வது என்று் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

* சீனியர்கள் அணியில் தங்களது இடத்தை நிரந்தரமாக்கி கொள்வதற்காகவே விளையாடினர்

* சுரேஷ் ரைய்னா இடம் பெற்றிருக்க வேண்டும்

* தினேஷ் கார்த்திக் சிறந்த பேட்ஸ்மேன். வருங்காலத்தில் அணியின் தலைமை பொறுப்பை ஏற்கும் திறமை அவருக்கு இருக்கிறது.

* யுவறாஜ் சிங் தற்போது பெரிய ஸ்டாராக நினைத்து கொண்டிருப்பதாகவும் அவர் ஒரு வளரும் வீரர் தான்

( இவை எல்லாம் இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில பத்திரிகை நிருபருக்கு சேப்பல் எஸ்.எம்.எஸ். அனுப்பிய செய்திகள் )

பிகு: நாடு திரும்பும் இந்திய வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கபடுகிறது

அப்படியே இதையும் படிங்க/பாருங்க

Read More...

Tuesday, March 27, 2007

அன்பழகன் புகாருக்கு ஜி.கே.மணி பதில்

அன்பழகன் புகாருக்கு ஜி.கே.மணி பதில் அறிக்கை கீழே....


வார இதழ் ஒன்றில் வெளிவந்த கண்ணியக் குறைவான பேட்டியில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவைப்பற்றி தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டுள்ள வசைமாரிகள் இதுவரையில் பொதுவாழ்வில் எந்தவொரு தலைவரைப்பற்றியும் செய்யப்பட்டிராதத் தரம் தாழ்ந்த விமர்சனம் என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஒப்பு கொள்கிறார்கள். அந்த நடுநிலை யாளர்களுக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்தப் பேட்டியில் பயன் படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் கண்ணியக் குறைவானவை என்று முதல்-அமைச்சர் கலைஞரும் தமது வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கும் எங்களுடைய நன்றி.

அதே நேரத்தில் இப்படி யொரு கண்ணியக்குறைவான கட்டுபாட்டுக்கு ஒவ்வாதப் பேட்டி வெளிவந்ததற்கான செயலைக் கலைஞர் கண்டிக்க முன்வரவில்லை என்பதை பா.ம.க.வினர் அனைவருக்கும் பெரும் மனக்குறையாக இருந்து வருகிறது என்பதைத் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கட்சியினரின் இந்த மனக்குறையை வெளிப்படுத்தும் வகையில் மருத்துவர் அய்யா அதற்குறிய பின்னணி என்று கட்சியின் முன்னணியினர் சிலர் தம்மிடம் தெரிவித்த கருத்தை செய்தியாளர்களின் பேட்டியில் வெளியிட்டிருந் தார். இதனை `இழிவான கற்பனை' என இனமானப் பேராசிரியர் குறிப் பிட்டிருக்கிறார். அத்துடன் ஒரு உள்நோக்கத்துடன் தான் மருத்துவர் அய்யா செயல்படுகிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது என்று ஒரு மலிவான புகாரையும் பேராசிரியர் தெரிவித்திருக்கிறார்.

எங்களுடைய நிறுவனர் மருத்துவர் அய்யா செயல் பாட்டில் எப்போதும் உள் நோக்கம் என்பது இருந்ததே இல்லை. அவரது செயல்பாடுகள் அனைத்தும் ஒளிவுமறைவற்றவை, வெளிப்படையானவை.

தி.மு.க. மேடைப்பேச்சாள ரின் பேட்டி குறித்து இரண்டு முறை கருத்து வெளியிட்டிருக்கும் கலைஞர், இப்படியொரு பேட்டி வெளிவந்ததற்கான செயலைக் கண்டிக்க முன்வரவில்லை. கூட்டணி கட்சித்தலைவர் ஒருவர் அவரது கட்சியின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப வெளியிட்டு வரும் கருத்துக்கள் குறித்து கட்சியின் மேடை பேச்சாளர் ஒருவர் தரம் தாழ்ந்து பேட்டியளித்தது தவறு என்று சொல்லவே இல்லை. பேட்டி அளித்ததாக சொல்லப்படும அந்த மேடை பேச்சாளரும் அவரது வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தில், "நான் அளித்த பேட்டியில்'' என்று குறிப்பிடவில்லை. "நான் பேட்டி அளித்ததாக வந்த செய்திகள்'' என்று தான் குறிப்பிட்டிருக்கிறார். நான் அளித்த பேட்டியில் என்று சொல்வதற்கும், நான் பேட்டி அளித்ததாக வந்த செய்தியில் என்று சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் இனமானப் பேராசிரியருக்குப் புரியாமல் இருக்க நியாயமில்லை.

எனினும் இது குறித்த சர்ச்சையை இதற்கு மேலும் வளர்த்துக்கொண்டு போக மருத்துவர் அய்யா விரும்ப வில்லை. இதனை சென்னை செய்தியாளர்களின் பேட்டியிலேயே தெளிப்படுத்தி யிருக்கிறார். அவருக்கே உரிய பெருந்தன்மையுடன் இந்தப்பேட்டி விவகாரத்தை இத்துடன்மறந்து விடுவோம் என்று அறிவுறுத்தி யிருக்கிறார்.

எனவே பா.ம.க. முன்னணி தலைவர்களும், நிர்வாகிகளும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் இத்துடன் இந்தச்சிக்கலை மறந்துவிட்டு கட்சிப்பணியிலும், பொதுப் பணியிலும் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நம்முடைய சுயமரியாதைக்குச் சவால் விடும் காரியங்கள் நடைபெற்றால் கூட கூட்டணி தர்மத்தைக் குலைத்து போடும் வகையில் இனி செயல்படவோ, பேட்டி அளிக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப் படுகிறார்கள்.

Read More...

ராமதாஸ் - இது டூமச் - அன்பழகன்

"வெற்றி கொண்டான் பேட்டி அறிவாலயத்தில் தயாரிக்கப்பட்டு முதல்-அமைச்சர் கருணாநிதி ஒப்புதலுடன் வெளியானது'' என்று காட்டமாக கருத்து தெரிவித்து பேட்டி அளித்தார் மருத்துவர் ஐயா ராமதாஸ் இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் அன்பழகன், டாக்டர் ராமதாசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், டாக்டர் ராமதாசின் இழிவான கற்பனையை வன்மையாக கண்டிக்கிறேன். டாக்டர் ராமதாஸ் இப்படி பேட்டி அளித்திருப்பது உள்நோக்கத்தோடுதான் அவர் செயல்படுகிறார் என்பதை உறுதிபடுத்தி விட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார். முழு விவரம் கீழே..


திமுக தலைவர் கருணாநிதி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டு, அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்களுடனும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும், பேசியும், பழகியும், பல கட்டங்களில் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வந்துள்ளார்.

அவரது அரசியல் ஆளுமையில் உள்ள பண்பாட்டையும், நாகரீகத்தையும் எவரும் அறிவர். எதிர்க்கட்சியாக செயல்பட்ட காலகட்டங்களில் கூட எந்த ஒரு தலைவரையும், மரியாதைக் குறைவாகவோ, நாகரீகமற்ற முறையில் பேசியதோ, எழுதியதோ கிடையாது.

வார இதழில் வெற்றி கொண்டான் பேட்டி கொடுத்தது குறித்து, பெரிதும் வருத்தப்பட்டதோடு, வெற்றி கொண்டானோடு தொடர்பு கொண்டு உடனடியாக அவர் கொடுத்த பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்கச் சொல்லி, முதல்வர் கருணாநிதிதான் அறிக்கை விட வைத்தார்.

ஆனால் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், வெற்றி கொண்டான் வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி, அறிவாலயத்தில் தயாரிக்கப்பட்டு, கலைஞரின் பார்வைக்கு கொடுக்கப்பட்டு , வெளியிடப்பட்டதே என்று கூறியுள்ளார்.

ராமதாஸின் இந்த இழிவான கற்பனையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முதல்வர் கருணாநிதியுடன் இத்தனை ஆண்டுகள் பழகியும், அவருடைய அரசியல் பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும் தெரிந்து கொள்ளாமல் , கலைஞர் மீது குற்றம்சாட்டியிருப்பது கண்டு நான் வேதனைப்படுகிறேன்.

டாக்டர் ராமதாஸ் இப்படி பேட்டி அளித்திருப்பது, உள்நோக்கத்தோடுதான் அவர் செயல்படுகிறார் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது - அன்பழகன்

Read More...

Monday, March 26, 2007

BCCI (லேட்டாக)அடிக்கும் பவுண்டிரிகள்

* சந்தீப் பட்டீல் (அ) மொஹிந்தர் அமர்நாத் அடுத்த கோச்

* யுவராஜ் அடுத்த கேப்டன்

* டிராவிட், டெண்டுல்கர், சேவாக் வீட்டுக்கு அனுப்படுகிறார்கள்.

( BCCI Sources )

Read More...

சூப்பர் சூடான அரசியல் ஆரம்பம்

வெற்றிகொண்டான் அறிக்கை அறிவாலயத்தில் தயாரிக்கப் பட்டு கலைஞரின் பார்வைக்கு கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதே - மருத்துவர் ராமதாஸ்

பண்ருட்டி பேச்சை கேட்டு உளறுகிறார் விஜயகாந்த் - கலைஞர்

எப்படியோ டல்லாக இருந்த தமிழக அரசியல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

மேலும் விரிவாக... கீழேமருத்துவர் ராமதாஸ் அறிக்கை
வணக்கம், பேட்டி அளிப்பவர் "அறிவு ஆலய'த்தில் ராமதாஸ் ஒரு மோசடி தலைவர் என்று கவுரவப் பட்டம் கொடுக்கப்பட்ட ராமதாஸ் பேசுகிறேன். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இரண்டு செய்திகளை மக்களுக்கு சொல்லியாக வேண்டும் என் பதற்காகத்தான் கூட்டியிருக்கிறேன்.

ஒன்று, கருணாநிதியுடைய தம்பி களில் ஒருவரான தலைமை நிலைய பேச்சாளர் ஒரு வாரப்பத்திரிகையில் அளித்ததாக வந்திருக்கும் அந்த பேட்டி வெற்றிகொண்டான் கொடுத்தது அல்ல. தலைமையின் அறிவு ஆலயத்தில் தயாரிக்கப்பட்டு கருணாநிதி பார்வையிட்டு கொடுக்கப்பட்ட பேட்டி என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இரண்டாவது, மக்களுக்கு நாங்கள் சொல்ல வந்த செய்தி கருணாநிதி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தருவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. வெற்றிகொண்டான் பேட்டி 21ந் தேதி வெளியானது. 22ந் தேதி இதற்கு கருணாநிதி பதில் கொடுக்கிறார். பின் 24ந் தேதி கருணாநிதி கொடுத்த பதிலில், கடந்த சில மாதங்களாகவே நம்முடைய தோழமைக் கட்சி அணியில் உள்ள பாமகவுக்கும், திமுகவுக்கும் இடையே தேவையற்ற சில கசப்புணர்வுகளுக்கு வித்திடப் பட்டுள்ளது என்பதை பத்திரிகை களில் வந்துள்ள பழைய செய்திகளை படித்து பார்த்தாலே தெளிவாக புரியும் என்று கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

அதில் என் பெயருக்கு முன்னாள் "ஐயா' என்று எழுதியிருக்கிறார். இனிமேல் என்னை ஐயா என்று குறிப்பிட வேண்டாம். ராமதாஸ் என்று குறிப்பிடுங்கள் என கட்சித் தலைவர் ஜி.கே.மணி மூலம் கடிதம் எழுத சொல்லியிருக்கிறேன்.

நான் கருணாநிதியை பற்றியோ, அவரது குடும்பங்களை பற்றியோ அல்லது கழகத்தை பற்றியோ எங்காவது வரம்பு மீறி பேட்டி அளித்ததுண்டா? துணைநகரம், விமான நிலைய விரிவாக்கப் பணி, சிறப்பு பொருளாதார மண்டலம், மணல் திருட்டு, டாஸ்மாக் மதுவிற்பனை, காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு விவகாரம், பாலாற்று பிரச்சனை, சில்லறை வணிகத்திற்கு வந்துள்ள ஆபத்து என தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலன் குறித்த பிரச்சனைகள் மாநில மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் ஆகியவற்றிற்காக பாமக குரல் எழுப்பி வந்தது எப்படி கசப்புணர்ச்சிக்கு வித்திட்டது என முதல்வர் கருதுகிறார் என்பது எங்களுக்கு விளங்காத புதிராக இருக்கிறது.

