பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 21, 2007

போலிகள் ஜாக்கிரதை

* காவிரியும் கொள்ளிடமும் போல மக்களுக்கு பயன்படும் நதிகளை போல நானும், சாய்பாபாவும் ஒன்றுபட்டிருக்கிறோம்.
* பாபா போன்று மக்களுக்கு பாடுபடுபவர்கள் துறவுக்கு மேலானவர்கள்.
* மற்றும் மஞ்சள் துண்டு மகிமை

செய்தியும் படமும் கீழே...கலைஞர் பேச்சு: தமிழகத்தில் ஏழ்மையை ஒழிப் பதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பாபா போன்றவர்கள் பங்களிக்க தயாராக இருக்கும் பொழுது இன்னும் பல சாதனைகளை இந்த அரசு செய்யும்.

பாபாவினுடைய பல்வேறு சமுதாயப் பணிகளை இங்கே பேசியவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்த விழாவில் எழுதப்பட்டிருக்கும் பொன்மொழி களிலேயே அந்த சாதனைகள் வெளிப்படுகிறது. "சர்வீஸ் டூ மேன் சர்வீஸ் டூ காட்' என்கிற பொன்மொழிக்கேற்ப நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்று கிறோம்.

காவிரியும், கொள்ளிடமும் வேறு வேறு ஆறுகளாக இருக்கலாம். இரண்டிலும் ஓடுவது தண்ணீர் தான். அந்த தண்ணீர் தான் கழனிகளுக்கு செல்கிறது. அந்த கழனியில் விளைவது தான் கதிர்கள். அந்த கதிர்களில் கிடைப்பது தான் நெல்மணி. அந்த நெல்லில் உருவாவது தான் அரிசி. இந்த அரிசிதான் எல்லோருக்கும் உணவாக பயன்படுகிறது.

இப்படி காவிரியும், கொள்ளிடமும் போலத்தான் நானும், பாபாவும் தமிழகத்தில் உயர்வுக்கு பாடுபடுகிறோம். தமிழகத்தை தீபகற்ப பகுதி என்பார்கள். தமிழகம் தண்ணீர் சூழ்ந்த தனித்தீவாக இருக்கிறது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களின் தயவு இல்லாவிட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கண்ணீர் விட நேரிடும். அந்த கண்ணீரை துடைக்க அரசுக்கு துணையாக பாபா வந்திருக்கிறார். பல பேர் வெளியே பிரச்சாரம் செய்கிறார்கள். இவன் கடவுளை நம்பாதவன். இவன் எப்படி பாபாவை பாராட்டி பேசுவது என்று. கடவுளை நான் ஏற்கிறேனா? இல்லையா? என்பது பிரச்சனை இல்லை. கடவுள் என்னை ஏற்கும் அளவிற்கு நான் நடந்து கொள்கிறேனா? இல்லையா? என்பது தான் பிரச்சனை.

அப்படி எடுத்து கொண்டால் கடவுள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்னை ஏற்பார். பாபா அவர்கள் இலவசமாக கல்வி, மருத்துவ வசதிகளை செய்து வருகிறார்கள். நாமும் இலவசமாக பலருக்கு தந்து கொண்டிருக்கிறோம்.

பாபாவின் பணி; ஆண்டவன் பணி. இங்கு நடப்பதோ ஆள்கின்றவர் பணி. அவருக்கே தெரியாமல் அவரை நான் கவனித்து வருவதை போல, பல ஆண்டுகளாக அவரும் என்னை கவனித்து வந்திருக்கிறார். 8 வருடங்களுக்கும் மேலாக இந்த மஞ்சள் துண்டு பிரச்சனைகளை பலர் கிளப்பினாலும், விடாமல் போட்டிருக்கிறாயே என்றார்.

