பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 07, 2007

நோ கமெண்ட்ஸ்

கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்போம் - கர்நாடக மாநில தி.மு.க.அறிவிப்பு

கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கர்நாடக மாநில தி.மு.க. தெரிவித்து உள்ளது. அறிக்கை
கர்நாடக மாநில தி.மு.கழக செயலாளர்(பொறுப்பு) டி.கிள்ளிவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
கர்நாடக தமிழர்கள் கர்நாடகத்தில் காலம்காலமாக வாழ்ந்து வருகிறார்கள். கன்னட நாட்டின் நலன் தான் கர்நாடக தமிழர்களின் நலனாகும்.

ஆதரவு கர்நாடக மக்களின் ஒட்டுமொத்த நலன்கருதி முதல் மந்திரி எச்.டி.குமாரசாமி தலைமையில் காவிரி நதி நீர் பங்கீடு சம்மந்தமாக கர்நாடக அனைத்துக்கட்சிகள் எடுக்கின்ற தீர்மானத்திற்கு கர்நாடக தி.மு.கழகம் தனது முழு ஒத்துழைப்பை கொடுக்கிறது.
எங்கள் தலைவர் கலைஞர் கூறியுள்ளப்படி, கர்நாடக தமிழரும், தமிழக தமிழரும், கன்னட மக்களும் உறவினர்களாக இருக்க விரும்புகிறோம். அவ்வாறே இருந்து கொண்டுமிருக்கிறோம் என்பதை கர்நாடக தி.மு.கழகம் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் டி.கிள்ளிவளவன் கூறி உள்ளார்.

இந்த செய்தி சன் டிவியில் வராது அதனால் சன் டிவி படம் இங்கே. ஒரு ஸ்பெஷல் எஃபெக்ட் அவ்வளவு தான் :-)

28 Comments:

Hari said...

தேசிய கட்சிகளும், பிராந்திய கட்சிகளும், திராணியற்று, ஒரு புள்ளியில் இணைந்துள்ளது

சிநேகிதன் said...

ஆனால் உதயா டிவியில் கீழ்வருமாறு செய்தி வரும்:

தலைப்புச்செய்திகள்

"கர்நாடகா வாழ் தமிழர்கள், காவிரி நடவர் மன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு!
கர்நாடக அணைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவிற்கு ஆதரவு!
"
விரிவான செய்திகள்

"
காவேரி நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள், பெங்களூட் அல்சூர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து
நடவடிக்கைகளுக்கும் அதாரவாக இருப்போம் என்று கர்நாடகா வாழ் தமிழர் சங்கத்தலைவர் திரு மூனா,கானா தெரிவித்தார்.
இதனால் அப்பகுதி முழுவதும் பதட்டம் நிலவுகிறது.
"

Boston Bala said...

கர்நாடக அதிமுக என்ன சொல்கிறார்கள்?

G.Ragavan said...

உங்களுக்கு நோ கமெண்ட்சாக இருக்கலாம் இட்லி வடை. ஆனால் ஒரு கர்நாடகத் தமிழன் என்ற வகையில் என்னுடைய கமெண்ட்டை நான் பதிவு செய்ய வேண்டும்.

கர்நாடகத்தில் இதுதான் உண்மை நிலை. அதுதான் எங்களுக்கும் பாதுகாப்பு. தமிழ்ச்சங்கமும் கர்நாடக அரசிற்கு முழு ஆதரவினை வழங்கியிருக்கிறது. அது சரியா தவறா என்பதனை விட இங்கிருக்கும் தமிழருக்கு அது எவ்வளவு பெரிய உதவி என்று உங்களுக்குப் புரிய நியாயமில்லை.

கருணாநிதியை நான் உத்தமர் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால் தீர்ப்பு வந்த பிறகு அவர் சொன்னவை அனைத்துமே எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாத சொற்கள். ஆனால் அவர் பக்கத்தில் இருந்த கத்துக்குட்டி தயாநிதி மாறன் உணர்ச்சி பொங்கப் பேசுகையில் எனக்கெல்லாம் அடிவயிறு கலங்கியது உண்மைதான். இதற்கெல்லாம் உச்சகட்டமாக தமிழ்நாட்டுக்குள் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு ஐநூறு டி.எம்.சி தண்ணீர் வாங்கித் தராத கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று உளறிக் கொட்டினாரே ஜெயலலிதா....அவர் பேச்சு மாதிரி இருந்தால் போதும்....எங்கள் நிலமை உருப்படும்!

IdlyVadai said...