நான் சொன்ன விஷயங்கள் எல்லாம் மக்களை சார்ந்தது. மக்களை பற்றி தான். இந்த பிரச்சனைகள் எல்லாம் மக்கள் பிரச்சனைகள்தான். தமிழகத்தின் உரிமையையும், மக்கள் பிரச்சனையையும், மொழியையும் சார்ந்தது. இதையெல்லாம் சொன்னால் நான் மோசடி தலைவரா? எதையுமே நான் கேட்காமல் எல்லாவற்றிற்கும் சரி என்றால் நல்ல தலைவரா?

விலைவாசி உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட், பிஜேபி போராட்டம் நடத்துகிறது. இது தப்பு என்று சொன்னால் மகிழ்ச்சி அடைவார்களா? அதுதான் கூட்டணி தர்மமாக இருந்திருக்குமா? இதில் நான் எந்த இடத்தில் வரம்பு மீறியிருக்கிறேன்.

அமைச்சர் வீரபாண்டிய ஆறுமுகம் பேசிய விஷயத்தில் எங்கள் எம்எல்ஏக்கள் கொதித்தெழுந்து பேசினார்கள். பின் நான் அவர்களிடம் போதும் என்றவுடன் அமைதியாகி விட்டார்கள். திருக்கோவிலூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் திமுக அமைச்சர் முன்னிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் சோனியா வாழ்க; திமுக ஒழிக என்று கூறியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி வரதராஜன் 25 சதவீதம் கமிஷன் வாங்குகிறார்கள் என்று கூறியிருக்கிறார். இவர்கள் எல்லாம் மோசடி தலைவர்களா?

வெற்றி கொண்டான் மகன் ஜெயங்கொண்டத்தில் உதவி நகராட்சி தலைவராக இருக்கிறார். அவர் சொன்னது எங்கப்பாவை கையெழுத்து மட்டும் தான் போட சொன்னார்கள் என்று அவரே சொன்னதாக கூறினார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

கே: இவ்வளவு கசப்பு இருக்கும் போது இந்த கூட்டணியில் எவ்வளவு காலம் செயல்பட முடியும்?
ப: இந்த ஆட்சிக்கு ஆதரவு தொடர்ந்து கொடுப்போம். அதே நேரத்தில் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம்.

கே: தலைவர்களுக்குள் இருக்கும் இந்த கசப்புணர்வு தொண்டர்களுக்கும் வராதா?
ப: இதுகுறித்து ஜனவரி 3ந் தேதி அன்று கருணாநிதியை சந்தித்து பேசும்போது திமுக, பாமக தொண்டர்கள் இடையே இணக்கம் ஏற்படுத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசுங்கள் என்றேன். அப்போதுதான் வரும் எம்பி தேர்தலில் சிறப்பாக செயல்படும் முடியும் என்றேன். ஆனால் அவர் பேசவில்லை. எங்களது எம்எல்ஏக்களால் ஒரு ஆயா வேலைக்கு கூட பரிந்துரை செய்ய முடியாது.

கே: 2 பேரும் நேரில் பேசினால் இதற்கு தீர்வு வராதா?
ப: நான் மட்டும் எப்படி பேச வேண்டும். அவரிடம் பேச வேண்டும் என்றால் தொலைபேசியில் பேசுங்கள் என்கிறார். ரிலையன்ஸ் பற்றிய பிரச்சனைகளை எல்லாம் தொலைபேசியில் பேச முடியுமா?

கே: இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் தொடர்ந்து ஆதரவு தருவதில் அர்த்தம் இருக்கிறதா?
ப: நாங்கள் கொடுத்த வாக்குறுதி படி நடந்து வருகிறோம். தோழமை என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக்கூடாது.

கே:மத்தியில் கூட்டணி இருப்பதால் தமிழகத்தில் அனுசரித்து போகிறீர்களா?
ப: அதனால் இல்லை. மக்கள் பிரச்சனை களை தான் சுட்டிக்காட்டுகிறோம்.
கே: அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? இதற்கு என்ன தீர்வு?
ப: நாங்கள் எங்களுக்கு எதுவும் வேண்டும் என்று கேட்கவில்லை. தமிழ்நாடுதான் எங்களுக்கு முக்கியம்.

கே:கேள்வி திமுக அணுகுமுறை மாற வேண்டும் என்கிறீர்களா?
ப: நான் எதுவும் மாற வேண்டும் என்று நினைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றிகொண்டான் வருத்தம்

திமுக x பாமக மோதல் முற்றுகிறது

ராமதாஸ் ஒரு மோசடி தலைவர் - வெற்றிகொண்டான்
கலைஞர் அறிக்கை

அனைத்து பிரிவு மக்களும் ஆறுதல் பெறக்கூடிய ஒரு நிதிநிலை அறிக்கையை இந்த அரசு வழங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற ஒரு சில எதிர்க்கட்சி பத்திரிகை யாளர்கள் நிதி நிலை அறிக்கை யில் அச்சியற்றப் பட்டு நிதி அமைச்சர் பேராசிரியரால் பேரவையில் எடுத்து வைக் கப்பட்டு வானொலி, தொலைக்காட்சிகள் வாயி லாக நேரடியாகவே ஒலி, ஒளிபரப்பப்பட்ட உண்மை களை கூட மறைத்து விடுகிற மாய்மாலத்தை எப்ப டியோ கற்றுக்கொண்டு கதையளக் கின்றனர்.

ஓர் உதாரணம் சொல்கி றேன் கேள்: "கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றி ருந்த முக்கிய பிரச்சினை குறித்து இந்த பட்ஜெட்டில் குறிப்பு ஏதும் இல்லை. இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கிய போது அதனை அப்போதைய அ.தி.மு.க. அரசு ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்ததாக தி.மு.க. குற்றம் சாட்டியது. தற் போது மத்திய கூட்டணி ஆட்சியில் தி.மு.க. பங்கு பெற்றிருந்தும் இந்த திட்டம் குறித்து எவ்வித தகவலும் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது'' என்று அந்த பத்திரிகை எழுதியிருக்கிறது. பத்திரிகையின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. "காற்றில் பறக்கும் தி.மு.க. வாக் குறுதிகள்'' என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறதே; அந்த பத்திரிகை தான்! திராவிட இயக்கத்தை ஜென்ம விரோதியாக கருதும் அந்த ஏட்டில் இப்படி ஒரு பொய்யை எழுதியிருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. எதிர்பார்த்தது தான்.

பொய்யிலும் பொய் கடைந் தெடுத்த பொய்-கண்ணை மூடிக்கொண்டு மக்களையும் கண்ணற்ற கபோதிகள் என்று கருதிக்கொண்டு புளுகி யிருக்கிறது அந்த ஏடு!

உடன்பிறப்பே, இதோ நன்றாகப்பார்- நான் உன் கையில் அளித்திருப்பது இந்த அரசின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை! இந்த அறிக்கையில் தான் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை பற்றி குறிப்பு ஏதும் இல்லையாம்-பாவம். அந்த பத்திரிகையாளருக்கு நாம் குறிப்பாக மட்டும் உணர்த்தவில்லை. குண்டு குண்டான தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களால் அச்சியற்றி எடுப்பான வாங்கி யங்களாகவே உணர்த்தி

இருக்கிறோம்.சென்னை மாநகரின் நீண்ட காலக்குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாள் ஒன்றுக்கு 100 மில்லி யன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கான பணிகள் 25.2.2007 அன்று தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நாள் ஒன்றுக்கு 100மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டத்தை மைய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்து வதற்கு சென்னை மாமல்ல புரம் சாலையில் நிலம் கண்ட றியப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பக்கத்தை புரட்டா மலே, புரட்டு வேலையில் ஈடுபட்டு பட்ஜெட்டில் அந்தத் திட்டத்தையே காணோம் என்று புளுகு மூட்டையை அவிழ்ப் பது எப்படியிருக்கிறதென்றால் மறைந்த தோழர் கழகத்தின் படைக்கலன் எனப்படும் டி.எம். பார்த்த சாரதி எழுதிய தி.மு.க.வரலாறு ஏட்டில் அண்ணா தொடங்கிய தி.மு.க.வில் -கருணாநிதியே அப்போது இடம்பெறவில்லை என்று பண்ருட்டி பேச்சைக் கேட்டு உளறுகிற பைத்திய காரத்தனம் போல இருக் கிறது.

தோழர் டிஎம்.பார்த்தசாரதி எழுதிய தி.மு.க. வரலாறு ஏட்டில், கழகம் தொடங்கிய நிகழ்ச்சியை பற்றி எழுதும்போது 17.9.1949 அன்று காலை 7 மணிக்கு சென்னை, பவழக்காரதெரு, 7ம் எண் இல்லத்தில் கூடிய அமைப்புக்குழுவின் கூட்டத்தில் கழகத்தின் பெயர், கொடி, பற்றிய அறி விப்புகளும் செய்யப்பட்டு கழகப்பொதுக்குழுவும் அறிவிக்கப்பட்டது.

அந்தப் புத்தகத்தில் பக்கம் 109ல் பொதுக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் எல்லாம் வெளி யிடப்பட் டுள்ளது. அந்தப் பொதுக் குழுவில் சி.என்.அண்ணா துரை, இரா. நெடுஞ்செழி யன், கே.ஏ.மதியழகன், மு.கருணாநிதி, என்.வி.நட ராசன், ஈவெ.கி.சம்பத், டி.எம். பார்த்தசாரதி என்று பட்டியல் தொடருகிறது.

இது மாத்திரமல்ல வாழ் வில் நான் கண்டதும் கேட்டதும் என்ற தலைப்பில் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழி யன் எழுதிய புத்தகத்தின் பக்கம் 177வருமாறு

அறிஞர் அண்ணாவின் அழைப்பை ஏற்று150க்கு மேற்பட்ட முக்கிய முன்ன ணியினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் அமைப்புக் கூட்டத்தில் பங்கு கொண்ட மிக முக்கி யமானவர்கள் மட்டும் வருமாறு, என்.வி.நடராசன் என்று நாவலர் பட்டிய லிட்டிருக்கிறார்.

இந்த வரலாறெல்லாம் அப்போது இளைஞனாக மின்வாரியத்தில் பொறியாள ராக இருந்தவருக்கு தெரி யாது.

சிலை திறப்பு விழா

அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கு மற்றொரு உதாரணம் சொல்ல வேண்டு மானால், 1969-ம் ஆண்டு கலைவாணர் சிலை திறப்பு விழா சென்னையில் என் தலைமையில் தியாக ராயநகரில் நடைபெற்ற போது, அந்த விழாவில் பேரறிஞர் அண்ணா, அருமை நண்பர் எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.வாசன், ஏ.வி.எம்., நடிகர் திலிப்குமார் போன்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டோம்.

அந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் அப்போது எல்லா ஏடுகளிலும் வெளிவந்தது. ஆனால் அதன் பின்னர் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் ஒரு விழா மலர் வெளியீட்டு விழா நடைபெற்ற போது கலைவாணர் சிலை திறப்பு விழாவின் புகைப் படம் அந்த மலரில் இடம் பெற்றது.

அந்த மலரில் வெளியிடப் பட்ட புகைப்படத்தில் இடை யிலே இருந்த விழாத் தலைவராகிய என்னுடைய புகைப்படத்தை மட்டும் அதிலேயிருந்து நீக்கிவிட்டு வெளியிட்டவர் தான் அந்த நபர்.

அப்படிப்பட்ட வரலாற்றுப் பிழைகளின் `வல்லுனராக' திகழும் ஒருவரை `வாத்தியா ராகக்'கொண்டு வாய் நீளம் காட்டி வம்பிலே சிக்கிக் கொள்வது நல்லதல்ல என்பதற்காகவே.