நான் அதற்கு, புத்தர் கூட மஞ்சள் துண்டை தான் அங்கவஸ்திரமாக அணிந்திருந்தார் என்று கூறி என்னை தொடர்ந்து கவனித்து வந்துள்ளீர்களா? என்று கேட்டதற்கு, ஆமாம் என்றார். நாட்டிலுள்ள வேடதாரிகளை எல்லாம் ஒருபகுதியாக பிரித்து விட்டு இப்படிபட்ட நல்ல உள்ளம் படைத்த துறவு கொண்டோரை நான் தனியாக பிரித்து பார்க்க தவறியதில்லை.

பாபா போன்று மக்களுக்கு பாடுபடுபவர்கள் துறவுக்கு மேலானவர்கள். ஆண்டவனுக்கு ஒப்பானவர்கள். பாபா அப்படிப்பட்டவர். சென்னை மக்களின் தண்ணீர் தேவையை உணர்ந்து தம்மால் இயன்ற உதவிகளை அவர் செய்து வருகிறார். கூவம் நதியை உலக தலைநகரங்களில் ஓடும் அழகுமிகு நதிகள் போல ஆக்க வேண்டும் என்று கேட்டதற்கு, அதற்கு துணையாக இருப்போம் என்று சொல்லியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

பிகு: முன்பு ஒரு MLA குங்கும பொட்டு வைத்துக்கொண்டிருந்ததற்கு கலைஞர் என்ன பேசினார் என்று உங்கள் நினைவுக்கு வந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. இன்று தயாளு அம்மாள் பாபா காலில் விழுந்து வணங்கினார். முன்பு ஒரு முறை ஹிந்து என்றால் திருடன் என்றார் ஆனால் இன்று திருடனின் தலைவனை வணங்கி பாராட்டு விழா.

யார் போலி பாபாவா ? (பகுத்தறிவு) பக்தனா ? பட்டிமன்றம் நடத்தலாம்.

19 Comments:

Anonymous said...

You too Idlivadai!??? Why are you finding faut for a thanks giving ceremony? When the state is benefitted by the benevelont act of Sri Satya Sai Baba, there is nothing wrong for a Cheif Minister of the state to participate in the funtion. Please continue to give news only, as you were doing.

Hariharan # 03985177737685368452 said...

கருணாநிதி குறளோவியம். தொல்காப்பியம் என்று எழுதுவதை விட

அ.வெட்கமே உன் விலை என்ன?

ஆ.தன்மானம், ஈனம் என எது போனாலும் சமாளிப்பது எப்படி?

இ.பகுத்தறிவையும், சுயமரியாதையையும் இலாபகரமாக எடைக்கு எடை விற்பது எப்படி?

ஈ.தமிழகத்து திரா'விட' அரசியலில் எதெல்லாம் சகஜம்னு பொதுமக்கள் கருதவேண்டும்?

என்ற தலைப்புகளில் இப்படித் தன் அனுபவங்களை வைத்துக் கையேடுகள் போட்டால் வரலாற்றில் ராஜராஜ சோழனையும் மிஞ்சி நினைவு கொள்ளப்படுவார்:-))) :-)))

IdlyVadai said...

Anony,
"கோயிலுக்கு உள்ளே இருக்கும் உடையற்ற சிலைகளைக் காட்டிலும், வெளியே உள்ள பெரியார் சிலை கண்ணியமான தோற்றத்தில் தானே காட்சியளிக்கிறது,.."

இது முதல் அமைச்சர் சொன்ன வார்த்தை. இது சரியா ? (இந்த வார்த்தையை வேறு எந்த மததிற்க்காவது சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் ? )

செய்தியும் சில சமயம் விமர்சனமும் செய்வேன். அதில் தப்பில்லை.

Anonymous said...

pothu janam: inga karunanidhinu oru pagutharivalan irunthaney avana thedaren.

karunanidhi : kollai Nidhila muzhuginathanaala avana inimey kaana mudiyaathu.

Anonymous said...

இன்று சண்டே அதனால் திராவிட குஞ்சுகள் எல்லாம் காணோம். நாளை இங்கு வருவார்களா :-)

Anonymous said...

தலைப்பில் உள்ள பன்மை பொருத்தம்!

ரெண்டு பேருமே போலிகள் தான்.
ஏனெனில்,ஆன்மீகத்தை வைத்தோ, அரசியலை வைத்தோ இந்தளவுக்கு 'பணம்' பண்ண முடியாது.