பாஸ்டன் பாலா - எல்லா பேப்பர்களையும் பார்த்துவிட்டேன். செய்தி கிடைக்கவில்லை. இல்லை இத்துடன் சேர்த்து போட்டிருப்பேன்.

IdlyVadai said...

ஜி.ராகவன், எதுக்கும் சிகப்பு சொக்காய், மஞ்சள் பேண்ட் ஒன்று வாங்கி போட்டுக்கொள்ளுங்கள். திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் பேச்சு உசுப்பிவிடுவதாக தான் இருந்தது. கலவரம் எதுவும் நடக்காதது டிவி சேனல்களுக்கு ஏமாற்றம் என்று நினைக்கிறேன். அவர்கள் கொடுத்த செய்தி அது மாதிரி இருந்தது. யாரும் முழு தீர்ப்பை படிக்கவில்லை.

Anonymous said...

நதிகளை தேசியமயமாக்கினால் தான் இது போன்ற மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சனைகளை களைய முடியும்.

VSK said...

அமெரிக்கத் தமிழன் என்ற முறையில் கேட்கிறேன்!

வறட்சிக்காலத்தில் எப்படி பங்கீடு எனச் சொல்லவில்லை என தமிழக அரசு ஒரு முறையீடு செய்யப் போகுதாமே!

உண்மையா?

இன்னும் ஆந்திரத் தமிழன், கேரளாத் தமிழன்லாம் வாங்கப்பா!

:))

Anonymous said...

//
ஜி.ராகவன், எதுக்கும் சிகப்பு சொக்காய், மஞ்சள் பேண்ட் ஒன்று வாங்கி போட்டுக்கொள்ளுங்கள். திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் பேச்சு உசுப்பிவிடுவதாக தான் இருந்தது.
//

ஒரு மனிதரின் மரண பயத்தில் மகிழ்ச்சியை காண்பீரானால், அதை நான் வண்மையாக கண்டிக்கிறேன். ஒரு சராசரி கர்நாடக தமிழனால் வேறு என்ன செய்ய முடியும்?

ஜூன் மாதம் 2005 ஆம் ஆண்டு லண்டனில் மெட்ரோ ரயிலில் குண்டு வெடித்ததை தொடர்ந்து இங்கே அமெரிக்காவில் 3 நாட்களுக்கு மேல் ரயில் பயனத்தை தவிர்த்தவர்கள் பலரை எனக்கு தெரியும். அதற்காக அவர்கள் அனைவரும் கோழைகள் என்றாகி விடுமா?

Anonymous said...

தமிழகத் தமிழன் தண்ணீர் கிடைக்காமல் செத்தாலும் பரவாயில்லை. தமிழகத்திற்கு துளி பிரயோஜனம் இல்லாத கர்நாடகத்தமிழன் உயிரோடு இருப்பதுதான் முக்கியம்.

லண்டனில் குண்டு வெடித்த போது அங்கு பிறந்து வளர்ந்து அந்த நாட்டு குடியுரிமையுடன் எல்லா சலுகைகளையிம் அனுபவத்து வரும் சில இளைஞர்களிடம் பிபிசி நிறுவனம் பேட்டி எடுத்த போது.

எங்கள் மக்கள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் உங்களால் மாண்டுபோனபோது வராமல் இப்போது வெறும் நாற்பது பேர் கொல்லப்பட்டதற்காக வந்து கேட்கிறீர்களே? என்று பேட்டியெடுத்தவர்களையே கேட்டனர் அந்த முஸ்லீம் இளைஞர்கள்.

அந்த தைரியம் கூட கர்நாடகா வாழ் தமிழர்களுக்கு இல்லையே!.

Anonymous said...

Any comments from PMK, Karnatka kilai?

Anonymous said...

சில கேள்விகள் விசித்திரமாக இருக்கின்றன. அங்கிருப்பவர்கள் எல்லாம் தற்கொலைப்படை வீரர்கள் அல்ல. வாழ்வுக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். அவர்களிடம் கொள்கை கோட்பாடுகள் பற்றி சிலர் பேசுவது முட்டாள்தனமாக இருக்கிறது.

இங்கே மக்கள் நீருக்காக போராடுகிறார்கள், தவிக்கிறார்கள் என்பதற்காக அவர்களும் தங்களைப் பலி கொள்ள வேண்டும் என்று நினைப்பது என்ன நியாயமோ?

முதலில் இப்படிக் கேட்பவர்கள் எல்லாம் காவிரி விவசாயிகளுக்காக என்ன செய்தீர்கள் என்று சொன்னால் கொஞ்சம் உதவியாக இருக்கும்.