அவசரப்படும் பத்திரிகை ஆசிரியருக்கு சொல்லும் சரித்திரக் குறிப்பை ஆவேசப் படும் நண்பருக்கும் சொல்ல வேண்டியவர்களாக இருக்கி

றோம்.உண்மைகள் மறைக்கப்படுகின்றன உடன் பிறப்பே,பபஎவ்வாறு நமது கழகத்தைப்பபபற்றிய உண்மைகள் மறைக்கப்படு கின்றன. எவ்வாறு அனைவரும் போற்றுகின்ற அற்புதமான நிதி நிலை அறிக்கையை வேண்டுமென்றே திருத்தியும் மறைத்தும் இல்லாதது பொல்லாததுகளைக் கூறி ஏச்சுப் பேச்சுக்களால் இந்த இயக்கத்தையே அழித்துவிடப் படைத்திரட்டுகிறார்கள்.

பதுங்கிப் பாய்கிறார்கள், பச்சை பொய்களை தங்கள் போர்க்கணைகளாக ஆக்கு கிறார்கள் என்பதை எல்லாம் நிதி நிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்களில் நீ மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

அதற்கு பயன்படக்கூடிய ஆதாரப்பூர்வமான எடுத்துக் காட்டாகத் தான் ``கடல் நீரைக் குடிநீர் ஆக்குவது பற்றி'' இந்த வரவு செலவுத் திட்டத்தில் எதுவுமேபகுறிப் பிடப்படவில்லை என்று ஒரு பத்திரிகையில் வெளி யிட்டுள்ள செய்தி பயங்கரப் பொய் என்பதை தோல் உரித்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த இரு செய்திகளையும் உன் கவனத்துக் கொண்டு வந்துள்ளேன்.

சபாஷ் விஜயகாந்த்

Read More...

சபாஷ் விஜயகாந்த்

விஜயகாந்தின் அறிக்கையை படிக்கும் முன்..

"ஒரு கட்சியை துவக்கி நடத்துபவருக்கு தான் அதன் கஷ்டங்கள் தெரியும்; இடையில் குடிபுகுந்தவர்களுக்கு அதுபற்றி தெரியாது' - விஜயகாந்த்

"குடி உள்ளே புகுந்த காரணத்தால் வரலாறு தெரியாமல் உளறுகிறார்" - கலைஞர்

ஏற்கனவே விஜயகாந்த் குடித்துவிட்டு பேசுவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது முதல்வர் கருணாநிதியும் இதே குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதால், அதற்கு கடுமையான பதிலடியை கீழே பார்க்கவும்..


பெற்ற தாய்க்குத் தான் பிரசவ வேதனை தெரியும். சுற்றி நிற்கும் மற்றவர்களுக்கு வேதனை தெரியாது. அதைப்போல தி.மு.க.,வை நிறுவிய அண்ணாதுரைக்கு தான் கஷ்டம் தெரியும். கருணாநிதிக்கு தெரிய நியாயம் இல்லை. அவர் எந்த கட்சியையும் தோற்றுவிக்கவில்லை. தி.மு.க.,வின் நிறுவனரும் அல்ல. தி.மு.க., ஆரம்பித்த 49ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி காலையில் நீலமேகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் கருணாநிதியை காணோம். அன்று மாலை ராயபுரம் ராபின்சன் பூங்கா மைதானத்தில் நடந்த துவக்க விழா கூட்டத்தில் சித்தையன், என்.வி.நடராஜன், சம்பத், எஸ்.ஆர்.சுப்பிரமணியம், ஆசைத்தம்பி, நீலமேகம், மதுரை முத்து, சத்தியவாணி முத்து, நெடுஞ்செழியன், அண்ணாதுரை ஆகியோர் பேசினர். அதிலும் கருணாநிதி பேசவில்லை. ஐம்பெரும் தலைவர்கள் பட்டியலில் கருணாநிதி இடம்பெறவில்லை.

சேலத்தில் 1944ம் ஆண்டு அண்ணாதுரை கொண்டு வந்த தீர்மானத்தின் படி திராவிடர் கழகம் தோன்றியது. அண்ணாதுரை தீர்மானம் என்றே அதற்கு பெயர். இருப்பினும் திராவிடர் கழகம் யாருடையது என்று கேட்டால் ஈ.வெ.ராமசாமியுடையது தான். அண்ணாதுரை அதற்கு உரிமை கொண்டாடியது இல்லை. அது பண்பாடு. பச்சை குழந்தைகளுக்கு வரலாறு தெரியாது தான். ஆனால் வளர்ந்த பிறகு வரலாற்றில் பங்கு பெற முடியா விட்டாலும் வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளலாம். வரைபடத்தோடு கட்டடம் எழுப்புவது பெரிதா? செங்கல்லை தூக்கிக் கொடுத்த ஒரு சிற்றாளின் பணி பெரிதா என்பதை கருணாநிதி சிந்திக்க வேண்டும்.

உழைப்பையும், உடமையையும், ஏன் உயிரையும் பணயம் வைத்து அன்று பல தலைவர்கள் பாடுபட்டனர். அவர்கள் எல்லாம் மறக்கடிக்கப் பட்டு விட்டனர். அவர்கள் வாரிசுகள் கூட இன்று தி.மு.க.,வில் இல்லை. கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த கதைதான் இன்றைய தி.மு.க., வரலாறு. என்னை பச்சைக் குழந்தை என்கிறார். குடி உள்ளே புகுந்ததால் உளறுகிறார் என்கிறார். குழந்தை குடிப்பது பால் தான். அது பேசும் மழலை உளறலாகத் தெரியும் மற்றவர்களுக்கு. ஆனால், அதுவே இனிமையாக தெரியும் உறவினர்களுக்கு. காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல குடி என்றால் தாங்கள் குடிப்பது தான் நினைவிற்கு வரும் போலும்.

சிலர் அறையில் குடிப்பது, சாமி கும்பிடுவது, அம்பலத்தில் அவற்றை மறுப்பது ஆகிய இரட்டைப் போக்கை கடைப்பிடிக்கின்றனர். இத்தகைய தொடர்பு கனவிலும் கொடுமையைத் தரும் என்கிறார் திருவள்ளுவர். என்னைப் பற்றி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டபோது அதை அநாகரிகம் என்று கருதினேன். இன்று கருணாநிதியும் அதேபோல் தான் அநாகரிகமாக கருத்து தெரிவிக்கிறார். கருணாநிதி அதே பேட்டியில் ஜெயலலிதாவைப் பற்றி குறிப்பிடுகையில் பன்றியை கண்டு யானை ஒதுங்கிய உதாரணத்தைச் சொல்கிறார். அதைப்போல எனக்கு இவர்களைக் கண்டு ஒதுங்குவதை தவிர வேறு வழியில்லை. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என்று பழைய கட்சித் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

Read More...

வெற்றி கொண்டான் வருத்தம்

பாமக எம்.எல்.ஏக்கள் வெற்றிகொண்டானைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய தட்டிகளுடன், சட்டசபையில் முதல்வர் அறை முன்பு தர்ணா நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் தனது பேச்சுக்கு வெற்றி கொண்டான் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் அளித்த பேட்டி பற்றி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையைப் படித்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

தலைவர் கலைஞர் வருந்தும்படியாக என்னுடைய வார்த்தைகள் அமைந்திருந்தது, எனக்கு மிகுந்த அதிர்ச்சியும், கவலையும் தருகிறது.

ராமதாஸ் பற்றி நான் பேட்டி அளிந்ததாக வந்த செய்தி, அவரது மனதை புண்படுத்தியிருக்குமானால், அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வெற்றி கொண்டான்.

தொடர்புள்ள சுட்டி

Read More...

Sunday, March 25, 2007

கிரிக்கெட் ரசிகர்கள் ஜோக்ஸ்

இன்று வந்த நாளேடுகளில் மற்றும் எனக்கு வந்த சில SMS ஜோக்ஸ்.

India is a cricketing nation. It walks, talks, eats, drinks, breathes and sleeps cricket. Too bad it doesn’t play it.

Virgin can never be the sponsor of the Indian cricket team. Because our guys keep getting fu___d.

Pappu was at school and the teacher asked everybody what their fathers did. Typical answers came out: policeman, salesman, doctor... Pappu said, “My father is an exotic dancer in a gay club and takes off his clothes in front of other men.’’ The teacher called him aside and asked if that was true and Pappu said, “No, he’s in the Indian cricket team but I’m too embarassed to admit that.’’

Why do Indian babies cry and complain all the time? They are practicing how

to become Indian cricketers when they grow up.

Why doesn’t the crowd blink when Tendulkar goes out to bat? There just is no time until he gets out again.

Entire responsibility of India’s loss in the first match of the World Cup goes to Mrs Indira Gandhi. How? It was she who created Bangladesh!

What is the most proficient form of footwork displayed by Indian batsmen? The walk back to the pavilion

.
What is the height of optimism ? Dhoni coming out to bat applying sunscreen on his face.

Let’s help out Pakistan in its hour of need and send Greg Chappell to serve as the coach.

Latest sponsors of the Men in Blue? Whisper, because the team’s going through its worst period!

Manager: Hello! Voice: Can I speak to Sachin?
Manager: Who’s speaking?
Voice: This is his wife.
Manager: Sorry, he’s just gone out to bat.
Voice: Okay, I’ll hold on.

உங்களுக்கு வந்த SMS ஜோக்குகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

Read More...

Saturday, March 24, 2007

திமுக x பமாக மோதல் முற்றுகிறது

திமுகவுக்கும், பாமகவுக்கும் ஏற்பட்ட மோதல் முற்றியுள்ளது. முதலமைச்சரின் அறைக்குள் பதாகைகளோடு பாமக எம்எல்ஏக்கள் வந்ததற்கு கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். திமுகவுடன் ஏற்பட்ட மோதல் மண்பானையில் ஏற்பட்ட விரிசல் என்று பாமக மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அண்மைகாலமாக திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக எம்எல்ஏக்கள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார்கள். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினார்கள். இதற்கிடையே திமுக நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான வெற்றிகொண்டான், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை கடுமையாக விமர்சித்து வார பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். பாமகவினரிடையே இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

நேற்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் அறைக்கு சென்றார்கள். ஒரு மனு கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் முதல்வர் வேறு அலுவலில் இருப்பதாக கூறியதை தொடர்ந்து முதல்வர் அறை அருகிலேயே பாமக எம்எல்ஏக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெற்றி கொண்டான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதப்பட்ட பதாகைகளையும் அவர்கள் எடுத்து சென்றிருந்தனர். அதன் பின்னர் முதலமைச்சர் கருணாநிதி, அவர்களை அழைத்து பேசினார். டாக்டர் ராமதாசை தரக்குறைவாக விமர்சித்த திமுக பேச்சாளர் வெற்றி கொண்டான் மீது கடும் நடவடிக்கை எடுக்க என்று அவர்கள் அப்போது வலியுறுத்தினார்கள். உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தாக பின்னர் ஜி.கே. மணி நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட் டுள்ளார். பதாகைகளுடன் முதல்வர் அறைக்கு பாமக எம்எல்ஏக்கள் வந்ததை அவர் குறைகூறியுள்ளார். இது விரும்பத்தகாத ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த சில மாதங்களாகவே நம்மு டைய தோழமைக் கட்சி அணியிலே உள்ள பாமகவிற்கும், திமுகவிற்கும் இடையில் தேவையற்ற சில கசப்புணர்வுகளுக்கு வித்திடப்பட்டு விட்டது என்பதை பத்திரிகைகளில் வந்துள்ள பழைய செய்திகளைப் படித்துப் பார்த்தாலே தெளிவாகப் புரியும். இந்தத் தோழமைக் கட்சிகளின் அணியின் தலைவர் என்ற முறையில் திமுகவைப் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் விமர்சனங்களை வெளி யிட்ட எந்தக் கட்சிகள் மீதும் குறை காணுகிற மோதுதல் போக்கைக் கடைப்பிடிக்காமல், தோழமையைக் கட்டிக் காக்கும் தூய எண்ணத்தோடு அமைதியாகவே இருந்து வந்திருக்கிறேன்.

