மதுரை அழகர் கோவிலை சேர்ந்தவர் சின்ன பிள்ளை (வயது 63). கிராமபுற பெண்களின் மேம்பாட்டிற்காக இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு களஞ்சியம் என்ற இயக்கத்தை தொடங்கினார்.
இந்த இயக்கத்தில் முதலில் 10 பேர் இருந்தனர். தற்போது 9 மாநிலங்களில் 4 லட்சம் பேர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு மூலம் கிராமபுற பெண்கள் பெரிதும் பயன் பெறுகிறார்கள்.
இவரது சமூக சேவையை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாராட்டி அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். ஜனாதிபதி அப்துல்கலாம் இவரது சமூக சேவையை பாராட்டி இருந்தார். சமீபத்தில் அவருக்கு சிறந்த சமூக சேவகத்துக்கான விருதை பொதிகை டி.வி. வழங்கியது.
கிராமப்புற வளர்ச்சி பற்றிய ஆலோசனைகளை வழங்குவதற்காக சின்னப் பிள்ளை ஆப்பிரிக்கா, ஆலந்து, மெக்சிகோ நாடுகளுக்கு செல்கிறார். இந்தியாவில் கிராமப்புற வளர்ச்சியை எவ்வாறு செயல்படுத்தியது என்பதை அவர் விளக்குகிறார். ஆப்பிரிக்க கண்டத்தில் தான்சானியா, எத்தியோப்பியாவுக்கு செல்கிறார்.
இவர் நம் முதலமைச்சர் ஆனால் எப்படி இருக்கும் ?
இட்லிவடையின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, January 24, 2007
சின்ன பிள்ளை காலில் விழலாம்
Posted by IdlyVadai at 1/24/2007 05:05:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
28 Comments:
// சானியா, //
தான்சானியா?
சிறம் - சிரம்..
சின்னபிள்ளை மாதிரி சாதனைப் பெண்களின் காலில் கண்டிப்பாக விழலாம். உண்மை தான்!! பதிவுக்கு நன்றி. நம்ம ஊரு யூனுஸ் இந்த சின்ன பிள்ளை...
பொன்ஸ் - நன்றி.
இவர் ஆதிக்க சாதியான "பிள்ளை" சாதியை சார்த்தவர். இவர் முதலமைச்சர் என்ன, வார்டு எலெக்சனில் கூட நிக்கக்கூடாது.
:)))))))))))))
இந்த பதிவிலாவது சாதியை கொண்டு வராதீர்கள். Please.
//சின்ன பிள்ளை காலில் விழலாம் //
இட்லிவடை அய்யா!
என்ன சொல்ல வருகிறீர்கள். ஜெயலலிதா காலில் விழுந்தவர்களை வாழ்த்துகிறீர்களா? இல்லை திட்டுகிறீர்களா?
பாலா
உண்மையான மக்கள் தொண்டருக்கு நானும் சிரம் குவிகிறேன்.
பாலா - நான் ஒன்றும் சொல்லவில்லை. நான் ஏதாவது சொல்லி .. எதற்கு வம்பு.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு அவ்வளவு தான்.
என்னங்க பாரதியாரை சாதி சம்பந்தப்படுத்தி ஒரு கூட்டம் திட்டி தீர்த்துவிட்டது. அவங்க எல்லாம் மொதல்ல சாதிதான் பாப்பாங்க. அப்புறம்தான் மத்ததுயெல்லாம்.
என்னைக்கும் மனிதத்தை பார்க்க மாட்டாங்க. அதத்தான் மேலே சொன்னேன்
யாருடைய காலிலும் யாரும் விழவேண்டிய அவசியம் கிடையாது. வாஜ்பாய் விழுவதால் காலில் விழுவது சரியென்று ஆகிவிடாது இல்லையா?
சாதனைப் பெண் என்றால், சாதனை என்று எதைக் குறிப்பிடுவீர்கள், எதைக் குறிப்பிடமாட்டீர்கள். ஒவ்வொருவருக்கும் இந்த சாதனையின் அளவுகோல் மாறும் அல்லவா?
என்னைப் பொறுத்தவரை, தமிழகத்திற்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கிறது என்பதற்காக, தான் கட்டிக்காத்துவந்த பகுத்தறிவிற்கு பங்கம் வந்தாலும் பரவாயில்லை என்று சாயிபாபாவைச் சந்தித்த கலைஞர் சாதனையாளர் தான். ஆனால் நீங்கள் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள் இல்லையா(நான் திமுக அனுதாபி கிடையாது. இதையெல்லாம் வேற சொல்லவேண்டியிருக்கு).