Anonymous said...

Thamizhaga Taimzha Brave Anon, Why dont you spearhead an agitation in Bangalore? Ange poi unga veera dheerathaiyum, tamizhaga tamizhar mel ulla patraiyum kaanbikkalamae..

IdlyVadai said...

//Any comments from PMK, Karnatka kilai?//

இவர்கள் எல்லாம் தமிழ்நாடு வந்துவிட்டதாக சொல்லுகிறார் கழுகார்.

bala said...

இட்லிவடை அய்யா,
இருங்க.குழந்தை லக்கி இப்போ வந்து,கழக கொள்கை விளக்கம் மழலையில் சொல்லிவிட்டுப் போகும் பாருங்கள்.

பாலா

G.Ragavan said...

// IdlyVadai said...
ஜி.ராகவன், எதுக்கும் சிகப்பு சொக்காய், மஞ்சள் பேண்ட் ஒன்று வாங்கி போட்டுக்கொள்ளுங்கள். //

அதுகூட என் காசில்தான் வாங்க வேண்டும் என்று தெரியும் இட்லிவடை. ஆனால் தேவையில்லை. ஒரு பேட்ஜ் வாங்கிக் குத்திக் கொண்டாலே போதும். என்னை விடுங்கள். தேவைப்பட்டால் என்னுடைய நிறுவனத்திற்குள்ளேயே தங்கிப் பாதுகாப்பு பெற முடியும். ஆனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது கீழ்த்தட்டு மக்களே. அவர்களுக்குக் கர்நாடக திமுக, தமிழ்ச்சங்கம் ஆகியவைகளின் அறிவிப்புகள் ஓரளவு பாதுகாப்பே.

// திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் பேச்சு உசுப்பிவிடுவதாக தான் இருந்தது. கலவரம் எதுவும் நடக்காதது டிவி சேனல்களுக்கு ஏமாற்றம் என்று நினைக்கிறேன். அவர்கள் கொடுத்த செய்தி அது மாதிரி இருந்தது. யாரும் முழு தீர்ப்பை படிக்கவில்லை. //

இளங்கோவன் பேசியது தெரியாது. இங்கு தமிழ்ச் சேனல்க்கள் தெரியாது. பேசியிருக்கலாம். எல்லாரும் உணர்ச்சிப்பூர்வமாக இதை அணுகுவது வருத்தமாக இருக்கிறது.

சென்ஷி said...

உண்மையில் ஜி.ராவின் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன். கர்நாடகத்தில் உண்மையை பேசினால் உதை தான் கிடைக்கும். இந்த சூழல் இருப்பது கண்டு நாம் வெட்கப்பட வேண்டும். அங்கு திமுக சொல்வதை விடுங்கள். மக்கள் நன்றாக இல்லாவிட்டாலும் வாழ வேண்டும்.
அரசியல்வாதிகள் காரில் வந்து பாதுகாப்பாய் கருத்து பேசுவிட்டு செல்வார்கள். அடித்தட்டு மக்களின் நிலை. திமுகவை விடுங்கள், ஏன் அங்குள்ள அதிமுகவோ, காங்கிரஸோ தீர்ப்பு பற்றிய கருத்தை கேளுங்களேன்.

சென்ஷி

G.Ragavan said...

// Anonymous said...
தமிழகத் தமிழன் தண்ணீர் கிடைக்காமல் செத்தாலும் பரவாயில்லை. தமிழகத்திற்கு துளி பிரயோஜனம் இல்லாத கர்நாடகத்தமிழன் உயிரோடு இருப்பதுதான் முக்கியம். //

தமிழகத்துக்குத்தான் துளிப் ப்ரயோஜனம் இல்லையே. அப்புறம் அவன் என்ன செஞ்சா ஒங்களுக்கென்ன. மொதல்ல தமிழ்நாட்டுத் தலைவர்களை ஒழுங்கா பேசச் சொல்லுங்க.

// லண்டனில் குண்டு வெடித்த போது அங்கு பிறந்து வளர்ந்து அந்த நாட்டு குடியுரிமையுடன் எல்லா சலுகைகளையிம் அனுபவத்து வரும் சில இளைஞர்களிடம் பிபிசி நிறுவனம் பேட்டி எடுத்த போது.

எங்கள் மக்கள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் உங்களால் மாண்டுபோனபோது வராமல் இப்போது வெறும் நாற்பது பேர் கொல்லப்பட்டதற்காக வந்து கேட்கிறீர்களே? என்று பேட்டியெடுத்தவர்களையே கேட்டனர் அந்த முஸ்லீம் இளைஞர்கள்.