இதற்கிடையே கழகத்தின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரான வெற்றிகொண்டான், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் திமுக ஆட்சியைப் பற்றி செய்துள்ள விமர்சனங்களுக்குப் பதில் என்ற பெயரால், ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் திமுக கடைப்பிடித்து வருகிற கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு மாறான வார்த்தை களைப் பயன்படுத்தியிருப்பது கண்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.

இதுபற்றி, கோ.க.மணி தலைமையில் என்னிடம் புகார் செய்ய வந்த பாமக சட்டமன்ற உறுப்பினர்களிடமும் விளக்கம் அளித்து வருத்தமும் தெரிவித்திருக்கிறேன். ஆனால் எனக்குள்ள ஒரேயொரு சங்கடம், கோட்டைத் தலைமைச் செயலகத் தின் உள்ளேயே முதலமைச்சர் அறைக்குள் கண்டன வாசகங்கள் எழுதியுள்ள பதாகைகளோடு அவர்கள் வந்தது தான். இதைச் சட்டமன்ற உறுப்பினர்கள் பின்பற்றினால் விரும்பத் தகாத ஒரு முன்னுதாரணம் ஆகி விடும் என்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உணர வேண்டும். இதை நான் சொல்வதால் வெற்றிகொண்டான் பேட்டியின் வாசகங்களை நியாயப்படுத்துவதாக அர்த்தம் இல்லை.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார். முதல்வரின் இந்த அறிக்கை குறித்து பாமக தலைவர்கள் சிலரிடம் தொடர்பு கொண்டு கருத்து கேட்ட போது, இந்த அறிக்கை பற்றிய விவரம் டாக்டர் ராமதாசுக்கு தெரியும். அவர் தான் பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். திமுகவில் கருணாநிதியும், அன்பழகனும்தான் நல்லவர்கள் என்று முன்பு ஒருமுறை டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார். இப்போது அவர்களுடனேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதால்இனி நிலைமை சீரடையாது என்று மூத்த பாமக தலைவர் ஒருவர் கூறினார்.

இப்போது ஏற்பட்டுள்ள விரிசல் தங்க தாம்பாளத்தில் அல்ல; மண்பானையில்தான் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விரிசலை சரி செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். திமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஒருவர் எங்கள் கட்சியின் நிறுவனரை பற்றி தரந்தாழ்ந்து விமர்சித்திருக்கிறார். இது திமுக தலைவரின் ஒப்புதல் இல்லாமல் நடைபெற்றிருக்காது. எனவே திமுக தலைவரே, எங்கள் தலைவரை அவமானப்படுத்திய தாகத்தான் கருத வேண்டியிருக்கிறது என்றும் பாமக தலைவர்கள் குறிப்பிட்டனர். இதனால் திமுக, பாமக இடையேயான மோதல் மேலும் மோசமாகியுள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

* * *
இன்று பாமக நிறுவனர் ராமதாûஸ விமர்சித்த திமுக பேச்சாளர் வெற்றிக்கொண்டானைக் கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாமகவினர் 65 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
* * *

தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்த்த திட்டங்கள் இல்லை என பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

Read More...

ராமதாஸ் ஒரு மோசடி தலைவர் - வெற்றிகொண்டான்

இந்த வார குமுதம் இதழில் வந்த கட்டுரை.

சமீப காலமாக டாக்டர் ராமதாஸ் தி.மு.க. அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டே அரசைத் தாக்குவது, தி.மு.க. தரப்பில் பெரும் அதிருப்தியை உண்டு பண்ணியிருக்கிறது. ராமதாஸின் இந்தத் ‘தாக்குதல்’ அரசியலைக் கடுமையாக விமர்சிக்கிறார் தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர் வெற்றிகொண்டான்.

‘‘டாக்டர் ராமதாஸ் வில்லன் அரசாங்கம் நடத்தி வருகிறார். இது அவருக்குப் பழக்கப்பட்டதுதான். ஏற்கெனவே பாண்டிச்சேரியில் இப்படிச் செய்து பழக்கமிருக்கிறது. இப்போது தமிழகத்தில் கைவரிசையைக் காட்டத் துவங்கியிருக்கிறார். தன்னையும், தன்னுடைய மகனையும், அரசியலில் வைத்துக் கொண்டு தி.மு.க. ஆட்சியை மிரட்டும் வேலையில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகிறார்.

இப்படி தி.மு.க. அரசைத் தாக்குவதற்குக் காரணம், தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்ற எண்ணம்தான். தன்னை முன்னிலைப்படுத்தி ‘கலைஞர் இடத்தை’ப் பிடித்து விடலாம் என்று நினைக்கிறார். ஆனால் கலைஞர் இடத்தைக் கடவுளாலேயே கூட பிடிக்க முடியாது. கடவுளே கலைஞரின் வீட்டு வாயில்படியில் நிற்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு சத்ய சாய்பாபாவே சாட்சி. கலைஞரை யாரேனும் குறைசொல்லக் கருதினால், தன்னுடைய நாட்டு மக்களை அவமானப்படுத்தியதாக அர்த்தம். யாரையும், எவனையும் நம்பி ஆட்சி நடத்தத் தேவையில்லை. நாடு என் தலைவர் பக்கம் நிற்கிறது. மக்கள் என் தலைவர் பக்கம் நிற்கிறார்கள்.

சாதாரணமாக இவர்களுக்கெல்லாம் கலைஞர் பதில் சொல்லத் தேவையில்லை. ஆனால், கூட்டணி தர்மத்துக்காக தலைவர் அவர்களுக்குப் பதில் சொல்கிறார். நான் கலைஞரைக் கேட்டுக் கொள்கிறேன். பெரியார்தான் ஐயா. இடையில் வருகிற எந்த தலைவனையும் ‘ஐயா’ என்று அழைக்கக் கூடாது. பெரியாரை ஐயா என்ற அழைத்த வாயால் இந்த மாதிரி ஆட்களையெல்லாம் ஐயா என்று சொல்வது அசிங்கம். கலைஞருக்கு எத்தனை பெருந்தன்மை. தன்னைவிட வயதில் சிறியவரான ராமதாஸை, மருத்துவர் ஐயா என்று மேடைதோறும் கூறுகிறார். அந்த மரியாதையைக் கூட தக்க வைத்துக்கொள்ள ராமதாஸுக்குத் தெரியவில்லை.

இவர் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கூட்டணியைப் பற்றி வெளிப்படையாக விமர்சிப்பதுதான் இவரது வாடிக்கை. அரசியல் நாகரிகம் தெரியாதவர். ஆட்சியில் குறைகள் இருந்தால், முதல்வரை நேரில் சந்தித்துச் சொன்னால், அதைக் களைந்துவிடப் போகிறார். ஆனால், அப்படிச் செய்யாமல்

பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் கொடுப்பது ஏன்?

பிரச்னைகளை வளர்க்க வேண்டுமென்பதற்குத்தானே! என்னுடைய கோட்டை என்று இறுமாப்புடன் கூறிவந்த ராமதாஸுக்கு, விருத்தாச்சலத்தில் ஒரு நடிகர் கொடுத்த அடியிலிருந்து இன்னும் மீளாமல் ஏதோதோ உளறிக் கொண்டு இருக்கிறார். இப்படியெல்லாம் பேசுவது, அறிக்கை விடுவது எல்லாம் ராமதாஸின் தலைக்கனத்தின் அறிகுறி.

ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் தலைவராக டாக்டர் ராமதாஸை எந்தக் காலத்திலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவருடைய மகன் டாக்டர் அன்புமணி கூட மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எங்கள் கட்சியிடம் இருந்த ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டைக் கூட கலைஞர் அவர் மகனுக்காக விட்டுக் கொடுத்தார். இது எவ்வளவு பெரும்தன்மை! அதையெல்லாம் கொஞ்சமாவது ராமதாஸ் நினைத்துப் பார்த்ததுண்டா?

நானும் ராமதாஸ் மீது நிறைய குற்றச்சாட்டுகளைச் சொல்ல முடியும். எந்த அறிவாளியையும் தன் பக்கத்தில் வைத்துக்கொள்ள ராமதாஸ் விரும்பியதில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன், பேராசிரியர் தீரன். இவர்களெல்லாம் உதாரணங்கள். ‘ராமதாஸுக்கு எங்களால் கப்பம் கட்ட முடியவில்லை’ என்று இவர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்களே சொல்லியிருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்காகச் செயல்படுகிற தலைவன் என்றார். இப்படி மோசடியான தலைவர் யாரும் இருக்க முடியாது.

தானே பாண்டிச்சேரி முதல்வர், தானே தமிழ்நாட்டு முதலமைச்சர், தானே இந்தியாவின் பிரதமர் இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு ராமதாஸ் தூங்குகிறார். எந்த நேரத்தில் யாருக்கு நண்பன், யாருக்கு விரோதி என்று அடையாளம் காணமுடியாத ஒரு நபர் இந்தியாவில் இருக்கிறாரென்றால் அது ராமதாஸ்தான்.

நேருவை, இந்திராவைக் கடந்து வந்தவர் கலைஞர். ஜெயப்பிரகாஷ் நாராயணனைக் காப்பாற்றிய தலைவர். இந்த மாதிரி சின்ன ஆட்களுக்கெல்லாம் அவர் பதில் சொல்லத் தேவையில்லை. ஒரு விஷயத்தை இங்கே சொல்றேன். எங்களை மாதிரி தோற்றவர்களும் யாருமில்லை. எங்களை மாதிரி ஜெயித்தவர்களும் யாரும் இல்லை. உயர்வு, தாழ்வு எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். அதனால் இதெல்லாம் எங்களுக்கு சாதாரண விஷயம்.

நொடிக்கு நொடி சுய மரியாதை பேசி வரும் ராமதாஸ், தன்னையும் தன் மகனையும், ஐயா, சின்ன ‘ஐயா’ என்று அழைப்பதைத்தான் விரும்புகிறார். இதையெல்லாம் மாற்றிவிட்டு கலைஞரையும் தி.மு.க.வையும் விமர்சனம் செய்யட்டும். என்னைப் பொறுத்த வரை கூட்டணியில் இருந்து கொண்டு அந்தக் கட்சியையும், ஆட்சியையும் விமர்சனம் செய்யும் ராமதாஸ், ஒரு பிளாக் மெயில் அரசியல்வாதி. தி.மு.க. என்பது ஒரு பனங்காட்டு நரி. அது ராமதாஸ் போன்றவர்களின் சலசலப்புக்கு அஞ்சாது’’ என்று சொல்லி முடிக்கும்போது வெற்றிகொண்டானின் கண்களில் உண்மையான தி.மு.க. தொண்டனின் சீற்றம்.
( நன்றி: குமுதம் )

Read More...

நோ கமெண்ட்ஸ்

Read More...

Friday, March 23, 2007

இணையத்தில் சிவாஜி பட பாடல் - போலீஸ் புகார்

சிவாஜி' பட பாடல் திருட்டுத்தனமாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டதால் படத்தின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரஜினி நடித்த, "சிவாஜி' படத்தை தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. பாடல் கேசட் மற்றும் "சிடி'யை ஏப்ரல் 4ம்தேதி ஏவி.எம்., மியூசிக் நிறுவனம் வெளியிட உள்ளது. பாடல் கேசட் மற்றும் "சிடி'க்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால் வெளியான முதல் நாளே பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.
"சிவாஜி' படத்தின் பணிகள் அனைத்தும் ரகசியமாக நடந்து வந்த போதும், முதலில் போட்டோக்கள் திருட்டுத்தனமாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து வெளிநாட்டில் நடந்த படப்பிடிப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன. இது எப்படி நடந்தது என்பதை தயாரிப்பு நிறுவனத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக, "சிவாஜி' படப் பாடல்கள் திருட்டுத்தனமாக இணைய தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வாலி, வைரமுத்து எழுதிய மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் ஒரு பாடல் படத்தின் டைட்டில் பாடலாகும். இந்தப் பாடல் வெளியானதும் ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் இணைய தளத்திலிருந்து மொபைல் போனுக்கு பதிவு செய்து கொண்டுள்ளனர்.
பாடல் இணையதளத்தில் வெளியானது குறித்து தாமதமாக தெரிந்து கொண்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியடைந்துள்ளது. மேலும், அந்த இணைய தளத்தை முடக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த தவறுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற விசாரணை நடந்து வருகிறது. போலீசில் புகார் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

( நன்றி: தினமலர் )

Read More...