அதைப்போலத்தான் வாஜ்பாயிற்கு சின்ன(ப்)பிள்ளையின் சேவை சாதனையாகத் தெரிந்திருக்கிறது.
கடேசியாக - சின்னப்பிள்ளை முதலமைச்சராக வந்தால் நன்றாக இருக்காது.
இட்லிவடை,
ஆம் சின்ன பிள்ளை காலில் விழலாம்
1.இவர் இன்னும் சின்னப்பிள்ளையாகவே இருக்கிறார்.
2.அதாவது ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதே போல்(இருப்பிடம்/உடை/உணவு/சேவை...etc)
3.இவர் செய்யும் செயலுக்கு கூட்டம் சேர்க்க வித்தைகள் எல்லாம் செய்வது இல்லை.
4.பிறந்த நாளுக்கு பரிவாரங்களுடன் ஆடம்பரப் பவனி வருவதில்லை.
இவர் செய்யும் சேவைக்குமுன் அந்த பாபாக்கள் சாமிக்கள் எல்லாம் ஒரு கொசு.
ஏன் பாபாக்கள் காலில் விழக்கூடாது?
1.ஆடம்பர வாழ்க்கை
2.ஆரம்பத்தில் இவர் இருந்த இருப்புக்கும் செல்வாக்கு பணம் கூடக்குட இவர் அடிக்கும் ஆடம்பரக் கூத்துகள்.
3.எனது வித்தைகள் ஒரு விசிட்டிங்கார்டு என்று சொல்லி customs/income tax போன்ற எந்த சிக்கலும் இல்லாமல் முதல்வர் வீட்டிலேயே தங்கம் எடுத்து மத்திய அமைச்சருக்கே கொடுப்பது.
4.பிறந்த நாளுக்கு ஊர்கூடி வளர்ப்புமகன் ஆடம்பரத்தை மிஞ்சும் ஊர்வலம் நடத்துவது.
***
//இவர் நம் முதலமைச்சர் ஆனால் எப்படி இருக்கும் ?//
இவர் எலிக்சனில் நிற்க நினைத்தாலே போதும் பல வழக்குகள் மற்றும் இவர் இதுவரை செய்த சேவைகளில் வெளிநாட்டுப்பணம் எவ்வளவு..என்று பல வழக்குகள் ...அப்போது இருக்கும் தொழில்முறை அரசியல்வாதிகளால் பதியப்படும் வேறொன்றும் நடக்காது. :-((
தாஸ்,
என்னாச்சு? இந்தம்மா நிஜமாகவே கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்து, உங்களையும் என்னையும் மாதிரி கல்லூரிகளில் படிக்காமலே எந்த காரணமும் இல்லாமல் தன் உடன் வாழும் மக்களைக் குறைந்த கூலிக்கு உழைக்கும் தொழிலாளர்கள் என்ற நிலையில் இருந்து மேலேறி வர உதவியவர். ஒரு விதத்தில் உங்கள் ப்ரோபைல் படத்தில் இருப்பவருடன் கூட ஒப்பிடலாம் இவரை ;)
வாஜ்பாய், இவர் காலில் விழாவிட்டாலும் இவர் கண்டிப்பாக சாதனைப்பெண் தான்.
கலைஞரின் சாதனையை இங்கே முடிச்சு போட்டு, கலைஞரை ஒப்பிடும் போது சின்னபிள்ளை சாதனையாளர் இல்லை என்று நீங்கள் சொல்லப் போவதானால், நான் அப்பீட்டு..
கடைசியாக, அடுத்தவருக்கு உழைக்கும் மனிதம் பாராட்டும், சின்னப்பிள்ளையை முதலமைச்சர் போன்ற பதவியில் கட்டிப் போடுவதில் எனக்கும் உடன்பாடில்லை.
தாஸ் - என்ன இது சின்ன புள்ளத்தனமா இருக்கு :-)
இட்லிவடை அய்யா!
என்ன செய்வது?
ஜெயலலிதா ஆட்சிக்கும் வரும்போது இதுமாதிரி சமூக சேவையாளரை முதல்வராக்கும் ஐடியா நமக்கு வருவதில்லையே?
கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் தானே வருகிறது?
பாலா
சின்னப்பிள்ளை சாதனையாளரா இல்லையா என்பது பிரச்சனையில்லை. அதேபோல் சாதனையாளர் ஆணா பெண்ணா என்பதுவும். ஏனென்றால் இதை நான் சொல்லிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
காலில் விழலாமா இல்லையா என்பதுதான் என்னைப்பொறுத்தவரை. அவர் சாதனை செய்ததால், அதுவும் கல்லூரி சென்று படிக்காத ஒருவர், அதுவும் பெண்ணாக இருக்கும் ஒருவர் சாதனை செய்தார், என்றால் காலில் விழலாம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. இப்படி ஆரம்பித்தது தான் அனைத்துமே.
