பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 23, 2007

அரைத்த மாவையே அரைத்தால் ?

தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரை குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள கருத்து: அரைத்த மாவையே அரைத்துள்ளனர். இட்லி மாவை மேலும் மேலும் அரைத்தால் என்ன ஆகும் என்பது பெண்களுக்குத் தெரியும். இட்லி வார்க்கவே முடியாது. துணியுடன் ஒட்டிக் கொள்ளும். அதுபோலத்தான் ஆளுநர் உரையிலும் அரைத்த மாவையே அரைத்துள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இட்லியை பற்றிய இந்த உண்ணத தகவல் உண்மையா என்று தெரிந்துக் கொள்ள கூகிள் ஆண்டவரை நாடினேன். தேடும் போது இந்த வலைப்பதிவில் தாளிக்கும் சத்தம் கேட்டு போனேன். இதில் இட்லி எப்படி செய்ய வேண்டும் என்று இருக்கிறது ஆனால் "அரைத்த மாவையே அரைத்தால்.." என்னவாகும் மட்டும் மிஸ்சிங். [ இந்த வலைப்பதிவு பற்றி சில தகவல்கள் - தமிழ்மணம், தேன்கூடு ஆகியவற்றில் இது இல்லை, ஆனால் பாபா லிங்க் கொடுத்துள்ளார்( இது நம்ம பாபா சாய்பாபா இல்லை), முன்பு மரத்தடியில் எல்லோரையும் தாளித்த இவர் இப்போது சைலண்டாக மரத்தடி ஆயா போல் இட்லிவிக்க ஆரம்பித்துவிட்டார் ]

சரி அரைத்த மாவையே அரைத்தால் என்னவாகும் என்று வலைப்பதிவு பெண்களிடம் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அவர்களும் அரைத்த மாவையே தானே அரைக்கிறார்கள். :-)

3 Comments:

ரவி said...

யாருங்க அவங்க...இவ்ளோ அழகா இட்லி / சாம்பார் / சட்னி / ஸ்வீட்ஸ்னு சமையல் குறிப்பு போட்டிருக்காங்க...பேசாமல் அவங்க பதிவுக்கு ஒரு இலவச விளம்பரம் கொடுங்க உங்கள் பதிவுல..இது என்னோட ரெக்வஸ்ட்...

நாடோடி said...

யப்பா உள்குத்துனா உள்குத்து தாங்கமுடியலப்பா

IdlyVadai said...

செந்தழல் ரவி - கொடுத்துவிட்டேன். பாபா எல்லோரையும் காக்கவும்.