பாப் உல்மர் கொலை - ஒருவர் கைது

பாப் உல்மர் கொலை வழக்கில் பாப் உல்மரை அடிக்கடி சந்தித்தவரை போலீஸ் கைது செய்துள்ளது. இவர் பெயரை இன்னும் 8-10 மணி நேரத்தில் வெளியிடப்படும்.

மேலும் செய்திக்கு : இங்கே போகவும்

Read More...

துரைமுருகனை அமைச்சராக்கியது ஆதிகேசவப் பெருமாளா ?

ஒரு நகைச்சுவை கதை உண்டு. பெருமாள் என்ற பெயரை மாத்தி வை என்றால் பெத்த பெருமாள் என்று வைத்துக்கொண்டானாம் ஒருவன் :-). அமைச்சர் துரைமுருகனின் லேட்டஸ்ட் குமரி விசிட் பற்றி.. ( நன்றி: குமுதம் ரிப்போட்டர் கட்டுரை.) அதை தொடர்ந்து
தமிழர் தலைவர் திரு கி.வீரமணி அரிக்கை ( நன்றி: விடுதலை )அமைச்சர் துரைமுருகன் முழு ஆன்மிகவாதி ஆகிவிட்டார் போல...’ என உடன் பிறப்புகளையெல்லாம் விழிவிரியப் பேசவைத்து விட்டது, அமைச்சரின் லேட்டஸ்ட் குமரி விசிட்.

சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியபோதே அவர் ஆன்மிக வாதியாகிவிட்டார் என்று சொல்லப்பட்டாலும், இப்போதுதான் அவர் முழு ஆன்மிகவாதியாகிவிட்டார் என்று சொல்கிறார்கள். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

பட்ஜெட் கூட்டத்தொடர் வருவதால் அதற்கு முன்பாக எல்லா அமைச்சர்களுமே மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தங்கள் துறை ரீதியான பணிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில், பொதுப் பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், கடந்த பதினெட்டாம் தேதி ஒரு நாள் சுற்றுப்பயணமாக குமரிக்கு வந்தார்.

பொதுப்பணித் துறை சார்பில் நடைபெறும் கடலோர தடுப்புச் சுவர் பணிகளைப் பார்வையிடுவது, கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது, இரவில் கட்சிப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது... ஆகியவைதான் அமைச்சரின் அறிவிக்கப்பட்ட பயணத் திட்டம். இதற்காக குழித்துறை பயணியர் விடுதியிலிருந்து நாகர்கோயில் நோக்கி வந்து கொண்டிருந்த அமைச்சரின் கார், திடீரென உள்வாங்கி திருவட்டார் நோக்கி ஓடத் தொடங்கியது.

அப்போதே கட்சிக்காரர்களுக்குப் பயங்கர வியப்பு! கூடவே, ‘கட்சிக்காரர்களோ, அதிகாரிகளோ அமைச்சரைப் பின்தொடர வேண்டாம்!’ என்றும் அறிவுறுத்தப்பட்டது. குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் அமைச்சரின் உதவியாளர்கள் உள்ளிட்ட வெகு சிலரே அமைச்சருடன் பயணமானார்கள்.

திருவட்டாரில் அமைச்சரின் கார் நேராகப் போய் நின்ற இடம், பிரசித்திப் பெற்ற ஆதி கேசவப்பெருமாள் ஆலயம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழைமையான ஆலயம் இது. திருவிதாங்கூர் மகாராஜா வம்சத்தினர் இன்றும் தங்கள் குலதெய்வமாகக் கொண்டாடும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலுக்கு முன்மாதிரியே, இந்த ஆலயம்தான் என்கிறார்கள். ஒரே வித்தியாசம், அங்கு மூலஸ்தானத்திலுள்ள விஷ்ணுவின் சிலை சயன (படுத்த) நிலையில் பதினெட்டு அடி நீளம் இருக்கும். இங்கோ சிலையின் நீளம் இருபத்திரண்டு அடி.

தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில், வருகிற 24_ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. கோயிலின் கும்பாபிஷேகமும் நடைபெற இருப்பதால், திருப்பணி வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில்தான், கட்சிக் கரைவேட்டி சகிதமாக அமைச்சர் கோயில் வளாகத்திற்குள் வந்தார்.

கேரள ஆகம விதிமுறைகள் இங்கு கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதால், மேல்சட்டை அணிந்து உள் பிராகாரத்தினுள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. எனவே, அமைச்சரை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அவருக்கு ஜரிகை போட்ட பட்டு வேஷ்டி மற்றும் மேலே போர்த்திக்கொள்ள மெல்லிய அங்கவஸ்திரம் ஆகியவற்றை வழங்கினர். அமைச்சரும் பவ்யமாக அவற்றை வாங்கிக் கொண்டு, கட்சிக் கரை போட்ட வேஷ்டிக்கும் தனது சட்டைக்கும் விடைகொடுத்தார். சந்தனமாலை மரியாதைகளையெல்லாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர், அடுத்து கோயில் உள் பிராகாரத்தினுள் செல்ல ஆயத்தமானார்.

உடனே பூஜைக்காக பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் ஒரு தாம்பாளத்தில் கொண்டு வரப்பட்டன. உதவியாளர் ஒருவர் அதனை ஏந்திக் கொண்டுவர, அமைச்சர் உள்ளே போனாராம்.

கோயிலில் பூஜை செய்யும் நாராயணன் நம்பூதிரி, முதலில் அமைச்சரின் பெயரைக் கேட்டிருக்கிறார். அமைச்சர் தனது பெயரைச் சொன்னÊதும், நட்சத்திரத்தைக் கேட்டாராம் நம்பூதிரி. சற்று நிதானித்து, ‘கார்த்திகை’ என்று சொன்னாராம் அமைச்சர். பின்னர் அமைச்சரின் பெயரில் சிறப்பு பூஜை நடந்திருக்கிறது. பூஜை முடிந்ததும் நம்பூதிரி கொண்டுவந்த பழங்கள் உள்ளிட்ட பிரசாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட அமைச்சர், சந்தனத்தை எடுத்துத் தனது மார்பில் லேசாகத் தேய்த்துக் கொண்டாராம்.

அதன் பிறகு, அங்கவஸ்திரம் சகிதமாகவே கோயிலை வலம் வந்து அங்குள்ள சிற்பங்களை வெகுவாக ரசித்தார் அமைச்சர். உத்தேசமாக முக்கால் மணிநேரம் அங்கு செலவழித்த அமைச்சர், பின்னர் கரைவேஷ்டி _சட்டைக்கு மாறி நாகர்கோயிலுக்குப் பயணமானார்.

மாணவப் பருவம் தொட்டு திராவிட இயக்கத்தில் ஊறியவரான துரைமுருகன், இந்த அளவுக்குப் பக்தி மார்க்கமாக மாறிப் போனதை தங்களாலேயே நம்ப முடியவில்லை என்கிறார்கள் உடன் பிறப்புகள். அதே சமயம், தி.மு.க.வின் மேல்மட்டப் பிரமுகர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், ‘‘மிக மோசமான உடல் நலப்பாதிப்பு, இருதய அறுவை சிகிச்சை ஆகிய பிரச்னைகளுக்குப் பிறகுதான் அமைச்சரின் போக்கில் இந்த மாற்றம்’’ என்றார்.

அண்மையில் சத்ய சாய்பாபா, கலைஞர் இல்லத்திற்கு வந்தபோதும் கூடவே இருந்து மோதிரம் கேட்டு வாங்கியவர்தான் துரைமுருகன். பின்னர் சாய் பாபாவுக்கு நடந்த பாராட்டு விழாவில், ‘எதையும் முன்கூட்டியே அறியும் சக்தியை, சாய்பாபா பெற்றிருக்கிறார்’ என துரைமுருகன் பேசப்போக, அது பெரிய சர்ச்சையானது. ‘பெரியார்_அண்ணா அரசு என நாங்களெல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு மூத்த அமைச்சர் இப்படி அறியாமையை மக்கள் மனதில் விதைக்கலாமா? இருதய ஆபரேஷன் செய்தவர் என்பதால், இதைவிடக் கடுமையாக அவரைக் கண்டிக்க விரும்பவில்லை’ என அதற்குக் காட்டமாக அறிக்கை விடுத்திருந்தார் தி.க. தலைவர் வீரமணி. இந்தச் சூழலில் மறுபடியும் ஆன்மிக சர்ச்சை துரைமுருகனை வளைத்துக் கொண்டிருக்கிறது.

தவிர, சமீபத்தில் தஞ்சையில் நடந்த அன்பில் பொய்யாமொழி மகன் திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பட்டு வேஷ்டி_சட்டையோடு கலந்து கொண்டதைக் கண்டித்து, மேடையிலேயே வாங்குவாங்கென்று வாங்கிவிட்டார் கருணாநிதி. துரைமுருகன் கோயிலில் பட்டு வேஷ்டி சகிதம் வலம் வந்ததை அவர் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாரோ? ‘எனினும் தனது துறைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத கோயிலுக்கு துரைமுருகன் போனது நிச்சயம் சர்ச்சையைக் கிளப்பக் கூடியதுதான்’ என்கிறார்கள், விவரமறிந்தவர்கள். என்றாலும், கோயில் சிற்பங்களையும் தூண்களையும் சுத்தப்படுத்துவதற்காக நவீன கருவி ஒன்று வாங்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடங்கி வைப்பதற்காகத்தான் அமைச்சர் கோயிலுக்குச் சென்றார் என்றும் சிலர் கூறுகிறார்கள். ‘அதுதான் உண்மையானால், கட்சிக்காரர்களையும் பத்திரிகையாளர்களையும் அமைச்சர் அழைத்துச் செல்லாதது ஏன்? இதிலிருந்தே தெரியவில்லையா அவர் சாமி கும்பிடத்தான் சென்றாரென்று!’ என்றும் சிலர் பதிலடி தருகிறார்கள்.

துரைமுருகனுக்கு நெருக்கமான குமரி தி.மு.க. வி.ஐ.பி. ஒருவர் இது சம்பந்தமாக நம்மிடம் கூறுகையில், ‘‘அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதர், அமைச்சருக்கு மிகவும் வேண்டியவர். அவரது வற்புறுத்தலால்தான் அமைச்சரின் இந்தக் கோயில் விசிட்’’ என்றார்.

கோயில் நம்பூதிரியான நாராயண நம்பூதிரியிடம் அமைச்சர் பெயரில் நடந்த பூஜை பற்றி நாம் கேட்டபோது, அவர் வாய் திறக்கவே மறுத்து விட்டார். அக்கம்பக்கத்தினரோ, ‘‘அமைச்சர் வருவது முன்கூட்டியே தெரிந்திருந்தால், இங்கு நடக்கும் ஊழல்களைப் பட்டியல் போட்டிருப்போம். முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் வந்துட்டுப் போயிட்டார்’’ என ஆதங்கப்பட்டனர்.

இது குறித்து அமைச்சர் துறைமுருகன் என்ன சொல்கிறார் என்பதையறிய அவரைத் தொடர்பு கொள்ள முயன்றோம். பலமுறை முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் பொதுவான சிலரிடம்கருத்துக் கேட்டோம்.

‘பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்; பிள்ளையார் சிலையையும் உடைக்க மாட்டேன்’ என்ற அண்ணாவே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கிற திருமூலரின் வாக்கியத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அப்படிப் பார்த்தால் தி.மு.க.வின் கொள்கை என்பது ‘கடவுள்மறுப்பு’ அல்ல; மூட நம்பிக்கைகளை ஒழிப்பதுதான். அந்த வகையில் தி.மு.க.வினர் கோயிலுக்குச் செல்வதோ, சாமி குப்பிடுவதோ அவர்களின்பகுத்தறிவுக் கொள்கைக்கு விரோதமானது அல்லது.

‘நட்டகல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றிவந்து மொண மொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா! நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்’ என்று சித்தர்கள் பாடியதில் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் பகுத்தறிவுதான் மிளிர்கிறது. அதற்காக சித்தர்கள் நாத்திகர்களா என்ன?