அவர்கள் பூலோகக் கடவுள்கள், வேத உபநிடதங்களைப் பாராயாணம் செய்தவர்கள் என்றும், இவர் உன்னைக் காலம் பூராவும் கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளப்போகிறவர், அப்படிப்பட்டவரின் அம்மா அப்பாக்கள், உறவினர்கள் என்றும் இந்தப் பட்டியல் நீளும் ஏனென்றால் நாம் எதைச் சாதனைக்கான அளவீடாக வைத்திருக்கிறோம் என்பதில் இன்னும் பிரச்சனை இருக்கிறதல்லவா. இப்படி அவர்கள் செய்த ஒன்றை அல்லது செய்யப்போவதான ஒன்றை இல்லை செய்துகொண்டிருக்கின்ற ஒன்றை உயர்த்தி அவர் காலில் விழ வேண்டும் என்று சொன்னால் நாளைக்கு, நான் வாயிலிருந்து லிங்கம் எடுக்கிறேன், ***யிலிருந்து மோதிரம் எடுக்கிறேன், நான் இருநூறு கோடி கொடுக்கிறேன் என்பதற்காகயெல்லாம் காலில் விழ வேண்டியிருக்குமல்லவா.
அப்புறம் இன்னொரு விஷயம் அவர் கல்லூரிக்குப் போகாதது, இதற்காகத்தான் "கற்றதனால் ஆய பயனென்ன?" என்றொரு பதிவெழுதியிருக்கிறேன். படிப்பிற்கும் இது போன்ற விஷயங்களுக்கும் கனெக்ஷன் கொடுப்பதை நிறுத்துங்கள் முதலில். அதேபோல் செகுவாரவை அம்மையாருடன் ஒப்பிட்டது. முதல்ல இந்த ஒப்பிடுதலை நிறுத்துங்க. நான் செகுவாரா சின்னப்பிள்ளையை விட மக்களுக்கு நல்லது செய்தார்னு சொல்ல வரலை இதனால்.
அப்புறம் இப்படிப்பட்டவரை முதல்வர் கேண்டிடேட்டாக நிறுத்தும் ஐடியா, அப்படியானால் உலகவங்கி(மறைமுகமாய் அமேரிக்கா) தான் எல்லா நாடுகளுக்கு பிரதம மந்திரியாகவும், மாநில முதலமைச்சராகவும் இருக்கமுடியும். அப்படியே பில்கேட்ஸ் கூட இருக்கலாமே, பில்கேட்ஸ்-மெலிண்டா கேட்ஸ் உடைய உதவி மையம் தான் உலகவங்கிக்கு அடுத்தபடியாக அதிக உதவி செய்யுதாமே(இது கேள்விப்பட்டது முற்றிலும் தவறாகயிருக்கலாம்.)
சினிமாவில் நல்லா நடிக்கிறான், கிரிக்கெட் நல்லா விளையாடுறான், பெரிய சயிண்டிஸ்டா இருக்கான், மக்களுக்குச் சேவை செய்றான் அதனால் அவனை முதலமைச்சரா ஆக்கிடணும்னு புறப்பட்டா என்ன செய்றது சொல்லுங்க.
PS:
1.சின்னப்புள்ளையுடன் கருணாநிதியை ஒப்பிட்டது இட்லிவடைக்கு எளிதாகப் பி(No spelling mistake)ரியணுமேங்கிறதுக்காகத்தான்.
2.ஜல்லிப்பதிவுக்கு ரொம்ப ஓவரா சவுண்டு கொடுக்கிறனோ????
இந்த காய்ப்பு காய்த்த கைகளும் வெள்ளந்தி மனமும் இவ்வளவு பெரிய சாதனையை செய்துள்ளது...
தலைவணங்குகிறேன்.....
//ஜல்லிப்பதிவுக்கு ரொம்ப ஓவரா சவுண்டு கொடுக்கிறனோ???? //
கிராமத்திலிருந்து சமூக சேவைக்காக விருது வாங்கிய (பெண் என்றோ படிக்காதவர் என்றோ குறிப்பிடவில்லை)
ஒருவரை பற்றிய பதிவை ஜல்லிப்பதிவு
என சொல்வதை ஆட்சேபிக்கிறேன்.
