'கேப் மாறி' என்றால் என்ன ? விடையை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
( இட்லிவடை தான் கேப் மாறி என்று நக்கல அடிக்க வேண்டாம் :-))
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Wednesday, February 28, 2007
'கேப் மாறி' என்றால் என்ன ?
Posted by IdlyVadai at 2/28/2007 10:49:00 AM 25 comments
Labels: நகைச்சுவை
இன்று பட்ஜெட்
*தனிநபர் வருமான வரிவரம்பு 10 ஆயிரம் அதிகரிப்பு ( உச்சவரம்பு 1,10000 ஆக அதிகரிப்பு )<
*பெண்களுக்கு வருவாய் வரிவரம்பு 145000 ஆக அதிகரிப்பு
* மூத்த குடிமக்களுக்கு வருமான வரிவரம்பு 1,95000
* விவசாய கடன் வழங்க ரூ 2,25000 கோடி ஒதுக்கீடு - 2007 -08 ம் ஆண்டில் புதிதாக 50 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய கடன்
* விவசாயிகளின் நலனுக்காக வானிலை பயீர் காப்பீடு திட்டம்
* தமிழகத்தில் பாசனஏரிகள், குளங்களை சீரமைக்க உலக வங்கி உதவியுடன் ரூ 2182 கோடி ஒதுக்கீடு
* உரமானியத்திற்கு ரூ22400 கோடி ஒதுக்கீடு
* 12192 கிலோ மீட்டர் கிராம சாலைகள் சீரமைக்கப்படும் - கிராமப்புற சாலை மேம்பாட்டிற்காக ரூ 4000 கோடி ஒதுக்கீடு
* 50 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு புதிய சாதனை
* பள்ளிகல்வியை ஊக்குவிக்க ரூ 23142 கோடி ஒதுக்கீடு
* மேல்நிலை கல்விக்கு ரூ3794 கோடி ஒதுக்கீடு
* கல்வி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 34 சதவிதம் அதிகரிப்பு
* 9-12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் உதவிதொகை
* 2 லட்சம் ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க திட்டம்
* ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 450 ஆக அதிகரிக்கப்படும்
* இந்திய மருத்துவ சிகிச்சைகளை ஊக்குவிக்க கூடுதல் நிதி
* எய்ட்ஸ் நோயை ஒழிக்க கூடுதல் நிதி- ரூ969 கோடி ஒதுக்கீடு
* 1 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 750 கோடியாக அதிகரிப்பு
* போலியோ ஒழிப்பிற்கு ரூ1290 கோடி ஒதுக்கீடு
* கிராமப்புற சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை
*ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ 12000 கோடி ஒதுக்கீடு - மேலும் 100 மாவட்டங்களில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை
* சுயவேலைவாய்ப்பிற்கு நிதிஒதுக்கீடு - ரூ18000 கோடியாக அதிகரிப்பு
* பொது வினியோக திட்டப்பணி அனைத்தும் கணினி மயமாக்க முடிவு
* முறைசாரா தொழிலாளர்கள் நலனுக்காக புதிய காப்பீடு திட்டம்
*தங்க நாற்சசக்கரசசாலையை விரைவில் முடிக்க நடவடிக்கை
* புதிய மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து பரிசீலனை
* சிறுதொழில்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு
* வரி ஏய்ப்பை தடுக்க கடும் நடவடிக்கை
* கோவை விவசாய பல்கலைகழகத்திற்கு ரூ50 கோடி ஒதுக்கீடு
*டில்லி காமன்வெல்த் போட்டிக்கு ரூ 350 கோடி ஒதுக்கீடு உள்ளிட்டவை பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளன.
* பெட்ரோல் - டீசலுக்கு உற்பத்தி வரி 6 சதவீதமாக குறைப்பு
* சமையல் எண்ணெய்க்கு வரி குறைப்பு
*பல்வேறு பொருட்களின் சுங்க வரி விகிதங்கள் குறைப்பு
* மருத்துவ சாதனங்களுக்கு இறக்குமதி வரி குறைப்பு
* பயோ டீசசலுக்கான உற்பத்தி வரி முற்றிலும் நீக்கம்
*பிஸ்கட் , கடிகாரம், காலணி, குடைகளுக்கு வரி குறைப்பு
*சிகரெட் பீடிக்கு 5 சதவீதம் கூடுதல் வரி
Posted by IdlyVadai at 2/28/2007 07:32:00 AM 1 comments
Labels: செய்திகள்
Tuesday, February 27, 2007
பஞ்சாப், உத்திராஞ்சல் - காங்கிரஸ் வீழ்ச்சி
பஞ்சாப், உத்தராஞ்சல் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.
* சித்து முன்னிலையில் இருக்கிறார்.
Posted by IdlyVadai at 2/27/2007 12:12:00 PM 6 comments
Labels: தேர்தல்
ஜேட் கூடி @ இந்தியா
லண்டனில் நடந்த ரியாலிட்டி ஷோ என்ற டி.வி.நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை இன பாகுபாடுடன் திட்டி சர்ச்சைக்குள்ளான பிரிட்டிஷ் டி.வி. நடிகை ஜேட் கூடி இந்தியா வந்துள்ளார். தனிப்பட்ட முறையில் 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜேட் கூடி புதுடில்லியில் உள்ள ஒரு பிரபல 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளார். அங்கு மசாலா தோசையை விரும்பி சாப்பிட்ட அவர், இந்திய உணவு மிக சுவையாக இருப்பதாகவும் இந்தியர்கள் மிக நல்லவர்களாக இருப்பதாகவும் தெரிவித்தார். அவருடன் 3 பேர் வந்துள்ளனர். அவரது பயண விபரம் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஹோட்டலில் யாரையும் அவர் சந்திக்கவம் இல்லை. பத்திரிக்கையாளர்களிடமிருந்து அவர் ரூமுக்கு வந்த போனிலும் அவர் பேசவில்லை.
செய்திக்கும் ( அப்படியே ஒரு சூப்பர் படத்துக்கும் ) இங்கே போகவும். பக்கத்தில் யாரும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் :-)
Posted by IdlyVadai at 2/27/2007 10:50:00 AM 5 comments
Labels: செய்திகள்
லாலு ஆடிய கிரிக்கெட்
* ரெயில்களில் எந்த வகுப்புக்கும் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
* சீசன் டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்படவில்லை.
* புறநகர் அல்லாத சாதாரண ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணமும், அதி விரைவு அல்லாத விரைவு ரெயில்களுக்கான 2-ம் வகுப்பு கட்டணமும் 1 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகை அன்றாடம் டிக்கெட் வாங்கி பயணம் செய்வோருக்கு மட்டும் பொருந்தும்.
குளிர்சாதன வசதி பெட்டி
* ஏ.சி. (குளிர்சாதன வசதி செய்யப்பட்ட) முதல் வகுப்பு கட்டணம் கூட்ட நெரிசல் உள்ள விழாக்காலங்களில் (ஏப்ரல் 16-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரையும் செப்டம்பர் 16-ந் தேதி முதல் ஜனவரி 14-ந் தேதி வரையும்) 3 சதவீதமும், சாதாரண காலங்களில் (ஜனவரி 15 முதல் ஏப்ரல் 15-ந் தேதி வரையும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரையும்) 6 சதவீதமும் குறைக்கப்பட்டு இருக்கிறது.
* ஏ.சி. இரண்டு அடுக்கு பெட்டிகளில் விழாக்காலங்களில் 2 சதவீதமும், சாதாரண காலங்களில் 4 சதவீதமும் குறைக்கப்பட்டு உள்ளது.
* ஏ.சி. மூன்று அடுக்கு கட்டணம் (81 படுக்கை) விழாக்காலங்களில் 4 சதவீதமும், சாதாரண காலங்களில் 8 சதவீதமும் குறைக்கப்பட்டு இருக்கிறது.
* ஏ.சி. மூன்று அடுக்கு (64 படுக்கை) கட்டணம் விழா மற்றும் சாதாரண காலங்களில் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.
* ஏ.சி. சேர் கார் (102 இருக்கை) கட்டணம் விழாக்காலங்களில் 4 சதவீதமும், சாதாரண காலங்களில் 8 சதவீதமும் குறைக்கப்பட்டு இருக்கிறது.
கூடுதல் படுக்கை வசதி
* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 72-ல் இருந்து 84 ஆக அதிகரிக்கப்படும். இந்த ஆண்டு முதல் தயாரிக்கப்படும் பெட்டிகள் 84 படுக்கை வசதிகள் கொண்டதாக தயாரிக்கப்படும்.
* குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் இருக்கை எண்ணிக்கை 67-ல் இருந்து 102 ஆக அதிகரிக்கும். 3 அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 64-ல் இருந்து 81 ஆகவும், 2 அடுக்கு பெட்டிகளில் 46-ல் இருந்து 48 ஆகவும், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்பு பெட்டிகளில் இந்த எண்ணிக்கை 18-ல் இருந்து 22 ஆகவும் கூட்டப்படும்.
இதேபோல் ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகளும் கூடுதல் படுக்கைகளுடன் தயாரிக்கப்படும். ஏ.சி.சேர் கார் பெட்டிகளும் கூடுதல் இருக்கை வசதிகளுடன் தயாராகும்.
4 சதவீதம் குறைப்பு
* புதிய படுக்கை வசதி கொண்ட பெட்டிகளிலும் (84 படுக்கை), மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளிலும் (72 படுக்கை) விழாக்காலங்களிலும் சாதாரண காலங்களிலும் 4 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.
* படுக்கை வசதி கொண்ட வகுப்புக்கான கட்டணம் விழா மற்றும் சாதாரண காலங்களில் 4 சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
* பிரபலமான ரெயில்களில் பண்டிகை காலத்தின் போது கொடுக்கப்படும் சலுகைகள் ஆண்டு முழுவதும் நீடிக்கப்படும். இதற்கான பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.
* அதிவிரைவு ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணங்களில் வசூலிக்கப்படும் இதர கட்டணங்கள் 10 ரூபாயில் இருந்து 8 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.
* அதிவிரைவு ரெயில்களில் 2-வது வகுப்பு டிக்கெட்டுகளுக்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் 20 சதவீதம் (10 ரூபாயில் இருந்து 8 ரூபாய்) குறைக்கப்பட்டு இருக்கிறது.
இணைய தளத்தின் மூலம் முன்பதிவு
படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்ய இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யும் போது ஒரு டிக்கெட்டுக்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக குறைக்கப்படுகிறது. இதேபோல் ஏ.சி. வகுப்பு டிக்கெட்டுக்கு வசூலிக்கப்படும் கூடுதல் தொகை 40 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு கூடுதல் டிக்கெட்டுக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலிக்கப்படும்.
இணைய தளத்தின் மூலம் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் முன்பதிவு
* பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் ஏ.டி.எம்.மையங்களிலும் ரெயில் டிக்கெட் முன்பதிவு வசதி அமைக்கப்படும்.
* மத்திய தேர்வு ஆணையம் மற்றும் ரெயில்வே தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ள செல்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்.
* மூத்த குடிமகன்களுக்கும், தனியாக பயணம் செய்யும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் ரெயில் பெட்டிகளில் கீழே உள்ள படுக்கை ஒதுக்கப்படும்.
* அடுத்த 2 ஆண்டுகளுக்குள், உடல் ஊனமுற்றவர்கள் பயணம் செய்வதற்கு வசதியாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரெயில் பெட்டிகள் அனைத்து சாதாரண மற்றும் விரைவு ரெயில்களில் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள 1250 பெட்டிகளில் கூடுதலான வசதிகள் செய்து தரப்படும். அதன்படி சக்கர நாற்காலியில் உள்ள பயணிகள், ஊனமுற்றவர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக விரிவான வாசல்கள், நடக்கும் வசதி, கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தப்படும்.
கூடுதல் பெட்டிகள்
* பயணிகள் ரெயிலில் பால், பழம், காய்கறி வியாபாரிகளுக்கு தனி பெட்டிகள் இணைக்கப்படும்.
* முன்பதிவு செய்யாத 2-வது வகுப்பு பெட்டிகளில் சாதாரண மர இருக்கைகள் மாற்றப்பட்டு மெத்தை (குஷன்) இருக்கைகள் அமைக்கப்படும்.
* முக்கியமான எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த வகையில் எல்லா முக்கிய ரெயில்களிலும் சேர்த்து மொத்தம் 800 பெட்டிகள் இணைக்கப்படும்.
* புதிதாக விடப்படும் ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 6-ஆக அதிகரிக்கப்படும்.
* ஏற்கனவே இயக்கப்படும் ரெயில்களிலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* முன்பதிவு, காலி இருக்கைகள் பற்றிய விவரங்களை அறிய டிக்கெட் பரிசோதகர்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர்கள் (பாம்டாப்) வழங்கப்படும். இந்த ஆண்டு 4 ரெயில்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* மும்பை புறநகர் ரெயில் போக்குவரத்தில் சுற்றுலா பயணிகளுக்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு ரூ.40 கட்டணத்திலும், 2 நாட்களுக்கு ரூ.75 கட்டணத்திலும், 5 நாட்களுக்கு ரூ.90 கட்டணத்திலும் பயணம் செய்யலாம்.
32 புதிய ரெயில்கள்
* அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் கணினி அடிப்படையிலான முன்பதிவு அல்லாத ரெயில் டிக்கெட் மையங்கள் அமைக்கப்படும். முக்கிய நகரங்களில் முன்பதிவு சேவை மையத்துடன் இணைந்த 6 ஆயிரம் தானியங்கி ரெயில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்படும்.
* ஸ்மார்ட் கார்டு அல்லது நாணயங்கள் மூலம் ரெயில் டிக்கெட் பெறுவதற்கான வசதியும் விரைவில் செயல்படுத்தப்படும்.
* 32 புதிய ரெயில்களும், 8 ஏழைகள் ரதம் ரெயில்களும் இந்த ஆண்டில் விடப்படும். தமிழ்நாட்டில் 5 புதிய ரெயில்கள் விடப்படுகின்றன.
* பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் சரக்குகளுக்கான (லக்கேஜ்) கட்டணம் 60 சதவீதம் குறைக்கப்படுகிறது.
* மேலும் 300 ரெயில் நிலையங்கள் மாதிரி ரெயில் நிலையங்களாக ஆக்கப்படும்.
* பதட்டம் நிறைந்த பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களில், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க கைகளால் கையாளும் மெட்டல் டிடெக்டர் கருவி பயன்படுத்தப்படும். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படும்.
சரக்கு கட்டணம்
* சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.
* பெட்ரோல், டீசல் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கான சரக்கு கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.
* இரும்புத் தாது, சுண்ணாம்புக் கல் கொண்டு செல்வதற்கான கட்டணம் 6 சதவீதம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
* போக்குவரத்து மிகுந்த பாதைகளில் இரும்புத் தாது கொண்டு செல்வதற்காக விதிக்கப்பட்டு வந்த 10 சதவீத கூடுதல் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.
* 9 மாதங்களில் சரக்கு போக்குவரத்தின் மூலம் கிடைத்த வருவாய் 17 சதவீதம் அதிகரித்து உள்ளது.
ரூ.20 ஆயிரம் கோடி
* ரெயில்வே பாதுகாப்பு படையில் உள்ள 8 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
* பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னையிலும், கொல்கத்தாவிலும் பயணச்சீட்டு வினியோகிக்க கூப்பன் முறை அறிமுகம் செய்யப்படும்.
* 3 ஆயிரம் ரெயில் நிலையங்கள் மாதிரி ரெயில் நிலையங்களாக மேம்படுத்தப்படும்.
* நாடு முழுவதும் உள்ளவர்கள் உள்ளூர் கட்டணத்தில் ரெயில்கள் பற்றி தகவல்களை 139 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
* 2007-2008-ம் ஆண்டுக்கான ரெயில்வே திட்ட ஒதுக்கீடு ரூ.31 ஆயிரம் கோடி.
* சரக்கு போக்குவரத்தின் மூலம் 46 ஆயிரத்து 943 கோடி ரூபாயும், பயணிகள் போக்குவரத்து மூலம் 20 ஆயிரத்து 75 கோடியும் வருவாய் கிடைத்து உள்ளது.
இந்த ஆண்டில் ரெயில்வே துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பாதைகள்
* 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படுவதோடு, 1800 கிலோ மீட்டர் நீள பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்படும். 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை வழிப்பாதை அமைக்கப்படும்.
* புதிய கட்டண விகிதம் மற்றும் சலுகைகள் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Posted by IdlyVadai at 2/27/2007 07:49:00 AM 0 comments
Labels: செய்திகள்
Monday, February 26, 2007
இது என்ன ?
Posted by IdlyVadai at 2/26/2007 09:33:00 AM 7 comments
Labels: படம்
முக்கிய செய்திகள்
இன்றைய முக்கிய செய்திகள்
* அர்ஜென்டினாவில் கைது செய்யப்பட்ட குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. Feb 6 கைதான குவாத்ரோச்சி பற்றிய செய்தியை யார் லீக் செய்தார்கள் என்று அரசு தன் விசாரனையை தொடக்கியுள்ளது.
* காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முன்னாள் பிரதமர் தேவேகவுடா சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது. என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
* காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு விவகாரத்தில் பொதுவேலை நிறுத்தம் நடத்தவே கூடாது என பிடிவாதம் பிடிக்கவில்லை என்று பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
* காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தது முதல் தமிழக முதல்வரின் பேச்சில் தடுமாற்றம் தெரிகிறது. எனவே முதல்வர் விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
* ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியில்லை என கலாம் அறிவித்ததால் அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்த தொடங்கிவிட்டன.
* நான் நடித்த படத்தில் எனக்கு பிடித்த மற்றும் எனக்கு ஏற்ற கதாநாயகி நமிதா தான் என்று நடிகர் சிபிராஜ் கூறினார்.
Posted by IdlyVadai at 2/26/2007 09:15:00 AM 0 comments
Labels: செய்திகள்
Saturday, February 24, 2007
குவாத்ரோச்சி - ஜெ அறிக்கை
போபர்ஸ் வழக்கில் தொடர்புடைய இத்தாலிய தொழிலதிபர் குவாத் ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டு வர சட்டப்பூர்வமான நடவடிக்கை களை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெய லலிதா கூறியுள்ளார். குவாத் ரோச்சியை அர்ஜெண்டை னாவில் கைது செய்யப்பட்ட செய்தியை உடனடியாக பொது மக்களுக்கு தெரிவிக்காமல் மத்திய அரசு மூடி மறைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையி லான கூட்டணி அரசின் செயல்பாடு தொடர்பான திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. போபர்ஸ் வழக்கு தொடர்பாக 14 ஆண்டுகாலமாக தேடப்பட்டு வரும் இத்தாலிய தொழிலதிபர் குவாத் ரோச்சியை அர்ஜெண்டைனாவில் 6.2.2007ல் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், 23ந் தேதி அனைத்து தொலைக்காட்சிகளிலும் இந்த செய்தி வெளியானபிறகு சிபிஐ வேறு வழியில்லாமல் இதுபற்றி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அர்ஜெண்டைனா தலைநகரம் வழியே பயணம் செய்தபோது அவர் கைது செய்யப்பட்டார். இது போபர்ஸ் வழக்கு தொடர்பான இன்டர்போல் வேண்டுகோளுக்கிணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குவாத்ரோச்சி சர்ச்சைக்குரிய தொழிலதிபர். நேரு குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். போபர்ஸ் வழக்கில் அவருக்குள்ள தொடர்பு 1987ல் தெரிய வந்தது முதல் காங்கிரஸ் அரசு அவரை கைது செய்வதில் விருப்பம் காட்டவில்லை. அது மட்டுமல்லாமல் அவரை சட்டத்திலிருந்து விடுவிக்க துணை நின்றது. மேலும் அவருடைய முடக்கப்பட்ட வங்கிக்கணக்கி லிருந்து ரூ.30 கோடியை எடுத்துக் கொள்ள சிபிஐ உதவி செய்தது. அவர் எடுத்துக்கொண்ட பணம் இந்திய மக்களுக்கு உரித்தானது.
இதற்கு முந்தைய சந்தர்ப்பங்களில் அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர வாய்ப்பு கிடைத்தபோது, அவர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட வில்லை. இப்போது அர்ஜெண்டைனா அரசு அவரை இந்த மாதம் 6ந் தேதி கைது செய்தது. 18 நாட்களுக்கு முன்பு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந் தாலும், காங்கிரஸ் கூட்டணிஅரசு மற்றும் சிபிஐ இந்த தகவலை பொது மக்களுக்கு தெரிவிக்கவும் இல்லை. அவரை இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சியும் மேற்கொள்ளப்பட வில்லை.
கடந்த 13ந் தேதி இந்த பிரச்சனை பற்றி விவாதிக்க பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. ஆனால் அது பற்றிய விவரம் பொதுமக்களுக்கு வெளியிடப்பட வில்லை. அர்ஜெண்டைனாவோடு செய்தி களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் இல்லாததால், குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டுவருவதற் கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை.
அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்ட பிறகு 30 நாட்களுக்குள் இதற்கான வேண்டு கோளை சமர்ப்பிக்க வேண்டும். அர்ஜெண்டைனாவில் இன்னொரு நாட்டால் தேடப்படும் நபர் கைது செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் அவரை ஒப்படைப் பதற்கான நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால் வேண்டு மென்றே காலம் கடத்தப்பட்டுள்ளது. 6ந் தேதி கைது செய்யப்பட்டபிறகு இப்போது குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டு வர 10 நாட்களே உள்ளது. அப்படியிருந்தும் மத்திய அரசோ, சிபிஐயோ எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
மத்திய அரசு திட்டமிட்டு எதிர்க் கட்சியினரை பழிவாங்கும் வகையில் பொய் வழக்குகளை போட்டுள்ளது. ஆனால் அதிகாரத்துக்கு நெருக்கமானவர்கள் என்று வரும்போது, திட்டமிட்டு 18 நாட்களை வீணாக்கியுள்ளனர். மிகவும் தேடப்படும் குற்றவாளியை இந்தியா வுக்கு கொண்டு வர எந்த நடவடிக்கை யும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் கடமைப்பட்டுள்ளனர்.
சட்டம் தன் வழியை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். குவாத் ரோச்சி கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படாமலே இருக்க மற்றொரு நாடகம் நடத்தப்படு வதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். அவ்வாறு நிகழ்ந்தால் அது மக்களுக்கு செய்யப்படும் துரோகம் ஆகும். அந்த தவறை செய்தால்,தேசம் அவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டும்
Posted by IdlyVadai at 2/24/2007 04:46:00 PM 0 comments
Labels: செய்திகள்
சிங்குரில் நிலம் - தவறு நேர்ந்துள்ளது - ஐகோர்ட்
கம்யூனிஸ்டுகள் சாயம் வெளுக்க தொடங்கியுள்ளது.
"மேற்கு வங்கம் சிங்குரில் டாடா நிறுவன கார் தொழிற்சாலைக்காக நிலங்களை மாநில அரசு கையகப்படுத்தியது சட்ட விரோதமான செயல் போல தோன்றுகிறது,'' என அம்மாநில ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம் சிங்குரில் டாடா நிறுவனம் கார் தொழிற்சாலை துவங்க விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக, ஜோய்தீப் முகர்ஜி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, மேற்கு வங்க ஐகோர்ட் தலைமை நீதிபதி(பொறுப்பு) பாஸ்கர் பட்டாச்சார்யா மற்றும் பிரசாத் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:
நிலத்தை கையகப்படுத்த 1894ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் இரண்டு பிரிவுகளை ஒரே நேரத்தில் அரசு பயன்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து, நிலம் கையகப்படுத்தும் முறையில் தவறு நேர்ந்துள்ளது என தெரிகிறது. விவசாயிகள் அரசு வழங்கிய நஷ்டஈட்டை ஏற்றுக் கொள்ளவில்லை என்றதும், அரசு கூடுதலாக 10 சதவீத போனஸ் தொகை வழங்க முன்வந்துள்ளது தெரிய வருகிறது. அரசின் நிதியின் ஒவ்வொரு பைசாவும் பொதுமக்களின் பணம். அவற்றை தேவையில்லாமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது. பிரச்னைக்குரிய 997 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மேற்கு வங்க அரசு நான்கு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விவசாயிகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட நஷ்டஈடு உள்ளிட்ட தகவல்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Posted by IdlyVadai at 2/24/2007 08:51:00 AM 4 comments
Labels: செய்திகள்
பீரங்கி புகழ் குட்ரோச்சி கைது
போபோர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் தொடர்புடைய குட்ரோச்சி அர்ஜென்டினாவில் பிடிபட்டுள்ளார். அவரை இந்தியாவிடம் விசாரணைக்காக ஒப்படைக்குமாறு சி.பி.ஐ., அர்ஜென்டினாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நாடகம் எதற்கு என்று தெரியவில்லை. நிச்சயம் காங்கிரஸ் அரசு பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ளும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. பார்க்காலாம். ( முழு செய்திக்கு CNN-IBN, NDTV பார்க்கவும் )
இதை பற்றி ஒரு வருடம் முன்பு நான் எழுதிய பதிவு
Posted by IdlyVadai at 2/24/2007 01:23:00 AM 1 comments
Labels: செய்திகள்
Friday, February 23, 2007
துக்ளக் - 37 - 5,6
Posted by IdlyVadai at 2/23/2007 03:45:00 PM 3 comments
Labels: பத்திரிக்கை
விஜயகாந்த் மண்டபம் - தீர்ப்பு
சென்னையில் உள்ள நடிகர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் மண்டபம் மேம்பாலம் கட்டுவதற்காக அதனை இடிக்க அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நடிகர் விஜயகாந்த் சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரிவித்தார். அவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி ஷா, இந்த வழக்கில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும், இழப்பீட்டிற்கான நஷ்டஈடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால் மண்டபத்தை ஒப்படைக்க 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
Posted by IdlyVadai at 2/23/2007 02:20:00 PM 0 comments
Labels: செய்திகள்
தவறு, நம்முடையதுதான் !
துக்ளக் தலையங்கம் மற்றும் நினைத்தேன் எழுதுகிறேன் பகுதியிலிருந்து.
விவரம் புரியாமல், சில கருத்துக்களைத் தெரிவித்து எழுதுபவர்கள் – தங்களுடைய தவறைப் புரிந்து கொண்டவுடன், மரியாதையாக மன்னிப்புக் கேட்பதுதான் முறை. நாம் மன்னிப்பு கோருகிறோம். சென்ற இதழ் தலையங்கத்தில், நாம் தெரிவித்திருந்த கருத்துக்கள் பல, எவ்வளவு தவறானவை என்பது இப்போது நமக்குப் புரிந்து விட்டது. மன்னிக்க வேண்டுகிறோம்.
நீதிமன்றங்களை கட்டப் பஞ்சாயத்துடன் ஒப்பிட்டு, "சில நீதிபதிகள் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல நடந்து கொள்கிறார்கள்' என்றுசொல்லி, "அரசாங்கத்தை
விமர்சிப்பதற்கு நீதிபதிகளுக்கு அதிகாரம் கிடையாது' என்று விளக்கி, "முதலமைச்சரை விட நீதிபதிகளுக்கு அதிக அதிகாரம் கிடையாது' என்று பிரகடனம் செய்து, "அவர்களே (நீதிபதிகளே) தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பார்களேயானால், அது சரியல்ல' என்று எச்சரித்து... அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியது, மிகவும் தவறு என்று நாம் நினைத்து விட்டோம்.
அது மட்டுமல்ல. அமைச்சர், மேலே சொன்ன மாதிரியெல்லாம் பேசிய அதே மேடையில், அமைச்சரின் பேச்சை ஆமோதித்து தமிழக முதல்வர், "இனிமேலாவது நாட்டில் நேர்மை, நியாயம் இவைகள் தழைக்கட்டும்' என்று கூறினார். தவிர,
நீதிபதிகளை எதிர்ப்பாளர்கள் வரிசையில் சேர்த்து, "இந்த அரசுக்குத் துணையாக மத்தியிலே இருக்கிற ஆட்சி விளங்கிக் கொண்டிருக்கிறது... என்பதையும் எண்ணிப் பார்த்து எதிர்ப்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும்' என்றும் பேசினார். இது
நீதிமன்றத்திற்கு விடப்பட்ட மிரட்டல் என்று நினைத்து, நாம் கருத்து தெரிவித்தோம். அதனால், அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோரின் இந்த பேச்சுக்களை, நாம் வன்மையாகக் கண்டித்தோம்.
ஆனால், தவறு செய்தது நாம்தானே தவிர, அமைச்சரோ, முதல்வரோ அல்ல என்பது இப்போது நமக்குப் புரிந்து விட்டது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்குவகித்த "பெஞ்ச்' இப்பிரச்சனையை கவனித்த போது, "நீதித் துறையின் அதிகாரத்தை களங்கப்படுத்தும் நோக்கத்தில், (அமைச்சரின்) இந்தக் கருத்து கூறப்பட்டுள்ளது. அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பேச்சு முறையற்றது;
தேவையில்லாதது. கட்டப் பஞ்சாயத்து என்று கூறுவதால் கோர்ட்டின் கண்ணியத்திற்கு குறைவு ஏற்படும். அது மட்டுமல்ல, அவர் தொடர்பாக மூன்று வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, இந்தக் கருத்துக்களை அவர் கூறியிருக்கிறார். எனவே, அந்த
நீதிமன்ற விசாரணையில் அவர் செய்த குறுக்கீடாகவே இதைக் கருதுகிறோம்...' என்றெல்லாம் தலைமை நீதிபதி கூறினார்; அமைச்சரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
இந்த நிலையில், நாம், நமது கருத்து சரியானது என்றே நினைத்தோம்; அமைச்சரின் பேச்சு, நீதிமன்ற அவமதிப்பு; குறுக்கீடு; கண்டனத்திற்குரியது – என்ற நமது அபிப்பிராயம் நியாயமானது என்றே நாம் நினைத்தோம்.
இதற்குப் பிறகுதான், அமைச்சர் சார்பாக "விளக்கம்' வந்தது; நீதிமன்றம் அதை ஏற்றது; நமக்கு புத்தி வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல், அமைச்சர் சார்பாக ஒரு விளக்கத்தை தாக்கல் செய்தார். அதில் "நீதிமன்றம், நிர்வாகம், சட்டமன்றம் ஆகியவற்றைப் பற்றி தேசிய அளவில் நடக்கிற நல்ல விவாதத்தின் ஒரு பகுதியாகத்தான், அமைச்சரின் பேச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நீதித் துறையை குறைத்து மதிப்பிட்டு, அதன் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அவருடைய கருத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது' – இந்த "விளக்கம்' நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது.
"கட்டப்பஞ்சாயத்து' என்று நீதிமன்றத்தை வர்ணிப்பதும், நீதிபதிகள் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல நடந்து கொள்கிறார்கள் என்று கூறுவதும், அரசை விமர்சிக்க
நீதிபதிகளுக்கு அதிகாரம் கிடையாது என்று சொல்வதும், நீதிபதிகளே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பார்களேயானால்... என்று மிரட்டுவதும், "...தேசிய அளவில் நடக்கிற விவாதத்தின் ஒரு பகுதி; இதில் அவமதிப்போ குறுக்கீடோ இல்லை' என்று அமைச்சர் தரப்பில் கூறப்பட, நீதிமன்றம் அதை ஏற்றிருக்கிறது.
ஆகையால், இந்த மாதிரியெல்லாம் பேசுவதும், "பூனைக்கு மணி கட்டிய' அமைச்சரை முதல்வர் பாராட்டுவதும், "மத்திய அரசும் தங்களுக்குத் துணை' என்று எச்சரிப்பதும் – நீதிமன்ற குறுக்கீடுகள் ஆகாது; நீதிமன்ற அவமதிப்பு ஆகாது – என்று இப்போது நாம் புரிந்து கொள்கிறோம். நீதிமன்றத்தை ரொம்ப மதிப்பவர்கள்தான்,
நீதிமன்றத்தின் மீது தாங்கள் வைத்திருக்கிற அபார மதிப்பைக் காட்டுவதற்காகத்தான்
– கட்டப் பஞ்சாயத்து முதல் மத்திய அரசு துணை என்பது வரையில், மேற்குறிப்பிட்ட மாதிரி பேசியிருக்கிறார்கள் என்பதை நீதிமன்றமே ஏற்றிருப்பதால், இவை எல்லாம் கண்டிக்கத்தக்க பேச்சுக்கள் அல்ல என்று நமக்கு இப்போது புரிகிறது.
நீதிமன்றம், அமைச்சர், முதல்வர் – என்ற மூவரும் விளக்கிய பிறகு, தவறு நம்மீதுதான் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆகையால்தான், இம்மாதிரி பேச்சுக்களை கண்டித்த நாம், இப்போது மன்னிப்பு கோருகிறோம்.
ஆனால் ஒன்று. இனி, வேறு யாராவது அமைச்சர்கள் அல்லாதவர்கள், "நாமும்
நீதிபதிகள் பற்றியும், நீதிமன்றம் பற்றியும் இப்படியெல்லாம் பேசலாம்; அதில் தவறே கிடையாது' என்று நினைத்து எதையாவது பேசிவிடக் கூடாது.
ஏனென்றால் இது ஜனநாயகம். இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி. இதில்,
மந்திரிகளுக்கு ஒரு நீதி; பிற மாந்தர்க்கு நீதி மற்றோர் வகை! அத்துடன் விவகாரம் முடிந்தது. அமைச்சர் வருத்தம் தெரிவிக்கவில்லை; தனது பேச்சை
நீதிமன்றம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சொன்னார்; நீதிமன்றமும் அப்படியே எடுத்துக் கொண்டது. பிரச்சனை முற்றுப் பெற்றது.
நினைத்தேன் எழுதுகிறேன் பகுதியிலிருந்து..
இது வரலாறு காணாதது!