அந்த தைரியம் கூட கர்நாடகா வாழ் தமிழர்களுக்கு இல்லையே!. //

எப்படீங்க இருக்கும்? நீங்களே அனானிமஸ்சாத்தானே வந்திருக்கீங்க. அந்த முஸ்லீம் அடிபட்டா உலக முஸ்லீம்கள் உதவிக்கு வருவாங்க. ஆனா இங்க? இலங்கைல அடி வாங்குறானே. அதுக்கு நீங்கள்ளாம் செய்ற உதவியைப் பாக்கும் போது எங்களைக் காப்பத்த நீங்கள்ளாம் இருக்கீங்கன்னு நெனைக்கும் போது துணிச்சல் பிச்சுக்கிட்டு வருதுங்க. சரி. காவிரித் தமிழர்களுக்கு நீங்க என்ன செஞ்சீங்க?

IdlyVadai said...

//திமுகவை விடுங்கள், ஏன் அங்குள்ள அதிமுகவோ, காங்கிரஸோ தீர்ப்பு பற்றிய கருத்தை கேளுங்களேன்//

அவர்கள் எல்லாம் ஓசூர் எல்லையில் இருக்கிறார்கள்.

சென்ஷி said...

சரியான பதில் ஜி.ரா.
இவர்களெல்லாம் கழுத்தில் கத்தியை வைத்தால் தமிழ் ஒழிக என்று கூட சொல்வார்கள். உயிராசை இல்லாமல் எவனோ அடிபட்டால் இவர்களுக்கு அது வெறும் செய்தி. அடிபட்டவனுக்கு.....


சென்ஷி

Anonymous said...

//எப்படீங்க இருக்கும்? நீங்களே அனானிமஸ்சாத்தானே வந்திருக்கீங்க. அந்த முஸ்லீம் அடிபட்டா உலக முஸ்லீம்கள் உதவிக்கு வருவாங்க. ஆனா இங்க? இலங்கைல அடி வாங்குறானே. அதுக்கு நீங்கள்ளாம் செய்ற உதவியைப் பாக்கும் போது எங்களைக் காப்பத்த நீங்கள்ளாம் இருக்கீங்கன்னு நெனைக்கும் போது துணிச்சல் பிச்சுக்கிட்டு வருதுங்க. சரி. காவிரித் தமிழர்களுக்கு நீங்க என்ன செஞ்சீங்க?//

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா?

இலங்கைத்தமிழன், தமிழகத்தமிழனை தமிழனாக மதிப்பதில்லை. அத்தோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் கொலை , கொள்ளை என்று நடத்திக்கொண்டிருந்தவர்கள். அவர்களால் தமிழகத்திற்கு துளி கூட பிரயோஜனம் இல்லை. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களால் உபத்திரவம் தான் தமிழ்நாட்டுக்கு. எனவே அவர்களைப்பற்றியெல்லாம் இங்கு பேசாதீர்கள்.
நீங்களெல்லாம் காவரிப்பிரச்சனையில் தமிழகத்தை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, எதிர்க்காமல் இருந்தாலே தமிழகத்திற்கு உதவி செய்வது போல ஆகும்.

சென்ஷி said...

அன்பு அனானி,
இன்றைய தினத்தந்தியில் வந்த செய்தி -
நடன தாரகை சரோஜா தேவி தலைமையில் கவர்னர் மாளிகைக்கு ஊர்வலம், முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட சினிமா உலகினர் முழு ஆதரவு தந்துள்ளனர்.
இதற்கு முன்பு, ரமேஷ் அரவிந்த், வினீத் மற்றும் சில நடிகர்கள் இதே போல் செய்தது ஞாபகம் இருக்கிறதா?

சென்ஷி

Anonymous said...

பெங்களூரில் இருக்கும் கன்னடர்கள், தங்களின் போராட்டத்தின் போது தமிழர்களை, தமிழ்நாட்டைப்பற்றி திட்டி கேவலமாக பேசும் போது, அங்குள்ள ராகவன் போன்ற மான, ரோசமுள்ளவர்களின் காதுகளில் தேன்மாறி பொழியுமென நினைக்கிறேன்.

பம்மிக்கிட்டு இருக்கிற உங்களுக்கு தமிழர்களின் உணர்வுபற்றிக்கூற உரிமையில்லை.

Anonymous said...