ஒரத்தன் சேவிங் பண்ணும் போது பாதி மீசை துண்டாயிடிச்சாம், அவமானத்திலிருந்து தப்பிக்க ஊர் மக்களிடம் சொன்னாம் பாதி மீசையை எடுக்காவிட்டால் சாமி குத்தம் ஆகிடும், ஒடனே ஆண்களெல்லாம் மடத்தனமாக பாதி மீசையை எடுத்துக்கிட்டானுங்களாம். வாஜபாயி சின்னப் புள்ளையின் வயசு தெரியாமல் காலில் விழுந்துவிட்டார், அதை யாரும் பழிக்கப்போறாங்கன்னு எல்லோரையும் சின்னப்பிள்ளையின் காலில் விழவச்சால் அது தெரியாது அதற்குத்தான் இந்த பூ சுத்து. சின்னப்பிள்ளையின் சேவையை பாரட்டலாம். அதுக்காக வயசானவங்க கூட அவர் காலில் விழவேண்டும் என்று சொல்வது பாதி மீசையை எடுத்த கதைதான். வாஜ்பாயிக்கு சின்னபிள்ளையிண் வயசு தெரிஞ்சிருந்த கண்டிப்பாக காலில் விழுந்திருக்க மாட்டார்.
சின்னப்பிள்ளை செய்த்து சாத்னையா இல்லையா என்பது நாம் சொல்லி இந்த உலகிற்குதிரிய வேண்டியது இல்லை.. மேலும் அவர் காலில் விழுந்து வணங்குவது என்பது காரியத்தை சாதித்து கொள்ள அல்ல.. அந்த நல்ல உள்ளத்தின் ஆசியை பெறவே.. இன்றைய அரசியல் சூழ்நிலையில் காலில் விழுவதைப் போல அல்ல..
//வாஜ்பாய், இவர் காலில் விழாவிட்டாலும் இவர் கண்டிப்பாக சாதனைப்பெண் தான்.//
பொன்ஸ் நல்லா சொல்லி இருக்கீங்க..
ஒருவரின் எண்ணத்தில் உதித்த செயல்பாடுகளில் என்ன பலன் என்ற ரீதியில் பார்த்தால்..ஹ்ம்ம்ம்ம்.. சின்னப்பிள்ளையின் இந்த முயற்சி தலைவணங்க வேண்டிய ஒன்று...
லட்சுமி, ஒரு அட்வைஸ் கொடுப்பேன் கூட ப்ளாக் எழுறவன் என்ற முறையில், எடுத்துக்கொள்வதும் குப்பையில் போடுவதும் உங்கள் விருப்பம்.
"நிறையப் படியுங்கள் குறைவாக எழுதுங்கள்." இது ப்ளாக் உலகத்தில் நான் காலெடுத்து வைத்த பொழுது எனக்குச் சொல்லப்பட்டது நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
எனக்குத் தெரிந்தவரையில், இந்தப் பதிவைப் பற்றியும் போய்க்கொண்டிருக்கும் விவாதத்தைப் பற்றியும் உங்களுக்குப் புரியவில்லையென்று நினைக்கிறேன். வரிக்கு வரி நான் என்ன எழுத நினைத்தேன் என்று விளக்க எனக்கு அவகாசம் கிடையாது. இதே போன்ற பின்னூட்டம் ஒன்றை உஷாவின் பதிவிலும் எழுதியிருந்தேன் ஆனால் வெளியிடப்படவில்லை.
PS: என்ன ஒரு கலக்கிறீங்களையும் காணோம் ;)
இந்த அன்னையின் கால்களில் விழ எந்த தயக்கமும் வேண்டாம்.
என்னையும் சேத்துக்குங்க இட்லி வடை.
http://www.hindu.com/2004/12/24/stories/2004122408580500.htm
சின்னப்பிள்ளை காலை வாஜ்பாயி தொட்டுக் கும்பிட்டது 2004ல்.
2006க்கு வருவோம். இட்லிவடை, கருணாநிதி மனைவி சாய்பாபாவின் காலில் விழும் ஃபோட்டோவைப் போட்டு ஒரு கமெண்ட்டும் அடித்து வைக்கிறார்.
நடுநிலைவாதி என்று காட்டிக்கொள்ளவும் வேண்டும், ஒரு உள்குத்தும் வைக்கவேண்டும்.
எடு 2004 சின்னப்பிள்ளை-வாஜ்பாயி விஷயத்தை. பாபா காலில் கருணாநிதி மனைவி விழுவதைவிட சின்னப்பிள்ளை மாதிரி ஆட்கள் காலில் விழலாம் என்பது உள்குத்து.