எனவே, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அண்ணா சொன்னதை மீண்டும் இப்போது வலியுறுத்திச் சொல்லி, ‘நாங்கள் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் பகுத்தறிவுவாதிகளே தவிர, கடவுள் மறுப்பாளர்கள் அல்ல; ஆன்மிகத்தின் விரோதிகள் அல்ல’ என்பதை தி.மு.க.வினர் தெளிவுப்படுத்தி விட வேண்டும். அப்படிச் செய்துவிட்டால் இந்தச் சர்ச்சைகளுக்கெல்லாம் இடமே இல்லை. ஏன் அப்படிச் செய்யத் தயங்குகிறார்கள் என்பதுதான் புரியவில்லை!’’ என்றார்கள்.
கி.வீரமணி அறிக்கை ( விடுதலை )

துரைமுருகன் கட்சிக்கரை வேட்டியை மாற்றி
மேலாடையின்றி கோயிலுக்குச் செல்வதா?
தி.மு.க.,வுக்கும், கலைஞருக்கும் இழைத்த
தீரா களங்கம், கறை வேறு உண்டா?
துரைமுருகன் அவர்களை அமைச்சராக்கியது கட்சியும், கலைஞருமா - ஆதிகேசவப் பெருமாளா?
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் துரை முருகன் குமரி மாவட்டம் ஆதிகேசவப்பெருமாள் கோயிலுக்கு கட்சிக்கரை வேட்டியை மாற்றிக் கொண்டு, மேலாடையின்றி சென்றது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களைப் பற்றி எழுத அவர் நமக்கு ஓர் அவசியத்தை உண்டாக்கித் தந்தமைக்காக வெட்கமும், வேதனையும் அடைவதோடு, கூனிக்குறுகி நிற்கும் பகுத்தறிவுச் சுயமரியாதைக் கொள்கை யாளர்களின் குமுறலை முறைப்படி வெளியிட்டு,
நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு (குறள் 784)
என்பதற்கொப்ப, நமது வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டியுள்ளது குறித்து, நாம் மகிழவில்லை; மிகுந்த துன்பத்துடன் தான் எழுதுகிறோம்.
கரை வேட்டியை மாற்றுவதா?
அவர் ஒரு சாதாரண துரைமுருகனாக இருந்து எந்தக் கோயிலுக்குள்ளும் சட்டையைக் கழற்றிவிட்டுச் சென்றால், அதுபற்றி பத்தோடு பதினொன்று சம்பவம் என்று நாம் அலட்சியப்படுத்தி விடலாம், கவலைப்படத் தேவையில்லை.
அவர் மானமிகு முதல்வர் கலைஞர் அவர்களது அமைச்சரவையில் உள்ள ஒரு மூத்த அமைச்சர். தி.மு.க.,வின் தலைமைப் பொறுப்பாளர் களில் ஒருவர். அவர் தனது குமரி மாவட்ட கேசவப் பெருமாளிடம் உள்ள பயபக்தியைக் காட்ட, சட்டையைக் கழற்றியதோடு தி.மு.க., கரை போட்ட தனது வேட்டியையும் கூட மாற்றிவிட்டு, வேறு வேட்டி அணிந்து, ``பகவானைத் தரிசித்துப் பரவசமானார்’’ என்றால், இதைவிட தி.மு.க.,வுக்கு அதன் ஒப்பற்றத் தலைவருக்கு, தன்னை அமைச்சராக்கிய முதல்வருக்குத் தீரா களங்கம் - கறை வேறு உண்டா? `குமுதம் ரிப்போர்ட்டரின்’ அட்டைப் படத்தையும், செய்தி யையும் படிக்கும் கலைஞர் மனது எவ்வளவு காயப்பட்டு, உள்ளம் ரத்தக் கண்ணீர் வடித்திருக்கும் என்பதை நாம் நன்கு உணர்வோம்.
தம்முடைய தோழர்கள், தொண்டர்கள் பெரியார் - அண்ணா வகுத்த கொள்கை நெறியில் நிற்கவேண்டும் என்பதற்காக வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி எழுதியும், பேசியும் வருபவர் நம் முதல்வர் கலைஞர் அவர்கள்.
83 வயதிலும் `சதாவதானம்’ செய்யும் கலைஞர்
`குடிசெய்வார்க்கில்லை பருவம்’ என நேரங் காலம் பார்க்காது, தனது 83 ஆம் வயதிலும் கூட, அத்துணைப் பிரச்சினைகளையும் சந்தித்து - அஷ்டாவதானம் கூட அல்ல - ``சதாவதானம்’’ செய்து, கடுமையாக உழைக்கும் அவருக்கு, சக அமைச்சர்கள் மகிழ்ச்சியைத் தருவதா அல்லது மாறாக நடப்பதா?
`மாண்புமிகு’ வரும் போகும் - `மானமிகு’ அப்படியல்லவே!
`மாண்புமிகு’ என்பது வரும் போகும்; ஆனால், `மானமிகு’ என்பது ஒருமுறை ஏற்றுக்கொண்டால், அது கொள்கையாளர்களை விட்டு இறுதி மூச்சடங்கும் வரை விலகாது!
25.3.2007 `குமுதம்’ ரிப்போர்ட்டரில்’ அட்டையிலேயே (ஊடிஎநச ளுவடிசல) ``பக்திப் பழமான அமைச்சர் துரைமுருகன்’’ என்று அவரின் சட்டை அணியாத படம் போட்டு உள்ளே எழுதியுள்ள கட்டுரையில் உள்ள முக்கிய பகுதிகள் இதோ:
``...திருவட்டாரில் அமைச்சரின் கார் நேராகப் போய் நின்ற இடம், பிரசித்திப் பெற்ற ஆதிகேசவப் பெருமாள் ஆலயம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழைமையான ஆலயம் இது. திருவிதாங்கூர் மகாராஜா வம்சத்தினர் இன்றும் தங்கள் குல தெய்வமாகக் கொண்டாடும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலுக்கு முன் மாதிரியே, இந்த ஆலயம்தான் என்கிறார்கள். ஒரே வித்தியாசம், அங்கு மூல°தானத்திலுள்ள விஷ்ணுவின் சிலை சயன (படுத்த) நிலையில் பதினெட்டு அடி நீளம் இருக்கும். இங்கோ, சிலையின் நீளம் இருபத்திரண்டு அடி.
தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில், வருகிற 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. கோயிலின் கும்பாபிசேகமும் நடைபெற இருப்பதால், திருப்பணி வேலைகளும் நடந்து கொண்டிருக் கின்றன. இந்தச் சூழலில்தான், கட்சிக் கரை வேட்டி சகிதமாக அமைச்சர் கோயில் வளாகத்திற்குள் வந்தார்.
கேரளா ஆகம விதிமுறைகள் இங்கு கண்டிப்பாக அமல்படுத் தப்படுவதால், மேல்சட்டை அணிந்து உள் பிரகாரத்தினுள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. எனவே, அமைச்சரை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அவருக்கு ஜரிகை போட்ட பட்டு வேஷ்டி மற்றும் மேலே போர்த்திக் கொள்ள மெல்லிய அங்கவ°திரம் ஆகியவற்றை வழங்கினர். அமைச்சரும் பவ்யமாக அவற்றை வாங்கிக் கொண்டு, கட்சிக் கரை போட்ட வேஷ்டிக்கும், தனது சட்டைக்கும் விடை கொடுத்தார். சந்தன மாலை மரியாதைகளையெல்லாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர், அடுத்து கோயில் உள் பிரகாரத்தினுள் செல்ல ஆயத்தமானார்.
உடனே, பூஜைக்கான பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் ஒரு தாம்பாளத்தில் கொண்டு வரப்பட்டன. உதவியாளர் ஒருவர் அதனை ஏந்திக் கொண்டுவர, அமைச்சர் உள்ளே போனார்.
கோயிலில் பூஜை செய்யும் நம்பூதிரி, முதலில் அமைச்சரின் பெயரைக் கேட்டிருக்கிறார். அமைச்சர் தனது பெயரைச் சொன்னதும், நட்சத்திரத்தைக் கேட்டாராம் நம்பூதிரி. சற்று நிதானித்து, `கார்த்திகை’ என்று சொன்னாராம் அமைச்சர். பின்னர் அமைச்சரின் பெயரில் சிறப்புப் பூஜை நடந்திருக்கிறது. பூஜை முடிந்ததும் நம்பூதிரி கொண்டு வந்த பழங்கள் உள்ளிட்ட பிரசாதங்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட அமைச்சர், சந்தனத்தை எடுத்துத் தனது மார்பில் லேசாகத் தேய்த்துக் கொண்டாராம்.
அதன் பிறகு அங்கவ°திரம் சகிதமாகவே கோயிலை வலம் வந்து அங்குள்ள சிற்பங்களை வெகுவாக ரசித்தார் அமைச்சர். உத்தேசமாக முக்கால் மணிநேரம் அங்கு செலவழித்த அமைச்சர், பின்னர் கரைவேஷ்டி - சட்டைக்கு மாறி நாகர்கோயிலுக்குப் பயணமானார்.
மாணவப் பருவம் தொட்டு திராவிட இயக்கத்தில் ஊறியவரான துரைமுருகன், இந்த அளவுக்கு பக்தி மானாக மாறிப் போனதை தங்களாலேயே நம்ப முடியவில்லை என் கிறார்கள் உடன்பிறப்புகள். அதே சமயம், தி.மு.க.,வின் மேல்மட்டப் பிரமுகர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், ``மிக மோசமான உடல்நலப் பாதிப்பு, இருதய அறுவை சிகிச்சை ஆகிய பிரச்சினைகளுக்குப் பிறகுதான் அமைச்சரின் போக்கில் இந்த மாற்றம்’’ என்றார் என்று `குமுதம் ரிப்போர்ட்டர்’ எழுதுகிறது!
அன்று சாய்பாபா சிக்கல்!
முன்பு முதல்வர் கலைஞர் இல்லத்திற்கு சாய்பாபா வந்தபோதே, அவரை வரவேற்று மேலே அழைத்துப் போக கலைஞரின் தூதுவராக வந்த சகோதரர் துரை முருகன், சாய்பாபாவிடம் மோதிரம் பெற்றதோடு, எதையும் முன்கூட்டியே அறியும் சக்தியை, சாய்பாபா பெற்றிருக்கிறார் என்று பேசிய போதும், மோதிரம் வரவழைக்கும் சாய்பாபாவின் மோடி ம°தான் வேலை பி.பி.சி. தொலைக்காட்சி மூலம் சந்தி சிரித்ததும் உலகம் முழுவதும் அறிந்த செய்தி என்றே அவருக்குச் சுட்டினோம்.
நீங்கா அவமானம்!
இப்போதும் அதுபற்றிக் கவலைப்படாமல், இப்படி நடந்துகொள்வ தனால் தி.மு.க.,வுக்கும், கலைஞர் அரசுக்கும் நீங்கா அவமானத்தை அல்லவா தேடி வைத்துவிட்டார்! நாம் எங்கு போய் முட்டிக் கொள்வது?
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கென்றே ஓர் அமைச்சர் உள்ளார். கோயிலுக்குச் செல்வதும் அவருடைய பல பணிகளில் ஒரு பகுதி என்றாலும்கூட, அவர் கூட தி.மு.க., கரை வேட்டியை மாற்றிக் கொண்டு சென்றார் என்று செய்தி வந்ததில்லையே!
அ.தி.மு.க.,வும் - பகுத்தறிவும்
முந்தைய அ.தி.மு.க., அமைச்சர்கள் மண் சோறு, கல் சோறு தின்று, வீதியில் புரண்டனர் என்றால், அவர்கள் தலைமையும் சரி, அவர்களும் சரி தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று என்றும் அழைத்துக் கொண்டதில்லை.
ஆனால், கலைஞர் அரசில், பதவிப் பிரமாணம் எடுக்கும்போது முதல்வரிலிருந்து எந்த அமைச்சரும் கடவுள் பெயரால் பிரமாணம் (டீயவா) எடுக்கவில்லை என்பதற்கு என்ன காரணம்? ஒரே காரணம், இது பெரியார் - அண்ணா வழி நடக்கும் பகுத்தறிவாளர் அரசு என்று உலகுக்குப் பிரகடனப்படுத்தத்தானே!
அப்படி உறுதிமொழி எடுத்த பிறகு, இப்படி ஒரு அலங்கோலமா? அவலமா?
முதலமைச்சருக்கு மன உளைச்சல்!
முதல்வர் கலைஞருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாவிட்டாலும், மன உளைச்சலையாவது ஏற்படுத்தாமல் உதவ வேண்டிய பொறுப்பு நம் மைப் போன்றோரின் ஆதரவுகளைவிட, அவருடைய அமைச்சரவை யில் அங்கம் வகிப்பவர்களின் ஆதரவு அன்றாடக் கடமை அல்லவா?
அமைச்சராக ஆக்கியது கேசவப் பெருமாளா?
தி.மு.க., கரை போட்ட வேட்டிதான் அவரை மந்திரியாக்கியது - கலைஞரின் சகோதரப் பாசமும், கொள்கைக் குடும்பம் இது என்று காட்டுகின்ற வற்றாத அன்பும்தான் அவரை அமைச்சராக்கியது!
கேசவப் பெருமாளோ அல்லது பட்டுத் துண்டு, பட்டு வேட்டியோ அல்ல. வேலிகள் பயிரை மேய்ந்தால், நாம் வன்மையாகக் கண்டிப்பது நம்முடைய கடமையாகிறது!
இந்த அரசின் சாதனைகளைப் பாராட்ட வேண்டியவற்றை பாராட்டும் அதே நேரத்தில், கண்டித்து உரிமையுடன் சுட்டிக் காட்டவேண்டியவற்றை உடனடியாகச் சுட்டிக்காட்ட திராவிடர் கழகம் ஒருபோதும் தயங்காது!