கார்ப்பரேஷன் தேர்தல் பற்றி, சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் இருவித தீர்ப்புகளை வழங்கிய நிலையில், பிரச்சனை மூன்றாவது நீதிபதியின் முன் போயிற்று. இப்போது மூன்றாவது நீதிபதி திரு.மிஸ்ரா, "98 வார்டுகளில் நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது' என்று தீர்ப்பளித்திருக்கிறார். அதாவது, முன்பு தீர்ப்பளித்த இரு
நீதிபதிகளில் ஒருவரான திரு. கலிஃபுல்லா அளித்த தீர்ப்பை, நீதிபதி திரு. மிஸ்ராவும் உறுதி செய்திருக்கிறார்.
தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றக் குறுக்கீடு நடைபெறுவது கடினம் – என்று முன்பு நாம் கூறியிருந்தோம்; அதே சமயத்தில் நீதிமன்றக் குறுக்கீடு அவசியமாகிற அளவிற்கு அநியாயம் நடந்திருக்கிறது என்பது திறமையாக எடுத்து வைக்கப்பட்டால், நீதிமன்றம் தனது விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தும் – என்றும் நாம் கூறியிருந்தோம்.
இப்போது இவ்விஷயத்தில் தீர்ப்பளித்துள்ள மூன்றாவது நீதிபதி மிஸ்ரா, "பொதுவாக, நீதிமன்றம் தேர்தல் விவகாரங்களில் குறுக்கிடாது; ஆனால் ஜனநாயக வழிமுறைகளைப் பாதுகாக்க மாநில தேர்தல் கமிஷன் முன்வராத நிலையில்,
நீதிமன்றம் குறுக்கிட்டு நியாயம் வழங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. ஒவ்வொரு நிகழ்ச்சியின் தன்மையை ஒட்டி, அவசியம் நேரிடுகிறபோது, தனது விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதிமன்றம் நியாயம் வழங்கும்' – என்று
கூறியிருக்கிறார்.
சென்னை கார்ப்பரேஷன்
இப்போது வந்துள்ள தீர்ப்பில், மாநில தேர்தல் கமிஷனருக்கு, நீதிபதி கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார். "மண்ணில் தலை புதைக்கிற நெருப்புக் கோழிபோல தேர்தல் கமிஷனர் நடந்து கொண்டார் – கற்சிலை போல நின்றார் – நடந்த தீமைகளைப் பார்க்க மறுத்தார் – தன்னுடைய கடமையைச் செய்யத் தவறினார்
– முரட்டுப் பிடிவாதம் காட்டினார்...' என்றெல்லாம் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இதுவரை எந்த ஒரு தேர்தல் கமிஷனரைப் பற்றியும், எந்த ஒரு நீதிமன்றமும் இவ்வளவு கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிற அவசியம் நேரிட்டதில்லை. வரலாறு காணாத நீதிமன்றக் கண்டனம் பெறுகிற அளவிற்கு, மாநில தேர்தல் கமிஷனர், ஆளும் கட்சியின் ஏவலைப் புரிந்திருக்கிறார்.
கார்ப்பரேஷன் தேர்தலின்போது நடந்த அட்டூழியங்களை, சர்வ சாதாரண நிகழ்ச்சி போல வர்ணித்த தேர்தல் கமிஷனரைக் கண்டித்து, நீதிமன்றம் "இந்த தேர்தலில் நடந்த அட்டூழியம், சாதாரணமானது அல்ல. அது சுனாமி!' என்று கூறியிருக்கிறது.
நீதிபதி மிஸ்ரா
"நீதிபதிகள் ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்களா?' என்ற அதிமேதாவித்தனமான கேள்வியை எழுப்பி, முதல்வரின் பாராட்டையும் பெற்ற, அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் ஆத்திரப் பிரசங்கத்தை நினைவுபடுத்துகிற வகையில், நீதிபதி திரு. மிஸ்ரா, "தேர்தல் தினத்தன்று, இந்த பூமி, நரகமாக மாறி விட்டது என்பதைக் கூற, ஒருவர் ஆகாயத்திலிருந்து குதித்து வர வேண்டிய அவசியம் இல்லை' என்று
கூறியிருக்கிறார். அமைச்சரும், முதல்வரும் நீதிபதிகளுக்கு விடுத்த எச்சரிக்கையும், மிரட்டலும் பலன் அளிக்காததால், அவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ!
இது ஒருபுறமிருக்க, தேர்தல் கமிஷனரைப் பற்றி யார் குறை கூறினாலும், "அவர் பிற்படுத்தப்பட்டவர் என்பதால், அவரை விமர்சிக்கிறார்கள்' என்று ஜாதியைப் புகுத்திப் பேசி, தேர்தல் கமிஷனருக்கு வக்காலத்து வாங்கி வந்தார் தமிழக முதல்வர்; இப்போது இரு நீதிபதிகள், இரு வேறு தீர்ப்புகளில், தேர்தல் கமிஷனரின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையை வன்மையாகக் கண்டித் திருக்கிறார்கள். இதற்கும் முதல்வர் ஜாதியை இழுக்கப் போகிறாரோ, என்னவோ!
"இந்தத் தேர்தல் கமிஷனர் பதவியில் நீடிக்கிற வரையில், தேர்தல் முறையாக நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது' – என்ற எதிர்க் கட்சிகளின் நிலைக்கு, முழு நியாயம் கிட்டியிருக்கிறது.
இத்தனை கண்டனங்களுக்குப் பிறகும் – எதிர்க் கட்சிகளுக்கு சகுனி பட்டம் சூட்டுவது, விமர்சகர்களுக்கு ஜாதி வெறிச் சாயம் பூசுவது, நீதிமன்றத்திற்கு அமைச்சர் மூலம் மிரட்டல் விடுவது – போன்ற வழிமுறைகளை முதல்வர் கடைப்பிடித்தால் – தேர்தல் கமிஷனரின் பதவியைக் காப்பாற்றலாம்; ஆனால் அந்த அமைப்பின் மரியாதையைக் காப்பாற்ற முடியாது.
Posted by IdlyVadai at 2/23/2007 10:46:00 AM 5 comments
Labels: பத்திரிக்கை
Thursday, February 22, 2007
பத்திரிக்கை விஷமம் - 6
Posted by IdlyVadai at 2/22/2007 09:58:00 AM 7 comments
Labels: பத்திரிக்கை விஷமம்
Wednesday, February 21, 2007
***கு.உ.க*** குதிரையின் உடம்பில் கரி
இன்று ஒரு தகவல்:
வெள்ளையில் கருப்பு கோடுகளா அல்லது கருப்பில் வெள்ள கோடுகளா ? உங்காளுக்கு தெரியுமா இரண்டு வரிக்குதிரைகள் கோடுகள் ஒன்று போல் ஒன்று இருப்பது இல்லை அதே போல் மனிதர்களும் ஒருவர் போல் மற்றொருவர் இருப்பதில்லை
( வரிகுதிரை படம் எதுவும் கைவசம் இல்லை)
Posted by IdlyVadai at 2/21/2007 03:52:00 PM 19 comments
Labels: நகைச்சுவை
Tuesday, February 20, 2007
திமுக வெற்றி !
-> 33 இடங்களில் திமுக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் ( இதை பற்றி விஜயகாந்த் பேட்டி கீழே )
-> 67 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி. திமுக வாங்கிய ஓட்டுக்களில் ~50% தேமுதிக வாங்கியுள்ளது
[ ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறங்கற... ]
‘சென்னை மாநகராட்சியின் 100 வார்டு களில் 33 வார்டுகளுக்கு தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களே? அங்கு உங்கள் கட்சி போட்டியிடவில்லையா?’’
‘‘இல்ல சார்... எல்லா வார்டுகளுக்கும் நாங்க வேட்பாளர்களை அறிவிச்சிருந்தோம். திடீர்னு ஒரு நாள் நைட்டு எங்க வேட்பாளர்கள் எல்லாருமே ஒவ்வொருத்தரா எனக்கு போன் போட்டாங்க. ‘எங்களை மிரட்டறாங்க, எங்க குடும்பத்துக்குப் பாதுகாப் பில்லை, போட்டியிலயிருந்து வாபஸ் வாங்கச் சொல்றாங்க, ஆனா உயிரே போனாலும் நாங்க வாபஸ் வாங்க மாட்டோம்’னு சொன்னாங்க. அவங்ககிட்ட நான் சொன்னது என்ன தெரியுமா? ‘இங்க உங்களுக்குப் பாதுகாப்பு இருக்காது. சுவர் இருந்தாத்தான் சித்திரம் வரைய முடியும்? நமக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கு. பேசாம நீங்க வாபஸ் வாங்கிடுங்க’னு சொன்னேன். ஏதோ பயந்துகிட்டு நான் இப்படிச் சொன்னதா வெளியில சொல்றாங்க. உண்மையில எங்களைப் பயமுறுத்துறவங்களோட பாணி அப்படி இருந்துச்சு. நேரடியா நம்மளை எதிர்த்தா எதிர்த்து நிக்கலாம். அதை விட்டுட்டு நம்ம பிள்ளைங்களை, பொண் டாட்டிங்களை மிரட்டினா..? இங்க சட்டம்- ஒழுங்கு எங்க இருக்கு? போன மாநகராட்சித் தேர்தல்லயே வன்முறையைக் கண்கூடா பார்த்துட்டோம். வாபஸ் வாங்கச் சொல்லிட்டாலும், அவங்களைப் பாதுகாக்கற பொறுப்பு என்னோ டது. அதனால அவங்களை சில நாள் ராத்திரி முழுக்க என் மண்டபத் துல தங்கவெச்சுப் பாதுகாத்தேன். போட்டியில்லாம தி.மு.க. கூட்டணிக் காரங்க ஜெயிச்ச அறிப்பு வந்ததும் தான் எங்காளுங்க நிம்மதியா நடமாட முடிஞ்சது. ஆனா, மிச்சமிருக்கற வார்டுகள்ல நாங்கள் மல்லுக்கு நிக்கறோம். மக்களோட சப்போர்ட் எங்களுக்குத்தான் இருக்குன்னு நான் அடிச்சு சொல்வேன். ஏன்னா... காலையிலயிருந்து ராத்திரி வரைக் கும் சென்னை தெருக்கள்ல நான் சுத்தறேன். மக்களைப் பார்க்கறேன். அவங்க முகத்துல மாற்றத்தை எதிர் பார்க்கற ஏக்கம் தெரியுது. எங்களை ஆதரிக்கணும்ங்கற முடிவுல அவங்க இருக்காங்க.’’
( விஜயகாந்த் பேட்டி : ஜூவி )
Posted by IdlyVadai at 2/20/2007 03:04:00 PM 1 comments
Labels: செய்திகள்
Saturday, February 17, 2007
நாளை மறுவாக்கு பதிவு!
சென்னை மாநகராட்சியின் 67 வார்டுகளுக்கு நாளை மறுவாக்குப் பதிவு நடைபெறுவதையொட்டி, தேர்தல் ஆணையம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Posted by IdlyVadai at 2/17/2007 04:38:00 PM 1 comments
Labels: செய்திகள்
Friday, February 16, 2007
3 பேர் தூக்கு, 25 பேருக்கு 7 வருடம்!
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஏழு ஆண்டுகளுக்க பின் குற்றவாளிகள் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.இது குறித்து தெரிவித்த பலியான மாணவிகளின் உறவினர்கள் நீதிக்கு கிடைத்த வெற்றி என்றனர்.பலியான மாணவி ஹேமலதாவின் தந்தை கூறுகையில் தீர்ப்பு தாமதமாக வந்தலும், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி என்றார்.பலியான மற்றொரு மாணவியின் தந்தை கூறுகையில் , இந்த தீர்ப்பிலிருந்து தவறு செய்பவர்கள் அனைவரும் திருந்த வேண்டும் என்றார். தீர்ப்பு வழங்கப்பட்டபோது மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் வடித்தனர்
கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி சென்னை தனிக்கோர்ட்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண் டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதையொட்டி அ.தி.மு.க.வினர் போராட் டத்தில் குதித்தனர்.
கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பஸ் தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் மறிக்கப்பட்டது. அந்த பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி இறந்தனர். அதோடு 18 மாணவிகள் தீக்காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் டி.கே.ராஜேந்திரன், நகர செயலாளர் நெடு என்கிற நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத்தலைவர் மாது என்கிற ரவீந்திரன், ஊராட்சிமன்ற தலைவர் முனியப்பன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் முருகேசன், தவுலத் பாஷா, வேலாயுதம், முத்து என்கிற அறிவழகன், ரவி, வி.முருகன், வி.பி.முருகன், வடிவேல், சம்பத் மற்றும் நஞ்சன் என்கிற நஞ்சப்பன், பழனிசாமி, ராஜ×, மணி என்கிற கூடலர் மணி, மாது, ராமன் (அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்), சண்முகம், சந்திரன், செல்லகுட்டி, காவேரி, மணி, மாதையன், செல்வம், மாதேஸ், செல்வராஜ், மாணிக்கம், வீரமணி, உதயகுமார் ஆகிய 31 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் செல்லக்குட்டி இறந்துவிட்டார்.
இந்த வழக்கு விசாரணை சேலம் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அ.தி.மு.க. நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேர் கொலை குற்றவாளிகள் என்று நீதிபதி கிருஷ்ணராஜா தீர்ப்பு கூறினார்.
மாதேஸ், பழனிசாமி ஆகிய 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் மீது தனித்தனி பிரிவுகளின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தண்டனை விவரம் அறிவிக் கப்படும் என்று நீதிபதி தெரி வித்தார்.
நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தண்டனை விவரம் வருமாறு:-
கொலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் 46 பேரை கொல்ல முயன்றதாக 307-வது பிரி வின்கீழ் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 46 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இது தவிர சொத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவு களில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ. 13 ஆயிரம் அபராதமும் இவர்களுக்கு பொருந்தும்.
டி.கே.ராஜேந்திரன் உள்பட மற்ற 25 பேருக்கும் பொது சொத்துக்கு சேதம் விளை வித்தல், சாலை மறியல், பஸ் கண்ணாடிகளை உடைத்து எறிதல், வாகனங்களையும், மனித நடமாட்டத்தையும் தடுத்தல், சட்ட விரோதமாக கும்பலாக கூடுதல், உயிர் சேதம் விளைவிக்கும் எண்ணத்துடன் சட்டவிரோத கும்பலுடன் கூடி கலகம் விளை வித்தல், தமிழ்நாடு சொத்து பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் குற்றம் நிரூபிக் கப்பட்டுள்ளதால் 25 பேருக்கும் தலா 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், தலா ரூ. 13 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதில் மணி என்ற மெம்பர் மணி என்பவர் பயங்கர ஆயுதங்களால் பஸ்சை உடைத்ததாக அவருக்கு கூடுதல் 6 மாதம் (அதாவது 7 ஆண்டு 9 மாதம்) ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
Posted by IdlyVadai at 2/16/2007 01:49:00 PM 2 comments
Labels: செய்திகள்
Thursday, February 15, 2007
பத்திரிக்கை விஷமம் - 5
இந்த பகுதியில் சில கேள்வி பதில்கள் ( எந்த பத்திரிக்கை என்று பின்னூட்டத்தில் சொல்லலாம் )
1. கே : "தமிழக ஆட்சியில் பங்கு கேட்பது, பிச்சைக்காரர்களை விட கேவலமாக உள்ளது' – என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும்; "ஆட்சியில் பங்கு கேட்பது, யானை பிச்சை எடுப்பது போன்றது' – என்று பீட்டர் அல்ஃபோன்ஸும் கருத்து கூறியுள்ளார்களே! இது எதைக் காட்டுகிறது?
ப : பீட்டர் அல்ஃபோன்ஸ் இப்படிப் பேசியிருக்கக் கூடாது. பிச்சை போட்டவுடன், அதைப் பெற்றுக் கொள்கிற யானை என்ன செய்கிறது? பிச்சை போட்டவரின் தலைமீது கை (தும்பிக்கை) வைக்கிறது. காரியம் ஆனவுடன் காங்கிரஸும் இப்படித் தன் தலை மீது கை வைத்து விடுமோ – என்ற கவலை முதல்வருக்கு வருமே!
2. கே : "என் மனைவி பக்தி மேலிட்டு சாய்பாபா காலில் விழவில்லை. வயதில் பெரியவர்கள் வந்தால், அவர்களை வணங்குவது என்ற மரியாதை நிமித்தம் காட்டிய மரபுதானே தவிர, வேறில்லை' – என்று முதல்வர் விளக்கம் அளித்துள்ளது பற்றி?
ப : சாய்பாபா, தனது வீட்டிற்கு வந்து சென்றபிறகு, அவரை எவ்வளவு அவமதிக்க முடியுமோ, அவ்வளவு அவமதித்து வருகிறார் முதல்வர். வயதைத் தவிர, மரியாதைக்குரிய அம்சம் வேறெதுவும் சாய்பாபாவிடம் இல்லை என்று சொல்வது போல, "சாய்பாபா வயதானவர் என்பதால், மனைவி மரியாதை காட்டினார்...' என்கிறார்; "சாய்பாபா காவிரி என்றால், நான் கொள்ளிடம்...'; "அவரும் இலவசம் தருகிறார், நானும் இலவசம் தருகிறேன்...' – என்றெல்லாம் பேசி, சாய்பாபாவை முதல்வர் தனக்கு இணையாக்கி, அவரை சாதாரண மனிதர் என்பது போல குறிப்பிடுகிறார்.