முற்றிலும் நியாயமான கருத்து ஒன்றை உள்குத்தாக வைப்பதுதான் உறுத்தல் இங்கே. ஏன், கருணாநிதியும்கூட சின்னப்பிள்ளை காலில் விழலாம். ஆனால், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு எதோ மெசேஜ் சொல்ல விரும்பும் இட்லிவடைக்கு ஏதோ தடுமாற்றம். பாவம் விட்டுவிடுங்கள் இட்லிவடையை.
//லட்சுமி, ஒரு அட்வைஸ் கொடுப்பேன் கூட ப்ளாக் எழுறவன் என்ற முறையில், எடுத்துக்கொள்வதும் குப்பையில் போடுவதும் உங்கள் விருப்பம்.
"நிறையப் படியுங்கள் குறைவாக எழுதுங்கள்." இது ப்ளாக் உலகத்தில் நான் காலெடுத்து வைத்த பொழுது எனக்குச் சொல்லப்பட்டது நான் உங்களுக்குச் சொல்கிறேன்.//
நன்றி தாஸ்.ஏற்கனவே மிகக் குறைவாகவே எழுதுகிறேன்.அதிலும் குறைவாகவே பின்னூட்டம் தருகிறேன். இருப்பினும் உங்கள் அறிவுரையினை சீனியரின் அறிவுரையாக ஏற்றுக்கொள்கிறேன்.
http://www.dinamalar.com/news/photos/fpn_mix.jpg
காலில் விழும் கலாச்சாரம் சின்ன வயசிலேயே ஆரம்பிச்சுவிடுது. :-))
இட்லி வடை,
பாவம் சின்னப்பிள்ளை, அவரை விட்டுவிடுங்கள்.
அப்பாவியான அவரைப்பற்றி பதிவு போட்டு, மோகன் தாஸ் போன்றவர்களெல்லாம் ஜல்லியடிக்க வைத்துவிட்டீர்கள்.
இவர்களுக்கேல்லாம், போலி கடவுள் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கிய மத்தியமந்திரியைப்பற்றி புகழ்ந்து எழுதினால் வந்து குத்துபோட்டுவிட்டு போவார்கள் அல்லது சென்னைக்கு கிருஷ்ணா நீரை 1996-ல் கொண்டுவந்து ஸ்டாலினை மேயர் ஆக்கிய கருனாநிதியின் திறமையை புகழ்ந்து எழுதினால் வந்து குத்துபோடுவார்கள். உள்ளூரில் சேவை செய்யும் எவ்வளவோ தியாகிகள் இருக்க வெளிநாட்டவரின் சேவையில் மயங்கி அவர்களைப்பற்றி புகழ்கிற மோகன் தாஸ் போன்றவர்களையெல்லாம் என்ன சொல்வது.
பாவம் சின்னப்பிள்ளை, அவரை விட்டுவிடுங்கள்.
மோகன் தாஸ்,
படிக்காத காமராஜர் செய்த(இந்தியாவுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் மிக அவசியமான) சாதனையை வேறு எந்த படித்த இந்திய தலைவனும் செய்ததில்லை. இவர்களை போன்றவர்கள் தான் மக்களின் அடிப்படைத்தேவைகளான உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை பற்றி சிந்தித்து அந்த பிரச்சனைகளை களைய முற்படுவர், படித்த அரசியல்வாதிகள் அத்தியாவாசியமில்லாத சுகபோக வாழ்க்கைகு வழிகாண முயல்வர். இதனால் பணக்காரன் மேலும் பணக்காரனாவானே தவிர நாடு முன்னேராது. எல்லோருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைத்து தன்னிறைவு அடைவது தான் உண்மையான் முன்னேற்றம், அதை படித்த உன் போன்றோரால் நிச்சியம் கொண்டுவரமுடியாது என்பதை இங்கே தெளிவுபடுத்தவிரும்புகிறேன்.
சாதனைப் பெண் சின்ன பிள்ளை!!! - இவர்களை பாராட்டுங்க brother
காலில் விழக்கூட வேண்டாம்...எமதருமை அரசியல்வியாதிகளே! உமது தொகுதியில் உள்ளா ஒரு சில ஏழைப்பெண்களையாவது அவர் இயக்கத்தில் சேர்த்துவிடுங்கள் ...அதுதானவருக்கு செய்யும் உண்மையான மரியாதை...சின்ன(பெரிய)பிள்ளைஅவர்கள் காலில் விழ,அவரரென்ன மோதிரமா தரப்போறார்..!!
I second Mohandoss!
Let's appreciate 'ChinnappiLLai'at the higher level, for her gr8 acheivement . But, it should not go to a stand to bow our head, under the feet of a fellow human being, whoever, he/she may be.
RAJ
Post a Comment