அப்படி முடிந்தால், அது சரியான ஆன்மீகமாகவோ, நெறியான அரசியலாகவோ இருக்க முடியாது.

அது தான் சங்கதி!

பங்காளி... said...

முதலில் பின்னூட்டிய அருமை அனானியின் கருத்தினை நான்வழிமொழிகிறேன்.

நண்பர் ஹரிஹரனின் பின்னூட்டம்....மீண்டும் அவருக்கு "உள்ளுர் வயித்தெறிச்சல் கோஷ்டி" என்கிற அடைமொழியை உறுதிசெய்கிறது.

கோவில் சிலைகளைப் பற்றி கலைஞர் கூறியது பொய்யென சொல்கிறீர்களா நண்பர்களே....

ஒரு அரசின் தலைவராக கலைஞர் செய்தது...மிகவும் பாராட்டப்பட வேண்டியது. சென்னை மக்களின் தாகம் தீர்க்க உதவிய மனிதனுக்கு...மக்களின் பிரதிநிதியாய் நன்றி சொல்வதை கொச்சைப் படுத்தும் நண்பர்களே....இதே உதவியை உங்களின் உள்ளூர் சங்கராச்சாரியார் பண்ணியிருந்தாலும் கலைஞர் இதைத்தான் செய்திருப்பார்.

இதையெல்லாம் சொல்வதற்கு திராவிட குஞ்சுகள் வரவேண்டுமென்பதில்லை.....குறைந்தபட்ச மனசாட்சியுடைய எவனும் வரலாம்... என்னைப் போல...

Anonymous said...

ஏன்யா இட்லிவடை
ஒரு எம்பிசி இன்னொரு எம்பிசி சாமியாரைப் பாராட்டினால் உமக்கேனய்யா எரிகிறது?

Hariharan # 03985177737685368452 said...

//நண்பர் ஹரிஹரனின் பின்னூட்டம்....மீண்டும் அவருக்கு "உள்ளுர் வயித்தெறிச்சல் கோஷ்டி" என்கிற அடைமொழியை உறுதிசெய்கிறது.//

பங்காளி மாதிரி நண்பர்களுக்குத்தானே சிரிப்பான்கள் போட்டு எனது பின்னூட்டத்தின் தொனியைக் கூடுதலாகத் தெரிவிப்பது என்பது.

அதையும் மிஞ்சி "உள்ளூர் வயித்தெரிச்சல் கோஷ்டி"யாகக் கருத்துத் தெரிவித்தால் அதற்கும் பதில் மீண்டும் இரண்டு சிரிப்பான்களே

பங்காளி அண்ட் தி லைக்ஸ் நண்பர்களுக்காக சிறப்புச் சிரிப்பான்கள் இரண்டு இங்கே :-)) :-))

G.Ragavan said...

கருணாநிதியின் வயசு அப்படிப் பேச வைத்திருக்கிறதோ! ஆனாலும் அளவுக்கு மிஞ்சிய நகைச்சுவை உணர்வு. வயிறு வலிப்பது நமக்குதான்.

ENNAR said...

இருவருக்கும் தனிப்பட்ட ஏதோ ஒரு விஷயம் இருக்கவேண்டும் அதற்காகத்தான் அவர் இவர் வீட்டுக்குச் சென்றுள்ளார் என நான் நினைக்கிறேன்.

Anonymous said...

//கேள்வி:- கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக எதாவது பேசினீர்களா?

பதில்:- இந்தத் திட்டத்துக்காக சாய்பாபாவுக்கு நன்றி தெரிவித்தேன். இதுமட்டுமல்ல மேலும் நல்ல பல திட்டங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்து இருக்கிறேன்//

கிருஷ்ணா நீரா?. சில வருடங்களுக்கு முன் ஒரு குடம் தண்ணீரைக்காட்டி கிருஷ்ணா தமிழகத்திற்கு வந்துவிட்டது என்று கூறி ஸ்டாலின் மேயராக ஓட்டெல்லாம் கேட்டார்களே அது எந்த நீர்?.