இதைவிட வேதனை – "நான் யாரிடம் அனுமதி பெற வேண்டுமோ, அவரிடம் அனுமதி பெற்றுத்தான் – வீரமணியிடம் அனுமதி பெற்றுத்தான் – சாய்பாபாவுடன் விழாவில் கலந்து கொண்டேன்...' என்றும் முதல்வர் கூறியிருக்கிறார். "வீரமணி சம்மதம் பெற்று, விழாவில் பங்கேற்பு; வயதுக்கு மரியாதையே தவிர, பக்தி அல்ல; நானும் சாய்பாபாவும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு...' என்ற வகைகளில் பேசுகிறவருடைய வீட்டிற்குப் போக வேண்டிய நிலை சாய்பாபாவிற்கு வந்தது ஏன் – என்பதுதான் புரியவில்லை.
3. கே:சிம்புவின் புது ஹேர் ஸ்டைல் எப்படி?
ப: வைக்கோல் புதரில் மாட்டிக் கொண்ட மூஞ்சூறு போல் இருக்கிறது.
4. கே: முத்தத்தைப் பற்றி தாங்கள் எழுதிய பல பதில்களைப் படித்திருக்கிறேன். ஆனால், அதைப் பற்றி வாத்ஸ்யாயனர் என்ன எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லையே?!
ப: பல பதில்களா?! நல்ல கதை! சரி, ஒரு காதல் (காம) களஞ்சியத்தையே படைத்த வாத்ஸ்யாயனர், அதில் மிக முக்கிய மான பகுதியான முத்தத்தைப் பற்றி எழுதாமல் இருப்பாரா? ‘காதல் ஜோடி இணைவதற்கு அவசரப்படக் கூடாது’ என்கிறார் வாத்ஸ். ‘தழுவல், லேசான கீறல்கள், முத்தம் - இவற்றை மாற்றி மாற்றி அனுபவிக்க வேண்டும் (fore play!). அதற்காக ரொம்ப நேரம் முத்தமிட்டுக்கொண்டே இராமல், அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும்...’ - வாத்ஸ்யாயனரின் ஆரம்பமே இப்படி!
அடிப்படையில் மூன்று வித முத்தங்களைப் பெண்கள் பின்பற்ற வேண்டும் என்கிறார். அடையாளப்பூர்வமான முத்தம் - இதில் உதடுகள் இணையும். ஆனால், பெண் தன் உதடுகளை நகர்த்தாமல் சும்மா வைத்துக்கொண்டு இருக்க வேண்டும். அடுத்தது, சிலிர்ப்பான முத்தம் - கீழ் உதட்டால் மட்டும் காதலனின் உதடுகளை வருடுவது. பிறகே, அழுத்த முத்தம் - ம்... இது முழுமையான, நாவுகளின் நுனிகளும் இயங்கும் சற்றே ஆவேசமான, ஒலியெழுப்பும் முத்தம்! பிறகு, வாத்ஸ்யாயனர் நுணுக்கமாக, பக்கம் பக்கமாக முத்தம் பற்றி புகுந்து விளை யாடுகிறார். அதையெல்லாம் நான் இங்கே சொல்ல மாட்டேம்ப்பா!
5. கே: முடி கண்ணை மறைப்பதால் கலாமுக்கு நாட்டு நடப்பு தெரியவில்லை என்று பால்தாக்கரே சீறியிருக்கிறாரே?
ப: தலைமுடியை ஒதுக்கி விட்டுக் கொண்டு உலகைச் சீராகப் பார்க்கலாம். அகந்தை கண்களை மறைத்தால் எதையும் எப்போதும் சரியாகக் காண முடியாது.
Posted by IdlyVadai at 2/15/2007 01:36:00 PM 7 comments
Labels: பத்திரிக்கை விஷமம்
இன்று தீர்ப்பு
தர்மபுரி அருகே கோவை வேளாண்மை பல்கலைக் கழக கல்லூரி மாணவிகள் சென்ற பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டதில் 3 மாணவிகள் மரணம் அடைந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வருகிறது.
ஜெ: வருமானவரி சோதனைக்கு எதிப்பு தெரிவிச்சு இந்த விஜயகாந்த் கட்சிகாரங்க ஏன் கொடும்பாவியை எரிக்கிறாங்க ? நம்ம கட்சிக்காரங்க எப்பவும் அப்படி நடந்துக்க மாட்டார்கள்
ஓ. பன்னீர் செல்வம்: ஆமாம்மா, தர்மபுரியிலே கூட பஸ்ஸைத்தான் எரித்தார்களே தவிர கொடும்பாவியை எரிக்கலை
Posted by IdlyVadai at 2/15/2007 08:11:00 AM 2 comments
Labels: செய்திகள்
Wednesday, February 14, 2007
சன் டிவியை தொடர்ந்து ராஜ் டிவி பங்குகள்
எனக்கு பங்குசந்தை பற்றி எதுவும் தெரியாது. பங்குகள் பற்றிய வலைப்பதிவு இங்கே . இந்த வலைப்பதிவின் கடைசி ஐந்து டாப்பிக்ஸை சைடில் பார்க்கலாம். ராஜ் டிவி பங்குகள் பற்றி இவர் எழுதுவார் என்று நம்பிகிறேன்.
மேலும் செய்தி கீழே...
சென்னை பிரபல தமிழ் டிவி சேனலான ராஜ் டெலிவிஷன் பங்குகளை வெளியிடுகிறது.
ரூ. 10 முகமதிப்புடைய பங்குகள் அதாவது 35.68 லட்சம் பங்குகள் புக் பிலடிங் எனும் ஏல முறையில் வெளியிடப்படுகிறது. பங்கின் விலை குறைந்தபட்சம் ரூ. 221/ முதல் அதிகபட்சம் ரூ. 257 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்குகளை இன்று முதல் பிப்ரவரி 23 வரை விண்ணப்பிக்கலாம். பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவுள்ளது.
25,68, 250 லட்சம் பங்கு வெளியீட்டில் 3.24 லட்சம் பங்குகள் (3,24,384) பணியாளர்களுக்கும், பொது மக்களுக்கு 32.43 லட்சம் (32,43,866) பங்குகள் வழங்கப்படும். 50 சதவிகிதம் நிதி கழகங்களுக்கும், 15 சதவிகிதம் மேற்கூறியவர் அல்லாத தனி நபர் முதலீட்டாளர்களுக்கும், 35 சதவிகித சில்லறை முதலீட்டாளர் களுக்கும் வழங்கப்படும்.
பங்கு வெளியீடு மூலம் திரட்டப் படும் நிதி மூலம் இயக்கும் வசதிகளை பெருக்கும், புதிய சேனல்களை அறிமுகப்படுத்தவும், தனது சேனல்களை வெளிநாடுகளில் ஒலி பரப்பவும், புதிய ஸ்டுடியோ அமைக்க வும், குறும்படம், டெலிவிஷன் அதாவது டிவி படங்களை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ராஜ்டிவி நிறுவனம் மார்ச் 31,2006 முடிய மொத்த வருமானமாக 3195.98 லட்சம் ஈட்டியுள்ளது. பங்கு வெளியீட்டை விவ்ரோ ஃபைனான்ஸ் நிர்வகிக்க உள்ளது. உடன் நிர்வாகம் செய்வது கனரா வங்கி. 1994 ஆம் ஆண்டு எம்.ராஜேந்திரனால் தொடங்கப் பட்டது. ராஜ் டிவி மற்றும் ராஜ் டிஜிடல் ப்ளஸ் ஆகிய சேனல்கள் உள்ளன.
Posted by IdlyVadai at 2/14/2007 05:39:00 PM 0 comments
Labels: செய்திகள்
ரோஜா தெரியாத தகவல்கள் !
காதலர் தினத்திற்கு உதவும் ரோஜா பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள் சில
* தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் இருக்கும் மாலூர் என்ற இடத்தில் பிளாஸ்டிக் கூடாரத்தில் ரோஜாக்கள் வளர்க்கப்படுகிறது.
* சுமார் 1000 ஏழை பெண் குழந்தைகள் சுறுசுறுப்பாக இங்கு வேலை செய்கிறார்கள்.
* இந்த பெண் குழந்தை தொழிலார்களுக்கு கூலி 20-25 ரூபாய். ஏற்றுமதி ஆகும் ஒரு ரோஜாவின் விலை வெளிநாடுகளில் (ஹாலாந் ஜப்பானில்) 100 ரூபாய்.
* பெங்களூரிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு விமானம் அளவிற்கு ரோஜாக்கள் ஏற்றுமதி ஆகிறது. காதலர் தினம் போன்ற விஷேச நாட்களில் இது பன் மடங்கு அதிகரிக்கிறது. குழந்தைகளும் இரண்டு ஷிப்டுகளில் வேலை பார்க்கிறார்கள்.
* ஒரு நாளைக்கு சில பெண் குழந்தைகள் 10,000 மேற்ப்பட்ட ரோஜாக்களை பறிக்கிறார்கள்.
* ரோஜாக்களை மென்மையாக பறிக்க வேண்டும் அதனால் பெண் குழந்தைகள் தான் இங்கு அதிகம் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் !
Posted by IdlyVadai at 2/14/2007 11:42:00 AM 4 comments
Labels: சமுதாயம்
காதலர் தினம்
காதலர் தினத்திற்கு எந்த நியூஸும் கிடைக்கவில்லை. அதனால் நான் இந்த வாரம் படித்த சில ஜோக்ஸ்
1) ‘‘அன்பே! உனக்காக நான்
தாஜ்மஹால் கட்டுவேன்!’’
‘‘இப்படியே உதார் விடாம
முதல்ல என்னைக் கட்டுங்க!’’
2) ‘அடுத்த வருஷம் நாம
இதே நாள்ல மூணு பேரா இருப்போம்!’’
‘‘போ மீனா... அடுத்த வருஷம்தான்
உன் தங்கச்சியைக் கூட்டிட்டு வருவியா?’
Posted by IdlyVadai at 2/14/2007 07:38:00 AM 1 comments
Labels: நகைச்சுவை
Tuesday, February 13, 2007
விருதுகள்
"நான்" - லா.ச.ராமாமிருதம் - வானதி பதிப்பகம். புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய மற்றொரு புத்தகம். இந்த புத்தகத்தில் குமுதம் ஜங்ஷன் பேட்டியிலிருந்து ஒரு கேள்வி, பதில்.
ஜங்ஷன்: பக்கத்து மாநில எழுத்தாளர்களுடன் ஒப்பிடும்போது தமிழ் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம், விருதுகள் எல்லாம் குறைவுதான். பலருக்கு அது ஒரு மனக்குறையாகவே இருக்கிறது. உங்களுக்கு எப்படி இருக்கிறது.
லா.ச.ரா: விருதுகள் என்று கணக்கிட்டால் 10, 12 வாங்கியிக்கிறேன். சாகித்ய அகாதமி கலைமாமணி... இப்படியே போய்க்கொண்டே இருக்கும். சங்கராச்சாரியார், பெரியவர் ஒரு விருது கொடுத்திருக்கிறார். நான் கொஞ்சம் அதனைப் பெரியதாகத்தான் நினைக்கிறேன். அவருக்கும் இலக்கியத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் என்று எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய எழுத்தில் ஆன்மிகத்தின் சாயல் இருப்பதால் அவர் கொடுத்திருக்கிறார். அப்புறம் ஞானபீட விருதுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறேன்.
நான் பிராமணன். அந்தத் தொந்தரவு வேறு இருக்கிறது. எனவே இங்கே திமுக ஆட்சியில் எனக்கு விருதும் கிடைக்கவில்லை. ஜெயலலிதா இருந்ததால் எனக்கு கலைமாமணி கிடைத்தது. அது கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன ? நான் அதையெல்லாம் போட்டுக் கொள்வதே கிடையாது. டாக்டர் பட்டம் வேறு யாரோ ஒருவர் கொடுத்திருக்கிறார். இதற்கும்மேல் மற்றவர்களால் எனக்கு என்னதான் தந்துவிட முடியும்!
Posted by IdlyVadai at 2/13/2007 02:37:00 PM 5 comments
Labels: எழுத்தாளர்கள், பதிப்பகங்கள்
ஹோட்டல் நிரோத்
திருச்சி - மணப்பாறை சாலையில் உள்ள இனாம்குளாத்தூரில் ஒரு ஓட்டல் இருக்கிறது. பெயர் நிரோத். ஓட்டலின் உள்ளே எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு பேனர்கள், போர்டுகள், தூண்டுபிரசுரங்களுடன் இலவச நிரோத் பாக்கெட்டுகளும் வைக்கப்பட்டு இருக்கின்றன.
"ஓட்டலை பூட்டும்போது 'நிரோத் பாக்கெட்டுகளை வெளியே ஒரு பெட்டியில் போட்டுவிட்டு செல்வோம். காலையில் வந்து பார்க்கும்போது பெட்டி காலியாக இருக்கும்" என்கிறார் உரிமையாளர் ஜானி.
( தகவல் ராணி வார இதழ் 18-2-07 )
Posted by IdlyVadai at 2/13/2007 12:52:00 PM 0 comments
Labels: செய்திகள்
கோன் பனேகா ராஷ்ட்ரபதி
ஜனாதிபதி பதவிக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் பெயரை பரிந்துரை செய்ய சமாஜ்வாதி கட்சி பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிக்காலம் 5 மாதங்களுக்கு பிறகு முடிவடைகிறது. இந்நிலையில், அடுத்த ஜனாதிபதியாக யார் வரக்கூடும் என்பது பற்றி பல்வேறு விதமான யூகங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் டாக்டர் கரண்சிங் மற்றும் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் நிறுத்தப்பட லாம் என கூறப்பட்டு வருகிறது.
துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத் மற்றும் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது. ஜனாதிபதி அப்துல் கலாமே மீண்டும் இந்த பதவிக்கு முன்னிறுத் தப்படலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆச்சரியப்படும் வகையில் இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் பெயரும் சேர்ந்திருக்கிறது.
சமாஜ்வாதி கட்சி அவரது பெயரை பரிந்துரைப்பது பற்றி தீவிரமாக பரிசீலித்து வருவதாக பேசப்படு கிறது. அமிதாப்பச்சன் சமாஜ்வாதி கட்சிக்கு நெருக்கமானவர். தெலுங்கு தேசம், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் 3வது அணியின் வேட்பாளராக அமிதாப்பை நிறுத்த சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டிருப்பதாக பேசப் படுகிறது.
Posted by IdlyVadai at 2/13/2007 07:21:00 AM 2 comments
Labels: செய்திகள்
Monday, February 12, 2007
தேன்கூடு கல்யாண் மறைவு - இட்லிவடை 1 நாள் கடையடைப்பு
Posted by IdlyVadai at 2/12/2007 08:34:00 AM 0 comments
Labels: அஞ்சலி
Sunday, February 11, 2007
துக்ளக் - 37 - 3, 4
Posted by IdlyVadai at 2/11/2007 08:46:00 AM 0 comments
Labels: பத்திரிக்கை
Saturday, February 10, 2007
பஞ்சாப் தேர்தல் காட்சிகள்
Posted by IdlyVadai at 2/10/2007 07:07:00 PM 0 comments
பெண்களுக்கு பிடித்த வாசனை !
செய்தி ஆதாரம் IBNLive. என்னை அடிக்க வராதீர்கள்.
பெண்களுக்கு பிடித்த வாசனை எது
1.ஜவ்வாது
2.AXE deo
3.Faa
4.ஆண்களின் வேர்வை வாசனை
விடை (4)!.கலிப்போர்னியாவில் நடந்த ஓரு ஆராய்ச்சியில் இதை கண்டுபிடித்துள்ளார்கள். பெண்கள் இந்த வாசனையை(?) முகர்ந்தால் மெய்மறந்து குஜால் ஆகிறார்களாம். இதற்கு மேல் இந்த செய்தியை ஆங்கலத்தில் படிப்பதே மேல். மேல் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும்.
நாளை வரப்போகும் செய்திகள்.
* ஆண்கள் இனிமேல் டியோ ஸ்பிரே வாங்க வேண்டாம். ஒரு டியோ வாங்கினால் 100 இலவசம்.* இந்தியா வேர்வையை ஃபிரான்ஸ் பொன்ற வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம். ( தமிழ்நாடு
குறிப்பாக,சென்னை இதில் முதலிடம். "பேருந்திலிருந்து இறங்குவர்களை அரசு அதிகாரிகள் ஒரு பாட்டுலுடன் வரவேற்றார்கள்" - தினந்தந்தி தலைப்பு செய்தி.
* கணவர் டியோ உபயோகிக்கிறார். மனைவி விவாகரத்து!* காதலர் தினம் வாழ்த்து அட்டைகள் வேர்வை வாசனையில் தயாரிப்பு.
( இது போல போஸ்களில் ஆண்கள் படங்கள் எதுவும் கைவசம் இல்லை. அதனால் இந்த படங்கள் ஆண்களுக்காக மாட்டும் :-)
Posted by IdlyVadai at 2/10/2007 07:42:00 AM 3 comments
Friday, February 09, 2007
கடவுளுக்கு SMS அனுப்ப வேண்டுமா ?