/வறட்சிக்காலத்தில் எப்படி பங்கீடு எனச் சொல்லவில்லை//


சொல்லப்பட்டிருக்கிறது....இதே விகிதாசாரத்தில் இருக்கும் நீரை பகீர்ந்து கொள்ள வேண்டுமென்று, அதுவும் கர்நாடகத்தின் கோபத்திற்கு ஒரு காரணம்.

92 பிரச்சனையும் தற்போதைய பிரச்சனையையும் நேரில் அனுபவிப்பவனென்ற முறையில் சொல்கிறேன். தமிழ்கத்தில், தமிழ் வாழ்க என்று குரல் கொடுக்கும் பலரைவிட மற்ற இடங்களில் (பெங்களூர் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழக தமிழர்கள்)தமிழர்கள் மிக்க தமிழ் உணர்வுடனும் கலாசாரத்துடன் தான் இருக்கிறோம்..இதற்கு தி.க, தி.மு.க, அதிமுக, பாமாக சாட்சிப்பத்திரமோ தேவையில்லை...

கர்நாடக அரசியல்வாதிக்கள் பரவாயில்லை தமிழகத்தை பார்க்கும் போது.

labdab said...

//ஜி.ராகவன், எதுக்கும் சிகப்பு சொக்காய், மஞ்சள் பேண்ட் ஒன்று வாங்கி போட்டுக்கொள்ளுங்கள். //

இங்கு(Bangalore)உள்ள சூழ்நிலையை நீங்கள் உணர்ந்திருந்தால் Ragavan அவர்கள் சொல்லுவது எத்தனை முக்கியம் என்று புரியும். ஆனால் ஒரு அரசியல் கட்சியை குறை கூறுவது மட்டும் உங்கள் நோக்கமென்றாலோ, Practical ஆக இல்லாமல் வெறும் Rhetorics மட்டும் பேசுவேன் என்றாலோ என் பதில்: "NO Comments"

உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை :((

TBCD said...

For all Fellow tamils ( who are bloggin in a safe house ), from a fellow tamilian (who feels unsafe because he a made decision to work in bangalore)

I am giving my feedback point by point.

/** இதற்கெல்லாம் உச்சகட்டமாக தமிழ்நாட்டுக்குள் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு ஐநூறு டி.எம்.சி தண்ணீர் வாங்கித் தராத கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று உளறிக் கொட்டினாரே ஜெயலலிதா....அவர் பேச்சு மாதிரி இருந்தால் போதும்....எங்கள் நிலமை உருப்படும்!**/

Neenga ADMK sarba innu theriyathu, ana JJ intha dialogue adichathuku, vedka padamattanga yenna she has gaurded her from a comment that she is not fighting for tamils..(yenna avanga kannada karavanga....)..I remember She has said Tamil Oliga when there was a similar dispute and she was in karnataka ...(that was when she was acting part time, not it is full time)...

I appreciate the manner, Karunanidhi took it, he said, we need to implement this..No theatreics...he because he knew, that, parting off cauvery is like a deficit budget sharing between states, and at no time, all the parties cannot get what they wanted.

I live in bangalore, I have a TN registered bike. I want to tell u guys, if you think that we should come to streets and talk for thanjai farmers, I want to ask you some questions..
These parties have been runining the state for long, how many times you have come to streets to stage a fight, oru auto varuminu nakkal adikirothada..unga payanatha niyabadithikuveenga...athu oru auto thanga, anna control panna mudiyatha mob kittey sattam niyayam pesa mudiyathu...

I have taken a neutral stance, and I think the cauvery tribunal would have taken the same stand and have given a neutral verdict. But thothavanga niyam jeychavangalukku puriyathu.

This time in Bangalore, god forbit, no serious violence has not...I should say not yet started and I think because, internally every politician thinks this is what was expected. But, again this is vote bank politics, so they want to show the state they care for them....

One last word, For all the people, who dont cry for Karnataka Tamils, please let them choose their stand, being the largest democracy, they have their right to choose..and any one..I repeat anyone who mocks at them, I offer you a challeng...please come to bangalore and stage protest..(manja satta vendam...pacha satta podunga..unga ammavayum kootitu vaanga)..

May be my response is jumbled, kindly bear with me for that....

TBCD said...

//**Neenga ADMK sarba innu theriyathu**//
This is not pointed towards G Ragavan.

Anonymous said...

aravind, ignore these anony tamil bravehearts - inge irundhu vaai kizhiya pesuvaanga. Dhairyam irundha ivangale Karnataka vandhu koral kudukkattume.
BTW, I am in TN So anony braveheart maadhiri I have no problems in saying thanneer tharadha karnatak ozhiga :-)