Anonymous said...

Pongada pappa pasangala. iethe jj papathi baba kooda iruntha ippatipesuvingalada

oosi said...

/*அப்படி எடுத்து கொண்டால் கடவுள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்னை ஏற்பார். பாபா அவர்கள் இலவசமாக கல்வி, மருத்துவ வசதிகளை செய்து வருகிறார்கள். நாமும் இலவசமாக பலருக்கு தந்து கொண்டிருக்கிறோம்*/


இந்த ரெண்டுமே ஊர் காசுங்கோவ் ...

Anonymous said...

இட்லிவடை,

செய்தி என்னவோ நல்லாத்தான் இருக்கு! ஆனா இதை வைச்சு நீர் குறுக்குசால் ஓட்டறதுதான் தாங்கமுடியலை!

// ஆனால் இன்று திருடனின் தலைவனை //

சாய்பாபா எப்பய்யா இந்துக்களுக்கு தலைவன் ஆனாரு? இந்த விசயம் இந்துக்களுக்கு தெரியுமா? இல்லை, இந்துக்களின் தலைவர்களைக் கூட உங்கள மாதிரி ஆளுங்கதான் நிர்ணயிக்கனுமா? இல்லை, இவரை தலைவனா ஏத்துக்கறவன் தான் இந்துவா இருக்க முடியுமா? அப்படின்னா, முண்டக்கண்ணிய கும்பிடற நாங்க எல்லாம் இந்துக்கள் இல்லையா? ஏற்கனவே எங்க சாமி பழனி முருகனுக்கு பூணூல் மாட்டிவிட்டது போதாதா?

பிராமணர் என்னும் சிறுபாண்மையினர் பெரும்பான்மை பலம் அடைவதற்காக கையில வைச்சிருக்கற ஏனையோரை மூளைமலுங்க வைக்கற ஆயுதம்தான் 'இந்து'.

செய்திய செய்தியா படிக்கறதுக்குத்தான் என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் இங்க வர்றது. தினமலர் பர்முலால விழுகறதுக்குள்ள சுதாகரிச்சிக்கங்க...

Anonymous said...

வந்தேறிகளின் திட்ட மிட்ட சதி. பெங்களூர் முஸ்லிம்களிடையே கலவரத்தை பரப்பி 22 பேருக்கு மேல் படுகாயம். 12 வயது சிறுவன் மரணம்.

சதாமை தூக்கிலிட்டதை தொடர்ந்து வந்தேறிகள் ஆரம்பித்து வைத்த கலவரத்தில் இரண்டு வாகனங்கள் எரிப்பு. இதன் மூலம் புஷ் மிரண்டு போய் இருப்பதாக அமெரிக்க உள்துறை அறிவிப்பு.


இவற்றிற்கெல்லாம் பார்பன ஆரிய வந்தேறிகளின் சதி என்று வலையுலக இஸ்லாமிய பதிவர்கள் கூறியுள்ளார்கள்


-- யவன வந்தேறி ( இஸ்லாமியன் )

simharn said...

Kalaignaraa paarthu thirunthavittaal kalaignarai thiruthha mudiyaathu.

Anonymous said...

JJ pappathi baba-voda parattu vizha nadathi irundha, dravida kunjugal ellam ariya sadhi-nu kelappi irukka maattenga? Enna ezhavo, ellathiyum ,pappan, non-papannu innum priichu pirichu paarthukittu. Neenga ellam eppadinna, nattuku nalladhu pannanuma, paappanukku kedudhal pannanumanna, rendavadhu option-ai edukkara aalunga. Ungalai ellam yaaru thiruthuivangalo?

கால்கரி சிவா said...

//இந்த ரெண்டுமே ஊர் காசுங்கோவ் ...//

சாய்பாபாவிடம் சேர்ந்தது மக்கள் மனம்விரும்பி தந்தது

கருணாநிதியுடன் உள்ள பணம் மக்களிடத்தில் கொள்ளை அடித்தது. அது இன்னும் வெளிவரவில்லை