சென்னை
22.3.2007

தலைவர்,
திராவிடர் கழகம்பிகு: பழைய படங்கள் சில ..Read More...

தமிழக பட்ஜெட்


* அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு
* புதிய வரிவிதிப்பு இல்லை
* 39 ரயில்வே மேம்பாலங்களுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு.
* ரூ. 3,50 கோடியில் 3000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
* ரூ 9000 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம்
* தனியார் பஸ்களுக்கு வரிச்சலுகை
* மாணவர்களுக்கு இலவச பஸ் பயண சலுகை - 300 கோடி ஒதுக்கீடு
* அரிசி பருப்பு எண்ணெய் விலை உயராமல் தடுக்க தீவிர நடவடிக்கை
* சென்னை நகரில் ரூ. 16 கோடி செலவில் சாலை பாதுகாப்புப் பணிகள்.
* மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்க ரூ. 54 கோடி
* இலவச சீருடைத் திட்டத்துக்கு ரூ. 58 கோடி.
* ரேஷன் கடைகளில் நவீன எடைபோடும் இயந்திரங்கள் வழங்க ரூ. 11.5 கோடி.
* காவல்துறைக்கு ரூ. 2,136 கோடி ஒதுக்கீடு.
* சிறைத் துறைக்கு ரூ. 96 கோடி ஒதுக்கீடு.
* பள்ளி மாணவிகளின் இலவச சைக்கிள் திட்டத்துக்கு ரூ 102 கோடி ஒதுக்கீடு
* தமிழ்நாட்டில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். இத்திட்டத்திற்காக 2007-2008 ஆம் ஆண்டுக்கு மேலும் ரூ. 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்க நிலங்கள் எல்காட் நிறுவனத்திற்கு ஒப்படைக் கப்பட்டுள்ளன. அது போன்று, திருநெல்வேலியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னை தரமணியில் 2-வது டைடல் பூங்கா அமைப் பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
* சென்னையில் சர்வதேச தரத்திலான நவீன மாநில நூலகம் ஒன்றை இந்த அரசு அமைக்கும். அனைத்து நூல்கள் மற்றும் இணைய வெளியீடுகளோடு, நவீனக் கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாபெரும் மாதிரி நூலகமாக இது அமையப்பெறும்.
* ஜுன் மாதம் முதல் ஹெல்மெட் கட்டாயம்
* சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டை.
* அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 1,000 ஆக உயர்வு.
* எல்லைப் போராட்ட தியாகிகளுக்கான நிதியுதவி ரூ. 4.000 ஆக உயர்வு.
* கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையைக் காண வரும்சுற்றுலாப் பயணிகளுக்கு ஆங்கில, பிறமொழிக் கையேடுகள்

* குடும்பத்தலைவிகள், சாதாரண மக்கள் மற்றும் விவசாயிகள் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்க ளுக்கு வரிவிதிப்பு கூடாது என்ற இவ்வரசின் கொள்கைக் கிணங்க பின்வரும் பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரி ரத்து செய்யப்படும்.

* மண்ணெண்ணெய் பிரஷ்ஷர் ஸ்டவ்.

* உள்ளூர் வரி செலுத்தப் பட்ட இரசாயன உரங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலப்பு உரக்கலவைகள்.

* விதைப்பதற்காக மட்டும் உபயோகப்படுத்தப்படும் அனைத்து விதைகள்.

* முத்திரையிடப்பட்ட கேன்கள் மற்றும் பாக்கெட்டுக ளில் விற்கப்படும் சுத்திகரிக் கப்பட்ட குடிநீர்.

* கொப்பரை நீங்கலாக மாநிலத்தின் உள்ளும் வெளி யிலும் விற்கப்படும் தேங் காய்.

* பட்டாணி மாவு.

* வறுத்த பட்டாணி.

* தேங்காய் சிரட்டைத் தூள்.

* பஞ்சாமிர்தம், நாமக்கட்டி, விபூதி மற்றும் பிரசாதம்,

* குறிப்பிட்ட 38 வகை நாட்டுமருந்துகள்.

* கடல் சிப்பி மற்றும் கடல் பாசி.

* செயற்கை வைரங்கள்.

* தஞ்சாவூர் தட்டு.

* துணிப்பை.

* வரைப்பட மற்றும் பகுப்பாய்வு உபகரணங்கள்.

* பயிற்சி நோட்டுப் புத்தகம் மற்றும் வரைப்பட புத்தகம்.

* கணக்கு பயிற்சி உபக ரணங்கள்.

* மரத்திலான பென்சில், பென்சில்கள், அழிப்பான்கள், எபோனைட் பேனாக்கள், எபோனைட் பந்து முனைப் பேனாக்கள், மை வில்லைகள் உள்ளிட்ட எழுதும் மை.

* ஆலையில் தயாரிக்கப் படாத, கைத்தறி மற்றும் விசைத்தறிகள் மூலம் தயாரிக் கப்படும் தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள்.

* அனைத்துவகை கற்பூ ரம்.

* முந்திரித்தோல்.

* கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், அனைத்து சமையல் எண்ணெய்களுக்கும் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்கும் விரிவாக்கப்படும்.

* சமையல் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், புண்ணாக்கு மற்றும் எண் ணெய் நீக்கப்பட்ட புண்ணாக்கு உள்ளிட்ட வகைகளுக்கு 2000-ஆம் ஆண்டு நிர்ணயிக் கப்பட்ட விற்பனை வரி விலக்குக்கான ஆண்டு விற் பனை தொகை உச்சவரம்பு, ரூ.300 கோடியிலிருந்து ரூ.500 கோடியாக உயர்த்தப்படும்,

* கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பருப்பு மற் றும் பயறு வகைகளுக்கு வழங்கப் பட்ட சலுகைகள், மொச்சை, காராமணி,

தட்டைப் பயறு, கொள்ளு மற்றும் அவரை ஆகியவற்றிற்கும் விரிவாக்கப்படும்.

* பருப்பு மற்றும் பயறு வகை கள் ஒவ்வொன்றுக்கும் 2000-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு விற்பனைத் தொகை உச்சவரம்பு, ரூ. 300 கோடியிலிருந்து ரூ. 500 கோடியாக உயர்த்தப்படும்.

* கோதுமை மீதான 4 சதவீத வரி 2 சதவீதமாகக் குறைக்கப்படும்.

* நட்சத்திர தகுதி பெறாத உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களால், வரி செலுத்தி கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக் கான வரி வீதம், 12.5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்படும்.

சாதாரண மக்களால் உபயோகப்படுத்தப்படும் பின் வரும் பொருட்களுக்கான வரி வீதம் 12.5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைக்கப்படும்.

* உடனடி காபி நீங்கலாக சிக்கரி மற்றும் வணிகச் சின்னமிடாத காபி தூள்.

* வணிகக் சின்னமிட்ட மசாலா பவுடர்.

* மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ், மாவு, மரவள்ளிக்கிழங்கு திப்பி.

* பஜ்ஜி மாவு.

* சத்துமாவு.

* வணிகச் சின்னமிடாத நெய்.

* பேரீச்சம்பழம் பாகு

* தாவர எண்ணைய் (வானஸ்பதி)

* வணிகச் சின்னமிடாத பன், ரக்ஸ், பிஸ்கட், கேக் போன்ற பேக்கரி பொருட்கள்.

* நோய் அறிதற்கான சோதனைக் கருவிகள் மற் றும் சோதனைக்கான வேதிப்பொருள்கள், துணைப் பொருள்கள், ரத்தம் சேமிக்கும் பைகள் மற்றும் ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தற்குரிய சிகிச்சைப் பொருள்கள்.

* மாவு அரவை இயந்திரங் கள்.

* ஆர்.சி.சி. பைப்புகள் (சிமெண்ட் கொள்முதல் மீது செலுத்திய வரிக்கு உள்ளீட்டு வரி வரவு வசதியின்றி)

* ஆர்.சி.சி. மூலம் தயாரிக் கப்படும் கிராதிகள் கதவு மற்றும் ஜன்னல் பிரேம்கள் (சிமெண்ட் கொள்முதல் மீது செலுத்திய வரிக்கு உள்ளீட்டு வரி வரவு வசதியின்றி)

* வணிகச் சின்னமிடாத ஸ்டீல் பர்னிச்சர்.

* கதவுகள், ஜன்னல்கள், சட்டங்கள், புரோபைல்கள், மோட்டார் வாகன, தொழில் மற்றும் கழிவுநீக்க உபகரணங்கள் நீங்கலான பிளாஸ்டிக் பொருட்கள்.

* குத்துவிளக்கு, அகல்விளக்கு, பாவை விளக்கு, யானை விளக்கு, கார்த்திகை விளக்கு, கோவில் மணி, கற்புரத்தட்டு, தூபக்கால்.

* வார்ப்படச் சிலைகள்.

* பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத ஒலி நாடாக்கள்.

* கணக்குப் பேரேடுகள் மற்றும் நாட்குறிப்புகள்.

* பள்ளிக்கூடப் பைகள் மற்றும் பயணத்திற்கு பயன்படும் வணிகச் சின்னமிடாத பைகள்.

* கேடயங்கள்.

* முள்வேலி கம்பி, கம்பி வடம் மற்றும் கம்பி இணைப்புகள்.

* பருத்தி நூலினாலான தரை துடைப்பான்கள்.

* உபயோகப்படுத்தப்பட்ட சீருந்துகள், மோட்டார் வாகனங்கள் (உள்ளீட்டு வரி வரவு வசதியின்றிக் கூட்டிய மதிப்பிற்கு மட்டும்)

* நெசவு எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள்.

* ஆணிகள், புஷ்கள், வாஷர்கள், ரிவிட் போன்ற இணைப்பான்கள்.

* எலக்டோப்ளக்ஸ்.

* வண்டலூர் உயிரியல் பூங்காவில் வண்ணத்துப் பூச்சிப் பூங்கா.
* மாமல்லபுரத்தில் சிற்பப் பூங்கா.
* முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் ரூ. 50 லட்சத்தில் புதுப்பிப்பு நூற்றாண்டு விழா தோரண வாயில் அணையா விளக்கு அமைப்பு


பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்ட இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சட்ட சபைக்கு வரவில்லை. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Read More...

பெரியாரின் பேரன் X பெரியரின் சீடன்

மத்திய அமைச்சரும் பெரியாரின் பேரனு மான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். மற்றும் பெரியாரின் சீடருமான கீ.விரமணிக்கும் நடக்கும் பகுத்தரிவு சண்டை'திடீரென்று 'பெரியார்' பட விவ காரத்துக்குள் நுழைந்து வீரமணியை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறீர்களே..."


