பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 23, 2007

FLASH: விஜயகாந்த் வீட்டில் ரெய்டு

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் சென்னை வீடு மற்றும் அவருக்கு சொந்தமானவர்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் . அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் விஜயகாந்த் மட்டுமல்லாது நடிகர் முரளி, பொறியியல் கல்லூரி தலைவர் ஜேப்பியார் வீடு உட்பட 9 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
30 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை முதல் சோதனைகளில் ஈடுபட்டுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரி கள் விஜயகாந்த்தின் வீட் டிலும், அலுவலகத்திலும் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்தவர்களிடமும் விசா ரணை நடத்தினார்கள்.

இதே போல் சாலி கிராமத் தில் உள்ள விஜயகாந்தின் மைத்துனரும், பட அதிபரு மான சுதீஷ் வீட்டிலும் அலு வலகத்திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் புகுந்து திடீர் சோதனை நடத்தினார் கள்.

100 அடி ரோட்டில் உள்ள சுதீசுக்கு சொந்தமான `லீ கிளப்' என்ற கேளிக்கை விடுதியிலும் வருமான வரி சோதனை நடந்தது.

ஒவ்வொரு இடத்திலும் வருமான அதிகாரிகள் குழு குழுவாக சென்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள். அப்போது உள்ளே இருந்தவர்கள் வெளி யில் செல்ல அனுமதிக்கப் படவில்லை. சோதனை நடந்த போது வீடு அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு அரசியலில் குதித்து தே.மு.தி.க. என்ற கட்சி தொ டங்கினார். அவரது கட்சி சட்டசபை தேர்தலில் போட்டி யிட்டது. இதில் விஜயகாந்த் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது கட்சி கணிச மான ஓட்டுக்களை பிரித்தது.

அதன் பிறகு நடந்த உள் ளாட்சி தேர்தலிலும் தே.மு. தி.க. போட்டியிட்டது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக விஜயகாந்த் உண்ணாவிரதம் இருந்தார்.

விஜயகாந்துக்கு சொந்த மான திருமண மண்டபம் கோயம்பேட்டில் உள்ளது. மேம் பாலம் கட்டுவதற்காக அவரது கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் விஜயகாந் தின் வீடு, அலுவலகம், அவ ரது மைத்துனர் வீடு, அலு வலகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள சில தனி யார் கல்லூரிகளிலும் இன்று வருமான வரி சோதனை நடந்தது. பழைய மகாபலிபுரம் ரோட்டில் ஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா என்ஜினீயரிங் கல்லூரி உள் ளது. அதே பகுதியில் அருகில் ஜேப்பியார் வீடு இருக்கிறது. அந்த வீடு மற்றும் கல்லூரியில் சோதனை நடந்தது.

திருநின்றவூரில் உள்ள ஜெயா என்ஜினீயரிங் கல்லூரி யிலும் வருமான வரித்துறை யினர் புகுந்து சோதனை நடத்தினார்கள்.

கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புரபஷனல் கொரியர் நிறு வனத்தின் கோவை ஏரியா நிர்வாகி கணேசன் என்பவரது வீடு-அலுவலகம் உள்ளது. அங்கும் வருமான வரி சோதனை நடந்தது. இவர் தே.மு.தி.க. பிரமுகர் ஆவார். சென்னையில் இருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் இங்கு சோதனை மேற்கொண்டார்கள். ( இவர் மிக 'முக்கியமான' நபரின் பினாமி என்று கருதப்படுகிறது. )

தமிழ்நாடு முழுவதும் மொத் தம் 9 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தி னார்கள்.

தொடர்ந்து சோதனை நடந்து கொண்டு இருக்கிறது. இதன் முடிவில்தான் எதுவும் சிக்கியதா என்பது தெரிய வரும்.

நேரடி ரிப்போட் இங்கே

4 Comments:

We The People said...

விஜயகாந்தை பெரிய ஆளாக்கிவிட்டுத்தான் அடங்குவேன் என்று ஏன் ஒற்றை காலில் நிற்கிறார்கள் இவர்கள்??!!!

IdlyVadai said...

நேரடி ரிப்போட்டுக்கு http://wethepeopleindia.blogspot.com/2007/01/2.html

We The People said...

சுட்டி கொடுத்தற்கு நன்றி இட்லிவடை!

பிரதீப் said...

இப்படித்தான் ஏற்கனவே பல பேரைப் பெரிய ஆளாக்கிருக்காங்க. அட ஏங்க நீங்க வேற??