பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 19, 2007

கலைஞர் பேட்டி - சோ ஸ்பெஷல்

துக்ளக் 37 ஆண்டு விழாவில் சோ சென்ன கருத்துக்கு கலைஞர் பதில்
துக்ளக் ஆண்டு விழா பகுதி-1 படிக்க

கேள்வி: அதிமுகவுடன், பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என சோ சொல்லியுள்ளாரே?

கருணாநிதி: ஜெயலலிதாவுக்காக கூட்டணி சேர்க்க அவரும் படாதாபாடு பட்டுக் கொண்டுதான் உள்ளார்.

கேள்வி: திமுக அளித்த வாக்குறுதிகளை .ழுமையாக செய்யாமல் பகுதி பகுதியாக செய்து வருகிறீர்கள் என்று சோ சொல்லியுள்ளாரே?

கருணாநிதி: மகாபாரதத்தை துக்ளக் இதழில் வெளியிடப் போவதாக சோ சொன்னார். அதைப் பகுதி பகுதியாகத்தானே எழுதினார், ஒரே சமயத்தில் எழுதி முடித்து விட்டாரா என்ன?

கேள்வி: 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார் கருணாநிதி. இப்போது கையளவேனும் தருகிறேன் என்கிறார் என சோ கூறியுள்ளாரே?


கருணாநிதி: நான் சட்டப் பேரவையில் சொன்னது என்ன? கையளவு நிலம்தான் இருக்கிறது என்றாலும் அதை நிலமற்ற ஏழை விவசாயிக்குத்தான் தருவோம் என்றேன். இப்படிச் சொன்னதின் உணர்வுதனை சோ போன்ற எழுத்தாளர்கள் புரிந்து கொள்ளாததுதான் தமிழ்நாட்டின் பெரிய சோகம்.

இந்த ஆட்சியில் இதுவரை இரண்டு கட்டங்களாக மாவட்டந்தோறும்ம நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அவற்றின் வாயிலாக நிலமற்ற ஏழை விவசாயிகளுக்காகவும், விவசாயத் தொழிலாளர்களுக்காகவும் 50,000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருக்கிறது, பாசணக் கிணறும் தோன்டித் தரப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் எல்லாம் படங்களுடன் பத்திரிக்கைகளில் வந்துள்ளதே, பத்திரிகைகளைத் தவறாமல் படிக்கும் பழக்கமுடைய சோ கண்களில் எப்படி இந்த விவரங்கள் படாமல் போயின?

கேள்வி: இலவசத் திட்டங்களால் பீகார் அரசு போல அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தரக் கூட முடியாத நிலை தமிழகத்திலும் ஏற்படுமோ என சோ கவலை தெரிவித்துள்ளாரே?

கருணாநிதி: ஆடு நனைகிறதே என புலி கவலைப்படுகிறது போலும். அல்லது மக்கள் மத்தியில் கிலி ஏற்படுத்த திட்டம் போலும். ஜெயலலிதா ஆட்சி 56,000 ரூபாய் கடன் சுமையை வைத்து விட்டுச் சென்றது. அதையும் சமாளித்து, மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களையும் நிறைவேற்றும் திறமை இருக்கவே செய்கிறது.

அதற்காக சலுகைகள் வழங்காத சர்வாதிகாரியாகவோ, கோரிக்கைகளை நிறைவேற்ற விரும்பாத கொடுங்கோலர்களாக இருக்க மாட்டோம், ஜெயலலிதாவைப் போல.

கேள்வி: திமுக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது என்று ஜெயலலிதா எழுதியிருக்கிறாரே.?

கருணாநிதி: ஜெயலலிதாவுக்கு மிகவும் வேண்டிய பத்திரிக்கையாளர் சோ, அவருடைய துக்ளக் இதழில், பெருவாரியான மக்களிடையே இந்த அரசைப் பற்றி இன்னும் அதிருப்தி ஏற்படவில்லை என்றுதான் நானும் நினைக்கிறேன் என்று சோ எழுதியுள்ளார். இந்த உண்மை ஜெயலலிதாவுக்குத் தெரிந்தபோதிலும், தொண்டர்களை நம்ப வைப்பதற்காக இப்படியெல்லாம் அறிக்கை விட வேண்டியுள்ளது.

கேள்வி: வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படை வீரர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளதே?

கருணாநிதி: கடந்த காலத்தில் தமிழக, கர்நாடகப் பகுதிகளில்தமிழக சிறப்பு அதிரடிப்படையினரும், தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டை குறித்து மனித உரிமை ஆணையத்தால் விசாரணை நடத்த நீதிபதி சதாசிவம் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.

அந்த கமிஷன் அறிக்கை அடிப்படையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக நிவாரணத் தொகை வழகப்பட்டது. அதற்கான செய்தி அப்போதே வெளிவந்தது. தற்போது மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைப்படி அதிகாரப்பூர்வமாக முழு விவரங்களும் கிடைத்த பின்னர் மீதமுள்ள தொகையும்ம பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக விரைவில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

4 Comments:

Anonymous said...

56,000 ரூபாய் கடன் ?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

IdlyVadai said...

56,000 கோடியாக இருக்கலாம் :-)

சிநேகிதன் said...

ஒரு கோடி என்பது கருனாநிதிக்கு ஒரு ரூபாய் மாதிரிதான். அவர் குடும்பத்தினரிடம் அவ்வளவு காசு பதுங்கிக்கிடக்கிறது.

Anonymous said...

ஜெயலலிதா ஆட்சி 56,000 ரூபாய் கடன் சுமையை வைத்து விட்டுச் சென்றது. அதையும் சமாளித்து, மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களையும் நிறைவேற்றும் திறமை இருக்கவே செய்கிறது.

What was the position in 2001 when she took over.This fellow left
an empty treasury and hue outstanding with RBI as overdraft.
She had to set that right and resorted to drastic measures.
He will repeat it now.