இளங்கோவன்: "பெரியார் உலக வரலாற்றில் ஒரு ஒப்பற்ற நாயகர். மூட நம்பிக்கை ஒழிப்பு, சாதி மறுப்பு, தமிழ் உணர்வு என்று பல்வேறு விஷயங்களில் தமிழனைத் தட்டியெழுப்பி உணர்வுகளை விதைத்தவர். அவரது வாழ்க்கை வரலாறு படமெடுக்கப்படுகிறது என்று அறிந்ததும், அதனை வரவேற்று மகிழ்ந்த எத்தனையோ பேரில் நானும் ஒருவன். பெரியாரின் கொள்கைகள்-கோட்பாடுகள், அவர் வாழ்ந்த வாழ்க்கை இதெல்லாம் வரும் தலைமுறைகளுக்கு இந்தப் படம் மூலமாக எளிதாகச் சென்று சேரும் என்று நினைத்தேன். தமிழக முதல்வர் கலைஞர், அரசு சார்பில் பெரியார் படமெடுப்பதற்காக 96 லட்ச ரூபாய் வழங்கி இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். ஆனால், 'பெரியார்' படத்தில் பெரியாரின் மனைவி நாகம்மையார் குறித்த வரலாறுகள் அனைத்தும் மறைக்கப்பட்டிருப்பதாக எனக்கு தகவல் வந்திருக்கிறது. நாகம் மையார் ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்தவர். இருந்தும் அவர் பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் அப்படியே ஏற்று வாழ்ந்திருக்கிறார். கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்பட்டதும் உடனே அந்தப் போராட்டத்துக்கு நாகம் மையார் தலைமை தாங்கினார். வைக்கம் போராட்டத்துக்கு தமிழகத்திலிருந்து பெரும் திரளாகச் சென்ற தொண்டர்கள், கையில் காசில்லாமல் பசியோடு இருந்தபோது வீதிகளில் பாடல்களைப் பாடி அதன்மூலம் கிடைத்தப் பணத்தை வைத்து அவர்களது பசியாற்றியவர் அவர். அதேபோல், பெரியார் நடத்திய கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டத்திலும் தீவிரமாக பங்கேற்றவர். பெரியாரின் துணைவியார் கண்ணம்மாவும் பெரியாரோடு இணைந்து போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். பெரியாரின் கொள்கைகளை உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்திருக்கிறார். சொல்லப்போனால், அவர்களெல்லாம் தியாக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். நாட்டு நலனுக்காக நிறைய பாடுபட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள்பற்றிய சம்பவங்கள் பெரியார் படத்தில் இல்லையாம். அதனால்தான் வீரமணியிடம் கேள்வி கேட்கிறேன். பெரியார், திராவிட இயக்கங்களுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல... ஆரம்பத்தில் கிராமம் கிராமமாகச் சென்று காங்கிரஸ் பேரியக்கம் வளரக் காரணமாக இருந்தவரும் பெரியார்தான். அவரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி குடியரசு பத்திரிகையின் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இருந்தார். பெரியார் அன்றைய அரசியல் சூழ்நிலைகளைக் கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் குடியரசு பத்திரிகையில் எழுதி விடுவார். அதற்காகத் தானே பொறுப்பேற்று பலமுறை சிறை சென்றவர், ஈ.வெ.கிருஷ்ணசாமி. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர் எனது தந்தையார் ஈ.வெ.கி. சம்பத். அவர் பெரியாரின் அன்புக்கு பாத்திரமானவர். இப்படி பெரியாரோடு நெருங்கிய சொந்தங்களாக மட்டு மல்லாமல், அவரது கொள்கைக்கு உறுதுணையாக நின்றவர்களின் வரலாற்றை மறைத்துத்தான் பெரியார் படம் எடுக்க வேண்டுமா? அதைத்தானே வீரமணி செய்து கொண்டிருக்கிறார். வரலாற்றை மறைத்தும் திரித்தும் மோசடி செய்தால் மக்கள் மன்றத்தில் அவர்களின் முகமூடி கிழிக்கப்படும். அதுமட்டுமல்ல, தமிழக அரசு தாராளமாக இந்தப் படத்துக்காக நிதி உதவி செய்த பிறகும் ஊர் ஊராகச் சென்று பெரியார் படத்துக்கு நிதி திரட்டுகிறார் வீரமணி. சமீபத்தில் டெல்லியில்கூட ஒரு நிகழ்ச்சி மூலம் இப்படிப் பணம் வசூலிக்கப்பட்டது. வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும் வசூல் வேட்டை நடந்திருக்கிறது. ஆனால், பெரியார் படம் வெளியிடுவதில் மட்டும் தாமதம் காட்டுகிறார்கள். இது ஏன்? இன்னும் வசூல் வேட்டை பாக்கி இருக்கிறதா? பெரியார் படம் தொடர்பாக வீரமணி வசூலித்த பணம் பற்றி வெளிப்படையாக அவர் கணக்குகளை வெளியிட வேண்டும். இல்லையென்றால், பெரியார் சொத்துக்கள் மற்றும் டிரஸ்ட் தொடர்பான விவகாரங்களுக்குள் நான் தலையிட வேண்டியிருக்கும். இதனைப் பெரியாரின் பேரனாக மட்டுமல்லாமல், பெரியார் நேசித்த காங்கிரஸின் ஒரு தொண்டனாகவும் கேட்கிறேன்."

இளங்கோவன் ஏன் ஆத்திரப்படுகிறார்?

'பெரியார்' படம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்குக் கருத்துக் கேட்டு திராவிடர் கழக தலைவர் வீரமணியைத் தொடர்புகொண்டோம். அவர் சார்பில் நம்மிடம் பேசினார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன். ''இது தொடர்பாக திராவிடர் கழகம் சார்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறோம். அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள்தான் எங்கள் தரப்பு விளக்கம். அதனால், அதனையே எங்கள் விளக்கமாக போட்டுக் கொள்ளுங்கள்...'' என்றார். அந்த அறிக்கையின் சுருக்கம் - ''பெரியார் திரைப்படத்துக்காக உள்ளன்போடு மக்கள் நிதி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பத்து ரூபாய் நன்கொடையாக கொடுத்தால்கூட அதனை விடுதலையில் பெயருடன் வெளியிடுகிறோம். மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் விடுதலையை படிக்காவிட்டாலும், எங்கள் மீது குற்றம் சொல்வதற்கு முன்பாகவாவது அதுபற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள முயற்சி எடுத்திருக்கவேண்டும். வாய் புளித்ததோ-மாங்காய் புளித்ததோ என்ற போக்கில் அவர் பேசியிருப்பதைக் கண்டு பரிதாபப்பட வேண்டியுள்ளது.

'பெரியார்' திரைப்படத்தில் இந்த இந்தக் காட்சிகள் இல்லை; சம்பவங்கள் இல்லை என்கிற குற்றச் சாட்டையும் வைத்திருக்கிறார். எவை எவை இடம் பெற்றுள்ளன என்பதை ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள பெரியாரின் பேரன் முயற்சி எடுத்தாரா? அடுத்து 'பெரியார்' படம் எப்போது வெளிவரும் என்பதில் கட்டுக்கடங்கா ஆர்வம் அவரைத் துளைத்து எடுத்திருக்குமானால் சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாமே?

ஆத்திரப்பட்டு இளங்கோவன் இப்படி அள்ளித் தெளிப்பதற்குக் காரணம் என்ன? வேறு காரணம் இருக்கிறது. அது என்ன என்பது தேவைப்படும்போது வெளியிடப்படும்."

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்(இன்று) அளித்த பேட்டி:

"பெரியார்' திரைப்படம் குறித்து நான் கேட்ட சில கேள்விகளுக்கு வீரமணி தன்னிடம் இருக்கக் கூடிய விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரில் ஒருவரை விட்டு பதில் சொல்ல வைத்துள்ளார். என்னுடைய பின்னணி பற்றியும், நான் கேட்ட கேள்விகளுக்கு பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்தும் தேவைப்படும்போது வெளிப் படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

வீரமணியைப் பார்த்து நான் கேட்கிறேன். இருவரும் ஒரே மேடை யில் உங்களுடைய பின்னணி பற்றி யும் என்னுடைய பின்னணி பற்றியும் விவாதிக்க தயாரா? இந்த விவாதத்தின் போது, செயற்கையாக ஏற்படுத்தப் பட்ட தீவிபத்து பற்றியும் பேசுவேன். வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள முதலீடு பற்றியும் பேசுவேன். இதற்கெல்லாம் வீரமணி பதில் சொல்ல தயார் என்றால் அவர் சொல்கிற இடத்தில், சொல்கிற நேரத்தில் விவாதிக்க நான் தயார்.

"பெரியார்' திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் பெரும் முயற்சி எடுத்து சிறப்பாக நடித்திருந்தபோதிலும், அந்தப் படத்தை வெளியிடாமல் இருப் பதற்கு சிலர் செய்யும் குளறுபடிகள் தான் காரணம் என்று குறிப்பிட்டு, விளக்கம் கேட்டேன்.

பெரியார் ஈரோடு என்ற வட்டத்திற் குள் அடங்கி விட்டாரா என்று வீரமணி கேட்கிறார். கடலூர், வேலூர் வட்டத் தில் மட்டும் பெரியார் அடங்கி விட்டாரா என்று நான் கேட்கிறேன். இதற்கெல்லாம் நேரடியாக வீரமணி யிடமிருந்து நான் பதில் எதிர்பார்க்கி றேன்.

"பெரியார்' திரைப்படம் பிப்ரவரி 2ம் தேதி வெளியீடு என்றார்கள். இப்போது அது பற்றிய சத்தமே இல்லை. மேலும் அந்தத் திரைப்படத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரியார் ஆற்றிய தொண்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒருவ ருடைய வாழ்க்கை வரலாறு என்றால் அனைத்து விவரங்களும் அதில் இடம்பெற வேண்டும்.

இந்தத் திரைப்படத்தை வாங்குவ தற்கு விநியோகஸ்தர்கள் இல்லை என்று சொன்னாலும் கூட வீரமணி தன்னிடம் வைத்துள்ள பணத்தைக் கொண்டு படத்தை திரையிட முடியும். யார் ஆட்சிக்கு வந்தாலும் இவருக்கு மகுடம் சூட்டி, சமூக நீதி காத்தவர் என்று பட்டம் சூட்டி விடுகிறார்கள்.

தமிழக அரசு சார்பாக முதல்வர் கருணாநிதி, "பெரியார்' திரைப்படத் திற்கு 96 லட்சம் ரூபாய் கொடுத்திருக் கிறார். இப்போது படம் வெளியீடு தள்ளிக் கொண்டே போவதால், தேவையான நேரத்தில், தேவையான நடவடிக்கையை முதல்வர் எடுப்பார் என்று நம்புகிறேன்.

படத்தை வெளியிட என்னிடம் பணம் இல்லை என்று வீரமணி எங்களிடம் கையேந்தினால் கணக்கு வழக்குகளைப் பார்த்து உதவிட நாங்கள் தயார். மதுரை மேற்கு தொகுதியில் காங்கிரஸ்தான் நிச்சயம் போட்டி யிடும். திமுக அரசில் எந்தத் தவறையும் காங்கிரஸ் பார்க்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றி வருகிறது. தவறு தெரிந்தால் சுட்டிக் காட்ட காங்கிரஸ் தயங்காது. தமிழகத்தில் 6 ஜவுளிப் பூங்காக் களை அமைக்கத் திட்டமிட்டு அவற்றில் 4 ஏற்கனவே அமைக்கப் பட்டு விட்டது. விரைவில் மதுரை, கரூர் ஆகிய இடங்களில் ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு அமைச்சர் இளங்கோவன் கூறினார்.

( பழைய படம் புதிய காப்பி - காப்பி அடித்த தளங்கள் periyar.org, vikatan.com )
( செய்தி உதவி, ஜூவி, மற்றும் சில செய்திதாள்கள் )

Read More...