Posted by IdlyVadai at 2/09/2007 11:46:00 AM 6 comments
Labels: நகைச்சுவை
Thursday, February 08, 2007
காவிரி தீர்ப்பு பற்றிய நல்ல கட்டுரை
காவிரி தீர்ப்பு: கர்நாடகத்தின் நிலைப்பாடுகள் என்ற தலைப்பில் ஜடாயு பதிவு எழுதியிருக்கிறார். எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.
Posted by IdlyVadai at 2/08/2007 12:57:00 PM 0 comments
Labels: கட்டுரை, வலைப்பதிவு
மன்னரின் ஓவியம்
இன்று ஒரு சின்ன கதை.
ஒருமுறை விவேகானந்தர் ஒரு மன்னரை பார்க்க போயிருந்தார். மன்னருக்கு ஆன்மிகத்தில் அவ்வளவாக நாட்டமில்லை. குறிப்பாக விக்ரக ஆராதனையை அவர் கேலிகூட செய்வார். விவேகானந்தர் வந்த போது அவரிடமும் விக்கிரக வழிபாட்டை கிண்டலடித்து விமர்சனம் செய்தார்.
அவருக்கு அவருடைய வழியிலேயே போய் பாடம் புகட்டவேண்டும் என்று விவேகானந்தர் நினைத்து கொண்டார். 'விக்ரகம் என்பது கடவுளின் ஒரு அடையாளம் என்று அதனை வழிபடுவதன் மூலம் நாம் கடவுளையே காண முடியும்' என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார், விவேகானந்தர். ஆனால் மன்னர் திருப்தியடைவதாக இல்லை.
விவேகானந்தர் அரசவையில் பிரமுகர்களை வரவழைத்தார். அந்த அறையில் இருந்த மன்னனின் ஓவியத்தை அவர்களிடம் காட்டினார். 'இது மன்னர் அவர்களின் ஓவியம், இதன் மீது எச்சில் துப்புங்கள்' என்று அவர்களிடன் சொன்னார். அவர்கள் பதைபதைத்துவிட்டார்கள். 'என்ன கொடுமை இது?' மன்னர் ஓவியத்தை அவமரியாதை செய்யலாமா?" என்று கேட்டார்கள். 'இது வெறும் ஓவியம்தானே, இதற்கு உயிர் இருக்கிறதா என்ன? நீங்கள் அவமரியாதை செய்தாலும் இதை கண்டு இந்த ஓவியம் கோபம் கொள்ளப் போகிறதா என்ன? பிறகு ஏன் தயங்குகிறீகள் ?' என்று கேட்டார் விவேகானந்தர். இது உயிரற்ற ஓவியமாக இருந்தாலும் இதனை நாங்கள் மன்னராகவே பாவிக்கிறோம்' என்று அவர்கள் ஒன்றுபட்டு உரத்த குரலில் சொன்னார்கள்.
விக்ரக வழிபாடு இப்படிப்பட்டதுதான், விவேகானந்தர் மன்னரிடம் சொன்னார். நாம் பார்க்க முடியாத கடவுளை ஒரு உருவமாக நாம் வழிபடுகிறோம். அதனால் ஒன்றும் தவறில்லை. கடவுளையே நேரடியாக வழிபடுவதுபோலத் தான் இது
மன்னர் புரிந்து கொண்டார்.
புத்தக கண்காட்சியில் வாங்கிய 'ஆன்மிக ஸ்வீட் ஸ்டால்' புத்தகத்திலிருந்து ஒரு சின்ன கதை. பிரபு ஷங்கர், வரம் பதிப்பகம்(கிழக்கு)
Posted by IdlyVadai at 2/08/2007 09:00:00 AM 3 comments
Labels: ஆன்மிகம், கதை, பதிப்பகங்கள்
Wednesday, February 07, 2007
நோ கமெண்ட்ஸ்
கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்போம் - கர்நாடக மாநில தி.மு.க.அறிவிப்பு
கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கர்நாடக மாநில தி.மு.க. தெரிவித்து உள்ளது. அறிக்கை
கர்நாடக மாநில தி.மு.கழக செயலாளர்(பொறுப்பு) டி.கிள்ளிவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
கர்நாடக தமிழர்கள் கர்நாடகத்தில் காலம்காலமாக வாழ்ந்து வருகிறார்கள். கன்னட நாட்டின் நலன் தான் கர்நாடக தமிழர்களின் நலனாகும்.
ஆதரவு கர்நாடக மக்களின் ஒட்டுமொத்த நலன்கருதி முதல் மந்திரி எச்.டி.குமாரசாமி தலைமையில் காவிரி நதி நீர் பங்கீடு சம்மந்தமாக கர்நாடக அனைத்துக்கட்சிகள் எடுக்கின்ற தீர்மானத்திற்கு கர்நாடக தி.மு.கழகம் தனது முழு ஒத்துழைப்பை கொடுக்கிறது.
எங்கள் தலைவர் கலைஞர் கூறியுள்ளப்படி, கர்நாடக தமிழரும், தமிழக தமிழரும், கன்னட மக்களும் உறவினர்களாக இருக்க விரும்புகிறோம். அவ்வாறே இருந்து கொண்டுமிருக்கிறோம் என்பதை கர்நாடக தி.மு.கழகம் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் டி.கிள்ளிவளவன் கூறி உள்ளார்.
இந்த செய்தி சன் டிவியில் வராது அதனால் சன் டிவி படம் இங்கே. ஒரு ஸ்பெஷல் எஃபெக்ட் அவ்வளவு தான் :-)
Posted by IdlyVadai at 2/07/2007 07:42:00 PM 28 comments
Labels: செய்திகள்
சூரிய நமஸ்கார அரசியல்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பள்ளிக் கூடத்துக்குப் போய், சூரிய நமஸ்காரம் செய்தால் உடம்புக்கு நல்லது என்று சொல்லப் போக இப்போது கம்யூனிஸ்ட் கட்சியினரின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், வித்ய பாரதி என்ற உப அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு நாடு முழுவதும் ஏராளமான பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வித்ய பாரதி பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் 20ம் தேதி சூரிய நமஸ்கார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ளுமாறு டிராவிடை அழைத்திருந்தனர். அவரும் வந்திருந்தார்.
மாணவர்களிடையே பேசிய டிராவிட், அனைவரும் சூரிய நமஸ்காரம் செய்வோம். அது நமது உடலை, மனதை வலுப்படுத்தும் என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் பங்கேற்றனர்.
இங்குதான் வம்பு வந்தது. டிராவிட் எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பள்ளிக் கூடத்துக்குப் போகலாம் என கம்யூனிஸ்ட் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பிருந்தா காரத் இதுகுறித்துக் கூறுகையில், தனிப்பட்ட முறையில் டிராவிட் எந்த முடிவையும் எடுக்கலாம். அதை யாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் டிராவிட் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தவறு.
மத நோக்கத்தைக் கொண்டஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் டிராவிட் பங்கேற்றது ஆச்சரியமாக உள்ளது என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பள்ளி என்று தெரிந்தும் டிராவிட் கலந்து கொண்டது தவறு என்று கூறியுள்ளார்.
ஆனால் டிராவிட் இதை மறுத்துள்ளார். பள்ளிக் குழந்தைகள் கலந்து கொள்ளும் யோகாசன நிகழ்ச்சி என்று கூறித்தான் என்னை அழைத்தனர். அதனால்தான் நானும் போனேன். இதில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை.
கிரிக்கெட் வீரர்கள் கூட யோகாசனம் செய்கிறோம். இதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று புரியவில்லை என்றார்.
( நன்றி தட்ஸ் தமிழ், ஆங்கில செய்தி : CNNIBN )
பிகு: சூரிய நமஸ்காரம் உதய சூரியனை பார்த்து செய்தால் நல்லது.
Posted by IdlyVadai at 2/07/2007 07:27:00 PM 2 comments
Labels: செய்திகள்
அவர்தாம் பெரியார்
பெரியார் ரசிகர்கள், அவர் கொள்கைகளை எதிர்க்கிறவர்கள் எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரை. 19.9.2004 ஜூனியர் விகடனில் ஞாநி எழுதிய கட்டுரை.தீண்டாமை என்ற மிகப் பெரிய சமூகக் கொடுமைக்கு எதிராக இருபதாம் நூற்றாண்டில் நடந்த முதல் மாபெரும் போராட்டம்... வைக்கம் போராட்டம்! 1924-ல் நடந்த அந்தப் போராட்டத்துக்குக் காரணம், மாதவன் என்ற ஈழவ சாதி வக்கீலை திருவனந்தபுரம் நீதிமன்றத்துக்குள் பணிக்குச் செல்லவிடாமல் தடுத்ததுதான். நீதிமன்றம் அரண்மனை வளாகத்தில் இருந்தது. மகாராஜா பிறந்த நாளுக்காக யாகம் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஈழவர் அந்த வளாகத்தில் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று மாதவன் தடுக்கப்பட்டார்.
கேரளா முழுவதும் கோயில்களை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்ற தடை இருந்தது. இதையெல்லாம் எதிர்த்துதான் வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில், நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டது. போராட்டத்தை முன்னெடுத்த 19 முக்கிய தலைவர்களும் கைதானதும், போராட்டம் தொய்வடைந்தது. சிறையில் இருந்த தலைவர்கள் ஜார்ஜ் ஜோசப்பும் கேசவ மேனனும் அன்றைய சென்னை மாகாண காங்கிரஸ் செயலாளருக்குக் கடிதம் அனுப்பினார்கள். 'நீங்கள் வந்து தலைமை ஏற்றால்தான் போராட்டம் தொடர முடியும். உடனே வாருங்கள்' என்ற அந்தக் கடிதம் வந்தபோது, பண்ணைபுரத்தில் பொதுக்கூட்டம் பேசிவிட்டு, ஈரோடு திரும்பிவந்த காங்கிரஸ் செயலாளர் உடனே வைக்கம் சென்றார். அவர் தலைமை ஏற்றபிறகுதான் வைக்கம் போராட்டம் சூடுபிடித்தது. அவர்தான் 'அய்யா', 'பெரியார்', 'தந்தை பெரியார்' என்றெல்லாம் அன்புடன் பலராலும் அழைக்கப்படுகிற ஈ.வெ.ராமசாமி (1879-1973).
பெரியார் தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் காரராகத்தான் தொடங்கினார். ஈரோடு நகராட்சித் தலைவராகவும் பெரும் வியாபாரியாகவும் இருந்தவரை அரசியலுக்கு அழைத்துவந்தவர்கள் ராஜாஜி, வரதராஜுலு நாயுடு இருவரும்தான்.
அரசியலுக்கு வந்ததும் அரசாங்கப் பதவிகளைப் பிடிப்பதுதான் பலருக்கும் லட்சியம். ஆனால், பெரியார் அரசியலுக்குள் நுழையும்முன்பு, தான் வகித்துவந்த பல்வேறு பதவிகளை உதறிவிட்டு வந்தார். வியாபாரிகள் சங்கத் தலைவர், தென்னிந்திய வியாபாரிகள் சங்க நிர்வாக சபை உறுப்பினர், இன்கம்டாக்ஸ் டிரிப்யூனல் கமிஷனர், டவுன் ரீடிங் ரூம் செக்ரெட்டரி, ஹைஸ்கூல் போர்ட் செக்ரெட்டரி, தாலூகா போர்ட் பிரசிடெண்ட், முனிசிபல் சேர்மன், ஜில்லா போர்ட் மெம்பர், வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரெட்டரி, ப்ளேக் கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான கமிட்டி செக்ரெட்டரி, தேவஸ்தான பிரசிடெண்ட், உணவு கண்ட்ரோல் டிஸ்ட்ரிப்யூஷன் ஆபீஸர் உட்பட மொத்தம் இருபத்தொன்பது பதவிகளையும் விட்டுவிட்டு அரசியலில் நுழைந்தார். கடைசிவரை தேர்தலில் போட்டியிடவில்லை. எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. அவர் மறைந்தபோது அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். காந்திய இயக்கம், பொது உடைமை இயக்கம், திராவிட இயக்கம் என்று தமிழ்நாட்டின் மூன்று பெரும் இயக்கங்களிலும் தீவிரப் பங்காற்றிய முதல் பெரும் தலைவர் அவர்தான். காங்கிரஸில் காந்தியின் தலைமையை ஏற்று இருந்தபோது, தமிழகம் முழுவதும் கதர் துணியைப் பரப்பினார். தன் குடும்பம் முழுவதும் கதர் உடுத்தச் செய்தார். மதுவிலக்குப் போராட்டத் துக்காக, தனக்குச் சொந்தமான கள் இறக்கும் தென்னைமரங் களையே வெட்டித் தள்ளினார். ஒத்துழையாமை இயக்கத்துக்காக நீதிமன்றப் புறக்கணிப்பு செய்து, வழக்குகளின் மூலம் தனக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களை இழந்தார்.கொள்கையில் உறுதி என்பதை அவர் கடைசிவரை தளர்த்தியதில்லை. ராஜாஜியுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கமான நண்பராக இருந்தார். ஆனால், கொள்கைப் போராட்டத்தை விட்டுக்கொடுத்த தில்லை. ராஜாஜி இறந்தபோது தன் நோயையும் பொருட்படுத்தாமல், சக்கர நாற்காலியில் சென்று இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார். ‘சுயநலமற்ற வரான ராஜாஜி, இட ஒதுக்கீடு, சாதி ஒழிப்பு என்ற இரண்டையும் ஏற்றுக்கொண்டு, காங்கிரஸ் கட்சி மூலமாகவே அதைச் செயல்படுத்தியிருந்தால், நான் கடைசிவரை அவர் தொண்டனாகவே மகிழ்ச்சியுடன் என் காலத்தைக் கழித்திருப்பேன்’ என்று அப்போது பெரியார் எழுதினார்.
அநாதை இல்லக் குழந்தைகளுடன்..
வைக்கம் போராட்டத்திலேயே அவருடைய கொள்கை உறுதியைப் பார்க்கலாம். காந்தி, ராஜாஜி, சீனிவாச அய்யங்கார் என்று சக காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக்கொண்டும்கூட போராட்டத்தை நிறுத்திவிட்டு, சென்னை திரும்ப மறுத்தார் பெரியார்.
இந்தப் போராட்டத்துக்காக கைதான பெரியார், சிறையில் இருந்தபோது, அவருக்கு எதிராக சத்ரு சம்ஹார யாகம் ஒன்றை கேரள சனாதனிகள் நடத்தி னர்கள். யாக முடிவில் எதிரி (ஈ.வெ.ரா.) சாகவேண்டும் என்பது நோக்கம். ஆனால், யாகத்தின் முடிவில் மகாராஜா இறந்துவிட்டார். பெரியாரைக் குறிவைத்து அனுப்பிய யாக பூதம் திருப்பிக்கொண்டு ராஜாவையே கொன்றுவிட்டது என்று சிறை வார்டன் தன்னிடம் சொன்னபோது, அப்படிச் சொல்வதும் மூட நம்பிக்கைதான் என்றார் பெரியார்.
தீண்டாமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, வகுப்புவாரி இட ஒதுக்கீடு, பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற பெரியாரின் கொள்கைகள் அளவுக்கு முக்கியமானவை, அவருடைய பெண்ணுரிமைக் கோட்பாடுகள். தன் மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மாள் இருவரையும் போராட்டங்களுக்குத் தலைமை ஏற்க வைத்தார். சடங்குகள் இல்லாத எளிமையான சுயமரியாதை திருமண முறையை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். 1929-லிருந்து நான்கே ஆண்டுகளில் அப்படிப்பட்ட எட்டாயிரம் திருமணங்களை சுயமரியாதை இயக்கம் நடத்தி வைத்தது. திருமணம் செய்யும் உரிமை, செய்யாமல் இருக்கும் உரிமை, பிடிக்காத திருமணத்திலிருந்து வெளியேறும் உரிமை, திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் உரிமை, குழந்தை பெறும் உரிமை, பெறாமல் இருக்கும் உரிமை, இவையெல்லாம் பெண்ணுக்கு உரிய உரிமைகள் என்று அவர் முன்னோடியாக பிரசாரம் செய்திருக்கிறார். பெண்களுக்கு எல்லா உத்தியோ கங்களிலும் சரி, பாதி இட ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று 80 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் போட்டவர் அவர்.
இன்று கல்வி நிலையங்களிலும் அரசு வேலைகளிலும் எல்லா சாதியினரும் இருப்பதற்கான முக்கியமான காரணங் களில் ஒருவர் பெரியார். அவர் இதற்காகப் போராடத் தொடங்கிய காலத்தில், கல்லூரிப் படிப்பு படித்தவர்களில் நூற்றுக்கு 65 பேர் பிராமணர்கள். மீதி 35 பேர்தான் எல்லா சாதியினரும். ஆனால், அன்று மக்கள் தொகையில் நூற்றுக்கு 97 பேர் பிராமணரல்லாதவர்கள்தான். அன்று அரசாங்க வேலைகளில் உயர் பதவிகளில் நூற்றுக்கு 47 இடங்களில் பிராமண அதிகாரிகள், 30 இடங்களில் ஆங்கிலேயர்கள், 23 இடங்கள்தான் மீதி எல்லா சாதியினருக்கும்.
ஒரு பெரும் சமுதாயத்தின் கல்வி நிலை, வேலை நிலையை மாற்றி அமைத்த பெரியார், மூன்றாவது வகுப்புக்கு மேல் படித்தவரல்ல. ஆனால், அவர் கொண்டுவந்த மொழிச் சீர்திருத்தத்தைப் பின்பற்றித்தான் இந்தக் கட்டுரைகூட எழுதப்படுகிறது. காந்தி, நேரு, போஸ், திலகர், ராஜாஜி என்று மெத்தப் படித்தவர்களே பெரும் தலைவர்களாக இருந்த காலகட்டத்தில், பெரியார்தான் மூணாங்கிளாஸ் படித்த தலைவர். ஆனால், பெரும் படிப்பு படித்த பலரை அவரது இயக்கம் ஈர்த்து, அவருக்குத் தொண்டர்களாகப் பணிபுரியச் செய்தது. காங்கிரஸிலிருந்து சுயமரியாதை இயக்கம்வரை பெரியார்கூட நெருக்கமாக இருந்து அவர் நடத்திய பத்திரிகைகளில் எழுதிய மற்றும் பொறுப்புவகித்த எஸ். ராம நாதன், குத்தூசி குருசாமி, அண்ணா, கி.வீரமணி, ஆனைமுத்து எனப்பலரும் முதுநிலைப் பட்டதாரிகள்.
ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக் காக சாகும்வரை ஓயாமல் பிரசாரம் செய்ததில் அவரை மிஞ்ச உலக அளவில் கூட யாரும் இல்லை. வருடத்தில் பாதி நாள் டூர்தான். மீட்டிங்தான்.
90-வது வயதில் 41 நாள் டூர். 180 கூட்டம்.
91-வது வயதில் 131 நாள் டூர். 150 கூட்டம்.
93-வது வயதில் 183 நாள் டூர். 249 கூட்டம்.
94-வது வயதில் 177 நாள் டூர். 229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 38 நாள் டூர். 42 கூட்டம்.
இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன். ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார். சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருந்தது.
பெரியாரின் வாழ்க்கை, சுமார் 500 எபிசோடுகளில் ஒரு மெகா சீரியலாக எடுப்பதற்கான தகுதியும் தகவல்களும் நிரம்பியது. அதை ஐந்து எபிசோடுகளாக எடுக்க பொதிகை சேனல் எனக்கு வாய்ப்பளித்தது. என் மீடியா அனுபவங்களில் இது மறக்கமுடியாத செறிவான அனுபவம். பெரியார் பெயரைச் சொல்லி அதிகாரத்தை, ஆட்சியைப் பிடித்தவர்கள் நடத்தும் சேனல்கள் எதுவும் இன்றுவரை பெரியார் பற்றி அரை மணி நேர நிகழ்ச்சிகூட தயாரித்ததில்லை என்பதும் பெரியார் வாழ்க்கையின் விநோதங்களில் ஒன்று. அவர்களுக்கு, பெரியாரின் தேவை முடிந்து விட்டிருக்கலாம்... ஆனால், தமிழக மக்களுக்கு இன்றும் பெரியார் தேவைப்படுகிறார் என்பதுதான் உண்மை.
ஓ... அடுத்த ஈ.வெ.ரஇந்தக் கட்டுரையில் இடம்பெற்றி ருக்கும் படங்களை எடுத்தவர், பத்திரிகைத் தொடர்பாளரான ஈ.வெ.ரா. மோகன். பெயரைப் பார்த்ததும், இவர் பெரியாரின் சொந்தக்காரர் என்றுதான் பெரும் பாலும் நினைப்பார்கள். ஆனால் இவர், ஈரோடு வெங்கடேசனின் மகன் ராம்மோகன். அவர் பெரியாருடனான தன் புகைப்பட அனுபவத்தைச் சொல்கிறார்.
''பிராமணரான நான் அக்ரஹாரத்தில் பிறந்து வாழ்ந்தாலும் பெரியார்மேல அபார ரசிப்பு உள்ளவன். ஒருநாள் 'பெரியாரையும் படமெடுத்தா என்ன?'னு தோணுச்சு. அவர் வீட்டுக்குப் போனேன். உள்ளே கூட்டிட்டுப் போய் என்னை பெரியாரிடம் 'ஈ.வெ.ரா.மோகன்’னு அறிமுகம் செய்து வெச்சாங்க. 'ஓ... அடுத்த ஈ.வெ.ரா-வா?’னு கேட்டவர் என்னைப் பற்றி விசாரிச்சார்.
நான் 'என் பூர்வீகம் ஈரோடுதான்’ என்றபடி, என் தாத்தா, அப்பா பெயரையெல்லாம் சொன்னேன். பெரியார் ஈரோடு நகர சேர்மனாக இருந்த காலத்தில் என் தாத்தா முனிசிபல் கவுன்சிலரா இருந்தவர். அதையெல்லாம் சொன்ன பெரியார், நான் விரும்பினபடியெல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
படுத்தபடி ஒரு போஸ், புத்தகம் படிக்கும்விதமாக ஒரு போஸ், அவருக்குப் பிரியமான நாய்களை வைத்துக்கொண்டு ஒரு போஸ்னு பல கோணங்களில் எடுத்தேன். அதுதான் நான் பெரியாரை முதலும் கடைசியுமாகப் பக்கத்தில் பார்த்தது. ஆனா, 'அவரோடு நின்று ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு தோணாமல் போச்சே’னு இன்றுவரை வருத்தப்பட்டுக்கிட்டே இருக்கேன்’’ என்ற ஈ.வெ.ரா.மோகன்
Posted by IdlyVadai at 2/07/2007 08:09:00 AM 36 comments
Monday, February 05, 2007
பக்தியா ? மரியாதையா ?
சாய்பாபா காலில் என் மனைவி விழுந்தது பக்தியால் அல்ல; பெரியவர்களுக்கு மரியாதை காட்டும் மரபுதான் - முதல்வர் கருணாநிதி
கலைஞர் அறிக்கை
மனிதருக்குப் பகுத்தறிவு எந்த அளவுக்கு தேவையோ, அந்த அளவுக்குப் பண்பாடும் தேவை. என் மனைவி, பக்தி மேலிட்டுக் காலில் விழவில்லை. வயதில் பெரியவர்கள் வந்தால் அவர்களை வணங்குவது என்ற மரியாதை காட்டும் மரபுதானே தவிர வேறில்லை. 1948-ல் எனக்கும் தயாளுவுக்கும் திருமணம் நடக்கும்போதே திருமாகாளம் கிராமத்தில் அந்தக் குடும்பத்தினர் தீவிர திராவிடர் கழகத்தினர். 1938-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்தான் தயாளுவின் பாட்டியார் ராஜாமணி அம்மாள்.
கீ.விரமணி ( ஆனந்த விகடன் பேட்டி )
"..தயாளு அம்மையார் பாபாவிடம் ஆசி வாங்கியதிலும் எங்களுக்கு உடன்பாடில்லை. ஏனென்றால், காலில் விழும் கலாசாரத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இருந்தாலும், தயாளு அம்மாள் கடவுள் நம்பிக்கையாளர். தங்கள் வீட்டுக்கு வந்தவரை மதிக்க வேண்டும் என்பதால் காலில் விழுந்திருக்கலாம் . அதைக் கண்டிக்க மாட்டோம். அதை எதிர்த்துப் பிரசாரமும் செய்ய மாட்டோம். கலைஞரின் மூத்த தமக்கையாருக்கே கடவுள் நம்பிக்கை இருந்தது. எங்களுக்கு அவருடைய குடும்பத்தினர் பற்றியெல்லாம் கவலை இல்லை"
Posted by IdlyVadai at 2/05/2007 08:28:00 PM 3 comments
Labels: செய்திகள்
வீராசாமி - விமர்சனம்
அனுபவ ஐயங்கார் மற்றும் உருளைக்கிழங்கு போண்டா சாப்பிடும் இயக்குநரின் படம். அவரே வீராச்சாமி என்ற பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.
கதை:
இடைவேளி வரை இவர் பல போலி விலங்குகளுடன் சண்டை போடுகிறார். குறிப்பாக கருப்புப் பூனையுடன் இவர் போடும் சண்டையைக் கண்டு குழந்தைகள் மட்டும் பயப்படும் அபாயம் இருக்கிறது. இடைவேளிக்கு பின் இவரை ஒரு கொசு கடித்துவிட சுருண்டு விழுகிறார்.
'தசாவதானி' என்ற பெயருக்குத் தகுதியானவராக இவர் இப்படத்தில் தயாரிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல், இசை, நடனம், கலை மற்றும் சண்டைப் பயிற்சி என்ற அனைத்தையும் வருமான வரிக்கு பயந்து சர்வாண்டிஸ், ஹேரி பார்ட்டர், வரதன், பரதன், பஜ்ஜி, சொஜ்ஜி, நாட்டாமை, கண்ணம்மா, முரளி மனோஹர் என்று வெவ்வேறு புனை பெயரில் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இது வருமான வரி ஏய்ப்பு என்று ஒரு பிரிவினர் படத்தைத் தடை செய்ய வழக்குத் தொடர, 'அவனவன் அடுத்தவன் திறமையில் செய்ததை எல்லாம் தன் பெயரில் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தான் செய்தவைகளையும் அடுத்தவன் பெயரில் எழுதி வைக்கும் தயாள டோண்டுவின் சேவை நாட்டுக்குத் தேவை' என்று ஒரு கோஷ்டி ஆதரவுக் கொடி பிடிப்பது கதையின் நகைச்சுவை கலந்த திருப்பம். பெரிய அளவில் எதிர்பார்த்த போராட்டம் இவ்வளவு நகைச்சுவையாகப் பிசுபிசுத்துப் போனதில், "இந்த மேட்டருக்கு உங்க டோட்டல் ரியாக்ஷனே இவ்ளோதானாடா?" என்று எதிரணியினர் ஏமாற்றம்.
மீதிக் கதையை (இருந்தால்) தமிழ்மணத் திரையில் காண்க!!
Posted by IdlyVadai at 2/05/2007 05:33:00 PM 13 comments
Labels: நகைச்சுவை
FLASH: தீர்ப்பு
தீர்ப்பில் தமிழகத்திற்கு 419 டி. எம். சி. ( 566 )
கர்நாடகத்திற்கு 270 டி. எம். சி. ( 465 )
கேரளா அரசு 30 டி.எம். சி. ( 100 )
புதுச்சேரி 7 டி.எம். சி. ( 9 )
, தண்ணீரும்,பகிர்ந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
red color indicates - how much they demanded
( "தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை, காவிரியில் கர்நாடகம் திறந்து விட வேண்டும்'' என்று, 1991-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி அறிவிக்கப்பட்டது. )
Karnataka will file review petition
MC Nanaiah( minister ) - Verdict unfair to Karnataka
Karnataka gets 270 less than what it wanted
740tmc is the average outflow per year
( தமிழ்நாடு- 419 டி.எம்.சி., கர்நாடகா- 270 டி.எம்.சி.கேரளா- 30 டி.எம்.சி.புதுச்சேரி- 7 டி.எம்.சி. சுற்றுச்சூழல் பாதுகாப்பு -10 டி.எம்.சி.லீக்கேஜ்- 4 டி.எம்.சி.மொத்தம்- 740 டி.எம்.சி. )2:50pm Riots in Vijaynagar
4:30pm அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் - கர்நாடக முதல்வர் குமாரசாமி
4:35: கலைஞர் - தமிழ் நாட்டுக்கு நீதி கிடைத்திருக்கிறது. எல்லோரையும் ஆலோசித்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை
4:40: பெங்களூரில் சன், ராஜ், ஜெயா, விஜய் - கட்
4:45: தீர்ப்பை கர்நாடக மதிக்கவில்லை என்றால் திரும்பவும் நடுவர் மன்றத்தை நாடுவோம் - கலைஞர்
5:10 இது வரை நான் 11 முதலமைச்சர்களுடன் பேசியிருக்கிறேன்.
இப்போது தான் நியாயம் கிடைத்தது.
5:15 பெங்களூர் கடைகள் அடைப்பு. ரயில்வே ஸ்டேஷன் முன் பதட்டம்.
5:45pm : Situation in Bengalooru
6:00pm திரை அரங்கங்கள் மூடப்பட்டன.
6:05pm Flag March in mandya
6:15pm பெங்களூரில் இதுவரை எங்கும் வன்முறை இல்லை
8:15pm Karnataka State Bandh on 8th
Posted by IdlyVadai at 2/05/2007 02:12:00 PM 11 comments
Labels: செய்திகள்
ராமர் பாலமா ? ராமர் பலமா ?
ராமேஸ்வரம் அருகே ராமர் பாலத்தை உடைக்க முயன்று உடைந்து கடலுக்குள் மூழ்கி விட்ட கருவியை மீட்க வந்த கிரேனும் உடைந்தது. இதனால் சேது சமுத்திரத் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ( அதை பற்றி ஒரு தொகுப்பு )இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலத்தை (தீவுத் திட்டுக்களால் ஆன நீண்ட பாறை). தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்குமிடையே கடலுக்கடியில் புதைந்து கிடக்கிறது ராமர் பாலம். ‘சீதையை மீட்க ராமன் இலங்கை மீது படையெடுத்தபோது, வானரசேனைகளால் அமைக்கப்பட் டது இந்தப் பாலம்’ என்று புராணம் சொல்கிறது. அது உண்மையோ கற்பனையோ... தற்போது அந்த இடத்தில் சுமார் ஆறு மீட்டர் உயரத்துக்குக் கல்லும் மணலும் கொண்ட பெரும் திட்டு ஒன்று இருப்ப தாக அமெரிக்காவின் நாசா விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாட்டி லைட் படங்கள் மூலம் கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிறது. இது ராமர் பாலத்தின் சிதைவுதான் என இந்து அமைப்புகளும், மதவாதிகளும் நம்புகிறார்கள்.
கடலுக்குள் இருக் கும் இந்தத் திட்டை அப்புறப்படுத்தி னால்தான் சேதுக்கால்வாய் திட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரும் என்பதால் அதைத் தகர்க்கும் பணி மும்முரமாக்கப்பட்டு. உடைக்கும் முயற்சிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
கடந்த பத்து மாதங்களுக்கு முன் சேது கால்வாய்க்காகக் கடலுக்குள் இருக்கும் மணலை அள்ளும்பணியில் ஈடுபட்ட ‘டக்-6’ என்ற கப்பலில் கோளாறு ஏற்பட்டு அது கட லில் மூழ்கிப் போனது. சமீபத்தில் ராமர் பாலத்தை உடைப்பதற் காக ஆசியாவின் மிகப்பெரிய கப்பலான சி.எஸ்.சி.அக்வரியஸ் கொண்டு வரப்பட்டது. அது ராமர் பாலத்தை நெருங்கிய நிலையில், பாலத்தின் முனை கப்பல் மீது தட்டிவிட கப் பலிலிருந்த ‘ஸ்பட்’ என்ற தோண்டும் கருவி உடைந்து கடலுக்குள் விழுந்து விட்டது. சுமார் ஐம்பது டன் எடை கொண்ட இந்த பாகத்தை வெளி யில் எடுக்க சென்னையிலிருந்து ‘தங்கம்’ என்ற கிரேனை கொண்டு வந்தார்கள். சோதனை மேல் சோத னையாக அந்த கிரேனும் உடைந்து போக, ஒருவழியாக அதை சரி செய்து ‘ஸ்பட்’டின் உடைந்த பாகத்தை வெளியே தூக்கியபோது, அதன் ஒரு பகுதி கடல் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது தெரிந்தது. இதனால் புதிய ‘ஸ்பட்’ கருவியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டிருக்கிறது.
‘‘கால்வாய் தோண்டும் பணிக்கு இப்படி அடிமேல் அடி விழுந்து கொண்டிருப்பதற்கு காரணமே ராமர் பாலத்தை இடிக்கப்போனதுதான்’’ என்று இந்து அமைப்புகள் இப்போது சென்டிமென்ட்டான பிரசாரத்தைத் துவக்கியிருக்கின்றன.
புராதண காலத்தில் ராமரால் போடப்பட்ட பாலம் என்பது ஐதீகம். இந்தப் பாலத் துக்கு ஹனுமன் பாதுகாப்புக்கு இருக்கிறதா இந்துக்கள் நம்புறாங்க. (ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருந்து ராமநாம ஜெபம் பண்ணிக் கொண்டி ருப்பதாக நம்பிக்கை) அதனால்தான் இப்போது அதை இடிக்கப் போனவர்கள், இடிபட்டுத் திரும்பியிருக்காங்க. இது ஒரு எச்சரிக் கைதான். இதையும் மீறி பாலத்தை உடைக்க கச்சை கட்டி னால் அது ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு நல்லதல்ல’’ என்கிறார்கள்.
‘ராமர் பாலத்தை உடைத்தால் கோர்ட்டுக்குப் போய் தடுப்போம்’’ என்று அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும் தற்போது எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கிறார்
ராமர் பாலம் இடிப்பதைக் கண்டித்து ராமேஸ்வரத்திலிருந்து ரதயாத்திரை தொடங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் ராம.கோபாலன்.
இந்து அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடி அப்துல்கலாமை போய் பார்த்துக் கவலை தெரிவித்திருக்கிறார்கள்
( படம் - நாசா விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம்
சாட்டி லைட் படங்கள், நன்றி ஜூவி. செய்தி - ஜூவி, தினத்தந்தி, தட்ஸ் தமிழ் )
அப்படியே உங்க ஓட்டை போட்டுவிட்டு போங்க
Posted by IdlyVadai at 2/05/2007 12:26:00 PM 9 comments
Labels: செய்திகள்
2/3 ? 3/4 ?
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு இன்று வெளியாகிறது.
* கர்நாடக 2/3 பங்கு தண்ணீர் வேண்டும் என்கிறது.
* தமிழ்நாடு 3/4 பங்கு தண்ணீர் வேண்டும் என்கிறது.
* கர்நாடகாவில் 17,500 போலிஸ் குவிக்கப்படுள்ளார்கள்
* சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வந்த பஸ்கள் ஓசூரில் நிறுத்தப்பட்டன. சேலத்தில் இருந்து பெங்களூருக்கு தினமும் 60 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று அந்த பஸ்கள் அனைத்தும் ஓசூர் வரையே இயக்கப்பட்டன.
* நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரிகள் பரமத்தி வேலூரில் நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான லாரிகள் அங்கு காத்துக்கிடக்கின்றன.* கோர்ட்டு தீர்ப்பு பெரிய அளவில் கலவரத்தை ஏற்படுத்தலாம் என்ற பீதி காரணமாக பெங்களூரில் உள்ள தமிழர்களில் பலர் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டனர். நிலமை சீரான பிறகு செல்ல அவர்கள் முடிவு செய்துள்ளனர். பெங்களூரில் இருந்து வெளியேற இயலாத தமிழர்கள் இன்று வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.
* எங்க ஆபீஸில் வேலை செய்யும் தமிழர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள். என் நண்பர்கள் எல்லோரும் ஆபிஸ் சென்று விட்டார்கள். ஆகையால் இது தப்பான நியூஸ். ( தகவல் செந்தில் குமரன் )
( செய்தி : மாலைமலர், NDTV, தினமலர் )
* More updates follow..
Posted by IdlyVadai at 2/05/2007 10:28:00 AM 5 comments
Labels: செய்திகள்
Saturday, February 03, 2007
வலைப்பதிவர் மீட்டிங் - தத்துகுட்டி நிருபரின் குட்டி குட்டி தகவல்கள்
வலைப்பதிவாளர்கள் சந்திப்பு பற்றி புதிதாக சேர்ந்த தத்துக்குட்டி (ஸ்பெஷல்) ரிப்போர்ட்டரின் அரைகுரை தகவல்கள்..
1) மொத்தம் இருபத்தியிரண்டு நபர்கள் (வாட்ச்மேன், டீக்கடைக்காரர்கள் எல்லாம் சேர்த்தா என்று தெரியவில்லை)
2) ரோசாவசந்த் இன்னமும் இந்தியாவில்தான் இருக்கிறாராம். சந்திப்பில் பார்த்ததும்தான் தெரிந்தது.
3) பெரும்பாலும் பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையில் தொலைபேசிக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன (தொலைபேசி எண்களை என்று இருந்திருக்க வேண்டும்).
4) போண்டா இல்லாமல் டோண்டு ராகவன் கலந்துகொண்ட மிகச்சில அரியதொரு மீட்டிங்க் என்று பார்க் வாட்ச்மேன் தெரிவித்தார்.
5) வழமையாக நடப்பதுபோல் இல்லாமல், இந்த முறை இந்தியப் பொருளாதாரம் பற்றியும், கல்வித்தரத்தை உயர்த்துவது பற்றியும் எதுவுமே பேசவில்லை.
6) நீல நிற சட்டை அணிந்தவர் ( பெயர் தெரிவவில்லை) எதுவும் பேசவில்லை.
7) Exclusive வலைப்பதிவாளர் சந்திப்பு அரங்கப் புகைப்படங்களை பார்க்க, இங்கே சொடுக்கவும். ( படம் 1, படம் 2, படம் 3 )
Posted by IdlyVadai at 2/03/2007 11:08:00 PM 5 comments
Labels: நகைச்சுவை
உலககோப்பையும் சிவாஜியும்
அடுத்த மாதம் இறுதியில் உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்ப மாகிறது. ஏப்ரல் 28-ல் உலக கோப்பை இறுதி போட்டி நடக்கிறது. எனவே 19 புதிய படங்கள் இம்மாதம் ரிலீஸ் ஆகின்றன. `டப்பிங்', `எடிட்டிங்' வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது.
இம்மாதம் வெளியாகும் படங்களின் பட்டியலில் சபரி, தீபாவளி, திருமகன், பருத்திவீரன், மொழி, உன்னாலே உன்னாலே, கூடல் நகர், அடாவடி, ஓரம்போ, லீ, முனி, சொல்லி அடிப்பேன், பெரியார், கண்ணும் கண்ணும், தூவானம், காசு இருக்கணும், பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகியவை உள்ளன. `வீராசாமி' படம் நேற்று (1-ந்தேதி) ரிலீசானது. `பொறி' இன்று வெளியானது. ஒரே மாதத்தில் இவ்வளவு படங்கள் வெளியாவது இம்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
`சபரி'யில் விஜயகாந்த் டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். `பருத்திவீரன்' சூர்யா தம்பி கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகும் படம். பொங்கலுக்கே இப்படம் எதிர்பார்க்கப்பட்டு தள்ளிப்போனது. `திருமகன்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். `மொழி'யில் ஜோதிகா வாய்பேசதெரியாதவராக நடித்துள்ளார்.
`கூடல் நகரில்' பரத், சந்தியா ஜோடியாக நடித்துள்ளனர். `அடாவடி', `பெரியார்' படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார். `பெரியார்' பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம். இதில் மணியம்மை பாத்திரத்தில் குஷ்பு நடித்துள்ளார். `ஓரம்போ'வில் ஆர்யாவும், `லீ'யில் சிபியும் நடித்துள்ளனர்.
`சொல்லி அடிப்பேன்' விவேக் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம். முனியில் ராஜ்கிரணும், ராகவா லாரன்சும் நடித்திருக்கிறார்கள்.
ரஜினின் `சிவாஜி' படம் உலககோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்தபின் ரிலீசாகும் என்று தெரிகிறது. `தனுசின் பரட்டை என்கிற அழகு சுந்தரம்' படமும் சிவாஜியோடு ரிலீசாகிறது. கமலஹாசனின் `தசாவதாரம்' ஜுலை மாதத்துக்கு தள்ளி போகிறது.
( செய்தி மாலைமலர் )
Posted by IdlyVadai at 2/03/2007 09:48:00 PM 1 comments
Labels: செய்திகள்
Friday, February 02, 2007
ஒரு பாட்டி, கனவில் சிவாஜி, கருணாநிதி!
சிவாஜி கணேசன் கனவில் வந்தார் என்று கூறி முதல்வர் கருணாநிதியை சந்திக்க அவரது வீட்டுக்கு வந்த பாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு ஒரு வயதான பெண்மணி வந்தார். வீடு உள்ள தெருவுக்கு இரண்டு தெருக்கள் முன்பாக பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அந்தப் பாட்டியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அவரது பெயர் வசந்தா (வயது 60). திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்தவர். சென்னையில் தனது 2 குழந்தைகளுடன் ஓட்டேரி நம்மாழ்வார்ப்பேட்டையில் வசித்து வருகிறார்.
தனது கனவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்ததாகவும், அப்போது ஒரு கதையைக் கூறி, அதில் பிரபுவை நடிக்க வை என்று கூறியதாகவும், பிரபுவின் கால்ஷீட் வாங்கித் தர உதவுமாறு முதல்வரை பார்க்க வந்ததாகவும் வசந்தா கூறியதால் போலீஸார் குழப்பமடைந்தனர்.
அவர் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடும் என்று அவர்கள் சந்தேகித்தனர். பின்னர் அப்பெண்மணியை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸார் ஒப்படைத்தனர். அவர்கள் வசந்தாவின் வீட்டுக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
( தட்ஸ் தமிழில் வந்த செய்தி(நன்றி). கலைஞருக்கும் அடிக்கடி கனவில் அண்ணா, பெரியார் வருவார்கள் )
Posted by IdlyVadai at 2/02/2007 02:55:00 PM 17 comments
நாளை வலைப்பதிவர் சந்திப்பு
சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றி செந்தழல் ரவி பதிவை பார்க்கவும். நாளை மாலை ஐந்து மனிக்கு நடேசன் பார்க்கில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
தனித்திருக்காதீர்கள் சென்னையில் இப்போது கடத்தல் சம்பவங்கள் நிறைய நடக்கிறது.
விழித்திருந்தால் உங்களை யாரும் போட்டோ எடுக்க மாட்டார்கள்.
பசித்தால் இருக்கவே இருக்கு போண்டாவும் வடையும்.
எல்லோரும் கட்டாயம் ஒரு ஒடோமாஸ் எடுத்துக்கொண்டு போங்கள். ரொம்ப முக்கியம். சனிக்கிழமை அதே இடத்தில் கொசுக்களும் வலைப்பதிவு சந்திப்பு நடத்த உள்ளது என்று கேள்விப்பட்டேன்.
எல்லோருக்கும் TTD சாமி அருள் கிட்டடும் :-)
Posted by IdlyVadai at 2/02/2007 12:40:00 PM 16 comments
Labels: வலைப்பதிவு
Thursday, February 01, 2007
கிட்னி ஜாக்கிரதை
* கிட்னி விவகாரம் வெளிவந்தது ஒரு தற்செயலான சம்பவத்தில்தான். சமீபத்தில், கடலோர மக்கள் பாதுகாப்புக் குழு சுனாமி நகருக்கு வந்தது. அவர்கள் மக்களிடம் குறைகளைக் கேட்டார்கள். அப்போதுதான், மரியம் ஜோசப் என்பவர், ‘இங்கு வசிக்கும் பலரிடமும் நிறைய பணம் தருவதாகச் சொல்லி, ஏமாற்றி கிட்னியை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்’ என்ற தகவலைச் சொன்னபோது, திகைத்தது பாதுகாப்புக்குழு.
* போலி கணவராக நடிப்பவருக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். ரேஷன் கார்டு கொடுப்பவருக்கு 2 ஆயிரம் ரூபாய்.
* இந்தக் கிட்னி விவகாரத்தில் மதுரையைச் சேர்ந்த மூன்று பிரபல மருத்துவமனைகளும் சென்னையைச் சேர்ந்த நினைத்துப் பார்க்கவே முடியாத அளவில் உள்ள ஏழு பிரபல மருத்துவமனைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்கிறார்கள
* "கிட்னி கொடுத்த பிறகு உயிர் போற மாதிரி வலி. பத்து நாட்கள் மாத்திரை சாப்பிட்டால் வலி போயிடும்னாங்க. ஆனால், தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டும் வலி நிற்கலே. ஒரு நாளைக்கு நூற்று ஐம்பதிலிருந்து இருநூறு ரூபாய் வரை மாத்திரைக்கு மட்டுமே செலவாகிறது. வேலை, வெட்டிக்குப் போக முடியலை. தண்ணீர்க்குடத்தைக்கூட தூக்க முடியலை"
* "ஏற்கெனவே உனக்கு ஒரு கிட்னிதான் இருக்கு. அடிச்சு படிக்கட்டில் உருட்டித் தள்ளினேன் என்றால் அந்தக் கிட்னியும் போயிடும். கிளம்பற வழியைப் பாரு..’ என்று மிரட்டி அனுப்பிட்டாரு"
* கோவையில் ஒரு மிகப் பிரபலமான தனியார் மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்டோரிடம் சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
Posted by IdlyVadai at 2/01/2007 05:25:00 PM 0 comments
Labels: செய்திகள்
காதலர் தினத்துக்கு தடை - ராமதாஸ்
காதலர் தினத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
பிப்ரவரி 14ம் தேதியை காதலர் தினம் என்ற பெயரில் கொண்டாடும் கலாச்சார சீரழவு நடந்து வருகிறது. இது தமிழர்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது. பாரம்பரியத்திற்கும் முரணானது. எனவே இதற்கு திமுக அரசு தடை விதிக்க வேண்டும்.
காதலர் தினம் என்று சொல்லிக் கொண்டு அந்த நாளில் இளைஞர்கள் தெருக்களில் அசிங்கம் செய்கிறார்கள். இதன் மூலம் இளைய சமுதாயம் சீரழிகிறது. காதலர் தினம் என்ற பெயரில் தெருக்களில் ஆடிப் பாடுவதும், ஆபாச செயல்களில் ஈடுபடுவதும், கலாச்சாரத்தைக் கெடுப்பதையும் அனுமதிக்க முடியாது.
காதலிப்பதை தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது தனிப்பட்ட நிகழ்வாக இருக்க வேண்டும். மாறாக, அதை தெருவில் வந்தா கொண்டாடுவது? பொது இடத்தில் வைத்து நாலு பேர் பார்க்கும் வகையிலா கொண்டாடுவது?
Posted by IdlyVadai at 2/01/2007 04:47:00 PM 13 comments
Labels: செய்திகள்
MINT புதிய நியூஸ் பேப்பர்
ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல இணைந்து கலக்க வந்திருக்கிறார்கள்.
* எப்போது வருகிறது - நாளை
* என்ன விலை - ரூ 2/=
* குழு - Led by Raju Narissetti as Managing Editor, it has put together an impressive team of editors - R Sukumar, formerly with Business Today as Deputy Managing Editor, Niranjan Rajadhakshya, formerly with Business World as Editor, Edit page, Priya Ramani, formerly editor of Cosmo, Now Editor Lifestyle, Anil Padmanabhan, formerly with India Today at New Work as Editor, Economy and Policy, Tamal Bandhopadhya, Yasir Pitalwala, Josey John as Corporate Editors, all three senior distinguished journalists amongst a few others.
Posted by IdlyVadai at 2/01/2007 02:28:00 PM 0 comments
Labels: செய்திகள்
தமிழ் தட்டச்சு முடிவுகள்
Posted by IdlyVadai at 2/01/2007 12:58:00 PM 0 comments
Labels: வாக்கெடுப்பு
பாபா கலைஞர் சந்திப்பு - கவர் ஸ்டோரி
பாபா கலைஞர் சந்திப்பு - தலையங்கள், கவர் ஸ்டோரி ( கல்கி, விகடன், ரிப்போட்டர் துக்ளக்)
பாபா உணர்த்தும் பாடம்! - கல்கி தலையங்கம்
‘‘எந்த மதத்தையும் வெறுக்காதீர்கள்; எந்த மனிதன் மீதும் வெறுப்பு காட்டாதீர்கள்’’ - பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா இவ்வாறு பேசியது நமது அரசியல்வாதிகளின் கவனத்துக்கே முக்கியமாக உரியது. மதங்களை அரசியலாக்குவதும் தனிநபர் தூற்றுதலும்தான் இன்று தேர்தல் வெற்றிக்கான குறுக்குவழிப் பாதைகளாகத் திகழ்கின்றன.
பாபா தமது அறிவுரையைப் பேச்சளவில் நிறுத்திக்கொள்ளாமல் செயல்வடிவிலும் நிகழ்த்திக்காட்டி முன்னுதாரணமாக ஒளிர்கிறார் என்பதையும் நாம் வணக்கத்துடன் கவனிக்க வேண்டியிருக்கிறது.
பாபா எந்த மதத்தையும் வெறுக்கவில்லை, ஒதுக்கவில்லை என்பதோடு நாத்திகவாதத்தைக்கூட தாம் வெறுக்கவில்லை என்பதை, தமது சமீப சென்னை விஜயத்தின்போது முதல்வர் மு.கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்ததன் மூலம்
நிரூபித்திருக்கிறார். நாம் என்றும் மறவாமல் நினைவில் கொள்ள வேண்டிய நிகழ்வு இது.
கடவுள் மறுப்பைக் கொள்கையாகவே பரப்பி வருபவர் கருணாநிதி. பாபா உள்பட பல ஆன்மிகவாதிகளைத் தாக்கிப் பேசத் தயங்காதவர்; தி.மு.க.வினர் திருநீறு அணிவதையும் குங்குமம் தரிப்பதையும் கூடச் சகியாதவர். அத்தகையவரை நாடிச் சென்று நேசம் பாராட்டும் சத்ய சாயி பாபாவின் செயலை, சகிப்புத் தன்மையின் அடையாளம் என்றோ, பெருந்தன்மையின் வெளிப்பாடு என்றோ சொல்வது கூட குறைத்து
மதிப்பிடுவதாகிவிடும். நிபந்தனைகளற்ற மனிதநேயத்தின் அடையாளமே அந்தச் சந்திப்பு. அதன் மூலம் இந்தியாவெங்கிலும் உள்ள குறுகிய மனம் படைத்த அரசியல்வாதிகளுக்கும் அவர்களுடைய பாதிப்பினால்
பிளவுபட்டுக் கிடக்கும் மக்களுக்கும் உன்னத செய்தியை
வெளிப்படுத்தியிருக்கிறார் பாபா.
இந்தச் சந்திப்பினூடே ஸ்ரீ சத்ய சாயி பாபா, முதல்வரின்
நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தவுமில்லை; தமது பாதையே மேன்மையானது என்று உயர்த்திப் பேசவுமில்லை; நிகழ்ந்த சந்திப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவுமில்லை. வேறு பலருக்குச் செய்ததைப் போல், பகுத்தறிவு வாதத்துக்குக் கட்டுண்ட துரைமுருகனுக்கும் தயாநிதி மாறனுக்கும் மோதிரங்களை வரவழைத்துக் கொடுத்துள்ளார். அவர்களும் அதனை மகிழ்வோடு ஒப்புக் கொண்டுள்ளனர்.
தமிழக முதல்வரோ, தாம் ஸ்ரீ சத்ய சாயி பாபாவுக்குக் குறைந்தவரல்லர் என்று உணர்த்த விரும்பி, பல விதங்களிலும் பேசியிருக்கிறார்:
காவிரியும் கொள்ளிடமும் இணைவதைப் போல் தாங்கள்
இணைந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். தமது அரசின் இலவசத்
திட்டங்களை, பாபாவின் சமுதாய சமூகப் பணிகளுடன் ஒப்பிட்டுப்
பேசியிருக்கிறார். அடுத்தபடியாக, கூவம் சுத்திகரிப்புக்கு பாபா உதவ வேண்டும் என்று கோரிக்கையையும் வைத்திருக்கிறார்!
முன்னொரு காலத்தில் அரசியலும் ஆன்மிகமும் கொள்ளிடம் - காவிரி போல் இருந்திருக்கலாம். இன்று நிச்சயம் அப்படி இல்லை. வேறு உதாரணம்தான் தேட வேண்டியிருக்கிறது. அரசின் பொறுப்புகளையெல்லாம் நிறைவேற்றுவது சேவை அமைப்புகளின் வேலை அல்ல. சமுதாய மேம்பாட்டுக்கான நிரந்தரப் பணிகள் (குடி நீர்த் திட்டங்கள், கல்விக் கூடங்கள், மருத்துவ வசதிகள் போன்றவை), அரசாங்கத்தின் இலவச வினியோகத்தைப் போல் மக்களைச் சோம்பேறிப் பிச்சைக்காரர்களாக்குவதில்லை.
கருணாநிதியைச் சந்தித்துத் திரும்பிய கையோடு, மனிதகுல மேம்பாட்டுக்காக மாபெரும் வேள்வி ஒன்றை சென்னையில்
நடத்துகிறார் பாபா. மத நம்பிக்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் சிறுமைப்படுத்தும் போக்கு, இனியேனும் தமிழகத்தை விட்டுத் தொலையுமானால், பாபா உணர்த்திய பாடம் முதல்வருக்கும் இதர
அரசியல்வாதிகளுக்கும் புரிந்தது என நாம் மகிழலாம்.
களஞ்சியங்கள் திறக்கட்டும்! - விகடன் தலையங்கம்
அரசியலும் ஆன்மிகமும் கலக்கும்போதெல்லாம் அது அனாவசியமான சர்ச்சைகளையும் தலைவலிகளையும்தான் உருவாக்கும் என்பதே இதுவரை பார்த்த பொதுவான காட்சி. ஆனால், இரு துருவங்கள் போல காட்சி அளிக்கும் இவை இரண்டும் சேர்ந்து, சென்னை மாநகரத்தின் தாகத்தையே தணிக்கும் அதிசயத்தை இப்போது பார்க்கிறோம்.
தமிழக முதல்வர் கருணாநிதி அடிப்படையில் நாத்திகவாதியாக இருந்தாலும், மக்களுக்கு உதவ முன்வந்த சத்ய சாய்பாபாவை இரு கரம் நீட்டி வரவேற்று, மனமார நன்றி தெரிவித்திருக்கிறார்.
இது ஓர் ஆரோக்கியமான ஆரம்பம்!
சூரத் கொள்ளை நோய், குஜராத் நிலநடுக்கம், கார்கில் யுத்தம் என இதயங்களை உலுக்கும் பேரழிவுகள் நிகழும்போதெல்லாம், பணத்தாலும் பொருளாலும் உடல் உழைப்பாலும் ஓடோடி உதவிக் கரம் நீட்டுவதில் எப்போதுமே தமிழகத்துக்குத்தான் முதல் இடம்!
அந்தத் தமிழகமே சுனாமியால் துயருற்றபோது, அதைத் துடைப்பதில் தன்னாலான பங்கைச் செய்தார் மாதா அமிர்தானந்த மயி. இதோ இப்போது, சென்னைக்குக் கிருஷ்ணா நதி நீரைக் கொண்டுவர நிதி அளித்திருக்கிறார் சத்ய சாய்பாபா.
இப்படி ஆந்திரத்தின் பாபாவும் கேரளத்தின் மாதாவும் காட்டுகிற அதே பரிவை, தமிழகத்திலேயே இருக்கிற பாரம்பரியமிக்க மடங்களும், உயர்ந்து வளர்ந்து நிற்கும் ஆன்மிக மையங்களும் ஏன் காட்ட முன்வரக் கூடாது?
பொது நலத் திட்டங்களுக்கு உதவ முன்வருவது யாராக இருந்தாலும் அவர்களுடன் கைகோக்க, கொள்கைகள் எதுவும் தடையாக இருக்காது என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் முதல்வர்.
கனவுகள் பல நனவாக, களஞ்சியங்கள் திறக்கட்டும். சாதி - மத பேதங்களைக் கடந்த சாதனை ஓட்டம் இங்கிருந்தே தொடங்கட்டும்.
புதிய சாதனைகள் தமிழகத்தின் சரித்திரத்தை மாற்றட்டும்!
சந்திப்பால் ஏற்பட்ட ஷாக் - குமுதம் ரிப்போட்டர் கவர் ஸ்டோரி
உலக அளவில் எத்தனையோ பிரபலங்களும், இந்திய அளவில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஜ.பி.க்களும் சாய்பாபாவை பலமுறை சந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஏற்படாத பரபரப்பும், விமர்சனமும் ஜனவரி 20_ம் தேதியன்று சென்னையில் பாபாவும், கலைஞரும் சந்தித்த பின்பு ஏற்பட்டிருக்கிறது. கூடவே பலதரப்பிலும் அதிர்ச்சி அலைகளையும் உண்டாக்கியிருக்கிறது.
அன்று காலை முதலே இருவரும் சந்திக்கப் போகிறார்கள் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படாமல் உலா வரத்தொடங்கியது. பாபாவே வந்து கலைஞரைச் சந்திக்கப்போகிறார் என்று கூடுதல் தகவல் வந்தபோது, யாராலும் அதை நம்ப முடியவில்லை. இரண்டு தரப்பிலும் அதை உறுதிப்படுத்தவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ‘அப்படியே சந்திப்பு நடந்தாலும் கலைஞர்தானே பாபாவைப் போய் பார்ப்பார்..?’’ என்ற கேள்வியுடனேயே பிற்பகல் மூன்று மணியிலிருந்தே கலைஞரின் கோபாலபுரம் வீட்டில் குவிய ஆரம்பித்தார்கள் பத்திரிகையாளர்கள். நான்கு மணி வாக்கில் தான் பாபா இங்கு வருகிறார் என்ற தகவலை உறுதிப்படுத்தினார்கள் முதல்வர் வீட்டில் இருந்த அதிகாரிகள்.
பாபாவை வரவேற்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் துரைமுருகன், பெரிய கருப்பன் ஆகியோர் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே வாசலுக்கு வந்து காத்திருந்தார்கள். சரியாக 4.25 மணிக்கு பாபா வந்து சேர்ந்தார். அவர் காரிலிருந்து இறங்கும் முன்பே காருக்குள் தலையை நீட்டி பாபாவை வணங்கிய துரைமுருகன், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
சாய்பாபாவுடன் வந்தவர்கள் கொண்டு வந்திருந்த சக்கர நாற்காலியில் பாபா அமர, அவரை முதல் மாடிக்கு அழைத்துச் சென்றார் தயாநிதிமாறன். கடவுள் மறுப்பு இயக்கத்தில் பயிற்சி பெற்ற கலைஞரும், பல கோடி பக்தர்களால் கடவுளாகவே வணங்கப்படும் சாய்பாபாவும் அங்குதான் சந்தித்தார்கள்.
பரஸ்பர மரியாதைகள் பரிமாறப்பட்டவுடன் மனைவி தயாளு அம்மாள், முரசொலி மாறனின் தாயார் உள்ளிட்டவர்களை பாபாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கலைஞர். இந்த நேரத்தில்தான் பாபாவின் முன்பாகக் குனிந்து காலைத்தொட்டு வணங்கினார் தயாளு அம்மாள்.
புகைப்படக்காரர்கள் படம் எடுத்துவிட்டுப் போன பிறகு தனது மோதிரம் ஒன்றை வரவழைத்து தயாநிதிமாறனுக்குத் தந்தார் பாபா. இதைப் பார்த்து துரைமுருகன் தனக்கும் ஒரு மோதிரம் கேட்க... அவருக்கும் ஒன்றை வரவழைத்துக் கொடுத்திருக்கிறார். கலைஞருக்காக ஒன்றைத் துரைமுருகன் கேட்டப்போது, ‘அவருக்காக என் மனதையே தந்திருக்கிறேன்’ என்று பதிலளித்திருக்கிறார் பாபா.
அதன் பிறகு கலைஞரின் மஞ்சள் சால்வை பற்றியும் பாபா பேசியிருக்கிறார். (இந்த நிகழ்வுகளை எல்லாம் அடுத்த நாள் பாபாவுக்கு நடந்த பாராட்டுவிழாவில் கலைஞர், தயாநிதிமாறன், துரைமுருகன் ஆகியோர் வெளிப்படையாக விவரித்தார்கள்) சுமார் நாற்பது நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு முடிந்த பின்பு கீழ்த்தளம் வரை வந்து பாபாவை வழியனுப்பினார் கலைஞர்.
மரியாதை நிமித்தம் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சி சுமுகமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் நடந்து முடிந்தாலும், அதே வேகத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தத் தவறவில்லை.
‘இந்துக் கடவுள்களை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நிந்திக்கும் குணம் கொண்ட கலைஞரை பாபா நேரில் போய்ப் பார்க்கலாமா?’ என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தாலும் அதை வெளிப்படையாக விமர்சிக்க யாரும் முன்வரவில்லை. ஆனால் தன் வீட்டிற்கு வரவழைத்து பாபாவைச் சந்தித்த கலைஞரை விமர்ச்சிக்கிறார்கள் பலரும். கலைஞர் வரவழைத்தாரா அல்லது பாபாவே விரும்பிப் போனாரா என்பது தெளிவாகத் தெரியாத நிலையிலேயே இந்த விமர்சனம் நடக்கிறது.
‘‘தனது பதவி நீடிக்கவேண்டும். தனது குடும்பத்தாரின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்று நினைத்து கருணாநிதியே பாபாவை அழைத்திருப்பார் என்றே நினைக்கிறேன். எப்படியோ இந்து துறவி ஒருவரை கலைஞர் தன் வீட்டிற்கு வரவழைத்தருதன்பது, தெய்வீகத்திற்கும், தெய்வ பக்திக்கும் கிடைத்த வெற்றி. பாபாவே அங்கு சென்றது அவரது பெருந்தன்மையைத்தான் காட்டுகிறது.
இந்தச் சந்திப்பு கருணாநிதியின் நாத்திக கோஷங்களுக்குக் கிடைத்த அடி என்றே கருணாநிதி முன்பாக தயாளு அம்மாள் பாபாவைக் குனிந்து வணங்கியதே இதற்குச் சான்று. ஆனாலும் தயாளு அம்மாவின் செயலை நான் வரவேற்கிறேன்.
தனது மகன்கள், பேரன், பேத்திகளின் நலன்களுக்காக பாபாவை வரவழைத்துப் பார்த்தது கருணாநிதிக்குக் காலம் ஏற்படுத்திய கட்டாயம். விதியின் விளையாட்டு. ஆக மொத்தத்தில் நல்லது நடந்திருக்கிறது. மந்திரமா! தந்திரமா என்று இவர் உள்ளிட்ட யாரும் இனி கேட்கமுடியாது. அப்படிக் கேட்டால் ‘தயாநிதி, துரைமுருகனைக் கேளுங்கள்’ என்று சொல்லிவிடலாம். மோதிரங்களை வரவழைத்துத் தந்தபோது கருணாநிதியும்கூட சாட்சியாக இருந்திருக்கிறார். பாவம்... வீரமணியை எப்படிச் சமாளிக்கப்போகிறார் என்றுதான் தெரியவில்லை.’’ என்று உணர்ச்சியும் கிண்டலுமாகச் சொல்கிறார் இந்து முன்னணியின் நிறுவனர் ராமகோபாலன்.
பி.ஜே.பி.யும் கூட இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியை சந்தோஷத்தோடு பார்க்கிறது. ‘‘தமிழகத்தில் நாத்திக வாதத்தின் சவப்பெட்டியில் இறுதி ஆணி அடிக்கப் பட்டிருக்கிறது. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட, இந்து விரோத மனப்போக்கு கொண்ட கருணாநிதி, தன் வீட்டிற்கு உலகப்பிரசித்தி பெற்ற இந்து மதப் பெரியவரை வரவழைத்திருக்கிறார். தன் மனைவி அவர் காலில் விழுவதைப் பார்த்துப் பூரித்திருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் நாத்திகவாதம் என்பது கடந்த காலம் ஆகிவிட்டது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.
ஆன்மீக சக்தியால் மோதிரம் வரவழைப்பதை மோசடி என்று சொன்னவர்கள் இன்று அதைத் தாங்களே பரவசத்தோடு அனுபவித்து ஆச்சரியப்பட்டோம், என்று சொல்லியிருப்பது இந்துத்துவத்திற்கும் அதை சித்தாந்தமாகக் கொண்ட பி.ஜே.பி.க்கும் கிடைத்த வெற்றியாகும்’’, என்று சொல்கிறார் தமிழக பி.ஜே.பி. துணைத்தலைவரான ஹெச். ராஜா.
இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு எல்லோரது பார்வையும் திராவிடர் கழகத்தை நோக்கியே இருக்கிறது. அவர்கள் இதை எப்படிப் பார்ப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ‘‘இதை நாங்கள் சர்ச்சையாகப் பார்க்கவில்லை. உதவி செய்தவரைப் பாராட்டும் வகையில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் ஒருவர் உதவி செய்தால் அதைப் பாராட்டுவதில் தவறில்லை. அதைத் தடுக்கவோ, விமர்சிக்கவோ வேண்டிய அவசியமில்லை. இதே சந்திப்பு, சாயி நடத்தும் யாகத்தில் நடந்திருந்தால் அதைத் தவறு என்று சொல்லலாம். ஆக பகுத்தறிவு வாதிகள் இதை மனிதாபிமான அடிப்படையிலேயே பார்க்கிறோம். வேறு கண்ணோட்டம் இல்லை’’ என்று நம்மிடம் சொன்னார் தி.க. பொதுச் செயலாளரான கலி பூங்குன்றன்.
இப்படியெல்லாம் விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தால்தானோ என்னவோ, பாபாவுக்கு நடந்த பாராட்டு விழாவின் போதே ஒரு கருத்தை வெளியிட்டார் கலைஞர் ‘‘நாட்டில் பலர் உண்டு அந்த வேடதாரிகளை ஒரு பகுதியாகவும் இப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த பாபா போன்ற துறவுக்கோலம் பூண்டவர்களை ஒரு பகுதியாகவும் பிரித்துப் பார்க்க நான் தவறியதேயில்லை. மக்களுடைய கஷ்டங்களைப் போக்க வேண்டுமென்று கருதுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் துறவிகளைவிட மேலானவர்கள். அவர்கள் ஆண்டவனுக்கே ஒப்பானவர்கள் என்று சொன்னாலும் அதை யாரும் மறுக்க முடியாது’’ என்று கலைஞரின் வெளியிட்ட இந்தக் கருத்தை இன்னொரு விவாவதத்திற்கு வழி கோலாமல் இருந்தால் சரிதான்!
எல்லாம் சரி. கலைஞரின் இல்லத்துக்கே சென்று அவரை பாபா சந்தித்தது பற்றி கார்டன் தரப்பில் என்ன ரியாக்ஷன்? இது பற்றி அ.தி.மு.க. வி.ஐ.பி.களிடம் விசாரித்தபோது, ‘‘கருணாநிதி என்பவர் இந்துக்களின் விரோதி என்றுதான் இதுவரை சித்திரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார். பாபாவின் இந்தச் சந்திப்பு அதைத் தூள்தூளாக்கிவிட்டது என்பதில் எங்களுக்கு மிகந்த வருத்தம்தான். காரணம் இனி இந்துக்களின் ஓட்டும் கருணாநிதிக்கு அதிகம் விழ வாய்ப்பிருக்கிறதல்லவா!’’ என்றார்கள் வருத்தத்தோடு.
துக்ளக் கார்ட்டூன்
Posted by IdlyVadai at 2/01/2007 11:29:00 AM 2 comments
Labels: பத்திரிக்கை